📱

Get Our Mobile App

Take your business learning on the go!

Download on the App StoreGet it on Google Play

Sankalpa Sooryodhayam

Nalini Varadarajan1:09:59

Transcription

ஸ்ரீமான் வேங்கடநாச்சாரிய கவிதாரிக கேசரி வேதாந்தாச்சாரிய பரியோமே சன்னிதம் சதாதி.

இப்போ நம்ம நாலாவது அங்கத்துக்கு போகப்போறோம். இந்த நாலாவது அங்கத்துல மொத்தம் 10 அங்கங்கள். நாலாவது அங்கத்துல மொத்தம் மொத்தம் இந்த எதிர்கோஷ்டி உடைய காரியங்கள் தான். அதாவது காமன், வசந்தன், சந்திரனுடைய உதயம், குரோதம் இதையெல்லாம் சேர்ந்து எவன் ஒருவன் மோட்சத்துக்காக வித்யை அனுஷ்டிக்கிறதுக்கு அனுஷ்டிக்கிறானோ, அதிலேயே ஈடுபட்டு இருக்கிறானோ, அந்த ஒரு விய எப்படியாவது திசை மாத்தணும், தடுக்கணும். அதுக்கு இது எல்லாம் வேலை செய்றது. எது? காமம், குரோதம், வசந்தன். வசந்தன்னா வசந்த ருத்து. அப்புறம் சந்திரனுடைய உதயம். இது எல்லாம் வேலை செய்யறது. வேலை செஞ்சு கிட்டத்தட்ட ஒரு ஜெயிக்கிற சமயம் வந்துடுறது. அந்த சமயத்துல இந்த விவேகனை பார்த்துடுறது. விவேகன் தான் ராஜா. பார்த்தவுடனே திரும்பி நம்மளுக்கு சாதாரணமாக எப்படி நம்ம சொல்லுவோம்? விவேகம் வந்துடுத்துனா இதெல்லாம் கீழ போயிடும். இந்த காமமோ, குரோதமோ, இதெல்லாம் இந்த மதம் லோபம், இது எல்லாமே எப்ப வரைக்கும் நம்மகிட்ட இருக்கும்? விவேகம் வராத வரைக்கும் இருக்கும். விவேகம் வந்தால் அது எல்லாம் போயிடும். அதுதான் இந்த நாலாவது அங்கத்தினுடைய சாரம்.

இது முதல்ல காமன் சொல்றான், சகே வசந்த. அந்த வசந்த ருத்துவை பார்த்து. வசந்த ருத்து என்பது காமனுக்கு துணைவன். ஈக்ஷுகு பேசலமே திரிஷம் மமதனு புஷ்பாண்யமே சாயகா தந்திரி மஞ்சுல நிஸ்வனா மதுகர ஸ்ரேணி சுபாஷிஞ்சினி பீருசன் அபலாஜன மமபலம் தத்யம் பரம் கத்தியதே சோகம் நிர்ஜித சூலருத் பிரபுத்திக சங்கல்ப சித்தோதய. அதாவது காமன், மன்மதன் தன்னை பத்தி உபசத்தியா சொல்றான். என்ன வசத்தியா சொல்றான்? ஈக்ஷு பேசலம் என்னுடைய தனுசு என்ன? மன்மதனுடைய வில் என்ன? மமதனுகு ஈதுருஷம். இவ்வளவு அழகானது. பேசலம். பேசலம்னா அழகானது. ஈதுருஷம்னா இப்படி அழகான. என்னுடைய வில்லுன்னா கரும்பு தான் வில்லு. மன்மதனுக்கு வில்லு கரும்பு. புஷ்பாண்யமே சாயகா. சாயகன்னா அம்புகள். அரவிந்தம், அரவிந்தம், அரவிந்தம், பஞ்சைதே பஞ்சபானஸ்ய சாயகா. அரவிந்தம், அசோகஞ்ச, சூதஞ்ச, நவமல்லிகா, நீலோத்பலஞ்ச, பஞ்சைதே பஞ்சபானஸ்ய சாயகா. அவன்கிட்ட அஞ்சு அம்புகள் இருக்கு. அரவிந்தம் அப்படின்னா தாமிரப்பூ. அசோகப்பூ. சூதம்னா மாம்பூ, மாமரத்தினுடைய பூ. நவமல்லிக்கான புதுசா இருக்கிற மல்லிகைப்பூ. நீலோ பலம்னா கருப்பா இருக்கிற ஆம்பல் புஷ்பம்னு சொல்லுவா. இதெல்லாம் என்னுடைய, இதெல்லாம் என்னுடைய சாயகங்கள். சாயகங்கள்னா என்னுடைய அம்புகள். தந்திரி மஞ்சுளஸ்வனா மதுகர ஸ்ரேணி சுபா சிஞ்சினி. சரி. அதாவது அம்பு இருக்கு, வில்லு இருக்கு. அப்போ நான் கயிறு வேணுமே, அந்த அம்பை கட்டுற ஒரு கயிறு வேணும் இல்லையோ? அந்த கயிறை வச்சு, அந்த கயிறுல அம்பு வச்சுதான அம்பு விடணும். தந்திரி மஞ்சுள நிஸ்வனா. அதாவது தந்திரி அப்படின்னா வீணையுடைய இந்த தந்திரின்னு சொல்லலாம் பாருங்க. வீணையில் இருக்கிற, நான் வீணையில இருக்கும் இல்லையோ? அதுதான் தந்திரின்னு பேரு. அது அது மாதிரி, அது மாதிரி அழகான நிஸ்வனா சப்தத்தை உடைய. மதுகர ஸ்ரேணி. மதுகர மதுகர அப்படின்னா வண்டுகள். அதனுடைய ஸ்ரேணி, வரிசையா வண்டுகள் நிக்கிறதா. வரிசையா வண்டுகள் நிக்கிறதே அதுதான் அதனுடைய. நான் தமிழ்ல நான் சொல்லுவா. அதான் சிஞ்சினி. சுபா சிஞ்சினி. சிஞ்சினா நான் இந்த கயிறு, வில்லுக்கு ஒரு கயிறு வேணுமோ இல்லையோ? சிஞ்சினி பீருசன்ன அபலாஜனஹா. சரி, நமக்கு வேற யாரு வந்து நமக்கு பலம் வேணுமே. பலம் இல்லாமல் இப்போ நம்மகிட்ட ஒரு வில்லு, அம்பு எல்லாம் இருக்கு, நம்மளால ஒன்னும் பண்ண முடியாது. பலம் வேணும் இல்லையா? அந்த அதை நான்ல பூட்டி அம்பை செலுத்துறதுக்கு ஒரு பலம் வேணும். இப்ப ராமன் பெரிய வீரன், அர்ஜுனன் பெரிய வீரன்னு சொல்றோமோ, அது என்ன அர்த்தம்? அவளுக்கு பலம் இருக்கு கையில. நமக்கு என்ன பலம்? இந்த இவனுக்கு மன்மதனுக்கு என்ன பலம் இருக்குன்னா அபலாஜனஹா. அபலாஜன பெண்கள். பெண்களுக்கு அபலைகள்னு பேரு. பீருசம் அவள் எல்லாம் பயந்தவா. அவதான் எனக்கு பலம். தத்யம் பரங்கத்யதே.

கடைசியாக நான் ஒரு உண்மையை சொல்றேன், கேட்டுக்கோ. சோகம் நிர்ஜித சூல பிரபதிக. சூல, சூலத்தை தரித்தவன் சூலபாணி. சூலபாணி யாரு? ருத்ரன், சிவன். அவனையே ஜெயிச்சவனா ஜெயிக்கப்பட்ட சிவன் முதலானவர்களை உடையவன். அப்படிப்பட்ட நான் சங்கல்ப சித்தோதய. சங்கல்பம் சித்திச்சால் நான் உண்டாகுவேன். அதாவது மனுஷர்களுக்கு ஆசை உண்டாச்சுன்னா, சங்கல்பம் இருந்தால் அடுத்தது காமம் உண்டாகும். சங்கல்பம்ன்றது எண்ணம். சங்கல்பம் என்பது எண்ணம். அந்த எண்ணம் இருந்தா அடுத்த சணம் என்ன ஆகும்? காமம் வந்துரும். காமம்ன்றதுக்கும் சங்கல்பத்துக்கும் பேதம். சங்கல்பம்ன்றது வந்து அது ஒரு வில் அபிப்பிராயம் தான். காமம்ன்றது வந்து இங்கிலீஷ்ல ஒரு இர்ரிவர்சிபில் டிசையர். அது திருப்ப முடியாத ஒரு ஒரு ஆசை இருக்கு பாருங்க. அதுதான் வந்து காமம். அந்த காமம் எப்போ உண்டாகுதுன்னா சங்கல்பே சித்தே உதய. நானும் நான் உண்டாகிறேன் அப்படின்னு தன்னை பத்தி பெருமையா சொல்லிக்கிறான் அவன் மன்மதன். காமன் ஈக்ஷு பேசலம் ஈதிரிஷம் மமதனு புஷ்பான்மே சாயகா தந்திரே மஞ்சுள நிஸ்வனா மதுகர ஸ்ரேணி சுபாஷ் சிஞ்சினி பீருசன் அபலாஜனஹ மமபலம் தத்யம் பரம் கத்தியதே ஸ்தோகம் நிர்ஜித சூலருத் பிரவர்த்திக சங்கல்ப சித்தோதயஹா.

அது மட்டுமில்ல அபிச்சம் சஸ்திராஸ்த்ரே சகாயே மம சம்ஸ்திதே மகதா பஸ்ய மோகேன விஸ்வமேகாத தப பத்ரிதம். அப்பா வசந்தனே நீ வந்து சம்பருத்த சாஸ்திர அஸ்திரே சம்ருத. அப்படின்னா சம்பாரகன்னு ஒரு சப்தம் இருக்கு. விவகாரத்திலே சம்பாரம்னு சொல்லுவாங்க. நம்ம தளிகை பண்றதுக்கு சம்பாரங்கள் எல்லாம் இருக்கான்னு கேப்பா. பிராச்சீன சம்பாரங்கள்னா ஒரு ஒரு காரியம் பண்ணனும்னா அதுக்கு தேவையான விஷயங்களை சேகரித்து வச்சுக்கிறது. சம்பருத சம்ஹாராக வேதமே சொல்றது. அதுக்கு வேண்டிய வேண்டியவை, வேண்டியவைகளை எல்லாம் சேர்த்து வச்சுக்கணும். நீ எப்படிப்பட்டவன்னா சஸ்திரம், அஸ்திரம் இது எல்லாத்தையும் சேர்த்து வச்சுண்டவன். சேர்த்து வைக்கப்பட்ட சஸ்திரத்தையும் அஸ்திரத்தையும் உடையவன். சஸ்திரம் என்றால் மந்திரம் இல்லாமல் விடுற அம்புக்கு சஸ்திரம்னு பேரு. மந்திரத்தோடு கூட விடுகிற அம்புக்கு அஸ்திரம்னு பேரு. இப்படிப்பட்ட ஒரு சேகரிக்கப்பட்ட சஸ்திரத்தையும் அஸ்திரத்தையும் உடைய நீ எனக்கு சகாயனாய் இருக்கும் பொழுது இந்த மகானாய் இருக்கிற மோகன், மகா மோகன் இருக்கானே, அவனால உலகமே ஏகாதபத்திரிதம். ஒரு ஆத்த பத்திரத்தில் இருக்கும். அதாவது ஒரு குடையில் கீழ் இருக்கும். ஒரு குடையில் கீழ் வந்துடும். அதாவது அவனுடைய குடைக்கு கீழே இந்த உலகமே இருக்கும். மகா மோகனுக்கு கீழே உலகமே இருக்கும். அதாவது காமன் சொல்றான் வசந்தனை பார்த்து. நீ எனக்கு சகாயம் பண்ணா நம்ம தலைவனான மகா மோகனுக்கு கீழ இந்த உலகமே இருக்கும். உலகமே மோகத்தை அடைந்ததாய் இருக்கும்னு அர்த்தம். வசந்த கிமுச்சதே காமக்கல்வசி. நீ என்ன சொல்லப்படுறது? என்ன சொல்லணும்? காமக்கல்வசி நீதான் காமனாச்சே. என்ன சொல்ற? சொல்லணுமா? எதுக்கு சொல்லணும்? இதான் காமனாட்சி. காமம் காமம் காபி சித்திம் கரணைவை காரம் காரம் கர்ம நிஷித்தம் விகிதம் அற்புதம் பிரதிபுத்தா காமோ காரி மன்யுர காரி இதிநாம. நீ எப்படிப்பட்டவன் தெரியுமா? நீ சாக்ஷாத் பகவான். மகான்களா இருக்கவா என்ன பண்ணுவா? தான் பண்ற கர்மாக்கள் எல்லாத்தையும் பகவதர்ப்பணமாக பண்ணுவார். கடைசியில ஒரு அது சாத்விக தியாகம்னு சொல்றோம் இல்லையா? ஒரு காரியத்தை பண்ண அப்புறம் கடைசில முடிக்கும் பொழுது அது பகவான் தான் இந்த காரியத்தை செய்தான். காரித்தவான் பகவான். பகவானேவ காரித்தவான். அப்படி முடிப்பார். ஆரம்பிக்கச்சே பகவான் தான் செய்விக்கிறான் அப்படின்னு சொல்லுவார். அப்படிப்பட்ட பகவான் சர்வேஸ்வரன் புருஷோத்தமன் தான் எல்லாருக்கும் தெரியும். இவன் ஸ்தோத்திரம் பண்றான். நீதான் அப்படின்றார் காமனை பார்த்து வசந்த. ஸ்தோத்திரம் பண்றார். எப்படின்னா உலகத்துல காமம் காமம் காமம் காமம் காமம் காமபி சித்தியும் கரணை ஸ்வைகி. அதாவது என்ன பண்றா? காமம் காமம் அப்படின்னா காமித்துவா. காமித்துவா விரும்பி விரும்பி திரும்பி திரும்பி விரும்பி ஏதோ ஒரு கரணைகி அவாவோட இந்திரியங்கள்னால ஏதோ ஒரு சித்தியை சித்தியை காரம் காரம் செய்து செய்து. காரம் காரம்னா செய்து செய்துன்னு அர்த்தம். அது எப்படின்னா நிஷித்தமான கர்மாவோ வேதத்தினால நிஷித்தமான கர்மாவோ வேதத்தினால விகிதமான கர்மாவோ அதை அதை செய்து காமோபி சித்திம் கரணை ஸ்வை. அது அந்த செய்து அந்த சித்தி இருக்கு, அதனுடைய பலன் இருக்கும் இல்லையா? அந்த பலனை தொய் அற்புத சீமுனி. அற்புதம்னா ஆச்சரியம். ஆச்சரியத்தினுடைய எல்லை நீதான். ஆச்சரியத்துடைய எல்லையான உன்னிடத்தில் பிரதிபுத்தாஹா. பிரதிபுத்தான்னா அப்பதான் அவாளுக்கு இந்த இது வருது. நினைவு வருது. இவ்வளவு நாள் இவ்வளவு நேரம் நம்ம செஞ்சோமே, இதெல்லாம் இதெல்லாம் எதனால பண்ணோம்? காமோ கார்ஷித் மன்யுர நாம. காமம் காமம் செஞ்சது மன்யுகு கோபம் செய்தது. காமம் செய்தது கோபம் செய்தது என்று உன்னிடத்தில் வைக்கிறார். இப்ப நாம என்ன பண்ணுவோம்? அனுஷ்டானம் செய்து பகவானிடத்தில் சமர்ப்பிக்கிறோம். அதே மாதிரி உலகத்தில் எல்லாரும் இஷ்டப்பட்டு இஷ்டப்பட்டு காரியங்களை செய்றா. இஷ்டப்பட்டு இஷ்டப்பட்டு இந்திரியங்கள்னால ஏதோ ஒரு சைகி கரணைகி சித்திம் காமம் காமம். இப்படி திருப்பி பார்த்து தன்னுடைய இந்திரியங்கள்னால விரும்பி விரும்பி காமபி சித்திம் ஏதோ ஒரு பலனை விரும்பி நிஷித்த கர்மாவையோ விகிதத்த கர்மாவையோ காரம் காரம் செய்து அற்புத சீம்னி. அற்புத ஆச்சரியத்துக்கெல்லாம் முடிவான உன்னிடத்தில் பிரதிபுத்தாக. பிரதிபுத்தானா ஞானம் வந்தவர்களாக அப்படின்னு அர்த்தம். அறிவு வந்தவர்களாக நஸ்யந்தி உன்னிடத்தில் வைக்கிறார். வைக்கும் பொழுது காம அகாரிஷித். காமம் செய்தது மன்யுகு அகாரிஷித் மன்யுகுனா கோபம். கோபம் செய்தது அப்படின்னு சொல்லி உன்னிடத்தில் வைக்கிறா. அப்போ நீதான் பகவான். பகவானிடத்தில் வைக்கிற மாதிரி உன்னிடத்தில் தான் வைக்கிறாங்க. நீ காமம் தான் செய்ததுன்றா. இதுல நம்ம உபாகர்மா பண்ணும் பொழுது காமோகாஷித் ஜெபம்னு ஒன்னு பண்றா. காமோகாஷித். அதாவது ஒரு அத்தியனம் பண்ணால் நாலரை மாசம் பண்ணனும். அதுக்கப்புறம் அந்த அத்தியனத்தை முடிக்கணும். நம்ம முடிக்கிறது இல்ல. உபாகர்மா பண்றோம். முடிக்கிறது இல்ல. முடிக்காததுனால அந்த தோஷம், அந்த தோஷத்தை, அந்த தோஷத்தை பரிகார தோஷத்தை பரிகரிக்கிறதுக்காக என்ன பண்ணுவோம்? அப்படின்னா காமோ கார்ஷித் மன்யுர கார்ஷித் ஜெபம் பண்ணுவோம். உபாகர்மாக்கு கார்த்தால அதுதான் சுவாமி அழகா சொல்றார். காமம் காமம் தான் என்ன? காமம் தான் செய்றது மன்யுகு கோபம் தான் செய்றது. நான் செய்யல அப்படின்னு காமனிடத்தில் கொண்டுபோய் சமர்ப்பிக்க சொல்றா. நான் பண்ற காரியத்தை அப்படின்னு பெருமையா சொல்றான் வசந்தன். இவன் அன்வயம் சொல்லும்பொழுது திருப்பி பாருங்கோ. கரணைகி சித்திம் காமம் காமம். அதை விரும்பி விரும்பி காமபி சித்திம் காமம் காமம். விரும்பி காரம் காரம். அப்புறம் நிஷித்தம் விகிதம் வா கர்ம காரம் காரம். அப்படின்னு அண்மையும் சொல்லணும். அதுக்கப்புறம் அற்புத சீம்னித்யி பிரதிபுத்தாகந்தி. அதுக்குத்தான் காமோகாரிஷித் மன்யுரகாரிஷித்னு பேரு. அப்படின்னு உடனே மேலும் சொல்றார். விஷம நயன முக்கியை விக்ரம கிரீடிதம் தே சுரபதி பவனா பவனானி ஸ்வைர சஞ்சார பூமி உததி பலயிதேயம் சோனிருத்யான சீமா கதமி மதனத்துவம் வர்ணியசே காந்தி சிந்து. இங்க பாரு உன்னை எப்படி வர்ணிக்க முடியும்? மதனா மதன காமனே உன்னை எப்படி வர்ணிக்க முடியும்? காந்தி சிந்து. காந்தினா சோக சோபையின் சோபானா அழகு. அழகினுடைய சமுத்திரம் நீ அப்படின்னார். எப்படின்னார்? விஷம நயன முக்கியை விக்ரம கிரீடிதம் தே. உன்னை விளையாடுற பீடித்தம்னா விளையாட்டு. யாரோட விளையாடி இருக்க? விஷம நயன முக்கியை. விஷம நயனம்னா கோணலான கண்ணை உடையவன். யாரு? சிவன். நம்மளுக்கெல்லாம் ரெண்டு கண்ணு இருக்கும். சிவனுக்கு மூணாவது கண்ணு இருக்கும். மூணாவது கண்ணு இருந்ததுனா எப்படி இருக்கும்? குணலா தான இருக்கும். அது சரியா இருக்காது இல்லையா? விஷமமா. இப்ப நமக்கெல்லாம் நமக்கெல்லாம் சமானமா ரெண்டு கண்ணு இருக்கு. பக்கத்துல பக்கத்துல இருக்கு. பக்கத்துல பக்கத்துல ரெண்டு கண்ணு இருக்கு நமக்கு. சிவனுக்கு மேல ஒரு கண் இருக்கு. மேல ஒரு கண் இருந்தா என்ன ஆகும்? விஷமமாதான் இருக்கும். சமானமா இருக்காது. அன்ஈவன் சொல்றோம்ல இங்கிலீஷ்ல அன்ஈவன். அதுதான் இது. அப்படிப்பட்ட சிவன் முதலானவர் முதலானவரோட கூட நீ விக்ரம கிரீடிதம். அவாளோட கூட பராக்கிரமத்தை, பராக்கிரமா விளையாட்டு. பராக்கிரமமான விளையாட்டு. ஒன்னு விக்கிரமமான விளையாட்டு. குமார சம்பவம்னு ஒரு காளிதாசனுடைய கிரந்தம் இருக்கு. காவியம். அதை முதல் சர்க்கத்தில் படிச்சா தெரியும். அது சிவனோடு கிட்ட எப்படி மன்மதன் தன்னுடைய காரியங்கள் எல்லாம் காண்பிக்கிறான் அப்படின்னு. சுரபதி பவனானி ஸ்வைர சஞ்சார பூமி. உனக்கு தே, உனக்கு சுரபதி பவனானி. சுரபதி இந்திரன், தேவேந்திரன். அவனுடைய வீடுகள் எல்லாம், அவனுடைய பவனங்கள் எல்லாம் ஸ்வை இஷ்டப்படி சஞ்சரிக்கிறதுக்கு. பூமி அப்படின்னா என்ன அர்த்தம்? அப்படின்னா இந்த இந்த தேவேந்திரனுடைய வீடுகள் எத்தனை உண்டோ, தேவதைகள் எல்லாம் இருக்கிற இடம் இருக்கு இல்லையா? அங்கெல்லாம் இவன் இஷ்டப்படி சஞ்சரிப்பான் அப்படின்னார். இஷ்டப்படி சஞ்சரிப்பான்னா என்ன அர்த்தம்னா அங்க தேவதைகள் எத்தனை பேர் இருந்தாலும், தேவேந்திரன் இருந்தாலும் இவா எல்லா இடத்திலயும் இவன் முடியும். மன்மதம் சஞ்சரிக்க முடியும். அப்படின்னா எல்லாரையும் இவன் பிடிச்சிருக்கான்னு அர்த்தம். உததி வலைதேயம் உத்தியான சீமா. சரி, அவனுடைய உத்தியானம் அப்படின்னா தோட்டம். அவனுடைய தோட்டம். தோட்டத்தினுடைய முடிவு என்னன்னு கேட்டார். ஷோனிகி. ஷோனிகி அப்படின்னா காஷ்யபி அப்படின்னு அமரகோஷம். சோனிகினா பூமி. பூமி இருக்கே, அந்த மன்மதனுடைய தோட்டம். தோட்டத்தினுடைய முடிவு உததி வலையிதேயம். கடலால் சூழப்பட்டது. கடலால் உததினா கடல். வலையீதா அதனால சூழப்பட்ட இந்த சோனிகி இருக்க. இது உனக்கு உத்தியான சீமா. உனக்கு அதான் பார்க். அதுதான் தோட்டம். கதமிவ மதனத்துவம் வர்ணியசே காந்தி சிந்து. எப்படி உன்னை வர்ணிக்க முடியும்? நீ சிவன் முதலானவரோடு கூட விளையாடுற உன்னுடைய பராக்கிரமத்தை காண்பிக்கிற தேவேந்திரனுடைய வீட்டுகள் எல்லாத்துலயும் இஷ்டப்படி. ஸ்வைரம்னு ஒரு அழகான பதம். ஸ்வேன ஈரணம் ஸ்வைரம் அப்படின்னுவா. ஸ்வேன ஈரணம் இஷ்டப்படி சுத்தணும். இஷ்டப்படி சுத்துறது. அது வந்து இந்த நம்ம இங்கிலீஷ்ல கூட சொல்லுவா. வந்து சில சப்தங்கள் இருக்கு அதை வேண்டாம் சொல்ல வேண்டாம். இங்கிலீஷ்ல இஷ்டப்படி சுத்துறவன் இருக்கானோ இல்லையோ? இஷ்டப்படி சுத்துறவனுக்கு ஒரு சப்தம் இருக்கு. அதே மாதிரி மன்மதன் இருக்கான். இஷ்டப்படி சுத்துவான். இஷ்டப்படின்னா இப்போ சில இடத்துக்கு போகலாம், சில இடத்துக்கு போகக்கூடாது. சில பேரோட பேசலாம், சில பேரோட பேசலாம் கூடாது. சில நிர்பந்தங்கள் எல்லாம் உலகத்தில் உண்டோ இல்லையோ? ஒரு மனுஷன்னா இப்படித்தான் இருக்கணும். அதெல்லாம் இவனுக்கு ஒண்ணுமே கிடையாது. உததிவலைதேயம் சீமானத்துவம் வர்ணியசே காந்தி சிந்து. அப்படின்னு வசந்தன் மன்மதனை ஸ்தோத்திரம் பண்றான்.

உடனே மன்மதன் சகே சர்வலோக விதிம் ஆத்மோபி வைபவம் அனுசிந்தய. ரெண்டு பேரும் பரஸ்பரம் ஸ்தோத்திரம் பண்ணிக்கிறார். உன்னோட வைபவம் இருக்கே உலக சர்வ லோகத்திலேயும் தெரிஞ்சது. அதையும் ஒரு தடவை நினைச்சு பார். அனுச்சிந்த நினைச்சு பார். எதேத பிரக்யாதஸ்தவை சம்பவ சுமனசாம் விஸ்வம்யானந்தயதே முக்கியஸ்தும் கில சட்விதேஷு ருதுஷு ஜோதிஸ்துவதேகாஸ்ரயம் எத்ரஸ் பங்கஜா சஜபரஸ்து சம்ஸ்ரயோ மாதவா காமஸ்தே சச்சிவ கயேவ பவிதா காலோத்தம்தஹா. அதாவது நீ உத்தமமான காலம், வசந்த காலம் இருக்கே. வசந்த காலம் என்பது உத்தமமான காலம். நீ காலோத்தமன். காலங்கள்ல உத்தமன். புருஷன்ல உத்தமன். சர்வேஸ்வரன், நாராயணன் காலோத்தமன். நீ காலோத்தமனான உனக்கு சமான சமான காலோத்தமன். நீ உனக்கு சமானமான ஒருத்தன் கயேவ பவிதா யார் வருவான்? பவிதானா வருவான் அர்த்தம். உனக்கு சமானமாக யார் ஒருவன் வருவான்? என்ன இவனோட அவ்வளவு வைசியம் பிரக்யாதஹா தொய் உன்னிடத்தில் உன்னிடத்தில் பிரக்யாத மேல சேர்த்துக்கலாம். பிரக்யாத அதாவது பிரக்யாதஹை சம்பவக சுமனசாம். சுமனசாம் அப்படின்னா சுமனசாம்னா தேவர்கள். தேவர்கள் எல்லாம் உன்னிடத்திலிருந்து தான் உண்டு ஆனா உண்டானா பொய். உன்னிடத்தில் சுமனசாம் தேவதைகளுக்கு சம்பவ உற்பத்தியானது. பிரக்யாதம் எல்லாருக்கும் தெரியும். தெரிஞ்ச விஷயம் சுமனசாம் சம்பவை சம்பவ பிரக்யாத. இப்போ சுமனஸ் அப்படின்னா என்ன சொல்றோம்னா சுமனஸ்னா தேவதைகள். அப்படின்னு நம்ம சுபர்னா சுமனசார நிகண்டு. ஆனால் நல்ல மனசை உடைய, நல்ல மனசை உடைய வித்வான்கள், ஸ்திரீகள், புஷ்பம் இதெல்லாம் சுமனசுன்னு சொல்றது. சோகனமான மனசை உடைய அவர்கள் வித்வான்கள். சோபனமான மனசை உடையவர்கள் ஸ்திரீகள். சோபனமான மனசுக்கு காரணமாய் இருக்கிறது புஷ்பம். அதாவது புஷ்பம் எல்லாம் இருந்தாலே மனசுக்கு ஒரு சந்தோஷம் ஏற்படும். இயற்கையா இயற்கையை பார்த்தாலே சந்தோஷம் ஏற்படும். நல்ல காலம் காரத்தால மார்க்கெட்டுக்கு போனோம்னா இந்த காய்கறி மார்க்கெட்டுக்கு போனோம்னு வச்சுக்கோங்களேன். நிறைய காய்கறி எல்லாம் கொட்டி வச்சிருப்பான். அதெல்லாம் பார்த்தாலே சந்தோஷமா தான் இருக்கும். இயற்கையை பார்த்தாலே சந்தோஷமா தான் இருக்கும். இப்ப சுமனசாம் அப்படின்னா புஷ்பங்கள். சுமனசாம்னா புஷ்பங்கள். சுமனசாம்னா வித்வான்கள். சுமனசாம்னா ஸ்திரீகள். இவா எல்லாருமே வசந்தத்தில் தான் உண்டானா. வசந்த காலத்தில் தான் புஷ்பங்கள் எல்லாம் உண்டா? வசந்த காலத்துல தான் வித்வான்கள் உண்டாவா? அது எப்படி சுவாமி? வசந்த காலத்தில் வித்வான்கள் உண்டாவா? வசந்த காலத்தில் ஸ்திரீகள் உண்டாவா? அப்படின்னா என்ன அர்த்தம்னா இந்த வசந்த காலத்தில் தான் நல்ல காரியங்கள் எல்லாம் பண்ணுவா. வசந்த காலத்தில் தான் உபநயனம் பண்ணனும். வசந்த காலத்துல தான் கல்யாணம் பண்ணனும். மாகாத்யா பஞ்சவசந்தான்னு சொல்லுவா. அந்த அஞ்சு மாசங்கள். அதுலதான் அதுலதான் வந்து விவாகம் பண்ணனும். அதனால அதுவே ஒரு உற்பத்தியாக வச்சுண்டார். இல்லாட்டா வெர்ம ஸ்தோத்திரம் பண்ணி வச்சா இவள் எல்லாம் உன்னி இடத்துல இருந்து தான் உண்டானா அப்படி சொல்லலாம். இல்லைன்னா எப்படி சொல்லலாம்? ஆறு ருத்துக்கள் இருக்கு. ஆறு ருத்துக்கள்ல வசந்த ருத்துல எப்படியும் ஸ்திரீகள் உண்டாவாளா இல்லையா? வசந்த ருத்துக்கள்ல வித்வான்கள் சில வித்வான்கள் பிறப்பா இல்லையோ? வசந்த ருத்துல புஷ்பங்கள் எல்லாம் உண்டாகுமா இல்லையா? அப்போ வசந்தத்துல தான் உண்டாகுதுன்னு சொல்றது ஒரு புகழ்ச்சி. விஸ்வம் தயா நந்தியதே. இந்த உலகம் மொத்தம் வசந்த காலம் வந்ததுனா அப்படியே ஆனந்தத்தை அடைஞ்சிடும் உன்னால். விஸ்வம் இந்த உலகம் நந்தியதே ஆனந்தத்தை அடைகிறது. முக்கியஸ்துவம் கில்ட்விதேஷு ருத்துஷு. ஆறு ருத்துக்கள்ல வசந்த ரித்து தான் முக்கியம். முக்கியம்னா என்ன அர்த்தம்? அப்படின்னார். முதல்ல இருக்குன்னு அர்த்தம். முகே பவஹ முக்கிய. முதல்ல இருக்கிறது வசந்த ருத்து. வசந்த ருது வசந்தருது உனாம் பிரியனாமி வேதமே. முதல்ல வசந்த ருத்துவ தான் சொல்றது. ஜோதிஸ்தவதேகாஸ்ரயம். ஜோதி துவதேகாஸ்ரயம் அப்படின்னார். அதாவது என்னன்னா ஜோதிகி உன்னதான் ஆசிரயிச்சு இருக்கு. என்ன அர்த்தம்? ஜோதிசு வசந்த ருத்துவை ஆசிரச்சிருக்குன்னா என்ன அர்த்தம்னா ஜோதிகின்ற சப்தமானது ஜோதிஷ்டோமம் சொல்லப்படுகிற சோமயாகத்தை சொல்லும். ஏதானி வாவதானி ஜோதிகும் ஏதியஸ்தோமா அப்படின்னு வேதம் சொல்றது. ஜோதி என்ற சப்தமானது ஜோதிஷ்டோமம் என்கிற சோம யாகத்தை சொல்லும். சரி இந்த சோம யாகம் வசந்த ருத்துவை ஆசிரிச்சிருக்குன்னா என்ன அர்த்தம்? அப்படின்னா சோம யாகத்தை வசந்த ருத்துல பண்ணனும். ஒவ்வொரு வசந்தத்துலயும் பண்ணனும். வசந்தே வசந்தே ஜோதிஷா எஜயதான்னு வாக்கியம் இருக்கு. அதனால ஜோதிஹி ஜோதிஷ்டோமம் எனப்படும் சோமயாகம் உன்னையே ஆசிரயிச்சிருக்கு. அதுக்கு மேல இன்னும் கொஞ்சம் ஒரு படி மேல போகறார். சம்ஸ்ரயோ மாதவஹா சச்ச பரகாத். சம்ஸ்ரய மாதவ இந்த வசந்த ருத்து இருக்கு இல்லையா? வசந்த ருத்துல ரெண்டு மாசம் இருக்கு. மதுஷ மாதவ. மது ஒரு மாசம் முதல் மாசம். இரண்டாவது மாசத்துக்கு மாதவஹான்னு பேரு வேதம் சொல்றது. மது மாசம் மாதவ மாசம்னு அதான் சொல்றார். எத்ர ஸ்ரீஹி