📱

Get Our Mobile App

Take your business learning on the go!

Download on the App StoreGet it on Google Play

ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் | Lalitha Sahasranamam | 1000 Peyargal 1000 Palangal | Ep - 1000

SRI SANKARA TV11:35

Transcription

நமது ஸ்ரீ சங்கரா தொலைக்காட்சியில் 144 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டும் நம் வாழ்நாளில் வரும் மகா கும்பமே மோட்ச நம்பிக்கையில் கோடிகளில் பக்தர்கள், ரிஷிகளும், சந்நியாசிகளும் நீராடும் நிகழ்வான சாகி ஸ்நானத்தின் போது எடுக்கப்படும் திரிவேணி சங்கமம் புண்ணிய தீர்த்தம் உங்கள் ஸ்ரீ சங்கரா டிவி வழங்கவிருக்கிறது.

மேலும் www.shankaraworld.com என்ற இணையதளத்திற்கு சென்று முன்பதிவு செய்யலாம்.

[கரகோஷம்]

ஓம் ஸ்ரீகாந்த துருகினோபமன்யுதபன ஸ்கந்தேந்திர நந்தியாதயஹா பிராசீனோ குரவோபியஸ்ய கருணா லேசாத் கதா கௌரவம் தம் சர்வாதி குரும் மனோஜ் வபுஷம் மந்தஸ்மிதாலிருதம் சின்முத்ராங்கி முத்ராபாணி நலினம் சித்தே சிவம் குர்மகே நமஸ்தே நமஸ்தயே நமஸ்தகீனாம் புரோகானாம் சக்ஷு நமோ திவே நம பிரதிபயே நமஹ.

சங்கரா தொலைக்காட்சி நேயர்களுக்கு நமஸ்காரம்.

லலிதா சகஸ்ரநாமம் சிந்தித்துக் கொண்டிருக்கிறோம். ஆயிரமாவது நாமாவளி லலிதாம்பிகா, ஸ்ரீ சிவா சிவ சக்தியை ரூபினே.

லலிதா அம்பிகா ஆயிரம் நாமாவளி அம்பாவிளுக்கு இருக்கு. அதுல இந்த நாமாவளியை வச்சுதான் லலிதா சகஸ்ரநாமம்னு பேர் வச்சிருக்கா.

இதுக்கு முன்னாடி எந்த ஒரு 999 நாமாவளியிலயும் அவளோட பேர்தான் சொல்லப்பட்டிருக்கு. இருந்தாலும் இந்த நாமாவளிக்கு ஒரு தனி சிறப்பு இருக்கு.

இப்ப ஒரு உதாரணம் பாருங்கோ. என்னன்னா மகேஷ் சுரனை வதம் பண்ண வந்தவர் துர்க்கை. அது மாதிரி காளி சூரபத்மனை வதம் பண்ண வந்தவர் முருகன்.

அந்த அசுரனை வச்சு அந்த சுவாமி தோன்று, அந்த சாமி தோற்றமே எப்படி ஹிரண்ய கசிபு அப்படின்னு ஒரு அரக்கனை வதம் பண்ண வந்தவர் நரசிம்மர்.

அப்படி பார்த்தோம்னா இந்த லலிதா அப்படிங்கிற அம்பாள் வந்து மன்மதனை சிவபெருமான் நெத்திக்கண்ணால எரிச்சுட்டார்.

அந்த எரிச்ச சாம்பல்ல இருந்து உருவானவான் இந்த பண்டாசுரன். அதனால பண்டாசுரனை வதம் பண்ண வந்தவர் தான் இந்த லலிதா பரமேஸ்வரன்.

அப்ப லலிதாவினுடைய தனி அடையாளம் இந்த பண்டாசுரனை அவதான் வதம் பண்ணினாள்.

சூரபத்மனை எப்படி முருகன்னு தனியா தெரிஞ்சுக்கிறோமோ, அது மாதிரி பிற அம்பாள் வடிவங்களில் இருந்து நீங்கி அவளே எல்லாத்துக்கும் மேலா இருக்கா.

அவளே எல்லா மாமாவும் இருக்கா. அது வேற விஷயம் ஆனா அவளை தனி அடையாளம் காண்பதற்காக இந்த லலிதா அப்படின்னு லலிதம் அப்படிங்கிற வார்த்தையை கொஞ்சம் யோசிச்சு பார்த்தோம்னா, குழந்தையில கொஞ்சுறதுக்கு பேரு லு அப்படின்னு சொல்லுவோம்.

ஒரு தாயார் வந்து தன்னுடைய குழந்தையை கொஞ்சுறாளோ இல்லையோ, அந்த வார்த்தைதான் இந்த லலிதான்னு பேரு.

அப்படி அந்த கொஞ்சுதல் அப்படிங்கறது அந்த குழந்தைக்கு ஒரு மகிழ்ச்சியை கொடுக்கும்.

அது மகிழ்ச்சியா இருக்கிறதுக்கு தாய் காரணமாகவும் இருப்பாள்.

இப்ப லலிதாங்கிறவ அனைத்து உயிர்களின் மகிழ்ச்சிக்கு காரணமானவள்.

அதே மாதிரி அனைத்து உயிர்களின் பாதுகாப்புக்கு காரணமானவள்.

துன்பம் வராது காக்கின்ற பண்பு எப்பொழுதுமே இன்பத்தை வழங்குகிற பண்பும், தனது அருளினாலே எப்பொழுதும் இன்பத்தை வணங்குகிற பண்பும் உடைய அம்பிகான்னா, அம்பாளுக்கு பேரு அம்மாவுக்கு பேரு.

அம்பிகான்னு வச்சுக்கோங்க. சில நாமாவளிக்கு எல்லாம் நம்ம வியாக்கியானமே வந்து தடுமாறி தான் சொல்ல வேண்டியதா இருக்கு.

எதையோ சொல்றோம் அப்படின்னா, அதனுடைய முழு ஆற்றலை நம்ம குறைச்சிருவோம்.

அதனால லலிதா அப்படிங்கறது ஒரு தனி சிறப்புடைய நாமாவளி.

அதுல அம்பாள், அம்மா, அம்பாள் ஆரம்பிச்ச மாதான்னு ஆரம்பிச்ச அம்பிகான்னு முடிக்கிறார்.

இங்க மாதா அப்படிங்கிறதும் தாயாரை தான் குறிக்கும்.

அது ஒரு கருவை வளர்த்தெடுக்கிற சூழல்.

ஒரு தாயாருடைய கருப்பைக்கு தான் அந்த ஒரு சொட்டு விந்திலிருந்து ஒரு குழந்தையா ஆக்கி 10 மாசம் கழிச்சு வெளியில தர முடியும்.

ஒரு ஆன்மாவுக்கு ஒரு பூரண உடலை அது தர முடியும்.

அந்த கருப்பையினுடைய சிறப்பு குடியிருந்த கோயில்னு சொல்றது வழக்கம்.

தாய்மார்கள் எல்லாம் அதே மாதிரி.

இந்த இடத்துல லலிதா அப்படிங்கிற விஷயம் அந்த குழந்தை பிறந்தது இருந்து இறப்பது வரைக்கும் காக்கின்ற பண்பையும், அந்த உயிர்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கின்ற பண்பும் நித்தியமா யாருகிட்ட சொபாவமா இருக்கோ.

அவளுக்கு லலிதாம்பிகா அப்படின்னு பேரு.

இந்த லலிதாம்பிகா அப்படிங்கிற நாமாவளியை சொன்னா, இதுக்கு முன்னாடி சொன்ன மாதிரி ஆயிரம் நாமாவளி சொன்ன பலனும் வரும்.

அவ்வளவு சிறப்பு.

கடைசி சாராம்சம் என்ன தோன்றது அப்படின்னா, இதுவரைக்கும் இந்த ஆயிரம் நாமாவளையும் கேட்டிருக்கேன்.

அப்படி கேட்கிறது அப்படிங்கிற ஒரு விஷயம் இருக்கு.

அப்படின்னா அது அம்பாளுடைய அனுக்கிரகம்.

அவன் அருளாலே, அவன் தாழ்வனை அது கேட்கணும்.

ஏதோ அம்பாளை பத்தி சொல்றா கேட்கணும்.

அது அம்பாளுடைய அனுக்கிரகம்.

அதே மாதிரி கேட்கிறத.

சரியாக புரிந்து கொள்ளுதல் அப்படிங்கிறது.

அம்பாளுடைய அனுக்கிரகம் அபிராமி பட்டர் சொல்லுவாரு.

பொய்யும் மெய்யும் இயம்ப வைத்தாய்னு சொல்லுவார்.

கீழ நெருப்பு என்ன, மேல கயிறு.

ஒவ்வொரு பாட்டும் அடுத்து வந்தா பயம் வருமா இல்ல பாட்டு வருமா இல்ல பக்தி வருமா யோசிச்சு பாருங்க.

மல்லின்னா அவமானம் நிலவு ஓடலைன்னா.

அதெல்லாம் அவர் யோசிக்கல.

எதுக்கு இதை சொல்றேன் அப்படின்னா, அப்படி கேட்கிறது அப்படிங்கறது அம்பாளினுடைய அனுக்கிரகம் இருந்து கேட்கிறது.

அது மாதிரி அம்பாளுடைய அனுக்கிரகத்தினாலே அதை புரிந்து கொள்வது.

அம்பாள் என்ன ஏன்னா, அவளுடைய ஆக்ஞினாலே இது சொல்லப்பட்டதுன்னு சொல்றா.

அதனால அவளுடைய ஆக்னியினால, அவ என்ன எண்ணத்தை மனசுல வச்சுண்டு, வசன்யாதி வாக் தேவதைகளுக்கு சொன்னாலோ, அந்த மாதிரி சொன்னால் புரிந்து கொண்டால், அப்படி கேட்டதை புரிஞ்சுண்டா சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்வர்.

செல்வர் சிவபுரத்து உள்ளார் சிதனடி என்பார்.

சைவத்துல அதை புரிஞ்சு சொன்னா என்ன விசேஷம்.

அப்படி லிதா சகஸ்ரநாமத்தை புரிஞ்சு சொன்னா, மாணிக்கவாசகர் சொன்ன மாதிரிதான் என்ன சொல்றார்.

எல்லா அந்தணனர்களும் மாணிக்கவாசகர்ட்ட சிவபெருமானே கையெழுத்து போட்டிருக்கார்.

நீங்க எழுதின ஓலையை அவர் கைப்பட எழுதி இருக்கார்.

அது நமக்கு முழுசா கிடைச்ச ஓலைச்சுவடி.

பாக்கி எல்லாம் கரையா அரிச்சிருச்சு.

நான் மத்ததை உயர்த்தியும் இதை தாழ்த்தியும் பேசல.

தயவு பண்ணி உங்க பாதாரவிந்தங்களை வேண்டி விரும்பி கேட்டுக்கொள்கிறேன்.

அந்த நோக்கம் புரிஞ்சுக்கணும்.

ஒரு நொடி புரிஞ்சா கூட தப்பா போயிடும்.

அந்த ஓலை அப்படியே இருக்கு.

செல்லெல்லாம் அறிக்கைல ஏன்னா சிவபெருமானை கைப்பற்றது அவர் எழுதி இருக்க.

அதோட பொருளை சொல்லுங்கோன்னு கேட்டார்.

அவர் மாணிக்கவாசகர் என்ன பண்ணாரு சொல்றேன்பா சொல்றேன்பா சொல்றேன்பா.

அப்படின்னு சொல்லிட்டு வந்துட்டு, இந்த சபை இருக்கோ இல்லையோ இன்னைக்கு சிதம்பரத்துல இருக்கிறது.

அதுக்குள்ள நுழைஞ்சிட்டார்.

அப்படி நுழைஞ்சது தான் எல்லாரும் பார்த்தா, அதுக்கப்புறம் அவர் என்ன ஆனா யாருக்கும் தெரியாது.

ஆகாயமுத்தி அந்த மாதிரி மாதிரி அவர் என்ன சொன்னார்.

அந்த பாட்டை அவர் சொல்லிட்டு போறார்.

அதுதான் பொருள்.

இறைவனோடு இரண்டற கலத்தல், எப்பொழுதுமே இன்பமாக இருத்தல்.

வாழும் பொழுது இன்பமாக இருத்தல், துன்பங்களை நீங்கி இருத்தல்.

முடிவில் இறைவியோடு இரண்டற கலத்தல்.

அவ்வளவுதான் விஷயம்.

இதை அம்பாள்ட்ட கொண்டு போய் நம்ம சேர்ப்போம்.

சாய்ஜ்ய பதவியை கொடுக்கக்கூடிய பண்பு இந்த லிதா சகஸ்ரநாமத்திற்கு உண்டு.

அதனால இதை கேட்கிறதுங்கிறது.

அம்பாளுடைய அனுக்கிரகம் அப்படி கேட்டு அவ சொல்றது புரிஞ்சுக்கிறதுங்கிறது.

அம்பாளுடைய அனுக்கிரகம்.

அதை எல்லாம் தவிர, அதை புரிஞ்சுண்டு, அதை மாதிரி அனுஷ்டானம் பண்ணி, அதிலிருந்து ஒரு துளியாவது, ஒரு லவலேசமாவது நான் இந்த நாமாவளியை சொன்னேன்.

ஏதோ ஒரு விஷயத்தை கேட்டேன்.

சங்கரா டிவி சொன்ன இந்த நேரத்தை ஒதுக்கி, இதுக்கு அவா ஒரு பகுதி கொடுத்து அதை சொல்ல வச்சு, அதுல அடியேனுக்கு ஒரு வாய்ப்பு கொடுத்திருக்கா.

அந்த வாய்ப்புல சொல்லி, அதனுடைய பலன் அப்படிங்கறது என்ன அப்படின்னா, நான் வந்து அம்பாளை நீங்க சொன்னபடி தியானம் பண்ணினேன்.

அப்படி அடைந்தேன் அப்படின்னு சொல்றத கேட்கிறதுக்கு தான் நான் ஆசைப்படுறேன்.

அப்படி சொல்ல வைக்கிறதும் அம்பாள்தான்.

ஆனா அதுல எந்த தப்பு இருந்தாலும் அது என்னது.

இதுவரைக்கும் அந்த தப்பு எதுவா இருந்தாலும், உங்கள் பாதாரவிந்தங்களில் வேண்டி விரும்பி கேட்டுக்கொள்கிறேன்.

என்னை மன்னித்தருளும்படி, தப்பை நான் பண்றதுக்கு எனக்கு 100% ஏன்னா எனக்கு எனக்கே தெரியும் எவ்வளவு விஷயம் அதுல தப்பு இருக்குன்னு.

அதை பொறுமையா கேட்டுண்டு இருந்தல, அந்த பொறுமை தான் அம்பாள் உங்களுக்கு கொடுத்திருக்கா.

ஆனா என்னன்னா, அப்படி தப்பு தப்பா சொல்லிப்புட்டு, எங்களை எல்லாம் தப்பா புரிஞ்சுக்க வச்சீங்களா அப்படின்னு கேட்டா, அதுக்கு அவர் சொல்றாரு.

தப்பா சொன்னாலும், ஏதோ எனக்கு தெரிஞ்ச வரைக்கும் நான் அதுல சொல்லி இருக்கேன்.

அதுல தப்பு அதிகமா இருக்கு அப்படின்னா, அது என்னுடைய பிழையா தான் இருக்கும்.

சாமி, அம்பாள் எப்படி தப்பு தப்பா சொல்றதுக்கு அனுக்கிரகம் பண்ண முடியும்.

தவறா இருந்தால் அது மனிதனுடையதாக தான் இருக்கும்.

அதனால்தான் சொல்.

அவமாயினும், நின் திருநாமங்கள் தோத்திரமே எனக்கு சொல்ல தெரியலனாலும், அந்த அபிராமி பட்டர் காலை புடிச்சு தான் சொல்லி இருக்கேன்.

அப்படி ஏதாவது ஒரு சில தவறுகள் ஏற்பட்டிருந்தால், அதை தோத்திரமாக கருதி ஏற்க, அம்பாளை பிரார்த்தனை பண்ணுகிறேன்.

அதில் இருக்கக்கூடிய தவறுகளை மன்னித்து எனக்கு அருளும்படியாக உங்களை பிரார்த்திக்கிறேன்.

அயம் தர்மஹா உத்தரோத்தராபிரஸ்து.

நமது ஸ்ரீ சங்கரா தொலைக்காட்சியில் 144 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டும் நம் வாழ்நாளில் வரும் மகா கும்பமே மோட்ச நம்பிக்கையில் கோடிகளில் பக்தர்கள், ரிஷிகளும், சந்நியாசிகளும் நீராடும் நிகழ்வான சாகி ஸ்நானத்தின் போது எடுக்கப்படும் திரிவேணி சங்கமம் புண்ணிய தீர்த்தம் உங்கள் ஸ்ரீ சங்கரா டிவி வழங்கவிருக்கிறது.

மேலும் www.shankaraworld.com என்ற இணையதளத்திற்கு சென்று முன்பதிவு செய்யலாம்.

ஓம்

[இசை]