Transcription
ஹே [இசை] >> [இசை] >> ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்கள் யாவருக்கும் என்னுடைய அன்பின் நல்வாழ்த்துக்கள்.
நம்ம புதிதாக ஆரம்பித்திருக்கிற நிகழ்ச்சி தீர்க்கதரிசன உலகம். இந்த நிகழ்ச்சிக்கு நான் உங்களை அழைக்கிறேன். போன வாரம் நம்ம சந்தித்துக் கொண்ட போது, இந்த நிகழ்ச்சி எதற்காக என்கிற ஒரு முன்னுரை, ஒரு முன்னோட்டமான செய்தியை நீங்க கேட்டீங்க. இந்த வாரம் கூட அந்த முன்னோட்டமான காரியங்களைதான் நம்ம பார்க்க போறோம். ஆனால் நீங்க தொடர்ந்து இந்த நிகழ்ச்சிகளை கவனிச்சு பார்க்கணும். அதற்கு பிறகு வரக்கூடிய ஒவ்வொரு நிகழ்ச்சிகளும் ரொம்ப திருல்லிங்கா வேதத்தை நீங்கள் அறியாத பல காரியங்களை, பல பக்கங்களை வேதத்தில் சொல்லப்பட்டிருக்கிற பல மர்மங்களை, ரகசியங்களை நாம் அறிந்து கொள்ள போகிறோம். கர்த்தருடைய ஆவியானவர் உங்களுக்கு உதவி செய்வார்.
இந்த நிகழ்ச்சியிலே இனி வருகிற வாரங்களில் ஒரு புதிய காரியத்தை நம்ம கொண்டு வரோம். நான் ஏற்கனவே சொன்னேன், தீர்க்கதரிசனங்களை குறித்து கர்த்தருடைய ஜனங்கள் சாதாரணமா இருக்கக்கூடிய கிறிஸ்தவர்கள்ல நிறைய பேரு தீர்க்கதரிசனங்களை வாசிக்க மாட்டாங்க. இந்த நிகழ்ச்சி உங்களை தீர்க்கதரிசனங்களை வாசிக்க வைக்க போகிறது. அதுக்கு நம்ம என்ன செய்ய போறோம் அப்படின்னா, நீங்க சபா ஆராதனையில கூட பாருங்களேன், நாம் எழுந்து நின்று மாறி மாறி வாசிப்போம் அப்படின்னு சொல்லி ஒரு சங்கீதத்தை மாறி மாறி வாசிப்பாங்க. கவனிச்சிருக்கீங்களா? இன்னும் சில சபைகள்ல இன்றைக்கு வாசிக்கும்படிக்கு குறிக்கப்பட்ட வேத பாடம் அப்படின்னு சொல்லி நிரூப வாக்கியங்களல இருந்து வாசிப்பாங்க, சுவிசேஷத்திலிருந்து ஒரு பகுதியை வாசிப்பாங்க. சபையில தான வாசிக்கிறாங்க.
நாம் என்ன செய்ய போறோம்? இந்த நிகழ்ச்சியில நீங்கள் வாசித்தறியாத, வாசிக்காத பல தீர்க்கதரிசனங்களை வேதத்தில நிறைய தீர்க்கதரிசிகள் இருக்கிறாங்க. அவர்கள் எழுதின தீர்க்கதரிசனங்கள் இருக்கிறது. அந்த தீர்க்கதரிசனங்கள்ல பல பேர் இப்படி ஒரு வார்த்தை எல்லாம் இருக்குதா? இப்படி ஒரு வசனம் எல்லாம் இருக்குதாங்கிறத தெரியாதவங்களா நிறைய பேர் இருக்கிறாங்க. அதனால நீங்கள் எளிதாக அந்த வசனங்களை வாசிக்கும் படிக்கு இந்த குறிப்பிட்ட சில பகுதிகளை, தீர்க்கதரிசன பகுதிகளை வாசிக்க போகிறோம். அதுல மேக்ஸிமம் என்ன தெரியுமா? இந்த கடைசி காலங்களோடு தொடர்புடைய தீர்க்கதரிசனங்களை வாசிக்க போறோம். எப்படி எழுதி இருக்கோம் அப்படியே வாசிக்க போறோம். ஆனா ராவ நம்ம அப்படியே வாசிச்சா அதை கவனிக்கும் போது நமக்கு கொஞ்சம் கஷ்டமா இருக்கும். அதனால நம்ம என்ன செய்ய போறோம்? அதை நீங்கள் விரும்பி கவனிக்கிற மாதிரி அதை ஒரு புது வடிவத்திலே கொண்டு வர போறோம். நீங்களும் பைபிள்ல இந்த பகுதிய எடுத்து கையில வச்சுக்கிறணும். நிகழ்ச்சியை கவனிச்சு பார்க்கணும். சொல்ல நீங்களும் அதை வாசித்து பார்க்கணும். இது இனி வருகிற நிகழ்ச்சிகளில் இருந்துதான்.
இப்ப இந்த நிகழ்ச்சி நமக்கு ஏன் தேவை என்றும், தீர்க்கதரிசனங்கள் எதற்கு நமக்கு முக்கியம்? அதுவும் இந்த கடைசி காலத்தில தீர்க்கதரிசனங்கள் எதற்கு அவசியம்? தீர்க்கதரிசனம் இல்லைன்னா நம்ம போற பாதை தெரியாது, நடக்கிற காரியங்கள் தெரியாது, தப்பிக்கிற வழி தெரியாது. கண்ணில்லாதவன் இருட்டுல நடந்தா எப்படி இருக்கும்? கண்ணில்லாட்டானா இருட்டுதான். நடக்கிறதும் இருட்டு. அப்படின்னா என்ன அர்த்தம்? கண்ணில்லாதவன் இருட்டுல நடக்குதுன்னா, அவனும் நடக்க முடியாது. அவர்களை பிடிச்ு நடத்திட்டு போறாங்க பாருங்க, அவங்களும் நடக்க முடியாது. கண்ணு இருக்கிறவன் தான் அவர்களை நடத்த முடியும். அப்ப நடத்துறவனும் கண்ண இல்லாதவன் ஆகிிருவான். கண்ணு இல்லாதவன் ஏற்கனவே அவனுக்கு இருட்டுனாலும் வெளிச்சம்னாலும் இருட்டுதான். அவர்களும் இருட்டுல மாறிருவாங்க. அப்ப இனி வருகிற அந்த கொடிய காலங்களில் நம்மை நடத்தி செல்வதற்கு கர்த்தர் நமக்கு கொடுத்திருக்கிற தீபம், அந்த தீபம்தான் இந்த தீர்க்கதரிசன வசனங்கள்.
அப்ப இந்த தீர்க்கதரிசன வசனங்களை முன்ன என்னெல்லாம் நீங்க கவனிச்சீங்களோ, கவனிக்கலையோ, இந்த இருண்ட காலத்தில, இந்த கடைசி காலத்தில கட்டாயம் கவனிக்கணும். அதை சும்மா வந்து வாசிக்கிறது இல்ல. அவர் சொல்றார், அத கவனித்து பார்ப்பது நலமாய் இருக்கும். ரண்டு பேதுரு ஒன்னாவது அதிகாரம் 19வது வசனம், அந்த தீர்க்கதரிசன வார்த்தைகளை கவனித்திருப்பது நலமாய் இருக்கும். கவனிச்சிருக்கிறதுனா அதை ரொம்ப உற்று பார்த்து, ஆராய்ந்து பார்த்து கவனிப்பது. சும்மா பார்க்கறது இல்ல. சும்மா அந்த வசனத்தை மனப்பாடம் பண்ணிட்டு இருட்டுல போறேன் அப்படின்னு சொல்லி சொல்லிட்டு போறதுல்ல. கவனிச்சு பார்க்கிறது உங்களை சரியான பாதையிலே நடத்தும். ஏனென்றால் இந்த கடைசி காலம் பொய்யினால் நிறைந்த ஒரு காலம். எதை நம்புவது, எதை நம்பாமல் இருப்பது என்று நமக்கு தெரியாம போயிரும். அப்போ பொய்யான செய்திகள் பரப்பப்படும்.
சமீபத்திலே நான் பார்த்த ஆச்சரியப்பட்ட ஒரு காரியம். யுத்தம் நடந்து கொண்டிருக்கிறது. யுத்தம் நடந்து கொண்டிருக்கும் போது சில தேவனுடைய பிள்ளைகள் இந்த யுத்தத்துல ரொம்ப அதிகமா ஜெபம் பண்றாங்க. நம்மில் பல பேர் என்ன சொல்றாங்க அப்படின்னு கேட்டா, இஸ்ரவேல் என்பது கர்த்தருடைய தேசம். அந்த இஸ்ரவேலுக்கு உதவி செய்கிற அமெரிக்க தேசம். கர்த்தர்தான் அந்த அமெரிக்க அதிபரிடத்திலே பேசி இந்த சாபமான மனிதர்களை ஈரானியர்களை அழித்து விடும்படி சொல்லியிருக்கிறார் என்ற ஒரு செய்தியை பரப்பினாங்க. அப்ப நிறைய சபைகள், சபையில் உள்ள ஊழியக்காரர்கள், போதகர்கள் எல்லாரும் அதை நம்புனாங்க. அபிசியலா வெள்ளை மாளிகையில் இருந்த இந்த மாதிரி செய்திகள் கசிய விடப்பட்டன. இது கர்த்தர் சொன்ன ஒரு காரியம். கர்த்தர் வந்து அந்த ஜனங்களை பூமியின் கீழ் இராதபடி அழித்து போடு அப்படின்னு சொல்லித்தான் இவர்களை அந்த தேர்தல்ல கர்த்தர் கொண்டு வந்தாரு, இவர்களை பயன்படுத்துறாரு அப்படின்னு சொன்னனே நிறைய பேர் அதற்காக ஜெபம். சபிக்க ப்பட்ட அந்த இனம் அழிக்கப்பட்டு போகணும் ஆண்டவரே, அவர்கள் பூமியின் கீழ் இல்லாதபடி அழிக்கப்பட்டு போகணும் அப்படின்னு நிறைய பேர் உபவாசத்தோட ஜெபம் பண்ணாங்க.
நான் இதை குறித்து கேள்விப்பட்ட போது வேதத்தை நான் யோசித்து பார்த்தேன். எனக்கு கர்த்தர் தெளிவா என்ன பேசினார் தெரியுமா? புதிய ஏற்பாட்டு கட்டளையில ஒரு மனிதனை ஒரு மனிதன் அழிப்பதற்கு யாருக்கும் கர்த்தர் கட்டளை கொடுக்க மாட்டார். நீங்க யாருக்காவது கொடுத்திருக்கிறாரான்னு நீங்க பாருங்க. பழைய பழைய ஏற்பாட்டில இருந்தது. பழைய ஏற்பாட்டிலே இஸ்ரவேல் என்ற ஒரு தேசம் கர்த்தராகிய இயேசு வருவதற்கு பிரத்தியேகப்பட்ட ஒரு தேசம். அதை பிரத்தியேகமா கர்த்தர் வந்து பாதுகாத்துக் கொண்டு வந்தார். அந்த நேரத்தில சாத்தான் இதை புரிந்து கொண்டு பல தீயவர்களை எழுப்பி இந்த தேசத்தை கர்த்தருடைய சித்தம் நிறைவேற கூடாதபடிக்கு அதை கவிழ்த்து போட்டறணும் அப்படின்னு முயற்சி பண்ணினார்கள். அதனால கர்த்தர் இவர்களுக்கு யுத்த ஆலோசனைகளை கொடுத்து, எதிரிகளை எப்படி ஜெயிக்கணும், எதிரிகளை எப்படி மேற்கொள்ளனும், எதிரிகளை எப்படி விரட்டணும் என்றெல்லாம் கர்த்தர் அவர்களுக்கு கட்டளை கொடுத்தார்.
நீங்க புதிய ஏற்பாட்டில் இவ்வளவு படிச்சிருக்கீங்களா? மத்தேயிலிருந்து வெளிப்படுத்தின விசேஷம் வரைக்கும் அப்போஸ்தல நடபடி படிச்சிருக்கீல்ல? கர்த்தர் யாருக்காவது, எந்த சபைக்காவது, எந்த ஊழியக்காரனுக்காவது நீங்க இவர்களை அழித்து விடுங்கள், இவர்களை ஒழித்து விடுங்கள், கொன்று விடுங்கள் அப்படின்னு யாருக்காவது கட்டளை கொடுத்திருக்கிறாரா? ஏன்னா நீங்கள் வாழ்கிற காலம் என்பது வேற. நான் இதைத்தான் அடிக்கடி சொல்லுவேன். இயேசுவும் அவருடைய சீஷர்களும் எருசலேமுக்கு போறதுக்கு முன்னால ஒரு கிராமத்தில் போய் தங்க போனாங்க. அந்த கிராமத்தில் இருக்கிற ஜனங்கள் இயேசுவை எங்க தங்க கூடாதுன்னு சொல்லி கொஞ்சம் இன்சல்ட் பண்ணி அவர்களை ஊரை விட்டு அனுப்பிட்டாங்க. அவர்கள் எல்லாம் வெளியே வருகிறார்கள். அப்ப இயேசுவோடு கூட அந்த சீஷர்கள் அவர்ட்ட சொல்றாங்க, ஆண்டவரே, எலியா செய்த மாதிரி வானத்திலிருந்து நெருப்பை இறக்கி இவர்களை அழித்து விட உமக்கு சித்தமா அப்படின்னு கேட்டாங்க. அப்ப கர்த்தர் என்ன சொல்லி இருக்கணும்? ஆமாமா, இப்படிப்பட்ட பொல்லாத மனிதர்கள் அவர்களை அழிச்சிரணும் அப்படின்னு சொல்லல. அவர் என்ன சொன்னார்னா, நீங்கள் இன்ன ஆவியை பெற்றவர்கள் என்று அறிந்து கொள்ளுங்கள். மனுஷ குமாரன் அழிப்பதற்கு அல்ல, இரட்சிப்பதற்கே வந்திருக்கிறார். அப்ப அழிப்பதற்கு உங்க வேலை இல்லை. மனுஷ குமாரன் வந்ததே மனிதர்களை ரட்சிப்பதற்காக.
அப்ப இந்த ஒரு மனிதனை அங்க என்ன ஆவியை பெற்றிருக்கீங்க அப்படின்னு முதல்ல நீங்க அறிந்து கொள்ளுங்கள். நீங்கள் பெற்றிருப்பது புதிய ஏற்பாட்டின் அபிஷேகம். புதிய ஏற்பாட்டின் அபிஷேகம் என்பது எதிர்த்து நிற்கிறதுல்ல, அடிச்சா வாங்கி கொள்வது. அடிச்சா திருப்பி அடிக்கிறதுக்கு கூட மனவலிமை தேவையில்லை. ஒரு கண்ணத்தில் அடித்தால் மறு கண்ணத்தை காட்டுவதற்கு தான் மனவலிமை தேவை. அப்ப இந்த அபிஷேகம் பாருங்க, தீமையோடு எதிர்த்து நிற்க வேண்டாம். உன்னை ஒருவன் ஒரு கண்ணத்தில் அறைந்தால் மறு கண்ணத்தை காட்டு. புதிய ஏற்பாட்டில யாருக்குமே ஒரு தேசத்தை கவிழ்த்திரு. அவன் வந்து சபிக்கப்பட்டவன், அவனை வெட்டிரு, அழிச்சிரு என்று இந்த கட்டளை புதிய ஏற்பாட்டில் யாருக்கும் கொடுக்கப்படவில்லை. அப்படி கொடுத்திருந்தா நீங்க எனக்கு காட்டுங்க, நான் என்னுடைய கருத்தை மாற்றிக் கொள்கிறேன், திருத்திக் கொள்கிறேன். யாருக்காவது சொன்னாரா? ரோமர்கள் பாருங்க, இப்படி அக்கிரமம் பண்ணி கொண்டிருக்கிறாங்க. எரோதியாளோடு கூட வந்து ஒரு அசுத்தமான ஒரு பாவத்தை செய்து கொண்டிருக்கிறாங்க. ஆகவே யோவான் நீ போய் பட்டயத்தை எடுத்துட்டு போய் ஒரே போடா போட்டுரு அப்படின்னு சொல்லல. கர்த்தர் இயேசுவை சிலுவையில் அறைய போறதற்கு முன்னால பட்டயத்தை உருவுகிறார். உடனே சொல்றார், பட்டயத்தை உரையில போடு. பட்டயத்தை எடுத்தவன் பட்டயத்தில் தான் சாவான். எதிர்த்து ரெசிஸ்ட் பண்ண கூட கர்த்தர் சொல்லல. அதை ஏற்றுக்கொள்ள சொல்லிக் கொடுத்தார்.
எல்லாவற்றையும் தாண்டி கர்த்தர் புதிய ஏற்பாட்டில் ஒரு காரியம் சொல்றாரு, தேவ பிள்ளைகளுக்கு உங்களுக்கு போராட்டம் இருக்குது, உங்களுக்கு ஒரு யுத்தம் இருக்குது. ஆனால் மாம்சத்தோடும் இரத்தத்தோடும் உங்களுக்கு போராட்டம் இல்லை. மாம்சத்தோடும் இரத்தத்தோடும் அல்ல, பொல்லாத ஆவிகளோட வானமண்டலத்தின் பொல்லாத ஆவிகளோட, அந்தகாரத்தின் லோகாதிபதிகளின் ஆவிகளோட இவைகளோடதான் உங்களுக்கு போராட்டம் உண்டு. மனுஷனோட மாம்சத்தோட சண்டை இல்ல. யாரும் உங்களுக்கு சொன்னாலும் நம்பக்கூடாது. அத கர்த்தர்தான் அவரை வந்து எழுப்பி இருக்கிறார். ஏன் உங்களுக்கு பைபிள் தெரியாது? கர்த்தர் எப்படி யாரையாவது கொல்ல சொன்னாரா? அப்படி சொல்லி இருந்தாலும் கர்த்தர் சொல்ல மாட்டார். அது வேதத்துக்கு புறம்பானது. அப்ப இந்தந்த பைபிள் படிக்காத, தீர்க்கதரிசனங்களை அறிந்து கொள்ளாத பல மனிதர்கள் இருக்காங்க பாருங்க. இவங்களைத்தான் இந்த பொய்யான தகவல்களை சொல்லி திசை திருப்பி விட முடியும். அந்த இனம் அழிஞு போகணும், அழிஞு போகணும். ஒரு இனத்தை அழிந்து போகணும்னு சொல்லி கர்த்தர் ஜெபிக்கும்படி புதிய ஏற்பாட்டில யாருக்காவது கட்டளை கொடுத்திருக்கிறாரா? நீங்க தான ஜெபத்தை குறித்து நிறைய பேசுறீங்க, வாசிக்கிறீங்க. அதுல என்ன போட்டுருக்கு? உங்களை ஆளுகை செய்கிறவர்களுக்காக, அதிகாரிகளுக்காக, அவன் நல்லவனா கெட்டவனா அதிகாரிகளுக்காக ஜெபம் பண்ணுங்க. அப்படிதான போட்டுருக்கு. அவர்களுக்கு எதிராக. இப்ப நம்ம என்ன செய்றோம்? அவன் அழிஞு போகட்டும் ஆண்டவரே, ஈரானியர்கள் அழிந்து போகட்டும், நாசமாய் போகட்டும். அவர்களுக்காக ஜெபிக்கிறோம். உங்களை எவ்வளவு தந்திரமா கர்த்தர் சொல்லாத ஒரு காரியத்தை செய்யும்படி சொல்றாங்க பாருங்க.
இன்னும் சிலர் வந்து அப்படித்தான் சொல்லுவாங்க, கர்த்தர் இஸ்ரவேலின் தேவன். இஸ்ரவேலர்கள் சண்டைக்கு இஸ்ரேல மாத்திரம் எதிர்க்க கூடாது. எதிர்த்தா எதிர்த்தவர்கள் தான் காணாமல் போவார்கள். இஸ்ரவேலர்களை யாரும் ஜெயிக்க முடியாது அப்படின்னு ஒரு கருத்தை சொல்லி, அதை நிறைய சோசியல் மீடியால பரப்பிட்டே இருப்பாங்க. இஸ்ரேல் தேவன் முன்னால நிற்கிறார், அவங்களை யாரும் தடுக்க முடியாது அப்படி எல்லாம் பேசிக்கிட்டே இருப்பாங்க. நீங்க சரித்திரத்தை எடுத்து பார்த்தீங்கன்னா, இஸ்ரவேலர்கள் தோற்றே போனது இல்லையா? நெபுக்காத்நேச்சாரிடத்திலே அவங்க தோத்து போகலையா? அசீரிய மன்னரிடத்திலே அவங்க தோற்று போகலையா? கிரேக்கர்களிடத்திலே தோற்று போகலையா? ரோமர்களிடத்திலே தோத்து போகலையா? அவர்கள் தேசத்திலிருந்து சிதரடிக்கப்படவில்லையா? அவர்கள் அந்த ராஜாக்கள் காலத்தில துரத்தப்பட்டவர்கள். 1948ல தான கொஞ்ச பேர் மறுபடியும் இஸ்ரேலுக்குள்ள வராங்க. அப்ப கர்த்தர் ஒரு குறிப்பிட்ட தேசம், ஒரு குறிப்பிட்ட ஜாதியை சார்ந்தவர் அல்ல. அதை நீங்க புரிஞ்சுக்கணும். அவர் ஒரு குறிப்பிட்ட இனத்தை சார்ந்து இன்னைக்கு நம்ம பார்க்கிறோமே, ஒரு ஜாதி இருக்கும், ஜாதிக்கு ஒரு தலைவர் இருப்பார். இயேசு ஜாதி தலைவர்ல்லாம் கிடையாது. இயேசு இவங்கல்லாம் என்னுடைய ஜாதி, நான் ஜாதி தலைவர், இது என்னுடைய தேசம், தேச தலைவர் அப்படி எல்லாம் கிடையாது. கர்த்தர் புதிய ஏற்பாட்டு காலம் வந்தபோது இரட்சிப்பை எல்லாருக்கும் பொதுவாக்கினார். ஈரானியர்கள் இரட்சிக்கப்பட முடியாதா? இயேசு கல்வா வாரிில சிலுவையில இரத்தம் சிந்தது யாருக்கு? யோசிச்ு பாருங்க. எல்லா மனிதர்களும், எல்லா மனிதர்களும் ரட்சிக்கப்பட வேண்டும் என்பதுதான் கர்த்தருடைய விருப்பம். அதத்தான வேதம் சொல்லுது. அப்படி இருக்கும்போது எப்படி ஒரு இனத்தையே அழிச்சிருங்கன்னு எப்படி கர்த்தர் சொல்லுவாரு? ஒரு அணுகுண்டை போட்டு அழிச்சிருங்க அப்படின்னு எப்படி கர்த்தர் சொல்லுவாரு?
அப்ப இப்படிப்பட்ட பொய் தகவல்கள் வரும்போது நமக்கு அது அறியாமல் இருக்கும்போது சுலபமா உங்களை ஏமாத்திர முடியும். ஒரு அழிவி திட்டத்திற்கு, கிறிஸ்துவினுடைய அபிஷேகத்திற்கு எதிரான ஒரு திட்டத்துக்கு உங்களை உபவாசம் பண்ணி ஜெபிக்க வச்சர முடியும். ஒரு அறிக்கை ஒன்று வெளியே வந்தது, அருமகதோன் யுத்தம் இது நடக்கிறது. அருமகதோன் யுத்தம். அதனால நீங்கள் எல்லாம் கர்த்தருடைய சேனையோடு நிற்கணும் அப்படின்னு சொல்லி அங்கே சொல்லப்பட்டிருக்குது. உடனே எல்லாரும் நடக்கிறது அருமகேதோன் யுத்தம். அருமகேதோன் யுத்தத்தை பற்றி நீங்க வாசிச்ு பார்த்திருக்கீங்களா? வெளிப்படுத்தின விசேஷம் 16, 17வது அதிகாரத்தின் துவக்கம். அங்கதான் அருமகதோன் யுத்தத்தை பற்றின செய்திகள் சொல்லப்பட்டிருக்கிறது. அருமகதோன் யுத்தம் உலகத்தினுடைய முடிவிலே சாத்தானுடைய சேனைகளுக்கும் ஆட்டுக்குட்டியானவருக்கும் நடக்கும். அப்ப இப்ப நடக்கிறது அருமகதோனா? எனக்கு சாத்தானுடைய சேனைகளை பற்றி கூட கவலை இல்லை. ஆட்டுக்குட்டியானவர் யார்? யார் ஆட்டுக்குட்டியானவர்? இஸ்ரேலுடைய அதிபரா? அமெரிக்காவின் அதிபரா? யாரை சொல்றீங்க நீங்க? அப்ப இதற்காக ஒரு பெரும் கூட்டம் ஜெபம் பண்ணிட்டு இருக்கறாங்களே. அப்ப இதெல்லாம் ஏன் வருகிறதுனா, தீர்க்கதரிசனத்தை பத்தி தெரியல நமக்கு. உங்கள் நம்மை சுலபமாய் வளைத்து விட முடிகிறது. ஒரு இயேசுன்னு ஒரு காரியத்தை காமிச்சு, பொதுவாகவே நான் பார்த்திருக்கிறேன், எல்லாரும் அல்ல, கிறிஸ்தவர்கள் ஒரு பெரும்பான்மையானவர்கள் எழுதில் உணர்ச்சி வசப்படக்கூடியவர்கள். அவதான் உடனே உணர்ச்சி ஆயிருவான். அது கர்த்தருடைய படை, கர்த்தருடைய சேனை, ஆமா, நம்ம சண்டை போடணும், அவங்களுக்காக நம்ம ஜெபம் பண்ணனும், அந்த இனத்தை அழித்து ஒழித்து விட வேண்டும். யார் சொன்னது?
அப்படி ஒரு ஊழியக்காரர் தெளிவா பேசுறார். அதுல அவர் என்ன சொல்றாருனா, இவர்கள் ஒரு குறிப்பிட்ட கானானி இனத்தை சேர்ந்தவங்க. அவங்கதான் போய் ஈரான்ல குடியிருாங்க. அவர்கள் கர்த்தருடைய படை, கர்த்தருடைய ஜனங்கள். பார்வோனுடைய அடிமைத்தனத்தில்ிருந்து வெளியே கொண்டு வருந்த போது அவர்கள் நடந்த நடந்து போவதற்கு பாதை கொடுக்க மாட்டேன்ட்டாங்க. அதை கர்த்தர் மனதில் வைத்து அவர்களை இப்பொழுது பள்ளி தீர்க்கிறார். எப்ப நடந்தது? மோசே காலத்தில் நடந்த போது இவர்களுக்கு உதவி செய்யலையா? அதை கர்த்தர் மனதில் வைத்து இப்போ அங்கு அமெரிக்காவில் இருக்கிற ராணுவத்துக்கு கர்த்தர் கட்டளை கொடுத்து, அவன் எனக்கு உதவி செய்யாததுனால நீங்கள் அவர்களை அழித்து விடுங்கள் என்று சொன்னாராம். இது புதிய ஏற்பாட்டினுடைய கற்பனைக்கு எங்கேயாவது ஒட்டி வருதான்னு பாருங்க. சொல்லப்பட்ட தீர்க்கதரிசனத்துக்கு ஒட்டி வருதா? அருமகிதோன் என்பது கர்த்தருடைய படைக்கு நடக்கிற யுத்தம் என்பதுதான் உங்களுக்கு தெரிஞ்சிருக்கு. அந்த அருமைகிதனுடைய விவரம் தெரியாததுனால நடக்கிற ஒரு போரை அருமகிதோு சொல்றாங்களே. அப்ப அதுல ஆட்டுக்குட்டியானவர் யாரு? எனக்கு நீங்க அத சொல்லணும். ஆட்டுக்குட்டியானவர் தான இங்க சண்டைக்கு வரார்ு போட்டுருக்கு. ஆட்டுக்குட்டியானவரோடு வலுசர்ப்பமும் அதை சேர்ந்தவர்களும், கள்ள தீர்க்கதரிசியும் அதைச் சேர்ந்தவர்களும் தங்களுடைய கைகளிலே முத்திரை வாங்கிக்கொண்டு அந்த கள்ள ஆவிகளை பின்பற்றின மனிதர்களும் அர்மகதோன் என்ற இடத்தில ஆட்டுக்குட்டியானவரை எதிர்கொண்டாங்க. ஆட்டுக்குட்டியானவர் யாரு? இப்ப நடக்கிறது அருமைகதம் தெரியாது.
அப்ப இப்போ நமக்கு சொல்லப்படாத பொய் தகவல்களை இந்த உணர்ச்சி வசப்படுகிற, பைபிள் தெளிவா தெரியாதவர்களுக்கு சொல்லி அவர்களை உணர்ச்சி வசப்பட வைத்து உங்களுக்கால ஜெபிக்க முடியும், உபவாசம் பண்ண முடியும், முழங்கால் படியிட முடியும். இதெல்லாம் வந்து திசை திருப்பி, நீங்க கடைசியில சாத்தானுடைய திட்டத்துக்காக ஜெபம் பண்ணிட்டு இருப்பீங்க. ஒரு மனித குலம் அழிவதற்கு யாராவது ஜெபம் பண்ணுவானா? யோசிச்ு பாருங்க. அது எப்படி அந்த வேதத்தில் இருக்கும்? எப்படி கர்த்தர் சொல்லுவாரு? ஒரு இனத்தை அழிச்சிரணும்னு கர்த்தர் சொன்னாராம். எப்படி சொல்லுவாரு? அப்ப அவர்களுக்கு இயேசு இரத்தம் சிந்தவில்லையா? அப்ப கர்த்தர் உலக ரட்சகர் இல்லையா? அவர் இஸ்ரவேலின் ரட்சகரா? இன்னும் நீங்க நல்லா பாத்தீங்கன்னா, இஸ்ரவேல்ல தான இன்னும் அவர்கள் ஆண்டவராகிய இயேசுவை இன்னும் ஏற்றுக்கொள்ளலையே. வேதத்தில யோவான் ரொம்ப தெளிவா சொல்றாரு, மாம்சத்தில் வெளிப்பட்ட கிறிஸ்துவை அறிக்கை செய்யாத எந்த ஆவியும் எந்த மனிதனும் அந்தி கிறிஸ்துவின் ஆவியா இருக்குது அப்படின்னு சொல்றார். மாம்சத்தில் வெளிப்பட்ட இயேசுவை அவர்கள் ஏற்று கொள்ளலையே. அப்ப மாம்சத்தில் வெளிப்பட்ட இயேசுவை ஏற்று கொள்ளாவிட்டால் கூட, நீங்கள் இஸ்ரவேலர்கள் என்ற ஒரே காரணத்துக்காக நான் உங்க பக்கத்தில்தான் இருப்பேன் என்று கர்த்தர் சொன்னார். இந்த கர்த்தரை நம்ம என்ன என்னவென்று நினைப்பது சொல்லுங்க. யோசிச்சு பாருங்க. மாம்சத்தில் வெளிப்பட்ட இயேசுவை ஏற்று கொள்ளாதவர்கள், அந்தி கிறிஸ்துவின் ஆவின்னு வசனத்தில சொல்லிட்டு, அவர்கள் ஏற்றுக்கொள்ளாவிட்டால் கூட, நான் அவங்க கூடதான் இருப்பேன் என்று சொல்வது எந்த விதத்தில கர்த்தருக்கு நியாயமாய் இருக்கும்? அப்ப தப்புதானே?
கர்த்தர் இப்ப உலக இரட்சகர். உலகம் முழுவதுக்கும் அவர்தான் ரட்சகர். காசாவுக்கு அவர்தான் ரட்சகர். ஈரானுக்கு அவர்தான் இரட்சகர். மனுஷனாய் பிறந்த எல்லாருக்கும் அவர் ரட்சகர். அப்ப ஒரு இனத்தை அழிக்கும் படிக்கு சொல்வது உங்களை ஏமாத்துறது. எதனால் நடக்குதுன்னா, தீர்க்கதரிசனங்களை குறித்து நம்ம அறியாமல் இருக்கிறதுனால. இப்படிப்பட்டவர்கள் எளிதிலே வஞ்சிக்கப்பட்டு போயிருவாங்க. அப்ப இவர்களுடைய நேரம் காலம், ஜெபம், உபவாசம் எல்லாத்தையும் கொண்டு வந்து சாத்தானுடைய திட்டத்துக்கு ஜெபம் பண்ண வைக்கிறது. ஜெபம் பண்ணா சாத்தானுடைய திட்டத்துக்கு ஜெபம் பண்ணா கர்த்தர் கேட மாட்டாரு. அதுல சாத்தானுக்கு என்ன லாபம்னா, உங்க ஜெபத்தை டைவர்ட் பண்ணிட்டா, நீங்க உண்மையான காரியத்துக்கு ஜெபம் பண்ண வேண்டிய இருக்கு பாருங்க, அதை பண்ணாம போயிருவீங்க. நீங்க இங்க பண்ற ஜெபம் வேஸ்ட்டாதான் போயிரும். அப்ப உங்களுடைய உழைப்பு, உங்களுடைய நேரம், ஜெபம், அபிஷேகம் எல்லாத்தையும் செயல்பட விடாம திருடுவதற்கும், மடை மாற்றம் செய்வதற்கும் இந்த பொய்யான காரியங்களை பயன்படுத்துவாங்க.
அப்ப இதுல யார் வஞ்சிக்கப்படாம தப்புவாங்க அப்படின்னு பார்த்தா, வேதத்தை தெளிவாக, அதிலும் குறிப்பா தீர்க்கதரிசன வார்த்தைகளை புரிந்து கொண்டவர்கள். அவங்கதான் அதை தெளிவா புரிஞ்சுக்கிருவாங்க. இல்லாட்டா சொல்லப்படுறதுல்லாம் நம்பிருவாங்க. ஆமா, அவர்களை விடக்கூடாது, அவர்களை எதிர்க்கணும். அது ஒரு சபிக்கப்பட்ட இனம் அப்படின்னு சொல்றாங்க. சபிக்கப்பட்ட இனம் பூமியில் இருக்க கூடாது. ஒருத்தர் ஒரு பதிவு போட்டுருக்கார், ஈரானியர்கள் சபிக்கப்பட்ட இனம், அவங்க பூமியின் கீழ் இருக்க கூடாது. கர்த்தர் அப்படி எதிர்பார்க்கிறார். அப்ப யார்தான் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்? நம்ம துவக்க காலம் முதற்கொண்டு கல்லையும் மண்ணையும் காணப்படு காணப்படாது, எதை பார்த்தாலும் ஒரு நெருப்பை வணங்கி இருக்கிறோம். குகைகள்ல் வாழ்ந்திருக்கிறோம். பிள்ளைகளை நரபலி கொடுத்துக் கொண்டிருக்கிறோம். எவ்வளவு காரியங்கள் தெய்வீக மதங்கள் என்ற பெயரில எவ்வளவு காரியங்கள் நடைபெறுது. அப்ப இது என்னது? அப்ப இவர்களை கொள்வதற்கு யாரை அனுப்புவது? கர்த்தர் அழிப்பதற்கு அல்ல, இரட்சிப்பதற்கு வந்திருக்கிறார். அதான் இயேசு. அப்ப இதை நம்ம வந்து நம்ப முடியாதபடிக்கு செய்ய இந்த மாய்மாலமான உபதேசங்கள் வருது பாருங்க. அதுல நீங்க தப்பிக்கணும். நீங்க சாத்தானுக்கு போய் கையிலாக கொடுத்துட்டு கூடாது. வாங்க நம்ம எல்லாம் போய் அந்த யுத்தத்துக்காக, அதுல இஸ்ரேல் படைகள் ஜெயிக்கணும் அல்லது அமெரிக்க ராணுவம் ஜெயிக்கணும், அந்த இனமே அழியணும் அப்படில்லா ஜெபம் பண்ணிராாதீங்க. நான் சொல்வது விளங்கும் என்று நினைக்கிறேன்.
அடுத்த காரியத்தை பாருங்க. அற்புதங்கள். அற்புதங்கள்ல பொய்யான அற்புதங்கள். ரண்டு தெசலோனிக்கேயரின் புஸ்தகம் இரண்டாவது அதிகாரம் ஒன்பதாவது வசனத்தில, அந்த அக்கிரமக்காரனுடைய வருகை, அந்தி கிறிஸ்துனுடைய வருகை, சாத்தானுடைய செயலின்படி சகல வல்லமை மையோடும் அடையாளங்களோடும், பொய்யான அற்புதங்களோடும், கெட்டு போகிறவர்களுக்குள்ளே அநீதியினால் உண்டாகும் சகல விதமான வஞ்சகத்தோடும் இருக்கும். இரட்சிக்கப்படத்தக்கதாக சத்தியத்தின் மேல் உள்ள அன்பை அவர்கள் அங்கீகரியாமல் போனபடியினால் அப்படி நடக்கும். சத்தியத்தின் மேல் அன்பு இல்லாதவங்க இருக்காங்க பாருங்க, அவங்கதான் அந்த வஞ்சகத்தில போய் மாட்டிக்கிருவாங்க. இந்த வசனம் சொல்லுகிறடைய சாராம்சம் அதுதான். வேத வசனம், வேத வார்த்தைகள், சத்தியம் இருக்கு பாருங்க. சத்தியத்தின் மேல் உள்ள அன்பை அங்கீகரியாமல் போகிறவர்கள் படிக்க மாட்டான். அதை பற்றி அவனுக்கு ஞானம் இருக்காது, கவனம் இருக்காது, முக்கியத்துவம் கொடுக்க மாட்டாங்க. இவர்கள்தான் சாத்தானுடைய இலக்கு. இப்படிப்பட்ட தேவனுடைய பிள்ளைகள் தான் அற்புதத்தை பார்த்து அப்படியே மிரண்டுருவான். அப்படி இல்லன்னா எப்படி இந்த அற்புதம் நடக்குங்க, நடக்குதே அப்படின்னு சொல்லுவாங்க.
அற்புதம் என்பது தேவனாலும் நடத்தப்படும், சாத்தானால் நடத்தப்படும் என்பது மோசே காலத்திலே காட்டப்பட்ட உண்மை. மோசே மாத்திரமா அவருடைய கைக்கோள் சர்ப்பமா மாறுச்சு? அங்கு இருக்கிற அத்தனை மந்திரவாதிகளுடைய கைக்கோளும் தான் மாறுச்சு. உடனே அதை பார்த்து ஒன்று மோசேயனுடைய கைக்கோலை பார்த்து பிரமிக்கலாம். மந்திரவாதிகளுடைய கைக்கோலை பார்த்து பிரமிக்கிறதுக்கு ஒரு கூட்டம் இருந்தது. பாருயா, நம்ம ஆள் பாருங்க, மோசே வந்து வீராசம் பேசினாரு. அதே காரியத்தை நம்ம ஆள்க செஞ்சிட்டாங்களே. பார்வோன் கூட அவர்கள் பக்கம் தானே இருந்தார். அப்ப பொய்யான அற்புதங்களும் இருக்கும், மெய்யான அற்புதங்களும் இருக்கும் என்பது கடைசி காலத்தில் மாத்திரம்ல்ல, மோசேயின் காலத்திலே நிரூபிக்கப்பட்ட காரியம். கடைசி காலத்தில் அதிகமா இருக்கும். அப்ப நமக்கு அதை எப்படி இனம் கண்டு கொள்வது? ஒரு அற்புதம், பெரிய பெரிய அற்புதம் செய்றானே, அந்த அற்புதத்திடைய நோக்கத்தான் நமக்கு வித்தியாசமா இருக்கும். கர்த்தரால் செய்யப்படுகிற அற்புதங்கள் கர்த்தரிடத்திலே நம்மை நடத்தும். பொய்யான அற்புதங்கள் ஒன்று மனிதர் களிடத்திலே உங்களை நடத்தும் அல்லது சாத்தானிடத்தில உங்களை நடத்திரும். சிலர் அற்புதம் செய்து தொடர்ந்து எங்க சபைக்கே வாங்க, என்னை பின்பற்றுங்க, நான்தான் உங்க பிரச்சனைக்கு எல்லாம் தீர்வுன்னு ஒரு மனிதனை நோக்கி நகர்த்தினால் அது பொய்யான அற்புதம். ஒரு பிசாசை நோக்கி நகரத்தினால் பொய்யான அற்புதம். இரட்சிப்பை நோக்கி நகரத்தன, அந்த அற்புதம் பாவத்திலிருந்து விடுதலையை கொடுக்கணும். அந்த அற்புதம் அதுக்குதான் அற்புதம்.
சரி, இதெல்லாம் நம்ம எப்படி கண்டுபிடிக்கிறது? ரெண்டும் ஒரே மாதிரிதான இருக்கு. இந்த கைக்கோள் விழுந்தா பாம்பாகுது, அந்த கைக்கோள் விழுந்தாலும் பாம்பாகுது. இதை இனம் கண்டு கொள்ளத்தான் நமக்கு கர்த்தருடைய தீர்க்கதரிசன வார்த்தைகள் உதவி செய்கின்றன.
மூன்றாவது பாருங்க, கடைசி காலம் என்பது வதந்திகள் பெருகுகிற காலம். மத்தேய சுவிசேஷம் 24வது அதிகாரம் 23லிருந்து 26 வரைக்கும் வாசிச்ு பாத்தீங்கன்னா, கிறிஸ்து இங்கே இருக்கிறார், அங்கே இருக்கிறார்னு சொல்லுவாங்க. இன்னும் சிலர், அநேக கள்ள கிறிஸ்துக்கள் எழும்பி, கூடுமானால் தெரிந்து கொள்ளப்பட்டவர்களை வஞ்சிப்பாங்க. வதந்தி இல்லாத விஷயங்கள்ல்லாம் இருக்கிற மாதிரி சொல்லுவாங்க. அங்க பாருங்க, அந்த ஊர்ல மழை மாறி பெஞ்சுச்சு, மோசே காலத்தில் நடந்த மாதிரி தண்ணி எல்லாம் இரத்தமாயிருச்சுங்க. புதுசு புதுசா கிறிஸ்து இங்கே இருக்கிறார், அங்கே இருக்கிறார் சொல்லுவாங்க. உண்மையா பொய்யான்னு தெரியல. நான் இந்த நிகழ்ச்சி பதிவு செய்யப்படுகிற நேரத்தில ஒரு செய்தியை காண நேரிட்டது. இலங்கையில ஒருத்தர் வந்திருக்கிறாரு. அவர் எங்கிருந்து வந்தாருன்னு தெரியல. ஊரு பேரு ஒண்ணுமே தெரியல. அப்படியே தோற்றத்தில இயேசு மாதிரி இருக்கிறாரு. தரையில தான் உட்கார்ந்துருக்கிறார். நிறைய ஜனங்கள் அவரிடத்தில போய் ஜெபம் பண்ண கேடறாங்க. அவரும் கை வைத்து அவர்களுக்கு ஜெபம் பண்ணி கொண்டிருக்கிறார்னு சமூக வலைத்தளங்களிலே பரவுகிறது. ஒரு பேராயர் இதெல்லாம் நம்பாதீங்கன்னு சொல்லி எச்சரிக்கை வேற கொடுத்தார். இன்ன முழுசா என்ன ஆகுதுன்னு தெரியல. இப்பதான் வந்திருக்கு அப்படி செய்தி. இது மாதிரி நிறைய நான் பிலிப்பீன்ஸ் தேசத்திலே கொஞ்ச நாள் ஊழியத்துக்கு போயந்த போது, அங்கே ஒரு டிவி சேனலே நடக்குது. ஒருவர் கிறிஸ்து என்றே தன்னை அறிமுகப்படுத்திக் கொள்கிறார். தன்னுடைய ஆசிரமத்துக்கு பேரு ஹெவன் என்றே வைத்திருக்கிறார். அங்கே தேவதூதர்கள் மாதிரி உடையணிந்த பெண்களும் ஆண்களும் இருக்கிறாங்க. அங்க 24 மணி நேரம் டிவி சேனல் வருது. இவர் இயேசு மாதிரியே காட்சி அளிக்கிறார். அதுக்கு ஒரு பெரும் திறள் கூட்டம் போறாங்க. அப்ப வதந்திகள் பெருகுகிற காலம்.
அடுத்து பாருங்க, கள்ளர்கள் பெருகுகிற காலம். கள்ள கிறிஸ்துக்கள், கள்ள தீர்க்கதரிசிகள். மார்க்கு சுவிசேஷம் 13வது அதிகாரம் 22வது வசனம். ஒருவர் தீர்க்கதரிசனம் என்ற பெயரில எளிதிலே மனிதர்களை ஏமாற்றி விடலாம். அவங்க சொல்ற தீர்க்கதரிசனம் சரியானதா தவறானதா நமக்கு தெரியாது. தீர்க்கதரிசனம் மாதிரியே சொல்லுவாங்க. சில சொல்லனா நிறைய உதாரணங்கள் சொல்லலாம். இயேசு எங்க கூட நெருக்கமா இருக்கிறார், என்னை தவிர இந்த உலகத்தில யாரையும் நம் நம்புவதில்லை, பரலோகத்துக்கும் எனக்கும் நேரடி தொடர்பு இருக்குது அப்படின்ன மாதிரி காட்ட விரும்புறவங்க. தீர்க்கதரிசிகளை கர்த்தர் பரலோகத்தில தொடர்பு படுத்த மாட்டார். நான் சொல்லல, ஆனா கர்த்தர் கொடுக்கிற செய்தி என்ன செய்தி சொல்றாரு? அது உண்மையிலேயே கர்த்தரிடத்தில இருந்து வந்த செய்திதானா அப்படின்னு நம்ம பார்க்கணும். இந்த தீர்க்கதரிசன வார்த்தைகளை. அப்ப இந்த தீர்க்கதரிசன வார்த்தைகளை கொண்டு கள்ள தீர்க்கதரிசிகள் எழும்பி அநேகரை வஞ்சிப்பார்கள். இந்த அமெரிக்கால எலக்ஷன் நடந்த போது, அந்த எலக்ஷன்ல இன்னார்தான் வருவார் என்று இப்ப இருக்கிற அமெரிக்க அதிபருடைய பெயரை சொல்லி, பரலோகத்துக்கு நான் எடுத்துக் கொள்ளப்பட்டேன். அங்க பார்த்தீங்கன்னா, ட்ரம்ப் சத்தம், ட்ரம்பட் சத்தம் கேடது. அப்பொழுது இந்த அமெரிக்க அதிபருடைய பெயரை சொல்லி தேவதூதர்கள் பாட்டு பாடுகிறார்கள். இது என்ன கொடுமையா இருக்கு? தேவதூதர்கள் உங்க பேரு, என் பேர்ல்லாம் சொல்லி பாட்டு பாடுவாங்களா? அவர்கள் இயேசுவை தர யாரை ம? ஒரு அம்மா சொல்றாங்க, நான் கேட்டேன், ஒருய ல நான் கேட்டேன். அந்த அம்மா அப்படிய அபிஷேகத்தில் நிறைந்து பேச ஜனங்கள் கொதிக்கிறான். அப்படியே கேட்டு, அது எப்படி தேவ தூதர்கள் வேற யாரையாவது புகழ்வாங்களா? யோவான் ஒரு தூதனுடைய கால்ல விழுந்த போது சொன்னார், வணக்கத்துக்குரியவர் இங்கே கிறிஸ்து மாத்திரம்தான். நான் உன்னை போல ஒரு சகோதரன் தான். இனிமே இப்படி செய்யாதபடிக்கு பாரு. அப்ப ஒரு மனிதனை போய் பரலோகத்தில புகழ்வாங்களா? சத்தம் கேடதாங்களுக்கு. அப்ப இவர்தான் இந்த இலக்ஷன்ல வருகிறார் என்று ஆணித்தரமா சொல்றாங்க. இது மாதிரி நிறைய காரியங்கள் இருக்குது. அதை பத்தி சொ தனி எபிசோடுலே பேசணும்.
அப்ப இந்த கள்ள தீர்க்கதரிசனங்கள்ல எது நல்ல தீர்க்கதரிசனம், எது கள்ள தீர்க்கதரிசனம் என்று கண்டு கொள்ளணும்னா, நீங்கள் தேவனுடைய வாயிலிருந்து பிறந்த கர்த்தருடைய தீர்க்கதரிசன வார்த்தைகளை இந்த வஞ்சக காலத்தில, கள்ளர்கள் பெருகுகிற காலத்தில கவனித்திருப்பது நலமாய் இருக்கும். தீர்க்கதரிசனங்களை கவனித்திருப்பது நலமாக இருக்கும். அதனால்தான் இந்த தீர்க்கதரிசனங்களை நீங்கள் கவனமாக ஆராய்வதற்கும், கவனமாக தீர்க்கதரிசனங்களை விளங்கிக் கொள்வதற்கும், மற்றவர்களுக்கு நீங்கள் அறிந்து கொண்டதை சொல்வதற்கும், இப்ப வருகிற எல்லா காரியத்தையும் கர்த்தர் ஏற்கனவே சொல்லி வச்சிட்டார். ஆனால் நமக்கு இந்த காரியங்கள் புதுசா இருக்கிறதுனால இதை குறித்து பல்வேறு விதமான கருத்துக்களை சொல்லுவாங்க. இவர்தான் வரப்போகிற மிகாவேல் தூதன் அப்படின்னு ஒரு ஆள் சொல்லுவாரு. இவர்தான் இப்படி, இவர்தான் அப்படில்லாம் சொல்லுவார். நம்மதான் ரொம்ப கவனமாக இருக்கணும். அப்ப இந்த கவனத்தை நமக்கு தருவதற்காகத்தான் கர்த்தர் தம்முடைய தீர்க்கதரிசனங்களை எழுதி வைத்திருக்கிறார்.
எதுவரைக்கும் தீர்க்கதரிசனங்களை எழுதி வைச்சிருக்கிறார்னா, நான் ஏற்கனவே சொன்ன மாதிரி, இந்த உலகம் சார்ந்த காரியங்களை, உலகத்தினுடைய துவக்கம் முதற்கொண்டு உலகத்தினுடைய முடிவு வரைக்கும் அதுவரைக்கும் உண்டான காரியங்கள் வேதாகம தீர்க்கதரிசனத்திலே இடம் பெற்றிருக்கின்றன. இதை அறியாமல் இருக்கிற அந்த அறியாமையினாலதான் நம்ம சொல்லப்படுகிற எல்லாவற்றையும் நம்பி விடுகிறோம். கொஞ்ச நேரம் எடுத்து நாம் இவைகளை ஆராய்ந்து பார்க்க ஆரம்பித்தால், வெறும் இந்த வாக்குத்தத்த வசனங்களை மாத்திரம் கோடு போட்டு படிக்கிறத விட்டுட்டு, அது படிக்க கூடாதுன்னு சொல்லல. உங்களை உற்சாகப்படுத்துறதுக்கு நீங்க அதை ஒரு வாசிக்கலாம். ஆனா அதுக்குள்ளேயே சுழன்று கொண்டிருாம மேலான இடத்துக்குள்ளே வரணும். சில காரியங்கள் நல்லதுதான். குழந்தைகளா இருக்கும்போது ஒரு பீடிங் பாட்டில்ல சாப்பாடு கொடுத்த த்தாங்க. கொஞ்சம் வளர்ந்த போது ஒரு செர்லாக் மாதிரி ஏதோ ஒன்ன கலக்கி அதை வந்து ஒரு உணவுக்கு பதிலாக கொடுத்தார்கள். நல்லாதான் டேஸ்ட்டா இருந்தது. அதெல்லாம் இந்த பிள்ளைகளுக்கு கொடுக்கிற உணவை தொடர்ந்து நம்ம சாகுற வரைக்கும் அதையே சாப்பிட்டுட்டு இருக்க முடியுமா? யோசி நல்லாதான் இருந்தது, நல்லதுதான். மருத்துவர்கள் தான் அதை பரிந்துரை செய்தார்கள். அன்னை கொடுத்தாங்களே, அன்னை கொடுத்தாங்க. இன்னைக்கு உன்னுடைய வளர்ச்சி, நீ இருக்கக்கூடிய சூழ்நிலை வேற இல்ல. இப்ப வரைக்கும் அதே மாதிரி ஒரு பாரக்ஸ் கொடுத்து உங்களுக்கு அந்த மாதிரியான சில காரியங்களை கொடுத்து, இப்பவும் அதே மாதிரி கிண்ணத்துல போட்டு சாப்பிட்டுட்டு இருக்க முடியுமா?
நம்ம பலம் உள்ளவர்களுக்கு பலமான ஆகாரம் என்று கர்த்தருடைய வேதம் சொல்லுகிறது. அதுக்காக அதை நான் தப்புன்னு சொல்லல. நமக்கு ஏற்றதுன்னு ஒன்னு இருக்குல்ல. ஒரு உணவிலேயே நமக்கு ஏற்றது ஏற்காததுன்னு ஒன்னு இருக்குல்ல. இந்த காலத்திற்கு ஏற்றது எது அப்படின்னு கேட்டா, கர்த்தருடைய தீர்க்கதரிசனங்கள். கர்த்தருடைய தீர்க்கதரிசனங்களை நம்ம ஆழ்ந்து வாசிக்கணும். அவைகள்ல என்ன சொல்லி இருக்குன்னு பார்க்கணும். உங்களுக்கு ஒரு காரியம் வேதத்தில் சொல்லப்பட்டது அர்த்தமாக புலப்பட்டுவிட்டால், உங்க பிள்ளைகளுக்கு அதை சொல்லி கொடுங்க. இனி அடுத்து இப்படி இப்படி எல்லாம் வருவதற்கு வாய்ப்பு இருக்குன்னு சொல்லி கொடுங்க. அதனாலதான் இந்த நிகழ்ச்சி முழுசும் விசேஷமாக வேதாகம தீர்க்கதரிசனங்களையே மையப்படுத்தி, உங்கள தீர்க்கதரிசனங்களின் பக்கம் கர்த்தருடைய வேதம் என்பதே ஒரு தீர்க்கதரிசனம் தான். இயேசு வருகிறார் அப்படின்னு சொல்லவது தீர்க்கதரிசனம் தானே. இயேசுுடைய வருகை இப்படி இருக்கும் சொல்வது தீர்க்கதரிசனம் தானே. அப்ப வேதாகம தீர்க்கதரிசனங்கள் பக்கத்துல உங்க பார்வையை திருப்புவதற்கும், வரும் காலங்களில் உண்டாகிற மாய்மாலங்கள், கள்ள உபதேசங்கள், கள்ள ஊழியங்கள் அல்லது ஜனங்களை பிரமிக்க பண்ணக்கூடிய பொய்யான அற்புதங்கள் இவைகளின் கையிலிருந்து உங்களை விடுவிப்பதற்கும், இந்த வசனங்களை நீங்கள் அறிந்து கொள்வதற்கும் இந்த நிகழ்ச்சியை நம்ம டெடிகேட் பண்ணி இருக்கிறோம்.
இந்த நிகழ்ச்சி முழுக்க முழுக்க வேதாகம தீர்க்கதரிசனங்கள் சார்ந்த காரியங்களைதான் நம்ம இதுல சொல்ல போறோம். வேதத்தினுடைய தீர்க்கதரிசனங்கள் பக்கம் உங்க கண்கள் திரும்பணும். தீர்க்கதரிசனங்களை ஆராய்ந்து பார்க்கணும். இருண்ட காலத்தில் அதுதான் நம்மை நடத்திச் செல்லுகிற கர்த்தருடைய தீபம் என்று வேதம் சொல்லுகிறது. அது இல்லாம நீங்க போகனா, இந்த காலம் இப்பதான் வந்து இருட்டாக ஆரம்பிச்சிருக்கு. இனி கொஞ்சம் கொஞ்சமா போக போக போக நீங்க பாருங்களேன் 2026 பாத்துட்டீங்களா? கொஞ்சம் கொஞ்சமா, கொஞ்சம் கொஞ்சமா பாருங்களேன். என்ன செய்கிறோம், என்ன நடக்கிறோம், என்ன செய்வது என்று தெரியாம திகைக்க போகிற அந்த இருட்டு கொஞ்சம் கொஞ்சமா மூடப்போகுது. உலக தேசங்களை மூடப்போகுது, அரசியல்களை மூட போோகுது, பொருளாதாரத்தை மூடப்போகுது, சபைகளை மூட போகுது. இந்த நேரத்தில வெளிச்சம் இல்லாவிட்டால், வெளிச்சத்தை குறித்த ஞானம் இல்லாவிட்டால், நாமும் பத்தோடு 11ாக கர்த்தருடைய இரட்சிப்பை விட்டு தூரம் போயி, சோரம் போயி, நம்முடைய அபிஷேகத்தை கூட இழக்க நேரிட்டு, என்ன நடக்குதுன்னு தெரியாம எங்கேயாவது போய் விழுவதற்கு வாய்ப்பாகி விடும். இதெல்லாம் கருத்துல வச்சுதான் இனி கால தாமதம் செய்யக்கூடாது என்று இந்த ஒரு நிகழ்ச்சியை உங்களுக்கு ஏற்பாடு செஞ்சிருக்கிறோம்.
வருகிற வாரத்திலிருந்து நம்ம தீர்க்கதரிசனங்களுக்குள்ளே நுழைய போகிறோம். ரொம்ப கவனமா நீங்க இந்த தீர்க்கதரிசனங்களை ஒரு ஆராய்ச்சி எப்படி பண்ணுவாங்களோ அப்படி பண்ணனும். நீங்க இல்லைங்க, எங்களுக்கு புரியாது, நாங்க இப்பதான் எங்களுக்கு இதே போதும், சங்கீதத்தை படிச்சு பாட்டு பாடி போதும்னா உங்களை ஒன்னும் நான் கட்டாயப்படுத்தல. ஆனால் நீங்கள் வேதத்தை அறிந்து கொள்வது நல்லது. அந்த வேதத்தை அறிந்து கொள்ள விரும்பினால், அதை முழுசா நீங்க அறிந்து கொள்ளுங்க. அறகுறையா வந்து இங்க ஒரு வசனம், அங்க ஒரு வசனம் படிச்சிட்டு, அதுவும் நம்மை பாதுகாக்க போதுமானது அல்ல. அதனால நம்ம என்ன செய்ய போறோம்? ஒரு ஆரா ஆய்ந்து பார்க்கிற, கவனித்து பார்க்கிற மனநிலையிலே கர்த்தர் நமக்கு எழுதிக் கொடுத்த வேத வார்த்தைகள், தீர்க்கதரிசன வார்த்தைகள், அது கர்த்தருடைய வார்த்தைகள். அவைகளை ஆராய போறோம். ஆயத்தமா இருருங்க. வருகிற வாரம் மறுபடியும் நான் உங்களை சந்திக்கிறேன். அதுவரை கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக. ஆமென். >> [இசை] [இசை] [இசை] [இசை]