📱

Get Our Mobile App

Take your business learning on the go!

Download on the App StoreGet it on Google Play

Prophetic World | Bro. Vincent Selvakumar

Vincent Selvakumar33:42

Transcription

بس เฮ [음악] เฮ [음악] >> [음악] >> ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்கள் யாவருக்கும் என் அன்பின் நல்வாழ்த்துக்கள். ஒரு புத்தம் புதிய நிகழ்ச்சியிலே உங்களை சந்திப்பதில் நான் கர்த்தருக்குள் அதிக மகிழ்ச்சி அடைகிறேன்.

உண்மையிலே இது நமக்கு ஒரு சந்தோஷமான ஒரு நிகழ்வுதான். காரணம் நம்ம ஒவ்வொரு முறையும் பிரசங்க பீடம் நிகழ்ச்சியில மாத்திரம் வாரத்துக்கு ஒரு முறை நம்ம சந்தித்துக் கொண்டு வந்தோம். இந்த புது நிகழ்ச்சியின் மூலம் வாரத்துக்கு இரண்டு முறை நம்ம சந்திக்க போகிறோம்.

இந்த நிகழ்ச்சியினுடைய விசேஷம் என்ன அப்படின்னு கேட்டா, விசேஷத்தை சொல்றதுக்கு முன்னால இந்த நிகழ்ச்சி என்ன நிகழ்ச்சின்னு உங்களுக்கு சொல்லிறேன். இந்த நிகழ்ச்சிக்கு பேரு தீர்க்கதரிசன உலகம். அது என்ன தீர்க்கதரிசன உலகம் அப்படின்னு கேட்பீங்க. உலகத்தை குறித்த காரியங்கள் கர்த்தருடைய தீர்க்கதரிசனத்தின் அடிப்படையில என்னென்னெல்லாம் சொல்லப்பட்டிருக்கிறது என்பதை விளக்கி சொல்லுகிற ஒரு நிகழ்ச்சி.

வேத புஸ்தகத்தினுடைய 75%த காரியங்கள் தீர்க்கதரிசனங்களால நிரப்பப்பட்டிருக்கின்றன. நிறைய தீர்க்கதரிசனங்கள் வேத புஸ்தகத்தில் இருக்கு. இந்த வேத புஸ்தகம் உலகத்தை மையப்படுத்தி பல தீர்க்கதரிசனங்களை வெளிப்படுத்தி இருக்கிறது. ஒரு சின்ன உதாரணத்துக்கு சொல்லணும்னா, உலகம் எப்படி உருவாக்கப்பட்டது அதை யாரு பார்த்து எழுதி இருப்பா? ஆதியாம புஸ்தகத்தை படிக்கும்போது உங்க மனசுல ஒரு சந்தேகம் உண்டா இருக்கணும், யார் இதெல்லாம் பக்கத்தில இருந்து பார்த்து எழுதினா அப்படின்னு. அதற்கு சுலபமா நம்ம என்ன விடை சொல்வோம்னா, பரிசுத்த ஆவியானவர் எழுதினார். பரிசுத்த ஆவியானவர் எப்படி எழுதி இருப்பார்? பரிசுத்த மனிதர்களுடைய இருதயத்திலிருந்து அவர்களுக்கு வெளிப்பாடுகளை கொடுத்து அவர்கள் வழியாக தான் கர்த்தர் இந்த வார்த்தைகளை எழுதி இருக்க முடியும். அப்ப உலகத்தினுடைய தோற்றம் முதல் கொண்டு உலகத்தினுடைய நடைமுறைகள் ஒவ்வொன்றும் உலகத்தினுடைய கடைசி வரைக்கும் எல்லாமே தீர்க்கதரிசனத்தில் இருக்கிறது.

உலகத்தில நடந்த நடந்து கொண்டிருக்கிற நடக்க போகிற எல்லா சம்பவங்களும் தீர்க்கதரிசன புஸ்தகங்கள்ல குறிப்பாக வேத புஸ்தகத்தில தெளிவாக குறிப்பிடப்பட்டிருக்கிறது. இதுல ஒரு பெரிய பிரச்சனை என்ன அப்படின்னு கேட்டா, கிறிஸ்தவர்கள்ல நிறைய பேர் தீர்க்கதரிசன வார்த்தைகளையோ, தீர்க்கதரிசன புத்தகங்களையோ, தீர்க்கதரிசன வார்த்தை என்று நான் சொல்லுவது வேதத்தில் இருக்கிற தீர்க்கதரிசனங்களை ரொம்ப நுணுக்கமாகவோ ஆர்வமாகவோ வாசிப்பதில்லை. ஏன் அப்படின்னு கேட்டீங்கன்னா, அவங்க ரொம்ப எளிமையா ஒரு காரியம் சொல்லுவாங்க, அதை படிச்சா ஒன்னும் அர்த்தம் புரியவே இல்லைன்பாங்க. அவர்கள் வாசிக்கிற வேதம் என்பது சங்கீத புஸ்தகத்தை படிப்பாங்க அல்லது ராஜாக்கள் காலத்தில் நடந்த சம்பவங்களை படிப்பாங்க. அப்புறம் நேரா புதிய ஏற்பாட்டுக்கு வந்துருவாங்க இயேசு செய்த அற்புதங்களை வாசிப்பாங்க. நான் எல்லாரையும் சொல்லல, பெருவாரியான கிறிஸ்தவர்கள் அதுக்கப்புறம் நிரூப வாக்கியங்கள் கூட வாசிப்பதற்கு கஷ்டமா இருக்கிறதுங்கறதுக்காக அதிகமா வாசிக்க மாட்டாங்க. வெளிப்படுத்தின விசேஷத்தை சுத்தமா தொட மாட்டாங்க நிறைய பேரு.

ஏன் அப்படின்னு கேட்டா, அவங்க சொல்லுவாங்க, வெளிப்படு விசேஷத்தை படிச்சா ஒன்னு பயமா இருக்குது, ரெண்டாவது ஒன்னும் விளங்கல. ஒரு இடத்தில பார்த்தா மிருகம் ஏறி வருது, குதிரைகள் வருது, வானத்தில பார்த்தீங்கன்னா அடையாளங்கள் தோன்றுகிறது, புது புது காரியமா இருக்கு. இதெல்லாம் எதை பற்றி சொல்லுகிறது? இது என்ன நடக்கும் அப்படிங்கறத பத்தி விளங்காததுனால வேதத்தை குறித்த எங்களுடைய அனுபவத்தை நாங்கள் சுருக்கி சில குறிப்பிட்ட பக்கங்களுக்குள்ளே எங்கள் அனுபவத்தை வைத்திருக்கிறோம் அப்படின்னு சொல்லுவாங்க.

ஆனா வேத புஸ்தகத்தினுடைய விசேஷமே என்னன்னு கேட்டீங்கன்னா, உலகத்தினுடைய துவக்கம் முதற்கொண்டு உலகத்தினுடைய முடிவு வரைக்கும் உலகத்தை பற்றின பல செய்திகளை அடுத்தடுத்து என்ன நடக்கும் இந்த உலகத்தில போன்ற பல செய்திகளை தீர்க்கதரிசனமாக வெளிப்படுத்தப்பட்ட ஒரு புத்தகம் இந்த புத்தகம். அதனாலதான் உலகத்திலே நடந்த காரியங்கள் மாத்திரம்ல்ல நடக்க போகிற காரியங்களையும் வேதத்தை நுணுக்கமா நீங்க வாசிச்சு பார்த்தீங்கன்னா தெளிவாக அதை விளங்கிக் கொள்ள முடியும். அப்ப உலகத்தை பற்றி உலகத்தை மையப்படுத்தி அதனுடைய இறந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் போன்றவைகளை தீர்க்கதரிசன புஸ்தகங்களாக எழுதி வைத்திருக்கிற தீர்க்கதரிசனங்களை நம்ம எடுத்து ஆராய்ந்து பார்க்க போறோம். அதனாலதான் இந்த நிகழ்ச்சிக்கு பேரு தீர்க்கதரிசன உலகம் அல்லது உலகத்தை பற்றின தீர்க்கதரிசனங்கள். இது நம்முடைய ஆய்வுக்காகவும் அறிந்து கொள்வதற்காகவும் நாம் எடுத்து கொள்கிறோம்.

இப்போ உங்களுக்கு என்ன கேள்வி அடுத்த கேள்வி வரணும்? ஒருவேளை வரலைனா கூட நான் என்ன கேள்வி வரலாம் என்ற காரியத்தை யூகமாக சொல்லுகிறேன். இப்போ இதை ஆராய்வதற்கு என்ன அவசரம்? ஏன் இதை நம்ம ஆராயணும்? சங்கீதத்தில் பார்த்தீங்கன்னா நிறைய காரியங்கள் தியானம் இருக்கின்றன, கர்த்தரை பற்றி சொன்ன பல விசேஷங்கள் இருக்கின்றன, ஜெபம் இருக்கிறது. அதுக்கப்புறம் நீங்க படிச்சு பார்த்தீங்கன்னா நம்முடைய முற்பிதாக்களை குறித்த வாழ்க்கை வரலாறு ஆதியாகமத்தில, யாத்திராகமத்தில, அதுக்கப்புறம் ராஜாக்கள் புஸ்தகத்தில, நியாயாதிபதிகள் புஸ்தகத்தில இதெல்லாம் நிறைய இருக்கு. புதிய ஏற்பாட்டில வந்தா இயேசு கிறிஸ்துவினுடைய ுடைய வாழ்க்கை வரலாறு, அவர் செய்த அற்புதங்கள், அவர் சொன்ன உபதேசங்கள் இதெல்லாம் இருக்குது. இதெல்லாம் தான நம்ம வாசித்துக் கொண்டிருக்கிறோம்.

இப்போ தீர்க்கதரிசன புஸ்தகங்களுக்குள்ள போயி வாசிக்க வேண்டியடைய அவசியம் என்ன அப்படின்னு நீங்க கேட்டீங்கன்னா [목을 가다듬음] எளிமையா இதற்கு ஒரு பதில் சொல்ல வேண்டும் என்றால், நாம் வாழ்கிற அந்த கடைசி காலத்தில கட்டாயம் நீங்கள் தீர்க்கதரிசன புஸ்தகங்களைதான் கவனமாய் வாசிக்கணும். இந்த தீர்க்கதரிசன புஸ்தகங்கள் வாசிக்கும் போதுதான் இந்த கடைசி காலத்தில என்ன நடக்க போகுது, நம்ம அதற்கு எப்படி ஆயத்தமாக இருக்கணும் அல்லது நம்ம அதை எப்படி எதிர்கொள்ளனும் அல்லது வரக்கூடிய ஆபத்துகளை குறித்து தீர்க்கதரிசனமா வெளிப்படுத்தி இருந்தா அதிலிருந்து எப்படி நம்ம விலகி கொள்ளணும், தப்பித்துக் கொள்ளணும். இது எல்லாவற்றையும் இன்னைக்கு நடக்கக்கூடிய பல காரியங்களை நீங்க பார்க்கிறீங்க. பூமியில பல காரியங்கள் நடக்கிறது, திடீர் திடீர் யுத்தம் வருது, ஒரு பக்கம் ஒரு பக்கம் பார்த்தீங்கன்னா எண்ணெய் கிடைக்கலங்கிறாங்க, ஒரு பக்கம் பார்த்தீங்கன்னா கொள்ளை நோய்கள் வருகிறதுங்கிறாங்க. இதெல்லாம் வரும்போது ஏன் இப்படி திடீர்னு வருதுன்னு நமக்கு ஒரு ஆச்சரியம் உண்டாகும். ஆனா கர்த்தருடைய பிள்ளைகள் தீர்க்கதரிசனங்களை அறிந்திருந்தா அடுத்து என்னென்னெல்லாம் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது என்பதை தெளிவாக விளங்கிக் கொள்ளலாம். ஒரு காரியம் வரப்போவதற்கு முன்னால நம்ம புரிஞ்சுகிட்டா வரும் முன்னால நம்ம ஆயத்தமா இருக்கலாம், அந்த காலத்தை எதிர்கொள்ளலாம், அந்த காலத்திலிருந்து விலகிக் கொள்ளலாம் அல்லது தப்பித்துக் கொள்ளலாம். அதுக்காகத்தான் தீர்க்கதரிசனங்கள் எழுதப்பட்டிருக்கின்றன.

ஒரு சின்ன உதாரணத்துக்கு பாருங்க, பல தீர்க்கதரிசனங்களை கர்த்தர் நமக்கு வெளிப்படுத்தி சொல்லி இருக்கிறார். கடைசி காலத்தில யுத்தங்கள் நடக்கும். பல இடங்களல் யுத்தத்தின் செய்திகளை கேள்விப்படுவீங்க. கடல்கள்ல அலைகள் முழக்கமாய் இருக்கும், நில நடுக்கங்கள் வரும். இது எல்லாவற்றையும் ஏன் கர்த்தர் நமக்கு சொல்லணும் யோசிச்சு பாருங்க. நீங்க என்ன ஒரு பெரிய ராணுவ அதிகாரியா அல்லது மிலிட்ரில இருக்கிற ஒரு கமாண்டரா? யுத்தத்தை பத்தி உங்களுக்கு ஏன் சொல்லணும்? கடல் அலைகள் முழக்கமா இருக்கும்னா நீங்க என்ன செய்ய போறீங்க? நீங்க என்ன ஒரு விஞ்ஞானியா? அதை பத்தி நாம்ம என்ன செய்ய போறோம்? ஏன் தம்முடைய பிள்ளைகளுக்கு கர்த்தர் அதை சொல்லி வைக்கணும்னு சொன்னா, அவர் இனி வரக்கூடிய ஆபத்துகளை முன்னறிவிப்பதோடு மாத்திரமல்லாம இது இந்தந்த காலங்கள்ல் இது வரப்போகுது, இதுக்கு நீ இப்படி செய்தால் அந்த ஆபத்துகளில்ிருந்து தப்பித்துக் கொள்ளலாம் என்ற செய்தியையும் கர்த்தர் நமக்கு வைத்து சொல்லுகிறார். மற்றவங்களுக்கு தான் ஆச்சரியம், திடீர்னு வலைகூடாத தேசங்கள்ல போர் சின்ன அளவில தோன்றின மாதிரி தோன்றி இன்னைக்கு வரைக்கும் முடிவு பெறாமல் நடந்து கொண்டே இருக்கிறது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு திருப்பங்களை பற்றி சொல்லுகிறது. இப்ப பல பேருடைய மனசுல இந்த போர் என்னவாகும் என்ற ஒரு எண்ணம் அல்லது ஒரு பய பயம் இருக்கும். ஆனா கர்த்தருடைய பிள்ளைகளுக்கு ஒரு போர் என்றால் அது வலைகடாவில் நடக்கிற போர் என்றால் அதை குறித்து வேதம் என்ன சொல்லுகிறதுன்னு கவனிச்சீங்கன்னா துல்லியமா மாத்திரம் உங்களுக்கு தீர்க்கதரிசனங்களை வாசித்து கணிக்க தெரிந்தால் அடுத்து என்ன நடக்கும் என்பதை தெளிவாக சொல்லலாம். அதனாலதான் ஒவ்வொரு தீர்க்கதரிசனங்களையும் நம்ம ஆழமாக ஆராயகிறோம்.

ஏன் இந்த கடைசி காலங்கள்ல முன்ன எப்போதும் இருந்த காலங்கள்ல் ஒருவேளை நீங்கள் தீர்க்கதரிசனங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காவிட்டால் கூட அவைகளை குறித்த ஒரு வாசித்து ஒரு அறிவை நம்ம பெற்று கொண்டிராமல் இருந்தா கூட கடைசி காலங்கள்ல் கர்த்தருடைய பிள்ளைகளுக்கும் தேவனுடைய சபையாருக்கும் இன்றியமையாத புத்தகங்கள் தீர்க்கதரிசன புஸ்தகங்கள். ஏன் நான் சில காரியங்களை உங்களுக்கு சொல்றேன், கடைசி காலத்தில் தீர்க்கதரிசனங்களின் அவசியம் என்ன? அத நம்ம சில காரியங்களை வாசித்து பார்த்து விடலாம்.

முதல் காரியம் பாருங்க, கடைசி காலம் என்பது ஒரு இருண்ட காலம். கடைசி காலம் ஒரு இருண்ட காலம் என்று வேதம் சொல்லுகிறது. யோவேலுடைய புஸ்தகம் இரண்டாவது அதிகாரம் இரண்டாவது வசனம் அதுல சொல்றாரு, இந்த கடைசி காலத்தில கடைசி நாட்கள் எப்படி இருக்குமா? அது இருளும் அந்தகாரமுமான நாள், அது மப்பும் மந்தாரமுமான நாள், விடியருக்கால வெழுப்பு பர்வதங்களின் மேல் பரவுகிறது போல ஏராளமான பலத்த ஒரு ஜாதி தீவிரமாய் வந்து அது பரவும். அப்படிப்பட்டது முன் ஒரு காலத்திலும் உண்டானதும்ல்லை, இனி தலைமுறை தலைமுறையாக வரும் வருஷங்களில் உண்டாவதும்ல்லை. அப்ப இதுல என்ன சொல்றாங்க, இந்த கடைசி காலம் என்பது ஒரு இருண்ட காலம். இருண்ட காலம்னா உங்களுக்கு இருட்டை பத்தின சில விவரங்கள் நீங்க அறிஞ்சிருப்பீங்க. இருட்டு காரணமில்லாத பயங்களை உண்டு பண்ணும். பகல்ல தைரியமா நம்ம போற இடத்துல கூட ராத்திரி நேரத்தில் போனீங்கன்னா அவசியமில்லாத அர்த்தமற்ற பயங்கள் எழும்பும். சாதாரணமா இருக்கிற பொருள்கள் கூட பார்த்தா பயங்கரமா இருக்கும். அங்க இருக்கக்கூடிய ஒரு கல்லு, தூணு, ஒரு மரம், ஒரு குத்து செடி இதெல்லாம் பார்க்கவே இருட்டுல பாத்தீங்கன்னா பயமா இருக்கும். மாத்திரம்ல்ல இருட்டுல பல சந்தேகமான பயமூட்டக்கூடிய சிந்தனைகள் உண்டாகும். இதுல இது இருக்குமோ, அதுல அது இருக்குமோ என்ற ஒரு அச்சம் உண்டாகும். மூன்றாவது இருக்கிற காரியங்களை இதுதான் என்று தெளிவா பார்க்க முடியாத மாதிரி இருக்கும். இன்னும் அதுவே அதிகப்படியான இருட்டா இருந்துச்சுன்னா எதுவுமே நம்முடைய கண்களுக்கு புலனாகாம இருக்கும். சிலருக்கு பாத்தீங்கன்னா இருட்ட பார்த்தா பயம் இருக்கும். ஒரு நண்பர் என்கிட்ட சொல்லி இருக்கிறார், லைட்ட ஆப்ஆகி முழுசா இருள் வந்துச்சுன்னா மூச்சு விட முடியாத மாதிரி ஒரு அழுத்தம் எனக்குள்ளே உண்டாகும் அப்படின்னு அவர் சொல்லிக்கிறார். மயக்கம் கூட போட்டு விழுந்துருவார் அவர். அப்ப இருளுக்கு இப்படிப்பட்ட பல தன்மைகள் இருக்கிறது. இன்னும் சில காரியங்கள் பார்த்தீங்கன்னா, ஒரு பொருளை வேற மாதிரி காமிக்கும் அது. ஒரு பொருளை ஒரு சின்ன ஒரு நூலு கயறு கிடக்கும். நமக்கு பார்த்தா ஒரு பாம்பு படுத்திருக்க மாதிரி இருக்கும். பாம்பே படுத்திருக்கும். சில நேரத்துல பாத்தீங்கன்னா ஒரு கயர் கிடக்கிற மாதிரி நமக்கு தோன்றும். அப்ப இருள் என்பது இடமாறு தோற்ற பிழைகள் அல்லது நம்ம பார்க்கக்கூடிய காட்சிகளை குறித்த காட்சி பிழைகள் இவைகள் எல்லாவற்றையும் உண்டாக்கி விடும். அப்ப எது உண்மை எது பொய் அப்படின்னு நமக்கு தெரியாம போயிரும். எப்பவுமே நம்ம என்ன செய்றோம், நம்ம நடக்கும்போது நம்முடைய பாதையிலே இருட்டு இருந்துச்சுன்னா அந்த இடம் முழுசும் வெளிச்சமா இல்லட்டா கூட பரவாில்ல, நம்ம போற அளவுக்கு மாத்திரம் கால் அளவுக்கு மாத்திரம் ஒரு வெளிச்சம் இருந்தா நல்லது. அதனாலதான் லைட் கண்டுபிடிச்சிருக்கிறோம். அந்த லைட் நம்ம முன்னால் அடிச்சிட்டு போவோம் ஒரு டார்ச் லைட். அது பாருங்க, அந்த இடத்தை முழுசும் டி வெளிச்சமாக்காது. நீங்க நடக்கிற பாதையை முன்னால இருக்கிற காரியத்தை மாத்திரம் ஒரு வெளிச்சம் போட்டு காட்டும்.

அப்ப கர்த்தருடைய வேதம் என் கால்களுக்கு தீபம் என்று எழுதி இருக்கு. நம்முடைய கால்களுக்கு தீபம் அது. நம்ம நடக்கும்போது அது தீபம். அப்ப ஒரு இருண்ட காலத்தில பல்வேறு விதமான சந்தேகங்களும் காரணமற்ற பயங்களும் அவசியமற்ற அச்ச உண உணர்வுகளும் நமக்கு தோன்றும் போது அதுல ஒரு சின்ன விளக்கு மாதிரி கர்த்தர் நமக்கு கொடுத்ததுதான் இந்த தீர்க்கதரிசனங்கள். வேதத்தில நீங்க வாசிச்சு பார்த்தீங்கன்னா தேவனுடைய வேதம் நமக்கு சொல்லுகிறது, கடைசி காலத்தில தோன்றுகிற இந்த இருள்ல நம்மை தப்புவிப்பதற்கு இந்த தீர்க்கதரிசன வார்த்தைகள் நமக்கு சொல்லப்பட்டிருக்கிறது. ரண்டு பேதுருவின் புஸ்தகம் ஒன்றாவது அதிகாரம் அதுல 19வது வசனம், அதிக உறுதியான தீர்க்கதரிசன வசனமும் நமக்கு உண்டு. பொழுது விடிந்து விடிவெள்ளி உங்கள் இருதயங்களில் உதிக்கும் அளவும் அது என்ன அந்த விடிவெள்ளி? இயேசு வருகிற வரைக்கும். இயேசு வந்துட்டா உலகத்தில் இருள் என்பதே இல்லை, முழு வெளிச்சமாயிரும். அவர் வெளிச்சத்தின் தேவன், அவர் உலகத்திற்கு ஒளியாக இருக்கிறார். அவர் வருகிற வரைக்கும் உங்களை வழிநடத்துறதுக்கு, இருட்டுல வழிநடத்துறதுக்கு ஒரு சின்ன வெளிச்சத்தை கர்த்தர் நம்முடைய கைகளிலே கொடுத்திருக்கிறார். அது உங்க அளவில நீங்க நடக்கக்கூடிய வழியில பாதையில உங்களை சரியாய் நடத்திக் கொண்டு போகும். எந்த தப்பான பயங்களோ அர்த்தமற்ற குழப்பங்களோ இல்லாதபடி நம்மை நடத்திச் செல்லுகிற ஒரு சின்ன லைட் அது. எது பாருங்களேன், அதிக உறுதியான தீர்க்கதரிசன வசனமும் நமக்கு உண்டு. பொழுது விடிந்து விடிவிள்ளி உங்கள் இருதயங்க உதிக்கும் அளவும் இருளுள்ள ஸ்தலங்களில் பிரகாசிக்கிற விளக்கை போன்ற அந்த வசனத்தை கவனித்திருப்பது நலமாய் இருக்கும். எந்த வசனத்தை? தீர்க்கதரிசன வசனம் என்று அந்த வசனம் ஆரம்பிக்குது. ரண்டு பேதுரு 19ல தீர்க்கதரிசன வசனம் என்று ஆரம்பிக்குது. அந்த தீர்க்கதரிசன வசனத்தை கவனித்திருப்பது நலமாய் இருக்கும். அந்த தீர்க்கதரிசன வசனம்தான் ஒரு சம்பவம் நடக்கும்போது இது என்னமாய் முடியுமோ என்ற ஒரு பயம் வருது பாருங்க. இனி அவ்வளவுதானா அப்படின்னு நமக்குள்ள ஒரு அச்சம் தோன்றுது பாருங்க. அந்த நேரத்தில இந்த தீர்க்கதரிசன வார்த்தைகளை கவனித்தீர்களானால் இந்த பிரச்சனை எவ்வளவு காலம் நீடிக்கும், இது எவ்வளவு தூரத்தில எவ்வளவு மக்களை பாதிக்கும், இது என்ன, இதனுடைய பின்னணி என்ன போன்ற பல காரியங்களை தெளிவுபடுத்தி நமக்கு காட்டுகிறோம். அதனால அவங்க சொல்றாங்க, வசனங்களை கவனிப்பது நல்லது, ஆனால் இருண்ட காலங்கள்ல தீர்க்கதரிசன வசனங்களை கவனித்திருப்பது நலமானது என்று அவங்க சொல்றாங்க.

அப்ப நம்ம வாழ்கிற காலம் இருண்ட காலம் என்று தெரியும் நமக்கு. இப்ப வந்து வாழ்வது என்பதே கடினமான ஒரு சூழ்நிலையிலே கடந்து போய் கொண்டிருக்கிறோம். இந்த நேரத்தில எதை பார்த்தாலும் நமக்கு பயமாக இருக்கிறது. என்ன நடக்கும் அப்படின்னு தெரியல. எதிர்காலம் எப்படி இருக்கும் என்று தெரியல. ஒரு காலத்தில எல்லாம் எதிர்காலத்தை குறித்து நிறைய பிளான் திட்டம் போடுவோம். இப்பல்லாம் பாத்தீங்கன்னா எதிர்காலம் ஒன்றே இருக்குமா, அது எவ்வளவு காலம் இருக்கும் என்கிற ஒரு பயம் நமக்குள்ளே வந்திருக்கு. இந்த இருண்ட காலத்திலதான் தீர்க்கதரிசன வசனங்களை நீங்கள் கவனித்திருப்பது நலமாய் இருக்கும் என்று பேதுரு நமக்கு ஆலோசனை சொல்லுகிறார். அதனாலதான் தீர்க்கதரிசனங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கணும்.

அடுத்து இரண்டாவது காரியம், நம்ம ஏன் தீர்க்கதரிசனங்களை வாசிக்கணும்? வேதம் சொல்லுது, கடைசி காலம் என்பது பொய் பெருகுகிற காலம். கடைசி காலத்துல பாத்தீங்கன்னா பொய்தான். எந்த இடத்துல பார்த்தாலும் முன்ன எல்லாம் பார்த்தீங்கன்னா சின்ன பசங்களுக்குள்ள பொய் பேசுவாங்க. மனிதர்கள் ஒருத்தரோட ஒருத்தர் சில சமயங்கள்ல ஒரு இக்கட்டான சூழ்நிலைகளல ஒரு பொய்யை பேசிருவாங்க. வியாபாரத்தில போய் பேசுவாங்க. ஆனா இப்ப உள்ள காலத்தில பெரிய ஆட்சியாளர்களா இருக்கிறவங்க, பெரிய பெரிய அதிபர்களாக இருக்கிறவங்க, நம்பிக்கைக்குரியவர்கள் என்று நம்ம நினைக்க கூடியவங்க எல்லாரும் சர்வசாதாரணமா பொய்தான். பொய்யான தகவல்கள். அப்போ இது கடைசி காலத்தினுடைய ஒரு குணாதிசயம். கடைசி காலம் என்ன செய்யும்னா பொய்கள் பெருகுகிற ஒரு காலம். வேதத்தில சொல்லுது, ஒன்னு திமத்தின் புஸ்தகம் நாலாவது அதிகாரம் ஒன்னாவது வசனம்.

நான் இதுக்கு இடையில ஒரு சின்ன காரியம் சொல்றேன். நம்ம இந்த நிகழ்ச்சியில் தொடர்ந்து தீர்க்கதரிசனங்களை தியானிக்க போகிறதுனால நீங்கள் ஒரு குறிப்பு நோட்டு வைத்து கொள்ளணும். அதுல இந்தி நிகழ்ச்சியினுடைய பேர் போட்டு என்ன பேர் சொன்னேன்? தீர்க்கதரிசன உலகம் அப்படின்னு போட்டு தனியா எடுத்து வச்சுக்கங்க. இனி நம்ம ஒவ்வொரு வசனங்களையும் சொல்லுவேன். அந்த வசனங்களுக்குள்ள மறைந்திருக்கிற பல காரியங்களை நம்ம கண்டுபிடிக்க போறோம். அதெல்லாம் நீங்க சும்மா உடார்ந்து ஒரு நிகழ்ச்சி பார்க்கிற மாதிரி பார்த்தீங்கன்னா விளங்கிக்கிறவே முடியாது. அதெல்லாம் குறிப்பெடுத்து வைத்துக்கொண்டு வேதத்தோட நிகழ்ச்சி முடிஞ்ச பிறகு வேதத்தோட ஒப்பிட்டு பார்த்து இது இப்படி சொல்லுதா, அப்படி சொல்லுதான்னு ஆராய்ஞு பார்த்தீங்கன்னா நிறைய காரியங்களை ஆச்சரியமான பல தகவல்களை தீர்க்கதரிசன புஸ்தகங்கள் மூலம் நீங்கள் கண்டுபிடிக்க முடியும். அதனால அடுத்த வாரத்தில இருந்து நீங்க இந்த நிகழ்ச்சிக்கு வரும்போதே ஒரு குறிப்பு நோட்டு வச்சுக்கணும். வேத புஸ்தகத்தை பக்கத்துல வச்சுக்கிறணும். வசனங்களை நான் சொல்லும்போது அதை எழுதி கொள்ளணும். அதுல என்னென்ன முக்கியமான பாயிண்ட் சொல்றனோ அவைகளை நீங்கள் குறித்து கொண்டு நீங்கள் தொடர்ந்து தியானிக்கணும்.

சரி இப்ப நம்ம பார்ப்போம், ஒன்னு திமத்தின் புஸ்தகம் நாலாவது அதிகாரம் ஒன்றாவது வசனம் என்ன சொல்லுதுன்னா, ஆகிலும் ஆவியானவர் வெளிப்படையாய் சொல்லுகிறபடி பிற்காலங்களிலே அதாவது கடைசி காலங்கள்ல மனசாட்சியிலே சூடுண்ட பொய்யருடைய மாயத்தினாலே சிலர் வஞ்சிக்கிற ஆவிகளுக்கும் பிசாசின் உபதேசங்களுக்கும் செவி கொடுத்து விசுவாசத்தை விட்டு விலகி போவார்கள். அப்ப இந்த கடைசி காலம்ங்கிறது மனசாட்சியிலே சூடுண்ட. நம்ம சொல்றது பொய்ன்னு தெரியும் அவனுக்கு. ஆனால் அதை தைரியமா எந்த விதமான ஒரு மனத்தடுமாற்றம் இல்லாம பொய் சொல்றோமே என்று ஒரு குற்ற உணர்ச்சி இல்லாம சரளமா பேசுவாங்க. நான் ரொம்ப ஆச்சரியப்பட்டது என்னன்னா, இந்த யுத்த காலங்கள் இருக்கு பாருங்க, யுத்த காலங்கள்ல யுத்தத்தில் ஈடுபடுகிற தேசங்கள் அவங்க கொடுக்கிற அறிக்கைகளை ஒவ்வொரு நாளும் நீங்க படிச்சீங்கன்னா எது உண்மை என்று நம்ம கண்டே பிிடிக்க முடியாது. ஒரு தேசத்தார் சொல்லுவாங்க, நாங்க வெற்றி பெற்றுவிட்டோம், இனி அந்த தேசத்தில் ஒன்றுமல்லை என்பாங்க. அடுத்த நாள் பார்த்தீங்கன்னா பாதிக்கப்பட்ட தேசம் என்று நம்ம கருதி கொண்டிருந்த தேசம் யார் சொன்னது யுத்தத்தில எங்களுக்குதான் வெற்றின்னு சொல்லுவாங்க. அப்புறம் புது புது புது புது காரியங்கள் எல்லாம் சொல்லுவாங்க. அதெல்லாம் பார்க்கும்போது நமக்கு ஒரு பெரிய இடத்தில் இருக்கக்கூடிய ஒரு உலகத்தின் முக்கியமான இடம் ங்கள இருக்கக்கூடிய ஒரு தேசத்தை வழிநடத்திக் கொண்டு போகிற ஒரு ராணுவத்தை நடத்திக் கொண்டு போறவங்க கூட சர்வசாதாரணமா ஃேக் நியூஸ் சொல்றாங்களே அது ஏன் அப்படின்னு கேட்டா கடைசி காலத்தினுடைய குணாதிசயமே அதுதான் பொய். உண்மை பேசும்போது பாத்தீங்கன்னா தடுமாறுவான். இந்த கடைசி காலத்துல பொய் பேசினா சரளமா பேசுவான். சரளமா யோசிக்காம பேசிருவாங்க. இது இப்படித்தாங்க பார்த்தேன் அப்படின்னு அடிச்சு பேசிருவாங்க.

ரெண்டாவது பாருங்க, இந்த மாதிரி பொய் பேசுறவங்க எல்லா துறைகளிலுமே இருப்பாங்க. அதுதான் ரொம்ப கவனிக்க வேண்டிய விஷயம். எல்லா துறையிலும் வியாபாரத்தில ஒரு பொருள் இது நல்லதுன்னு சொல்லித்தான் விப்பான். வாங்கினா 10 நாளைக்குள்ள அந்த பொருள் பல்லழித்து விடும். அப்புறம் அதை உபயோகப்படுத்த முடியாது. இந்த உள்ள காலத்தில வியாபாரத்தில பொய் எல்லாவற்றிலும் அந்த பொய் மறைந்திருக்கிறதை பார்க்க முடியும். சரி வெளி உலகத்தை விட்டுருங்க. கர்த்தருடைய பிள்ளைகளுக்கு நடுவிலே பார்த்தீங்கன்னா பொய்யான ஊழியக்காரர்கள் ஊழியத்தில நிறைய பொய். பொய்யான ஊழியக்காரர்கள் எழும்புவார்கள் இந்த கடைசி காலத்தில. வெளிப்படுத்தின விசேஷம் இரண்டாவது அதிகாரம் இரண்டாவது வசனத்தில் பார்த்தீங்கன்னா, கள்ள அப்போஸ்தலர்கள் என்ற ஒரு வார்த்தையை பார்ப்பீங்க. அவர்கள் அந்த நாட்களலேயே அப்போஸ்தலர்கள் இருந்த காலத்திலேயே உண்மையான அப்போஸ்தலர்களை போல தங்களை தாங்களே அப்போஸ்தலர்கள் என்று அழைத்துக் கொள்கிற கர்த்தரால ஏற்படுத்தப்படாத பக்க வழியிலே நுழைந்த பல கள்ள அப்போஸ்தலர்களை குறித்து வேதம் நமக்கு சொல்லுகிறது. அப்பவே அப்படி ஆரம்பிச்சிருந்துச்சுன்னா இப்போ சர்வசாதாரணமா ஊழியத்துக்குள்ள நூற்றுக்கு 60%த அல்லது 70%த வரைக்கும் பொய்யான ஊழியர்கள் தங்களை தாங்களே ஊழியர்களாக ஏற்படுத்திக் கொண்டவர்கள். வேதம் சொல்லுகிறது, ஆரோனை போல அழைக்கப்படாவிட்டால் ஒழிய ஒருவனும் இவ்விதமான கனமான ஊழியத்துக்கு தானாய் ஏற்படுகிறதில்லை. இன்னைக்கு ஒரு ஸ்தாபனம் ஒரு ஊழியக்காரரை உருவாக்கி விடுகிறது. இன்னைக்கு ஒரு மனிதன் தன்னைத்தானே ஒரு ஊழியக்காரனா உருவாக்கி விடுகிறான். ஒரு சிலுவையை வாங்கி போட்டு கொள்ளலாம், ஒரு அங்கிய ஒன்றை நாம் அணிந்து கொள்ளலாம் அல்லது கையில் ஒரு வேத புஸ்தகத்தை பிடித்துக் கொள்ளலாம். நமக்கு நாமே டீச்சர், அப்புறம் ஒரு ப்ராபெட், மேய்ப்பர், அப்போஸ்தலர் என்று சொல்லி நமக்கு நாமே பட்டங்களை போட்டுக்கொள்ளோம் லாம். இந்த மாதிரி பக்க வழியில தங்களை தாங்களே உருவாக்கிக் கொண்ட ஊழியர்கள் திறளா பெருக்குவாங்க. அவங்க பேசுறதுல்லாம் பொய்யா இருக்கும். சரியான பைபிள் தெரியாது. தேவனோடு நெருங்கின ஒரு உறவு இருக்காது. நல்லா ஜெபம் பண்ண மாட்டாங்க. கர்த்தருடைய வேதத்தை குறித்த ஒரு அடிப்படை ஞானம் கூட இல்லாம இருக்கும். கள்ள அப்போஸ்தலர்கள். அவங்க பார்கறாங்க, அப்போஸ்தல ஊழியம் நல்லா இருக்குதேடா, பல பேர் ஒரு நூ ஆயிரக்கணக்கான பேர் அவர்களை எல்லாம் நம்மை பார்த்து பாஸ்டர் பாஸ்டர்னு சொல்ல அல்லது அப்போஸ்தலர் அப்போஸ்தலர்னு சொல்ல அவர்கள் நம்முடைய தசமபாக காணிக்கைகளை கொண்டு வந்து வைக்க நம்ம நல்ல ரொம்ப கஷ்டப்படாம நம்முடைய வாழ்க்கை தரத்தை உயர்த்திக் கொள்ள இது ஒரு சுலபமான வழியா இருக்குதே அப்படின்னு கற்றுக்கொண்ட சிலர் பக்க வழியிலே நுழைந்து கர்த்தர் தங்களை எழுப்பாமல் இருந்தும் கர்த்தர் தங்களை அந்த ஊழியத்திற்கு என்று தேர்வு செய்யாமல் இருந்தும் தங்களை தாங்களே ஊழியராக்கி கொள்றவங்க நிறைய இருக்கிறாங்க. இது அப்போஸ்தலர்கள் மாத்திரமல்ல, மேய்ப்பர்கள்ல் இருக்கிறாங்க, தீர்க்கதரிசிகள்ல் இருக்கிறாங்க, எல்லா ஊழியத்திலும் இருக்கிறார்கள். ஐந்து ஊழியத்தில இருக்கிறாங்க. அதைத்தான் வேதம் சொல்லுது. அப்போ பொய்யான ஊழியர்கள். வெளிப்படுத்தின விசேஷம் 2ரண்டுரண்டு, உன் கிரியைகளையும் உன் பிரயாசத்தையும் உன்னுடைய பொறுமையையும் நீ பொல்லாதவர்களை சகிக்க கூடாமல் இருக்கிறதையும் அப்போஸ்தலர்கள் அல்லாதவர்கள் தங்களை அப்போஸ்தலர்கள் என்று சொல்லுகிறதையும் நீ சோதித்து அவர்களை பொய்யர் என்று கண்டறிந்ததையும் அறிந்திருக்கிறேன். அப்போஸ்தலர்கள் அல்லாதவர்கள் தங்களை அப்போஸ்தலர் என்று சொல்லுகிற அவர்களை வேதம் என்ன சொல்லுதுனா பொய்யர்கள். அந்த பொய்யர்களை நீ சோதித்து பார்த்து அறிஞ்சிருக்கிற. இன்னைக்கு பல பேர் நம்ம அதை சோதித்து பார்த்தே அறிவதில்லை. ஒரு அப்போஸ்தலனுக்கு உண்டான மன மனப்பாங்கு இருக்குதா? அவனுக்கு அப்போஸ்தலனுக்கு உண்டான ஒரு தரிசனம் இருக்குதா? இன்னைக்கு நிறைய பேர் பாருங்க பக்கவழியில நுழைந்து தங்களை தாங்களே பிஷப்பன்பாங்க, பேராயர் ஆயரு அல்லது ஒரு அப்போஸ்தலர் அப்படி எல்லாம் சொல்லி இவர்கள் போய் அரசியல்வாதிகளோட நின்னுட்டு இருப்பாங்க அல்லது எங்க நமக்கு லாபம் வருமோ அங்கெல்லாம் போய் நிப்பாங்க. தங்களை அந்த ஊழியர்தான் என்று ஜனங்களிடத்திலே எஸ்டாப்ளிஷ் பண்றதுக்கு அவ்வளவு முயற்சி பண்ணுவாங்க. இது இன்னைக்கு நேத்துல்ல வெளிப்படுத்த விசேஷம் எழுதப்பட்ட காலத்திலேயே எபேசு சபை இருந்த காலத்திலேயே இப்படிப்பட்டவர்கள் நிறைய இருந்திருக்கிறாங்க. அப்ப ஊழியங்கள்ல எல்லாத்தையும் நம்ம நம்பிட முடியாது. நல்ல ஊழியம் இருக்குது, பொய்யான ஊழியமும் இருக்கிறது.

சரி அடுத்து பாருங்க, பொய்யான கற்பனைகள், பொய்யான கட்டளைகள், மேன் மேட் டாக்ட்ரின்ஸ் இவங்களா உருவாக்குவாங்க. கர்த்தர் சொல்லி இருக்க மாட்டார். இவனா ஒன்னு இதை செய்யக்கூடாது, கர்த்தர் அப்படி சொல்லி இருக்கிறாரு, இப்படி சொல்லி இருக்கிறாரு. இவர்கள் எல்லாம் யார் அப்படின்னு கேட்டா கர்த்தர் சொன்னதுல்ல. இவங்களா பழைய ஏற்பாட்டை படிச்சிட்டு அது மாதிரி செய்வது. பல புதிய புதிய கற்பனைகளை கட்டளைகளை ஜனங்களுக்கு சொல்லி அவர்களை பிரமிக்க பண்ணி தங்களை பின்பற்ற வைக்கணும். அது வேதத்திற்கு பொருந்துகிறதா, புறம்பானதா என்பதை பத்தில்லாம் யோசிக்க மாட்டாங்க. இப்ப சமீப காலங்கள்ல இப்படிப்பட்டவர்கள் சபைகளுக்குள்ளே எழும்புவாங்க. அவங்க என்ன செய்வாங்க பார்த்தா பொய்யான கட்டளைகளை கொடுப்பாங்க. ஜனங்களுக்கு இது இப்படித்தான் கர்த்தர் சொல்லி இருக்கிறார், இன்ன மாதிரிதான் நீங்க நடக்கணும்னு சொல்லி இருக்கிறார். சமீபத்தில நீங்க கவனிப்பீங்கன்னா, இந்த பழைய ஏற்பாட்டு ஆராதனைகள் இருக்கு பாருங்க. ஏன்னா நம்ம புதிய ஏற்பாட்டு காலத்தில நம்ம ஆராதித்து அதெல்லாம் நம்ம சோர்ந்து போயிட்டாங்க. அதனால இப்ப புதுசா என்ன செய்றதுன்னா, எக்காலம் ஊதினாதான் சர்ச்ல பாருங்க, பைபிள்ல போட்டுருக்கு, நீ எக்காளத்தை ஊதுவாயாகன்னு போட்டுருக்கு அப்படின்னு அந்த ஆராதனை முறையில கொண்டு வந்து இதுதான் கட்டளை, இதுதான் ஆராதனைன்னு புதிய காரியங்களை உருவாக்குகிறதை நம்ம பார்க்கிறோம். எனக்கு தெரிந்து கொஞ்ச நாளைக்கு முன்னால ஒரு ஒரு பெரிய ஒரு பட்டணத்தில ஒரு ஊழியக்காரர் அவர் இஸ்ரேல்ல போய் நான் கொஞ்ச நாள் ஜெபம் பண்ண போறேன்னு போனாரு. போயிட்டு திரும்பி வந்தார். அவருக்கு ஒரு சபை இருக்கிறது. அந்த சபையில் இருக்கிறவங்கிட்ட சொன்னாரு, நான் போய் ஜெபித்த போது கர்த்தர் எனக்கு சில கட்டளைகளை கொடுத்தார். நித்திய உடன்படிக்கை அப்படின்னு சில காரியங்களை கர்த்தர் ஏற்படுத்தி இருக்கிறார். அதை மாத்தக்கூடாது. அதன்படி நம்ம என்ன செய்யணும்? இனி வருகிற நாட்கள்ல சனிக்கிழமையை ஓய்வு நாளாக ஆசரிக்கணும். இரண்டாவது ஆண்கள் எல்லாம் விருத்த சேதனம் செய்து கொள்ளணும் அப்படின்னு சொன்னாங்க. இது கர்த்தரே என்கிட்ட நேரா பேசினாரு. பலர் தப்பாக புரிந்து கொண்டு நான் கொடுத்த நித்திய கட்டளைகளை மறந்துட்டாங்க. ஆகவே நம்மெல்லாம் கர்த்தரால் அழைக்கப்பட்டவங்க, தேவன் நமக்கு இந்த கட்டளை வெளிப்படுத்தி இருக்கிறார் அப்படின்னு சொன்னபோது இது நடந்த ஒரு விஷயம். அந்த சபையில் இருக்கிற ஆண்கள் நிறைய பேரு ஒரு நூற்றுக்கணக்கான பேரு அவர்கள் விருத்த சேதனம் செய்து கொண்டார்கள். அந்த சபை கொஞ்ச நாள் இப்ப இருக்கான்னு எனக்கு தெரியல. நான் சொல்லுகிற இந்த சம்பவம் நடந்து ஏறத்தாழ ஒரு 10 வருஷத்துக்கு மேல் ஆகிறது. அந்த சபைக்கு புது புது கட்டளைகளை கொடுப்பாங்க. சிலர் தொடாத, பாராத, தீண்டாத, அதை செய்யாத, இதை செய்யாத அப்படின்னு மேன் மேட் டாக்ட்ரின்ஸ். அவைகளை சொல்லி ஜனங்களை பயமுறுத்தி தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பார்கள். ஒன்னு திமத்தின் புஸ்தகம் நாலாவது அதிகாரம் மூணாவது வசனம். விசுவாசிகளும் சத்தியத்தை அறிந்தவர்களும் ஸ்தோத்திரத்தோடு அனுபவிக்கும்படி தேவன் படைத்த போஜன பதார்த்தங்களை விளக்கவும் வேண்டும். இதுதெல்லாம் சாப்பிடக்கூடாது, மாம்சம் சாப்பிடக்கூடாது, கர்த்தர் சொல்லியிருக்கிறாரு, இத இந்த பொருளை சாப்பிடக்கூடாது என்று விளக்க வேண்டும் என்று அந்த பொய்யர் கட்டளையிடுவார்கள். அப்ப இவர்கள் இடுகிற கட்டளை பொய்யான கட்டளை, மேன் மேட் டாக்ட்ரின்ஸ். வேதத்தின் அடிப்படையிலே சொல்லப்பட்ட கட்டளை அல்ல. இவங்களா உருவாக்கி கொண்ட சில கட்டளைகள். இந்த மாதிரி பொய்யான காரியங்கள் இத பற்றி வேதம் நிறைய சொல்லுது. பொய்யான கொள்கை விபரீதங்கள். ஒன்னு திமத்தய 620ல சொல்றாரு, உன் கிரியைகளை உன் பிரயாசத்தை பொல்லாதவர்களை சகிக்க கூடாமல் இருக்கிறதையும் அப்போஸ்தலர்கள் தங்களை அப்போஸ்தலர் சொல்லுகிறதை சோதித்து அறிந்திருக்கிறாய். விசுவாசிகளும் சத்தியத்தை அறிந்தவர்களும் ஸ்தோத்திரத்தோடு அனுபவிக்கும்படி தேவன் படைத்த முக்கியமான காரியங்களை விளக்கும்படி அந்த பொய்யர்கள் உங்களுக்கு கட்டளையிடுவார்கள். அப்ப இந்த பொய் வந்து மெய்யும் பொய்யும் கலந்திருக்கும் போது அவங்க பேசுறதையும் வசனத்தை சொல்றதையும் கேட்கும்போது நமக்கு அதை நம்பனும் போல வந்துரும். ஏன்னா வசனத்தில் தெளிவு இருக்கிறவர்களை அசைக்க முடியாது. ஆனா புதுசா இருக்கக்கூடிய விசுவாசிகள், வேதத்தில் அதிக அனுபவம் பரீட்சையும் இல்லாத விசுவாசிகளை சீக்கிரமே நம்ம ஏமாத்திரலாம். அவங்களுக்கு இப்படி இருக்குது, கர்த்தர் எனக்கு தரிசனத்தில் பேசின வசனம் என்ன சொல்லுது பார்க்க மாட்டான். தரிசனத்தில் பேசினா நம்பிருவாங்க உடனே. அப்ப இப்படிப்பட்ட பொய்யான தகவல்கள் வரும்போது அதை நம்பி நம்ம ஏற்றுக்கொண்டு விடாதபடிக்கு எது உண்மை என்று புரிந்து கொள்ளத்தான் கர்த்தருடைய தீர்க்கதரிசனங்கள் நமக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது.

தீர்க்கதரிசனத்தில் ஒரு மனிதன் நல்ல ஆழமான அனுபவம். தீர்க்கதரிசனம் என்று சொல்லும்போது மனிதர்கள் மூலம் கர்த்தர் பேசுகிற தீர்க்கதரிசனங்கள் இருக்கு. இப்ப சமகாலத்தில கர்த்தர் தீர்க்கதரிசிகள் என்று சிலரை பயன்படுத்துகிறார். அதுலயும் நல்லவங்க இருக்காங்க, தங்கள் மனசுல தோன்றதெல்லாம் பேசின தீர்க்கதரிசிகள் இருக்கிறாங்க. அப்ப இப்போ இருக்கிற மனிதர்கள் சொல்லுகிற தீர்க்கதரிசனத்தில கூட நீங்கள் எது நல்லது, எது கெட்டது சோதித்து பார்த்து அதை ஏற்றுக்கொள்ளனும். ஆனா வேதத்தில் சொல்லப்பட்டிருக்கிற தீர்க்கதரிசனத்தை நீங்கள் அப்படியே நம்பலாம். ஏன்னா அது பலமுறை சோதிக்கப்பட்டு ஏழு முறை அது புடமிடப்பட்ட சுத்த வெள்ளிக்கோப்பான வசனம் என்று வேதம் சொல்லுது. அப்ப இதுல இருக்கக்கூடிய தீர்க்கதரிசனங்கள்ல் எது உண்மை? மேன்மேட்ல கொண்டு வரக்கூடிய பல டாக்ட்ரின்ஸ் எது உண்மை? எது கர்த்தருடைய வேதம் காட்டுகிறது? எது வேதத்துக்கு புறம்பானது? இதை புரிஞ்சுக்கணும்னா நம்ம தெளிவா தீர்க்கதரிசன அறிவு நமக்கு வேண்டும். இதெல்லாம் காலம் காலங்களாக இருந்ததுதான். கள்ள ஊழியக்காரர்கள், கல்ல அப்போஸ்தலர்கள், கள்ள தீர்கடைசி காலத்தில இவர்கள் தரளாக பெருகுவார்கள். நல்லவர்களுடைய சத்தத்தை விட உங்க சத்தம்தான் ஓங்கி ஒலிக்கும். அதுலதான் நம்ம ரொம்ப கவனமா இருக்கறதுக்கு நமக்கு ஊன்றுகோலாக இருளிலே நடக்கும் வெளிச்சமாக பாதையாக ஒரு சின்ன ஒளியாக நம் கால்களுக்கு தீபமாக இருக்கிற தீர்க்கதரிசனங்கள் கடைசி காலத்தில கட்டாயம் நம்ம வாசிக்கணும். நான் இதை பற்றி இன்னும் கொஞ்சம் காரியங்கள் உங்கிட்ட சொல்ல வேண்டி இருக்குது. நம்ம அடுத்த நிகழ்ச்சியிலே நான் இதை குறித்து உங்களிடத்தில் பேச ஆசைப்படுகிறேன். அதுவரை கர்த்தர் உங்களை ஆசீர்வதித்து காப்பாராக. ஆமென். >> [음악]