📱

Get Our Mobile App

Take your business learning on the go!

Download on the App StoreGet it on Google Play

தீட்டு | DGS Dhinakaran Messages | Jesus Calls | Voice of Zion| Noah Selwyn #youtubevideo #tamil

Voice of zion19:12

Transcription

[இசை]

மார்க் ஏழு 20 லிருந்து 23 வரை உள்ள

வசனங்களில் தேவன் தாமே நம்முடைய

உள்ளங்களில் இருந்து எழும்பும் நம்முடைய

உள்ளத்தை கரைப்படுத்தும் சில பாவங்களை

கூறுகிறார் கேளுங்கள் மனுஷனுக்குள்ளே

இருந்து புறப்படுகிறது மனுஷனை

தீட்டுப்படுத்தும் எப்படியெனில் மனுஷருடைய

இருதயத்திற்குள் இருந்து பொல்லாத

சிந்தனைகளும் விபச்சாரங்களும்

வேசித்தனங்களும் கொலைபாதங்களும் களவுகளும்

பொருளாசைகளும் துஷ்டத்தனங்களும்

கபடும் காம விகாரமும் வன்கண்ணும் தூഷணமும்

பெருமையும் மதிக்கேடும் புறப்பட்டு வரும்

பொல்லாங்கானவைகளாகிய இவைகள் எல்லாம்

உள்ளத்திலிருந்து புறப்பட்டு மனுஷனை

தீட்டுப்படுத்தும் என்றார் மனிதனை

தீட்டுப்படுத்தும் இறைவனுக்கு முன்பதாக

நம்மை தீட்டுப்படுத்தும் காரியங்கள்

நம்முடைய உள்ளத்தின் ஆழங்களில் இருந்து

தான் வருகின்றன

பிரியமானவர்களே தேவன் நம்மை

செம்மையானவர்களாக உண்டாக்கினார் நாமோ

நம்மை

கெடுத்துக்கொண்டோம் போகட்டும் ஒன்னு

யோவான் இரண்டாம் அதிகாரம் 16வது வசனம்

இந்த நீண்ட பாவ பட்டியலை சுருக்கிக்

கூறுகிறது பாருங்கள் ஒன்னு யோவான் இரண்டு

16 ஏனெனில் மாம்சத்தின் இச்சையும்

கண்களின் இச்சையும் ஜீவனத்தின்

பெருமையுமாகிய உலகத்தில் உள்ளவைகள்

எல்லாம் பிதாவினால் உண்டானவைகள் അല്ല

അവൈകൾ ഉലകത്തിനാൽ ഉണ്ടാവൈകൾ இந்த பெரிய

பெயர் பட்டியலை பாவப்பட்டியலை சுருக்கமாக

மூன்றே காரியங்களில் அடக்கிவிட்டார்

பாருங்கள் யோவான் அவர் என்ன சொல்லுகிறார்

மாம்சத்தின் இச்சை கண்களின் இச்சை

ஜீவனத்தின் பெருமை இவைகள் பிசாசினால்

உண்டானவைகள் இவைகள் தேவனிடமிருந்து நம்மை

பிரிக்கின்றன கண்களின் இச்சை நம்மை

பிரிக்கிறது கண்களின் இச்சை இதை குறித்து

நான் உங்களுக்கு சொல்ல வேண்டாம்

அருள்நாதர் இயேசு சொன்னார் மத்தேயு

5:28ல் ஒரு பெண்ணை தவறான எண்ணத்தோடு

பார்க்கிறவன் அவளோடு விபசாரம்

செய்தாயிற்று கண்களின் இச்சையை ஒரு நாளும்

மாற்றுவது என்பது நம்மால் இயலாத

காரியம் ஒரு தடவை ஒரு கணவனுக்கும்

மனைவிக்கும் நடுவில் பெரிய போராட்டம்

வந்தது கணவன் வெளிநாட்டில் நல்ல வேலையில்

இருக்கிறார் கை நிறைய சம்பாதிக்கிறார் தன்

மனைவி பிள்ளைகளை உயிரைப் போல

காப்பாற்றுகிறார்

ஆனால் மனைவி அங்கு இருக்க மாட்டேன் என்று

சொல்லிவிட்டு இங்கு ஓடி வந்துவிட்டாள்

எத்தனையோ பேர் சமரசம் செய்து வைக்க

முயன்றார்கள் அந்த பெண் என்ன சொன்னாள்

தெரியுமா அந்த ஊர்ல நம்மால இருக்க

முடியாதுங்க ஏன்மா இருக்க முடியாது அங்க

தமிழ் சினிமாவே கிடையாதுங்க தமிழ் சினிமா

பார்க்காம எப்படி இருக்கிறது நான் தினமும்

ஒரு தமிழ் சினிமா பார்ப்பேன் வேற ஒரு படம்

பார்க்க மாட்டேன் 365 நாளும் பார்க்கணும்

அந்த நாட்டுல போய் அவன் என்ன கரபுறான்றா

அதுல நம்மால இருக்க முடியாது ஆமா புருஷனை

விட்டு வந்துருவோம் புருஷன் இரண்டாவதுங்க

நமக்கு படம்தான் முக்கியம் கண்களின் இச்சை

ஒரு நாள் சரி என்னைக்கோ ஒரு நாள்

பார்த்தோம் என்று இருக்கக்கூடாதா 365

நாளும் பார்க்க வேண்டும் கண்களின் இச்சை

ஆகவேதான் வேதம் சொல்லுகிறது பிரசங்கி 1:8

இப்படி சொல்லுகிறது கண் தான்

காண்கிறதினால் திருப்தி அடைகிறது இல்லை

கண் தான் காண்கிறதினால் திருப்தி அடைவதே

இல்லை எத்தனை தடவை பார்த்தாலும் வேறு

எதையாவது பார்க்கும் பொழுது கொஞ்சம் ஆசை

வரத்தான் செய்கிறது கண்களின் இச்சை

பாவத்திற்கு நேராய் நம்மை நடத்துகிறது

ஜீவனத்தின் பெருமை ஜீவனத்தின் பெருமை

எனக்கு அன்பானவர்களே

யாக்கோபு நான்கு ஆறு சொல்லுகிறது தேவன்

தாழ்மை உள்ளவர்களுக்கு கிருபை அளிக்கிறார்

பெருமை உள்ளவர்களுக்கோ எதிர்த்து

நிற்கிறார் தாழ்மை உள்ளவர்களுக்கு கிருபை

அளிக்கிறார் பெருமை உள்ளவர்களுக்கோ

எதிர்த்து நிற்கிறார் ஜீவனத்தின் பெருமை

ஒரு குறிப்பிட்ட நகரில் இரண்டு சகோதரர்கள்

இருந்தார்கள் இருவருமே செல்வந்தர்கள் தான்

ஆனால் இருவருக்கும் ஒரு போட்டி வந்தது

ஒருவர் ஒரு சினிமா கொட்டகை கட்டினால்

இவரும் கட்டுவார் அவர் சாராயக் கடை

வைத்தால் இவரும் சாராயக் கடை வைக்க

வேண்டும் அவர் ஒரு பங்களா கட்டினால்

அதைவிட பெரிதாக இவர் கட்ட வேண்டும்

இப்படியே இருவரும் போட்டி போட்டு போட்டி

போட்டு இருவரும் கடனாளிகளாக மாறி இருவரும்

எல்லாவற்றையும் இழந்து நடுத்தெருவில்

நின்றனர் தேவன் தாழ்மை உள்ளவர்களுக்கு

கிருபை அளிக்கிறார் பெருமை உள்ளவர்களுக்கோ

எதிர்த்து நிற்கிறார் ஜீவனத்தின் பெருமை

இறைவனிடமிருந்து நம்மை

பிரிக்கிறது இறைவனுடைய மார்பிலிருந்து

நம்மை பிரிக்கிறது பிரியமானவர்களே

ஆகவேதான் வேதம் சொல்லுகிறது பரிசுத்தம்

இல்லாமல் ஒருவனும் ஒரு காலும் தேவனை

தரிசிப்பதில்லை யாராய் இருந்தாலும்

பரவாயில்லை பாவம் உள்ளத்தில்

இருக்குமானால் கைகளில் இருக்கும்

இருக்குமானால் மாம்சத்தில் இருக்குமானால்

ஒரு நாளும் ஒரு காலும் அவன் தேவனை

தரிசிப்பதில்லை என்று வேதம்

சொல்லுகிறது எனக்கு அன்பானவர்களே இது நாம்

செய்யும் பாவம் இதையாவது திருத்திக்

கொள்ளலாம் என்று

வைத்துக்கொள்ளுங்கள் மற்றொரு விதமான

பாவத்தை குறித்து

யாத்திராகமம் 34 ஏழு என்ற பகுதியில் தேவன்

தம்மைப் பற்றி மோசே என்ற பக்தனுக்கு

இப்படி சொல்லுகிறார் மூன்றாம் நான்காம்

தலைமுறை மட்டும் படாத குற்றத்தை அவர் தேடி

விசாரிக்கிறவர் என்று

எழுதப்பட்டிருக்கிறது தேடி

விசாரிக்கிறவர்

குற்றத்தை மன்னிக்க விரும்புகிறவர்

அறிக்கை செய்யும் பொழுது ஒன்னு யோவான் 1:9

சொல்லுகிறது நாம் நம்முடைய குற்றங்களை

அறிக்கை செய்தால் அவைகளை மன்னித்து எல்லா

அநியாயத்தையும் நீக்கி நம்மை

சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும்

நீதியும் உள்ளவராய் இருக்கிறார் நாம்

மன்னிப்பு பெற தவறும் பொழுது இறைவனிடம்

நம்முடைய குற்றங்களை அறிக்கை செய்ய பொழுது

மூடி வைக்கும் பொழுது அந்தோ நம் வாழ்வு

பரிதாபம் நீதிமொழிகள் 28 13 சொல்லுகிறது

தன் பாவங்களை மறைக்கிறவன் வாழ்வடைய

மாட்டான் அவைகளை அறிக்கை செய்து விட்டு

விடுகிறவனோ இரக்கம் பெறுவான்

எனினும் சிலர் அவ்விதமாக தங்கள்

வாழ்க்கையை பாவத்தை மூடி மறைத்து இந்த

உலகை விட்டு கடந்து போக விரும்புகின்றனர்

ஒரு தடவை என் நண்பர் ஒருவர்

எழுதியிருந்தார் அவருக்கு தெரிந்த ஒரு

அம்மாள் உண்டு மிகவும் பயபக்தி உடையவர்கள்

ஆனால்

அவர்களுடைய கணவனோ மிக மிகக் குடியில்

இறங்கினவர் கடைசி நேரம் வந்தது அந்த

அம்மாள் சொன்னார்கள் இப்பொழுதாவது நீங்கள்

மனம் திரும்புங்கள் மிகக் குறைந்த

வயதுள்ளவர் இப்பொழுதாவது மனம்

திரும்புங்கள் தயவுசெய்து ஆண்டவனிடம்

போகப் போகிறீர்களே மனம் திரும்புங்கள்

என்று கெஞ்சினார்கள் அவர் என்ன சொன்னார்

தெரியுமா ஆம் நான் சாகப் போகிறேன்

கடைசியாக ஒரு பாட்டில் சாராயம் எனக்கு

கொடு என்றார் கொடுத்தார்கள் நன்றாய்

குடித்து அந்த போதையிலே தன் ஜீவனை

விட்டார் எனக்கு

அன்பானவர்களே மன்னிக்கப்படாத பாவத்தோடு

அவர் இறந்து

போனார் இந்த பாவம் நம்மை பின்தொடரும்

என்று வேதம் சொல்லுகிறது நீதிமொழிகள் 13

21 பாருங்கள் தீவினை பாவியை

பின்தொடரும் தீவினை பாவியை பின்தொடரும்

எண்ணாகம் 32 23 பாருங்கள் உங்கள் பாவங்கள்

உங்களைத் தொடரும்

பிடிக்கும் நாம் மரித்துப் போகலாம் நம்

பிள்ளைகளை பிள்ளைகளின் பிள்ளைகளை அவருடைய

பிள்ளைகளை நான்காம் தலைமுறை மட்டும்

தேடிப் பிடிக்கும் என்று தேவன்

எச்சரித்திருக்கிறார் நாம் ஏன் பாவத்தை

விட்டு

விலகக்கூடாது நாம் ஏன் பாவத்தை நமது

பிள்ளைகளுக்கு தண்டனையை வரவழைக்கும்

விதத்தில் விட்டுவிட்டு மரிக்க வேண்டும்

அது நம்மை பின்தொடர்கிறது அமெரிக்க ஐக்கிய

நாட்டில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் இரண்டு

பெண்கள் தோழிகள் இணைப்பிரியாத தோழிகள்

இன்பமாய் விளையாடிக்

கொண்டிருந்தார்கள் அதில் அந்த வீட்டின்

சொந்தக்காரர்

வந்தார் வந்து மற்ற பெண்ணை அவர் தவறான

வழியில் நடத்தி கொன்று போட்டார் இதை

அவருடைய மகள் பார்த்துக்கொண்டே இருந்தாள்

மிகச்சிறுமி ஒன்பது வயது உள்ளவள் ஒரே பயம்

நடுக்கம் அவளை பிடித்தது கொஞ்ச நாள்

தன்னுடைய நிதானத்தை இழந்து

போனாள் 18 வருடங்கள்

அந்த பெண்ணை யார் கொலை செய்தது என்பதை

யாருமே கண்டுபிடிக்க முடியாதபடிக்கு அவர்

செய்துவிட்டார் அந்த பெண்ணின் பெற்றோர்

கதறி அழுதனர் 18 வருடங்கள்

அழுதனர்

ஒருநாள் இந்த பெண்ணுக்கு திருமணமாகி

அவளுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது

ஒருநாள் அந்த பெண்ணோடு விளையாடிக்

கொண்டிருந்த பொழுது அந்தப்

பெண் இவளை பரிதாபமாக பார்த்தாள்

பார்த்தவுடன் இப்படி யாரோ என்னை

பார்த்தார்களே என்று

யோசித்தாள் ஆம் தன்னுடைய சிநேகிதி சாகும்

பொழுது அப்படித்தான் அவளை பார்த்தாள்

பரிதாபமாய் பார்த்தாள் ஐயோ உன் அப்பா

என்னை கொல்லுகிறாரே நீ என்னை காப்பாற்றக்

கூடாதா ஐயோ உன் அப்பா என்னை கொல்லுகிறாரே

என்னை காப்பாற்றக் கூடாதா என்று அவளுடைய

பரிதாப பார்வை அவள் உள்ளத்தை அசைத்தது

பழைய நாட்கள் நினைவுக்கு வந்தன ஓட்டமாய்

ஓடினாள் நீதிபதியிடம் ஓடினாள் இறந்து போன

பெண்ணினுடைய பெற்றோரிடம் ஓடினாள் உண்மையை

சொன்னாள் போலீசார் விரைந்து வந்தனர்

அவருக்கு ஆயுள் தண்டனை விதித்தது பாவம்

தொடர்ந்து

செல்லும் நம்முடைய பாவம் தொடர்ந்து

செல்லும் தீவினை பாவியை

பின்தொடரும் எனக்கு

அன்பானவர்களே இதை போக்க வழி என்ன இந்த

பாவங்களை போக்கிக்கொள்ள வழி என்ன

அருள்நாதர் இயேசுதான் வழி தேவாதி தேவனுடைய

இரக்கம் தான் வழி

இதற்கு வழி என்ன பாவம் உங்களை பின்தொடரும்

என்று வேதம் சொல்லுகிறது ஆனால்

நீதிமொழிகள் 10 12 சொல்லுகிறது அன்பு

எல்லா பாவங்களையும் மூடும்

அல்லேலூயா

அல்லேலூயா இதுதான் நற்செய்தி அன்பு எல்லா

பாவங்களையும் மூடும் எபிரேயர்

9:22 லேவியராகம் 17

இரண்டு வசனங்களும் சொல்கின்றன இரத்தம்

சிந்து இல்லாமல் பாவ மன்னிப்பு இல்லை

எனினும் கரைபடிந்த இரத்தத்திற்காய்

கரைபடிந்த மற்றொரு இரத்தத்தை

சிந்துவதினால் பயன் என்ன எனவே கரையற்ற கரை

திரையற்ற மாசற்ற தன் இரத்தத்தை

சிந்துவதற்காய் தேவன் மனு உருக்கொண்டு

இறங்கி வந்தார் தேவனைத் தவிர பரிசுத்தவான்

யார் அவர்தான் பரிசுத்தர் ஆகவே அவரே

இறங்கி வந்தார் நானே வரட்டும் நானே என்

இரத்தத்தை சிந்தட்டும் என்று இறங்கி

வந்தார் இந்த உலகில் அவர் மனிதனாய்

வாழ்ந்த பொழுது இயேசு என்ற பெயரில்

வாழ்ந்த பொழுது யோவான் 8:46ல் இயேசு

சொன்னார் என்னிடத்தில் பாவம் உண்டென்று

உங்களில் யார் என்னை

குற்றப்படுத்தக்கூடும் அவரை நியாயம்

விசாரித்த பிலாத்து இப்படிச் சொன்னான்

யோவான் 19 நான்கு ஆறு என்ற பகுதிகளில்

இவரிடத்தில் நான் ஒரு குற்றத்தையும்

காணேன் இவர் தூய்மை படைத்தவர் என்று

சொன்னார் சரித்திரம் எழுதிய பேதுரு ஒன்னு

பேதுரு இரண்டு 22ல் இப்படி சொன்னான் அவர்

பாவம் செய்யவில்லை அவர் வாயில் வஞ்சனை

காணப்படவும் இல்லை என்றான் தூய்மையான ஒரு

வாழ்க்கை அவர் தம் மாசற்ற இரத்தத்தை

சிந்தினார் ஒன்னு பேதுரு ஒன்னாம் அதிகாரம்

18 19 சொல்லுகிறது மாசற்ற இரத்தத்தை

சிந்தினார் அந்த இரத்தம் உங்களை மீட்டது

நம்முடைய இரத்தத்திற்கு பதிலாக அவருடைய

இரத்தம்

சிந்தப்பட்டது நம்முடைய இரத்தத்திற்கு

பதிலாக நம்முடைய இரத்தம் சிந்தப்படுவதற்கு

பதிலாக தூய்மையான கிறிஸ்துவின் இரத்தம்

சிந்தப்பட்டது எனக்கு அன்பானவர்களே ஒன்னு

யோவான் நாலாம் அதிகாரம் ஒன்பது பத்து

வசனங்களை பாருங்கள் நம்முடைய பாவங்களை

நீக்கும் கிருபாதார

பலியாக தேவன் தம்முடைய ஒரே குமாரனை இந்த

உலகில் கிருபாதார பலியாக அனுப்பினதினால்

அன்பு

உண்டாயிருக்கிறது சிலுவையில் அன்பு

வெளிப்பட்டது என்றார் நமக்காக தம்முடைய

தூய இரத்தத்தை அவர்

சிந்தினார் நான் அமெரிக்க ஐக்கிய நாட்டில்

இருந்த பொழுது டெலிவிஷனில் ஒரு உண்மை

சரித்திரத்தை சொன்னார்கள் கேட்டு

உள்ளமுடைந்தேன் அடிக்கடி நான் இதை

கூறுவது அமெரிக்க ஐக்கிய நாட்டில் ஒரு

பெரிய பாலம்

உண்டு இந்த பாலம் ஒரு நதியின் மீது

கட்டப்பட்டிருந்தது அந்த நதியில் பெரிய

பெரிய கப்பல்கள்

போகும் அதே

சமயம் கப்பல்கள் போகாத சமயம் அதை மூடும்

பொழுது அதன் மீது ரயில்

போகும் அந்த பணியை பலகாலம் செய்து வந்தவர்

ஒருநாள் அந்த இடத்திற்கு

சென்றபொழுது தன்னுடைய 12 வயது நிரம்பிய

ஒரே மகன் பிடிவாதமாய் அவரோடு கூட வர

விரும்பினதினால் அவனையும் அழைத்துக்

கொண்டு

போனார் இருவரும் கப்பல் போவதை அங்கு

நின்று பார்த்துக் கொண்டிருந்தனர் உள்ளம்

நெகிழ்ந்தது வெகுநேரம் அதை பார்த்து

மெய்மறந்து

பேசிக்கொண்டிருந்தார்கள்

திடீரென்று தூரத்தில்

ரயில் வரும் சத்தம் ரயிலினுடைய அந்த

விசிலின் சத்தம்

கேட்டது அவர் ஒரு நிமிஷம் கலங்கிப் போனார்

அவர் சொன்னார் மகனே இதே இடத்தில் அப்படியே

நீ அசையாதே நான் ஓட்டமாய் ஓடி ரயில்

கடந்து போகும்படி செய்து திரும்ப பாலத்தை

திறந்துவிட்டு உன்னிடம் வந்து நிற்பேன்

இதே இடத்தில் அப்படியே அசையாமல் இரு

என்றார் சரியப்பா என்றார் ஓட்டமாய்

ஓடினார் ரயில் மிக வேகமாக அது எக்ஸ்பிரஸ்

பண்ணி மிக வேகமாக அது வந்து

கொண்டிருக்கிறது ஆகவே அவர் அந்த

பாலத்தை உடனே மூடுவதற்காக அதற்கான அந்த

சுவிட்சை அழுத்த போனார் திடீர் என்று

பின்னால் ஒரு குரல் கேட்டது திரும்பிப்

பார்த்தார் அவருடைய பேச்சை

கேட்காமல் தகப்பனாரின் சொல்லை கேளாமல்

அவர் பின்னாலேயே ஓடி வந்து கொண்டிருந்த

அவருடைய 12 வயது மகன் அந்த பாலத்தின்

நடுவே விழுந்து

கிடந்தான் இவர் அதை அழுத்தினார் மேலே

தூக்கிக் கொண்டிருக்கிற அந்த பாலம்

அப்படியே இறங்கி வரும் அவனுடைய உடலை

அப்படியே பிழிந்து

எடுக்கும் அழுத்தாமல் போனால் ரயிலில் உள்ள

கணக்கற்ற பயணிகள் மாண்டு ஒழிவார்கள்

நேரடியாக அது நதியில் விழும் என்ன செய்வது

என்ற பிரச்சனை அவன் கதறுகிறான் அப்பா

என்னை காப்பாற்றுங்கள்

டாடி சேவ் மீ அப்பா என்னை காப்பாற்றுங்கள்

டாடி சேவ் மீ மற்றொரு பக்கம் ரயிலின்

விசில் மறுபடியும் மறுபடியும் மறுபடியும்

அந்த டிரைவர் ஊதிக்கொண்டே இருக்கிறார்

இரண்டிற்கும் நடுவில் இவர் தடுமாறி போனார்

என்ன செய்வது என்று தெரியவில்லை தன்

இருதயத்தை கல்லாக்கிக் கொண்டார் இந்த

பட்டனை அழுத்தினார் காலம் மூட ஆரம்பித்தது

சிறுவன் கதறினான் அப்பா என்னை

காப்பாற்றுங்கள்

டாடி சேவ் மீ டாடி சேவ் மீ என்னை

காப்பாற்றுங்கள் காப்பாற்றுங்கள் அந்த

சத்தம் அப்படியே குறைந்து போனது ரயில்

வேகமாய் கடந்து சென்றது

பார்த்தவர்கள் ஏராளமான பயணிகள் சிறு

குழந்தைகள் சிலர் விஸ்கி குடித்துக்

கொண்டிருக்கிறார்கள் சிலர் தங்கள்

குழந்தைகளோடு விளையாடிக்

கொண்டிருக்கிறார்கள் சிலர் சீட்டு

விளையாடிக் கொண்டிருக்கிறார்கள் சிலர்

தமாஷாய் பேசிக்

கொண்டிருக்கிறார்கள் ஒவ்வொருவரும் ஒரு

விதத்தில் இன்புற்று

இருக்கின்றன அவர் கண்ணீரில் நின்று

கொண்டிருந்தார் அவருடைய மகனுடைய உடல்

சின்னா பின்னமாய் குழம்பாய் இந்த ரயில்

கீழே கிடக்கிறது அவர் யோசித்தார் என்

மகனுடைய உடலில் தான் இந்த ரயில் செல்கிறது

என்பதை இந்த பயணிகள் உணரவில்லையே என்று

கதறி

அழுதார் எனக்கு

அன்பானவர்களே அருள்நாதர் இயேசுவை

பாருங்கள் மத்தேயு 27 46ல் பாருங்கள்

உலகத்தின் பாவம் மீது

சுமத்தப்படுகிறது ஒன்னு பேதுரு

24 சொல்லுகிறது போல மத்தேயு எட்டாம்

அதிகாரம் 17 ஆம் வசனம் சொல்லுகிறது போல

தேவகுமாரனாகிய இயேசு சிலுவையில்

துடிக்கிறார் அவர் மீது பாவங்கள்

சுமத்தப்படுகின்றன உலகத்தின் அக்கிரமங்கள்

சுமத்தப்படுகின்றன ஒவ்வொரு பலவீனமும்

சுமத்தப்படுகிறது ஒவ்வொரு நோய்களும்

சுமத்தப்படுகிறது பாடுகள் துக்கங்கள்

சுமத்தப்படுகின்றன அந்தோ அவர் தவிக்கிறார்

என் தேவனே என் தேவனே ஏன் என்னை கைவிட்டீர்

மை காட் மை காட்

ஒய்

ஒய் இந்த பாவங்கள் அக்கிரமங்கள் என்னை

கசக்கிப் பொழிகின்றன ஒவ்வொரு மனிதனுடைய

நோயும் பலவீனமும் என்னை கசக்கி

பொழிகிறது ஒவ்வொரு துக்கமும் பாடுகளும்

என்மேல் சுமர்கிறது என்னால் தாங்க

முடியவில்லை ஏன் என்னை

கைவிட்டீர் அந்த சிறுவன் கதறினான் அப்பா

என்னை காப்பாற்றுங்கள்

தேவகுமாரனா இயேசு கதறினார் ஏன் என்னை

கைவிட்டி

உனக்காக

உனக்காக எனக்கு

அருமையானவர்களே அன்பு திரளான பாவங்களை

மூடும் அன்பு எல்லா பாவங்களையும்

மூடும் இயேசு கிறிஸ்துவின் இரத்தம் ஒன்னு

யோவான் 1:7 போல உங்கள் சகல பாவங்களையும்

நீக்கி உங்களை

சுத்திகரிக்கும் என் இருதயத்தை

சுத்திகரித்தேன் பாவமரை துப்புறமாக்கினேன்

என்று சொல்லத்தக்கவன் யார் என்று

நீதிமொழிகள் 29 சொல்லுகிறது அதற்கு பதில்

இதுதான் இயேசு கிறிஸ்துவின் இரத்தம்

மாம்சத்தில் வெளிப்பட்ட தேவகுமாரனுடைய

இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி நம்மை

சுத்திகரிக்கும் அவர் நமக்காய் ஜீவனை

கொடுத்து மனம்

கலங்காதே எவ்வளவு பெரிய பாவமாய்

இருந்தாலும் சரி எவ்வளவு பெரிய பாவமாய்

இருந்தாலும் சரி

எவ்வளவு பாவங்களை குமித்து

வைத்திருந்தாலும் சரி இன்று இறப்பு அவைகளை

நான் கரைத்துக் கொள்வோம் ஒரே ஒரு சொட்டு

இரத்தம் நம்மை தூய்மையாக்க