📱

Get Our Mobile App

Take your business learning on the go!

Download on the App StoreGet it on Google Play

சந்திர காலண்டரும் தஜ்ஜாலும்

SL Muslim Bayan2:22

Transcription

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ.

இன்றைய தலைப்பு சந்திர காலண்டரும் தஜ்ஜாலும் பாகம் இரண்டு. பாகம் ஒன்றை பார்க்காதவர்கள் கீழே டிஸ்கிரிப்ஷன்ல லிங்க் இருக்கு அதை பார்வது விட்டு பாகம் இரண்டை பார்க்கவும்.

சந்திர காலண்டரின் படி ஒவ்வொரு மாதமும் மாறுபட்ட பருவநிலைகளில் வரும். உதாரணமாக ரமலான் மாதம் சில வருடங்கள் கோடையிலும் சில சில வருடங்கள் குளிர் காலத்திலும் வரும். இது மனிதர்களை எல்லா சூழ்நிலைகளுக்கும் பக்குவப்படுத்துகிறது. ஆனால் தஜ்ஜாலின் புதிய உலக ஒழுங்கு (நியூ வேர்ல்ட் ஆர்டர்) மனிதர்களை ஒரே வார்ப்பு குடுவைக்குள் (மேட்ரிக்ஸ்) அடைக்க பார்க்கிறது. வார இறுதி நாட்கள் (வீக்கெண்ட்ஸ்), குறிப்பிட்ட விடுமுறை நாட்கள் என மனிதர்களின் சிந்தனை முறை முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

தஜ்ஜால் என்பவன் பெரும் குழப்பவாதி (பித்னா). அவன் மனிதர்களின் ஆன்மீக தொடர்பை அறுக்க நினைப்பான். அதற்கு மிகச்சிறந்த வழி இறைவனால் பிரபஞ்சத்தில் வைக்கப்பட்ட அடையாளங்களை, சந்திரனின் நிலைகளை மனிதர்கள் மறக்கடிப்பதே ஆகும். நாம் சந்திர காலண்டரை மறக்கும்போது இறுதி காலத்தின் மிக முக்கியமான அடையாளங்களையும் காலத்தின் வேகத்தையும் கணிக்க தவறிவிடுகிறோம்.

அன்பானவர்களே, தஜ்ஜாலின் வருகை மிக நெருங்கிக் கொண்டிருக்கிறது என்பதற்கான சான்றுகள் நம்மைச் சுற்றி பல உள்ளன. காலத்தின் வேகமே அதற்கு ஒரு சான்றுதான். ஒரு வருடம் ஒரு மாதம் போலவும், ஒரு வாரம் ஒரு நாள் போலவும் கடந்து கொண்டிருப்பதை நாம் உணர்கிறோம்.

இந்த இறுதி காலத்தின் குழப்பங்களில்ிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள நாம் மீண்டும் நம்முடைய இஸ்லாமிய அடையாளங்களுக்கும் இயற்கையான வாழ்வியலுக்கும் திரும்ப வேண்டும். கிரகோரியின் நாட்காட்டியை உலகியல் தேவைகளுக்கு பயன்படுத்தினாலும், நம்முடைய ஆன்மீக வாழ்விற்கு ஹிஜ்ரி சந்திர காலண்டரின் தேதிகளை, மாதங்களை நாம் அறிந்து வைத்திருப்பது மிக மிக அவசியம்.

அல்லாஹ் நம் அனைவரையும் இறுதி காலத்தின் குழப்பங்களில் இருந்தும் தஜ்ஜாலின் பிடியில் இருந்தும் பாதுகாப்பானாக. ஆமீன்பு.