Transcription
[இசை] எனக்கு இதிலிருந்தே ஒரு ரகசியம் தெரிந்தது. ஏதாவது ஒரு வேலையை தொடர்ந்து ஒருத்தன் செய்தால் பிச்சை எடுத்தால் கூட மற்றவர்களுக்கு தெரிய வருவான். என்ன செய்ய வேண்டும்? ஒரு வேலையை தொடர்ந்து செய்ய வேண்டும். ஒரே இடத்தில இருந்து செய்ய வேண்டும். இவன் ஒரு மரத்துக்கு கீழேயே இருந்து பிச்சை எடுத்தான். ஆயுல் முழுவதும் பிச்சை எடுத்தான். பிச்சையிலேயே அவன் வாழ்க்கை கழிந்தது. முதிர்ந்தான். ஒரு நாள் அந்த இடத்திலேயே இறந்து போனான். உடனே ஊர் மக்கள் எல்லாம் கூடினார்கள். நீண்ட காலமாக இந்த மரத்துக்கு கீழேயே இருந்து இவன் பிச்சை எடுத்தானே, இவனை ஏதாவது ஒரு மரியாதை பண்ண வேண்டும் என்று ஊர் பெரியவர்கள் கூடினார்கள்.
என்ன மரியாதை செய்யலாம்? இருக்கிற பொழுது ஒன்னும் பண்ணல. செத்த பிறகு நிறைய மரியாதை பண்ண நிறைய பேர் வருவார்கள். அது உலக விதி. இப்ப என்ன மரியாதை பண்ணலாம் என்று ஆராய்ந்து முடிவு பண்ணி அவன் இருந்த இடத்திலேயே அவனை புதைக்கலாம் என்று முடிவு பண்ணினார்கள். அதான் அவனுக்கு செய்கிற மரியாதை. உடனே ஊர் மக்கள் எல்லாரும் சேர்ந்து அந்த மரத்துக்கு கீழே அவன் இருந்த இடத்திலே ஒரு குளி தோண்ட ஆரம்பித்தார்கள். ஒரு அடி தோண்டி இருக்க மாட்டார்கள். நங் என்று ஒரு சத்தம் கேட்டது. கொஞ்சம் விலகி பார்த்தால் ஒரு பெரிய வெண்கழ பானை. அந்த பானை நிறைய நவரத்தினங்கள். ஒரு நவரத்தினத்தை வித்தாலே அவன் ஒரு தலைமுறை வாழ்ந்திருக்கும். அப்படிப்பட்ட நவரத்தினங்கள் ஒரு பானை நிறைய. இந்த இதில கொடுமை என்னவென்று கேட்டால் இந்த நவரத்தின பானையை தனக்கு கீழ வைத்துக்கொண்டு ஒரு அடி மேலே உட்கார்ந்து கொண்டு ஒருவன் ஆயுல் முழுக்க பிச்சை எடுத்தான். எவ்வளவு பெரிய வருத்தத்துக்குரிய செய்தி. ரொம்ப மகிழ்ந்து கைதட்ட வேண்டாம். அந்த பிச்சைக்காரன் யார் என்றால் நீங்களும் நாங்களும் தான். நவரத்தினங்கள் நிறைந்ததாகிய நம் தமிழ் சொத்தை தாட்டு வைத்துவிட்டு அதற்கு மேலே உட்கார்ந்து கொண்டு உலக நாடுகளிடம் மொழிப்பிச்சை பண்பாட்டி பிச்சை கேட்டுக் கொண்டிருக்கிற கேவலப்பட்ட பிச்சைக்காரர்கள் நாங்கள். வருத்தம் முறுகிறேன். தமிழ் எப்பேர்பட்ட மொழி தெரியுமா? தமிழினுடைய தகுதி நமக்கு தெரியுமா? வெறும் பொருள் உலகத்திலே வெற்றி பெற்றுவிட்டார்கள் என்பதற்காக மேற்கு நாளர்கள் மேற்கு நாட்டாளர்கள் போடுகிற குப்பைகளை கூட சொத்தாக நினைக்கிற மனநிலைக்கு நம் தலைமுறையை மாற்றிவிட்டோமே. தவறு இல்லையா? பொருள் தேவைதான். பொருளாதாரம் தேவைதான். அதிலே நாம் தாழ்ந்திருப்பது உண்மைதான். அதை வாங்குங்கள். நான் வேண்டாம் என்று சொல்லவில்லை. வாங்க வேண்டிய விஷயத்தை வாங்குவதே தவறில்லை. கொடுக்க வேண்டிய விஷயத்தையும் நீ வைத்துக்கொண்டு வாங்குகிறாயே அது கொடுமை இல்லையா? அந்த கொடுமையைதான் நான் நினைத்து பார்க்கிறேன். தமிழ் மொழி எத்துனை சிறந்தது தெரியும் தெரியுமா? ஒரு மொழியினுடைய அடிப்படை ஒரு மொழியினுடைய அடிப்படை அது மூன்று நிலைகளிலே வலிமை பெற வேண்டும். அதை மட்டும் நான் சொல்லி ஒரு தொடக்க உரையாக சொல்ல விரும்புகிறேன். மூன்று நிலையிலே ஒரு மொழி வலிமை பெற்றால் தான் அந்த மொழி செம்மொழி. எனக்கு இந்த சொல்லைச் சொல்லவே பிடிப்பதில்லை. ஒரு மொழி அது எந்த மொழியாக இருந்தாலும் மூன்று நிலையிலே அந்த மொழிக்கு வலிமை வர வேண்டும். முதல் நிலை சொல். அதற்கும் முதல் நிலை எழுத்து என்று உண்டு. உண்டு. அச்சரம் என்ற உண்டு. உண்டு. 2000 ஆண்டுகளுக்கு முன்பு தொல்காப்பியன் என்கின்ற ஒரு பெரும் புலவன் தோன்றி விஞ்ஞான பூர்வம் மான ஒரு இலக்கணத்தை வகுத்து நம் தமிழுக்கு தந்திருக்கிறான். நினைத்து பார்க்க முடியாது. நாம் படிக்காமல் விட்டுவிட்ட படியால் அது ரொம்ப நல்லது. அதிகம் படிக்காதீர்கள். நிம்மதியாக இருக்கலாம். படிக்க படிக்க நம் நிம்மதி கெடும். அதுல ஒன்று. இப்போ நான் சொல்வது தொல்காப்பியன் என்ற ஒரு பெரும் புலவன் ஒரு இலக்கண நூல் செய்து தந்திருக்கிறான். விஞ்ஞான பூர்வமான இலக்கணம். யாரும் அசைக்க முடியாது. அணுக முடிய முடியாது. எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி ஐந்து இலக்கணங்கள் நமக்கு கொடுத்திருக்கிறான். வேறு எந்த மொழியிலாவது இப்படி ஒரு இலக்கணம் இருக்குமா? மொழி இலக்கணம் என்றாலே எழுத்துக்கும் சொல்லுக்கும் உரியது என்று நாங்கள் நினைத்துக் கொண்டிருக்கிறோம். அப்படி அல்ல. பொருளுக்கு, யாப்புக்கு, அணிக்கு கூட இலக்கணம் செய்தவர்கள் நம் பெரியவர்கள். ஒரு மொழியினுடைய முதல் நிலை எழுத்து அட்சரம். அந்த அட்சரத்திலேயே தமிழன் செய்திருக்கிற புதுமை உங்களுக்கு தெரியுமா? அதனால்தான் திருவள்ளுவன் ஆகட்டும், உமாபதி சிவாச்சாரியார் ஆகட்டும் எல்லாரும் இறைவனுக்கு உவமை சொல்கிற பொழுது ஆணாவை உவமை சொன்னார். அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு. வள்ளுவன். உமாபதி சிவாச்சாரியார் சொன்னார். அகர அகர உயிர் போல அறிவாகி எங்கும் நிகரில் இறை நிற்க நிறைந்து. இறைவனுக்கு உவமை சொல்ல வேண்டுமா? ஆனா ஒன்றுதான் உவமை. சும்மா போங்கடா. தமிழ்ல இருக்கிற பற்றின் காரணமாக உங்களுக்கு ஆனா பெருசா தெரிகிறது. அப்படித்தானே நினைக்கிறோம் நாங்கள். ஏன் ஆனாதான் கடவுளுக்கு உவமையா? ஏன் சொல்லப்படாதா? ஆணா என்கின்ற எழுத்துதான் இறைவனுக்கு உவமை சொல்லக்கூடிய எழுத்து. ஏன் இறைவனுக்கு இறைவனுக்கு என்று சொல்கிறேன் என்றால் இறைவன் ஒருவன்தான். நம் அறிவுக்குள் அகப்படாத ஒருவன். அவனை அகப்படுத்த வேண்டுமானால் அகப்படுத்தினால் தான் உவமை சொல்லலாம். அகப்படுத்த முடியாதவனை அகப்படுத்துவதற்கு உவமை தேவைப்படுகிறது. ரெண்டு பெரும் புலவர்கள் சொன்னார்கள். அகரத்தை தவிர அதற்கு உவமை வேறு கிடையாது. நாம் படிக்கிற ஆணாவின் சிறப்பாவது நமக்கு தெரியுமா? முதல் எழுத்து ஆ ஒன்றை பாருங்கள். நான் அது வியக்கறது உண்டு. தமிழ் எழுத்திலே எழுத்து அட்சரம் என்று வந்துவிட்டாலே அதற்கு இரண்டு வடிவங்கள் உண்டு. ஒரு எழுத்து பற்றி மட்டும் சொல்லுகிறேன். அட்சரங்கள் என்று வந்துவிட்டாலே அதற்கு இரண்டு வடிவங்கள். ஒன்று ஒன்று வரி வடிவம். மற்றது ஒளி வடிவம். ஆ என்கிற பொழுது ஆனா என்கிறோமே அதை இப்படி எழுதுகிற பொழுது அது வரி வடிவம். ஆ என்று ஒரு ஓசை எழுப்புகிறேனே அது ஒளி வடிவம். ஒரு ஒவ்வொரு அட்சரத்துக்கும் இந்த ரெண்டு வடிவங்கள் உண்டு. இந்த ஆ என்கின்ற வரிவடிவத்தை முதலிலே பார்ப்போம். அதுல கொடுமை என்னவென்று கேட்டால் மேற்கு நாட்டானுடைய மொழிப்பண்பாட்டை வாங்கிக்கொண்டு இன்றைய தமிழறிஞர்கள் பலபேர் சொல்கிறார்கள். ஆ என்ற எழுத்தை த பிள்ளைகளுக்கு முதலிலே சொல்லி கொடுக்க கூடாது என்று சொல்கிறார்கள். இந்த கொடுமை எல்லாம் நாங்க எங்க போய் சொல்றது? ஆனா என்ற எழுத்தை குழந்தைகளுக்கு சொல்லி கொடுக்காதே. முதல் எழுத்தாக சொல்லி கொடுக்காதே. இப்ப சில பாட புத்தகத்தில கூட எங்க ஊர்ல மாத்தி த்திட்டார்கள். ஏன் என்று கேட்டதற்கு அவர்கள் சொல்லுகிற பதில் ஆனா என்ற எழுத்து எழுதுவதற்கு ரொம்ப கடினமான எழுத்து. ஒரு சுழி போட வேண்டும். வளைக்க வேண்டும். கோடு இழுக்க வேண்டும். பிறகு நெடுங்கோடு போட வேண்டும். இதெல்லாம் குழந்தைக்கு ரொம்ப சிரமமான வேலை. ஆனால் அதனால ஆணா சொல்லி கொடுக்காதே. அப்ப எதை சொல்லி கொடுப்பது? சுலபமா எழுத சொல்லக்கூடிய எழுத்தை சொல்லி கொடு. என்ன எழுத்து பாா? டானா தனியா கோடு போட்டால் போதும். அதனால எங்க ஊர் பாட புத்தகத்தில் என்ன பண்ணிட்டார்கள் என்று கேட்டால் அம்மா என்பதற்கு பதிலாக முதல் பாடம் முதல் பிள்ளைக்கு என்ன எழுதிக் கொடுக்கிறார்கள் என்றால் படம் பார். படம் என்று முதல் பாடம். அதெல்லாம் அதை படிச்சிட்டு டிவிக்கு முன்னாலேயே உட்கார்ந்து படம் பார்டம் என்று உட்கார்ந்திருக்கிறார். இது எல்லாம் சரியான முறையா? ஆ என்ற எழுத்தை நம் மூதாதயர்கள் அறியாமையில் முன் வைத்தார்களா? இங்க என்ன கஷ்டம் இருக்கிறது? ஆனாவை சொல்லிக் கொடுப்பதிலே என்ன கஷ்டம் என்றால் அவர்கள் சொல்லுகிற பதில் ஆனா என்கின்ற அட்சரத்தை எழுதுகிற பொழுது சுழி போட பிள்ளை பழக வேண்டும். வளைவு போட பழக வேண்டும். கோடு போட பழக வேண்டும். இதெல்லாம் சிரமம் இல்லையா என்று கேட்கிறார்கள். முட்டாள்களே. எனக்கு சில நேரத்தில் இப்படி வார்த்தை வந்தா மன்னித்து கொள்ளுங்கள். ஏனென்றால் நம் மூதாதயர் நெறிதெறியாமல் எவனோ ஒருவன் சொல்வதை அப்படியே நீ வாங்கிக் கொள்கிறாயே உன்னை திட்டாமல் நான் என்ன செய்ய? அகரத்தை ஏன் எழுதிக் கொடுத்தார்கள் என்றால் ஆச்சரியமான விஷயம். உலகத்திலே இருக்கிற எந்த மொழியும் மூன்று அடையாளங்களை கொண்டுதான் அச்சரங்களை அமைத்திருக்கின்றன. இதெல்லாம் இப்ப நாங்க சொல்லாமலே விட்டுட்டோம். நான் தமிழ் மொழியை சொல்லவில்லை. எந்த மொழியானாலும் அந்த மொழி அட்சரங்கள் மூன்று வடிவங்களை கொண்டுதான் தயாரிக்கப்பட்டிருக்கின்றன. ஒரு வடிவம் சுழி வட்டம். இன்னொரு வடிவம் பிறை. நீங்க எந்த அட்சரத்தையும் வீட் வீட்ல போய் பரிசோதனை பண்ணி பாருங்க. ஒன்று சுழி. அடுத்தது பிறை. அடுத்தது கோடு. அது கிடைக்கோடு நெடுங்கோடு என்று இரண்டாக பிரியும். இதுதான் உலகத்து மொழிகள் அத்தனை எழுத்துக்களினதும் அடிப்படை வடிவங்கள். தமிழன் என்ன செய்தான் தெரியுமா? தன்னுடைய முதல் எழுத்திலேயே எல்லா அட்சரங்களும் அமையக்கூடிய வடிவங்கள் எல்லாவற்றையும் கொண்டு வந்து பொருத்தினான். ஒரு சுழி போட்டான். ஒரு பிறை போட்டான். கிடைக்கோடு போட்டான். நெடுங்கோடு போட்டான். ஆணா வந்தது. அட்சரங்கள் எழுதுகிற அத்தனை வடிவங்களும் குழந்தைக்கு சொல்லிக் கொடுக்கப்பட்டது. என்ன லாபம் தெரியுமா? ஆணா பிள்ளை எழுதிவிட்டால் பிறகு எந்த அட்சரத்தையும் பயமில்லாமல் அவன் எழுதுவான். ஆணாவை ஒரு குழந்தை எழுதிவிட்டால் பிறகு அவன் எந்த அட்சரத்தையும் பயமில்லாமல் எழுதுவான். ஏன் அவனுக்கு சுழி போட தெரியும். கோடு போட தெரியும். வளைவு போட தெரியும். இதை பழகிவிட்டான் என்றால் எந்த எழுத்தும் அவனுக்கு தானாக வரும். அதனால்தான் அகரத்தை வரிவடிவாக முன்வைத்தார்கள்.
சரி ஒளிவடிவு என்றீர்களே அதில என்ன விசேஷம் என்று கேட்டால் வேறொன்றும் பண்ண வேண்டாம். வேற எந்த அட்சரங்களை நீங்கள் சொல்வதானாலும் பல கருவிகளை முயற்சித்து சேர்த்துதான் அட்சரங்களை உருவாக்க வேண்டும். ஒரே ஒரு எழுத்துதான். நீங்கள் ஒன்றும் பண்ண வேண்டாம். மூடிய வாயை திறந்தால் அந்த எழுத்து தானாக வெளியிலே வந்து விழும். வெளியிலே வந்து விழும். மற்ற அத்தனை அச்ச அசரங்களுக்கும் கருவிகள் தேவை. நா, அண்ணம், உதடு, பல் என்கின்ற நாலு கருவியையும் போட்டு திருகி திருகிதான் மற்ற எழுத்துக்களை எடுக்கிறோம். அது பழக்கத்தில் வந்தபடியா அந்த கஷ்டம் நமக்கு தெரியுதில்லை. உண்மை. இப்ப ஈ என்று ஒரு எழுத்து சொல்லுகிறோமே ஈனா என்று அந்த ஈனா என்ற அட்சரம் எப்படி பிறக்கிறது தெரியுமா? தொல்காப்பியன் எழுத்து பிறப்பு என்று ஒரு பகுதி செய்து வைத்திருக்கிறான். ஒவ்வொரு அட்சரத்தையும் எப்படி உறுப்புக்களை நாங்கள் விரித்தோமானால் அந்த அட்சரம் பிறக்கிறது என்பதற்கு ஒரு பகுதி. இந்த தலைமுறை அந்த புஸ்தகத்தை தள்ளியே வச்சிட்டு ஆனந்தவிடன் குமுதம் படிச்சா போதும் என்று முடிவு பண்ணிவிட்டார். ஈனா என்ற எழுத்து எப்படி பிறக்கிறது தெரியுமா? பலபேர் இந்த பல்லை காட்ட வருவது ஈனா என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். என்று அப்படிய அல்ல. என்ற எழுத்து எப்படி வரும் என்று கேட்டால் அடி நாக்கை விரித்து கடைப்பல்லிலே முட்ட செய்தால் ஈ என்ற எழுத்து வரும். அடி நாவை விரிக்க செய்து கடைப்பல்லிலே அதை முட்ட செய்தோம்னால் ஈ என்ற எழுத்து வரும். இப்படி ஒவ்வொரு எழுத்துக்கும் இந்த உறுப்புக்களை திரிக்க திரிக்க எழுத்துக்கள் வரும். திரிவில்லா இல்லாமல் வருகிற ஒரு எழுத்து இருக்கிறது என்றால் எழுத்து ஓசை வடிவம் இருக்கிறது என்றால் அது அகரம்தான். இந்த அகரத்தை ஏன் கடவுளுக்கு உவமை சொன்னார்கள் என்றால் அது பெரிய ஆச்சரியமான விஷயம். இங்க பாருங்க சப்தம் என்பது எப்ப வரும் நான் கேட்கிறேன். சப்தம் வந்தால் தானே அச்சரங்கள் வரும். சப்தம் என்பது எப்போ வரும்? இரண்டு பொருள்கள் உராகிற பொழுதுதான் சப்தம் வரும். எப்பவும் ஒரு கூட்டத்தில கூட எப்ப எப்ப சப்தம் வரும் என்றால் ரெண்டு பேர் உராய்ந்தால் சப்தம் வரும். இப்ப யாரும் உராயவில்லை என்று தெரிகிறது. அதனால கூட்டத்தில் சத்தம் இல்லை. இப்ப பாருங்க இந்த இந்த கை இந்த கை ரெண்டும் தனித்தனியா இருக்கிறது. சத்தம் வந்ததா? இல்லை. உராய்ந்த உடனே சத்தம். உத எப்படி என்று கேட்பீர்களானால் திருக்குறளிலே முதல் குறளிலயே ஒரு பிழை இருக்கிறது தெரியுமா உங்களுக்கு? முதல் குறளிலேயே பிழை இருக்கிறது. ஓஹோ இவர் ஒன்னும் படிக்காதவர். திருவள்ளுவரிலயே குற்றம் சொல்ல புறப்பட்டாரோ என்று டாக்டர் பார்க்கிறார். நான் முதல் குற்றம் சொல்லுகிறேன். பிறகு விளக்கம் சொல்லுகிறேன். என்ன சொன்னார் திருவள்ளுவர்? >> அகர முதல எழுத்தெல்லாம் ஆதிபகவன் முதற்றே உலகு. எப்படி எழுத்துக்களுக்கு எல்லாவற்றுக்கும் அகரம் முதலாக இருக்கிறதோ அப்படி உலகத்துக்கு இறைவன் முதலாக இருக்கிறான். இதானே சொல்ல வந்த விஷயம். இப்ப நான் கேட்கிறேன். இங்க உவமை பிழைத்துவிட்டதே. உவமை பிழைத்துவிட்டதே. என்ன செய்திருக்க வேண்டும் திருவள்ளுவர்? தமிழ் எழுத்துக்கள் எல்லாவற்றுக்கும் அகரம் முதலாக இருப்பது போல உலகத்துக்கு இறைவன் முதலாக இருக்கிறார் என்று சொல்லி இருந்தால் தானே சரி. இவர் என்ன சொல்லுகிறார்? எழுத்தெல்லாம் அகர முதல என்கிறார். அப்படி என்றால் என்ன அர்த்தம்? உலகத்திலே இருக்கக்கூடிய எல்லா எழுத்துக்களுக்கும் அகரம்தான் முதல் என்று அர்த்தம். ஒத்துக்கொள்வார்களா? உலகத்தில இருக்கிற எந்த பாஷையினுடைய எந்த அட்சரத்துக்கும் ஆனாதான் முதல் எழுத்து என்று சொன்னால் ஒத்துக்கொள்வார்களா? திருவள்ளுவர் சொல்லுகிறாரே அப்படியானால் முதல் குரல் பிழையா? இல்லையா? ஆங்கிலேயன் ஒத்துக்கொள்வானா? அகரம் தான் முதல் எழுத்து என்று சொன்னால் ஒத்துக்கொள்வானா? அல்லது எவன்தான் ஒத்துக்கொள்வான்? நாங்கள் எங்கள் மொழியை உயர்த்துவதற்காக எழுத்தெல்லாம் அகர முதலை என்று சொல்ல முடியுமா என்று கேட்டால் அது பிழை அல்லவா என்று கேட்டால் பிழை இல்லை. சொல்ல முடியும். அதுதான் ஆனாவினுடைய சிறப்பு. உராய்வில்லாமல் ஒரு ஓசை நம் உடலுக்குள்ளே பிறக்கிறது. மூலாதாரத்திலே இருந்து அந்த ஓசை புறப்படுவதாக தத்துவ ஞானிகள் சொல்கிறார்கள். மூலாதாரத்திலே இருக்கிறதே அந்த மூலாதாரத்திலே இருக்கிற பொழுது அதற்கு சூக்குமை வாக்கு என்று பெயர். ரொம்ப கடுமை அருமையா சொன்னா பசிக்கிற நேரத்தில என்னும் பசியை கூட்டுறதா ஆகிடும். சும்மா லைட்டா சொல்றேன். மூலாதாரத்திலே சப்தம் இருக்கிறதே அதற்கு சூக்குமை வாக்கு என்று பெயர். அங்கே அதற்கு ஒளி வடிவமே கிடையாது. ஒளி வடிவம். நான் எப்பவும் சொல்றேன் பாருங்க. சப்தத்தை செரிவூட்டி கொண்டே போனால் ஒரு எல்லையிலே அந்த சப்தம் ஒளியாக மாறும். சப்தத்தை செறிவூட்டி கொண்டே போனால் நான் சொல்லுகிறது உங்களுக்கு புரிகிறதுஅல்லவா? எங்க ஊர் தமிழால ஏதாவது மாறுபாடு வந்தா கொஞ்சம் கஷ்டப்பட்டு புரிஞ்சுக்கங்க. சப்தத்தை சரிவாக்கி கொண்டே போனீர்கள் ஆனால் ஒரு எல்லையிலே அது நுணுக்க நுணுக்கம் பெறுகிற பொழுது ஒரு எல்லையிலே சப்த வடிவு கட்டுவிட்டு வெளிச்ச வடிவு வரும். ஒளிவடிவு வரும். ஒளிவடிவு கட்டு ஒளிவடிவு வரும். அந்த ஒளி வடிவிலே இருக்கக்கூடிய சப்தம் தான் நம் மூலாதாரத்திலே இருக்கிறது என்கிறார்கள் தத்துவஞானிகள். அது சற்று மேலேறி வருகிற பொழுது மேலே ஏறுகிற பொழுது எல்லாம் தரம் குறைகிறது. அதனாலதான் நான் அதிகம் மேடை ஏறக்கூடாது என்று நினைக்கிறேன். மேலே ஏறி வருகிறது. அந்த மூலாதாரத்தில் இருக்கிற சப்தம் தானாக மேலெழும்பி வருகிறது. தொப்புள் அடிக்கு வருகிற பொழுது அந்த வாக்குக்கு பைசந்தி வாக்கு என்று பெயர். இதெல்லாம் தத்துவச் சொற்கள். அங்கே என்ன ஆகிறது என்று கேட்டால் அங்கும் அது ஒளிவடிவம் கெட்டுவிடுகிறது. ஒளிவடிவத்துக்கு வந்துவிடுகிறது. ஆனால் அட்சர பிரிவில்லாத ஒளிவடிவம். அட்சர பிரிவில்லாத ஒளிவடிவம் எப்படி வரும் என்று கேட்டால் அதற்கு அவர்கள் சொல்லகிறார்கள். மயில் இருக்கிறதே மயிலில் எத்தனை வண்ணங்கள் இருக்கின்றன உங்கள் எல்லாருக்கும் தெரியும். ஆனால் மயில் முட்டையை உடைத்து பார்த்தால் அந்த வண்ணங்கள் தெரிகிறதா? ஆனால் அந்த வண்ணத்தினுடைய மூலங்கள் எல்லாம் எங்கே இருந்தது? முட்டையிலே தான் இருந்தது. அதுபோல பிரிகின்ற அச்சனங்களுடைய மூலத்தை எல்லாம் உட்கொண்டதாகிய சப்தத்திற்கு பைசந்தி வாக்கு என்று பெயர். அது தொப்புள்ல இருக்கும். இன்னும் மேலே எழும்பி இங்க வரும் நெஞ்சிலே இங்க வருகிற பொழுதுதான் அட்சரங்கள் பிரிகின்றன. இதுக்கு மத்திமை வாக்கு என்று பெயர். இந்த இடத்தில் வர பொழுது அட்சரங்கள் பிரிய தொடங்கி விடுகிறது. அதனால்தான் இப்போ கூட இப்ப நான் சொல்லுகிறேன். சுப்பிரமணியம். இந்த பெயரை நான் சொன்னேன். எழுத்து கூட்டு சுரமணியம் எடுத்து கூட்டிவிட்டோம். இப்ப வாத்தியாருக்கு தூக்கம் வந்துவிட்டது. ஆசிரியர் சொல்றார் டேய் எல்லாரும் சத்தம் போட்டு படிக்காம மனதுக்குள்ளே படியுங்கடா என்று சொல்கிறார். இப்ப மாணவன் என்ன செய்கிறான்? அதே சூ பீர மணியத்தை மனதுக்குள்ளே சொல்லுகிறான். அட்சரம் இங்கே வந்துவிடுகிறது. இதுவரைக்கும் அட்சரத்தை சப்தம் இல்லாமல் சொல்ல முடியும். அதற்கு கீழே அந்த சப்த வடிவமே இல்லாமல் சொல்ல முடியும். அதனால்தான் உண்மையான மந்திரங்கள் எப்பொழுது சப்தம் இல்லாமல் உச்சரிக்கப்படுகிறதோ அப்பொழுது மகிமை பெறுகின்றன. ஓசை இல்லாத சப்த மந்திரத்துக்கு அசபா மந்திரம் என்று பெயர். அவ்வையார் குறிப்பிடுகிறார். இப்போ இந்த சப்தம் எல்லாம் அப்படி மெல்ல மெல்ல மேலே எறும்பி வெளியிலே வருகிறதே வருகிற பொழுது எந்த கருவி விகாரமும் இல்லை. பல்லுக்கு வேலை இல்லை. அண்ணத்துக்கு வேலை இல்லை. நாக்குக்கு வேலை இல்லை. உதட்டுக்கு வேலை. ஆனா சொல்லி கொடுப்பது போல சுலபமான வேலை. ஆசிரியருக்கு வேறு எதுவும் இல்லை. இதை போய் முதல் சொல்லாதேன்ு ஒருத்தன் சொன்னா அவனை நான் முட்டாள் என்று சொன்னா தப்பா? இங்க பாருங்க வேற ஒன்னும் வேணாம். ஆனாவை சொல்லி கொடுத்துட்டா வரிவடிவம் பூரண எழுத்தினுடைய வரிவடிவம் வந்துவிடும். ஆனாவை சொல்லிக் கொடுக்கிற ஒளிவடிவம் இருக்கிற ரொம்ப சுலவம். பிள்ளைகளே எல்லாரும் வாயை மூடுங்கள். பிள்ளைகள் வாய் மூடுவார்கள். தயவுசெய்து எல்லாரும் இப்பொழுது வாயை திறவுங்கள். மூடின வாய பிள்ளை எல்லாம் ஆனா பிறந்து எங்கேயாவது இவ்வளவு சுலபமா ஒரு எழுத்து சொல்லி கொடுக்க முடியுமா? ஒன்னும் பண்ண வேண்டாம். மூடின வாயை திறவுங்கள். ஆ என்ற ஓசை பிறக்கும். தொல்காப்பியன் சொன்னான் வாய் திறக்க பிறக்கிற ஓசை அல்ல. வாயை திறப்பித்துட்டு பிறக்கிற ஓசை அல்ல. பல பேருக்கு அந்த சூத்திரம் விகழ்பமே புரியவில்லை. நன்னூலார் சொல்லுகிறார் வாய் திறக்க பிறக்கிற ஓசை என்கிறார். தொல்காப்பியர் சொல்கிறார் வாயை திறப்பித்து பிறக்கிற ஓசை என்கிறார். அதாவது வாய் திறக்க இந்த ஓசை வரவில்லையாம். இந்த ஓசை வந்ததாலே வாய் திறந்ததாம். அப்படியானால் என்ன தெரியுமா? இயற்கையிலே இயல்பாக உள்ள ஒரே சப்தம் அகர சப்தம்தான் நம் உடம்புக்குள்ளே. இதை போட்டு திருக திருக திருக. இப்ப மாவை பிசைந்துவிட்டு தட்டினால் ரொட்டி கரைச்சு பார்த்தால் தோசை அவிச்ச எடுத்தால் இட்லி. ஒரே மாவை தான இப்படி வேற வேற வேஷம் பண்ணி எடுக்கிறோம். ஆ என்கின்ற ஒரு எழுத்துதான் உலகத்திலே எழுத்து. உடம்புக்குள்ள இருக்கிற இயற்கை சத்தம். அதை திருக திருக வேற வேற சத்தங்கள் வருகின்றன. அது நம் மொழியில் மட்டுமில்லை. ஆங்கிலம் ஆகட்டும். தெலுங்கஆகட்டும். எந்த மொழியில் ஒரு எழுத்து வருகிறது என்றாலும் அந்த எழுத்துக்கு முதலா முதலாக இருப்பது அகர சத்தம் என்ற படியால் தான் எழுத்தெல்லாம் அகர முதலே என்றார் திருவள்ளுவர். எத்தனை பேர் இதை புரிந்து கொண்டோம்? இதுல இன்னொரு சிறப்பு இருக்கிறது. தமிழ் படிச்சவர்கள் கூட பொருள் சொல்ல சொன்னால் என்ன சொல்கிறார்கள்? உலகத்திற்கு இறைவன் முதலாக இருக்கிறான் என்றால் முன்னுக்கு இருக்கிறான் என்ற அர்த்தத்திலே பொருள் சொல்கிறார்கள். அதுபோல எழுத்துக்களுக்கு ஆனா முதலாவதாக இருக்கிறது என்றால் இந்த வரிசையிலே ஃஸ்ட் அப்படி சொல்லுகிறார்கள். அப்படி இல்லை. முதல் என்பதற்கு முன் என்பது ஒரு அர்த்தம். இன்னொரு அர்த்தமும் இருக்கிறது. அதாவது அதுதான் மூலம் என்று அர்த்தம். இவன் இந்த முதலை வைத்து வியாபாரம் செய்தான் என்கிறோமே அங்கே முதல் என்பதற்கு என்ன அர்த்தம்? அதுதான் வியாபாரம் செய்வதற்கு அடிப்படை. அட்சரங்களுக்கு எல்லா எழுத்துக்கும் ஆனா முதலாக இருக்கிறது என்றால் முன்னே இருக்கிறது என்று அர்த்தம்ல்ல. அதுதான் அந்த அட்சரமாகிய வியாபாரம் நடப்பதற்கு முதலாக இருக்கிறது என்று அர்த்தம். எழுத்திலேயே இத்தனை சூக்குமம் வைத்தவன் தமிழன். இவனுக்கு இன்னொருவன் செம்மொழி தகுதி கொடுக்கிறான். பிச்சையேற்று வாங்குகிறோம். இதனால்தான் இதை எனக்கு சிறப்பு என்று சொல்ல தெரியவில்லை. நீங்கள் இப்படியே கேட்கப்படாது. ஏன்னா ஒரு வகுப்பில இருந்து கேட்கிற மாதிரி ஆர்வமா கேட்கிறீர்கள். இப்படி கேட்டா எங்களுக்கு இன்னும் சொல்ல வேணும் போல உணர்ச்சி வந்து கொண்டே இருக்குன்னு டைம் நேரம் போயிடும். என்ன ஒரு விஷயம் இந்த அட்சரத்திலே சொல்றோம். ஒரு விஷயம் சொல்றேன் பாருங்க. தமிழிலே அகேனம் என்று ஒரு எழுத்து உண்டு. ஆயுத எழுத்து. ஆயுத எழுத்து என்கிறோம். சில பேர் அதை ஆயுத எழுத்து என்கிறான். அதே தவறு. ஆயுத எழுத்து. இன்னா போடணும். நடுவிலே ஆயுதம் வேற. ஆயுதம் வேற. ஆயுத எழுத்து என்று ஒரு அகேனம் என்ற ஒரு எழுத்து வச்சிருக்கிறோம். உயிரெழுத்தினுடைய கடைசியிலே சொல்லுவது. ஆனால் அது உயிரெழுத்து இல்லை. தமிழ் எழுத்துக்களை மூன்றாக பிரித்தார்கள். இயற்கையோடு நம் தமிழ் எவ்வளவு ஒன்றி இருக்கிறது என்பதற்கு ஒரு சான்று சொல்லுகிறேன். தமிழ் எழுத்துக்களை மூன்று விதமாக பிரித்தார்கள். உயிரெழுத்து ஒன்று. அடுத்தது மெய்யெழுத்து ஒன்று. அதிலேயே எத்தனையோ நுட்பம் உண்டு. சொல்ல நேரமில்லை. அதை விட்டுவிடுகிறேன். இன்னொரு முறைக்கு என்னை கூப்பிடாமலா இருக்க போகிறீர்கள்? அப்ப பார்த்து கொள்ளலாம். இந்த உயிரெழுத்து மெய்யெழுத்து ரெண்டுக்கும் ஒரு பெயர் வைத்தார்கள் தமிழ் இலக்கண ஆசிரியர்கள். என்ன வைத்தார்கள்? உயிரெழுத்தை ஆண் எழுத்து என்று சொன்னார். இந்த ஆணா ஆவன்னா 12 எழுத்துக்கள் இருக்கிறதே அதற்கு ஆண் எழுத்து என்று பெயர். மெய்யெழுத்து 18 இருக்கிறதே இக்கு என்று போடுகிறோமே அந்த மெய்யெழுத்து அதற்கு பெண்ணெழுத்து என்று பெயர். ஆண் எழுத்து 12. பெண் எழுத்து 18. எப்பவும் உலகத்திலே ஆணை விட பெண்கள் தான் அதிகம். அது அட்சரத்திலேயே தமிழன் காட்டினான். ஆகவே நான் எப்பவும் சொல்றேன் வாணியம்பாடி மக்களுக்கு அதிகப்படியாக இருக்கிற நீங்கள் சபையிலும் பெண்கள் தான் அதிகம் என்பதை அடுத்தடுத்த விழாக்களில்ே நிரூபிக்க வேண்டும். இப்போ ஆண் எழுத்து 12. பெண் எழுத்து 18. இதை சொல்லிட்டு நிறுத்தி இருந்தா தமிழ் தமிழே இல்லை. தூக்கி போடுறான் எவனாவது செம்மொழி பட்டம் கொடுறான்ு நான் சொல்லி இருப்பேன். அதுக்கு அடுத்தது என்ன பண்ணினார்கள்? அகேனம் என்று ஒரு எழுத்தை உண்டாக்கி அதற்கு அலி எழுத்து என்று பெயர் வைத்தார்கள். இன்றைக்குதான் திருநங்கை திருநங்கை என்று புதுச் சொற்கள் கொண்டு வந்து அலிப்பிறப்புகள் பற்றி ஆராய தொடங்கி இருக்கிறோம். தமிழன் அந்த பிறப்பு இயற்கையினுடைய ஒரு வடிவம் என்று கண்டு அட்சரத்திலேயே அதை கொண்டு வந்து புருத்தினான். அது என்ன அலி எழுத்து? அதுக்கே அலி எழுத்து என்று பெயர் வைக்க வேண்டும். என்ன ஆச்சரியம் என்று கேட்டால் இந்த ஆண் எழுத்து இருக்கிறதே உயிரெழுத்து இருக்கிறதே அதனுடைய குற்றெழுத்துக்கு ஒரு மாத்திரை. மெய்ெழுத்துக்கு அரை மாத்திரை. இந்த மெய்யெழுத்து என்பது உங்களுக்கு தெரியும் அல்லவா? இக்கா இச்சா இட்டா எல்லாத்துக்கும் மேல புள்ளி வச்சிருப்பார்கள். நான் கூட கிண்டலாக சொல்வதுண்டு அது ஏன் பெண்ணெழுத்து என்றால் எல்லாம் பொட்டு வைத்துக் கொண்டிருக்கிறது. மெய்ெழுத்துக்கு எல்லாத்துக்கும் மேல புள்ளி இருக்கிறது. அப்போ தமிழ் பெண்கள் பொட்டு வைக்க வேண்டும் என்பதை அப்பவே எழுத்து சொல்லி தந்துது நமக்கு. பொட்டு வைத்திருக்கிற எழுத்துக்கள் எல்லா எழுத்துக்களும் பெண் எழுத்துக்கள். இவர்கள் ஆண் எழுத்துக்கள். இப்ப என்ன இதுக்கு ஒரு மாத்திரை சவுண்ட்ல ஒரு மாத்திரை. நெட்டெழுத்து ரெண்டு மாத்திரை. நான் அடிப்படையில உண்மையிலே நெட்டெழுத்து என்பது குற்றெழுத்தை நீட்டியதுதானே. அது ஒரு மாத்திரை. மற்ற எழுத்துகளுக்கு அரை மாத்திரை. பெண் எழுத்துகளுக்கு. இந்த அகேனத்துக்கு மட்டும் என்ன சிறப்பு என்று கேட்டால் கவிதையாக அதை பயன்படுத்துகிற பொழுது சில வேளைகளிலே அதற்கு ஒரு மாத்திரை வரும். சில வேளைகளிலே அரை மாத்திரை வரும். ஒரு மாத்திரை வருகிற பொழுது அது ஆண் எழுத்து. அரை மாத்திரை வருகிற பொழுது பெண் எழுத்து. ஆணாகவும் பெண்ணாகவும் இருக்கிற படியால் அது அலி எழுத்து. இதுல பாருங்க அவன் பண்ணி வச்சிருக்கிற கெட்டித்தனம். இது சொன்னா முடியாதுயா. தமிழ் பெருமை சொல்லி முடிகிறதா? ஒன்று சொல்லறேன் பாருங்க. வரிவடிவம் அமைக்கிற பொழுது எல்லாத்துக்கும் ஒரு வரிவடிவம் கொடுத்தார்கள். அகனத்துக்கு என்ன வரிவடிவம்ன்றா இப்படி ஒரு புள்ளி. இப்படி ஒரு புள்ளி. இப்படி ஒரு புள்ளி. மூன்று புள்ளி. என்ன அர்த்தம்? ஆண் பெண் அலி என்று அர்த்தம். அதுமட்டுமில்லே இந்த அலிப்பிறவி இருக்கிறதே அதில் ஒரு ஆச்சரியம் என்னவென்றால் அது ஆணா என்று கேட்டால் ஆணும்தான். பெண்ணா என்று கேட்டால் பெண்ணும் தான். ஆணாகவும் பெண்ணாகவும் இருக்கிறபடியா அலியும் தான். மூன்று பார்வையும் அந்த பாத்திரத்திலே பார்க்க முடியும். இந்த எழுத்து இருக்கிறதே மத்த எந்த எழுத்தையும் நீங்க திருப்பினா எழுத்து வடிவம் மாறிரும். கானாவை இப்படி திருப்புங்க. எழுத்து வடிவம் மாறிடும். இந்த அகேனம் இருக்கிறதே நீங்க எப்படி திருப்பினாலும் அதே வடிவம் வந்து கொண்டிருக்கும். என்னவென்றால் எந்த திசையிலும் அதற்கு ஒரு பார்வை உண்டு என்பதை காட்ட முண்டு. புள்ளி வைத்து அகேனத்தை அலி எழுத்தாக ஆக்கினான் தமிழன். இயற்கையோடு எவ்வளவு ஒன்றி இருக்கிறான் தெரியுமா? அட்சரத்திலேயே பலம் கொண்டவர்கள் நாங்கள். மொழியினுடைய எழுத்து வடிவிலேயே பொருள் கொண்டவர்கள் நாங்கள். நான் மூன்று பலம் பொருந்திய விஷயம் ஒரு மொழிக்கு இருக்கிறது என்று சொன்னேனே அதனுடைய முதல் நிலை அட்சரத்தை விட்டு விடுகிறேன். முதல் நிலை சொல்லாக மொழி பலம் பெற்றிருக்க வேண்டும். சொல்லாக மொழி பலம் பெற்றிருக்க வேண்டும். அது ரொம்ப முதல் நிலைதான். முதல்படிதான். இன்றைக்கு தமிழர்கள் எல்லாம் அதிலேயே மனம் செலுத்தி தங்கள் வாழ்க்கையை வீணாக்கி பகை பரப்புகிறார்கள். சொல் என்பது முதல்படிதான். மொழியினுடைய ஏற்றத்திலே சொல் என்பது முதல்படிதான். சொல் என்ன பயன் செய்யும் என்று கேட்டால் சொல்லுக்கு என்ன வேலை என்று கேட்டால் பொருளை கொண்டு வந்து உங்கள் செவிக்கு தருவதோடு சொல்லினுடைய வேலை முடிந்து போய்விடும். திருப்பி நினைச்சு பாருங்கள். அப்ப சொல் எதற்கு தேவை என்றால் பொருளை காவி வருகிற ஒரு தட்டம் அவ்வளவு அவ்வளவுதான். ஆனால் உயர்ந்த பொருளை தாங்க வேண்டுமானால் அந்த சொல்லாகிய தாம்பாளமே பலம் பொருந்தியதாக இருக்க வேண்டும். தமிழ் உயர் பொருளை காவுகிற ஒரு மொழி என்ற படியால் அதனுடைய சொல்லே பலம் பெற்று கிடந்தது. எப்பவும் நான் சொல்றேன் பாருங்க சொல்லுக்கு வேலை நம்ம காது வரைக்கும் தான். இன்றைக்கு என்ன ஆயிற்று என்று கேட்டால் நீங்க தயவு செய்து என்னை மன்னித்து விடுங்கள். நான் எந்த கட்சியும் சார்பு பட்டவன் இல்லை. திருக்குறளிலே தமிழ் என்ற சொல்லே இல்லை. உங்களுக்கு தெரியுமா? திருக்குறளிலே தமிழ் என்ற சொல்லே இல்லை. ஆனால் தமிழ் என்று ஒரு நூல் சொல் என்றால் திருக்குறளை தான் நீங்கள் சொல்ல வேண்டும். பின்னாளிலே தமிழ் உணர்ச்சி மட்டும் பரப்பப்பட்ட பிறகு நான் எந்த கட்சியையும் சொல்லவில்லை. பொதுப்பட தமிழ் தமிழ் என்று உணர்ச்சியை சொன்ன பிறகு நாங்கள் என்ன ஆகிவிட்டோம் என்று கேட்டால் தமிழ் என்று சொல்வதுதான் தமிழ் பற்று என்று ஆக்கிவிட்டோம். தமிழ் என்று சொல்வதில்லை. தமிழாக வாழ்வதுதான் தமிழ் பற்று. அதனாலதான் பின்னுக்கு தமிழன்கள் தமிழுக்கு உயிருக்கு நேர் அந்த தமிழின்ப தமிழின்ப உயிருக்கு நேர் என்று தமிழ் தமிழ் என்று சொல்வதிலேயே ஒரு வெறியூட்டி விட்டோம். அந்த வெறி என்ன செய்தது என்றால் மற்றைய மொழிகளை எல்லாம் நமக்கு பகைமொழியாக நம்மை பார்க்க வைத்தது. உலகத்தை சிதைத்தது. மொழி தோன்றியதனுடைய அடிப்படையே என்ன? என் கருத்தை உங்களோடு நான் பகிர்ந்து கொள்ள வேண்டும். அது முடியவில்லை. ஆரம்ப மனிதனுக்கு அது முடியவில்லை. பகிர்வதற்கு ஒரு மொழி என்ற கருவியை உண்டாக்கினான். நான் உன்னை புரிந்து கொள்வதற்கும் நீ என்னை புரிந்து கொள்வதற்கும் உண்டானதுதான் மொழி. அந்த மொழி மேலே அளவுக்கு அதிகமாக பற்று வைத்து நானும் நீயும் பகை கொள்கிறோம் என்றால் அந்த மூல ஆசிரியர்களுக்கு நாம் பகை செய்கிறோம் என்று அல்லவா அர்த்தம். அதான் அந்த மொழி எங்க எதுவரைக்கும் வச்சிருக்க வேண்டும்? மொழி பெற்று செவியிலே பொருள் வந்துவிட்டதா? மொழியை விட்டுடு. ஒரு இடம் சொல்றேன் பாருங்க. ராமாயணத்திலே தாடகை மேலே ராமன் அம்பு போடுகிறான். எப்பேர்பட்ட புலவர்கள் நமக்கு இருந்திருக்கிறார்கள் என்பதற்கு சான்று சொல்கிறேன். காடகை மேலே முதல் அம்பு போடுகிறான். இந்த அம்புக்கு ஒரு உவமை சொல்ல வேண்டும். முதல் ராமனுடைய போர். இந்த அம்பு வேகமாக போகிறது. இதற்கு என்ன உவமை சொல்லலாம் என்று கம்பன் நினைக்கிறான். மின்னல் போல என்று சொல்லலாமா? வாழைப்பழத்தில் ஊசி போல என்று சொல்லலாமா? நெருப்பு போல என்று சொல்லலாமா? அதைவிட வேகமாக சொல்ல வேண்டும் என்று நினைத்த கம்பன் சொன்னான். அவன் போட்ட அம்பினுடைய வேகம் எப்படி இருந்தது என்றால் சொல் போல இருந்தது என்றான். இப்ப நான் சொல் போல என்று இங்க சொல்லவே உங்க காதுக்கு அது வந்துருச்சு. அந்த வேகத்தில வேற ஏதாவது வருமா? அதனால திருவள்ளுவன் கம்பன் சொன்னான். சொல்லக்கும் கடிய வேக சுடுசரம். அந்த அம்பு போகிற பொழுது அது உள்ளே அவளுடைய தாடைகைக்குள்ளே நுழைகிற பொழுது கம்பன் சொன்ன உவமை சொல். இப்ப நான் கம்பராமாயணம் சொற்பொழிவுக்கு வரவில்லை. வேற விஷயம் சொல்றேன். அது மங்கை கரிசி முடிச்சிருச்சு. நான் வேற விஷயம் சொல்றேன். இப்ப அம்பாக சொல் போய் குத்துச்சே அப்ப சொல் போல இருந்தது என்றான். அம்பன் அம்பு என்றான் கம்பன். இப்போ அந்த அம்பு தாடகை துளைத்து வெளியிலே போனது. இதுக்கு ஒரு உவமை சொல்ல வேண்டும் என்று நினைத்தான் கம்பன். என்ன சொன்னான் தெரியுமா? பொருள் என போயிற்றன்றேன். உள்ளே வரும் வரைக்கும் தான் சொல். வெளியிலே போகிற பொழுது பொருள் வார்த்தைகளை காது வரைக்கும் வாங்கு. உள்ளே பொருளை வாங்கு. எப்பவும் நான் சொல்லுகிறேன். அந்த பொருள் அளவிலும் புதுமை செய்தவன் தமிழன். பொருளுக்கு இலக்கணம் செய்தான். அம்மா நினைக்க முடியுமா? மெய்ப்பாடுகள் என்று உடல் உணர்ச்சி அசைவுகளை எல்லாம் ஆராய்ச்சி பண்ணி சொல்லி இருக்கிறானே நினைக்க முடியுமா? பொருளுக்கு இலக்கணம் செய்தான். சரி பொருளுக்கு அடுத்த நிலை என்ன? இன்றைக்கு தமிழர்கள் செய்கிற குற்ற பெரும் பிழையை சுட்டி காட்டுவதுதான் இந்த முன்னுரையிலே என்னுடைய நோக்கம். சொல்லாக இருந்து எழுத்தாக இருந்து சொல்லாக மாறும் மொழி. பிறகு அது பொருளை கொண்டு வந்து சேர்க்கும். பொருள் என்ன செய்? அதோடு கூட மொழியினுடைய தேவை முடியவில்லை. பொருள் ஒரு உணர்வை உண்டாக்க வேண்டும். அதுதான் மொழியினுடைய கடைசி நிலை. சொல்லாக காதிலே விழுந்து ஒரு பொருளை உள்ளே அனுப்பி அந்த பொருள் ஒரு உணர்வு தர வேண்டும். அந்த உணர்வுதான் கடைசி நிலை. இங்க பாருங்க அம்மா என்ற ஒரு வார்த்தை சொன்னேனே அது சொல். அம்மா என்றதும் என் தாய் நினைவுக்கு வருகிறாளே அது பொருள். அந்த தாய் நினைவு வந்த உடனே அவளுடைய தாய்மை உணர்ச்சி என் மனதை தாக்குகிறதே அது உணர்வு. அந்த தாய்மை உணர்ச்சி வந்துவிட்டால் அம்மா என்ற பொருளும் தேவையில்லை. அம்மா என்ற சொல்லும் தேவையில்லை. உணர்வை தொட்டவனுக்கு சொல்லும் பொருளும் இரண்டாம் பட்சம்தான். இன்றைக்கு தமிழர்கள் சொல்லையும் பொருளையும் பிடித்துக் கொண்டிருக்கிறார்களே தவிர உணர்வை கைவிட்டு விட்டார்கள். அதைத்தான் நான் சுட்டி காட்டுகிறேன். உணர்வை தொட்டுவிட்டால் சொல்லையும் பொருளையும் கைவிடுங்கள். ஒரு தப்பும் இல்லை. உணர்வை தொடுங்கள். இன்னும் சொல்லுகிறேன். சொல் என்ற எல்லையிலே தான் பிரிவுகள் இருக்கும். சொல் என்ற எல்லையிலே தான் பிரிவுகள் வரும். ரொம்ப கீழ் நிலையில தானே பாருங்க. எப்பவும் பிரிவு யார் சண்டை பிடிக்கிறான்? அறிவு குறைஞ்சவன்தான் சண்டை பிடிக்கிறான். இப்ப மூன்று நிலை சொன்னேனே சொல், பொருள், உணர்வு என்று மூன்று நிலை சொன்னேனே. சொல் என்ற நிலையிலே தமிழர்கள் நிக்கு மட்டும்தான் பகை. இங்க பாருங்க நான் அம்மா என்கிறேன். அவள் உம்மா என்கிறாள். இவள் மம்மி என்கிறாள். இந்த சொல்லுக்குள்ளே அது ஒரு அம்மா, இது ஒரு அம்மா, இது ஒரு அம்மா என்று பேதங்கள் வந்துவிடுகின்றன. பகை வந்துவிடுகிறது. இப்ப பாருங்க சொல் வந்தால் சண்டை. அம்மா என்ற பொருளுக்கு போவோம். இப்போ தாய்மை என்ற வடிவம் வந்துவிட்டது. இந்த சண்டை அங்க இல்லை. ஆனால் அங்கு கூட ஒரு அளவு சண்டை இருக்கிறது. இந்த அம்மா சேலை உடுத்திருப்பா. அந்த அம்மா மொட்டாக்கு போட்ுருப்பான்ு ஒரு பேதம் வருகிறது. பொருளிலே கூட கொஞ்சம் பேதம் உண்டு. சொல்லளவு பேதம் இல்லை. ஆனால் உணர்வு என்ற தாய்மைக்கு போங்கள். அம்மா என்று சொல்ல வருகிற தாய்மை உணர்வும், உம்மா என்று சொல்ல வருகிற தாய்மை உணர்வும், மம்மி என்று சொல்ல வருகிற தாய்மை உணர்வுக்குள்ளே பேதம் உண்டா? உணர்வை மொழியாலே மனிதன் தொட்டுவிட்டால் உலகெலாம் என்ற ஒருமைப்பாடு உருவாகும். அதனாலேதான் நம்முடைய குமரகுருவர சுவாமிகள் சரஸ்வதியை வேண்டுகிற பொழுது கேட்டார். பாட்டும் பொருளும் பொருளால் பொருந்தும் பயனும் என்பால் கூட்டும்படி எழுதைதல் தாயே. மொழியைதா அந்த மொழியினாலே பொருளை தா. அந்த பொருளினாலே உணர்வை தா என்று கேட்கிற நிலை இருக்கிறதே தமிழன் தொட்ட உச்சம். அந்த எல்லையிலே சொல்ல எவ்வளவோ இருந்தாலும் சொல்லிலும் தமிழன் எங்கயோ இருந்தான். பொருளிலும் எங்கேயோ இருந்தான். உணர்விலே உலகம் முழுவதையும் ஒன்றாக பார்த்தான். இன்றைக்குத்தான் நவீன விஞ்ஞான உலகம் தாவரங்களையும் விலங்குகளையும் பற்றி கவலைப்படுகிறது. அதற்கும்தான் இந்த உலகம் என்று சொல்ல வருகிறது. என்றைக்கோ தமிழன் சொல்லிவிட்டான். இத்தகைய செம்மொழி தகுதி பெற்ற தமிழன் தான் மற்றவர்களுக்கு செம்மொழி தகுதி வழங்க வேண்டும் என்கின்றதுதான் என்னுடைய முடிவு என்பதை சொல்லி தலைமை உரையை நிறைவு செய்கிறேன். >> இந்த தகவல் உங்களுக்கு பிடிச்சிருந்தா லைக் பண்ணுங்க. உங்க பிரண்ட்ஸ்க்கு ஷேர் பண்ணுங்க. மறக்காம எங்க சேனலுக்கு சப்ஸ்கிரைப் பண்ணுங்க.