📱

Get Our Mobile App

Take your business learning on the go!

Download on the App StoreGet it on Google Play

Revelation Bible Study - Part 29

Antantulla Appam1:03:00

Transcription

[இசை] [இசை] ஆ [இசை] அல்லேலூயா. புதிய அதிகாரத்துக்குள்ளே செல்லுகிறோம். சற்று ஆழமான, சற்று உபதேசங்களிலே சிந்திக்கக்கூடிய ஒரு அதிகாரம். ஒன்று முதல் ஐந்து வசனங்களை நான் வாசிக்கிறேன். வெளிப்படுத்தின விசேஷம் 14 ஆம் அதிகாரம் ஒன்று முதல் ஐந்து வசனங்கள். பின்பு நான் பார்த்தபோது, இதோ சீயோன் மலையின் மேல் ஆட்டுக்குட்டியானவரையும், அவரோடு கூட பிதாவின் நாமம் தங்கள் நெற்றிகளிலே எழுதப்பட்டிருந்த லட்சத்து 44,000 பேரையும் நிற்கக் கண்டேன். அல்லாமலும் பெருவெள்ள இறைச்சல் போலவும், பலத்த இடிமுழக்கம் போலவும் ஒரு சத்தம் வானத்திலிருந்து உண்டாகக் கேட்டேன். நான் கேட்ட சத்தம் சுரமண்டலக்காரர் தங்கள் சுரமண்டலங்களை வாசிக்கிற ஓசையைப் போல இருந்தது. அவர்கள் சிங்காசனத்துக்கு முன்பாகவும், நான்கு ஜீவன்களுக்கு முன்பாகவும், மூப்பர்களுக்கு முன்பாகவும் புது பாட்டைப் பாடினார்கள். அந்த பாட்டு பூமியிலிருந்து மீட்டுக்கொள்ளப்பட்ட லட்சத்து 44,000 பேரை அல்லாமல் வேறு ஒருவரும் கற்றுக்கொள்ளக் கூடாத இருந்தது. ஸ்திரீகளால் தங்களைக் கறைப்படுத்தாதவர்கள் இவர்களே. கற்புள்ளவர்கள் இவர்களே. ஆட்டுக்குட்டியானவர் எங்கே போனாலும் அவரைப் பின்பற்றுகிறவர்கள் இவர்களே. இவர்கள் மனுஷரில் நின்று தேவனுக்கும் ஆட்டுக்குட்டியானவருக்கும் முதற்பலனாக மீட்டுக்கொள்ளப்பட்டவர்கள். இவருடைய வாயிலே கபடம் காணப்படுவதில்லை. இவர்கள் தேவனுடைய சிங்காசனத்துக்கு முன்பாக மாசில்லாதவர்களாய் இருக்கிறார்கள்.

பரலோகத்திலே ஒரு ஒப்பு உயர்வற்ற, ஒரு அருமையான காட்சி காணப்படுகிறது. சீயோன் என்று சொல்லப்பட்ட அந்த மலையின் மேலே ஆட்டுக்குட்டியானவரோடு கூட 144,000 பேர்களை நிற்கக் கண்டேன். பரலோகத்திலே கர்த்தரோடு நிற்கிற ஒரு பெரிய கூட்டத்தார். வெளிப்படுத்தின விசேஷம் ஏழாம் அதிகாரத்திலும் கூட வெள்ளங்கி தரித்த ஒரு பெரிய கூட்டத்தார் ஆண்டவருடைய சிங்காசனத்துக்கு முன்பாக நிற்கிறவர்கள். யார் இவர்கள்? இவர்கள் எங்கே இருந்து வந்தவர்கள்? ஆட்டுக்குட்டியின் இரத்தத்தாலே தங்களுடைய அங்கிகளைத் தோய்த்து வெளுத்தவர்கள். முதற்பலனாய் மீட்டுக் கொள்ளப்பட்டவர்கள். இங்கே இன்னொரு கூட்டத்தாரைப் பார்க்கிறோம். இந்த 14 ஆம் அதிகாரத்தில் அவருடைய எண்ணிக்கை வேதம் சொல்லுகிறது. பல இடங்களில் வந்த பரிசுத்தவான்கள், பரலோகத்தில் நிற்கிற பல பகுதிகளைச் சொல்லும்போது எண்ணிக்கை சொல்லப்படவில்லை. ஜனங்கள் பரலோகத்தில் இடுகிற ஆரவாரத்தைக் கேட்டேன். ஜனங்கள் குருத்தோலை பிடித்து நிற்கிறதைக் கண்டேன். திரளான ஜனங்கள் வெள்ளங்கி உடுத்து கர்த்தருக்கு முன்பாகப் பாடினதைக் கண்டேன். ஆனால் இந்த சீயோன் மலையிலே 144,000 பேர் நிற்கிறதாக அவர் காண்கிறார்.

இந்த வெளிப்படுத்தல் 14 ஆம் அதிகாரம் பரலோகத்திலே சில காட்சிகளையும், பூமியிலே சில காட்சிகளையும் நமக்குக் கொண்டு வருகிறது. இந்த 14 ஆம் அதிகாரத்தின் பின்பகுதி ஐந்து தேவதூதர்கள் பேசுகிறதைக் காக்கும். முதல் தேவதூதன் ஆறாம், ஏழாம் வசனத்தில் பேசுகிறதையும், இரண்டாம் தூதன் எட்டாம் வசனத்தில் பேசுகிறதையும், மூன்றாம் தூதன் ஒன்பதாம் வசனம் முதல் 12 ஆம் வசனம் வரை பேசுகிறதையும், நான்காம் தூதன் 14, 15, 16 ஆம் வசனங்களில் பேசுகிறதையும், ஐந்தாம் தேவதூதன் 17 ஆம் வசனத்திலிருந்து 20 வரை பேசுகிறதையும் நாம் காண்கிறோம். இதை ஐந்து பகுதிகளாக நாம் பிரிக்கலாம். முதல் பகுதிதான் வெளிப்படுத்தல் 14 ஆம் அதிகாரம் முதலாம் வசனத்திலிருந்து ஐந்தாம் வசனம் வரையிலும். இங்கே இவ்விதமாய் ஆரம்பிக்கிறார்: பின்பு நான் பார்த்தபோது, இதோ சீயோன் மலையின் மேல்... இது பூமிக்குரிய சீயோன் அல்ல; பரலோக சீயோனைக் குறித்துச் சொல்லுகிறது. பூமியிலே ஒரு சீயோனைக் குறித்து வாசிக்கிறோம். எருசலேமோடு இணைந்த ஒரு பகுதிதான். இரட்டை நகரங்கள் தான் சீயோனும் எருசலேமும். எப்படி ஹைதராபாத்-செகண்ட்ராபாத் ஒன்றாய் இணைக்கப்பட்டிருக்கிறதோ, எப்படி திருநெல்வேலியும் பாலைக்கோட்டையும் ஒன்றாய் இணைக்கப்பட்டிருக்கிறதோ, அதுபோல தான் எருசலேமிலே ஒரு பகுதிதான் சீயோன். சீயோன் என்பது ஒரு மலைப்பகுதியான ஒரு இடம்.

சீயோனிலே ஒரு பகுதி. இஸ்ரவேல் ஜனங்கள் கானானைச் சுதந்தரித்த போது எருசலேமை மேற்கொண்டார்கள். ஆனால் சீயோன் மிக உயர்ந்த மலை, கோட்டை நிறைந்த இடமாய் இருந்ததினாலே யோசுவா அதைப் பிடிக்க முடியவில்லை. எபூசியர் என்ற ஒரு ஜனக்கூட்டம் அங்கே இருந்தது. யோசுவாவின் காலத்திலிருந்து, நியாயாதிபதிகளின் காலத்திலிருந்து, சவுல் காலத்தில் கூட யாரும் அந்த சீயோன் கோட்டையைப் பிடிக்கவில்லை. எருசலேமில் ஒரு பகுதிதான். ஆனால் தாவீது அதைப் பிடித்தார். அது தாவீதின் நகரம் என்று பெயர் பெற்றது என்று வேதத்தில் வாசிக்கிறோம். சீயோன் என்ற வார்த்தைக்கு "சூரியகாந்தி" என்பது அர்த்தம். எப்படி சூரியகாந்தி சூரியனையே பார்த்துக் கொண்டிருக்கிறதோ, சூரியன் உதிக்கும் போது இந்த சூரியகாந்தி மலர் கிழக்கு திசையாய் இருக்கிறது; சூரியன் உதித்து வர வர வர வர இந்த சூரியகாந்தி மலரும் அது பக்கமாய்த் திரும்பி, மாலையிலே பார்த்தால் அது மேற்கு திசையைப் பார்த்துக் கொண்டிருக்கும். சீயோன் என்ற வார்த்தைக்கு, தேவனுடைய முகத்தையே பார்த்துக் கொண்டிருக்கிறவர்கள், தேவனுடைய அடிச்சுவடுகளில் நடக்கிறவர்கள், அவர்களை உத்தமமாய்ப் பின்பற்றுகிறவர்கள் என்பது அர்த்தம்.

சீயோன் வடதிசையில் உள்ள வடிப்பான நகரம், அழகான நகரம். சீயோன் மலை உச்சியில் இருக்கிறதுனால, எருசலேமைச் சுற்றி ஏழு மலைகள் இருக்கின்றன. அந்த மலைகளிலே மிக அழகான மலை அந்த சீயோன் மலை. இன்றைக்கும் கோடை வாசஸ்தலமாய் நாம் ஊட்டி மலைக்குப் போகிறோம்; மலர் காட்சிகளைப் பார்க்கிறோம்; நல்ல குளுமையான காற்று வீசுகிறது. ஆண்டவர் அந்த மலை முழுவதும் ஏர் கண்டிஷன் பண்ணி அழகாய் வைத்திருக்கிறது போல இருக்கிறது. கோடைக்காக, கோடை வெயிலிருந்து தப்புவதற்காக அங்கே வந்து போவதைப் போல, இஸ்ரவேல் ஜனங்களுக்கு அது ஒரு அருமையான வடிவு, ஒரு வாசஸ்தலமாய்க் காணப்பட்டது. தாவீது அதைத் தன்னுடைய தலை நகரமாய் மாற்றினார். எருசலேமிலே கர்த்தருடைய ஆலயம் இருந்தது. எருசலேமிலே தாவீதினுடைய அரண்மனை இருந்தது. எருசலேமிலே தாவீதின் வாசஸ்தலமாய் இருந்தது. ஆனால் சீயோன் ஒரு அழகான மலைப்பட்டணமாக, தாவீதின் உள்ளத்தைக் கவர்ந்த ஒரு இடமாய் இருந்தது.

சீயோனைக் குறித்து நாம் அறிய வேண்டுமென்றால், அதை நான்கு விதங்களிலே பகுத்துப் படிக்க வேண்டும். முதலாவது, உலகப்பிரகாரமான சீயோன், எழுத்தின்படியான சீயோன். இஸ்ரவேல் தேசத்தில் இருக்கிற சீயோன். புதிய எருசலேம் என்று அழைக்கப்படுகிற பட்டணத்தோடு இணைந்திருக்கிற சீயோன். அடுத்தது, நமக்குள்ளே இருக்கிற ஒரு சீயோன். நம்முடைய ஆவியை ஆண்டவர் தம்முடைய வாசஸ்தலமாய்த் தெரிந்து கொண்டார். நாம் ஆண்டவருடைய சீயோனாய் இருக்கிறோம். கொலோசியர் 1:27 சொல்லுகிறது: கிறிஸ்துவானவர் மகிமை நம்பிக்கையாக நமக்குள்ளே வாசம் பண்ணுகிறார். ஒன்று கொரிந்தியர் 3:16, 6:16 லிருந்து 19 வரையில, இரண்டு கொரிந்தியர் 6:16. இந்த வசனங்களில் எல்லாம் நாம் தேவனுடைய ஆலயமாய் இருக்கிறோம், அவருடைய வாசஸ்தலமாய் இருக்கிறோம், அவருடைய மகா பரிசுத்த ஸ்தலமாய் இருக்கிறோம். தேவாதி தேவன் நமக்குள்ளே வாசம் பண்ணுகிறார். நாம் ஆண்டவருடைய சீயோனாய் இருக்கிறோம். மூன்றாவதாக, சீயோன் என்று சொல்லப்படுவது தேவனுடைய சபையாய் இருக்கிறது. தேவனுடைய சபையாய் இருக்கிறது. ஒரு மகிமையுள்ள சபையை ஆண்டவர் தமக்கு மணவாட்டியாய்த் தெரிந்து கொண்டார். கறைதரையற்ற, மாசற்ற மணவாட்டியாக தமக்கு முன்பாக நிலைநிறுத்தும்படி அவர் தீர்மானித்தார். நான்காவதாக, சீயோன் என்று சொல்லப்படுவது நித்திய பரலோக ராஜ்ஜியத்தின் ஒரு பகுதியாகும்; ஆட்டுக்குட்டியானவர் நிற்கிற ஒரு பகுதியாகும்; அவரோடு கூட 144,000 பேர் நிற்கிற ஒரு பகுதியாகும்.

சீயோன் நித்திய வாசஸ்தலங்களிலே ஒன்று. நித்தியம் என்று சொல்லும்போது, நித்திய ராஜ்ஜியம் என்று சொல்லும்போது, பரலோகம் எனும் போது அநேக வாசஸ்தலங்கள் அங்கே இருக்கின்றன. இயேசு கிறிஸ்து சொன்னார்: "என் பிதாவின் வீட்டில் அநேக வாசஸ்தலங்கள் இருக்கின்றன." புதிய பூமியைப் பார்க்கிறோம். இரட்சிக்கப்பட்டவர்கள் புதிய பூமிக்கு வந்து பரலோக வெளிச்சத்திலே நடப்பார்கள். புதிய வானம் என்று சொல்லப்படுகிற ஒரு இடத்தைப் பார்க்கிறோம். அங்கே கேரூப்கள், சேராபீன்கள், தேவதூதர்கள், அவருடைய வாசஸ்தலங்கள் எல்லாம் இருக்கிறது. பிதாவின் வீடு என்று சொல்லப்படுகிற இடம், பழைய ஏற்பாட்டு பரிசுத்தவான்கள் எல்லாம் இருக்கிற அந்த பகுதி இருக்கிறது. இரத்த சாட்சிகளாய் மரிக்கிறவர்கள் கண்ணாடி கடலுக்கு முன்பாக வருவார்கள். உபத்திரவ கால இரட்சக இரத்த சாட்சிகள் இரத்தம் கலந்த அந்த கண்ணாடி கடலுக்கு முன்பாக நிற்பார். புதிய எருசலேம் மணவாளனுக்காக அலங்கரிக்கப்பட்ட மணவாட்டியைப் போல இருக்கிறது. சபையில் உள்ள உத்தம விசுவாசிகளுக்காக ஆயத்தமாக்கப்படும் பட்டயம். அதுபோல, ஜனங்கள் மத்தியிலிருந்து முதற்பலன்களிலே முதற்பலனாகத் தெரிந்தெடுக்கிறவர்கள் சீயோன் பர்வதத்திலே ஆட்டுக்குட்டியானவரோடு வந்து நிற்பார்கள் என்று வேதம் சொல்லுகிறது.

வேதத்தில் இந்த ஒரு இடத்தில் தான், வெளிப்படுத்தின அந்த ஒரு இடத்தில் மட்டும்தான் சீயோன் என்ற வார்த்தை வருகிறது. வேறே வெளிப்படுத்தின விசேஷம் முழுவதிலும் சீயோன் என்ற ஒரு வார்த்தையை நாம் காண்பதில்லை. இந்த இடத்தில் மட்டும் சீயோன் என்ற வார்த்தை வருகிறது. பரம எருசலேமைக் குறித்து அல்லது எருசலேமைக் குறித்து ஏறக்குறைய 476 இடங்களில் பழைய ஏற்பாட்டிலும் புதிய ஏற்பாட்டிலும் வாசிக்கிறோம். ஆனால் இந்த ஒரு இடத்திலே சீயோன் என்ற வார்த்தை வருகிறது. ஒரு காலத்திலே லூசிபர் அபிஷேகம் பண்ணப்பட்ட அந்த கேரூப், வட பர்வதத்தில் உள்ள அந்த ஆராதனைக் கூடாரத்திலே அவன் வீற்றிருந்தான், ஒரு வெளிச்சமுள்ளவனாக இருந்தான் என்பதை எசேக்கியல் 28 ஆம் அதிகாரம் 14 ஆம் வசனத்திலும், ஏசாயா 14 ஆம் அதிகாரம் 13, 14 இல் வாசிக்கிறோம். ஆனால் அவன் மனமேட்டிமை கொண்டபோது, பெருமை அடைந்தபோது, "உன்னதமானவருக்கு ஒப்பாவேன்" என்று அவன் சொன்னபோது, அகாத பாதாளத்தில் அவன் தள்ளுண்டு போனான். அந்த சீயோன் என்ற ஆராதனை, ஆராதித்து ஆராதித்து மகிழக்கூடிய அந்த இடத்தை ஆண்டவர் தேவகுமாரனாகிய இயேசுவுக்குக் கொடுத்தார். "விடிவெள்ளி" என்கிற பட்டத்தையும் அவர் கொடுத்தார். வெளிப்படுத்தல் 22 ஆம் அதிகாரம் 16 ஆம் வசனத்தில் இயேசு சொன்னார்: "நான் தாவீதின் வேரும், பிரகாசமான விடிவெள்ளி நட்சத்திரமாய் இருக்கிறேன்." அதே விடிவெள்ளி நட்சத்திரமாய், இயேசு காணப்படுகிற இடத்திலே, ஜெயம் கொள்ளுகிறவன் எவனோ அவனுக்கு விடிவெள்ளி நட்சத்திரத்தைக் கொடுப்பேன் என்று வெளிப்படுத்தல் இரண்டாம் அதிகாரம் கடைசி வசனத்திலே நாம் வாசிக்கிறோம்.

ஆட்டுக்குட்டியானவர் நிற்கிற அதே இடத்திலே, ஜெயம் கொண்டவர்கள், உலகத்தை ஜெயம் கொண்டவர்கள், பிசாசை ஜெயம் கொண்டவர்கள், மாம்சத்தை ஜெயம் கொண்டவர்கள், எல்லா அசுத்தங்களில் இருந்தும் முதற்பலனாய் ஆண்டவருக்கென்று ஜெயம் கொண்டவர்கள், மரணத்தின் முதுகெலும்பைத் தட்டி "உன் கூர் எங்கே? பாதாளமே, உன் ஜெயம் எங்கே?" என்று ஜெயம் கொண்ட பரிசுத்தவான்கள் ஆட்டுக்குட்டியானவரோடு அந்த சீயோன் பர்வதத்தில் நிற்பார்கள். இங்கே ஒரு எண்ணிக்கை கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்த எண்ணிக்கைக்கு ஆவிக்குரிய ஆழமான அர்த்தங்கள் இருக்கிறதா? உலகப்பிரகாரமான ஒரு எண்ணிக்கை தானா? அநேகருடைய கேள்வி. 144,000 என்று சொல்லப்பட்டிருக்கிறது. இது இரண்டு எண்களால் பெருக்கப்பட்ட ஒரு எண்; 12 இன்று 12. 144,000, 12 பெருக்கினால் 144, 12 பெருக்கினா 144,000 வருகிறது. இரண்டு இடத்திலே வேதத்திலே 144,000 என்று வருகிறது. வெளிப்படுத்தல் ஏழாம் அதிகாரத்திலும் வருகிறது, வெளிப்படுத்தல் 14 ஆம் அதிகாரத்திலும் வருகிறது. வெளிப்படுத்தல் ஏழாம் அதிகாரத்தில் இஸ்ரவேலின் 12 கோத்திரங்கள், ஒவ்வொரு கோத்திரங்களிலும் 12 வீதம் 144,000 பேர் முத்திரையிடப்பட்டார்கள். இவர்கள் உபத்திரவ காலத்திலே உலகத்தின் அதிபதியான அந்திகிறிஸ்துவால் உபத்திரவப்படக்கூடாது என்பதற்காக, ஆபிரகாமை நினைத்து ஆபிரகாமின் சந்ததியை, இஸ்ரவேலரை ஆண்டவர் முத்திரையிட்டதை வெளிப்படுத்தல் ஏழாம் அதிகாரத்தில் வாசிக்கிறோம். ஆனால் இந்த இடத்திலே, 14 ஆம் அதிகாரத்தில் வருகிற 144,000 பேர் உலகப்பிரகாரமான இஸ்ரவேலர் அல்ல. ஆபிரகாமின் சந்ததியாகிய இஸ்ரவேலர் அல்ல. விருத்தசேதனத்தின் மூலமாய் உடன்படிக்கை செய்தவர்கள் அல்ல. இவர்கள் இயேசுவின் 12 அப்போஸ்தலர்களால் சுவிசேஷம் அறிவிக்கப்பட்டு, ஜனங்கள் இரட்சிப்புக்குள்ளே வந்து, அபிஷேகத்துக்குள்ளே வந்து, ஆட்டுக்குட்டியானவரோடு நடந்தவர்கள் தான். புதிய ஏற்பாட்டில் உள்ள தேவனுடைய பிள்ளைகள் தான். கிறிஸ்துவினுடைய இரத்தத்தால் மீட்கப்பட்டவர்கள் தான்.

இந்த வெளிப்படுத்தல் 14 ஆம் அதிகாரத்தில் வருகிற 144,000 பேர். நிறைய பேர் தவறாய் எண்ணிக்கொள்ளுகிறார்கள். வெளிப்படுத்தல் ஏழாம் அதிகாரத்தில் உள்ள அதே இஸ்ரவேலர் தான் இங்கே முத்திரையிடப்பட்டு ஆட்டுக்குட்டியானவரோடு இருக்கிறார்கள் என்று நினைக்கிறார்கள். இஸ்ரவேலர் ஆட்டுக்குட்டியானவரை ஏற்றுக்கொள்ளவில்லை; புறக்கணித்தார்கள்; சிலுவையில் அறைந்தார்கள்; "ராயனை அல்லாமல் வேறு எங்களுக்கு ராஜா இல்லை" என்று அவருடைய இரத்தப்பழிக்கு உடன்பங்காளிகள் ஆனார்கள். அவர்கள் ஒருபோதும் மேசியாவை ஏற்றுக்கொண்டதில்லை. இன்றைக்கு வரைக்கும் அவருடைய கண்கள் குருடாகவே இருக்கிறது. ஆனால் இங்கே இருக்கிற 144,000 பேர் புதிய ஏற்பாட்டு பரிசுத்தவான்கள். ஆட்டுக்குட்டியானவரை அறிந்தவர்கள். நம்முடைய ஆண்டவருக்கு ஒரு பெயர் இங்கே கொடுக்கப்பட்டிருக்கிறது: ஆட்டுக்குட்டியானவர். வேதத்திலே ஆண்டவருக்கு 272 பெயர்கள் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஒரு வைரத்துக்குப் பல முகப்புகள் இருக்கிறது போல, பிரகாசமான வெளிச்சத்திலே ஒரு வைரத்தைச் சற்றுத் திருப்பத் திருப்பத் திருப்ப, ஒவ்வொரு அழகழகான கலர் வீசுவதைப் போல, அவருடைய 272 பெயர்களும் அவருடைய குணாதிசயங்களைக் காண்பிக்கின்றன; அவருடைய சுபாவங்களைக் காண்பிக்கின்றன; அவர் நமக்கு என்ன செய்வார் என்பதை விளக்குகின்றன. அப்படிப்பட்ட ஒரு பெயர்தான் ஆட்டுக்குட்டியானவர். வெளிப்படுத்தின விசேஷத்தில் மட்டும் 28 முறை ஆட்டுக்குட்டியானவர் என்ற பெயர் வருகிறது.

பழைய ஏற்பாட்டிலே பல இடங்களில் அவர் ஆட்டுக்குட்டிக்கு ஒப்பானார். ஆபேல் செலுத்தின ஆட்டுக்குட்டியாகிய பலிக்கு ஒப்பாய் இருந்தார். ஈசாக்கு கேட்டாரே: "நெருப்பு இருக்கிறது, விறகு இருக்கிறது, ஆட்டுக்குட்டி எங்கப்பா?" ஈசாக்குக்குப் பதிலாக அந்தக் கட்டையிலே கட்டப்பட்ட ஒரு ஆட்டுக்கடா, முட்புதரிலே தன்னுடைய கொம்புகளைச் சிக்க வைத்துக் கொண்டிருந்த ஆட்டுக்கடா. பழைய ஏற்பாட்டில் ஏராளமான பலிகள், ஆட்டுக்குட்டிகள் பலியாகச் செலுத்தப்பட்டன. பாவ நிவாரண பலியாக, குற்ற நிவாரண பலியாக, உற்சாக பலியாக. அதெல்லாம் இயேசுவுக்கு அடையாளம். இயேசு இந்த பூமிக்கு வந்தபோது யோவான் ஸ்நானகன் சுட்டிக் காண்பித்துச் சொன்னார்: யோவான் 1:29 இல், "இதோ, உலகத்தின் பாவங்களைச் சுமந்து தீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி." ஏசாயா 53 ஆம் அதிகாரம் முழுவதும் அந்த ஆட்டுக்குட்டியைப் பார்க்கிறோம். தன்னை மயிர் கத்தரிக்கிறவனுக்கு முன்பாக வாய் திறவாத ஆட்டைப் போல இருந்தார். அவருடைய ஆத்துமா நமக்காகக் குற்ற நிவாரண பலியாக ஒப்புக்கொடுத்தது. அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டியானார். இடுக்கண்ணிலும் இருந்து, நியாயத்தீர்ப்பிலிருந்து எடுத்து எடுக்கப்பட்ட ஒரு ஆட்டுக்குட்டி.

அருமையான தேவனுடைய பிள்ளைகளே, சீயோன் மலையில் அந்த ஆட்டுக்குட்டியானவருடைய தியாகத்தினாலே, அந்த ஆட்டுக்குட்டியானவருடைய பலியினாலே, குற்ற நிவாரண பலியினாலே கழுவப்பட்ட தேவனுடைய பிள்ளைகள். நமக்காக அவர் கிரயமாகத் தன்னுடைய மாம்சத்தையும் இரத்தத்தையும் சிந்தின படியினாலே, பேதுரு எழுதுகிறாரே: "குற்றமற்ற மாசற்ற ஆட்டுக்குட்டியின் இரத்தத்தாலே மீட்கப்பட்டீர்கள்" என்று அறிந்திருக்கிறீர்களே? நமக்காக அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டியானார்; அவர் மூலமாய் இரட்சிப்பு. ஏழாம் அதிகாரம் வெளிப்படுத்தலில் வருகிற 144,000 பேர், ஆபிரகாமின் சந்ததி என்ற ஒரே அடிப்படையிலே, விருத்தசேதனம் பெற்றவர்கள் என்ற ஒரே அடிப்படையிலே, யாக்கோபின் 12 குமாரருடைய சந்ததி என்ற ஒரே அடிப்படையிலே அவர்கள் முத்திரையிடப்பட்டார்கள். இஸ்ரவேலைத் தவிர புறஜாதியார் அந்த 144,000 இல் முத்திரையிடப்படவில்லை. ஆனால் இந்த ஆட்டுக்குட்டியானவரோடு நிற்கிற 144,000 பேர், கிரேக்கன் என்றும் இல்லை, யூதன் என்றும் இல்லை, இஸ்ரவேலன் என்றும் இல்லை, புறஜாதியினும் என்றும் இல்லை. யார் யார் ஆட்டுக்குட்டியானவரை விசுவாசித்தார்களோ, யார் யார் சிலுவையில் அண்டை வந்து நின்று அந்த கல்வாரி இரத்தத்தைத் தியானித்து, "எனக்காக அல்லவா?" என்று ஏற்றுக் கொண்டார்களோ, அவர்கள்தான் சீயோன் மலையிலே ஒரு லட்சத்தி 44,000 பேராய் நிற்பார்கள்.

வேதத்தில் நீங்கள் வாசிக்கும் போது, சீயோன் குமாரத்தி என்று பல இடங்களில் வாசிக்கலாம். உன்னதப்பாட்டில் சீயோன் குமார்த்திகளே, "எனக்குப் பிரியமானவர்களுக்கு மனதாக மட்டும் அவளை எழுப்பாதீர்" என்று வேண்டிக்கொள்கிறேன். எருசலேம் குமார்த்திகளே, சீயோன் குமார்த்திகளே. உன்னதப்பாட்டில் வாசிக்கலாம்; எரேமியாவின் புலம்பலில் வாசிக்கலாம்; ஏசாயாவில் வாசிக்கலாம். எருசலேம் குமாரத்திகள் என்றும், சீயோன் குமாரத்திகள் என்றும் அழைக்கப்படுகிறார்கள். சீயோன் என்பது ஆவியோடும் உண்மையோடும் ஆண்டவரை ஆராதிக்கிற ஒரு கூட்டத்தார். துதிக்கும் கர்த்தரை ஆராதிக்கிறதற்கும், அவரைப் பாடி மகிழ்கிறதற்கும் தங்களை அர்ப்பணித்த ஒரு கூட்டத்தார். சங்கீதம் 48:2 இல், "வடபுறத்தில் உள்ள சீயோன் பர்வதம்" வனப்பு மிகுந்த ஒரு இடமாய், அழகுள்ள இடமாய், ஆராதனைக்குரிய பாத்திரமான ஒரு இடமாய் விளங்குகிறது. தேவனுடைய பிள்ளைகளே, சீயோனும் பரம எருசலேமும் யாருக்குச் சொந்தம்? புதிய ஏற்பாட்டில் உள்ள விசுவாசிகளுக்கும் ஊழியக்காரர்களுக்கும் சொந்தமானது.

இன்றைக்குச் சில உபதேசங்களுக்குள்ளே நான் செல்ல விரும்புகிறேன். இந்த 144,000 பேர் யார் என்பதை உலகத்திலே பல கூட்டத்தார், "நாங்கள் தான் அது" என்று சொல்லுகிறார்கள். முதலாவது, "நாங்கள் தான்" என்று சொன்னது செவன்த் டே அட்வென்டிஸ்ட். ஏழாம் நாள் ஓய்வு நாளைக் கைக்கொள்ளாமல் அந்த 144,000 பேர் ஆகவே முடியாது. இரண்டாவது, மார்மோன்ஸ் என்று சொல்லப்படுகிற லேட்டர் டே சைன்ட்ஸ். அமெரிக்காவில் அது தோற்றுவிக்கப்பட்டது. அவர்கள் சொல்லுகிறார்கள்: "எங்களுக்குரிய இடம்தான் அந்த இடம்; நாங்கள் தான் அங்கே போவோம்." இன்னொரு கூட்டத்தார் ஜெகோவா விட்னஸ். அவர்களும் அதே காரியத்தைச் சொல்லுகிறார்கள். இந்த 144,000 பேர் "நாங்கள் தான்" என்று. நான் பிறந்ததிலிருந்து, நான் பிறக்கிறதுக்கு முன்னாலே சிபிஎம் சபையில் தான் பிறந்தேன். இப்போ அதனுடைய பெயர் டிபிஎம் ஆக இருக்கிறது. இலங்கை பெந்தகோஸ்து சபை, கொஞ்ச காலத்துக்கு முன்னால் இலங்கையில் கலவரமாகி, இந்த தமிழ்நாட்டில் எங்கெங்கெல்லாம் இலங்கை பெந்தகோஸ்து வந்ததோ, அங்கெல்லாம் கல்லறி விழுந்தனரால, இலங்கையை விட்டு "டிபி" என்று மாற்றிட்டாங்க. வெளிநாட்டில் இருக்கிறவங்க, அதே சபையைச் சேர்ந்தவங்க, "யூனிவர்சல் பெந்திகாஸ்டல்" என்று பெயர் மாற்றிட்டாங்க. சீயோன் பெந்தகோஸ்து சபை என்று பெயர் மாற்ற முடியல; ஏன்னா ஏற்கனவே அந்தப் பேரை வேற ஒருத்தர் தூக்கிட்டுப் போயிட்டார். வேலூர்ல பாஸ்டர் நல்ல ஆரோன், அவருடைய சர்ச் பேர் சீயோன் பெந்தேகோஸ்தே சபை. நான் பிறந்ததிலிருந்து அந்த சபையில இருக்கு; பிறக்கிறதுக்கு முன்னால இருந்து அந்த சபையில இருக்கிறதுனால, எங்க அம்மா இருக்காங்க, 91 வயசு. அந்த காலத்திலே அவங்க எல்லாம் சிபிஎம். அதனால அவங்களுடைய பிரசங்கம் நாங்க நிறைய கேட்டிருக்கு. "சீயோன் எங்களுக்கு தான்; வேற ஒருத்தருக்கும் கிடையாது. கல்யாணம் கட்டாம இருக்கிற ஊழியக்காரன் நாங்க தான்; சீயோனுக்குப் போவோம். ஒரு விசுவாசியும் சீயோனுக்கு வரவே முடியாது; விசுவாசிகள் எருசலேம்ல வந்திருப்பாங்க. ஒரு விசுவாசியும் சீயோனுக்கு வரமாட்டான்; விசுவாசிகள் திருமணம் செய்கிறதுனாலக் கறைப்பட்டுப் போகிறார்கள். ஆனால் நாங்கள் தான் திருமணம் செய்யாதவர்கள்; நாங்கள் தான் கற்புள்ளவர்கள்; நாங்கள் தான் அன்னகர்கள்; நாங்கள் தான் பிரதிஷ்டை."

பண்ணப்பட்டவர்கள் நாங்கள் தான். எங்களுடைய ஜீவனையும் அர்ப்பணித்தவர்கள் எங்களுக்கு தான் சீயோன். அவங்க பாடுற பாட்டுல எல்லாம் சீயோன் என்கிற வார்த்தை வராமல் ஒரு பாட்டையும் அவங்க இயற்றவே மாட்டாங்க. பாடுவாங்க, “சீயோனே உன் வாசல்களை” – சிபிஎம் பாட்டு. “அந்த சீயோன் மலையில் தேவ மகிமை எங்கும் வீசுதே” – சிபிஎம் பாட்டு. “சீயோனைப் பணிந்துமே ஸ்ரீ இயேசு நாதனாய் சீக்கிரம் வருவார், சீக்கிரம்” – என்ன? “சீயோனே உன்னில் நான் சேர்ந்திடவே” – எனக்கு விசுவாசியா இருக்கும்போதே உள்ளத்தில் கேள்வி. நமக்கு தான் சீயோன் கிடையாதுன்னு சொல்றாங்களே? ஏன் இந்த சீயோனை பத்தி நம்மகிட்ட பாடும்படி கட்டாயப்படுத்துறாங்க? பெந்தகோஸ்தே பாஸ்டர்ஸ் மட்டும் பாடிட்டு இருக்கலாமே? அவங்களுக்கு தானே சீயோன்? நமக்குத்தான் சீயோன் கிடையாதுன்னு சொன்ன பிறகு, நம்ம போய் ஒரு பைத்தியக்காரர் ஆக்கி, “சீயோனை பத்தி பாடு, சீயோனை பத்தி பாடு” ன்னா, இதைவிட ஒரு கொடுமை இருக்க முடியுமான்னு நான் நினைக்கிறது உண்டு. எங்க அம்மா என்னை மன்னிக்கணும். சீயோன் அவங்களுக்கு ஒரு விக்கிரகமாக மாறிப்போச்சு. இயேசுவை புகழ்றதை பார்க்கிறோம், ஆவியானவரை குறித்து பாடுகிறதை பார்க்கலும். சீயோன், சீயோன், சீயோன், சீயோன், சீயோன், சீயோன், சீயோன்! பாகாலே பாகாலே மாதிரி சீயோனை பற்றி பாடல் பாடுகிறது. தவறல்ல. ஆனா அதையே விக்கிரகமாக்கி, வெளிப்படத்தில் ஒரே ஒரு வசனம் – அதை வச்சு ஒரு பெரிய உபதேசம் – அதை வைத்து ஒரு சின்ன ஒரு துரும்பை பிடிச்சு ஒரு பெரிய இமயமலை ஆக்கிற மாதிரி. சீயோன்ல ஆட்டுக்குட்டியானவரோடு நிற்கிற 144 பேர் நாங்க தான். வேற எந்த சபையில் உள்ள எந்த பரிசுத்தவானாலும் அந்த இடத்தில் அவனுக்கு இடம் கிடைக்கவே கிடைக்காது. எங்க சபையில் உள்ள பாஸ்டர்ஸ் மட்டும்தான் அந்த 144 ஆயிரம். மத்த சபையில் எந்த ஒரு பரிசுத்தவான் இருந்தாலும், அவனை நீ வணக்கம் பிரைஸ் தி லார்ட் சொல்லக்கூடாது, உன் கண்டா முகத்தை திருப்பினரனும், அவனுக்கு உபசாரம் செல்லக்கூடாது. “நாங்க தான் வேறு பிரிக்கப்பட்டவர்கள்” என்று தங்களையே ஒதுக்கிக் கொண்டு, வேறு கொண்டு ஒரு வேலி போட்டுக்கொண்டு. இதனால நிறைய உபதேச குழப்பங்கள்.

ஆண்டவர் சீயோனை குறித்து சொல்லியிருக்கிறதை பார்க்கிலும் மிக அதிகமாக எருசலேமை குறித்து பேசியிருக்கிறார். இயேசுவுடைய நான்கு சுவிசேஷங்களை பார்த்தாலும் ஒரு இடத்திலயாவது, “சீயோன்” என்கிற இடம் இப்படிப்பட்ட ஊழியக்காரங்களுக்கு தான், கல்யாணம் கட்டாத ஊழியக்காரங்களுக்கு தான் – ஆண்டவர் ஒருமுறை கூட அவர் சொன்னதே இல்லை. ஒருமுறை கூட இயேசு இந்த பூமியில் இருந்தபோது உலகப்பிரகாரமான சீயோனுக்கு அவர் போனதே இல்லை. ஒருமுறை கூட ஆண்டவர் போனதில்லை. எருசலேமை குறித்து அவ்வளவு பேசினவர், சீயோனை குறித்து ஒரு முறையாகிலும் இயேசு பிரசங்கித்ததும் இல்லை, அங்க போனதும் இல்லை, அதை முக்கியப்படுத்தினதும் இல்லை. சீயோனை பார்க்கிலும் பருமை எருசலேமை ஆண்டவர் முக்கியப்படுத்தி, “மணவாளனுக்காக அலங்கரிக்கப்பட்ட ஒரு மணவாட்டியைப் போல இருக்கிறது” என்று சொன்னார். சீயோனுடைய 12 வாசல்களைப் பற்றி எழுதினார்? 12 மதில்களைப் பற்றி எழுதினார்? 12 அஸ்திபாரக் கற்களை குறித்து எழுதினார்? 12 வாசல்களை குறித்து ஆண்டவர் எழுதினார்? சீயோன் நிற்கிற இடமாக மட்டும்தான் காட்சி அளிக்கப்படுகிறது. சீயோன் ஒரு மலை, அங்கே இயேசுவானவர் நிற்கிறார், அவரோடு 114000 பேர் நிற்கிறார்களே தவிர, அது வாசஸ்தலமாக நமக்கு சொல்லப்படவில்லை. ஆனால் எருசலேம் முக்கியமானது. எருசலேமாய் இருக்கட்டும், சீயோனாய் இருக்கட்டும், கர்த்தர் நமக்கு எந்த இடத்தை கொடுத்தாலும் நமக்கு சந்தோஷம். நாம் மேலானவைகளை நாடுகிறோம், பூமிக்குள்ளவைகள் அல்ல. “நீங்கள் கிறிஸ்துவோடு கூட எழுந்தது உண்டானால், நீங்கள் மேலானவைகளை நாடுங்க.” நான் எருசலேம் தான் வேணும், புதிய எருசலேம் தான் வேணும். அதை நம்ம விக்கிரகமாக்குறது இல்லை. ஆண்டவர் நம்முடைய வாழ்க்கைக்கு ஏற்றபடி எந்த இடத்தை கொடுத்தாலும், அது சிறப்பான இடமாகத்தான் இருக்கும் ஒழிய சாதாரண இடமாய் இருக்காது. நம்முடைய உள்ளத்தை ஆண்டவர் மேல் வைப்பார்.

கடந்த நூற்றாண்டிலே பிரான்ஸ்லே ஒரு அருமையான ஒரு ஒரு தேவனுடைய மகிமை பொருந்திய ஒரு ஒரு சகோதரி இருந்தார்கள். அவர்கள் ஜெபம் உலக பிரசித்தி பெற்ற ஒரு ஜெபம். இந்த ஜெபத்தில் அவர்கள் சொல்லுகிறார்கள்: “ஆண்டவரே, இந்த பூமியிலே நீர் எனக்கு என்னென்ன ஆசீர்வாதங்களை கொடுக்க வேண்டும் என்று விரும்புகிறீர்களோ, அவ்வளவு ஆசீர்வாதத்தையும் என்னுடைய விரோதிகள், என் சத்துருக்களுக்கும், என்னை பகைக்கிறவர்களுக்கும் கொடுங்க. பரலோகத்தில் எனக்கு என்னென்ன இடங்களை, என்னென்ன கிரீடங்களை, என்னென்ன வாடாத சுதந்திரங்களை, பரிசுத்தவான்களுக்கு என்று வைக்கப்பட்டிருக்கிற நித்திய சுதந்திரங்களை என்னுடைய சிநேகிதருக்கு கொடு. ஆனால் எனக்கு உம்மையே தாரும், உம்முடைய சுபாவத்தை தாரும், உம்முடைய சாயலை தாரும், உம்முடைய குணாதிசயத்தை தாரும். என்னை விட்டு விலகாமல் உம்முடைய பிரசன்னத்தை எனக்குத் தாரும், உம்முடைய சமூகத்தை எனக்குத் தாரும். எனக்கு சீயோனும் வேண்டாம், எருசலேமும் வேண்டாம்.”

முந்தின காலத்திலே தேவதாசன் என்ற வருகையின் தூதனுடைய ஆசிரியர் இவ்விதமாய் பாடுவார்: “உம்மை போல் மாற்றும் இயேசுவே, உம் உம்மை போல் மாற்றும், உள்ளத்தில் ஆவியை ஈந்துமே, என்னை உம்மை போல் மாற்றும்” – பழைய ஒரு பாட்டு உண்டு. “என்னைக் காண்பவர் என்னிலே உம்மை காண, உம் சாயலால் என்னை திருப்தியாக்கும். என்னைக் காண்போர் என்னிலே என்னை அல்ல, என்னிலே உம்மை காணும்படி, உம்முடைய சாயலால் என்னை திருப்தியாக்கும்.”

சில உபதேசம்: “நீ சீயோனுக்கு போகணும்னா, உன் சொத்தெல்லாம் வித்துரு. அவ்வளவுத்தையும் சர்ச்சுக்கு கொண்டு வா, பெயித்தோமுக்கு கொண்டு வா, பாதபடியில் வை. உனக்கு எனக்கு சொத்துன்னு ஒன்னு இருக்கக்கூடாது. எல்லாத்தையும் வித்துரு, எல்லாத்தையும் வித்துரு, எல்லாத்தையும் வித்துரு.” அதை கொண்டு வந்து சீயோன் மேல பேராசைப்பட்டு, அநேகம் பேர் அழைப்பு இல்லாட்டாலும் எல்லாத்தையும் வித்து கொண்டு வைத்துட்டு, பாதி வழியில் போகவும் முடியாது, வாழவும் முடியாது. வெந்து கொண்டிருக்கிற நிறைய பேரை எனக்கு தெரியும். சரி, சாரால் நவராஜ் அவருடைய ஆலயத்துல நிறைய பேர் வந்தாங்க, வித்தாங்க. கடைசில அந்த சகோதரி அவ்வளவு பணத்தை எடுத்து நிலங்களை எல்லாம் தன்னுடைய மூத்த சகோதரி பேர்ல எழுதிட்டாங்க. “சர்ச் பேர் என் அம்மா எழுதல. நாங்க கொடுத்த பணத்தை எங்களுக்கு திருப்பி கொடுங்க. நாங்க எல்லாத்தையும் வித்து உங்க பாதத்தில் கொண்டு வைத்தோம். நீங்க ஊழியத்துக்கு, நீங்க சபை வாங்கினா சர்ச் பேருக்கு வாங்குவீங்கன்னு நினைச்சோம். உங்க மூத்த சகோதரி பேருக்கு வாங்கிட்டீங்களே?” அவங்க சொன்னாங்க: “நீங்க எப்போ ஊழியத்துக்கு வந்தீங்க? இத்தனை வருஷம் நீங்க சாப்பிட்டு இருக்கீங்க. ஒவ்வொரு வேளைக்கும் சாப்பாடு இவ்வளவு. 15 வருஷத்துக்கு எல்லாம் சரியா போச்சு. அடிமுடியும் சரியா போச்சு.” அவ்வளவு பேரும் விலகிட்டாங்க, அந்த சபையை விட்டு. சபை உடைந்து போனது. சீயோன் ஆசைப்பட்டு, ஆசைப்பட்டு, ஆசைப்பட்டு சிலர் அன்னகர் ஆக்கி.

ஆண்டவர் உங்களை திருமணம் செய்யாமல் அந்த அழைப்பு கொடுத்தால் தாராளமாக அதில் நிலைத்து நில்லுங்க. அதுக்கு வேண்டி ஆண்டவர் கிருபையை தருவார். திருமணமாகி சாட்சியாய் ஜீவிக்கும்படி ஆண்டவர் உங்களை அழைத்திருந்தால், திருமண வாழ்க்கையில் ஒரு ஜெயமுள்ள வாழ்க்கை வாழ்வதற்கு ஆண்டவர் உங்களுக்கு உதவி செய்வார். இது ஆண்டவருடைய கரத்திலே, அவருடைய அழைப்பிலும் பலத்திலும் இருக்கிறதே தவிர, “சீயோன் கிடைக்கணும், நான் என்னை அண்ணகர் ஆக்கிக் கொள்கிறேன், சீயோன் கிடைக்கிறதுக்காக என் சொத்தெல்லாம் விக்கிறேன்” என்பது – அது சுய, அது என்ன சொல்றது தெரியல. தன்னுடைய சுயத்திலிருந்து வருகிற எண்ணமாகும். சீயோன் அடையனும்னு நினைச்சு பேராசைப்படாதீங்க. நம்மால முடிந்த அளவு உண்மை, உத்தமம், பரிசுத்தமாய் ஜீவிக்க ஒப்புக்கொடுத்தா, மற்ற எல்லாவற்றையும் ஆண்டவர் பார்த்துக் கொள்ளுவார்.

வேதத்தில் இரண்டு பேர் உயிரோடு எடுத்துக் கொள்ளப்பட்டார்கள். ஏனோக்கு திருமணம் செய்தவர், தேவனோடு சஞ்சரித்துக் கொண்டிருந்தே குமாரரையும் குமார்த்திகளையும் பெற்றார் என்று ஆதியாகமம் ஐந்து 24 வாசிக்கிறோம். நோவா திருமணம் செய்தவர், தன்னுடைய காலத்திலே வாழ்ந்தவர்களுக்குள்ளே உத்தமமாய் இருந்தார். அவரும் அவருடைய குடும்பத்தாரும் பேழையிலே ஏற்றுக்கொள்ளப்பட்டார்கள். அவர் தேவனோடு சஞ்சரித்துக் கொண்டிருந்தார் என்று ஆதியாகமம் ஆறாம் அதிகாரம் ஒன்பதாம் வசனத்தில் வாசிக்கிறோம். தேவனோடு நடப்பதற்கு அவர்களுக்கு அவருடைய குடும்பம் இடைஞ்சலாய் இல்லை. இந்து சந்நியாசிகள் என்ன நினைக்கிறார்கள்? “குடும்பமாய் இருந்தால் பரிசுத்தமா வாழ முடியாது. காவி உடுத்து சந்நியாசம் புகுந்து, ஏதோ இமயமலைச் சருவிலே ஒரு குகைக்குள்ளே போய் உட்கார்ந்து, ஆயிரக்கணக்கான ஸ்லோகங்களை திருப்பித் திருப்பி சொல்லுவதினால் தான் ஒரு மனிதன் தூய்மையாய் வாழ முடியும்” என்று அவர்கள் எண்ணுகிறார்கள். புத்த பிஷிக்களும் திருமணம் செய்வதில்லை, அவர்களும் அப்படித்தான் எண்ணுகிறார்கள். திருமணம் பரிசுத்தமாய் வாழ்வதற்கு ஒரு இடைஞ்சல்? அருமையான தேவனுடைய பிள்ளைகளே, இந்த வெளிப்படுத்தல் 14 ஆம் அதிகாரம் ஐந்தாம் வசனத்திலே அவரை காண்பிக்கிற ஒரு வசனம். நாலாம் வசனத்திலே, “ஸ்திரீகளால் கரைப்படாதவர்கள் இவர்களே, கற்புள்ளவர்கள் இவர்களே” – டிபிஎம் உடைய உபதேசம். “ஸ்திரீகளால் நாங்கள் கரைப்படாதவர்கள்” – ஸ்திரீயினால் கரைப்படாதவர்கள் அல்ல. ஸ்திரீகளினால் கரைப்படாதவர்கள். ஒரு ஸ்திரீ ஒருவனுடைய, ஒரு ஸ்திரீ ஒருவனுக்கு மனைவியாய் கொடுக்கப்படும்போது, அவள் கணவனை கரைப்படுத்துவாள் என்றால், ஆண்டவர் அந்த திருமணத்தையே ஏற்படுத்தி இருக்க மாட்டார். இந்த வேத வசனத்தை சரியாய் புரிந்து கொள்ளாமல், “ஆண்டவர் ஏற்படுத்தின குடும்பம்” – “ஏற்று துணை உனக்கு தருவேன்” என்று சொன்னவர், ஒருவனை படைத்தவர், ஏன் இன்னொருவளை படைத்தார்? பக்தியுள்ள சந்ததியை பெறுவதற்காகத்தானே? “புத்தியுள்ள மனைவி கர்த்தர் தருகிற ஈவு”, “மனைவியை கண்டடைகிறவன் நன்மையை கண்டடைகிறான்”, “குணசாலியான ஸ்திரீயாய் கண்டுபிடிப்பவன் யார்? அவருடைய விலை முத்துக்களை பார்க்கிலும் உயர்ந்தது” என்றெல்லாம் ஆண்டவர் சொல்லுகிறவர், “ஸ்திரீயினால் கணவன் கரைப்பட்டு போவான்” என்று சொல்லவே முடியாது. அப்படி என்றால் ஆண்டவருடைய தீர்மானத்துக்கு விரோதமானது. ஸ்திரீகளினால்? ஒரு மனைவி இருக்கும்போது மற்ற பெண்களோடு ஐக்கியம் கொண்டு விபச்சாரம், வேசித்தனத்தில் போகும்போது, அவன் நிச்சயமாய் கரைப்படுவான். அது கர்த்தருக்கு விரோதமான ஒரு கொடிய பாவமாகும். ஆனால் ஒரு மனைவியோடு வாழ்கிறவன், சாட்சியோடு வாழ்கிறவன், தேவ பக்தி உள்ள சந்ததியை பெறுகிறவன், கர்த்தரால் ஆசீர்வதிக்கப்படுவார்.

அப்போஸ்தலனாகிய பேதுருவுக்கு மனைவி இருந்தாள். குடும்பமாக அவள் ஊழியம் செய்தார். மாமியார் சுவீனப்பட்டபோது இயேசு சொன்னார். அப்போஸ்தலர்களை குறித்து வாசிக்கும் போது, எல்லாரும் விவாகமானவர்கள் தான். பவுல் ஒரு இடத்திலே சொன்னார்: “பேதுருவாகிய கேபாவைப் போல ஒரு மனைவியாகிய சகோதரியை கூட்டிக்கொண்டு திரிய எங்களுக்கு மனமில்லை, எங்களுக்கு அதிகாரம் இல்லையா? மற்ற அப்போஸ்தலர்களைப் போல மனைவியை கூட்டிக்கொண்டு?” எங்களால்? அப்போ அவ்வளவு அப்போஸ்தலர்களும் திருமணம் செய்திருந்தார்கள். அப்போஸ்தலனாகிய பவுல் திருமணம் செய்யவில்லை. கர்த்தருடைய ஊழியக்காரர்களுக்குள்ளே, அப்போஸ்தலர்களுக்குள்ளே ஏராளம் பேர் திருமணம் செய்திருந்தார்கள். யோவான் அப்போஸ்தலன் திருமணம் செய்யவில்லை, பவுல் திருமணம் செய்யவில்லை என்று வரலாற்று ஆசிரியர் ஆசிரியர்கள் சொல்லுகிறார்கள். குடும்ப வாழ்க்கை ஒருபோதும் ஒரு மனிதனை படுத்துவதில்லை. சற்று நான் ஆழமாக உங்களுக்கு பேச விரும்புகிறேன். நீங்க புரிந்து கொண்டால் புரிந்து கொள்ள, இல்லைன்னா விட்டுருங்க.

ஒரு ஏவாளை ஆண்டவர் சிருஷ்டிக்கும் போது, ஒரு ஏற்ற துணையாக சிருஷ்டிக்கும் போது, பெண்மைக்குரிய சகல குணாதிசயங்களோடு, மனுஷனிலிருந்து எடுக்கப்பட்டு மனுஷியாக உருவாக்கப்பட்டபோது, அதிலே ஒரு ரகசியத்தை ஆண்டவர் வைத்தார். அந்த ஏவாளாய் பார்க்கும்போதே, கிறிஸ்துவுக்கு ஒரு மணவாட்டியை உண்டாக்க வேண்டும் என்று பிதாவானவர் சித்தம் கொண்டார். ஏவாளுக்குள்ளே அவர் தம்முடைய சபையைக் கண்டார். ஏவாளுக்குள்ளே கரை திரையற்ற ஒரு மணவாட்டியை கண்டார். ஆதாம் இடத்தில் ஏவாளை அழைத்துக் கொண்டு வரும்போதே, கிறிஸ்துவுக்குள் ஒரு மணவாட்டி அழைத்துக் கொண்டு வந்து வருவது போல பிதாவானவர் உணர்ந்தார். ஆதாமுடைய விலாவிலிருந்து ஏவாளை உருவாக்கும் போது, தம்முடைய குமாரனாகிய இயேசுவினுடைய விலா பிளக்கப்படும், அதிலிருந்து வழிகிற இரத்தமும் தண்ணீரின் மேலிருந்து ஒரு மணவாட்டியை உருவாக்க வேண்டும் என்று சித்தம். ஆகவே, அப்போஸ்தலனாகிய பவுல் 18 ரகசியங்கள் எழுதினாலும், கிறிஸ்துவினுடைய மணவாட்டியை குறித்து, சபையை குறித்து எழுதும்போது, “இந்த ரகசியம் பெரியது” என்று சொன்னார். பிதாவுக்கு ஒரு மணவாட்டி உருவாகவில்லை. ஆவியானவருக்கு ஒரு மணவாட்டி உருவாகவில்லை. ஆனால் இயேசுவுக்கு ஒரு மணவாட்டி உருவானது. “ஸ்திரீகளால் கரைப்படாதவர்கள் இவர்களே” என்று சொல்லும்போது, ஸ்திரீ கரைப்படுத்துவாள் என்றால், இயேசுவை சபை என்கிற ஸ்திரீயும் கரைப்படுத்துவதாக தானே அர்த்தம்? வெளிப்படுத்தல் 19 ஆம் அதிகாரம் ஏழாம் வசனத்திலிருந்து வாசிக்கும் போது: “இதோ ஆட்டுக்குட்டியானவருடைய கல்யாணம் வந்தது, மணவாட்டி தன்னை ஆயத்தப்படுத்தினார். இதோ நாம் சந்தோஷப்பட்டு களிகூர்ந்து மகிழக்கடவோம், ஆட்டுக்குட்டியானவருடைய கல்யாணம் வந்தது.” பிதாவாகிய தேவனுக்கு கல்யாணம் இல்லை. ஆவியானவராகிய தேவனுக்கும் கல்யாணம் இல்லை. பிதாவாகிய தேவனுக்கும் மனைவி இல்லை. ஆவியானவராகிய தேவனுக்கும் மனைவி இல்லை. ஆனால், “ஆட்டுக்குட்டியானவருடைய மனைவியை உனக்கு காண்பிப்பேன், வா” என்று சொல்லி, மகிமை அடைந்த எருசலேமை யோவானுக்கு காண்பித்து, “மணவாளனுக்காக அலங்கரிக்கப்பட்ட மணவாட்டியை போல” இருந்து. உங்களுக்கு புரியும் என்றால் ஏற்றுக்கொள்ளுங்கள், புரியலைன்னா விட்டுருங்க. ஏன் இதை சொல்லுகிறேன் என்றால், சீயோனில் இருக்கிற ஊழியக்காரர்கள் அன்னகர்களாய், பிரதிஷ்டை பண்ணப்பட்டவர்களாய், கரைப்படாமல் இருக்கிறவர்கள். ஆனால் எருசலேமில் இருக்கிற விசுவாசிகள் கரைப்பட்ட விசுவாசிகள் என்று அவங்க உபதேசம். சொல்லுங்க, நான் சொல்லல. “நீங்க எல்லாம் கரைப்பட்டவர்கள்” என்று அவர்கள் சொல்லுகிறார்கள். நான் சொல்லல. என்னை விட்டுருங்க.

ஆண்டவர் தம்முடைய எல்லா வாசஸ்தலங்களிலும் எருசலேமை தெரிந்து கொண்டார் என்று ஒன்று ராஜா 11:13 சொல்லுகிறது. எருசலேமிலே தேவனுடைய ஆலயத்தை கட்டுவதற்கு அந்த ஒரு நாள் களத்தை அவர் தெரிந்து கொண்டார். எந்த இடத்திலே ஈசாக்கை பலி செலுத்துவதற்கு மோரியா மலையிலே அந்த செலுத்த கொண்டு போனாரோ, அதே இடத்தில்தான் சாலமோன் தேவாலயத்தை கட்டினான். அது எருசலேமில் இருக்கிறது, அது சீயோனில் இல்லை. எருசலேமை குறித்து சொல்லும்போது, 122 ஆம் சங்கீதம் மூணாம் வசனத்திலே, “அது இசைவனைப்பாக கட்டப்பட்ட ஒரு ஸ்தலமாக இருக்கிறது.” 137 ஆம் சங்கீதம், “எருசலேம் மனமகிழ்ச்சி உள்ள இடமாய் இருக்கிறது.” எருசலேமுக்கு நேராகத்தான் தங்களுடைய பலகனிகளை திறந்து வைத்து பரிசுத்தவான்கள் தினமும் மூன்று வேளை, ஐந்து வேளை, ஏழு வேளை ஜெபம் பண்ணினார்கள். தானியேல் அந்த பலகணி திறந்திருக்க ஜெபம் பண்ணினார் என்று தானியேல் ஆறாம் அதிகாரம் இரண்டாம் வசனத்திலிருந்து பத்தாம் வசனம் வரையிலும் வாசிக்கும் போது நாம் தெரிந்து கொள்கிறோம். அருமையான தேவனுடைய பிள்ளைகளே, எருசலேமுக்காக ஆண்டவர் பாரம் கொண்டார். லூக்கா 19:41லே, எருசலேமே எருசலேமே, நகரத்தை பார்த்து பார்த்தபோது அதற்காக கண்ணீர் விட்டு அழுது, “எருசலேமே, கோழி தன்னுடைய குஞ்சுகளை சட்டைகளின் கீழாய் சேர்த்துக் கொள்வது போல உன்னை சேர்த்துக்கொள்ள மனதாய் இருந்தேனே.” அருமையான தேவனுடைய பிள்ளைகளே, எருசலேமுக்காகத்தான் பாரம் கொண்டார். அடிக்கடி சீஷர்களோடு எருசலேம் தேவாலயத்துக்கு போனார். அவர் ஒலிவ மலைக்கு சீஷர்களோடு போனார். காட்டிக் கொடுக்கப்படுகிற ராத்திரியிலும் கூட பாட்டை பாடிக்கொண்டு எருசலேமுக்கு போனார் என்று சொல்லப்பட்டிருக்கிறதே தவிர, சீயோனுக்கு சென்றார் என்று சொல்லப்படவே இல்லை. ஆண்டவர் திரும்பி வரும்போது கூட சீயோன் மலையின் மேல நிற்பார் என்று சொல்லப்படவில்லை. சகரியா 14 ஆம் அதிகாரம் நாலாம் வசனம் சொல்லுகிறது: “அந்நாளிலே ஒலிவ மலைக்கு கிழக்கே இருக்கிற எருசலேமிலே, எருசலேமுக்கு கிழக்கே இருக்கிற ஒலிவோ மலையில் அவருடைய பாதங்கள் நிற்கும்.” சீயோன் மலை நிற்கும் என்று சொல்லப்படவில்லை. புதிய வானம், புதிய பூமி, புதிய எருசலேம் என்று சொல்லப்படுகிற விதத்திலே, புதிய சீயோன் என்று ஆண்டவர் வெளிப்படுத்தல் 21 ஆம் அதிகாரத்தில் சொல்லவில்லை. ஆண்டவர் ரொம்ப முக்கியப்படுத்தினது எருசலேமை தவிர சீயோன் இல்லை. ஆனால் இந்த முதல் வசனத்தை பிடித்து, இந்த நாலாம் வசனத்தில் “இடருண்டு இடுதலுக்கு கல்லாய் இருந்த” அதை, அந்த அதை பெரிய பெரிய உபதேசமாக கொண்டு வந்து, அதுல “நாங்க தான் இருப்போம், நீங்க இருக்க மாட்டோம்” ன்னு சொல்லி, இயேசுவை பாடுறதை பார்க்கிலும் சீயோனையே பாடி பாடி பாடி, பரிதாபப்பட்ட விசுவாசிகளையும் பாட வச்சு. நான் அந்த சபையை தாக்கணும்னு நான் சொல்லவில்லை. உண்மையிலேயே சொல்லுகிறேன்: சிபிஎம்ல ரொம்ப அருமையான தேவனுடைய ஊழியக்காரர் சந்தித்திருக்கிறேன், அருமையான பரிசுத்தவான்களை நான் சந்தித்திருக்கிறேன், அருமையான ஜெப வீரர்களை நான் சந்தித்திருக்கிறேன். தனிப்பட்ட முறையிலே அவர்களை நான் குற்றம் கண்டுபிடிப்பதில் எவ்வளவு குற்றமாக இருந்தாலும் சரி. சில சிபிஎம் ஊழியக்காரங்க அதிலிருந்து தள்ளப்பட்டு எங்களுடைய ஆபீஸ்ல வேலைக்கு சேர்ந்த சிபிஎம் சிஸ்டர்ஸ், எங்களுடைய ஆபீஸ்ல வேலைக்கு சேர்ந்தாங்க, அவங்க சொன்ன காரியங்கள் எல்லாம் நான் சொல்ல பிரியப்படல. ஆனால் உபதேசம் என்று வரும்போது, தவறான உபதேசத்தை நாம் சுட்டிக் காண்பிக்க வேண்டியது அவசியம். ஒரு தனிப்பட்ட மனிதனை குற்றம் சாட்ட நான் வரவில்லை. எல்லாரும் பாவம் செய்தல். ஆனால் இதை வைத்துக்கொண்டு, “எந்த சர்ச்ல வேலை செய்கிறார்? உங்க பாஸ்டர் பேர் யாரு? ஜான் ஹென்ரி. அவர் கல்யாணம் ஆனவரா? கல்யாணம் ஆனவர் இல்லையா? கல்யாணம் ஆனவர், ஒரு பையன் இருக்கிறான். அவர் உங்களை சீயோனுக்கு அழைச்சிட்டு போகமாட்டார். அவரை நம்பி அந்த சர்ச்சுக்கு போய் பிரயோஜனம் இல்லை. எங்க சர்ச்ல சேரு, நாங்க தான் சீயோனுக்கு போறவங்க, நாங்க தான் லட்சத்து 44000 பேரு. எங்க உபதேசத்தின்படி நின்னால் தான் அந்த சீயோன் மலைக்கு நீங்க போக முடியும். ஜான் என்றை நம்பி ஏமாந்துறாதீங்க.” அப்படி யாராவது சொன்னாங்கன்னா, நீங்க தைரியமா பதில் சொல்றதுக்காக தான் இவ்வளவு விளக்கத்தை நான் கொடுத்துட்டு வரேன். யாராவது சிபிஎம் விசுவாசிகள் இருந்தா, தயவு செய்து கல்லெறியாதீங்க, மன்னிச்சுக்கோங்க கொள்ளுங்கள்.

சீயோனுக்கு யார் வருவார்கள்? சங்கீதம் 35 கடைசி வசனம் சொல்லுகிறது: “கர்த்தரால் மீட்கப்பட்டவர்கள் திரும்பி ஆனந்த கழிப்புடன் பாடி சீயோனுக்கு வருவார்கள்.” யார் வருவா? கர்த்தரால், கர்த்தரால் மீட்கப்பட்டவர். அன்னகர்கள் என்று அல்ல, பிரதிஷ்டை செய்யப்பட்டவர்கள் என்று அல்ல, ஸ்திரீயினால் படைப்படாதவர்கள் என்று அல்ல, தங்கள் ஜீவனை வெறுத்தவர்கள் என்று, தங்களைத் தாங்களே புகழ்ந்து கொண்டிருக்கிறவர்கள் அல்ல. மீட்கப்பட்டவர்கள், மீட்கப்பட்டவர்கள் திரும்பி ஆனந்த கழிப்போடு பாடி சீயோனுக்கு வருவார்கள். அருமையான தேவனுடைய பிள்ளைகளே, இயேசுவினுடைய இரத்தத்தால் நாம் மீட்கப்பட்டிருக்கிறோம். அவருடைய வசனத்தாலே மீட்கப்பட்டிருக்கிறோம். பரிசுத்த ஆவியாலும் அபிஷேகத்தாலும் நம்ம மீட்கப்பட்டிருக்கிறோம். பாதாளத்தின் வல்லமைக்கு மீட்கப்பட்டிருக்கிறோம். அக்கினியும் கந்தமும் எரிகிற கடலுக்கு மீட்கப்பட்டிருக்கிறோம். சாபங்களுக்கு மீட்கப்பட்டிருக்கிறோம். வியாதிகளுக்கு மீட்கப்பட்டிருக்கிறோம். நமக்கு ஒரு பெரிய மீட்பர் உண்டு. பரலோகத்திலிருந்து பூமியிலே இறங்கி வந்து மரண பரியந்தம் தன்னை தாழ்த்தி, கல்வாரி சிலுவையிலே ஜீவனை கொடுத்து, இரத்த கிரயத்தை செலுத்தி நம்மை மீட்டிருக்கிறார். அவர் மீட்பர், அவர் மீட்பர், அவர் மீட்பர். யோபு பக்தன் முழங்கி, “சொந்த என் மீட்பர் உயிரோடு இருக்கிறார், கடைசி நாளில் பூமியின் மேல் நிற்பார்” என்று நான் அறிந்திருக்கிறேன். ஆமென், அல்லேலூயா! அருமையான தேவனுடைய பிள்ளைகளே, கர்த்தரால் மீட்கப்பட்டிருக்கிறேன். உங்களுக்கு ஒரு நம்பிக்கை இருந்தால், நீங்க சீயோனுக்கு நிச்சயமாக வருவீங்க. அதுக்காக நீங்க கட்டின மனைவியை தொறந்து சந்நியாசி போகணும்னு தேவையில்லை. அதுக்காக ஒரு கூட்டத்தில் போய் சேரணும்னு தேவையும் இல்லை. கர்த்தரால் மீட்கப்பட்டால், உங்களுக்கு ஒரு பெரிய நம்பிக்கை உண்டு.

சரி, முதலாம் வசனம் மீண்டும் வாசிக்கிறேன்: “பின்பு நான் பார்த்தபோது, இதோ சீயோன் மலையின் மேல் ஆட்டுக்குட்டியையும், அவரோடு கூட அவருடைய பிதாவின் நாமம் தங்கள் நெற்றியில் தரிக்கப்பட்டது.” இந்த 144000 பேரை பார்க்கும்போது, அவருடைய நெற்றியிலே ஒன்று தரிக்கப்பட்டிருக்கிறது. ஒன்று ஆட்டுக்குட்டியான நாமம், அடுத்தது பிதாவின் நாமம். உங்களுடைய நெற்றியிலே “கர்த்தருக்கு பரிசுத்தம்” என்பது முத்திரை வெட்டாக எழுதப்பட்டிருக்கணும். உங்களுடைய நெற்றியிலே பிதாவின் நாமம் தரிக்கப்பட்டிருக்கணும். உங்களுடைய நெற்றியிலே அந்திகிறிஸ்து தன்னுடைய நாமமாகிய 666 தரிக்கிறதற்கு ஒப்புக்கொடுக்கக்கூடாது. உங்களுடைய நெற்றியிலே “நாங்கள் இவனுக்கு சொந்தமானவர்” என்று சொல்லி அந்த சிவப்பு பொட்டை, நெத்திக்கண்ணுக்கு அடையாளமான, நெத்தில வரைஞ்சிடவும் கூடாது. இன்றைக்கு நிறைய கிறிஸ்தவங்க கூட ஒரு ஸ்டைலுக்கு அப்படி வச்சிட்டு வராங்க. சாத்தான் அதை பார்த்துகிட்டு அந்த நெத்தி வழியாவே உள்ள போந்துருவான். “என் ஆளு, என் ஆசாமி, என் முத்திரை எல்லாம் தரிச்சிருக்கிறான்.” முத்திரைன்னா இன் ஆளுக்கு சொந்தமானவன் தானே அர்த்தம். பிதாவுக்கு சொந்தமானவனா இருந்தா பிதாவினுடைய முத்திரை தரிக்கப்பட்டிருக்கணும். இங்க பார்த்தா வடகலை தென்கலை விஷ்ணுவோட ஒரு பெரிய நாமம் பட்டை, இந்த பக்கம் ஒரு பெரிய பட்டை. அதை பார்த்தே சாத்தான் உள்ள பூந்துருவான். பிதாவின் நாமம் உங்களுடைய நேற்றையில் தெரிவிக்கணும் என்றால் என்ன அர்த்தம்? என்றால், அந்த பிதாவின் சுபாவம் உங்களுடைய வாழ்க்கையில் வெளிப்பட வேண்டும். பிதாவினுடைய குணாதிசயம் உங்களில் வெளிப்படனும். “பிதா” என்று அழைக்கப்படுகிறது ஒரு விசேஷமான அனுபவம் உங்களுக்கு. அந்தப் பிதாக்களின் அபிஷேகம் இருக்கணும். மூன்று முற்பிதாக்களை குறித்து வேதம் சொல்லுகிறது: ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு – மூன்று முற்பிதாக்கள். அவங்க மேல ஒரு பிதாக்களின் அபிஷேகம் இருந்தது. உங்க மேல ஒரு பிதாவின் அபிஷேகத்தை இருந்தால், நீங்க யாரை பார்த்தாலும் உங்களுடைய பிள்ளைகளாக, உம்முடைய மகனாக பார்ப்பீங்க. உங்களுடைய கண் இச்சை வர முடியாது. ஒரு தகப்பனுடைய இருதயத்தோடு இருக்கும்போது, ஒரு பிதாக்களின் அபிஷேகத்தோடு இருக்கும்போது, எலியா – எலியாவை எப்போது? எலிசா ஒரு பிதாவின் அபிஷேகத்துக்கு உரியவராக, தகப்பனாகவே பார்த்தார். எலியா எடுத்துக்கொள்ளப்படும்போது எலியாவை பார்த்து சொன்னார்: “என் தகப்பனே, இஸ்ரவேலுக்கு ரதமும் குதிரையும் வீரருமாய் இருந்தவரே.” உண்மையான தகப்பன் வேற, உண்மையான தகப்பனுடைய 12 ஏர்களை பூட்டிக்கொண்டு விழுந்தவர் தான் எலிசா. அந்த உண்மையான தகப்பனை, உலகப்பிரகாரமான தகப்பனை, அவர் தகப்பன் என்று சொல்லல. அந்த பிதாக்களின் அபிஷேகம் நிறைந்தவரைத்தான் தகப்பன் என்று சொன்னார். தாவீதுக்கு உலகப்பிரகாரமாய் ஈசா தகப்பனாய் இருந்தார். ஆனால் சாமுவேலை தான் “தகப்பனே” என்று அவரிடத்தில் போய் ஆலோசனை கேட்டார். நம்முடைய தேசத்தில் நிறைய பிரசங்கிமார் உண்டு, சுவிசேஷர் உண்டு, போதகர் உண்டு. அப்போஸ்தலனாகிய பவுல் சொன்னார்: “உங்களுக்குள்ள நிறைய உபாத்திமார் இருந்தாலும் உங்களுக்கு தகப்பன்மார் இல்லையே, ஆவிக்குரிய தகப்பன்மார் இல்லையே, உங்களுக்கு தகப்பன்மார் இல்லையே.” ஒரு பாதர்ஸ் ஹார்ட், ஒரு பாதர்ஸ் அனாய். 103 சங்கீதத்தில், “தகப்பன் தன் பிள்ளைக்கு இறங்குகிறது போல” ஒரு தகப்பனுடைய அனாய். உண்மையாய் ஒவ்வொரு பாஸ்டர்ஸ்க்கும், எந்த ஊழியக்காரனாலும் அந்த தகப்பனுடைய இருதயம் இருக்கும். அப்பதான் ஒருவர் தன் கஷ்டத்தை சொல்லும்போது, தனக்கே அந்த கஷ்டம் ஏற்பட்டு விட்டதாய், தன்னுடைய சொந்த பிள்ளைகளுக்கு அப்படி கஷ்டம் ஏற்பட்டு விட்டதாய், அவர் பாரம் கொண்டு ஜெபிக்க முடியும். த பாதர்ஸ் அனாய். அப்போஸ்தலனாகிய பவுல் சொல்லுகிறார்: “நான் உங்களை சுவிசேஷத்தினாலே பெற்றேன். தகப்பன் தன் பிள்ளைக்கு புத்தி சொல்லுகிறது போல நான் உங்களுக்கு புத்தி சொன்னேன்.” திமோத்தே அழைக்கும்போது, “விசுவாசத்திலே என் உத்தம குமாரனாகிய திமோத்தேக்கு எழுதுவதாவது” – ஒரு பாதர் சொன்னா அதுபோல. மறுகளுக்கு ஒரு தாயுடைய அனாய் இருக்கும். சாராள் விசுவாசிகளுக்கெல்லாம் தாய் என்று அழைக்கப்பட்டார். தெபரால், “இஸ்ரவேலிலே நான் தாயாக எழும்பும் அளவும் கிராமங்கள் பாழாய் போயிற்று.” த மதர்ஸ் அனாய் ஒரு விசேஷமானது. அப்பதான் தன்னுடைய கர்ப்பத்தை, ஸ்திரீயானவள் பிள்ளைக்கு இறங்காமல், பாலகனை மறக்க முடியாமல், இந்த பிள்ளைக்காக அவள் ஜெபிப்பாள். ஒரு தாய் தேற்றுவது போல மற்றவர்களை, விசுவாசிகளை தேற்ற வேண்டும். ஏசாயா 66:13 வாசிக்கிறோமே – அந்த தாய் உடைய அனாய்.

“பின்பு நான் பார்த்தபோது, இதோ சீயோன் மலையிலும் ஆட்டுக்குட்டியானவரோடு கூட, பிதாவின் நாமம் தங்கள் நெற்றிகளில் தரிப்பிக்கப்பட்டது.” எல்லாரும் பார்க்கக்கூடிய ஒரு நெற்றி தான். எண்ணங்கள், சிந்தைகள் எல்லாம் வந்து சேருகிற இடம் நெற்றி தான். எல்லா நரம்பு மண்டலமும் சேருகிற இடம் அந்த நெற்றி தான். நம்முடைய மனிதனுடைய ஞாபக சக்தி, மனுஷனுடைய அறிவு திறன் எல்லாம் விளங்குகிற இடம் நெற்றி தான். அந்த நெற்றியை நீங்கள் கர்த்தருக்கென்று ஒப்புக்கொடுத்து, பிதாவினுடைய நாமம் உங்களுடைய நெற்றியிலே தரிக்கப்படும்படி செய்யும்போது, அது ஒரு பெரிய ஆசீர்வாதம்.

இரண்டாம் வசனத்துக்கு நேராய் செல்வோம்: “அல்லாமலும் பெருவெள்ளத்தின் இறைச்சலைப் போலவும் இடிமுழக்கங்களைப் போலவும் ஒரு சத்தம் வானத்திலிருந்து உண்டாக கேட்டேன். நான் கேட்ட சத்தம் சுரமண்டலக்காரர் தங்கள் சுரமண்டலங்களை வாசிக்கிற ஓசையை போல இருந்தது.” பரலோகத்தில் ஒரு பெரிய சத்தம் கேட்கிறது. மூன்று காரியத்தை அதற்கு ஒப்பிட்டு சொல்லுகிறது. ஒன்று: இடிமுழக்கம் போல இருந்தது. இரண்டாவது: பெருவெள்ளத்தை இறைச்சலைப் போல இருந்தது. மூன்றாவது: சுரமண்டலக் கார்கள் இசைக்கிற இசை போல இருந்தது. “சுரமண்டலம்” என்று சொல்லி சொல்வது “கிண்ணரம்” என்பது அர்த்தம். நம்முடைய கித்தார் இருக்கிறது, நரம்பிலே செய்யப்பட்ட ஒரு அழகான வார்த்தையை கருவி. இந்த கிண்ணரத்தை அல்லது சுரமண்டலத்தை கண்டுபிடித்தவனுடைய பெயர் யாபேல். ஆதியாகமம் நாலாம் அதிகாரம் 21 ஆம் வசனத்தில் வாசிக்கிறோம். ஒரு பக்கம் அந்த 144 ஆயிரம் பேர் பாடுகிறார்கள், இரண்டாவது இசைக்கருவிகளை மீட்டுகிறார்கள். அது பெருவெள்ளத்து இரைச்சல் போல, ஒரு மெஜஸ்டிக் வாய்ஸ், ஒரு ராஜரீக சத்தம், உன்னதமானவருக்கே உரித்தான ஒரு ஆராதனை. இடிமுழக்கம், பெருவெள்ளத்தில் – அதை நீங்கள் வெளிப்படுத்தல் நாலாம் அதிகாரம் ஐந்தாம் வசனத்தில் வாசிக்கலாம். பாடுகிற பாடல் என்பது பூமியில் நாம் வாழ்ந்த வாழ்க்கை தான். பாடும் இசைக்கருவி என்பது பூமியிலே நம்முடைய ஊழியம் தான். இசைக்கருவிகளாய் மாறும். பரலோகத்திலே நம்முடைய உதடை கொண்டு பாடப்போவதில்லை. பூமியிலே ஆண்டவரை எவ்விதமாய் நாம் அனுபவித்தோம், எவ்விதமாய் அவரை நேசித்தோம், அந்த நேசம் தான் பரலோகத்திலே ஒரு பெரிய இடிமுழக்கம் போல, பெருவெள்ளத்தை போல, சூரமண்டலக்காரங்களுடைய கீதங்களைப் போல எழும்பும். நாம் இந்த மாமிச சரீரத்தில் எப்படி வாயை வைத்துக்கொண்டு, நாக்கை வைத்துக்கொண்டு பாடுகிறோமோ, பரலோகத்தில் அப்படி நாம் பாடப்போவதில்லை. அங்கே இந்த சரீரம் இருப்பதில்லை. நமக்கு உயிர்த்தெழுந்த மறுமழம் அடைந்த மகிமையின் மேல் மகிமை ஒரு சரீரம் இருக்கும். பூமியிலே நாம் ஆத்துமா நேசரோடு இணைந்திருந்த ஒரு வாழ்க்கை தான் பரலோகத்தில் ஒரு பாடலாய் இருக்கும். இந்த பூமியிலே நாம் செய்த தியாகங்களும் ஆத்தும ஆதாயங்கள் தான் இசைக்கருவிகளாய் கர்த்தருடைய ஆலயத்திலே. ஆகவேதான் இந்த பாடலை குறித்து சொல்லுகிறது: “இந்த பாடலை ஒருவரும் கற்றுக்கொள்ளக் கூடாததாய் இருந்தது.” இது மீட்கப்பட்டவர்களுடைய பாடம். உலகத்தில் எந்த மியூசிசியனும், எந்த சினிமாக்காரனும், பரலோகத்தில் பாடுகிற பரிசுத்தவான்கள் நின்று, அவனுடைய வாழ்க்கையே ஒரு ஆராதனை மாறி, அவருடைய ஊழியங்களே இசைக்கருவிகளாய் மாறுகிற அந்த பாடலை உலகத்தில் உள்ளவன் ஒருவனும் கற்றுக்கொள்ள முடியாது.

[இசை]

[இசை]