Transcription
நமது ஸ்ரீ சங்கரா தொலைக்காட்சியில் 144 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டும் நம் வாழ்நாளில் வரும் மகா கும்பமே மோட்ச நம்பிக்கையில் கோடிகளில் பக்தர்கள், ரிஷிகள் மற்றும் சந்நியாசிகள் நீராடும் நிகழ்வான சாகி ஸ்நானத்தின் போது எடுக்கப்படும் திரிவேணி சங்கமம் புண்ணிய தீர்த்தம் உங்கள் ஸ்ரீ சங்கரா டிவி வழங்கவிருக்கிறது.
மேலும் www.shankaraworld.com என்ற இணையதளத்திற்கு சென்று முன்பதிவு செய்யலாம்.
[கரகோஷம்]
ஓம் ஸ்ரீகாந்த துருகினோபுன்யுதபன ஸ்கந்தேந்திர நந்தியாதயஹா பிராசீனோ குரவோபியஸ்ய கருணாலேஷாத் கதா கௌரவம் தம் சர்வாதி குரும் மனோஜ்ய வபுஷம் மந்தஸ்மிதாலிருதம் சின்முத் முத்ரபாணி நலினம் சித்தே சிவம் குர்மகே நமஸ்தே நமஸ்தயே நமஸ்தகீனாம் புரோகானாம் சக்ஷு நமோ திவே நம பிரதிபே நமஹ.
சங்கரா தொலைக்காட்சி நேயர்களுக்கு நமஸ்காரம்.
லலிதா சகஸ்ரநாமம் சிந்தித்துக் கொண்டிருக்கிறோம். 999 வது நாமாவளி சிவ சக்தி ஐக்கிய ரூபினி ஸ்ரீ சிவா சிவ சக்தி ஐக்கிய ரூபினே லலிதாம்பிகா.
நான் சென்ற நாமாவளியிலே சொன்னேன் கடைசி மூன்று நாமாவளிகள் லலிதா சகஸ்ரநாமத்தினுடைய அத்தியந்த சாரமா இருக்கு.
இந்த நாமாவளி என்ன சொல்றது அப்படின்னா இதுக்கு மூணு பொருளா நாம சிந்திக்கலாம்.
சிவன் தனியா இருக்கு, சக்தி தனியா இருக்கு, ஐக்கியம் சேர்ந்து இருக்கிறது.
ஐக்கியம்னு சேர்ந்திருக்கிறது.
இப்ப சிவ சக்தி ரூபினி அப்படின்னா என்ன அர்த்தம்?
அப்படின்னா சிவனில் சக்தி ஒடுங்கி விடுகிற பண்பு.
அப்படி ஒரு மூர்த்தி இருக்கா?
சிவனுக்குள்ள சக்தி ஒடுங்கி இருக்காளா இருக்கா?
எப்படின்னு கேட்டீங்கன்னா தக்ஷிணாமூர்த்தி இருக்குல்ல.
அந்த தக்ஷிணாமூர்த்தி வந்து யோகத்துல இருக்கும்போது உள்ளுக்குள்ள இருதயம் யோகமாகேஸ்வரர்னு அந்த சுவாமிக்கு பேரு சப்த மாத்ருகா.
அப்படின்னு சாமி இருக்கு.
அந்த ஏழு விதமான மாதர்கள் அதுல வந்து சாமுண்டி, காளி, வைஷ்ணவி, ஐந்திரி இப்படி எல்லாம் சாமி இருக்கும்.
அதுல ஒரு பக்கம் பிள்ளையாரும் இன்னொரு பக்கத்துல யோகமாகேஸ்வரம் ஒரு சாமி இருக்கும்.
அந்த சுவாமி எப்படி இருக்கும் அப்படின்னு கேட்டீங்கன்னா யோகப்பட்டம் தரிச்சிருப்பா.
ஐயப்பன் எப்படி உட்கார்ந்து இருக்கார் அந்த மாதிரி உட்கார்ந்து இருப்பார்.
சிவபெருமான் கிட்டத்தட்ட அய்யனார் அந்த பட்டைய தரிச்சிருப்பார்.
அந்த மாதிரி யோகப்பட்டம் தரிச்சு ஒரு சிவபெருமானா வச்சிருப்பார்.
மான்முழு இருக்கும் அத நம்ம பார்த்தோம்னா தான் புரியும்.
அதுதான் சிவ சக்தி ரூபினி.
அதாவது என்ன அர்த்தம்?
அப்படின்னா சிவனுக்குள்ள சக்தி முழுவதுமாய் ஒடுங்கிய உருவமா தியானம் பண்றவர்.
அவருக்கு பேரு யோகமாகேஸ்வரர்னு பேரு.
யோகத்துல அம்பாள் அவர் அவர் உள்ளுக்குள்ள நினைக்கிறார்.
அப்ப சிவன் சிவனுக்கு உள்ளுக்குள்ள அம்பாள் போயிடுது.
அதுதான் சிவ சக்தி ஐக்கிய ரூபி.
இது இப்படி எடுத்துக்கலாம்.
அதுக்கு அடுத்து இரண்டாவது மூர்த்தி இருக்கு.
என்னன்னா சிவன் சக்திக்குள்ள ஐக்கியமா இருக்குது.
இது சக்தி சிவனுக்குள்ள ஐக்கியமா இருக்குது.
ரொம்ப கவனமா பார்க்கணும்.
அது என்ன என்னமூர்த்தி அப்படின்னா நம்ப சென்னையை எடுத்த மாங்காடுல ஒரு அம்பாள்.
அந்த அம்பாள் பஞ்சாக்னி மத்தியில ஒத்த கால்ல நின்னுண்டு ஊசி மேல நின்னுண்டு மேல அச்சமாலை வச்சுண்டு தபஸ் பண்றதா இருக்கும்.
தவக்கோல காமாட்சி அப்படின்னு சொல்ற வழக்கத்துல சொல்றா.
ஆனா இந்த நாமாவலியோட ரகசியம் அதான் என்னன்னு கேட்டா அவ ஒத்த கால்ல நிக்கிறாள் உள்ள ஜெபம் பண்றாங்கிறதுக்காக மேல அந்த அட்சமாலையை சொல்றா.
பஞ்சாக்ஷர ஜெபம் பண்றா.
அப்படி ஜெபம் பண்றதுனால அம்பாளுக்குள்ள சிவ மந்திர சொரூபமா ஒடுங்கி இருக்கார்.
சிவ சக்திக்கு ரூபி இந்த இடத்துல யோகமாகேஸ்வர்ல மாகேஸ்வரர் தான் இருக்கார்.
அம்பாளை காணும் அம்பாள ரூபம் உள்ளுக்குள்ள இருக்கா.
சிவனுக்கு குழுவுக்குள்ள அதே சமயத்துல சக்திக்குள்ள சிவம் இருக்கு.
இந்த மூர்த்தியை சிறப்பா சொல்லுவார்.
அப்படிப்பட்டவர் தவளே.
இவள் எங்கள் சங்கரனாரு மனை மங்களமாம்.
அவளே அவர் தமக்கு அன்னையும் ஆயினல் ஆகையினால் கடவுளர் யாவர்க்கும் மேலே இறைவியும்.
அதாவது இந்த தவக்கோல காமாட்சி தான் தவலே.
அந்த வார்த்தையை அப்படியே பயன்படுத்தி இருக்கா.
தபஸ் பண்ற காமாட்சி காமாட்சின்னு சொல்ற வழக்கம்.
அம்பாள் தபசுல இருக்கா.
அந்த தவத்துல பண்ணும்போது உள்ளுக்குள்ள பஞ்சாட்சர ஜெபம் ஓடுறது.
சக்தி உருவமா இருக்கா.
சிவம் வந்து அருவமா இருக்கு.
அதனால சிவ சக்தி ஐக்கிய ரூபினி அப்படின்னு பேரு சரி.
அப்புறம் அப்படின்னா இந்த ரெண்டு வடிவம் ஆயிருச்சா.
அதுக்கு அடுத்து இன்னொரு வடிவம் இருக்கு.
என்னன்னு கேட்டீங்கன்னா எந்த கோயில்ல ரகசியம்னு இருக்கோ.
ரகசியம்னு சொல்லுவா.
இது பெரும்பாலும் பார்த்தீங்கன்னா நடராஜா கிட்ட தான் இந்த ரகசியம் இருக்கும்.
இப்ப திருக்கடையூர்ல மிருஞ்சய ரகசியம்னு இருக்கும் சுவாமி ஆடுறதா தான் இருக்கு.
காலசுமாரமூர்த்தி ஆடுறதா தான் திருக்கோலம் இருக்கு.
உதைக்கிறதா இல்ல அதே மாதிரி பார்த்தீங்கன்னா தாண்டவம் ஆடுறார்.
18 தாண்டவம் ஆடின இடம் திருக்கடையூர்.
அதே மாதிரி ஒன்பது தாண்டவம் ஆடின இடம் திருவென்காடு.
இங்க எல்லாம் சபை இருக்கு.
மகுடாகமத்துல நடராஜாவுக்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கா.
அந்த மூர்த்திக்கு இப்ப நம்ம அங்கெல்லாம் சொல்றதை விட சிதம்பரத்தை சொன்னா புரியும்னால சொல்றேன்.
சிதம்பரத்துல பார்த்தீங்கன்னா சபை பொற்சபை.
அது வெள்ளி சமயம்பா தாமரை சபை என்பா சித் சபை என்பா சித்திர சபைன்னு சொல்றா.
அது எதுவா வேணாலும் இருக்கட்டும்.
அந்த மாதிரி சபைன்னு இருந்தால் ரகசியம்னு இருக்கும்.
அந்த ரகசியம்னு இருந்தால் அப்படி மகுடாகமத்தில் ரகசியம்னு ஒரு சாமிக்கு பேர் சொன்னா அதுக்கு முன்னாடி ஒரு திரை போட்டிருப்பா.
அந்த திரையை அனாவசியமா திறக்க மாட்டார்.
பூஜை பண்ற ஒரு ஒரு நொடி அல்லது ரெண்டு நொடி அதை திறந்து தீவான திரும்பி மூடிருவா.
அதுதான் ரகசியம்னு சொல்றது.
திருவென்காட்டுல பார்த்தீங்கன்னா நடராஜாவுக்கு பின்னாடி இருக்கும் சிதம்பரத்துல நீங்க எல்லாம் ரொம்ப பிரசித்தமா பார்த்திருப்பீர்கள்.
அந்த திரையை விளக்கி தீபார்னு காட்டுறதை எல்லாம் நீங்க பார்த்திருப்பீர்கள்.
அது மாதிரி ரகசியம் திருக்கடையூர்ல மிருத்துஞ்ச ரகசியம் பக்கத்துல இருக்கு.
அதை மூடியும் மறைச்சும் காட்டுவார்.
அந்த மாதிரி ஒவ்வொரு இடத்துல இந்த ரகசியம்ங்கிறது.
இது எந்த இடத்துல ரகசியம்னு இருக்கோ, எந்த இடத்துல திரை போட்டு திரோதான சக்தி மறைக்கப்பட்டிருக்கோ, எந்த இடத்துல சபை இருக்கோ, நடராஜா சபை.
அந்த சபையில சிவசக்தி ஐக்கிய ரூபமா இருக்கா.
அந்த இடத்துல அவா ரெண்டு பேரும் சேர்ந்து இருக்கா.
அந்த சேர்ந்து இருக்கிறதை யாரும் பார்க்கிறது இல்லை.
அப்படிங்கிற திரை போட்டிருக்கும் நித்திய திரை.
அது ஒரு ஆத்துக்கார் வைஃப்.
ரெண்டு பேரும் சேர்ந்து இருக்கான்னா கதவை தட்டிட்டு தான் உள்ள போகணும்.
அந்த மாதிரி இந்த திரை போட்டிருப்பா.
அப்ப சிவ சக்தி ஐக்கிய ரூபினி ரெண்டு பேருமே ஒருத்தரோடு ஒருத்தர் இணைஞ்சிருக்கா.
அப்படி இருக்கக்கூடிய பண்பு தான் சிவசக்தி ஐக்கிய ரூபினின்னு சொல்றோம்.
அதெல்லாம் சரிதான்.
யோகமாகேஸ்வரனும் தனியா ஒரு வடிவம் இருக்கு.
தவக்கோல காமாட்சியா இருக்கக்கூடிய தனி வடிவமா இருக்கு.
இவா ரெண்டு பேருமே சேர்ந்து ஒன்றோடு ஒன்று ஒருத்தர் மடியில ஒருத்தர் உட்கார்ந்து இருக்கிற மாதிரி.
அப்படி எல்லாம் சிலை இருக்கு.
இப்ப உமா மகேஸ்வரர் அப்படின்னா அப்படி மடியில உட்கார வச்சிருப்பா.
அந்த மாதிரி அப்படி வச்சுக்கோங்களேன்.
அவா ரெண்டு பேரும் இருக்கான்னு அர்த்தம்.
அந்த மாதிரி இருக்கக்கூடியதையும் சிவசக்தி ரெண்டு பேரும் சேர்ந்து ஒரே சிலையா இருக்கும்.
ரெண்டு சிலை இருக்கக்கூடாது.
பின்னாசனம் ஏகாசனம்னு அதுக்கு பேரு.
அம்பாள் தனியா சோமாஸ்கந்தர் தனியா உட்கார்ந்து இருப்பார்.
அம்பாள் நடுப்புற குழந்தை இருக்கும் தள்ளி உட்கார்ந்து இருப்பார்.
அம்பாள் அப்படி இருக்கக்கூடாது.
இந்த இடத்துல சிற்பி அதை நுட்பத்தை உணர்த்துறதுக்காக இந்த லட்சுமி நாராயணர்னு வைணவத்தில் ஒரு சாமி இருக்கு.
அதை லட்சுமி மடியிலேயே உட்கார்த்தி வச்சிருப்பார்.
இப்ப வல்லபா கணபதி மடியிலேயே உட்கார்த்தி வச்சிருப்பார்.
அந்த மாதிரி சிவபெருமான் தனது மடிமையிலே பார்வதியை அமர்த்தி இருப்பார்.
அந்த மாதிரி இருக்கிறது தான் சிவசக்தி ரூபினி.
அப்படின்னு இந்த மூணு மூன்று சாமியையும் வணங்குறதை பத்தின விவரத்தை தான் இந்த லலிதா சகஸ்ரநாமம் இதுவரைக்கும் மிகவா சொல்லிட்டே வந்திருக்குன்னு அர்த்தம்.
இதுக்கு மேல இன்னும் ஒரே ஒரு நாமலை தான் இருக்கு.
அதனால எல்லா ரகசியமும் இதுக்குள்ள தான் இருக்கு.
இந்த மூன்று தெய்வத்தினுடைய வழிபாட்டை தான் மிக விளக்கமாக பேசுகிறது.
சக்தி தழைக்கும் சிவம் அழகா சொல்லுவார்.
என்ன சக்தியும் சக்தி தழைக்கும் சிவமும் அப்படிம்பார்.
அதனால சாக்த சமயம் சிவனையும் சக்தியையும் சிவனுக்கு சமமான அப்படிங்கிற அந்த விஷயத்துல வச்சு சாக்த சித்தாந்தம் உறுதி பண்ணுவான் முடிவு.
அதனால சிவசக்தி ஐக்கிய ரூபம்.
அதெல்லாம் சரிதான்.
இந்த சிவசக்தி ஐக்கிய ரூபினி அப்படிங்கிற நாமாவளியை படிச்சா நீங்க லலிதா சகஸ்ர நாமம் ஆயிரம் நாமாவளி சொல்லணும்னு அவசியம் இல்லை.
இந்த ஒரு நாமாவளி சொன்னா போதும்.
இந்த ஒரு நாமாவளி சொன்னா இப்ப இந்த உதாரணத்துக்கு நான் சொல்றேன்.
ஏன்னா ஜனங்க லோக பிரசித்தமா எது புடிச்சிட்டு இருக்காங்களோ அதை சொன்னா ஈசியா இருக்கும்.
ஸ்ரீராம ராம ராமேதி ரமே ராமே மனோரமே அப்படின்னு கடைசியில ஒரு வாக்கியத்தை சொல்லி இதை சொல்லு.
சகஸ்ரநாம பலன் வரும் அப்படிம்பா.
அந்த மாதிரி லலிதா சகஸ்ரநாமம் என்ன சொல்லு அப்படின்னா 999 வது நாமாவளி சிவசக்தி ரூபினின்னு சொல்லு.
லலிதா சகஸ்ரநாமத்தை பாராயணம் பண்ணின பலன் வரும்.
ஆயிரம் நாமாக்களையும் சொன்ன பலன் இந்த ஒரு நாமாவுல இருக்கு.
இரண்டாவது இது மந்திர ரகசியம்.
மூணாவது இது ஒரு தந்திர ரகசியம்.
தந்திரம் இந்த சிவசத்திய ரூபனியில தந்திர விஷயங்கள் நிறைய இருக்கு.
அதெல்லாம் ஒரு எட்டு நிமிஷத்துலயோ ஒன்பது நிமிஷத்துலயோ சொல்லி எல்லாம் முடிக்கெல்லாம் இயலாது.
இந்த நாமாவளியை பொறுத்தவரைக்கும் நமக்கு என்ன பலன் அப்படின்னா நாம என்ன நினைக்கிறோமோ அதை அம்பாள் கொடுப்பா.
காமிய பலன்னு பேரு ஆகமத்துல முதல் ஆகமத்துக்கே காமிகம்னு பேரு.
விரும்பியதை அடைவது அப்படின்னு பேரு.
நம்ம என்ன நினைச்சாலும் அதை இந்த சிவசக்திக்கு ரூபினின்னு சொல்லி தியானம் பண்ணி இந்த நடராஜா கிட்ட இருக்கக்கூடிய ரகசியமா இருந்தாலும் சரி.
யோகமாக இருந்தாலும் சரி.
தவக்கோலத்தில் தனியா இருக்கக்கூடிய காமாட்சியா இருந்தாலும் சரி.
இவாளை தரிசனம் பண்ணினால் அந்த மூர்த்தி ரகசியம்னு பேரு.
மூர்த்தி ரகசியம், கீர்த்தி ரகசியம், மந்திர ரகசியம், எந்திர ரகசியம், தந்திர ரகசியம்.
ஏகப்பட்ட ரகசியம் இருக்கு.
அந்த ரகசியத்துல இது ஒரு ரகசியம்.
அதை அறிந்து நாம தொழுதோமேயானால் நாம் நினைத்த பலனை நினைத்தவாறு அடையலாம்.
அதை பெற முயல்வோமாக.
அயம் தர்மஹா உத்தரோத்தராபிரஸ்து.
நமது ஸ்ரீ சங்கரா தொலைக்காட்சியில் 144 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டும் நம் வாழ்வு நாளில் வரும் மகா கும்பமே மோட்ச நம்பிக்கையில் கோடிகளில் பக்தர்கள், ரிஷிகள் மற்றும் சந்நியாசிகள் நீராடும் நிகழ்வான சாகி ஸ்நானத்தின் போது எடுக்கப்படும் திரிவேணி சங்கமம் புண்ணிய தீர்த்தம் உங்கள் ஸ்ரீ சங்கரா டிவி வழங்கவிருக்கிறது.
மேலும் www.shankaraworld.com என்ற இணையதளத்திற்கு சென்று முன்பதிவு செய்யலாம்.
[இசை]