📱

Get Our Mobile App

Take your business learning on the go!

Download on the App StoreGet it on Google Play

Revelation Bible Study - Part 3

Antantulla Appam58:40

Transcription

[இசை] [இசை] [இசை] اللہ வெளிப்படுத்தல் முதலாம் அதிகாரம் 13 ஆம் வசனத்திலிருந்து, அந்த ஏழு குத்து விளக்குகளின் மத்தியிலே நிலையங்கி தரித்து, மார்பருகை பொற்கச்சை கட்டியிருந்த மனுஷகுமாரனுக்கு ஒப்பானவரையும் கண்டேன். அவருடைய சிரசும் மயிரும் வெண்பஞ்சைப் போலவும், உறைந்த மழையைப் போலவும் வெண்மையாய் இருந்தது. அவருடைய கண்கள் அக்கினி ஜுவாலையைப் போல இருந்தது. அவருடைய பாதங்கள் உலைக்களத்தில் காய்ந்த பிரகாசமான வெண்கலம் போல் இருந்தது. அவருடைய சத்தம் பெருவெள்ளத்து இறைச்சலைப் போல இருந்தது. தமது கையில் ஏழு நட்சத்திரங்களை ஏந்திக் கொண்டிருந்தார். அவர் வாயிலிருந்து இருபுறமும் கருக்குள்ள பட்டயம் புறப்பட்டது. அவருடைய முகம் வல்லமையாய் பிரகாசிக்கிற சூரியனைப் போல இருந்தது. நான் அவரைக் கண்டபோது, செத்தவனைப் போல அவருடைய பாதத்தில் விழுந்தேன். அப்பொழுது அவர் தம்முடைய வலது கரத்தை என்மேல் வைத்து, என்னை நோக்கி: பயப்படாதே; நான் முந்தினவரும் பிந்தினவரும், உயிருள்ளவருமாய் இருக்கிறேன். மரித்தேன், ஆனாலும் இதோ, சதாகாலங்களிலும் உயிரோடு இருக்கிறேன். ஆமென். நான் மரணத்துக்கும் பாதாளத்துக்கும் உரிய திறவுகோள்களை உடையவராய் இருக்கிறேன். நீ கண்டவைகளையும், இருக்கிறவைகளையும், இவைகளுக்குப் பின்பு சம்பவிப்பவைகளையும் எழுது. என் கரத்தில் நீ கண்ட அந்த ஏழு நட்சத்திரங்களின் ரகசியத்தையும், ஏழு பொன் விளக்குகளின் ரகசியத்தையும் எழுது. அந்த ஏழு நட்சத்திரங்களும் ஏழு சபைகளின் தூதர்களாம். நீ கண்ட ஏழு குத்து விளக்குகளும் ஏழு சபைகளாம்.

இன்றைக்கு, இந்த வெளிப்படுத்தின விசேஷத்துக்குள்ளே போவதற்கு முன்பு சில நிமிட நேரங்கள், அவர் எப்படி மனுஷகுமாரனாய் இருந்தார், எப்படி தேவகுமாரனாய் இருக்கிறார், அதைக் குறித்து முதலாவது நீங்கள் அறிந்து கொண்டால் தான். அதுதான் இந்த உன்னத பாட்டுக்கு ஒரு சாவியாக விளங்குகிறது, வெளிப்படுத்தின விசேஷத்துக்கு ஒரு சாவியாக விளங்குகிறது. அந்த ரகசியத்தை முதலாவது நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும்.

எபேசியர் முதலாம் அதிகாரம் நாலாம் வசனத்திலே ஒரு வார்த்தை இவ்விதமாய் சொல்லுகிறது: "உலகத் தோற்றத்துக்கு முன்பாகவே நாம் அன்பிலே பரிசுத்தம் உள்ளவர்களும் குற்றமில்லாதவர்களுமாய் இருப்பதற்கு, ஆண்டவர் கிறிஸ்துவுக்குள் நம்மை தெரிந்து கொண்டாராம்." உலகத் தோற்றத்துக்கு முன்பாகவே, நம்மைக் குறித்து ஆண்டவருக்கு ஒரு திட்டம் இருந்தது, ஒரு நோக்கம் இருந்தது, ஒரு தீர்மானம் இருந்தது, ஒரு சித்தம் இருந்தது. நம்மை பிதாவாகிய தேவன் கிறிஸ்துவுக்குள் தெரிந்து கொண்டார். அப்பொழுது அவர் தேவகுமாரனாய் இருந்தார், தேவனுக்கு சமமாய் இருந்தார், ஒரு பக்கம் பிதாவோடும் மறுபக்கம் ஆவியானவரோடும் இருந்தார். இந்த திரியேக தேவனிலே ஆண்டவர் நம்மை கிறிஸ்துவுக்குள் தெரிந்து கொண்டார். அதனுடைய ரகசியம் என்ன? கிறிஸ்து மணமக்கள் மேல் மிகுந்த ஆர்வம், அன்பு, பாசம் கொண்டிருந்தார். ஆண்டவருடைய பிரியம் மணமக்களை சிருஷ்டிக்க வேண்டும் என்பதாக இருந்தது. உலகத் தோற்றத்துக்கு முன்னாலேயே அவர் தெரிந்து கொண்டவர். அப்பொழுது நாம் எப்படி இருந்தோம்? உலகத் தோற்றத்துக்கு முன்பாக எப்படி இருந்தோம்? கோடி கோடி வருஷத்துக்கு முன்பாக எப்படி இருந்தோம்? கடந்த நித்தியத்திலே நாம் எப்படி இருந்தோம்? நமக்கு சரீரம் இருந்ததில்லை. நமக்கு ஆத்துமா இருந்ததில்லை. ஆனால் ஒரு ஆவி மட்டும், மனுஷனுடைய ஆவி மட்டும் இருந்தது. நம்முடைய ஆவி எந்த தோற்றத்தில் இருந்தது? நீதிமொழி 20:27 சொல்லுகிறது: "மனுஷனுடைய ஆவி கர்த்தர் தந்த தீபம்." ஒரு மெழுகுவர்த்தியிலே ஒரு தீபம் எப்படி இருக்கிறதோ, அப்படி நாம் நம்முடைய உயிர், நம்முடைய ஜீவன் ஒரு மெழுகுவர்த்தி தீபம் போல இருந்தது.

அதனுடைய ரகசியத்தை சாலமோன் நீதிமொழி எட்டாம் அதிகாரம் 31, 31 இரண்டாம் வசனத்தில் எழுதும்போது: "உலகம் தோன்றுவதற்கு முன்பு, பர்வதங்கள் உருவாவதற்கு முன்பு, மலைகள் சமுத்திரங்கள் உண்டாவதற்கு முன்பு, இயேசு ஒரு பக்கம் பிதாவினுடைய மடியிலே செல்லப் பிள்ளையாய் இருந்தாராம்; மறுபக்கத்திலே தீபமாய் விளங்கின மனுபுத்திரரோடு மகிழ்ந்து கொண்டிருந்தார்." கோடி கோடி வருஷத்துக்கு முன்னால நாம இருந்தோம் என்று வேதம் சொல்லுகிறது. தீபமாய் இருந்தோம். இயேசுவினுடைய மடியிலே நாம் மனமகிழ்ந்து கொண்டிருந்தோம் என்று வேதம் சொல்லுகிறது. ஆதாம் ஏவாளை உருவாக்கும் போதே, சோதனைக்காரன் வருவான், அவன் விழுந்து விடுவான் என்று இயேசுவுக்கு தெரிந்த உடனே, அவர் உலகத் தோற்றத்துக்கு முன்பாகவே நமக்காக அழிக்கப்பட்ட ஆட்டுக்குட்டியாக தன்னை ஒப்புக்கொடுத்தார் என்று வெளிப்படுத்தல் 13 எட்டாம் வசனம் சொல்லுகிறது. மனுஷனை உருவாக்குவதற்கு முன்பாகவே, தன்னை அடிக்கப்படும் படியான ஒரு ஆட்டுக்குட்டியாக, தன்னை பாவ நிவாரண பலியாக, நம்முடைய சுத்திகரிக்கிற நீதிபரனாக தம்மையே ஒப்புக்கொடுத்தார். ஏதோ ஒரு காலகட்டம் வந்தது, தேவதூதர்களை உருவாக்கினார். ஏதோ ஒரு கால கட்டம் வந்தது; நீதிமொழி 28 ஏழிலே, பூமிக்கு அஸ்திபாரம் இடம் விட்டாராம். அப்பொழுது விடியகால நட்சத்திரம் எல்லாம் கம்பீரித்தார்கள் என்று நீதிமொழி 38 ஏழு வாசிக்கிறோம். ஏதோ ஒரு காலகட்டத்திலே ஆதாம் ஏவாளை உருவாக்கினார். பிறகு ஜனங்கள் பெருகிக்கொண்டே வந்தார்கள். பழைய ஏற்பாட்டு காலம் கடந்து வந்து கொண்டிருந்தது. ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு, பின்பு யோசேப்பு, பிறகு மோசே, பிறகு யோசுவா காலம், கானானை பங்கிட்ட காலம், பிறகு சவுல் ராஜா 40 வருஷம், தாவீது ராஜா 40 வருஷம். ஆனால் நம்ம எல்லாரும் இங்க உட்கார்ந்து இருக்கிற நாம் எல்லாரும் பரலோகத்தில் தீபங்களா தான் இருந்துட்டு வந்தோம்.

காலங்கள் கடந்து போனது. பிதாவாகிய தேவனுக்கு ஒரு அங்கலாய்ப்பு: "யாரை நான் அனுப்புவேன்? யார் என் காரியமாய் போவான்?" அங்கலாய்த்தபோது, பூமியிலே ஏசாயா தீர்க்கதரிசி: "இதோ நான் இருக்கும், என்னை அனுப்பு." அதே நேரம் பரலோகத்திலும் அந்த சத்தம் கேட்கிறது. தேவகுமாரனாய் அவர் பூமியில் வந்தார். மகிமையின் ராஜாவாய் அவர் வந்தார். வந்தால் மனுஷனாகிய ஆதாமுக்கு, இவர் உண்டாக்கும் ஆதாமின் சந்ததிக்கு மீட்பு உண்டாக்க முடியாது. ஆகவே பெரிய மகிமையின் ராஜாவாய் இருந்தவர், "வானம் சிங்காசனம், பூமியின் என் பாதபடி" என்று சொன்னவர், ஆவியாய் நித்திய நித்திய காலமாய் வாழுகிறவர், பூமிக்கு வரவேண்டும் என்றால் ஒரு மனிதனைப் போல இறங்கி வரணும்.

பில்லிகிராம் ஒரு கூட்டத்தில் பேசிக்கொண்டே இறந்தார். திடீரென்று பாக்கெட்டை விட்டு ஒரு கட்டெறும்பை எடுத்தார். இந்த கட்டெறும்புக்கு எத்தனை பிரச்சனைகளோ, எனக்கு தெரியாது. இந்த கட்டெறும்பை பிடித்து திருங்க, எத்தனை பல்லி, ஓனான்கள் இருக்கிறதோ, எனக்கு தெரியாது. இந்த கட்டெறும்பு கால் எலும்பை முறித்து விட்டால், யார் எதுக்கு ஆபரேஷன் பண்ணுவாங்க, சிகிச்சை செய்வாங்க, தெரியாது. இந்த கட்டெறும்புக்கு ஒரு மீட்பு உண்டாக்கணும்னா, அல்லது இந்த கட்டெறும்போடு பேசணும்னா, இந்த கட்டெறும்போடு ஒரு உறவாடனும்னா, நான் ஒரு கட்டெறும்பா மாறினால் தான். இந்த கட்டெறும்புடைய உணர்ச்சிகளை, அதனுடைய பிரச்சனைகளை நாம் புரிந்து கொள்ள முடியும். நான் மனுஷனாய் வாழ்ந்து இந்த கட்டெறும்பினுடைய பிரச்சனை என்னால் உணர முடியாது. தேவாதி தேவனுடைய பார்வையில் ஒரு கட்டெறும்பு, அல்லது சித்தெரும்பு, அல்லது அதைவிட சின்ன உருவமா இருக்கிற நம்ம. இறைவன் புரிந்து கொள்ளனும்னா, நமக்குரிய பிரச்சனைகளை தீர்த்து வைக்கணும்னா, நம்மில ஒருவரைப் போல அவர் மாறனும். தேவகுமாரனாய் இருந்த அவர் மனுஷகுமாரனாய் மாறும்.

ஆதி மனிதன் பாவம் செய்து கீழ்படியாமல் ஆகி, மனுஷருக்குள்ள தலைமுறை தலைமுறையாய் பாவத்தை, கீழ்படியாமையும் கொண்டு வந்துட்டான். ஏதேன் தோட்டத்திலிருந்து அந்த பழத்தை பறிச்சு புசித்தபோது, ரெண்டு காரியங்கள். அந்த பழத்தின் சாறு: முதல் காரியம் மனுஷனுடைய இரத்தத்தோடு இரத்தமாய் கலந்துவிட்ட பாவம். அந்த பழத்திலே இருக்கிற விதை: அதுதான் கீழ்படியாமை. பாவத்தின் சாறு, பழத்தின் சாறு, பாவம் என்கிற சாறு நம்முடைய இரத்தத்தோடு இரத்தமாய் கலந்தது. அந்த பழத்தில் உள்ள விதை, கீழ்படியாமை என்கிற விதை, தலைமுறை தலைமுறையாக நமக்குள்ளே வந்தது. இந்த ரெண்டையும் முறித்து, பாவத்துக்கு நிவாரணம் செய்து, அவரே கீழ்படிதலுக்கு முதல் காரணமாகி, மனுக்குலத்தை மீட்க அவர் சித்தம் கொண்டார். பாவ நிவாரண பலியாக, தன்னுடைய இரத்தத்தினாலே மனுக்குலத்தின் இரத்தத்தில் உள்ள பாவத்தின் கட்டை அவர் முறித்தார். நமக்கு ஒரு விடுதலை கொடுப்பதற்கு, அந்த தேவகுமாரன் மனுஷகுமாரனாய் மாறினார் என்று நாம் அறிகிறோம். முதலாம் ஆதாம் செய்து முடிக்க முடியாததை, இரண்டாம் ஆதாம் தன்னுடைய மரணத்தின் மூலமாய், தன்னுடைய கீழ்படிதல் மூலமாய் செய்து முடிக்க அவர் தீர்மானித்தார். ஆகவேதான் அவரைக் குறித்து வாசிக்கிறோம்: அவர் தேவனுக்கு சமமாய் இருந்து, தேவனுக்கு சமமாய் இருப்பதை கொள்ளையாடின பொருளாக எண்ணாமல், தன்னைத்தானே தாழ்த்தி, அடிமையின் ரூபம் எடுத்து, மனுஷ சாயலானார், மரண பரியந்தமும் கீழ்படிந்தார், கீழ்படிந்தார், கீழ்படிந்தார்.

அவர் வாழ்கிற நாட்களிலே மரியாளுக்கும் யோசேப்புக்கும் கீழ்படிந்திருந்தார். 30 வயது ஊழியத்தை ஆரம்பித்தபோது, பிதாவுக்கு எப்போதும் கீழ்படிந்திருந்தார். பிதா கொடுத்த பாத்திரத்திலே பானம் பண்ணும்படி தன்னை ஒப்புக்கொடுத்தார். அவர் கொடுத்த பாத்திரத்தில் பானம் பண்ணுவது அவ்வளவு கடினமாய் இருந்தபோதிலும், அந்த பாத்திரத்திலே பானம் பண்ணுவது என்பது நிர்வாணமாய் சிலுவையிலே ஆறு மணி நேரம் ஜனங்களுக்கு முன்பாக தொங்குவது. அவ்வளவு வேதனை தருகிறதாய் இருந்தாலும், அவ்வளவு சவுக்கடி, அவ்வளவு நிந்தைகள், அவ்வளவு பரியாசம், கொடூரமான முள்செடி, உமிழ்நோயிருக்கு கூட அவருடைய முகத்தை மறைக்கவில்லை. ஆனாலும் பிதாவுக்கு கீழ்படிந்தார்: "என் சித்தத்தின்படி அல்ல, உம்முடைய சித்தத்தின்படியே ஆகக்கடவது" என்று சொன்னார்.

ஆகவேதான் இந்த 13 ஆம் வசனத்திலே: "மனுஷகுமாரனுக்கு ஒப்பானவரைக் கண்டேன்." வேதத்தில் பல இடத்திலே மனுஷகுமாரன், மனுஷகுமாரன், மனுஷகுமாரன் என்று இயேசு தாமே சொல்லியிருந்தார். எசேக்கியல் புத்தகத்தை நாங்க நீங்க வாசித்தால், மனுஷகுமாரன் என்கிற பதம் சற்றே வித்தியாசமாகி, மனுபுத்திரனே நூறு தடவைக்கு மேல. பழைய ஏற்பாட்டில் மனுபுத்திரன் என்று 100 முறைக்கு மேல அவர் அழைக்கப்பட்டார். தானியேல் தீர்க்கதரிசன புத்தகத்தில் இரண்டு முறை அவர் மனுஷகுமாரன் என்று அழைக்கப்பட்டார். நான்கு சுவிசேஷங்களிலும் இயேசு கிறிஸ்து தாமே 80 முறை மனுஷகுமாரன் என்று அவர் சொன்னார். அவர் பூமியிலே மனுஷனாய் பிறப்பதற்கு முன்பாக பிதாவிடத்தில் கேட்டுக்கொண்ட ஒரு காரியம்: "உம்முடைய சித்தத்தின்படி செய்ய, இதோ நான் பூமிக்கு செல்லுகிறேன். நித்திய நித்தியமாய் வாழுகிற நான், அநித்தியமாய் கொஞ்ச காலம் வாழுகிற மனுஷனைப் போல மாறப்போகிறேன். மகா மகிமை உள்ளவராய் இருந்த நான், என்னுடைய மகிமை எல்லாம் சுருட்டி வைத்து, ஒரு அடிமையை போல நான் பூமிக்கு செல்ல விரும்புகிறேன். மனுஷன் தேவகுமாரன் என்கிற உன்னத நிலைமையை விட்டுவிட்டு, மனுஷகுமாரன் என்று அழைக்கப்படுகிற ஒரு நிலைமையில் என்னை தாழ்த்தி ஒப்புக்கொடுக்கப் போகிறேன். மனுஷ சாயலாய் மாறப்போகிறேன், மனுஷகுமாரனுக்கு ஒப்பானவராய் மாறப்போகிறேன்." ஆகவே, பிதாவை பார்த்து அவர் ஒரு சிறிய ஜெபத்தை செய்தார். பூமிக்கு வருவதற்கு முன்பாக, எபிரேயர் பத்தாம் அதிகாரம் ஐந்து முதல் ஏழு வசனத்தை வாசிக்கும் போது: "இதோ, உம்முடைய சித்தத்தை செய்ய நான் பூமிக்கு செல்லுகிறேன். எனக்கு ஒரு சரீரத்தை ஆயத்தப்படுத்தும், எனக்கு ஒரு சரீரத்தை ஆயத்தப்படுத்தும்." பத்து மாதம் தாயின் வயிற்றில் இருக்கிற ஒரு சரீரம், மாம்சத்தாலும் இரத்தத்தாலும் செய்யப்பட்ட ஒரு சரீரம், 273 எலும்புகள், 970 மைல் நீளமுள்ள நரம்பு மண்டலங்கள், எத்தனையோ சுவாச மண்டலங்கள். அதே மனிதனுக்கு என்ன சரீரத்தை கொடுத்தீரோ, அதுபோல எனக்கு ஒரு சரீரத்தை ஆயத்தம் பண்ணும். பத்து மாதங்கள். அந்த பெரிய மகிமையின் ராஜா, தேவதூதர்களால் ஆராதிக்கப்படுகிறவர், மரியாளின் கர்ப்பத்தை அருவருக்கவில்லை. நமக்கு மீட்பை உண்டாக்கும்படி, அந்த தேவகுமாரன் இந்த பூமிக்கு வரும்படி சித்தமானார்.

மகிமையோடு இறங்கி வந்திருப்பார் என்றால், எந்த பரிசேயனும், எந்த சரிசயரும், எந்த யூதனும் அவரை நெருங்கி இருக்கவே முடியாது. அப்போஸ்தலனாகிய பவுல் எழுதுகிறார்: யூத அதிகாரிகள் அவரை அறியவில்லை. அறிந்திருந்தான், ஆனால் மகிமையின் ராஜாவை சிலுவையில் அறைந்திருக்க மாட்டார்களே. அவருடைய மனித சரீரத்தைப் பார்த்தார்களே தவிர, அவர் தேவகுமாரன் என்பதை அவர்கள் அறிந்து கொள்ளவில்லை. அருமையான தேவனுடைய பிள்ளைகளே, ஒரு நோக்கத்துக்காக கொஞ்ச காலம் மனுஷ சரீரத்தோடு இருந்தார். "நன்மை செய்கிறவராய் சுற்றித் தெரிந்தார்" என்று அப்போஸ்தலர் 10:38ல வாசிக்கிறோம். மனதுருகினார், ஜனங்களைக் கண்டு அற்புதம் செய்தார், பரலோக ராஜ்ஜியத்தைக் குறித்து உபதேசித்தார், உவமைகளை சொன்னார். கடைசியில் தன்னுடைய சரீரத்தை மீட்கும் பொருளாக சிலுவையிலே தொங்கவிட்டார். அதற்குப் பிறகு அவர் உயிரோடு எழும்பி பரலோகத்துக்கு போன பின்பு, மனுஷ சாயலாக பரலோகத்திலே காணப்பட்டாரே ஒழிய, மனுஷகுமாரனாக பரலோகத்தில் அவர் காணப்படவில்லை. அவர் தேவகுமாரன் ஆனார். 33 வருஷங்கள் இந்த பூமியிலே அவர் மனுஷ சாயலார். ஆனால் வேதம் சொல்லுகிறது, என்றென்றைக்கும் அவர் மனுஷனாய் இருக்கவில்லை. "தேவன் ஆவியாய் இருக்கிறார்; அவரைத் தொழுது கொள்ளுகிறவர் ஆவியோடும் உண்மையோடும் அவரைத் தொழுது கொள்ள வேண்டும்."

அப்போஸ்தலனாகிய யோவான் அந்த பத்முத்தீவிலே, அவருக்கு ஒரு பெரிய ஷாக். 33 மூன்றரை வருஷம் மனுஷகுமாரனாகவே பார்த்துட்டு இருந்தேன். பிறகு உயிர்த்தெழுந்த இயேசு எவ்வளவு மகிமையாய் இருக்கிறார் என்று பார்த்தவுடனே ஒரு பேர் அதிர்ச்சி. தேவகுமாரன் எப்படிப்பட்டவராய் இருந்தார் என்பதைத்தான் வெளிப்படுத்தின விசேஷம் முதலாம் அதிகாரம் 13 ஆம் வசனத்திலிருந்து நாம் வாசிக்கிறோம். அவருடைய சிரசு எப்படிப்பட்டதாய் இருந்தது, அவருடைய கண்கள் எப்படிப்பட்டதாக இருந்தது, அவருடைய வாயிலிருந்து எப்படி இருபுறமும் கருக்குள்ள பட்டயம் புறப்பட்டது, அவருடைய பாதங்கள் எப்படி உலைக்களத்திலே காய்ந்த வெண்கலம் போல இருந்தது. முந்தி பார்த்த இயேசு அல்ல. இவர் தேவாதி தேவனுடைய குமாரன். பூமியில் வாழும்போது மரியாளின் குமாரன் என்று அழைக்கப்பட்டார், யோசேப்பு தந்தையாய் இருந்தார். ஆனால் உயிர்த்தெழுந்த பிறகு, அவர் தேவாதி தேவன், அவர் கர்த்தாதி கர்த்தர். அதுவரை ஒரு ஆறடி உயரமான மனுஷனாக, மரியாளியின் மகனாக தான் எந்த மார்பிலே சார்ந்து கொண்டிருந்தாரோ, ஒரு நண்பனைப் போல அப்படியே எண்ணிக்கொண்டிருந்த யோவான், வெளிப்படுத்தல் முதல் அதிகாரத்தில் பார்க்கிறார். ஏழு நட்சத்திரங்களை கையில ஏந்தி, ஒவ்வொரு நட்சத்திரமும் சூரியனை பார்க்கிலும் கோடி மடங்கு பெரிய நட்சத்திரங்கள். அந்த நட்சத்திரங்களை ஏந்தி உலாவுகிறார் என்றால், மேகங்களோடு வருகிறார் என்றால், அதை தாங்கிக் கொள்ள முடியவில்லை.

நம்முடைய கண்களிலே ஒரு தரிசனம் இருக்கும். மாம்சத்தில் வந்து, சிலுவையில் ஜீவனைக் கொடுத்த ஆறடி உயரமான மனுஷனாய் பார்ப்பதை விட்டுவிட்டு, தெய்வத்தின் பரிபூரணம் நிறைந்தவராய், மகிமை நிறைந்தவராய். சீனாய் மலையில் அவர் மகிமையோடு இறங்கி வந்தபோது, அந்த மலை அதிர்ந்தது, இடி முழக்கம் தோன்றினது, மின்னல்கள் வீசினது. ஒருவராக நெருங்கச் செல்ல முடியாது. அவர் பட்சிக்கிற அக்கினியை போல இருக்கிறவர், மகிமையின் ராஜாவாய் இருக்கிறவர், சேரக்கூடிய கூடாத ஒளியிலே வாசம் பண்ணுகிறவர், என்றென்றைக்கும் ஜீவித்திருக்கிற நித்தியமானவர். நம்முடைய கண்களை தேவகுமாரன் என்பதிலே எண்ணிப்பார்க்கிறோம். இன்றைக்கு நம்மை ஏமாற்றுகிற அநேக படங்களில் வீடுகளை பார்க்கிறோம். இது 33 வருஷம் பூமியில் இருந்த ஒரு சின்ன தோற்றம். ஆனால் கோடான கோடி வருஷமாய் அவர் மகிமை நிறைந்தவராய் இருக்கிறார். அதை நாம் எண்ணிப்பார்ப்பதில்லை. பார்த்தார்: "அவர் உயரமும் உன்னமான சிங்காசனத்தில் வீற்றிருக்க கண்டேன்" என்று ஏசாயா 6:1லே எழுதுகிறார். "அவர் வானம் அவர் சிங்காசனம், பூமி அவர் பாதபடி" என்று ஏசாயா 66:1லே வாசிக்கிறார். "அவர் மகிமையின் ராஜா" என்று சங்கீதம் 24:7லே வாசிக்கிறோம். நம்ம எல்லாம் வீட்டுக்குள்ள ஒரு போட்டோ வச்சு நம்மை நாமே ஏமாற்றிக் கொள்ளுகிறோம். இயேசுவை ஒரு சிறியவராகவே பார்க்கிறோம். அவருடைய தெய்வத்தின் பரிபூரணத்தை நாம பார்ப்பதில்லை. இது நம்மில் உள்ள ஒரு பெரிய குறைபாடு.

அப்போஸ்தலனாகிய பவுல் இவ்விதமாய் சொன்னார்: "இயேசுவை நான் மாம்சத்தின்படி அறிந்திருந்தாலும், இனி ஒருபோதும் அவரை மாம்சத்தின்படி பார்க்க மாட்டேன். இனி அவரை மாம்சத்தின்படி அறிய மாட்டேன்." அவர் உயிர்த்தெழுந்த மகிமையின் ராஜா. இன்றைக்கு நம்முடைய குறைபாடு என்ன? வேதம் ஒரு சினிமா நடிகன் இயேசுநாதர் மாதிரி வேஷம் போட்டு, அவன் மேல பெயிண்ட் எல்லாம் ஊத்தி, சிலுவையில் அடிபட்ட மாதிரி, நம்ம கண்கள்ல அதைத்தான் இயேசு. நிறைய சிடி, விசிடி, டிவிடி எல்லாம் வருது. யாரோ ஒரு வேசின், ஏதோ ஒரு சினிமா நடிகன், ஏதோ ஒருத்தன் மேக்கப் போட்டவன், இவர்தான் இயேசு, இவர்தான் இயேசு. என்ன கேவலமான ஒரு காரியம்! என்னை அறியாமையால் உள்ள காலம், ஒரு சினிமா நடிகனா இயேசு என்று நம்ம புகழ்ந்து கொண்டிருக்கிறது. அப்படிப்பட்டவர்கள் வருகையிலே, பிதாவின் மகிமை பொருந்தவராய் இயேசு வரும்போது, அந்த மகிமையை தாங்க முடியாமல். ஏன்னா, இவங்க கண்கள்ல பூரா சின்ன உருவமா. சாத்தான் அதை அப்படியே கொண்டு வந்துட்டான், மைண்ட்ல பறிச்சு வச்சுட்டான். நிறைய பத்திரிகையில இயேசுநாதர் ஒரு கிழவி மாதிரி, பாம்பு போல இருப்பார். சில பத்திரிகைகளை பார்த்தா அழகு கட்டு தாடி வச்சிருப்பார். ஒரு வீட்ல ஒரு படத்தை கும்பிட்டு இருந்தான் ஒரு வாலிபன். எட்டி பார்த்தா, அது எம்ஜிஆர் ஏதோ ஒரு சினிமாவுக்கு எடுத்த ஒரு படத்தை தான். அவன் பூமாலை போட்டு, அதுக்கு மெழுகுவருத்தி கொளுத்தி. ஆனால் வெளிப்படுத்தின முதல் அதிகாரத்தில் நமக்கு ஆண்டவர் வெளிப்படுத்துகிற ஒரு சத்தியம்: பூமியில் அவர் மனுஷகுமாரனாய் வந்திருந்தாலும், அவர் மனுஷகுமாரன் அல்ல. தேவாதி தேவனுடைய ஒரே பேரான குமாரன். அவரைத்தான் பிதா இந்த பூமிக்கு அனுப்பினார். கொஞ்ச காலம் மாம்ச சரீரத்தை அவர் கொடுத்திருந்தார், அவ்வளவுதான். அவர் நித்தியமானவர். அதை வைத்து இப்போது நாம் உள்ளே செல்லப் போகிறோம்.

13 ஆம் வசனத்தை நான் மீண்டும் வாசிக்கிறேன்: "அந்த ஏழு குத்து விளக்குகளின் மத்தியிலே நிலையங்கி தரித்து..." முதல்ல ஆண்டவருடைய உடையைக் குறித்து சொல்லுகிறது. அந்த நிலையங்கி என்பது ஆசாரியனுடைய உடை. மரியாள் ஒரு கந்தையிலே பொதிந்து, எட்டாம் நாள் அவர் பிறந்த எட்டாம் நாள், பெருத்தசேனம் அடைவதற்கு ஆலயத்துக்கு கொண்டு போனார். அந்த டிரஸ் கந்தை என்று நாம் பாடுகிறோம்: "கந்தை பொதிந்தவனை" அப்படின்னு பாடுறோம். வளரும்போது அநேக வஸ்திரங்களை அவர் உடுத்தி இருந்தார். வல்லமையின் வஸ்திரமாய் இருந்தது. ஒரு பெரும்பாடுள்ள ஸ்திரீயை தொட்டபோது, ஷாக் அடிப்பது போல தேவனுடைய வல்லமை அவள் இறங்கி அதை குணமானது. அவர் விசாரிக்கப்படுகிற நேரம், ஏரோது அவரை பரியாசம் பண்ணும்படி ஒரு மினுக்கான வஸ்திரத்தை அவருக்கு உடுத்தி அனுப்பினானாம். ஏரோது மினுக்கான வஸ்திரம். பிலாத்து தன்னுடைய அரண்மனைக்கு கீழே இயேசுவை...

அடித்த பிறகு உடம்பெல்லாம் இரத்தக்களனியாய் இருக்கிறதைக் கண்டு சிகப்பான ஒரு மேலங்கியை தரித்தார் வைத்திருந்தார். அதற்குப் பிறகு அவர் தம்முடைய சொந்த அங்கியை உடுத்தினார். அதைப் போர்ச்சி அவர்கள் சீட்டு போட்டு ஒரே துணியினால் அது நெய்யப்பட்டிருந்தபடியால் அவர்களுக்குள்ளே பங்கு வைத்துக் கொண்டார்கள். அரிமத்தியா ஓரானாகிய யோசேப்பு அடக்கம் பண்ணும்போது ஒரு சீலையினால் அவருடைய சரீரத்தை சுத்தி இருந்தார். ஆனால் அந்த துணி எல்லாம் அவர் கல்லறைக்குள்ளே மடித்து வைத்துவிட்டு உயிரோடு எழுந்தார்.

உயிரோடு எழுந்த ஆண்டவர் நிலையங்கி தரித்திருந்தார். ஒரு ஆசாரியனுக்குரிய உடையை அவர் தரித்தார். நான் இன்றைக்கும் பிதாவினுடைய வலது பாசத்தில் உயிரோடு எழுந்து ஒரு பிரதான ஆசாரியனை போல உங்களுக்காய் நான் பரிந்து பேசுகிறேன் என்பதை காண்பிப்பதற்காகத்தான் அந்த நிலையங்கி. நாம் அறிக்கை பண்ணுகிற பிரதான ஆசாரியர் என்று எபிரேயர் மூன்று ஒன்றிலே நாம் வாசிக்கிறோம். ஒரு பிரதான ஆசாரியனுக்கு மூன்று பணிகள் உண்டு.

முதல் முதலாவது பாவ நிவாரண பலியை அதனுடைய இரத்தத்தை தேவ சமூகத்திற்கு கொண்டுவந்து பாவ நிவாரணம் செய்யணும். இயேசு ஆடு மாடுகளின் இரத்தத்தை அல்ல குற்றமில்லாத மாசற்ற தன்னுடைய இரத்தத்தையே பிதாவினுடைய சமூகத்திலே கொண்டு போனார். அந்த இரத்தம் பரிசுத்தமுள்ளது. அந்த இரத்தம் எந்த பாவியையும் கழுவி மன்னிக்கக் கூடியது.

இரண்டாவதாக பிரதான ஆசாரியன் இந்த இரத்தத்தை கொண்டு போவது மட்டுமல்ல பரிந்து பேசணும். விண்ணப்பம் பண்ணனும். மன்றாடனும் தேவ ஜனங்களுக்காக. மூன்றாவது ஜனங்களை ஆசீர்வதிக்கணும். இந்த பணியை செய்வதற்காகத்தான் அவர் பிரதான ஆசிரியனாக பரலோகத்திலே பிதாவினுடைய வலது பாரிசத்திலே அவர் நின்று கொண்டிருந்தார்.

இரண்டாவது வேதம் சொல்லுகிறது அவர் இலையங்கி தரித்தது மட்டுமல்ல கச்சையை அறையிலே கட்டி எழுந்தாராம். எபேசியர் ஆறாம் அதிகாரத்திலே சத்தியம் என்னும் கச்சையினால் உங்களுடைய அறைகள் கட்டப்பட்டதாய் இருக்கட்டும் உங்களுடைய அறைகளை சத்தியம் என்கிற கச்சையினால். ஆனால் இயேசுவினுடைய அறையில் இருந்தது பொற்கச்சை. எல்லா சத்தியத்திலும் மேலான சத்தியம் எல்லா உபதேசத்திலும் மேலான உபதேசம் சத்தியம் என்னும் கச்சை இயேசு உடைத்திருந்தது பொற்கச்சை. பொன் என்பது ராஜரீகத்தை குறிக்கிறது. அவருடைய ஆளுகையை குறிக்கிறது. அவர்தான் உபதேசங்களை கொடுக்கிறவர் என்பதை காண்பிக்கிறது.

அருமையான தேவனுடைய பிள்ளைகளே இன்றைக்கும் நமக்காக பிரதான ஆசிரியனாக தேவ சமூகத்திலே பரிந்து பேசிக்கொண்டே இருக்கிறார். அடுத்த வசனத்துக்குள் நாம் செல்லப் போகிறோம். அதிலே இயேசுவைக் குறித்து ஒரு ஏழு காரியங்களை சொல்லி இருக்கிறது.

முதலாவது அவருடைய சிரசை யோவான் பார்க்கிறார். அந்த சிரசு எப்படி இருந்தது இருந்ததாம். அவருடைய சிரசு மயிரும் வெண்மை வெண் பஞ்சை போலவும் உறைந்த மழையைப் போலவும் வெண்மையாய் இருந்தது. ஆண்டவருடைய தலையை பார்க்கிறார். தலை மயிரை பார்க்கிறார். 33 வருஷம் தான் அவர் பூமியில் வாழ்ந்தார். அவருடைய தலை அவருடைய உன்னத பாட்டில் வாசிக்கிறோம். அவருடைய தலை மயிர் சுருள் சுருளாகவும் காகத்தைப் போல் கருமையாகவும் இருந்தது என்று உன்னத பாட்டு ஐந்தாம் அதிகாரம் 11 ஆம் வசனத்திலே நாம் வாசிக்கிறோம். சிலுவையில் அறையப்படும்போது அவருடைய தலை முள்முடியால் சூட்டப்பட்டு தலை முழுவதும் இரத்தம் தோய்ந்து போய் சிகப்பாய் காணப்பட்டு இருக்கக்கூடும். ஆனால் இங்கே வாசிக்கிறோம் அவருடைய தலை வெண்மை நிறமாய் இருந்தது.

சிலர் ரொம்ப யோசிச்சு யோசி யோசிச்சு ரொம்ப கவலைப்பட்டு கவலைப்பட்டு கவலைப்பட்டு அவங்க தலைவெண்மையாய் மாறிவிடும். ஹிட்லர் ஒரு யூத சிறுவனை பிடித்துக் கொண்டான். எவ்வளவு சித்திரவதை செய்தான். ஆனா அவங்க அப்பா அம்மாவை காட்டிக் கொடுக்கல. மற்ற யூதர்கள் எங்க இருக்காங்க காட்டிக் கொடுக்கல. ஆகவே ஹிட்லருடைய போர்ச்சி அவர்கள் ஒரு சின்ன மரத்துல இந்த கையை ஆணி கடாவி அடுத்த கையில ஒரு ஆணி கடாவி தொங்க வச்சிட்டு அப்படியே போயிட்டாங்க. பல வேதனை தாங்க முடியாது. மூணு நாளா இரத்தம் ஒழுகுகிறது. தாகமா இருக்கிறது. பயப்படுகிறான். கவலைப்படுகிறான். அவனுடைய சித்திரவாதம் தாங்க முடியாததா இருந்தது. மூணு நாள் கழிச்சு சில ஆட்கள் அவனை பார்த்தாங்க. இந்த ஆணிய பிடுங்கினாங்க. ஆனா ஒரு பெரிய அதிசயம் அவன் தலைமுடி அவ்வளவு வெண்மையாய் மாறி இருந்தது. மூணு நாள் சித்திரவாதி தாங்க முடியாத வேதனை தன் தகப்பன் தாயை பிடித்து விடுவார்களோ என்கிற பயம் தலைமுடி எல்லாம் வெண்மையாய் மாறிவிட்டது. இயேசு உலகத்தில் அவ்வளவு பாடு அந்த பாடுகளை குறிக்கக்கூடிய விதத்திலே அவருடைய சிரசின் மயிர் வெண்மையாய் மாற்றப்பட்டது.

இன்னொரு காரியம் வெண்மையாய் மாறினதற்கு அவர் நீண்ட ஆயுசு உள்ளவர். தானியேல் நீண்ட ஆயுசு உள்ளவர் என்று அவரை குறிப்பிடுகிறார். அவருடைய புறப்படுதல் அனாதி காலம். உலகத்தில் அவர் வாலிபனாய் தன்னுடைய இரத்தத்தை சிந்தினாலும் அவர் கோடி கோடி கோடி வருஷங்கள் வாழ்கிறவர் நித்தியமானவர். அவருடைய வயதின்படி தலை வெண்மையாய் இருந்தது. வெண்மையாய் இருப்பதற்கு இன்னொரு அர்த்தம் உண்டு. பிரிட்டிஷ் அரசாங்கத்திலே சில பேர் மிகவும் படித்து சீக்கிரமாய் ஒரு நீதிபதியாய் வந்துவிட்டார்கள் என்றால் இளமை தோற்றத்தைப் பார்த்த ஜனங்கள் இவன் என்ன நீதி செய்யப் போகிறான் இவனுக்கு என்ன அனுபவம் இருக்கப்போகிறது இவனுக்கு என்ன சட்ட நுணுக்கம் தெரியப்போகிறது என்று அவனை ஏழனமாய் எண்ணி விடக்கூடாது என்பதற்காக தலைக்கு மேல ஒரு டோப் அப்படியே நீளமாய் இதுவரை போட்டிருப்பாங்க சுருட்ட வெள்ளையா அப்படியே இருக்கும். அந்த நீதிபதி சாந்துல வந்து உட்காரும்போது அதை அப்படியே போட்டுட்டு முகத்துல ரொம்ப அறிவாளி தோற்றத்தை கொடுத்து வயதானவர் தோற்றத்தை கொடுக்கிற மாதிரி அப்படியே வந்திருப்பார். அந்த வெண்மையான முடியை பார்த்ததும் ஜனங்களுக்கு அவர் மேல ஒரு நம்பிக்கை இவர் நீதியாய் நியாயம் செய்வார் இவர் வயதானவர். ஆண்டவர் யோவானுக்கு ஒரு தோற்றம் கொடுத்தார். என்னை 33 வருஷம் என் வாழ்க்கைன்னு நினைச்சுட்டு இருக்கார். ஒருநாள் இயேசு இந்த பூமியில் இருக்கும்போது இஸ்ரவேல் ஜனங்களைப் பார்த்து சொன்னார் உங்கள் தகப்பனாகிய ஆபிரகாம் என்னைக் கண்டார் களிகூர்ந்தார். எல்லாருக்கும் பெரிய ஆச்சரியம் நீ என்ன ஆபிரகாமை கண்டாயோ அன்றைக்கு இயேசு இருந்த காலத்தை பார்க்கிலும் 2000 வருஷத்துக்கு முன்னால ஆபிரகாம் வாழ்ந்தார். இயேசு சொன்னார் ஆபிரகாம் உண்டாவதற்கு முன்பாகவே நான் இருக்கிறேன். ஐ அம் தட் ஐ அம். மோசேயோடு நான் இருக்கிறவராகவே இருக்கிறேன் என்று சொன்னார். மாறாதவராய் அப்படியே இருந்தார். ஆகவே முதலாவது அவருடைய சிரசு.

இரண்டாவது அவருடைய கண்களை குறித்து அங்கே சொல்லுகிறது. அவருடைய கண்கள் அக்கினி ஜுவாலையைப் போல இருந்தது. முன்பாக அவருடைய கண்கள் கண்ணீர் ததும்பியவைகளாய் இருந்தது. உன்னதப்பாட்டு ஐந்து 12லே வாசிக்கும் போது அவருடைய கண்கள் தண்ணீர் நிறைந்த நதியோரம் தங்குகிற புறாக்களின் கண்களுக்கு ஒப்பான கண்களாய் இருந்தது. பாசமிக்க கண்களாய் இருந்தது. லாசருவின் கல்லறையில் நின்று அழுகிற கண்களாய் இருந்தது. எருசலேமை பார்த்து லூக்கா 19 41லே அவருடைய கண்கள் குளமாகி எருசலேமுக்காக கண்ணீர் விட்டு அழுதார் என்று வாசிக்கிறோம். எபிரேயர் ஐந்து ஏழிலே அவர் மாம்சத்தில் இருந்த நாட்களில் பலத்த சத்தத்தை கண்ணீரோடும் ஜெபம் பண்ணினார். ஆனால் இங்கே அவர் மனுஷகுமாரன் அல்ல. தேவகுமாரன். மனுஷகுமாரனுடைய தலைமயிர் அல்ல. என்றென்றைக்கும் ஜீவித்திருக்கிற தேவகுமாரன். பட்சிக்கிற அக்கினி. சங்கீதம் 104 நாளிலே தம்முடைய ஊழியக்காரரை அக்கினி ஜுவாலையாய் மாற்றுகிறார். எபிரேயர் ஒன்று ஏழிலே ஊழியக்காரர் மேல அந்த அக்கினி பற்றும்படி செய்கிறார். வெளிப்படுத்தின விசேஷத்தில் மூன்று இடங்களில் அவருடைய கண்கள் அக்கினி ஜுவாலையை போன்ற கண்கள் ஊடுருவி பார்க்கக்கூடிய கண்கள் உறங்காத கண்கள். இஸ்ரவேலை காக்கிறவர் உறங்குவதும் இல்லை தூங்குறதும் இல்லை. அவருடைய கண்களுக்கு மறைவானது ஒன்றுமே இல்லை. சகலவற்றையும் பார்த்து அறிகிற கண். மாம்சத்தில் இருந்தபோது மனதுருக்கமுள்ள கண்களாய் இருந்தது. பேசு பேதுரு தன்னை மறுதலித்த போது அவனைக் கூர்ந்து பார்த்த கண்களாய் இருந்தது. அவருடைய பார்வை பேதுருவை மனம் கசந்து அழ செய்தது. ஆனால் இப்போது அக்கினி ஜுவாலை அதிலிருந்து வெளிச்சம் வருகிறது. அந்த அக்கினி அக்கினி ஜுவாலை ஊடுருவி பாய்கிறது. அக்கினி ஜுவாலையைப் போல கண்களை உடையது. தானியேல் பத்தாம் அதிகாரம் ஆறாம் வசனத்திலே அவருடைய கண்களைக் குறித்து தானியேல் சொல்லும்போது அவருடைய கண்கள் எரிகிற தீபத்தைப் போல இறந்தது என்று அழைக்கிறார். நேபுகாத் நேச்சாருக்கு முன்பாக கர்த்தருடைய கண்களை குறித்து தானியேல் சொல்லும்போது அவருடைய பார்வைக்கு மறைவான சிருஷ்டி ஒன்றுமில்லை. அவரே ஆழமும் மறைபொருளுமானதை வெளிப்படுத்துகிறவர். இருளில் இருக்கிறதை அவர் அறிவார். வெளிச்சம் அவரிடத்திலே தாங்கும்.

மூன்றாவதாக அவருடைய பாதங்களை குறிப்பிடுகிறார். அவருடைய பாதங்கள் எப்படிப்பட்டதாம் 15 ஆம் வசனம் இவ்விதமாய் சொல்லுகிறது. அவருடைய பாதங்கள் உலைக்களத்திலே காய்ந்த பிரகாசமான வெண்கலம் போல இருந்தது. நாமெல்லாம் ஒரு பாட்டை பாடுவோம். பாதம் ஒன்றே வேண்டும் இந்த பாரினில் எனக்கு மற்றேதும் வேண்டாம். மரியாள் நல தைலம் பூசின பாதம் காணாமல் போன ஆட்டை போல் இருந்த என்னை நோக்கி நடந்து வந்த பாதம். கல்லுகளிலும் முள்ளுகளிலும் நடந்து ஆட்டை தூக்கி எடுத்த தேடி வந்த அந்த பாதங்கள் மலைமேல் சுவிசேஷனுடைய பாதங்கள் எவ்வளவு அழகாய் இருக்கிறது. ஆனால் இந்த இடத்திலே வேதம் சொல்லுகிறது அவர் பாதங்கள் உலைக்களத்திலே காய்ந்த ஒரு உலைக்களத்திலே தீ பற்றி எறி ஆண்டவருடைய நியாயத்தீர்ப்பின் வழியாக அவர் எடுக்கப்பட்டார். இடுக்கண்ணிலும் நியாயத்தீர்ப்பிலிருந்து எடுக்கப்பட்டார். அந்த உலைக்களத்திலிருந்து என்று சொல்வது தாங்க முடியாத பாடுகள் வேதனைகள் உபத்திரவங்கள். வெண்கலம் என்பது தேவனுடைய நியாயத்தீர்ப்பை குறிக்கிறது. அவருடைய பாதங்கள் அவருடைய பாதங்கள் அருமையான தேவனுடைய பிள்ளைகளே மாம்சமான மனுஷகுமாரனுடைய பாதங்களை எண்ணிப்பார்க்க வேண்டும். பவுல் ரெண்டு கொரிந்தியர் ஐந்து 16 தான் சொன்னார். இந்த மாம்சமான பாதத்தை நான் பார்க்க மாட்டேன். அந்த மாம்சமான பாதத்தை பார்க்கிறார். கிறிஸ்துவை மாம்சத்தின்படி அறிந்திருந்தாலும் இனி ஒருபோதும் அவரை மாம்சத்தின்படி அறியேன் என்று சொன்னார். அருமையான தேவனுடைய பிள்ளைகளே உலைக்களத்திலிருந்து காய்ந்த உயிர்த்தெழுந்த பாதை மரித்தோரில் இருந்து எழுந்ததினாலே அவர் தேவகுமாரன் என்று பலமாய் ரூபிக்கப்பட்டவராய் இருக்கிறார் என்று ரோமர் 1:5 வாசிக்கிறோம். அவருடைய பாதங்கள் உலைக்களத்திலே காய்ந்த வெண்கலம் போல இருக்கு. வெண்கலம் என்பது மீட்பை குறிக்கிறது. வெண்கலம் என்பது நியாயத்தீர்ப்பை குறிக்கிறது. ஆண்டவரால் புடமிடப்பட்ட ஒரு வாழ்க்கை குறிக்கிறது. பழைய ஏற்பாட்டிலே ஒரு பலிபீடத்தை செய்து சித்தி மரத்திலே செய்து அந்த பலிபீடத்தை வெண்கலத்தால் மூடுவார்கள். நம்மேல் வரவேண்டிய நியாயத்தீர்ப்பு அவர் மேல் வந்தது. பழைய ஏற்பாட்டு பலைகள் எல்லாம் அவர்கள் மேல் வரவேண்டிய நியாயத்தீர்ப்பு ஆடுகள் மேல் மாடுகள் மேல் வந்தது. ஆனால் புதிய ஏற்பாட்டிலே நம்மேல் வரவேண்டிய ஆக்கினை அவர் மேல் இயேசு மேல் வந்தது என்று ஏசாயா 53 ஐந்திலே வாசிக்கிறோம்.

நான்காவதாக அவருடைய சத்தத்தைக் குறித்து சொல்லியிருக்கிறது. அவருடைய சத்தம் பெருவெள்ளத்து இறைச்சலைப் போல இறந்தது. யோவான் பத்மோ தீவின் அந்த குன்றுகள் மத்தியிலே ஒரு பாதாள சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அங்கே ஒரு மரம் செடி கொடி ஒன்னும் கிடையாது. இரவும் பகலும் அந்த சமுத்திரம் அந்த பாறை மேல மோதி அடிக்கிற பெருவெள்ளத்தை தான் அவர் கேட்டுக்கொண்டே இருந்தார். அதைத் தவிர ஒரு பறவைகள் பாடுகிற சத்தம் உயில் குயில் கூவுகிற சத்தம் ஒரு இன்னிசை ஒரு கீத வாக்கியங்கள் ஒன்னையும் கேட்க முடியாது. எப்ப பார்த்தாலும் அந்த பெருவெள்ளத்து இறைச்சல் அந்த பத்மு தீவில் மோதி அடிக்கிற அந்த கடலின் அலைகள். ஆனால் இப்போ ஆண்டவரை ஆண்டவர் அவரை ஆவிக்குள்ளாகி பரலோகத்துக்கு கொண்டு போனபோது தேவனுடைய சத்தத்தைக் கேட்டார். அவருக்கு பெரிய சந்தோஷம். என் ஆண்டவருடைய சத்தம் மற்ற எல்லா சத்தத்தையும் அடக்கி ஆளுகிற கம்பீரமான ராஜரீகமான இடிமுழக்கத்தின் சத்தம் பெரு வெள்ளத்தின் இறைச்சலின் சத்தம். அதிலிருந்து ஆண்டவர் நம்மோடு பேசுகிறார். எசேக்கியல் 43 ஆம் அதிகாரம் இரண்டாம் வசனம் இவ்விதமாய் சொல்லுகிறது. இதோ இஸ்ரவேலின் தேவனுடைய மகிமை கீழ் திசையிலிருந்து வந்தது. அவருடைய சத்தம் பெருவெள்ளத்தின் இறைச்சலைப் போல இருந்தது. சங்கீதம் 29 வாசித்தால் கர்த்தருடைய சத்தம் கர்த்தருடைய சத்தம் கேதுரு மரங்களை முறிக்கிறது. கர்த்தருடைய சத்தம் பெண்மான்களை காதே வனாந்தரத்தை அதிர பண்ணுகிறது. கர்த்தருடைய சத்தம் என்று திரும்பத் திரும்பத் திரும்பத் திரும்ப வருகிறது. அதுல ஒரு பகுதி மூன்றாம் வசனம் 29 ஆம் சங்கீதத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. கர்த்தருடைய சத்தம் தண்ணீர்கள் மேல் துணிக்கிறது. மகிமையுள்ள தேவன் மகிமையுள்ள தேவன் முழங்குகிறார். கர்த்தர் திரளான தண்ணீர்கள் மேல் இருக்கிறார். ஆண்டவர் மெல்லிய குரல் மூலமாகவும் பேசுவார். அது ஆவியானவருடைய குரல். ஒரு மனுஷகுமாரன் அன்போடு சிநேகிதனோடு பேசுவதைப் போலவும் பேசுவார். ஆனால் பிதாவானவருடைய சத்தம் அடித்தொண்டையிலிருந்து வருகிற இடிமுழக்கம் போன்ற ஒரு சத்தம் பெருவெள்ளத்தின் இரைச்சலைப் போல சத்தம். அந்த சத்தத்தை அவர் கேட்டார்.

அடுத்ததாக ஆண்டவருடைய கரங்களை அவர் பார்த்தாராம். ஐந்தாவது ஆண்டவருடைய கரங்களைக் குறித்து சொல்லியிருக்கிறது 16 ஆம் வசனம். தமது வலது கரத்தில் ஏழு நட்சத்திரங்களை ஏந்திக் கொண்டிருந்தார். கர்த்தருடைய கரத்தைப் பார்க்கிறார். பெரிய கரம். பிரகாசமான கரம். அண்ட சராசரங்களை உருவாக்கின கரம். மனுஷகுமாரனாய் இருந்தபோது ஒரு சின்ன கரம் தான். அந்த கரத்தை ஆணிகளால் கடாவினார்கள். அவர் உயிரோடு எழுந்தபோது தன்னுடைய கரத்தை நீட்டி தோமாவை பார்த்து உன்னுடைய விரலை ஈட்டி போட்டு பார் என்று சொன்னார். ஒரு சின்ன கரம். என் ஆடுகள் என் கைகளில் இருக்கிறது. என் கையிலிருந்து என் ஆடுகளை பறித்துக் கொள்ள முடியாது என்று யோவான் பத்தாம் அதிகாரத்தில் சொன்னார். ஏசாயா 49 15லே உன்னை என் உள்ளம் கைகளில் வரைந்திருக்கிற நீயும் உன்னுடைய குடும்பமும் என்னுடைய கரங்களில் இருக்கிறீர்கள். ஆனால் இங்கே தேவனுடைய கரம் எவ்வளவு பெரியது. அண்டம் கொள்ளாத அகிலம் கொள்ளாத ஒரு பெரிய கரம். ஏழு நட்சத்திரத்தை கரங்களில் ஏந்தினவர். எத்தனை கோடி கோடி நட்சத்திரங்களை அவர் உருவாக்கினார். ஏசாயா 40 ஆம் அதிகாரம் 20 ஆம் வசனம் சொல்லுகிறது. உங்களுடைய கண்களை ஏறெடுத்து பாருங்கள். அந்த நட்சத்திரங்களை உருவாக்கினவர் யார். கோடி கோடியாய் அவைகளை உருவாக்கி அவைகள் ஒன்றும் கீழே விழாதபடி நான் தாங்குகிற கர்த்தர். ஒவ்வொன்றையும் அதன் அதன் இடங்களிலே நேர்த்தியாய் ஓடச் செய்கிறவர். அவைகளில் ஒன்றும் குறையாமல் இருக்கும்படி நான் நிலைநிறுத்துகிற வல்லமையுள்ள தேவன். ஏழு நட்சத்திரங்கள் ஏழு நட்சத்திரங்கள். அதே கைகளில் தான் உங்களை அவர் வரைந்திருக்கிறார். அல்லேலூயா.

அடுத்தது அவருடைய வாய். அவருடைய வாயை குறித்து சொல்லுகிறது. அவருடைய வாயிலிருந்து கருக்குள்ள பட்டயம் புறப்பட்டது. இருபுறமும் கருக்குள்ள பட்டயம். கையில் வைத்து தான் யுத்தம் செய்யும். யுத்தத்துக்கு போகும்போது அறையில் அந்த வாழை பட்டயத்தை வைத்திருப்பார். ஆனால் இயேசு அந்த பட்டயத்தை எங்கே வைத்திருந்தாராம் அவருடைய வாயில் வைத்திருந்தார். அவருடைய வாயில் பட்டயம் என்பது அவருடைய வார்த்தைகளை குறிக்கிறது. அது பட்டையும் போல சாத்தானை வெட்டக்கூடியது. ஆவியையும் ஆத்துமாவையும் பிரிக்கக்கூடியது. ஊனையும் கணுக்களையும் பிரிக்கக்கூடியது. வாயின் பட்டயத்தாலே என்று எழுதுகிறார். சாத்தான் சோதிக்க வந்தபோதெல்லாம் வாயின் வார்த்தை பேசினார். எழுதி இருக்கிறதே மனுஷன் அப்பத்தினால் மாத்திரமல்ல தேவனுடைய வாயிலிருந்து வருகிற வார்த்தையினால் பிழைப்பான் எழுதி இருக்கிறதே எழுதி இருக்கிறதே அப்படித்தான் அவர் வேத வசனமாகிய ஆவியின் பட்டயத்தை எடுத்துக் கொள்ளுங்கள் என்று எபேசியர் ஆறு 17 வாசிக்கிறோம். சாத்தானுக்கு விரோதமாய் யுத்தம் செய்யும்போது சர்வாயுத வர்க்கங்களில் ஒன்றான ஆவியின் பட்டயம் எப்போதுமே உங்களை காத்துக் கொண்டிருக்கணும். அவன் அடிப்பான் அக்கினி ஆஸ்திரங்களை எய்வான். நீ வந்து கேடத்தை பிடிச்சு பிடிச்சு பிடிச்சு பிடிச்சு அவன் தாக்கிடக்கூடாது. உனக்கு பில்லி நீ வந்திரக்கூடாது. அவனுக்கு செய்வினை உனக்கு வந்திரக்கூடாது. யாரோ செய்திட்டாங்க ஜெயிச்சிட்டாங்க. நீ மறைந்து வாழ்கிறதை எண்ணக்கூடாது. காக்கிற ஆயுதம் வேணும். ஆனா அதே நேரம் எதிரியை தாக்குகிற ஆயுதமும் வேணும். ஆவியின் பட்டயம் எதிரியை தாக்கக்கூடிய ஆயுதம். மந்திரவாதியே இயேசுவின் நாமத்தில் சொல்லுகிறேன். ஒரு வசனம் சொல்லுகிறது யாக்கோபுக்கு விரோதமான மந்திரம் இல்லை. இஸ்ரவேலுக்கு விரோதமான குறி சொல்லுதல் இல்லை. நீ தேவ பிள்ளைகள் மோதினால் நீ நொருங்கிப் போவாய். இந்த கல் மேல் இந்த கல் உன்மேல் விழுமானால் நீ எழுந்திருக்க போவதில்லை. உனக்கு விரோதமாய் உருவாக்கப்படும் எந்த ஆயுதமும் வாய்க்காதே போம். என் ஆண்டவர் எனக்கு வாக்கு கொடுத்திருக்கிறார். மந்திரவாதியே உன்னில் இருக்கிற குட்டி சைத்தான்களை பார்க்கிலும் என்னில் இருக்கிறவர். அதுதான் வாயின் பட்டயம். வசனத்தை விசுவாச அறிக்கை செய்வதுதான் அந்த ஆவியின் பட்டயமாய் இருக்கிறது.

ஏழாவதாக அவருடைய முகத்தைக் குறித்து சொல்லியிருக்கிறது. ஆரம்பத்தில் அவருடைய சிரசைப் பற்றி முதலாவது சொல்லியிருந்தது 14 ஆம் வசனத்தில் இங்கே மறுபடியும் அவருடைய சிரசுக்கு அவருடைய முகத்தை நாம் பார்க்கிறோம். அவருடைய முகம் வல்லமையாய் பிரகாசிக்கிற சூரியனைப் போல இருந்தது. ஆமென் அல்லேலூயா. ஆண்டவருடைய முகம் வல்லமையாய் பிரகாசிக்கிற சூரியனைப் போல இருந்தது. என் ஆண்டவர் இந்த பூமியில் இருந்தபோது தம்முடைய சீஷர்களை மறுப மலைக்கு அழைத்துக் கொண்டு போனார். அவர் ஜெபம் பண்ணும்போது அவருடைய முகம் சூரியனைப் போல பிரகாசிக்கும். அவர் நீதியின் சூரியன் என்று அழைக்கப்படுகிறார். மல்கியா நான்காம் அதிகாரம் இரண்டாம் வசனத்தில் கர்த்தருக்கு பயந்திருக்கிறவர்கள் மேல் நீதியும் சூரியன் உதிக்கும். மரும மலையிலே அவருடைய முகம் சூரியனைப் போல பிரகாசித்தது என்று மத்தேயு 17 ஆம் அதிகாரம் இரண்டாம் வசனத்தில் வாசிக்கிறோம். நமக்குள் அந்த நீதியின் சூரியன் இருப்பார் என்றார். நம்முடைய முகம் பிரகாசிக்கும். மோசேயின் முகம் பிரகாசித்தது. ஸ்தேவானுடைய முகம் தேவதூதனுடைய முகத்தைப் போல இருந்தது. அகத்தின் அழகு முகத்தில் தெரியும். ஒரு போதகர் பிரசங்கத்தில் இப்படி குறிப்பிட்டார். இன்னைக்கு உபவாசக் கூட்டம் எத்தனை பேர் நீங்க உபவாசம் பண்ணி வந்தீங்களோ இல்லையோ தெரியல என்று அவர் சொல்லிவிட்டு சொன்னார். நீங்க இட்லி தோசையை முழுங்கிட்டு வந்திருக்கிறீங்க. நான் நீதியின் சூரியனை முழுங்கிட்டு வந்திருக்கிறேன். ஆகவே அந்த பிரகாசம் இன்றைக்கு உங்கள் மேல் வரும் என்று சொன்னேன். எத்தனை ஒரு அருமையான ஒரு வார்த்தை. இன்றைக்கும் அந்த நீதியும் சூரியன் உங்கள் மேல் உதிப்பார்.

இந்த ஏழு காரியங்களை ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள். இதோடு நான் முடிக்கிறேன். நான் எக்ஸ்பிளைன் பண்ணாத எல்லா காரியமும் அந்த நோட்ஸ்ல இருக்கிறது. வாசித்தால் நீங்கள் புரிந்து கொள்ளக்கூடிய விதத்தில் எளிய முறையிலே அதை ஒவ்வொரு ஒவ்வொரு ஸ்டெப் ஸ்டெப்பா அதை எழுதி இருக்கிறேன். அதுல எழுதி இருக்கிறதை மீண்டும் நான் பிரசங்கம் பண்றதுல அர்த்தம் இல்லை. இன்று முதல் உங்களுடைய கண்கள் தேவகுமாரனை நோக்கி பார்க்கட்டும். அவருடைய ஏழு குணாதிசயங்கள் இங்கு இங்கு சொல்லப்பட்டிருக்கிறது. மனுஷ ரூபத்தில் வந்த இயேசு இன்றைக்கு சினிமா நடிகர் ரூபத்தில் விக்கிரகங்களைப் போல நடமாடிக் கொண்டிருக்கிறது. இது கர்த்தருடைய வருகைக்கு ஆயத்தமாவதை நம்மை தடுத்துக் கொண்டிருக்கிறது. மாம்சத்தின்படி வந்த இயேசுவையே யோவான் பார்த்து கொண்டிருந்தபடியால் தேவகுமாரனாய் பரலோக ராஜாதி ராஜாவாய் கர்த்தாதி கர்த்தராய் கிறிஸ்து காட்சி அளித்தபோது அந்த காட்சியை தாங்கக் கூடாதபடி செத்தவனைப் போல விழுந்தார். மனுஷகுமாரனாகவே பார்த்துக் கொண்டிருக்கிறவர்கள் கடைசி நாளில் மகிமையான தேவதூதர்களோடு பிதாவின் மகிமை பொருந்தினவராய் வரும்போது அந்த மகிமையை தாங்கக் கூடாமல் மலைகளை குன்றுகளை எங்கள் மேலே விழுந்து எங்களை மூடிக்கொள்ளுங்கள் மகிமையை காண முடியவில்லை. அவர் மகிமையின் ராஜா. உம்முடைய கண்கள் அவரை மகிமையின் ராஜாவாக காணட்டும்.

நாம் எழுந்து நிற்போம். கைகளை உயர்த்திக் கொள்வோம். தேவனே ஒவ்வொருவர் மேலும் உம்முடைய பிரசன்னம் இறங்கி வரும்படி ஜெபிக்கிறோம். எங்களுக்கு ஒத்தாசை வருகிற பர்வதம் நீர்தான். நீர் தேவாதி தேவகுமாரனாய் இருக்கிறதற்காக நீர் நன்றி. உயிரோடு எழுந்து பிதாவினுடைய வலது பார்சத்தில் அமர்ந்திருக்கிறதற்காய் நன்றி. பிரதான ஆசிரியனாய் அமர்ந்திருந்து எங்களுக்காக பரிந்து பேசிக் கொண்டிருக்கிறதற்காய் உமக்கு நன்றி. அல்லேலூயா. அங்கிருந்து உன்னதத்துக்குரிய சகல ஆசீர்வாதங்களாலும் ஆவிக்குரிய சகல ஆசீர்வாதங்களாலும் எங்களை ஆசீர்வதிக்கிறதற்காய் நன்றி. இந்த இரவு வேளையிலும் உம்முடைய அபிஷேகம் உம்முடைய பிள்ளைகள் மேல் இறங்கி வரவேண்டும் என்று ஜெபிக்கிறேன். இறங்கி இறங்கி வரவேண்டும் என்று ஜெபிக்கிறேன். எல்லா சோர்வுகளையும் அதைங்களையும் அவிசுவாசங்களையும் நீக்கி போட்டு எப்போதும் உற்சாகத்தின் ஆவியினாலும் துதியின் ஆவியினாலும் தேவனை குறித்த வெளிப்பாடுகளினாலும் பரலோக தரிசனங்களினாலும் உம்முடைய பிள்ளைகளை நிரப்ப வேண்டும் என்று ஜெபிக்கிறேன். உம்முடைய வல்லமை பலமாய் இறங்கி வருவதாக. அக்கினி அபிஷேகம் இறங்கி வருவதாக. இறைவானவர் இறங்கி வரும்போது எல்லா குறைகளும் நீங்கி போகுமே. இப்பொழுது இப்பொழுது இப்பொழுது படுத்துகிற எல்லா ஆவிகளும் நீங்குவதாக. பலவீனப்படுத்துகிற சத்துருவினுடைய வல்லமை முறிக்கப்படுவதாக. அக்கினியால் சுட்டெரிக்கப்படுவதாக. எல்லாவற்றையும் புதிதாய் மாற்றும்படி ஜெபிக்கிறேன். இப்பொழுது இப்பொழுது ஒரு புதிய ஆவி ஒரு புதிய அபிஷேகம் ஒரு புதிய அந்நிய பாஷை ஒரு புதிய பாடல் ஒவ்வொரு மேலும் இறங்கி வருவதாக. தீர்க்கதரிசன அபிஷேகத்தை தருவீராக. ஒவ்வொருவருடைய கைகளோடு உம்முடைய கைகளை இணைத்து சுகமளிக்கிற வல்லமையை தருவீராக. உம்முடைய பிள்ளைகள் நன்மை செய்யட்டும் ஆண்டவரே. தேசத்திலே கர்த்தர் ஒருவர் உண்டு அவர் பெரியவர் அவர் பெரியவர். ஆபிரகாமிலும் பெரியவர் யாக்கோபிலும் பெரியவர் பெரியவர் சாலமோனிலும் பெரியவர் யோனாவிலும் பெரியவர் வானம் அவருடைய சிங்காசனம் பூமி அவருடைய பாதபடி. எங்கள் ஆண்டவர் சர்வ வல்லமை உள்ளவர் அவர் மகிமையின் ராஜா. ஒரு அக்கினி இறங்கி பற்றி பிடிக்கிறதற்காய் நன்றி. அக்கினி மயமான கண்களை உடையவர் ஒவ்வொருவரையும் கூர்ந்து நோக்கிக் கொண்டிருக்கிறதுக்காய் நன்றி. உம்முடைய அக்கினி உம்முடைய கண்களிலிருந்து உம்முடைய பிள்ளைகள் மேல் பற்றி பிடிப்பதாக. அவர்களையும் அக்கினி ஜுவாலையாய் மாற்றுவீராக. ஓ உம்முடைய பிள்ளைகள் எழுந்து பிரகாசிக்கும்படி அளவற்ற கிருபையின் வரங்களால நிரப்ப வேண்டும் என்று ஜெபிக்கிறேன். உலக பிரகாரமாக உயர்த்துவீராக. ஆவிக்குரிய பிரகாரமாக உயர்த்துவீராக. எலியா எப்படி ஒரு அக்கினி ஜுவாலையாய் வாழ்ந்தாரோ எப்படி பக்தி வைராக்கியத்தோடு நின்றாரோ அக்கினியால் உத்தரவருகிற தேவனே தேவன் என்று நிரூபித்தாரோ உங்கள் ஒவ்வொருவரையும் அப்படி பயன்படுத்த வேண்டும் என்று ஜெபிக்கிறேன். அக்கினிமயமான பரிசுத்த வாழ்க்கையை தருவீராக. உம்முடைய பிள்ளைகள் மேல் உம்முடைய இரண்டு கரங்களையும் இப்பொழுது நீர் வைக்கும்படி ஜெபிக்கிறேன். ஆணிப்பாய்ந்த கரங்களிலிருந்து உம்முடைய இரத்தம் ஒழுகி வருவதாக. வல்லமை இறங்கி வருவதாக. புதிய அபிஷேகம் இறங்கி வருவதாக. எல்லாவற்றையும் நீர் புதிதாக்க வேண்டும் என்று ஜெபிக்கிறேன். உம்முடைய நாமத்தை மகிமைப்படுத்திக் கொள்ளும். இயேசுவின் மூலம் பிதாவே ஆமென். உட்காருவோம். [இசை]