Transcription
[음악] [음악] เฮ >> [음악] >> ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்கள் யாவருக்கும் என் அன்பின் நல்வாழ்த்துக்கள். மீண்டுமாக தீர்க்கதரிசன உலகம் என்ற நிகழ்ச்சியிலே உங்கள் யாவரையும் சந்திப்பதில் கர்த்தருக்குள் நான் மகிழ்ச்சி அடைகிறேன்.
தீர்க்கதரிசனங்கள் பொதுவாகவே விளங்கி கொள்ள கடினமானவைகள் அல்ல. நாமலா சில காரியங்களை மனசுல போட்டு லாக் பண்ணி வச்சிருப்போம். தீர்க்கதரிசனமா இதெல்லாம் கஷ்டங்க யாரும் புரிந்து கொள்ள முடியாதுன்னு சொல்லுது அந்த மனதில போட்டுருக்க லாக்குதான் பல சமயங்கள்ல் நம்ம தீர்க்கதரிசன வார்த்தைகளை வாசிக்க முடியாமலும் வாசித்தாலும் விளங்கிக் கொள்ள முடியாமலும் செய்கிறார்.
சிலருக்கு பாருங்களேன் ஸ்கூல்ல படிக்க போகும்போதே மேத்தமேட்டிக்ஸ் கஷ்டம்னே சொல்லிருவாங்க. ஐயோ கணக்கு பாடம் கஷ்டம் அது அவங்களுடைய ஆள் மனதில அப்படியே ஒட்டிக்கொள்ளும். மற்ற எல்லா பாடத்திலும் படிச்சிரலாம் கணக்கு பாடம் கஷ்டம் என்று எதையுமே நம்ம விளங்கிக் கொண்டு படித்தால் எதுவுமே கஷ்டமல்லை.
தீர்க்கதரிசனங்களை குறித்த ஒரு மாய தோற்றத்தை சாத்தான் உண்டாக்கி வச்சிருக்கிறான். இதெல்லாம் ரொம்ப வந்து பைபிள் படிச்சவங்களுக்கு ஸ்காலர்ஸ்க்கு நமக்கெல்லாம் இதெல்லாம் விளங்காது அப்படிங்கிற மாதிரி ஒரு மனதில் ஒரு கருத்தேற்றத்தை சாத்தான் போட்டு வச்சிருக்கறதுனால நான் நிறைய பெரிய ஊழியக்காரர்களை கூட பார்த்திருக்கிறேன். தீர்க்கதரிசன வார்த்தைகளை குறித்து அவங்களுக்கு ஒரு அடிப்படையான நாலட்ஜ் கூட இல்லாம இருக்கும். எல்லாரையும் சொல்லலனா சிலரை நல்லா இருக்கவங்க கூட இந்த தீர்க்கதரிசன வார்த்தைகள் வந்து இது எதுக்கு நமக்கு இயேசு வந்தார் அவருடைய இரத்தத்திலே நமக்கு மீட்பு இருக்கு இரட்சிப்பு இருக்கு அது போதும் அதை பத்தியே பேசிட்டு தியானிச்சிட்டு போயடலாம்னு நினைப்பாங்க.
ஒரு காலத்திலே ஒருவேளை நீங்கள் சொன்னது சரியா இருக்கலாம். ஆனால் கடைசி காலத்தில் நீங்க அப்படி இருக்க முடியாது. கடைசி காலத்தில் அடுத்தடுத்து நடக்க போகிற திடுக்கிடும் காரியங்கள் ஒவ்வொன்னுக்கும் உங்களுக்கு ஏன் வருகிறது இது எவ்வளவு காலம் நீடிக்கும் இதிலிருந்து எப்படி தப்புவது என்பதை தெரிந்து கொள்ளனா நீங்க தீர்க்கதரிசனத்துக்கு தான் வரணும். அப்ப இந்த தீர்க்கதரிசனத்தை குறித்து நம்முடைய மனசுல இந்த எண்ணத்தை வளர்த்துக் கொள்ளாதீர்கள் இதெல்லாம் நம்ம படிச்சா புரியாது யார் படித்தாலும் புரியும்.
இதுல ஒரு விசேஷம் என்ன தெரியுமா? தீர்க்கதரிசனம் என்றாலே கர்த்தர் மனிதர்களுக்கு வெளிப்படுத்தி சொன்னது அவர் வந்து வெளிப்படையா சொன்ன ஒரு காரியம்தான் அந்த காரியமே நமக்கு புரியலனா அப்பறம் எப்படி இருக்கும் யோசிச்சு பாருங்க. வேதத்தில் நிறைய பேர் சொல்லுவாங்க இந்த வெளிப்படுத்தின விசேஷம் புஸ்தகம் படிச்சா ஒண்ணுமே புரியலங்கன்பாங்க. ஆனா உண்மையில பாருங்க அந்த புஸ்தகம் என்ன சொல்லுதுன்னா வெளிப்படுத்தப்பட்ட ஒரு புஸ்தகம் ஒரு காரியம் என்ன வரப்போகுதுங்கிறத வெளிப்படையா உங்களுக்கு வெளிப்படுத்தி சொல்லி இருக்கிறேன் அது எப்படி விளங்காம போகும்.
நீங்க நல்ல ஜெபத்தோட தேவனுடைய அபிஷேகத்தோட தீர்க்கதரிசனங்களின் அவசியத்தை உணர்ந்து நீங்கள் இந்த தீர்க்கதரிசன வார்த்தைகளை தியானிக்க ஆரம்பித்தால் ரொம்ப உங்களுக்கு உற்சாகமாகவும் பல மர்மங்கள் வெளிப்படுகிறதாகவும் ஓ இதனாலதான் இப்படியோ என்பதெல்லாம் நீங்கள் கற்றுக்கொள்ள ஆரம்பித்து விடுவீர்கள். அதனால்தான் தீர்க்கதரிசனங்கள் மேல உங்களுக்கு ஒரு ஈர்ப்பும் ஒரு கவனமும் உண்டாக வேண்டும் என்று விசேஷமாக தீர்க்கதரிசன உலகம் என்ற இந்த நிகழ்ச்சியை நம்ம வடிவமைத்திருக்கிறோம். இதுல மேக்ஸிமம் பார்த்தீங்கன்னா தீர்க்கதரிசன பக்கம் உங்களுடைய கவனத்தை திருப்புவதுதான் நம்முடைய நோக்கம்.
அதனால இந்த வார நிகழ்ச்சியிலிருந்து வேதத்திலிருந்து ஒரு தீர்க்கதரிசனத்தை வாசிக்க கேட்க போறோம். இந்த வாசிக்கும் போது நீங்க என்ன செய்யணும்னா நான் போன நிகழ்ச்சியில் உங்கள் சொன்ன மாதிரி இந்த நிகழ்ச்சிக்கு வரும்போது இதை தெளிவா புரிஞ்சுக்கிறணும் கர்த்தருடைய வார்த்தையை நான் தெளிவா அறிஞ்சுக்கணும்னு நீங்க விருப்பப்பட்டா நீங்க ஒரு நோட்டு புத்தகத்தோட வரணும். சொல்லப்படுகிற குறிப்புகளை குறித்துக் கொள்ளணும். அதுக்கப்புறம் நீங்க பைபிளோட அதை ஒப்பிட்டு பார்க்கணும் அதை குறித்து நீங்கள் ஜெபம் பண்ணனும்.
கர்த்தர் நான் இந்த நிகழ்ச்சியிலே சொன்னதை விட இன்னும் மேலதிகமான பல காரியங்களை உங்களுக்கு வெளிப்படுத்தி பேச முடியும் ஏன்னா ஒரு அரை மணி நேர செய்திக்குள்ள நான் எல்லா காரியத்தையும் சொல்லிவிட முடியாது. ஆனா நீங்க தேவனிடத்தில் ஜெபம் பண்ணும்ோது பரிசுத்த ஆவியானவர் ஒரு காரியத்தை நாம் ஆரம்பிச்சிருக்கிறோமா அதில் இருக்கிற நுணுக்கங்கள் ஆழங்கள் திரை மறைவு ரகசியங்கள் போன்றவைகளை வெளிப்படுத்தி பேச முடியும். அதனால இந்த நிகழ்ச்சியை நீங்க ஜெபத்தோடு பார்க்கணும் ஒவ்வொரு வார்த்தைகளையும் ஜெபத்தோடு நீங்கள் கவனித்து பார்க்கணும். ரண்டு பேதுரு 19 அதைத்தான சொன்னது தீர்க்கதரிசனத்தை வெறுமனே பார்க்க கூடாது கவனிச்சு பார்க்கணும்.
இன்னைக்கு நம்ம ஒரு தீர்க்கதரிசனத்தை வாசிக்க போறோம். அது என்ன இருக்குதோ அத அப்படியே வாசிக்க போறோம். அதை வாசிக்கும் போது நீங்களும் வேத புத்தகத்தில அந்த பகுதியை எடுத்து கொள்ளுங்கள். அதை நீங்களும் அப்படி ஃாலோ பண்ணிட்டே வாங்க. இன்னைக்கு ஒரு தீர்க்கதரிசனத்தை கவனித்து பார்க்கலாம். இன்னைக்கு நம்ம எந்த தீர்க்கதரிசனத்தை பார்க்க போறோம் அப்படின்னா யோவேலுடைய தீர்க்கதரிசன புஸ்தகம் இரண்டாவது அதிகாரம் ஒன்னிலிருந்து 11 வரைக்கும் உண்டான வசனங்கள். மறுபடியும் சொல்றேன் யோவேலுடைய புஸ்தகம் இரண்டாவது அதிகாரம் ஒன்னிலிருந்து 11 வரைக்கும் உண்டான வசனங்கள்.
இப்போ அந்த வசனங்களை வாசிக்க கேட்கலாம் நாமும் அதோடு கூட இணைந்து வேத புத்தகத்தில அந்த பகுதி வாசித்து பார்க்கலாம் வாங்க வாசிப்போம். சீயோனிலே எக்காளம் ஓதுங்கள் என் பரிசுத்த பர்வதத்திலே எச்சரிப்பின் [음악] சத்தமிடுங்கள். தேசத்தின் குடிகள் எல்லாம் தத்தளிக்க கடவர்கள் ஏனெனில் கர்த்தருடைய நாள் வருகிறது அது சமீபமாய் இருக்கிறது. அது இருளும் அந்தகாரமுமான நாள் அது மப்பும் மந்தாரமுமான நாள். விடியற்கால வெழுப்பு பர்வதங்களின் மேல் பரவுகிறது போல ஏராளமான பலத்த ஒரு ஜாதி தீவிரமாக வந்து பரவும். அப்படிப்பட்டது முன்னொரு காலத்திலும் உண்டானதும்ல்லை. இனி தலைமுறை தலைமுறையாக வரும் வருஷங்களிலும் உண்டாவதுல்லை. அவைகளுக்கு முன்னாக அக்கினி பட்சிக்கும் அவைகளுக்கு பின்னாக ஜுவாலை எரிக்கும். அவைகளுக்கு முன்னாக தேசம் ஏதேன் தோட்டத்தை போலவும் அவைகளுக்கு பின்னாக பாழான வனாந்தரத்தை போலவும் அவைகளுக்கு ஒன்றும் தப்பி போவதில்லை. அவைகளின் சாயல் குதிரைகளின் சாயலை ஒத்தது அவைகள் குதிரை வீரரை போல ஓடும். அவைகள் ஓடுகிற ரதங்களின் இறைச்சல் போலவும் செட்டைகள் எரிக்கிற அக்கினி ஜுவாலையின் இறைச்சல் போலவும் யுத்தத்துக்கு ஆயத்தப்பட்ட பலத்த ஜனத்தின் இறைச்சல் போலவும் பர்வதங்களுடைய சிகரங்களின் மேல் குதிக்கும். அவைகளுக்கு முன்பாக ஜனங்கள் நடுங்குவர்கள் எல்லா முகங்களும் கருகி போகும். அவைகள் பராக்கிரமசாலிகளை போல ஓடும் யுத்த வீரரை போல [음악] மதிலேறும் வரிசைகள் பிசகாமல் ஒவ்வொன்றும் தன் தன் அணியிலே செல்லும் ஒன்றை ஒன்று நெருக்காது ஒவ்வொன்றும் தன் தன் பாதையிலே செல்லும். அவைகள் ஆயுதங்களுக்குள் விழுந்தாலும் காயம்படாமல் போகும். [음악] அவைகள் பட்டணம் எங்கும் செல்லும் மதிலின் மேல் ஓடும் வீடுகளின் மேல் ஏறும் பலகணி வழியாய் திருடனை [음악] போல உள்ளே நுழையும். அவைகளுக்கு முன்பாக பூமி அதிரும் வானங்கள் அசையும் சூரியனும் [음악] சந்திரனும் இருண்டு போகும் நட்சத்திரங்கள் ஒளி மழுங்கும். கர்த்தர் தமது சேனைக்கு முன் சத்தமிடுவார் அவருடைய பாளையம் மகா பெரியது அவருடைய வார்த்தையின்படி செய்கிறதற்கு [음악] வல்லமை உள்ளது. கர்த்தருடைய நாள் பெரிதும் மகா பயங்கரமுமாய் இருக்கும் அதை சகிக்கிறவன் யார். ஆதலால் [음악] நீங்கள் இப்பொழுதே உபவாசத்தோடும் அழுகையோடும் புலம்பலோடும் [음악] உங்கள் முழு இருதயத்தோடும் என்னிடத்தில் திரும்புங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார். >> [음악] >> நீங்கள் உங்களுடைய வஸ்திரங்களை அல்ல உங்களுடைய இருதயங்களை கிழித்து உங்கள் தேவனாகிய கர்த்தரிடத்தில் திரும்புங்கள். அவர் [음악] இரக்கமும் மன உருக்கமும் நீடிய சாந்தமும் மிகுந்த கிருபையும் உள்ளவர் அவர் தீங்குக்கு [음악] மனஸ்தாபப்படுகிறவருமாய் இருக்கிறார்.
கர்த்தருடைய வேதத்தை அதிலும் குறிப்பாக தீர்க்கதரிசனங்களை வாசிக்கும் போது நல்ல அபிஷேகத்தில் இருக்கவங்களுக்கு என்ன நடக்கும்னு நான் சொல்லவ நீங்க வாசிக்கும் போதே அந்த வார்த்தைகளில் இருக்கிற காரியங்கள் உங்க மனதில வெளிப்பாடுகளாக வரும். அப்படியே ஓ இந்த வசனம் இப்படி ஒரு வசனம் இருக்குது இது இதை பற்றிதான் சொல்லுகிறது. தரிசனம் பார்க்க அவசியம் இல்லை உங்க மனசுல இருந்தே நீங்கள் நுணுக்கமா வாசிக்கும் போது இந்த வார்த்தை இதுதான் அர்த்தத்தை குறிக்கிறதுன்னு உங்களுக்கே ஒரு காரியத்தை குறித்த வெளிச்சம் கிடைக்கும். அந்த வசனத்தில தீர்க்கதரிசனத்தில இருக்கிற முக்கியமான ஆசீர்வாதம் ஒரு வித்தியாசமே அதுதான்.
தீர்க்கதரிசனம் என்பது விளக்குக்கு சமமா சொல்லப்பட்டிருக்கா ஒரு வெளிச்சத்துக்கும் ஒரு ஒளிக்கும் சமமாய் சொல்லப்பட்டிருக்கா நீங்க அதை நுணுக்கமா கவனிச்சு பார்க்கும்போது அதில இருக்கக்கூடிய காரியங்கள் விளக்கு போல சுடர்விட்டு எரிகிறதை உங்களால் பார்க்க முடியும். இதுவரைக்கும் நாம்ம இந்த வசனத்துக்கு இந்த தீர்க்கதரிசனத்துக்கு இப்படி ஒரு அர்த்தம் தெரியாது நமக்கு அப்படின்னு நீங்க ஆச்சரியப்படுவீங்க. ஆனா வாசிக்கும் போது மாத்திரம் கவனமா வாசிக்கணும். அப்ப அதனாலதான் இன்னைக்கு நம்ம ஒரு பகுதியை வாசித்திருக்கிறோம். யோவேலுடைய புஸ்தகம் இரண்டாவது அதிகாரம் ஒலிருந்து 11 வரைக்கும்.
சரி இன்னைக்கு நம்ம இந்த தீர்க்கதரிசன உலகம் நிகழ்ச்சியிலே முதலாவது பார்க்க போகிற காரியம் தீர்க்கதரிசன ராஜாக்கள். அது என்ன தீர்க்கதரிசன ராஜாக்கள் அப்படின்னா இந்த தீர்க்கதரிசனங்கள்ல பல ராஜாக்களை குறித்த செய்திகள் சொல்லப்பட்டிருக்கின்றன. இந்த ராஜாக்களுடைய செய்திகளை நம்ம ஏன் கவனிச்சு பார்க்கணும் அப்படின்னு சொன்னா கடைசி காலத்தோடு தொடர்புடைய பல ராஜாக்களைப் பற்றின செய்திகள் அதிலே சொல்லப்பட்டிருக்கின்றன. இனி வருகிற கடைசி காலத்தில உபத்திரவ காலத்தில இந்த ஒட்டுமொத்த உலகத்தையும் ஆளப்போகிற ஒரு ராஜா ஒருவன் வெளிப்பட போகிறான். கர்த்தருடைய வேதம் அதை நுணுக்கமா பல இடங்களில நமக்கு ஆணித்தரமாக வெளிப்படுத்தி சொல்லுகிறது.
இதுவரைக்கும் உலக சரித்திரத்தில் தோன்றின ராஜாக்களுக்கும் இனி வரப்போகிற கடைசி காலத்தில வரப்போகிற ராஜாவுக்கு என்ன வித்தியாசம்னா பல ராஜாக்கள் இருந்தாங்க. ராஜாக்கள்ல வித்தியாசம் வித்தியாசமா இருப்பாங்க. ஒன்னு பார்த்தீங்கன்னா ஒரு தேசத்துக்கு ராஜா ஒரு இஸ்ரவேல் அப்படின்னா ஒரு இஸ்ரவேலுக்கு ஒரு ராஜா. இஸ்ரேல்ல அது ரெண்டாய் பிரிந்த போது ஒன்று இஸ்ரவேல் என்றும் மற்றொன்று யூதா தேசம் வந்தது. அவர் யூதர்களுக்கு மாத்திரம் ஒரு ராஜா இஸ்ரவேல்ல மீதி கோத்திரங்களுக்கு ஒரு ராஜா. அப்படி இருப்பாங்க. இந்தியால பாத்தீங்கன்னா இந்தியாவுக்கு ஒரு ராஜா. அப்ப ஒவ்வொரு தேசத்துக்கும் ஒரு ராஜா இருப்பாங்க.
இரண்டாவது கட்ட ராஜாக்கள் யாருன்னு பார்த்தா சாம்ராஜ்யங்களை ஏற்படுத்தினவர்கள் இவர்களை சக்கரவர்த்தி அப்படின்னு சொல்லுவாங்க எம்பரர். சக்கரவர்த்திகள் என்னன்னா தன் தேசத்தை தாண்டி மற்ற தேசங்களுக்கும் படையெடுத்து போய்ி சில தேசங்களை பிடித்து தன்னுடைய ராஜ்ஜியத்தின் எல்லையை விஸ்தாரமாக்கி பல தேசத்துக்கு ஒரு ராஜா இருப்பார். ஒரு நாலு தேசம் அஞ்சு தேசம் ஏழு தேசம் அப்படி இருக்கலாம். இவங்க எவ்வளவு ஜெயிச்சாங்களோ அந்த அளவுக்கு அந்த தேசங்களை எல்லாம் தன்னுடைய ஆளுமையின் கீழே கொண்டு வந்து அதுக்கு ஒரே ராஜா இருப்பார். அவங்களுக்கு அந்த ராஜ்ஜியங்களுக்கு பேரு சாம்ராஜ்யம்னு பேரு. சாதாரணமா ஒரு தேசம் தான் இருக்கிறது ஒரு இஸ்ரவேல் தேசம் அப்படின்னா ராஜ்ஜியம் அப்படின்னு சொல்லணும். அந்த தேசத்தை தாண்டி மற்ற தேசங்களும் அதோடு கூட இணைக்கப்பட்டு இது ஒரு பெரிய ராஜ்ஜியமா இருக்குன்னா சாம்ராஜ்யம் அப்படின்னு பேரு. அதுல பாத்தீங்கன்னா பல தேசத்தார் இருப்பாங்க பக்கத்தில் இருக்கக்கூடிய தேசத்தார் வேற மொழி பேசுறவங்க வேற விதமான கலாச்சாரத்தை பின்பற்றுகிறவர்கள் அந்த நாட்டை இதோடு இணைச்சிருப்பாங்க. சில சமயங்கள்ல இந்த ராஜாக்கள் என்ன செய்வாங்க அப்படின்னு கேட்டா அந்தந்த நாடுகள் மேல அவங்க ஆட்சி பண்ண முடியாததுனால அந்தந்த நாட்டை பிடிச்சு தன்னுடைய ராஜ்ஜியத்தோடு சேர்த்தாலும் அந்த நாட்டில ஒரு ராஜாவை அவர்கள் ஏற்படுத்தி வைத்து அவங்க வருஷத்துக்கு ஒரு முறையோ ஆறு மாசத்துக்கு ஒரு முறையோ கப்பம் செலுத்த வேண்டும் வரி கட்ட வேண்டும்னு ஒரு வரிவிதிப்பு பண்ணிருவாங்க. இதெல்லாம் கொண்டு வந்து சென்ட்ரலா இருக்கிற தன்னுடைய தேசத்தில் வச்சிருப்பாங்க. இப்படி தன்னுடைய எல்லையை தாண்டின வேறு தேசங்களையும் சேர்த்து ஆளுமை செய்கிறவர் ராஜாவுக்கு பேரு சக்கரவர்த்திகள் அப்படின்னு பேரு அவங்களுடைய ராஜ்ஜியங்களுக்கு பேரு சாம்ராஜ்யம் என்று பெயர்.
நீங்க அந்த காலத்தில இருந்து நீங்க பார்த்தீங்கன்னா நிறைய சாம்ராஜ்யங்கள் இருந்ததை கர்த்தருடைய வேதம் நமக்கு சொல்லுகிறது. ஒரு கல்தேய சாம்ராஜ்யம் இருந்தது. அதுக்கப்புறம் அசீரிய சாம்ராஜ்யம் இருந்தது மேதிய பெர்சிய சாம்ராஜ்யம் இருந்தது அதுக்கு பிறகு கிரேக்க சாம்ராஜ்யம் இருந்தது ரோம சாம்ராஜ்யம் இருந்தது இப்படி நிறைய சாம்ராஜ்யங்களை பற்றி நாம் சொல்லிக்கொண்டே போகலாம். இதெல்லாம் சாம்ராஜ்யங்கள்.
மூணாவது நீங்க இதுவரைக்கும் கேள்விப்படாத ஒரு ராஜா அவரை பத்திதான் கடைசி காலத்தில் வருகிற ராஜா என்று வேதம் சொல்லுகிறது. இயேசு தான நினைக்கிறீங்க அவர் அதுக்கு மேல அதுக்கு முன்னால ஒரு ராஜா இவர் வந்து என்னன்னு கேட்டா ஒரு தேசத்துக்கு மாத்திரம் ராஜா இல்ல பல தேசங்களை மாத்திரம் பிடித்து ராஜா இல்ல ஒட்டுமொத்த உலகத்தில் இருக்கிற எல்லா நாடுகளையும் பிடித்து அதுக்கெல்லாம் ஒரே ராஜா. உலகம் தோன்றினதில இருந்து உலக சரித்திரத்தில இருந்து இதுவரைக்கும் அப்படி ஒரு ராஜா வந்ததே இல்லை. ஒவ்வொருவரும் ஒன்னு ஒன்னு ராஜாவா இருப்பாங்க அல்லது சாம்ராஜ்யங்களை ஆளுகிற சக்கரவர்த்திகளா இருப்பாங்க ஒட்டுமொத்த உலகத்தை யாருமே ஆண்டதில்லை. யாராவது உங்களுக்கு ஞாபகம் இருக்கா ஒட்டுமொத்த உலகத்தையும் பிரிட்டிஷ் சாம்ராஜ்யம் அது உலகத்தில பல தேசங்களை பிடித்திருந்தது இந்தியாவை கூட ஆனா ஒட்டுமொத்த உலகத்தையும் அது பிடிக்கல. சில பகுதியை ஸ்பெயின் பிடித்திருந்தது உலகத்தில சில நாடுகளை சில நாடுகளை பிரான்ஸ் பிடித்திருந்தது. இந்த மாதிரி இந்தியாவில நீங்க பாருங்களேன் சில மாநிலங்களை பிரஞ்ச அல்லது போர்ச்சுுகீஸ் போன்றவர்கள் பிடிச்சிருந்தாங்க. மீதி பகுதியைதான் ஆங்கிலேயர்கள் பிடித்திருந்தார்கள். அப்பதனால இந்த உலக சாம்ராஜ்யம் உலகத்தில் இருக்கிற ஒட்டுமொத்த உலகத்தையும் ஒரே ஆளுனர் ஆளுகிற மாதிரி ஒரு ராஜா இதுவரைக்கும் வந்ததில்லை இனிமே வருவாங்களா வேதம் சொல்லுது வருவார்கள்.
அந்த ராஜாவை பற்றின பல தகவல்கள் வேதத்தில் சொல்லப்படுது. இந்த ராஜாவுக்கு பேரு அந்தி கிறிஸ்து அப்படின்னு வேதத்தில குறிப்பிடுறாங்க. இந்த அந்தி கிறிஸ்து என்றால் என்ன அப்படின்னு கேட்டா அந்தி கிறிஸ்து அந்தி என்ற வார்த்தைக்கு பொதுவாகவே நீங்கள் அந்தின்னு சொன்னா சாயந்திர நேரத்தை குறிப்பிடும். ஆனா இந்த வருகிற அந்தி என்பது சாயந்திர நேரத்தை குறிப்பிடுவது அல்ல. ஆன்டி என்கிற ஆங்கில வார்த்தையினுடைய தமிழ் திரிவுதான் அந்தி. ஆன்டி கிரைஸ்ட் அப்படின்னா கிறிஸ்துவுக்கு எதிரானவன் என்று பொருள். கிறிஸ்துவுக்கு எதிரானவனாக ஒரு ஆள் எழும்பி கிறிஸ்துவுக்கு எதிரானவன் யாரு உங்களுக்கு தெரியும் சாத்தான். சாத்தான் தான் கிறிஸ்துவுக்கு எதிரி. சாத்தான் என்றாலே எதிராளி என்று பொருள் யாருக்கு எதிராளி கிறிஸ்துவுக்கும் கிறிஸ்துவை சார்ந்தவர்களுக்கும் அவன் எதிரி. அப்ப இந்த எதிராளி ஒட்டுமொத்த உலகத்தையும் ஆளுமை செய்வான் ஒரு நாட கூட விடாம தீவுகள் தேசங்கள் ராஜ்ஜியங்கள் எல்லாத்துக்கும் ஒரே ஆள்தான் இங்க இருந்து போடப்படுற சட்டம்தான் எல்லா தேசத்திலும் வரிவிதிப்பு கொடுத்தா எல்லா நாட்டுக்கும் ஒரே மாதிரி வரிவிதிப்பு. அப்ப இப்படிப்பட்ட ஒரு ராஜா வருவான் என்று வேதம் நமக்கு தெளிவாய் சுட்டி காட்டுகிறது.
அந்தி கிறிஸ்து என்ற வார்த்தையை நீங்கள் முதல் முதலில் ஒன்று யோவானுடைய புஸ்தகம் இரண்டாவது அதிகாரம் 18வது வசனம் வசனத்தில தான் வாசிக்கிறீங்க. வேற இடத்தில எல்லாம் அந்த ராஜாவை பற்றி சொல்லி இருக்களிய அவனுக்கு அந்தி கிறிஸ்து என்ற பெயர் கொடுக்கப்படவில்லை. வெளிப்படுத்தின விசேஷத்தில சொல்லிக்கு தானியேல் புஸ்தகத்தில் சொல்லிக்கு எசேக்கியல்ல சொல்லிக்கு சக்கரியா புஸ்தகத்தில் சொல்லிக்கு நிறைய புஸ்தகங்கள்ல இந்த வரப்போகிற உலக ஆளுனரை பற்றி பல இடத்தில் சொல்லப்பட்டாலும் அவனுக்கு ஸ்பெசிபிக்கா அவன் அந்தி கிறிஸ்து என்ற பெயரை கொடுத்தது யோவான்தான் ஒன்று யோவானுடைய புஸ்தகம் இரண்டாவது அதிகாரம் 18வது வசனம். அதுல அவர் அந்தி கிறிஸ்துவை பற்றி மேலதிகமா ஒரு விவரம் சொல்றார் என்ன சொல்றாரு பிள்ளைகளே இது கடைசி காலமாய் இருக்கிறது அந்தி கிறிஸ்து வருகிறான் என்று நீங்கள் கேள்விப்பட்டபடி அப்ப முதல் நூற்றாண்டில் இருக்கிற சபையாருக்கே அந்தி கிறிஸ்துன்னு ஒருத்தன் வரான்ிற செய்தி சொல்லப்பட்டிருக்கு. பரிதாபம் என்னன்னு கேட்டா இவ்வளவோ வருஷங்கள் தாண்டி வந்த கடைசி கால சபைகள்ல நிறைய சபையினருக்கு அந்தி கிறிஸ்து என்றால் யாருன்னு தெரியாது அவன் வருகிறான் என்ற செய்தியும் நிறைய பேருக்கு தெரியாது. ஆனா முதல் நூற்றாண்டுல பாருங்க எவ்வளவு தூரம் அவங்களை கற்பிச்சு அவங்களுக்கு ட்ரெய்னிங் கொடுத்து வசனங்களை குறித்த ஒரு விளக்கத்தை தெளிவை கொடுத்து அவர் சொல்றாரு உங்களுக்கு நான் ஏற்கனவே சொல்லிக்கேன்ல அந்தி கிறிஸ்துன்னு ஒருத்தன் வரான் என்று வருகிறான் என்று நீங்கள் கேள்விப்பட்டபடியே இப்பொழுதும் அநேக அந்தி கிறிஸ்துக்கள் இருக்கிறார்கள். அதினால இது கடைசி காலம் என்று அறிகிறோம். இந்த கடைசி காலம் என்பதே பிரதானமாய் இந்த அந்தி கிறிஸ்துவினுடைய போராட்டம் தான் அதிகமா இருக்கும். இதுல ரெண்டு காரியம் சொல்லப்பட்டிருக்கு ஒன்னு அந்தி கிறிஸ்து இன்னொன்னு அந்தி கிறிஸ்துக்கள். அந்தி கிறிஸ்து என்றால் யார் அப்படின்னு கேட்டா சாத்தான் எப்பவுமே இயேசுவை போல இருக்க வேண்டும் என்று அல்லது கடவுளை போல இருக்க வேண்டும் என்று ஆசை கொண்டவன். ஏேசையா தீர்க்கதரிசியின் புஸ்தகம் 14வது அதிகாரத்தில வானத்துக்கு ஏறுவேன் உன்னதமானவருக்கு ஒப்பாவேன் அவருடைய சிங்காசனத்துக்கு மேல என் சிங்காசனத்தை உயர்த்துவேன் என்று உன் இருதயத்தில் சொன்னாயே என்று சாத்தானை பற்றி சொல்லியிருக்கும். ஆங்கில வேதாகமத்தில படிச்சீங்கன்னா ஓ லூசிபர் என்று ஆரம்பிக்கும். நீ உன்னதத்துக்கு ஏறுவேன் உன்னதமானடைய சிங்காசனத்துக்கு ஒப்பாவேன் அப்படில்லாம் இருதயத்தில சொன்னாயே.
அப்ப சாத்தானுடைய டைய பாவம் என்னன்னு கேட்டா கடவுள் மாதிரி நான் ஒரு ராஜாவா ஒரு ஒரு ஆளுமை செய்கிறவனா அந்த அதிகாரத்தை நானும் பெற்றுக்கொள்ளணும் அப்படிங்கறதுதான் அவனுடைய விருப்பம். கடவுளை போல அவருக்கு மேல மாறணும் அப்படிங்கறதுதான் அவனுடைய எண்ணம். அதனாலதான் தள்ளப்பட்டான்.
அப்ப இவன் இந்த சாத்தான் என்ன செய்வான்னா கடவுளை போல அப்படின்னு சொன்னடனே அவர் என்னென்ன செய்றாரோ அதே மாதிரி பார்த்து காப்பி அடிக்கிறதுதான் சாத்தானுடைய வேலை. சாத்தான் எப்படி கடவுள் மூன்று விதங்களில் செயல்படுகிறாரோ கடவுள் ஒருவர்தான் ஆனா அவருடைய செயல்பாடுகளை வைத்து மூன்றாக நம்ம பிரிக்கிறோம். ஒரு மனிதன் இருக்கிறான் மனைவிக்கு அவன் கணவனாய் இருக்கிறான். பிள்ளைகளுக்கு அப்பாவா இருக்கிறான். தன் பெற்றோருக்கு மகனாய் இருக்கிறான். ஆள் ஒன்னுதான் மகன் கணவன் தகப்பன் ஒரே ஆள்தானே. அது மாதிரி கர்த்தர் தாம் செய்கிற வேலைகளை பொறுத்து தன்னை மூன்று வடிவங்களாக அவர் வெளிப்படுத்துகிறார். பிதா குமாரன் பரிசுத்த ஆவி என்று வேதத்தில் அதை பற்றி நிறைய விஷயங்கள் சொல்லி இருக்கு.
இதுல இந்த குமாரன் என்பவர் குறிப்பாக விழுந்து போன மனிதர்களுக்காக எழுப்பப்பட்டவர். மனிதர்களுடைய இரட்சிப்பு மனிதர்களுடைய பாவ மன்னிப்பு மனிதர்களை பரலோகத்தில் கொண்டு வந்து சேர்க்கிறது மனிதர்களை அபிஷேகம் பண்ணுவது மனிதர்களை ஒளி உள்ளவர்களாக வெளிச்சத்தின் பிள்ளைகளாக மாற்றுவது இது முழுசும் மனிதர்களுக்கு சம்பந்தமான காரியங்கள் முழுசும் குமாரனாகிய கிறிஸ்துவருடைய கைகளிலே ஒப்பு கொடுக்கப்பட்டிருக்கு. அதனால்தான் இயேசு சொன்னாரு என்னால் அல்லாமல் ஒருவனும் என் பிதாவிடத்திலே வரமாட்டான் ஏன்னா உங்களுக்கு நியமிக்கப்பட்டது நான்தான் நீங்க பைபாஸ் பண்ணிட்டு நேரா பரலோகத்தில பிதாவிடத்தில எல்லாம் போயிட முடியாது பைபாஸ் பண்ண முடியாது இது பரலோகத்தினுடைய ஒரு சட்டம். அதுல என்ன வச்சிருக்கறாங்க மனுஷனா நீ மனுஷருக்கு இயேசுதான் அவர்களுடைய மீட்பு பாவ மன்னிப்பு அவர்களை சுத்திகரிப்பது உயர்த்துவது வெளிச்சமாக்குவது அவர்களை நடத்துவது எல்லாம் அவருக்கு உதவி செய்ய பரிசுத்த ஆவியானவர் அனுப்பப்பட்டிருக்கிறார். அவர் இந்த ஆவியானடைய துணையோடு மனிதர்கள் சம்பந்தப்பட்ட வேலை முழுசும் அவர் பார்த்துக்கிறார்.
பிதாவினுடைய ஆதீனத்தில மனிதர்கள் மாத்திரம் இல்ல பரலோகம் இருக்குது தேவதூதர்கள் இருக்கிறாங்க அங்க அநேக வாசஸ்தலங்கள் இருக்குன்னு போட்டுருக்கு அதெல்லாம் கவனித்துக் கொள்வது பிதாவினுடைய வேலை. அவர்தான் முழுக்க முழுக்க கடவுள் நீங்க புரிந்து கொள்வதற்காக சொல்றேன் நம்ம ஈஸியா நம்முடைய மைண்ட்ல புரிஞ்சுக்கறதுக்காக அப்போ அது அவருடைய வேலை. குமாரனாகிய கிறிஸ்து வழியாகத்தான் நம்ம பரலோகத்துக்குள்ள நுழைய முடியுது. குமாரனாகிய கிறிஸ்து வழியாதான் பிதாவிடத்திலே போக முடிகிறது.
மூன்றாவது பரிசுத்த ஆவியானவர். பரிசுத்த ஆவியானவர் என்பவர் மனிதர்களை பெலப்படுத்துவதற்கும் கடவுள் விரும்புகிற சித்தத்தை செய்ய வைப்பதற்கும் குமாரனாகிய கிறிஸ்துவுக்கு உதவியாக மனிதர்களோடு இருப்பதற்கு அனுப்பப்பட்டவர் பரிசுத்த ஆவியானவர். அப்ப இந்த மூணு பேரா பிதா குமாரன் பரிசுத்த ஆவியான இருக்கிறாங்களா இந்த சாத்தான் பார்க்கிறான். இந்த கடவுள் எப்படி மூன்று ரூபங்கள்ல அல்லது மூன்று விதங்களல செயல்படுறாரோ அதே மாதிரி நாமளும் செய்யணும் ஏன்னா அவர் மாதிரி மாறணும் என்றதுதான் அவருடைய ஆசை. அதுக்கு அவன் என்ன செய்றான்னா அவனும் ஒரு மூன்று வடிவத்தை வைத்திருக்கிறான்.
ஒன்று வலுசர்ப்பம் அதான் விழுந்த பிரதானமான ஆவி லூசிபர் அப்படின்னு குறிப்பிட்டுருக்கு பாருங்க லூசிபர் அந்த அவன்தான் முதல்ல விழுந்தவன் கீழ அது பேரு வலுசர்ப்பம் பழைய பாம்பு என்று வேதம் அதை குறிப்பிடுகிறது. அதை இங்கே பிதா இருக்கிற மாதிரி அங்க வலுசர்ப்பம். இங்கே குமாரன் இருக்கிறார்ல அது மாதிரி இந்த மனிதர்களுக்காக சாத்தான் ஏற்படுத்தி மனிதர்களை ஆளுமை செய்வதற்கும் மனிதர்களை தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்து ராஜாவாய் இருப்பதற்கும் இவன் ஒரு குமாரனை ஏற்பாடு செஞ்சிருக்கிறான் அவன் பேர்தான் அந்தி கிறிஸ்து.
மூணாவது பாருங்க ஆவியானவர் இருக்கிறாரே ஆவியானவர் குமாரனுக்கு உதவி செய்து மனிதர்களை அவர்களை சுத்திகரித்து பலப்படுத்தி பரலோக ராஜ்ஜியத்துக்குரியவங்களா மாத்துறார்ல அது மாதிரி இங்கே சாத்தானுடைய திரித்துவத்தில மூன்றாவது ஆளுக்கு பேரு கள்ள தீர்க்கதரிசி அது ஒரு ஸ்பிரிட் கள்ள தீர்க்கதரிசினா ஆள இல்ல அது ஒரு ஆவி. இந்த ஆவி அப்ப பிதா குமாரன் பரிசுத்த ஆவி இங்கே அங்க வலுசர்ப்பம் அந்தி கிறிஸ்து கள்ள தீர்க்கதரிசி இது எப்படி ஆவியானவர் வேலை செய்றாரோ அது மாதிரி வேலை செய்யும். மனிதர்கள் நடுவில. அப்போ இவைகளை ஆளுமை செய்கிற அந்த மூணு காரியங்கள்.
இதுல குமாரனாகிய கிறிஸ்து இயேசு கிறிஸ்து இந்த உலகத்தை ஆளுமை செய்ய போகிறார். அவருக்கு கைகளில் ஒப்பு கொடுக்கப்பட்ட மனிதர்களை எல்லாம் ஒன்று திரட்டி இதே பூமியில அவர் ராஜாவாக ஆயிரம் வருடம் அரசாளுமை செய்ய போகிறார் என்று வேதம் சொல்லுகிறது. ஆனால் அதுக்கு முன்னால் அது மாதிரியே தானும் காப்பி அடிச்சு பண்ணனும்ல்ல அதுக்காக சாத்தானுக்கு ஒரு சான்ஸ் கொடுத்திருக்காங்க. அதன்படி அவன் இந்த ஒட்டுமொத்த உலகத்தையும் ஒரு இன் கூட விடாம ஒட்டுமொத்த உலகத்தையும் தன்னுடைய கட்டுப்பாட்டில் கொண்டு வந்து ஏழு வருஷம் ஆட்சி பண்ண போகிறான் ஏழு வருஷம். அந்த ஏழு வருஷத்துல தீவுகள் ராஜ்ஜியங்கள் காடு மலை உலகத்தில எல்லாமே இந்த ஆளுனர் கட்டுப்பாட்டில் வந்துவிடும். அதைத்தான் நம்ம அந்தி கிறிஸ்துவை வேதம் பல இடங்களில் ராஜா என்று சொல்லுகிறது அவன் இந்த சாத்தானுடைய ஆதீனத்தில் இருக்கிற ஒரு ராஜா.
இங்கே நீங்க பார்த்தீங்கன்னா கடைசி காலமாய் இருக்கிறது கடைசி காலத்தில அவன் வருவான் ஏழு வருஷம் ஆட்சி பண்ணுவான் கடைசி காலத்தில அந்தி கிறிஸ்து வருகிறான் என்று நீங்கள் கேள்விப்பட்டபடியே இப்பொழுது அநேக அந்தி கிறிஸ்துக்கள் இருக்கிறாங்க. அப்ப வருகிற அந்தி கிறிஸ்துங்கறது வேற அந்தி அந்தி கிறிஸ்துக்கள்ங்கிறது அது யாரு அப்படின்னு கேட்டா இந்த அந்தி கிறிஸ்துவின் ஆவியை பெற்று வரப்போகிற ராஜாவாகிய அந்தி கிறிஸ்துவுக்கு வேலை செய்றவங்க இருக்காங்க பாருங்க ராஜ்ஜியங்களை ஒருங்கிணைக்கணும் அவன் வந்து உலகத்தில ஒரு அதிபதியாக அமரணும்னா ஒரே நாள்ல நடக்க வேண்டிய காரியமா அது இல்லை. எல்லா மனித குலத்தையும் அவனுடைய கட்டுப்பாட்டுக்குள்ள கொண்டு வரணும்னா அதிகாரங்களை கொண்டு வரணும் வியாபாரங்களை கொண்டு வரணும் மத நம்பிக்கைகளை கொண்டு வரணும் ஒவ்வொரு ஜாதிகளை கொண்டு வரணும் தேசங்களை கொண்டு வரணும் அரசியலை கொண்டு வரணும் இதுக்கெல்லாம் நிறைய பேர் வேலை செய்வாங்க. அவர்களை எல்லாம் இந்த வலுசர்ப்பத்தின் ஆவி அல்லது அந்தி கிறிஸ்துவின் ஆவி வரப்போகிற அந்தி கிறிஸ்து வேலை செய்றதற்கு ஆட்களை நியமிச்சிருப்பான். இவர்களை நீங்கள் எல்லா இடத்திலயும் பார்க்கலாம் வியாபாரத்தில் பார்க்கலாம் விஞ்ஞானத்தில பார்க்கலாம் மருத்துவத்துறையில் பார்க்கலாம் எல்லா இடத்திலயும் பார்க்கலாம். அவங்களுடைய நோக்கம் எல்லாம் என்னன்னு கேட்டீங்கன்னா வரப்போகிற அந்தி கிறிஸ்துக்கு இந்த உலகத்தை கொடுத்தரணும் அவர் ஆளுமை செய்வதற்கு இப்பவே இந்த உலகத்தை ஒருநிலைப்படுத்திக் கொண்டு ஒருங்கிணைத்துக் கொண்டு வரணும் அதற்கு தீவிரமா வேலை செய்றவங்க பேரு அந்தி கிறிஸ்துக்கள் வந்து சிங்காசனத்த உட்கார போறான்ல அவன் பேர்தான் அந்தி கிறிஸ்து அப்ப அவனுக்கு வேலை செய்கிறவன்.
இதே மாதிரி இயேசு கிறிஸ்து சைடுல நீங்க பாருங்க கிறிஸ்து இந்த உலகத்துக்கு ராஜாவாய் வரப்போகிறார். அப்ப அவருக்கு வேலை செய்றதுக்கு ஜனங்களை இரட்சிப்புக்குள்ள நடத்துறதுக்கு ஜனங்களை கர்த்தருடைய கையிலே ஒப்பு கொடுக்கறதுக்கு தேசங்கள் தோறும் இருக்கிற ஜனங்களை இயேசுவின் மந்தையிலே கூட்டி சேர்ப்பதற்கு நிறைய பேர் அவருடைய ஆவியிலே நிரப்பப்பட்டு இயங்கிக் கொண்டிருக்கிறாங்க. அவர்களுக்கு அங்கே அந்தி கிறிஸ்துக்கள் என்று பெயர் நமக்கு இங்கே கிறிஸ்தவர்கள் என்று பெயர். இதான் உண்மையான கிறிஸ்தவர்கள் சும்மா கிறிஸ்தவ குடும்பத்தில் பிறந்து கொண்டுய் ஒரு சர்ச்சல ஞானஸ்தானம் கொடுத்து அதுல்ல கிறிஸ்துவுக்காக வேலை செய்கிறவர்கள் வரப்போகிற ஆயிரம் வருடம் ஆளுமை செய்யப்போகிற ராஜாவாகிய கிறிஸ்துவுக்கு வேலை செய்றவங்க பேர் கிறிஸ்தவர்கள் அவருடைய சித்தத்தை செய்றவங்க. சாத்தான் வரப்போகிற ஏழு வருஷத்துக்கு இந்த உலகத்தை ஆயத்தம் செய்றவங்களுக்கு பேரு அந்தி கிறிஸ்துக்கள் அப்ப இவன் வரப்போகிற அந்தி கிறிஸ்துவை பற்றி வேதம் அங்கே தெளிவாக சொல்லிவிட்டது.
இனிமேதான் முக்கியமான விஷயத்துக்குள்ள வரோம் கவனிங்க முதல் காரியம் என்னன்னு கேட்டா வரப்போகிற இவன் ஒரு ராஜா ராஜானா ஒரு அதிபர் அவன் ஒட்டுமொத்த உலகத்தில் இருக்கிற நாடுகளையும் ஆளுமை செய்ய போகிறவன் எல்லாம் அவனுடைய கட்டுப்பாட்டில கண்ட்ரோல்ல கொண்டு வர போறான் அவன் போடுற சட்டம்தான் அவன் அந்தி கிறிஸ்து என்று இருக்கிறதுனால கிறிஸ்துவுக்கு எதிரான காரியங்கள செய்வான் கிறிஸ்தவர்களை துன்பப்படுத்துவான் கிறிஸ்து பேரே சொல்லக்கூடாது இவன்தான் அந்தி கிறிஸ்து ஒரு கொடூரமான ஒரு ஆட்சியாளனாக வெளிப்படுவான் இவன் அந்தி கிறிஸ்து ஆளுமை செய்வான் என்று தெரியும் அவன் வருகிற காலம் எதுன்னு தெரியும் அவன் எப்படி இருப்பான் அவனுடைய குணாதிசயங்கள் என்ன அதை பற்றில்லாம் விவரங்கள் நமக்கு தெரியாது பாருங்க.
அதுக்கு கர்த்தர் என்ன செய்றாருனா நமக்கு தீர்க்கதரிசனங்கள்ல பல காரியங்களை வெளிப்படுத்தி வைத்திருக்கிறார். குறிப்பாக நீங்கள் ஒருவரை பற்றி நீங்க பார்க்கணும்னு சொன்னா அவரைப் பற்றி மாத்திரம் பார்ப்பதில்ல அவருடைய நிழலாட்டமான காரியங்களை நம்ம பார்க்கணும். வேதத்தில இயேசு கிறிஸ்து இந்த உலகத்தில் வருவதற்கு முன்பாக பழைய ஏற்பாட்டில நீங்க பார்த்தீங்கன்னா பல பக்தர்கள் இயேசுவை இயேசு எப்படி இருப்பார் என்பதை பிரதிபலித்து காட்டின நிழலாட்டமான முன்னோடிகள் இருக்கிறாங்க அவங்க வழியாதான் இயேசுவை மாதிரி முழுசா அப்படி இருக்க மாட்டாங்க இயேசு இந்த உலகத்துக்கு வரும்போது எப்படி இருப்பாரோ அதனுடைய பல பகுதிகளை பல பரிசுத்தவான்கள் அதை பிரதிபலிச்ு காமிச்சிருக்கிறாங்க. இயேசு மாதிரியே அவருடைய கேரக்டர் மாதிரியே அவருடைய குணாதிசயம் மாதிரியே இதெல்லாம் உலகத்துக்கு கர்த்தர் அறிமுகப்படுத்தி வருகிற மேசியா இப்படித்தான் இருப்பார் என்று பல நிழலாட்டமான கேரக்டர்களை அதன் வழியாய் உலகத்திற்கு செய்து சொல்லி இருக்கிறாங்க. அவங்களை நம்ம பார்க்கும்போது அவருடைய பல காரியங்கள் வரப்போகிற அல்லது வந்த இயேசு கிறிஸ்துவுக்கு ரிசம்பள் ஆகும் அப்படியே ஒப்புவோமையா இருக்கும் அதான் நிழலாட்டம் சொல்லுவோம். அப்படிப்பட்ட பரிசுத்தவான்களை பற்றி வேதம் சொல்லுகிறது அவங்க ஒவ்வொருவரும் கிறிஸ்துவினுடைய ஒவ்வொரு குணத்தை பிரதானமான குணத்தை பிரதிபலிக்கிறவங்களா இருப்பாங்க அவங்களை குறித்து நீங்க ஸ்டடி பண்ணீங்கன்னா வரப்போகிற கிறிஸ்து இதெல்லாம் சேர்த்தீங்கன்னா இப்படித்தான் முழுமையாய் இருப்பார் என்பதை விளங்கி கொள்ள முடியும். பழைய ஏற்பாட்டில தீர்க்கதரிசிகளும் வேதத்தை ஆராய்ந்தவர்களும் இதைத்தான் ஆராய்ந்தார்கள் அப்ப கிறிஸ்து தான் வெளிப்படுவதற்கு முன்பாக அவருடைய காரியங்களை குணாதிசயங்களை பிரதிபலிக்கிற ப கேரக்டர்களை பூமியிலே எழுப்பினார்.
ஒரு சின்ன உதாரணம் சொல்றேன் பாருங்க பல தேவ பரிசுத்தவான்கள் அவங்களை நீங்க பார்த்தீங்கன்னா அவர்கள் இயேசு கிறிஸ்துவை அவர்கள் பிரதிபலித்ததாக நீங்கள் பார்க்க முடியும். முதல் ஆளு யாருன்னு பாருங்க ஆபேல். ஆபேல் இயேசு கிறிஸ்துவுக்கு முன் அடையாளமானவர் நிழலாட்டமானவர் ஏன் அப்படின்னு கேட்டா நீதிக்காக பாடுபட்ட முதல் நீதி உள்ள மேய்ப்பர் அவர் ஆடு மேய்க்கிறவர் ஒரு மேய்ப்பர் அடுத்து அவர் இயேசுவின் குற்றமற்ற துன்பத்திற்கு இணையானவர். இயேசு பாருங்க எந்த தவறும் செய்யல பிதாவை மகிமைப்படுத்தினதுனால அவர் கொலை செய்யப்பட்டார். அவரை சொந்த சகோதரனை கொலை செய்தான். இயேசுவை கொன்றது வேற நாட்டுக்காரங்க இல்ல. அவருடைய சொந்த இனத்தாரே அவரை கொன்றார்கள் எதற்காக தேவனை மகிமைப்படுத்தினதற்காக. ஆபேல் வேற எந்த தப்பும் செய்யல. காயினுடைய பலியை போய் அவர் எடுத்து கொள்ளவில்லை. அவருக்கு விளைந்த விளைச்சல்கள்ல எந்த ஒரு திருட்டுத்தனமும் பண்ணல. அவர் செஞ்சது முழுசும் பாருங்களேன் அவர் தன்மட்டில் தன் காரியங்களை செய்தார் உண்மையுள்ள மேய்ப்பனாக இருந்தார் இயேசுவினுடைய குற்றமே செய்யாமல் சொந்த சகோதரர்களால அடிக்கப்பட்ட இயேசு கிறிஸ்துக்கு ஒப்பாக முதல் ஆபேல் கேரக்டர் நமக்கு காட்டப்பட்டது.
இரண்டாவது பாருங்க மெல்கிசதேக். இந்த மெல்கிசதேக் கிறிஸ்துவுக்கு முன் அடையாளமானவன். கிறிஸ்து வரப்போறதுக்கு முன்னால அவர் மாதிரியே பிரதிபலிக்க கூடிய பல கேரக்டர்களை கொண்டாந்துகிட்டே இருப்பாங்க. இதே மாதிரிதான் அந்தி கிறிஸ்து செய்ய போறான். இப்ப பாருங்க மெல்கிசதேக் ஆதியாகம புஸ்தகம் 14வது அதிகாரம் அதுல 18வது வசனம் அவர் கிறிஸ்துவுக்கு முன் அடையாளமானவர். ஆக்சுவலா இந்த மெல்கிசதேக் என்பவர் சாலேம் என்ற அந்த நாட்கள் அழைக்கப்பட்ட எருசலேமிலே ராஜாவாய் இருந்தவர் இவரை பற்றி வேதம் சொல்லுது பாருங்க ஆதியாமம் 14 18 அன்றியும் உன்னதமான தேவனுடைய ஆசாரியனாய் இருந்த சாலேமின் ராஜாவாகிய மெல்கிசேதேக்கு அப்பமும் திராட்சரசமும் கொண்டுவந்து ஆபிரகாமை ஆசீர்வதித்து வானத்தையும் பூமியும் உடையவராகிய உன்னதமான தேவனு டைய ஆசீர்வாதம் ஆபிரகாமுக்கு உண்டாவதாக என்றார். இந்த மெல்கிசேதேக் வரப்போகிற இயேசு கிறிஸ்துவின் ஒரு குறிப்பிட்ட காரியத்தை பிரதிபலித்து காண்பிக்கிற ஒரு கேரக்டராக முன்னடையாளமாக காட்டப்படுகிறார். ஆதியாகமத்தில தொடக்கமோ முடிவோ பதிவு செய்யப்படாத ஒரு மர்மமான ராஜாவாக அவர் காட்டப்படுகிறார். அவர் ராஜான்னு சொல்லி இருக்குது ஆசாரியர் என்றும் சொல்லிக்கு இயேசுவை பாருங்க இயேசுவும் ராஜாதி ராஜா அவர் நம்முடைய பிரதான ஆசாரியர் எபிரேயருக்கு எழுதின நிரூபம் ஏழாவது அதிகாரம் ஒன்றிலிருந்து மூன்று வரைக்கும் உண்டான வசனங்களை நான் உங்களுக்கு வாசிக்கிறேன் பாருங்க இந்த மெல்கிசேதேக் சாலேமின் ராஜாவும் உன்னதமான தேவனுடைய ஆசாரியனுமாய் இருந்தான் ராஜாக்களை முறியடி டித்து வந்த ஆபிரகாமுக்கு இவன் எதிர்கொண்டு போய் அவனை ஆசீர்வதித்தான் அவனுக்கு ஆபிரகாம் எல்லாவற்றிலும் தசமபாகம் கொடுத்தான் இவனுடைய முதல் பெயராகிய மெல்கிசேதேக் என்பதற்கு நீதியின் ராஜா என்றும் பின்பு சாலேமின் ராஜா என்பதற்கு சமாதானத்தின் ராஜா என்றும் அர்த்தமாம். இவன் தகப்பனும் தாயும் வம்ச வரலாறும் இல்லாதவன் இவன் நாட்களின் துவக்கமும் ஜீவனின் முடிவும் உடையவனாய் இராமல் தேவனுடைய குமாரனுக்கு அதாவது இயேசு கிறிஸ்துக்கு ஒப்பானவனாய் என்றென்றைக்கும் ஆசாரியனாய் நிலைத்திருக்கிறான் பாத்தீங்களா அவர் ராஜாதான் அவர் இயேசு கிறிஸ்துவுக்கு தேவனுடைய குமாரனுக்கு ஒப்பானவனாக என்றென்றைக்கும் நிலைத்திருக்கிறான் அவருடைய கேரக்டர் அவர் வெளிப்படுத்தின அன்னைக்கு உலகத்தில பல பேர் பல மாதிரி போயட்டு இருக்கும்போது இந்த மெல்கிசேதைக்கு மாத்திரம் கிறிஸ்துவை பிரதிபலிக்கிறார். கிறிஸ்து ராஜாவாகவும் இருப்பாரு கிறிஸ்து ஆசாரியனாகவும் இருப்பாரு அவருக்கு நீதியின் ராஜான்னு பேரு சமாதானத்தின் ராஜான்னு பேரு அவருக்கு மெல்கிசேத கூட தகப்பன் பேர் யாருக்கும் தெரியாது தாயின் பேரும் தெரியாது அதே மாதிரி இயேசு கிறிஸ்து ஆதியும் அந்தமும் இல்லாதவராக வெளிப்பட்டார். அப்ப இதெல்லாம் வச்சு பார்க்க போது அவர் துவக்கமும் முடிவும் இல்லாதவராக தேவனுடைய குமாரனுக்கு ஒப்பாக தன்னை வெளிப்படுத்தினார்னு வேதமே காட்டுது அதுல அப்போ இது மாதிரி பல கேரக்டர்கள் இயேசு வருவதற்கு முன்பாகவே பூமிக்கு அறிமுகப்படுத்தப்பட்டாங்க அவங்க முழுசா அப்படியே இயேசு மாதிரியே இருக்க மாட்டாங்க இயேசுவினுடைய பிரதானமான குணங்களை அவர்கள் பிரதிபலித்து வரப்போகிற இயேசுவுக்கு முன்னடையாளமா இருப்பாங்க நித்திய ஆசாரியத்துவம் மெல்கிசேதக்கு ஆரம்பமும் முடிவும் இல்லாதது போல கிறிஸ்துவும் நித்திய காலத்துக்கு ஆசாரியராய் இருக்கிறார் அதத்தான் அந்த வேத பகுதி நமக்கு சுட்டி காட்டுகிறது.
சரி அடுத்து ஒரு ஆள பாருங்களேன் யோசேப்பு. யோசேப்பு தன் சொந்த சகோதரளால் விற்கப்பட்டு யோசேப்ப பத்தி உங்களுக்கு தெரியும். இயேசு அப்படித்தான் சொந்த சகோதரர்களால காட்டிக் கொடுக்கப்பட்டு யூதாசை போல துரோகம் செய்யப்பட்டு தன் பிதாவுக்கு பிரியமான மகனாக இருந்து அவர் தன் மக்களை பஞ்சத்திலிருந்து காப்பாற்றினது போல கர்த்தர் இந்த கடைசி நாட்களல தம்முடைய ஜனங்களை காப்பாற்ற போகிறார். தன் சகோதரர்களால் துரோகம் செய்யப்பட்டு அடிமையின் ரூபம் எடுத்து அடிமையின் சாயலை தரித்து இறுதியிலே எகிப்தின் ஆளுனராக உயர்ந்தது மாதிரி தன் ஜனங்களை காப்பாற்றினது மாதிரி இயேசுவும் துரோகம் சிலுவை மரணம் அடிமையின் ரூபம் மற்றும் உயிர்த்தெழுந்து ராஜாவாய் வீற்றிருக்க போகிறார். சொல்லனா நிறைய சொல்லலாம் யோசேப் அப்படியே கிறிஸ்துவை பிரதிபலித்து காண்பித்தவர்.
அடுத்த கேரக்டர் பாருங்க மோசே. அந்த நாட்கள்ல மனிதர் எல்லாம் வேற வேற மாதிரி இருந்தாங்க மோசே தன் மக்களை அடிமைத்தனத்திலிருந்து விடுவித்து அவர்களுக்கு ஒரு மத்தியஸ்தராகவும் தீர்க்கதரிசியாகவும் தலைவராகவும் இருந்தவர். இயேசு அப்படித்தான் மனிதர்களை அடிமைத்தனத்திலிருந்து விடுதலையாக்குவார் அவர்களுக்கு மத்தியஸ்தராக இருப்பார். ஒருதான கூப்பிட்டு எல்லா வழக்குகளை விசா விசாரித்தார் மோசே அதே மாதிரி கிறிஸ்து பிதாவுக்கும் நமக்கும் இடையிலே மத்தியஸ்தராக இருந்து நமக்காக பரிந்து பேசுகிறார். கிறிஸ்து ஒரு தீர்க்கதரிசியாக இருந்தார். அதேபோல இயேசு இறுதி மீட்பர் என்பதை முன்னறிவித்து இஸ்ரவேல் எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து மீட்டவர். இயேசு மனித குலத்தையே பாவத்திலிருந்து மீட்டவர். பேமா சொல்லிறேன்.
அடுத்து யோசுவா. யோசுவா இயேசுவின் அதே பெயரை கொண்டவர் மக்களை வாக்குத்தத்த தேசத்துக்கு வழிநடத்தினவர் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட பரலோகத்துக்கு நம்மை ஒருவர் வழிநடத்த போகிறார் அவர் இயேசு அதை யோசுவாவுடைய கேரக்டர் நமக்கு காமிக்குது. அப்ப இது மாதிரி நிறைய ஈசாக்கு ஈசாக்கை பலியாக கொண்டு வந்து கொடுத்தாங்க அவர் தன்னை பலியாக ஒப்பு கொடுப்பதற்கு தன் பிதாவுக்கு சம்மதம் தெரிவித்தார் முரண்டு பிடிக்கல ஓடல தன் தகப்பன் சித்தத்தை நிறைவேற்றுவதற்கு பலிபீடத்தில் போய் தன் கழுத்தை கொடுத்தார் இயேசு அப்படித்தான் தன் பிதாவின் சித்தத்தை நிறைவேற்ற சிலுவையை சுமந்தார்.
இப்ப இது மாதிரி நிறைய கேரக்டர்கள் இயேசு வர்துக்கு முன்னால பல கேரக்டர்கள் வழியாக இயேசு தன்னை வெளிப்படுத்தி இந்த உலகத்துக்கு அந்த பாதையின் வழியா வந்த மாதிரி இதே காப்பிதான் தான் பாந்தி கிறிஸ்து இவன் என்ன செய்ய போறான் நான் ராஜாவாய் வரப்போறேன்னா அதுக்கு முன்னாலயே பல ராஜாக்களை எழுப்பி அந்த ராஜாக்களை நீங்க கவனிச்சு பார்த்தீங்கன்னா இனி வரப்போகிற அந்தி கிறிஸ்துவினுடைய குணாதிசயங்கள் அவனுடைய சுபாவங்கள் அவனுடைய நிழலாட்டங்கள் அவங்களுக்குள்ள தெளிவா தெரியும். இவங்க எல்லாம் இனி வரப்போகிற அந்தி கிறிஸ்துவுக்கு முன் அடையாளமானவர்கள். இவங்களைத்தான் கடைசி கால தீர்க்கதரிசனங்கள்ல சம்பந்தப்படுத்தி ராஜாக்கள் என்ற தலைப்பில் சொல்லி இருக்கிறாங்க. அப்ப முழுசா அந்தி கிறிஸ்து இப்படி இருப்பான் என்று ஒரே இடத்தில் எல்லாத்தையும் சொல்லாம பல ராஜாக்கள் இந்த நெகட்டிவவா இருக்கிற பல ராஜாக்கள் மூலம் அவரல்லாம் தீர்க்கதரிசனங்கள்ல சுட்டி காட்டப்பட்டவங்க அந்த ராஜாக்களுடைய வாழ்க்கைய நீங்க பார்த்தீங்கன்னா அவனுக்குள் இருக்கிற முக்கியமான பல விஷயங்கள் எல்லாம் பல கேரக்டர் பல குணாதிசயங்கள் இந்த அந்தி கிறிஸ்துவிடத்திலே வெளிப்படுகிறது நீங்க பார்க்க முடியும். அதை பத்திதான் நம்ம பார்க்க போறோம் நம்ம வருகிற வாரத்தில் பார்க்க போறது தீர்க்கதரிசன ராஜாக்கள் பார்க்க போறோம். அடுத்த வாரம் காத்திருங்க கர்த்தருடைய வேதத்தை நம்ம வாசித்து பகுதி பகுதியா பார்க்க போறோம் சரித்திரத்தை பத்தி கூட நம்ம நிறைய பார்க்க போறோம் பல விஷயங்களை தெரிந்து கொள்ள போகிறோம் ஆயத்தமாய் காத்திருங்கள் அடுத்த வாரம் புதிய செய்தியோடு உங்களை சந்திக்கிறேன் அதுவரை கர்த்தர் உங்களை ஆசீர்வதித்து காப்பாராக ஆமென்.