Transcription
[இசை] [இசை] ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்கள் யாவருக்கும் என் அன்பின் நல்வாழ்த்துக்கள். மீண்டுமாக தீர்க்கதரிசன உலகம் என்ற நம்முடைய நிகழ்ச்சியிலே உங்களை சந்திப்பதில் கர்த்தருக்குள் நான் மகிழ்ச்சி அடைகிறேன்.
கர்த்தருடைய வேதத்தை நுணுக்கமாய் ஆராய்ந்து அதிலே மறைந்திருக்கிற காரியங்களை அறிந்து கொள்ள வேண்டும் என்கிற ஆர்வம் எல்லாருக்கும் வருவதல்ல. சிலர் பார்த்தீங்கன்னா ஒரு குறிப்பிட்ட ஏரியாவில அப்படி திருப்தி ஆயிடுவாங்க. அவங்க என்ன நமக்கு நாலு வாக்குத்தத்த வசனம் தெரியும், கொஞ்சம் பாட்டு பாட தெரியும், அல்லது சில தீர்க்கதரிசனங்கள் தாண்டி சுவிசேஷத்தில் சில பகுதிகள் தெரியும். அவ்வளவு தெரிந்திருந்தால் போதும் என்று அதுக்குள்ளேயே சுழன்றுட்டு இருப்பாங்க. சிலர் சங்கீதம் வாசிப்பாங்க. ஜெபத்துக்கு முன்னால வேதத்தினுடைய எந்த ஒரு எழுத்தோ, எழுத்தின் உறுப்போ அலட்சியப்படுத்தப்பட தகுந்தது அல்ல.
எதுல நேரடியா கர்த்தர் பேசி சொன்ன காரியங்களுக்கு பேர்தான் தீர்க்கதரிசனங்கள். கர்த்தர் வேலை இல்லாம இதை வேண்டுமானால் இதை வாசித்துக் கொள்ளுங்கள் அப்படின்னு சொல்லி ஒரு சாய்ஸ்ல விட்டு போவதற்காக இவ்வளவு பேசி இருப்பார் யோசிச்சு பாருங்க. கர்த்தருடைய வேத புஸ்தகமே 75 சதவீதம் தீர்க்கதரிசனங்களால் ஆனது. தீர்க்கதரிசனம் என்பது கர்த்தர் நேரடியா தம்முடைய வாயின் வார்த்தையின் மூலம் தீர்க்கதரிசிகளை கொண்டு அவர் பேசுவது. அப்ப இதுதான் நிறைய இருக்குது. கர்த்தர் ஒருவேளை இதை படிச்சா படிக்கலாம். இதெல்லாம் பாத்தீங்கன்னா ஒரு காலத்தில ஸ்கூல்ல சாய்ஸ்ல விட்டுருங்கன்னு சொல்லுவாங்க. அப்படி இல்ல இதுல எல்லாமே நம்ம ஏற்றுக்கொள்ள வேண்டியது, வாசிக்க வேண்டியது, கவனிக்கப்பட வேண்டியது.
அப்ப கர்த்தருடைய தீர்க்கதரிசன வார்த்தைகள் குறிப்பாக கடைசி காலத்தில நம்மை பாதுகாக்க அதுதான் நமக்கு உதவி செய்யும். அப்ப தீர்க்கதரிசனங்களை அறிந்து கொள்ளும் போது கர்த்தரை பற்றி நம்ம நிறைய தெரிஞ்சுக்கிறோம். நான் என்னை பத்தி பேசிக்கொண்டே இருக்கிறேன் என் மனசுல் இருக்கிறதுன்னு சொன்னா அதை நீங்க கவனிச்சு பார்த்தா என்னுடைய குணம் என்னுடைய கேரக்டர் என்ன என் வார்த்தையை கொண்டுதான் நீங்கள் ஒருவரை அறிய முடியும். அதே மாதிரிதான் கர்த்தருடைய வார்த்தைகளை நீங்கள் வாசிக்கும் போதுதான் கர்த்தரையே உங்களால முழுசா புரிந்து கொள்ள முடிகிறது. அதுக்குதான் இந்த தீர்க்கதரிசன வார்த்தைகள். அப்ப இந்த தீர்க்கதரிசன வார்த்தைகள் பக்கம் கவனத்தை திருப்பணும். கடைசி காலத்தில தீர்க்கதரிசன வார்த்தைகள் முக்கியத்துவம் வாய்ந்தவைகள்.
அதனால தீர்க்கதரிசனத்தை தொடர்ந்து வாசிக்கணும் அப்படிங்கிற நோக்கத்தோட நம்முடைய நிகழ்ச்சியின் முதல் பகுதியில கர்த்தர் பேசின தீர்க்கதரிசனங்கள்ல ஒரு பகுதியை வாசிப்பதை வழக்கமாக வைத்திருக்கிறோம். குறிப்பாக மேக்ஸிமம் அந்த தீர்க்கதரிசனங்கள் கடைசி காலத்தோட சம்பந்தம் உடையவைகள். நான் இப்ப வாசிக்கிற தீர்க்கதரிசனத்துக்கு எல்லாம் இப்ப விளக்கம் சொல்ல போறதுல்ல. அதை வாசிக்க போறீங்க. ஜஸ்ட் நீங்க வாசிக்க போறீங்க கவனிச்சு வாசிக்க போறீங்க. இப்ப அந்த வசனங்களை வாசிக்கும் போது அந்த வேத பகுதியை முதல்ல எடுத்துக்கங்க எடுத்துட்டு நாங்க வாசிக்கும்போது நீங்களும் சேர்ந்து அதை அப்படியே வாசிங்க. கர்த்தருடைய வேதம் நமக்கு வலியுறுத்தி சொல்வதை போல வெறுமனே வாசிக்காம கவனிச்சு வாசிங்க நிறுத்தி நிதானமா வாசிங்க அந்த வார்த்தைகள் உங்களுக்கு பல வெளிப்பாடுகளை பல காரியத்தை அறியாத பல காரியத்தை வெளிப்படுத்தி பேசும்.
இன்றைக்கு நம்ம வாசிப்பதற்கு தெரிந்தெடுத்திருக்கிற தீர்க்கதரிசன பகுதி எசேக்கியல் தீர்க்கதரிசியின் புஸ்தகம் 38வது அதிகாரம் ஒன்றிலிருந்து 12 வரைக்கும் உண்டான வசனங்கள். இந்த வசனங்களை இப்ப நம்ம வாசிக்க கேட்க போறோம். பைபிள் எடுத்துட்டீங்களா? ஏன்னா நிறைய பேரு தீர்க்கதரிசன புஸ்தகங்களை அடிக்கடி எடுக்காததுனால கொஞ்ச நேரம் ஆகும். ஆனா எப்படியா கண்டுபிடிச்சு எடுத்துருங்க. இப்ப நம்ம எல்லாம் சேர்ந்து அந்த தீர்க்கதரிசன பகுதியை வாசிக்க போறோம். வாங்க வாசிக்கலாம்.
>> கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி அவர் சொன்னார் மனுபுத்திரனே மேசேக் தூபால் ஜனங்களின் பிரதான அதிபதியாகிய மாகோகு தேசத்தான கோகுக்கு எதிராக நீ உன் முகத்தை திருப்பி அவனுக்கு விரோதமாக தீர்க்கதரிசனம் உரைத்து சொல்ல வேண்டியது என்னவென்றால் கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார். மேசேக் தூபால் ஜனங்களின் அதிபதியாகிய கோகே இதோ நான் உனக்கு விரோதமாக வருகிறேன். நான் உன்னை திருப்பி உன் வாயில் துரடுகளைப் போட்டு உன்னையும் உன் எல்லா சேனையையும் குதிரைகளையும் சர்வாயுதம் தரித்த குதிரை வீரர்களையும் பரிசையும் கேடகமும் உடைய திரளான கூட்டத்தையும் புறப்பட பண்ணுவேன். அவர்கள் எல்லாரும் பட்டயங்களை பிடித்திருப்பார்கள். அவர்களுடைய கூட பெர்சியரும் எத்தியோப்பியரும் லீபியரும் இருப்பார்கள். அவர்கள் எல்லாரும் கேடகம் பிடித்து தலைச்சீராவும் தரித்திருப்பவர்கள். கோமேரும் அவனுடைய எல்லா ராணுவங்களும் வடதிசையில் உள்ள தோகர்மா வம்சத்தாரும் அவர்களுடைய எல்லா ராணுவங்களும் ஆகிய திரளான ஜனங்கள் உன்னுடனே கூட இருப்பார்கள். நீ ஆயத்தப்படு உன்னுடனே கூடின உன் எல்லா கூட்டத்தையும் ஆயத்தப்படுத்து. நீ அவர்களுக்கு காவலாளனாகி இரு. அநேக நாட்களுக்கு பிற்பாடு நீ விசாரிக்கப்படுவாய். பட்டயத்துக்கு நீங்களாகி பற்பல ஜனங்களில்ிருந்து சேர்த்து கொள்ளப்பட்டு வந்தவர்களின் தேசத்தில் கடைசி வருஷங்களிலே வருவாய். நெடுநாள் பாழாய் கிடந்து பிற்பாடு ஜாதிகளில் இருந்து கொண்டுவரப்பட்டவர்கள் எல்லாரும் சுகத்தோடே குடியிருக்கும் இஸ்ரவேலின் மலைகளுக்கு விரோதமாய் வருவாய். அவர்கள் எல்லாரும் அஞ்சாமல் குடியிருக்கும்போது பெருங்காற்றை போல் எழும்பி வருவாய். நீயும் உன்னுடைய எல்லா ராணுவங்களும் உன்னோட கூட இருக்கும் திரளான ஜனங்களும் கார்மேகம் போல் தேசத்தை மூடுவீர்கள். கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால் அந்நாளிலே பாழாய் கிடந்து திரும்ப குடியேற்றப்பட்ட ஸ்தலங்களுக்கு விரோதமாகவும் ஜாதிகளிடத்திலிருந்து சேர்க்கப்பட்டதும் ஆடுகளையும் மாடுகளையும் ஆஸ்திகளையும் சம்பாதித்து தேசத்தின் நடுவில் குடியிருக்கிறதுமான ஜனத்துக்கு விரோதமாகவும் நீ உன் கையை திருப்பும் படிக்கு உன் இருதயத்தில் யோசனைகள் எழும்பும் நீ பொல்லாத நினைவை நினைப்பாய் நான் கொள்ளையிடவும் சூரையாடவும் மதில்களி இல்லாமல் கிடைக்கிற கிராமங்கள் உள்ள தேசத்துக்கு விரோதமாய் போவேன் என்று நினைப்பாய் நிர்விசாரமாய் சுகத்தோட குடியிருக்கிறவர்களின் மேல் வருவேன் என்று சொல்வாய் அவர்கள் எல்லாரும் மதில்கள் இல்லாமல் குடியிருக்கிறார்கள் அவர்களுக்கு தாழ்பாளும் இல்லை கதவுகளும் இல்லை என்பாய்.
எசேக்கியல் தீர்க்கதரிசியின் புஸ்தகம் வெறும் தீர்க்கதரிசனம் மாத்திரம்ல்ல அது பல ஆவிக்குரிய அனுபவங்களை உள்ளடக்கின புஸ்தகம். நான் ரொம்ப விரும்பி படிக்கிற ஒரு புஸ்தகம் எசேக்கியலுடைய புஸ்தகம். எசேக்கியல் வெறும் தீர்க்கதரிசனத்தை மாத்திரம் சொல்லாம அந்த ஒரு தீர்க்கதரிசனத்தை கர்த்தர் வெளிப்படுத்தும் போது தனக்குள்ள என்ன நடந்துச்சு நான் எப்படி அதை பார்த்தேன் என்னுடைய அனுபவம் எப்படி இருந்தது என்பதெல்லாம் சேர்த்து கோர்வையாய் எழுதி இருப்பார். அதை நம்ம படிக்கும்போது ஒரு ஆவிக்குரிய அனுபவத்தில் ஒரு மனிதன் போனால் இவ்வளவு அனுபவங்களை ஆவிக்குரிய ரீதியில் பெற்றுக்கொள்ள முடியுமா என்று என்னுடைய கண்ணை திறந்துவிட்ட புஸ்தகத்தில பிரதானமான இடம் வகிக்கிற புஸ்தகம் எசேக்கியலுடைய புஸ்தகம். இந்த புஸ்தகத்தை வாசி வாசித்துதான் நான் தொடர்ந்து அந்த ஒவ்வொரு அனுபவங்களை வச்சு வச்சு ஜெபம் பண்ணுவேன். எசேக்கியலுக்கு நீங்க கொடுத்த மாதிரி ஆண்டவரே தேசத்துக்கு பேசுன வார்த்தைகள் இவ்வளவு அனுபவங்களை தந்திருக்கீங்களே பரலோகத்துக்கு கொண்டு போறீங்க வேற ஒரு இடத்துல கொண்டு போய் நிறுத்துறீங்க கண்ண திறக்குறீங்க பேசுறீங்க அப்படின்னு சொல்லி ஒவ்வொரு அனுபவத்திற்காகவும் நான் பல நாட்கள் ஜெபம் பண்ணினது உண்டு.
இன்னைக்கு நம்ம தீர்க்கதரிசன ராஜாக்கள் கடைசி காலம் சம்பந்தப்பட்ட தீர்க்கதரிசனங்கள்ல் முன்னறிவிக்கப்பட்ட சில ராஜாக்கள் இவங்க எல்லாம் யாரை பிரதிபலிக்கிறாங்கன்னா வரப்போகிற அந்திகிறிஸ்துவை பிரதிபலிக்கிறாங்க. அதனாலதான் இவர்களை கடைசி கால தீர்க்கதரிசனங்களல் குறிப்பிட்டு பேசி இருக்கிறாங்க. அதுல ஒரு பகுதியை நான் இன்றைக்கு உங்களுக்கு வாசிக்க போகிறேன். தானியேல் தீர்க்கதரிசியின் புஸ்தகம் 11வது அதிகாரம் 36லிருந்து சில வசனங்கள் நான் உங்களுக்கு வாசிக்கிறேன் 45 வரைக்கும் இருக்கு. அது வாசிக்கணும். எடுத்துட்டீங்களா? தானியேல் 11 வது அதிகாரம் 36வது வசனத்தில இருந்து.
தானியேல் ஒரு பிரம்மாண்டமான தீர்க்கதரிசி. தானியேலுடைய தீர்க்கதரிசனம் ரொம்ப சொல்லப்படல. பல புஸ்தகங்கள் எழுதினது ஒருவேளை நம்ம கைக்கு கிடைக்காம போயிருக்கலாம். அவர் எழுதின வரைக்கும் முன்குறித்த வரைக்கும் வேதாகம நிபுணர்கள் ஆராய்ச்சியாளர்கள் எல்லாம் வேதத்தை நம்பாதவங்க கூட இது கடவுளுடைய வார்த்தை என்று ஆச்சரியப்பட்டு ஏற்றுக்கொண்ட தீர்க்கதரிசனம் தானியேலுடையது. அவர் பேசின கொஞ்ச தீர்க்கதரிசனங்களையே கடைசி காலத்தை குறித்து நிறைய பேசி இருக்கிறார். அவைகள் ரொம்ப ஆழமானவைகள் அர்த்தம் நிறைந்தவைகள். எசேக்கியலை பற்றி நான் சொன்ன மாதிரியேதான் தானியேலுக்கும் பல ஆவி ஆவிக்குரிய அனுபவங்களோட தொடர்புடைய ஒரு தேவ மனுஷன். அவர் எழுதின கடைசி காலத்தை பற்றின ஒரு தீர்க்கதரிசனம். கடைசி காலம் பாருங்க நம்ம காலத்தை தாண்டி இனி உலகம் அழிய போற காலத்தில தான் வரப்போகுது. ஆனா தானியேல் காலத்தில இன்னும் இயேசுவே வரவில்லை. இயேசு வர்துக்கு முன்னால இயேசுவினுடைய இரண்டாவது வருகை குறித்தும் அதை ஒட்டின காலங்களை குறித்தும் தீர்க்கதரிசனமாய் முன்னறிவித்தவர் தானியேல்.
இப்ப இந்த வசனத்தை வாசிக்கலாமா? எல்லாரும் எடுத்துட்டீங்களா? கவனமா படிக்கவோம் கேளுங்க. ராஜா முதல்ல ஒரு ராஜாவை பத்தி சொல்லுது. தனக்கு இஷ்டமானதை செய்து தன்னை உயர்த்தி எந்த தேவனிலும் தன்னை பெரியவனாக்கி தேவாதி தேவனுக்கு விரோதமாக ஆச்சரியமான காரியங்களை பேசுவான். கோபம் தீர் மட்டும் அவனுக்கு கைகூடி வரும். நிர்ணயிக்கப்பட்டது நடந்தேறும். அவன் தன் பிதாக்களின் தேவனை மதியாமலும் ஸ்திரீகளின் சினேகிதத்தையும் எந்த தேவனையும் மதியாமலும் எல்லாவற்றிலும் தன்னை பெரியவனாக்கி அரண்களின் தேவனை தன் ஸ்தானத்திலே கனம் பண்ணி தன் பிதாக்கள் அறியாத ஒரு தேவனை பொன்னினாலும் வெள்ளியினாலும் இரத்தினத்தினாலும் உச்சிதமான வஸ்துக்களினாலும் கனம் பண்ணுவான். வரப்போகிற ஒரு ராஜா அவருடைய கேரக்டர் அவன் என்னென்ன செய்வான் அவருடைய செயல்பாடுகள் நமக்கு தெளிவா சொல்லுது பாருங்க.
முடிவு காலத்திலோ என்றால் தென்திசை ராஜா அவனோட முட்டுக்கு நிப்பான். அவனோட முட்டிட்டு நிப்பானா? தென்திசை ராஜா. இப்ப முதல்ல ஒரு ராஜாவை பார்த்தோம் தன்னை தனக்கு இஷ்டமானதை செய்கிற ஒரு ராஜா அவன் தன்னை உயர்த்துவான் அவனை பற்றி நிறைய கேரக்டர் சொல்லுது. அப்ப அது ஒரு ராஜா. ரெண்டாவது ஒரு ராஜா தென்திசையில்ிருந்து எழும்புகிற ராஜா. தென்திசையின் ராஜா அவனோடே முட்டுக்கு நிற்பான். அப்ப முதல்ல ஒரு ராஜா போட்டு இஷ்டமானதை செய்யும் ராஜா. இந்த பகுதியிலே காட்டப்பட்டிருக்கிற இரண்டாவது ராஜா தென்திசை ராஜா. இவன் வேற அவன் வேற. இந்த தென்திசை ராஜா இவனோட முட்டுக்கு நிற்பான். தென்திசை ராஜாவும் அதோடு கூட வடதிசை ராஜாவும் ரதங்களோடும் குதிரை வீரரோடும் அனேக கப்பல்களோடும் சூரை காற்று போல அவனுக்கு விரோதமாய் வருவான். அவன் தேசங்களுக்குள் பிரவேசித்து அவைகளை பிரவகித்து கடந்து போவான்.
அப்ப இப்ப மூணாவது ஒரு ராஜாவ சொல்றாங்க. அப்ப முதல்ல சொன்ன ராஜாவுடைய கேரக்டர் வேற. ரெண்டாவது ஒரு ராஜாவை சொல்றாங்க அவன் தென்திசை ராஜா. இதெல்லாம் இந்த கடைசி காலத்தில் வரப்போகுது. இவர்கள் இன்னும் வரவில்லை. கடைசி காலத்தில் வரப்போறாங்க. இந்த ராஜா தன் இஷ்டமானபடி செய்யும்போது வடதிசை ராஜாவும் எழும்புவான். அவன் ரதங்களோடும் குதிரை வீரரோடும் அநேகம் கப்பல்களோடும் சூரை காற்று போல அவனுக்கு விரோதமாய் வருவான். அவன் தேசங்களுக்குள் பிரவேசித்து அவைகளை பிரவகித்து கடந்து போனான். அது வழியா அப்படியே புயல் போற மாதிரி போவார். அவன் சிங்காரமான தேசத்திலும் வருவான். ஏதோ ஒரு தேசம் கடைசி காலத்தில் சிங்காரமான தேசம் ரொம்ப ஹை குவாலிட்டி தேசம் அது. அந்த தேசத்தின் மேல வருவான். அப்பொழுது அநேக தேசங்கள் கவிழ்க்கப்படும். ஆனாலும் ஏதோமும் மோவாபும் அம்மோன் புத்திரரின் பிரதானமானவர்களும் அவன் கைக்கு தப்பி போவாங்க. இவன் படையெடுத்து வருவான். அப்ப மூணு ராஜா சொல்லி இருக்கு. இஷ்டமானதை செய்யும் ராஜா, தெற்கு திசையிலிருந்து வருகிற ஒரு ராஜா, வடக்கு திசையிலிருந்து வருகிற ஒரு ராஜா. இப்ப இந்த வடக்கு திசை இருந்து வருகிற ராஜா பல தேசங்கள் மேல படையெடுத்து வருவான். ஆனா அவன் தொடாத ஒரு இனம் இருக்கிறது. ஏதோம் மோவாப் அம்மோன் புத்திரரில் பிரதானமானவர்களும் அவன் கைக்கு தப்பி போவாங்க. இதெல்லாம் நம்ம இனிமே பகுதி பகுதியா பார்க்க போறோம்.
அவன் தேசங்களின் மேல் தன் கையை நீட்டுவான். எகிப்து தேசமும் தப்பாது. எகிப்தையும் கதைய முடிச்சிருவோம். எகிப்தினுடைய பொன்னும் யாரு வடதிசை எகிப்தினுடைய பொன்னும் வெள்ளியுமான ஐஸ்வரியங்களையும் உசிதமான எல்லா வஸ்துக்களையும் ஆண்டு கொள்ளுவான். அந்த நாட்டை தன்னுடைய கட்டுப்பாட்டில் வச்சிருவான். லீபியரும் எத்தியோப்பியரும் அவனுக்கு பின் செல்வாங்க. அவனுக்கு சப்போர்ட் பண்ணி லீபியர் எத்தியோப்பியா எத்தியோப்பியா அவங்களுக்கு தெரியும் ஆப்பிரிக்கா தேசம். அவர்களும் அவனுக்கு பின் செல்வார்கள். ஆனாலும் கிழக்கிலும் வடக்கிலும் இருந்து வரும் செய்திகள் அவனை கலங்க பண்ணும். ரெண்டு திசையில இருந்து ஏதோ ஒரு விஷயம் வருது. ஒன்னு கிழக்கு ஒன்னு வடக்கு. அந்த செய்திகள் இந்த வடதிசை ராஜாவை கலங்க பண்ணும். அவன் அநேகரை அழிக்கவும் சங்காரம் பண்ணவும் மகா உக்கிரத்தோட புறப்பட்டு போவான். அந்த செய்திகள்ல் கோபம் அடைஞ்ு அவன் பல தேசங்களை அழிப்பதற்கு உக்கர கோபமா திரும்பி போவான். சமுத்திரங்களுக்கு இடையில் உள்ள சிங்காரமான பரிசுத்த பர்வத தண்டையிலே தன் அரண்மனையாகிய கூடாரங்களை போடுவான். ஆனாலும் அவனுக்கு ஒத்தாசை பண்ணுவார் இல்லாமல் முடிவடைவான் என்று எழுதி இருக்கு.
இப்ப இந்த இடத்துல நமக்கு மூன்று முக்கியமான ராஜாக்களை குறித்து தீர்க்கதரிசனத்தில் சொல்லியிருக்கு. ஒன்னு இஷ்டப்படி செய்யும் ராஜா. இன்னொன்னு தெற்கிலிருந்து புறப்பட்டு வருகிற ராஜா. அவன் எப்ப பார்த்தாலும் இந்த இஷ்டப்படி செய்கிற ராஜாவுக்கு பிரச்சனை கொடுத்துக்கிட்டே இருப்பான். ஏதாவது ஒன்னு சொல்லி அவனை அவனுக்கு முட்டுக்கு நின்றுட்டே இருப்பான். அப்படி பேசிட்டு இருக்கும் போதே மூணாவது வடக்கு திசையிலிருந்து ஒரு ராஜா புறப்படும். அவன் புறப்பட்டு வந்து இந்த நாடுகளுக்குள்ள அந்த இஷ்டப்படி செய்கிற ராஜாவுடைய தேசத்தில் இருக்கறதுக்குள்ள எல்லாம் புயல் மாதிரி கடந்து போயி பல தேசங்களை பிடிப்பான். சிலர் அவனுடைய கைக்கு தப்புவிக்கப்படுவாங்க அப்படின்னு மூணு ராஜாக்களை குறித்து நமக்கு செய்தி சொல்லப்பட்டிருக்கிறது. ஒன்று தென்திசை ராஜா தானியேல் 11:40 குறிச்சுக்கங்க. இன்னொன்னு இஷ்டமானதை செய்யும் ராஜா தானியேல் 11:36. மூணாவது வடதிசை ராஜா தானியேல் 11:40. இந்த மூன்று ராஜாக்களும் இங்கே காட்டப்பட்டிருக்கிறாங்க. இவர்கள் தானியேல் 11 ஆம் அதிகாரத்தில் ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு தேசமாக குறிக்கப்பட்டிருக்கிறாங்க.
இந்த தென்திசை ராஜாவை நீங்க இந்த 36ல இருந்து படிக்கிறீங்கல்ல நீங்க இந்த 11வது அதிகாரத்தின முதல்ல இருந்து படிச்சீங்கன்னா அங்கேயே நீங்க தென்திசை ராஜான்னு ஒரு பெயர் பார்ப்பீங்க. அதுக்கு முன்னால வடதிசை ராஜான்னு ஒரு பெயர் பார்ப்பீங்க. இந்த இடத்துல நமக்கு என்ன கன்பியூஸ் வரும்னா இந்த ரெண்டு தென்திஸ் ராஜாவும் ஒருவரே என்று நம்ம நினைச்சிருவோம். இந்த 11வது அதிகாரத்தை நீங்க கவனமா படிக்கும்போது இந்த போவது அதிகாரம் மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டிருக்கு. ஒன்று இந்த இனி வரப்போகிற ராஜாக்களுக்கு நிழலாட்டமான ராஜாக்கள் கிறிஸ்துவின் காலத்துக்கு முன்னால இருந்த ராஜாக்கள். அதுல ஒரு இஷ்டமான காரியத்தை செய்கிற ராஜா வர்றான். தென்திசை ராஜா வர்றான். ஒரு வடதிசை ராஜா வர்றான். இவனும் 36வது வசனத்துக்கு பின்னால வர்ற ராஜாவும் ஒன்று அல்ல. அவங்க வேற இது வேற. ஆனா சும்மா நீங்க கதை புஸ்தகம் படிக்கிற மாதிரி படிச்சிட்டு போனா இந்த வடதிசை ராஜானா இவன்தான் தென்திசை ராஜானா இதுதான் அப்படின்னு நினைச்சிருவீங்க.
இந்த ஒரு அதிகாரம் பல காலங்களை காட்டுகிறது. என்ன காலங்களை காட்டுது அப்படின்னு பார்த்தா முதல் காரியம் முதல் காலம் அது ஒன்றாவது வசனத்திலிருந்து காட்டுவது கிறிஸ்துவுக்கு முன்னால இருக்கக்கூடிய காலங்களை அது காட்டுகிறது. அது ஒன்னிலிருந்து 33 வரைக்கும் கிறிஸ்துவுக்கு முன்னால வரக்கூடிய அரசியல் அமைப்புகள் சாம்ராஜ்யங்கள் ராஜாக்களை பற்றி காட்டுது. 36லிருந்து நாம வாழ்கிற கடைசி காலத்தை குறித்த செய்திகள் இதுல வரக்கூடிய தென்திசை ராஜா வடதிசை ராஜா இஷ்டமானதை செய்யும் ராஜா என்று மூன்று பேர் காட்டுது.
இந்த நடுவுல ஒரு மூணு வசனம் இருக்கு பாருங்க. 11வது அதிகாரம் 33லிருந்து 36 வரைக்கும் 35 வரைக்கும் ஒரு மூணு வசனம் இருக்கு. அது வேற ஒரு வித்தியாசமான காரியத்தை காட்டுது. எதை காட்டுது தெரியுமா? அது வரப்போகிற எழுப்புதல் காலத்தை காட்டுகிறது. இந்த எழுப்புதல் காலம் எப்ப வரும் அப்படின்னா உங்களுக்கு ஆச்சரியமா இருக்கும். பாருங்க முதல்ல காட்டினது கிறிஸ்துவுக்கு முன்னால் இருக்கிற காலம். கடைசிில 36ல இருந்து காட்டப்படுறது அந்திகிறிஸ்து வரப்போகிற கடைசி காலம். நடுவுல ஒரு மூணு வசனம் இந்த அந்திகிறிஸ்து வரப்போகிற காலத்துக்கு முன்னால என்ன நடக்குது அப்படின்னு பார்த்தீங்கன்னா தானியேல் 11வது அதிகாரம் 33, 34, 35 ஆகிய வசனங்கள் என்ன சொல்லுதுன்னா ஜனங்களில் அறிவாளிகள் அநேகருக்கு அறிவை உணர்த்துவார்கள். ஜனங்கள்ல் அறிவாளிகள் அநேகருக்கு கர்த்தருடைய அறிவை உணர்த்துவார்கள். ஒரு கூட்டம் முதல்ல எல்லாம் சண்டையை பத்தி காமிச் திடீர்னு வேற ஒருஃிளேவர்ல வேற ஒரு காட்சியை இங்கே வடிவமைத்து காட்டுறாங்க. அந்த ஒரு அந்த இடைப்பட்ட காலத்தில் என்ன நடக்குதுன்னா ஜனங்களில் ஞானிகள் அறிவாளிகள் அநேகருக்கு அறிவை உணர்த்துவார்கள். அநேக நாள் மட்டும் இந்த அறிவை உணர்த்துற இந்த காலத்தில அநேகர் பட்டயத்தினாலையும் அக்கினியினாலையும் சிறையிருப்பினாலையும் கொள்ளை நோயினாலையும் விழுவார்கள். அந்த காலகட்டத்தில இப்படி அவர்கள் விழுகையிலே கொஞ்சம் ஒத்தாசையில் சகாயம் அடைவார்கள். அப்பொழுது அநேகர் இச்சக வார்த்தையோட அவர்களை ஒட்டிக் கொள்வார்கள். அடுத்து 35வது வசனம் முக்கியமானது. அறிவாளிகளை புடமிடுகிறதற்கும் சுத்திகரிப்பதற்கும் வெண்மையாக்குகிறதற்கும் அவர்களில் சிலர் இரத்தசாட்சிகளாக விழுவாங்க. முடிவு காலம் வரைக்கும் இப்படியே இருக்கும். குறித்த காலம் வரை இன்னும் நாள் செல்லும்.
முதல்ல ராஜாக்களுடைய சரித்திரங்களை பற்றி சொல்லுது ஒன்னுலிருந்து 32 வரைக்கும். 36லிருந்து கடைசி காலத்தில் வருகிற ராஜாக்களை அந்திகிறிஸ்துவை பற்றியும் அவனுக்கு
எதிராக வருகிற ராஜாக்களை பற்றியும் சம்பவங்களை சொல்லுது. நடுவுல அறிவை உணர்த்துகிற ஒரு காலத்தை சொல்லுகிறது. சிலர் எழும்பி, சில அறிவாளிகள் எழும்பி ஜனங்களுக்கு அறிவை போதிப்பாங்க. அவர்களை ஜனங்களை புடமிடுகிறதற்கும், சுத்திகரிக்க தற்கும், வெண்மையாக்குகிறதற்கும் அவர்களில் சிலர் விழுவார்கள்.
இதை ரெண்டு விதமா சொல்றாங்க. ஒன்னு, அந்த பழைய காலகட்டம் முடிஞ்ச பிறகு, இந்த முதல் நூற்றாண்டில பார்த்தீங்கன்னா, எழும்பி ஜனங்களுக்கு சுவிசேஷம் அறிவித்து அநேகரை புடமிட்டாங்களே, அந்த நேரத்தில் நிறைய இரத்தசாட்சியா மரிச்சாங்க. அந்த காரியத்தை இந்த 11வது அதிகாரம், முப்பத்தி மூன்றிலிருந்து 36 வரைக்கு உண்டான வசனங்கள் காட்டுது. அது திருச்சபையின் காலத்தை குறிக்கிறது அப்படின்னு ஒரு கருத்து இருக்கிறது. அதையும் நம்ம ஏற்றுக்கொள்ளலாம். ஏன்னா, அந்த அந்த முன்னால ஆட்சியாளருடைய காலம் முடிஞ்ச உடனே, ரோமர்கள் ஆளுமை செய்து கொண்டிருந்த போதே, அந்த இடுக்கத்தின் காலத்தில ஒரு கூட்டம் எழும்பி, அப்போஸ்தலர்கள் எழும்பி அநேகருக்கு ஞானத்தை வெளிப்படுத்தி, அநேகரை பரிசுத்தமாக்கி, கடவுளுடைய பிள்ளைகளாய் மாற்றி, அதே நேரத்தில் இரத்தசாட்சியாகவும் மரித்து, அந்த காலத்தை தானியேல் சொல்றார்.
இன்னொரு விதத்தில இத நம்ம எப்படி எடுத்துக் கொள்ளலாம்னா, இந்த அந்திகிறிஸ்து வருவதற்கு முன்னாலயும் இதே மாதிரி சம்பவம் நடக்கும். அதைத்தான் நம்ம பல இடத்தில் சொல்றோம். சபையின் காலம் எழுப்புதல் ஆரம்பிச்ச மாதிரி, சபையினுடைய முடிவு காலத்திலயும் ஒரு எழுப்புதல் வரும். சபை எடுத்துக்கொள்ளப்படுகிற காலத்தில, அதிலிருந்து அந்த அந்த காலத்தில அந்திகிறிஸ்து வருகிற காலம் வரை, முடிவு காலம் வரைக்கும் ஒரு எழுப்புதல் வரும். இதுல பாருங்க, முடிவு வரைக்கும் அந்த எழுப்புதல் நீடிக்குமா அப்படின்னா, இது இந்த இரண்டாவது முறை வருகிற எழுப்புதலை பற்றி சொல்லப்பட்டிருக்கிறது அப்படின்னு வேதம். அதான் அந்த இடைப்பட்ட காலமாக அதை நம்ம எடுத்து கொள்ளலாம்.
இந்த 36வது வசனத்தில நம்ம வாசிக்கும்போது ஒரு ராஜாவை பற்றி வாசிக்கிறோம். அதான் முக்கியமானவன். அவன் யாரு அப்படின்னு கேட்டா, அந்திகிறிஸ்து அப்படின்னு வேதம் சொல்லுது. அவன் தன் இஷ்டப்படி செய்கிற ராஜா என்று முதல் கேரக்டர இஷ்டப்படி செய்கிற ராஜா அப்படின்னு சொல்லும். அப்ப அந்திகிறிஸ்துவினுடைய முதல் கேரக்டர் குணாதிசயம் தன் இஷ்டப்படி செய்வான். அவனுக்கு சட்டம் கிடையாது, திட்டம் கிடையாது. இந்த அந்திகிறிஸ்துவை பிரதிபலிக்கிற ராஜாக்கள் வந்தா கூட நீங்க நல்லா பார்க்கலாம். இப்போ இருக்கிற காலத்தில கூட சில தேசத்தினுடைய ஆளுனர்கள், அதிபர்கள் யார் பேச்சையும் கேட்க மாட்டேன், என் இஷ்டப்படி செய்வேன் அப்படின்னு இருக்கிறவங்க எழும்புவாங்க. பல தேசங்கள் இருக்காங்க. இவர்கள் நேரடியா அந்திகிறிஸ்துவா இல்லாவிட்டால் கூட அந்த அந்திகிறிஸ்துவின் ஆவியினால் இயக்கப்படுகிறவர்கள். அப்ப அப்ப கடைசி காலத்தில இந்த அந்திகிறிஸ்து பிரத்தியட்சமா வெளிப்பட போறதுனால, அதுக்கு முன்னால அந்திகிறிஸ்துவின் ஆவியை பெற்ற நிறைய பேர் எழும்புவாங்க.
அப்ப இந்த கடைசி காலத்தில நீங்க கவனிச்சு பார்த்தீங்கன்னா, உலக நாடுகள்ல் பல நாடுகள்ல தன் இஷ்டப்படி செய்கிற ஆளுனர்கள் எழும்புவாங்க. நான் வச்சதுதான் சட்டம், நான் சொல்றததான் செய்யணும், நாங்க கொடுக்கிறதுதான் சாப்பிடணும், இப்படித்தான் வாழணும் அப்படின்னு சொல்லுகிற மனிதருடைய நலனை பற்றி கவலைப்படாத தன் இஷ்டப்படி செய்கிற ராஜாக்கள் இந்த கடைசி காலத்தில அந்திகிறிஸ்து வர்துக்கு முன்னால தீவிரமாய் எழும்புவாங்க. இவர்கள் எழும்பி ஜனங்களை எல்லாம் ஒரு கருத்தேற்றம் பண்ணி, ராஜானா அப்படித்தான் அவர் சொல்றததான் கேட்கணும், எங்களை சார்ந்துதான் வாழணும். நாங்க கொடுக்கறததான் நீ வாங்கிக்கிறணும் அப்படிங்கிற ஒரு மனநிலைக்குள்ளே நம்மை கொண்டு வந்துருவாங்க.
கொஞ்ச காலத்துக்கு முன்னால பார்த்தீங்கன்னா, ஒரு அரசாங்கத்தில ஏதாவது ஒரு திட்டத்தை ஜனங்களுக்கு எதிரான ஒரு திட்டம் வந்துச்சுன்னா, தெருவுல இறங்கி சண்டை போட்டு போராடுவாங்க. இப்ப கொஞ்சம் கொஞ்சமா நீங்க கவனிச்சு பார்த்தீங்கன்னா, எந்த ஒரு திட்டத்தை அரசாங்கம் வலியுறுத்தி சொன்னாலும் அதை அவர்கள் அப்படியே யாரும் எதிர்வினை ஆற்றுவதே இல்லை. ஜனங்கள் அதற்கு கீழ்படிந்து வாழ பழகி கொண்டாங்க. ஏன்னா இப்போ வரக்கூடியவர்கள் கொடிய கரம் கொண்டு நாங்க சொல்றதுதான் செய்யணும். பாருங்க, பல தேசங்கள்ல் நீங்க என்ன சாப்பிடணும்ங்கிறத கூட உங்களை ஆளுகிறவர்கள் தீர்மானிக்கிறாங்க. உங்களுக்கு என்ன கொடுக்கணும் அத அவங்கதான் தீர்மானிக்கிறாங்க.
உலக பொருளாதாரத்தில இன்னைக்கு என்ன நடக்குது அப்படின்னு கேட்டீங்கன்னா, ஒரு பெரிய வீழ்ச்சியை கொண்டு வருகிறார்கள். இது எதார்த்தமா வர்தில்ல, திட்டமிட்டே வருவது. ஏன் பொருளாதார வீழ்ச்சியை கொண்டாங்க? ஏன் பொருளாதாரத்தில் பல பேரை கீழ இறக்குறாங்க? ஏன்னா ஜனங்களை ஒன்னுமில்லாமல் பாப்பராக்கிட்டா அவன் யாராவது ஒருவரை சார்ந்து வாழணும். அப்போ என் கை காசு இருந்ததெல்லாம் போச்சு. அப்ப நான் யாரை சார்ந்து வாழணும்? அரசாங்கம் தான் நமக்கு ஏதாவது கொடுக்கணும் அப்படின்னு அதை சார்ந்து வாழ பழகிருவாங்க. இதான் அந்திகிறிஸ்துவினுடைய தந்திரம்.
இன்னைக்கு நீங்க பார்த்தீங்கன்னா, திடீரென்று நவீன வேலைகள் உருவாக்கப்பட்டு ஆயிரக்கணக்கில, லட்சக்கணக்கில நிறைய தேசத்தார் பல பெரிய பெரிய ஐடி நிறுவனங்கள் கம்பெனி மாதிரி போய் வேலை செஞ்சாங்க. ஒருவனுடைய தகுதிக்கும் வேலை சுமைக்கும் மீறி ஒரு ஆளுக்கு சர்வசாரமா எனக்கு 10 லட்சம் ரூபாய் சம்பளமா, 6 லட்சம் ரூபாய் சம்பளம், ரடு லட்சம் ரூபாய் சம்பளம். ஒரு கிராமத்தில இருந்து போனவரு என்ன செய்வாரு? ஒரு ஒரு பட்டணத்தில ஒரு பெரிய வேலையில் இருந்தா அந்த வேலையில திடீர்னு ஒரு மாசத்துக்கு ரடு லட்சம் ரூபாய் அல்லது 5 லட்சம் ரூபாய் சம்பளத்தை பார்த்தா அவருக்கு தலையும் புரியாது, காலும் புரியாது. உடனே தன் வாழ்க்கை தரத்தை உயர்த்த நினைத்து, நமக்குதான் மாசம்தோறம் 5 லட்சம் வருதே அப்படின்னு பெரிய ஒரு பங்களா மாதிரி ஒரு வீட்டை வாங்குவார். எப்படி இஎம்ஐல வாங்குவார்? நம்ம சம்பாத்தியத்தில் ஒரு பகுதி போனா ஒரு நல்ல ஒரு வாகனத்தை கார் வாங்குவார், கொஞ்சம் நிலங்களை வாங்குவார், இப்படி போயிட்டு இருக்கும்போது என்ன ஆகுன்னு கேட்டீங்கன்னா, ஒரு ரெண்டு வருஷம், மூணு வருஷத்தில அப்பத்தான் அதற்கு இஎம்ஐ கட்டிக் கொண்டிருப்பார். அந்த தவனை காசு வேலை திடீர்னு போயிரும். ஒரு நாள் ராத்திரி காலையில நீங்க எந்திரிச்சு போய் பார்த்தீங்கன்னா, உங்களுடைய காடு வேலை செய்யாது. அப்படியே தெருவுக்கு வந்துருவாங்க. கடன் கொடுத்தவன் நெருக்குவான். இப்ப 5 லட்சத்தில வாழ பழகிட்டீங்கல்ல, இதுக்கு இவ்ள இயமை அதுக்கு ஒன்னும் தெரியாது. அப்படி நடு தெருல வந்து விழி பிதுங்கி நிப்பாங்க.
அப்படி நிக்கும்போது இவர்களை முதல்ல மக்களை பலவீனப்படுத்திட்டா, பசிக்க வச்சிட்டா என்ன சொன்னாலும் கேபான்ல. அதுக்குதான் வேண்டும் என்றே உணவு பொருள்கள்ல் கை வைப்பாங்க, விவசாயத்துக்கு சப்போர்ட் பண்ண மாட்டாங்க, வேலை ஸ்தலங்கள்ல் ஜனங்களை வீதிக்கு கொண்டு வருவதை பார்ப்பாங்க. ஏன்னா தன் இஷ்டப்படி செய்யணும். வருகிற அந்திகிறிஸ்து தன் இஷ்டப்படி செய்கிற ராஜா. அதனால அவன் என்ன செய்வான்? அவன் வரப்போறதுக்கு முன்ன முன்னால பல தேசங்கள்ல இதே மாதிரி இஷ்டப்படி செய்கிற ஆளுனர்கள், அதிபர்கள் எழும்புவதை பார்ப்பீங்க. நீங்க என்னதான் நீதி நியாயம்னு கத்தினாலும், தெருவில் இறங்கி போராடினாலும் உங்களுக்கு பதில் வரவே வராது.
ஒரு காலத்தில பாருங்க, பெட்ரோல் விலை திடீரென்று நாளைக்கு காலையில இருந்து ஒரு ரூபா கூடுது. நான் என் காலத்திலே பார்த்திருக்கிறேன், ஒரு ரூபா பரபா அல்லது ரடு ரூபா கூடுது அப்படின்னு சொன்னா, அடுத்த நாள் வீதியில் இறங்கி போராடிருவாங்க. பெட்ரோல் விலை உயர்வை கண்டிக்கிறோம், தெருவில் இறங்கிருவாங்க. உடனே அரசாங்கம் கீழ்படிஞ்ு அதுல ஒரு ஒரு 60 பைசாவை, 40 பைசாவை குறைப்பாங்க. கொஞ்சம் குறைச்சு தருகிறோம் அப்படின்னு சொல்லி குறைப்பாங்க. இப்போ அப்படி கிடையாது. பெட்ரோல் விலை எவ்வளவு ஏறுகிறது, இறங்குகிறது ஏறினால் யாரும் இப்ப கேள்வியே கேட்கறது இல்ல. பழகிட்டோம் நம்ம. நம்மை பழக்கிருவாங்க. அப்படியே நாங்கள் செய்வதை நீங்க கேட்க கூடாது. எதிர்த்து கேட்டாலும் பதில் வராது. இது உலகத்தின் பல நாடுகள்ல் வருகிறதை பார்ப்பீங்க.
வடகொரியான ஒரு தேசம் இருக்குது இப்போ. அங்கெல்லாம் பார்த்தீங்கன்னா, ஜனங்களை தன்னுடைய கட்டுப்பாட்டில ரோபோ மாதிரி, இன்னும் வேற இன்னும் கொஞ்சம் கீழான வார்த்தை சொன்னா நாய்குட்டிகளை போல ஜனங்களை வச்சு ஆளுமை செய்து கொண்டிருக்கிறாங்க. இவங்க கொடுக்கறதுதான் சாப்பிடணும், அவங்க சொல்ற உடைதான் அணியணும். பல தேசங்கள்ல நம்ம தேசத்தில கூட ஒவ்வொருவருடைய உணவு பழக்கம் ஒவ்வொரு மாதிரி இருக்கும். ஆனா குறிப்பிட்ட உணவு பழக்கங்களுக்குள்ள தான் வரணும். மத்தது நீங்க பயன்படுத்த கூடாது. பயன்படுத்துனா கிரிமின குற்றம் மாதிரி ரோட்ல அடிச்சு கூட கொலை செய்வோம் என்கிற மாதிரில்லாம் அந்த திரட்ஸ் வருகிறத பார்க்கிறோம்.
அப்ப யார் யார் தன் இஷ்டப்படி, தன்னுடைய சுய விருப்பத்தின்படி தனக்கு இஷ்டமானதை செய்கிற ராஜாக்கள் எழும்ப காணும்போது ஜாக்கிரதை. அவங்க என்ன செய்வாங்க? தன்னை உயர்த்துவார்கள். இப்படிப்பட்ட ராஜாக்களுடைய குணம் எப்படி இருக்குன்னு கேட்டா, தன்னை உயர்த்துவாங்க. எங்க பார்த்தாலும் எங்க போட்டோ இருக்கணும், நான்தான் இதை கொண்டு வந்தேன் இருக்கணும், நான்தான் அதை செய்தேன் என்று இருக்கணும், என் பேர் தான் இருக்கணும். அப்படி எல்லாம் நிறைய காரியங்களை முன்மொழிந்து என் பேரை வந்து மகிமைப்படுத்துங்க, மையப்படுத்துங்க. நம்ம உடனே இத பார்த்து ஓ, எவ்வளவு பெரிய ராஜா, பலமானவர், எவ்வளவு பாருங்க அப்படின்னு சொல்லி நீங்க புகழ்ந்துட்டு இருப்பீங்க. உண்மை என்னன்னு கேட்டா, இது அந்திகிறிஸ்துவின் ஆவியை கொண்ட அதிகாரத்தில் இருக்கப்போகிற ஆளுனர்கள் பல தேசங்கள் எழும்புவத பார்ப்பீங்க. அப்படி வந்துருச்சுன்னா அடுத்து வரப்போகிற அந்திகிறிஸ்து பகிரங்கமாய் வரப்போகிறான் என்று பொருள். அந்த அந்திகிறிஸ்து வந்து தனக்கு இஷ்டமானதை செய்யணும்ு சொல்லும்போது, நம்ம இந்த அடிமைத்தனத்துக்கு பழகி இருக்கிறதுனால, பழக்கு விக்கப்பட்டதுனால அதிக எதிர்ப்பில்லாமல் அந்த ஆளுனரை ஜனங்கள் ஏற்று கொள்வாங்க. இதுதான் நடக்கப்போற காரியம்.
அப்ப இப்பவே நீங்க பார்த்தீங்கன்னா, இந்த அந்திகிறிஸ்துவினுடைய சுபாவம் உள்ள பல ஆளுனர்கள் பல தேசங்களல் தோன்றுவாங்க. அவர்கள் ஜனங்களை கருத்தேற்றம் பண்ணுவாங்க. இப்போ இதுல முதல் கேரக்டர் நம்ம பார்க்கிறோம், தனக்கு இஷ்டமானதை செய்யும் ராஜா. அதுல சொல்லப்படுகிற வார்த்தையே தனக்கு இஷ்டமானதை செய்யும் ஒரு ராஜா எழும்புவான் பாருங்க. 36, 11, 36ல ராஜா தனக்கு இஷ்டமானபடி செய்து, தன்னை உயர்த்தி, எந்த தேவனிலும் தன்னை பெரியவனாக்கி, கடவுளுக்கு [தொண்டையைச் சரிசெய்தல்] சமானமா தன்னைமாற். நான்தான் கடவுள், நான்தான் இயேசு, இயேசுவுக்கு மாற்று நான்தான். அப்படி யார் சொன்னாலும் நீங்க நம்பாதீங்க. அது அந்திகிறிஸ்துவின் ஆவி. நான்தான் இயேசுவை விட பெரியவர் சொன்னா அது அந்திகிறிஸ்துவின் ஆவி. அது போய் சப்போர்ட் பண்ணிட்டு இருக்காதீங்க.
இப்ப பாருங்க, இஷ்டமானதை செய்யும் ராஜா என்கிற தலைப்பு மாத்திரம் எடுத்துக்கிறவோம். இந்த இஷ்டமானதை செய்கிற ராஜா ஒருவர் மாத்திரமல்ல. இந்த தானியேல் 11 வது அதிகாரத்தில மூன்று ராஜாக்களை பற்றி சொல்லி இருக்கு. மூன்று இடத்துல இதே கேரக்டர் தனக்கு இஷ்டமானதை செய்கிற ராஜாக்களை பற்றி சொல்லுது. முதல் ராஜா யாருன்னு பார்த்தா, தானியேல் 11வது அதிகாரம், மூன்றாவது வசனம். ஆனாலும் பராக்கிரமம்உள்ள ஒரு ராஜா எழும்பி பிரபலமாய் ஆண்டு தனக்கு இஷ்டமானபடி செய்வான். பாத்தீங்களா? தனக்கு இஷ்டமானபடி செய்கிற ஒரு ராஜா. மூணாவது வசனத்தில அவர் வேற, 36ல பார்க்கிறது வேற. இந்த மூன்றாவது ராஜாவர் யார் அப்படின்னு கேட்டா, 36லயும் ஒரு ராஜா சொல்லி இருக்கு. இவர் வேற, அவர் வேற.
தானியேல் 11 மறல் சொல்லப்பட்ட ராஜா என்பது கிரேக்க பேரரசை நிறுவின அலெக்சாண்டரை பற்றி அங்கே சொல்லப்பட்டிருக்கு. இந்த தானியேல் தீர்க்கதரிசி எவ்வளவு ஷார்ப்பான ஒரு தீர் தீர்க்கதரிசி என்பதற்கு இந்த சரித்திரத்தோட நீங்க சேர்த்து பார்த்தீங்கன்னாதான் அந்த பிரம்மாண்டம் நமக்கு விளங்கும். இந்த ராஜா முதல்ல ஒரு ராஜா சொல்றாரு. அந்த ராஜா எப்படி இருப்பான்னா தனக்கு இஷ்டமானதை செய்வான். யார் அந்த ராஜா? அரு கிரேக்க பேரரசை நிறுவின அலெக்சாண்டர், மகா அலெக்சாண்டர் என்று சரித்திரத்திலே சொல்லப்படுகிற ராஜா. இவர் வாழ்ந்த காலம் வேற. இவருக்கு முன்னால ஏறத்தால 500 வருஷத்துக்கு முன்னால தானியேல் தீர்க்கதரிசனம் உரைத்திருக்கிறார். இது எப்படி நடந்தது பாருங்களேன். கிரேக்கர்கள் பழங்காலம் தொட்டே அரசாட்சி செய்து வந்தாலும், கிரேக்கர்கள் அங்கங்க ஆட்சி பண்ணிட்டு இருந்தாங்க. அதை விரிவாக ஒரு முறைப்படுத்தி, அதை ஒரு ராஜ்ஜியமாக கிரேக்க ஆழ்க பல இடங்களல் சின்ன சின்ன சிற்றரசுகளை ஏற்படுத்தி ஆளுமை செஞ்சாங்க. அந்த ராஜ்ஜியங்கள் எல்லாம் கிரேக்கர்கள் ஆண்ட பகுதியை மாத்திரம் ஒன்றாக இணைத்து கிரேக்க நாடு என்ற ஒரு நாட்டை உண்டாக்கினவர் பிலிப்பு. அந்த பிலிப்பு உடைய மகன்தான் அலெக்சாண்டர். அவர் கிரேக்கர்கள் ஆண்ட பகுதி எல்லாம் ஒருங்கிணைத்து ராஜ்ஜியமாக்கினார்.
அலெக்சாண்டர்டைய மனசுல என்னன்னு கேட்டா, நம்ம அப்பா கிரேக்கர்கள் ஆளுகிற இடத்தை தான சேர்த்தாரு, நான் அதை தாண்டி மற்ற உலக நாடுகள் முழுவதையும் ஜெயித்து ஒரே ஆட்சியின் கீழ கொண்டு வருவேன். அதான் அந்திகிறிஸ்துவினுடைய குணம். அந்திகிறிஸ்துுடைய குணத்தில் மிக முக்கியமானது என்னன்னு கேட்டா, அந்திகிறிஸ்துக்கள் அந்திகிறிஸ்துவினுடைய அந்த ஆவியினுடைய குணம் என்னன்னு கேட்டா, இந்த நாடுகளை எல்லாம் என் கட்டுப்பாட்டில கொண்டு வரணும். எனக்கு ஆளுமை செய்றதுக்கு ஒரு நாடு கிடைச்சிருக்கு, அதை ஒழுங்கா ஆளுமை செய்யு யோசிக்க மாட்டான். இவனுக்கு என்னன்னா, அந்த நாட்டை பிடிக்கணும், இந்த நாட்டை பிடிக்கணும், இந்த நாட்டு மேல படை எடுக்கணும், நம்ம நாட்டோடு சேரணும். இது அந்திகிறிஸ்துவின் புத்தி. இது இன்னைக்கு நேத்து இல்ல, அலெக்சாண்டர் காலத்தில இருந்து இருக்குது.
அப்ப என்ன செய்கிறார் இவர் ஆட்சியிலே? இந்த பிலிப்பினுடைய ஆட்சி கிபி கிறிஸ்துவுக்கு முன்னால 359ல் ஆரம்பிக்கிறது. கிறிஸ்துவுக்கு முன்னால 336வது வருஷம் இயேசு பிறக்கறதுக்கு 336ல அந்த பிலிப்பி என்பவருடைய மரணம் நடக்குது. 336 கிறிஸ்துவுக்கு முன்னால் இருக்கற வருஷங்களை கீழ் வரிசையில கணக்கு போடணும். 356 என்பது பின்னால இருக்க பழைய வருஷம், 333ங்கறது இப்ப உள்ள வருஷம் அப்படி வரும். ஆனா கிறிஸ்துவுக்கு பின் வருகிற வருஷத்துல ஏறு வரிசையில கணக்கிடணும். இதை மனசுல வச்சுக்கங்க. இல்லாட்டா வருஷத்தை தப்பா சொல்லிட்டனும்னு நினைக்கக்கூடாது. எங்க ஆரம்பிக்குது 359ல ராஜ்ஜியம் ஆரம்பிக்குது. பிலிப் 336ல மரித்து போகிறார். அக்காலத்தில் கிரேக்க ராஜ்ஜியத்துக்கு பேரு மாசிடோனியா ராஜ்ஜியம் என்று பெயர். கிங்டம் ஆப் மாசிடோனியா. தமிழ்ல மக்கதோனியான்ு சொல்லுவாங்க. மாசிடோனியா என்று அழைக்கப்பட்டது. பிறகு அதை பேரரசாக மாற்ற எண்ணம் கொண்டு பிலிப்புவின் மகன், அப்பாவை தாண்டி நம்ம என்ன செய்யணும்? கிரேக்கர்கள் தாண்டி வேற இனத்தார் இருக்காங்கல்ல அங்கெல்லாம் படையெடுத்து போகணும் அப்படின்னு சொல்லி ஆர்வத்தோட புறப்பட்டவர்தான் அலெக்சாண்டர். அவருடைய மரணம் கிமு 323ல, அதாவது அவருடைய 32வது வயசுல அவர் மரணம்அடைந்தார். சின்ன வயசுல 32 வயசுல மரணம்அடைந்தார்.
அடுத்து இது வந்து முதல்ல சரித்திரத்தை படிச்சுக்கங்க. அவருடைய மரணம் 323ல கிறிஸ்துவுக்கு முன்னால சம்பவித்தது. 32 வயசுல இறந்துட்டார். இப்ப அடுத்து என்ன நடக்குது? இவருடைய மரணத்துக்கு பிறகு, இவருக்கு நாலு அதிகாரிகள், நாலு அந்த தளபதிகள் இருந்தாங்க. தளபதின்னு சொல்றோம்ல்ல, நாலு தளபதி இருந்தாங்க. அவர்கள் என்ன செஞ்சாங்க? இவர் இறந்த உடனே அவருடைய மனைவிக்கும் இப்ப சின்ன வயசாதான இருக்கும். அவர்களுக்கு ஒரு சின்ன குழந்தை இருந்தது. இந்த நாலு பேரு, நாலு தளபதி ஒன்னு சேர்ந்து இந்த ராஜ்ஜியத்தை நம்ம எடுத்து கொள்வோம் என்று அவருடைய வம்சத்தை அழிச்சு, மனைவியை கொலை செய்து, பிள்ளையையும் வந்து கொன்று ஒழித்து, நாளைக்கு எந்திரிச்சிட கூடாதுன்னு சொல்லி தங்களுக்குள்ளே இந்த நாலு பேருக்குள்ள இந்த நாட்டை பங்கு வச்சுக்கிட்டாங்க. பங்கு வைக்கும் போது அவங்க என்ன பேசுனாங்க? எப்படி இந்த தேசத்தை, இவ்வளவு பெரிய கிரேக்க சாம்ராஜ்யத்தை எப்படி பங்கு வைக்கிறதுன்னு கேட்ட உடனே அவர்கள் சொன்னாங்க, நாலு திசை இருக்குல்ல, ஒவ்வொரு திசை பேர்லையும் ஒவ்வொரு ராஜ்ஜியத்தை பிரிச்சிருவோம். வடக்கு ராஜ்ஜியம், தெற்கு ராஜ்ஜியம், கிழக்கு ராஜ்ஜியம், மேற்கு ராஜ்ஜியம் நாலா பிரிச்சிருவோம் என்று சொல்லி அரண்மனைக்குள்ளே தடாலடியா உள்ள புகுந்து ராணியை கொலை செய்து, பிள்ளைகளை கொலை செய்து ராஜ்ஜியத்தை கைப்பற்றி நாலு தளபதிகள். நாலு தளபதியினுடைய பேரை நான் உங்களுக்கு சொல்றேன். ஒருத்தர் பேரு இந்த தாலமி என்பது. இரண்டாவது ஆள் பேரு செலியுகஸ் நிகேடார் என்பது. மூன்றாவது ஆள் பேரு லைசி மார்க்கஸ். இவரை ஆன்டியாக் என்றும் அழைப்பார்கள். அந்தியோகு. கடைசியாக ஒரு ராஜா, ஒரு ஒரு தளபதி இருக்காரு, அவர் பேர் கசாண்டர் என்பது.
இவர்கள் நாலு பேரும் ராஜ்ஜியத்தை பிரிச்சுக்கிட்டாலும், பல வருடங்கள் ஒருத்தர் கையில இருக்கறத இன்னொருத்தர் பரிச்சுக்கணும் அப்படின்னு சொல்லி சண்டை போட்டுக்கிட்டே இருந்தாங்க. எவ்வளவு நாளு? 322ல இருந்து 281 வரைக்கும் பல வருடங்கள் இவர்களுக்குள்ளே சண்டை நடந்தது. இவர்களில் நாலா பிரிச்சாங்கல்ல, இந்த அலெக்சாண்டர் பிடிச்ச நாடுகள்ல் இஸ்ரேல் நாடு ஒன்னு. அதும் கிரேக்க பேரரசின் கையின் கண்ட்ரோல் தான் இருந்தது. அப்ப அந்த நாலா பிரிக்கும்போது, இவர்களில் செல்யூக்கஸ் என்பவர் சீரியாவை உள்ளடக்கின இஸ்ரவேலுக்கு வடக்கே இருந்த பகுதிகள் எல்லாம் தனக்கென்று அவர் எடுத்துக்கொண்டார். சீரியா, சீரியா தேசத்தை ஒட்டி இருக்கிற பகுதி, அதெல்லாம் வந்து நார்த் கிரேக்க பேரரசினுடைய நார்த் கிங்டம். ஏன் நான் இதை உங்களுக்கு அழித்து சொல்றேன்னா, இனி வடதிசை ராஜான்னு ஒரு பேர் வரும், தென்திசை ராஜான்னு ஒரு பெயர் வரும். இதுல செலியுகஸ் என்பவர்தான் சிரியா உள்ளிட்ட பகுதியை, வடக்கு பகுதியை தனக்கென்று எடுத்துக்கொண்டு ஆளுமை செய்தார். அதேபோல தாலமி என்கிறவர் இஸ்ரவேலுக்கு தெற்கே இருந்த எகிப்தை உள்ளடக்கிற பகுதிகளை, கீழ எகிப்து, எகிப்தை உள்ளடக்கின பல பகுதிகள், ஆப்பிரிக்க தேசங்கள் இது எல்லாத்தையும் சேர்த்து அந்த தாலமி என்பவர் தன்னுடைய ராஜ்ஜியமா வச்சிக்கிட்டார். இப்ப பாருங்க, இஸ்ரேல் தேசத்தினுடைய வடக்கு பக்கத்தில செலியுகஸ்ுடைய ராஜ்ஜியம், மேல கீழ இந்த தெற்கு பகுதியில தாலமையினுடைய ராஜ்ஜியம். ரெண்டுக்கு நடுவுல இஸ்ரேல் தேசம் மாட்டிக்கொண்டது.
அலெக்சாண்டரின் ராஜ்ஜியம் நான்காக பிரிந்து போகும் என்பதை தானியேல் எப்படி துல்லியமா சொல்றாரு பாருங்க. அவர் சொல்றாரு, மூணாவது வசனம் நீங்க படிச்சீங்க, ஒரு பிரபலமான ராஜா எழும்பி அப்படித்தான் போட்டுருக்கு பாத்தீங்களா? அவன் என்ன செய்வானா? அந்த மூணாவது வசனத்தை நான் உங்களுக்கு படிக்கிறேன். ஒரு பராக்கிரமம் உள்ள ஒரு ராஜா எழும்பி பிரபலமாய் ஆண்டு உங்களுக்கு பல ராஜாக்களுடைய பேர் தெரியாது. ஆனா இன்னைக்கு இருக்கிற தலைமுறை வரைக்கும் அலெக்சாண்டர்டைய பேர் எல்லாருக்கும் தெரியும். செலுகஸ் பேர் கூட தெரியாது நிறைய பேருக்கு. அலெக்சாண்டர் எல்லாருக்கும் தெரியும். அவ்வளவு ஒரு பிரபலமான ராஜா எழும்பி தனக்கு இஷ்டமானபடி செய்வான்.
நாலாவது வசனம் என்ன சொல்லுது? அவன் எழும்பின பின்பு அவனுடைய ராஜ்ஜியம் உடைந்து போய், அவன் செத்த பிறகு, அவன் எடுத்துக் கொள்ளப்பட்ட பிறகு, அவருடைய ராஜ்ஜியம் உடைந்து போய் வானத்தின் நாலு திசைகளிலும் நாலாய் பகுக்கப்படும். ஒரு 500 வருஷத்துக்கு முன்னால ஒரு சாம்ராஜ்யத்தினுடைய கதையை நடக்க போறத இவ்வளவு துல்லியமா ஒருத்தர் சொல்ல முடியுமா? அவர்கள் ராஜ்யத்தை பிரிக்கும் போது திசைகளின் அடிப்படையில பிடி சொல்லிதான் சரித்திரத்தில அவங்க அப்படித்தான் பிரிச்சாங்க. அவனுக்கு தெரியாது, ஆனா இது ஏற்கனவே முன்குறிக்கப்பட்டது. அதனால ஏன் நான் இதை அழுத்தி சொல்றேன்னா, இந்த தானியேல் சொன்ன தீர்க்கதரிசனங்கள் ஒன்னு கூட அலட்சியப்படுத்திடக்கூடாது.
என்ன நடக்குது பாருங்க. அவன் ராஜ்ஜியம் உடைந்து போய் வானத்தின் நாலு திசைகளிலும் பகுக்கப்படும். ஆனாலும் அது அவனுடைய சந்ததியாருக்கு போகாது, அவன் மகனுக்கு போகாது, சந்ததிக்கு போகாது. அவன் செய்த ஆளுகையின் படியும் அல்ல. அவனுடைய ராஜ்ஜியம் பிடுங்கப்பட்டு அவனுடையவர்கள் அல்லாத வேற பேர்களிடத்திலே தாண்டி போம். அவருடைய தளபதிகளிடத்தில் எல்லாம் போகும். அப்போ அவனுடைய இனத்தை சேர்ந்த வேற யாருக்கும் வராது அது. அந்த ராஜ்ஜியம். அவனுடைய மகனுக்கும் வராது. நாலு திசையின் அடிப்படையில் தான் அது பகுக்கப்படும் என்று முதல் சாம்ராஜ்யத்தை குறித்து அவர் எழுதின தீர்க்கதரிசனம்.
இந்த பகுதியில் சொல்லப்பட்டிருக்கும் வடதிசை நாடு என்பதும், அந்த ஒன்னுல இருந்து வாசிச்சோமே அதுல நீங்க அடுத்து படிச்சீங்கன்னா வடதிசை, தென்திசைன்னு வரும். இந்த வடதிசை என்ற நாடும், தென்திசை என்ற நாடும் வேறு வேறு. தானியேல் 11 36க்கு பிறகு வருகிற பகுதிகளில் சொல்லப்பட்டிருக்கிற வடதிசையும், தென்திசையும் வேறு வேறு. முதல் பகுதியில் சொல்லப்பட்டிருக்கும் வட, தென்திசை தேசங்கள் பற்றின செய்திகள் நூற்றுக்கணக்கான ஆண்டுகளை உள்ளடக்கினது. இதற்கான அரசர்கள் ஒரே நபர்கள் அல்ல. செலியுக்கஸ் தலைமையில ஒரே ராஜா அல்ல. பல பேர் அடுத்தடுத்து அடுத்து வந்தாங்க. ஆனா அது வந்து வடதேசமா தான் இருந்தது. அதே மாதிரி தாலமீனுடைய வம்சத்தில பல ராஜாக்கள் ஆளுமை செஞ்சாங்க. அது தெற்கு தேசம் என்றுதான் கருதப்பட்டது. செலியுகசின் வம்சத்தை சேர்ந்த மன்னர்கள், அவர்கள் செலியுகசை சேர்ந்த மன்னர்கள் என்றுதான் பிரிக்கப்பட வேண்டும். இதெல்லாம் அப்படியே நிறைவேற்றப்பட்டது. ஆரம்பத்தில சிரியாவில் செலுசிட் மன்னர்கள், எகிப்தினுடைய தாலமைக்கு கீழ்பட்டிருந்தும் காலப்போக்கில் அவர்கள் அதிக சக்தி வாய்ந்தவர்களாக மாறினார்கள். எனவே தெற்கின் மன்னர் ராஜ்ஜியங்களில் ஒன்றிணைப்பதற்காக அவர்கள் இந்த காரியங்களை நிறைவேற்றினாங்க.
அப்ப இந்த முதல் பகுதியில் நம்ம பார்க்கப்போற தென்திசை ராஜா, வடதிசை ராஜா, அதுக்கு முன்னால இஷ்டப்படி செய்த பிரபலமான ஒரு ராஜா, இவர்கள் எல்லாம் வேறு ராஜாக்களை குறித்தாலும், இனி இந்த கடைசி காலத்தில் ஒரு தெற்கு ராஜா வரான்ல, அந்த தெற்கு ராஜாவுக்கு நீங்கள் முதல் பகுதியில் படித்த தெற்கு ராஜாவும், இந்த வடக்கு ராஜாவுக்கு நீங்கள் முதல் பகுதியிலே படுக்கிற வடக்கு ராஜாவும் அவனுடைய கிரியைகளும் நிழலாட்டமாய் இருக்கும். இதை வச்சு நீங்க பார்த்துட்டீங்கன்னா, பின்னால வருது பாருங்க, இந்த தென்திசை ராஜா என்னென்ன செய்வான்? முதல்ல சொல்லிருக்க தென்திசை ராஜா என்னென்ன செய்தானோ அதே மாதிரி குணத்தைதான் இவன் இங்கே வெளிப்படுத்துவான். அவருடைய தேசம் தான் வேற, இவருடைய தேசம் தான் வேற. அதே மாதிரி காப்பி அடிச்ச மாதிரி பல காரியங்கள் வரும். அதெல்லாம் விளக்கி பார்க்க போறோம். ரொம்ப பிரமிப்பா இருக்கும். அடுத்த வாரம் நம்ம இதனுடைய பிற்பகுதியை ஆராய்ந்து பார்க்க போறோம்.
தீர்க்கதரிசனங்கள் எத்தனை உண்மையானவைகள்? தீர்க்கதரிசனங்கள் எத்தனை ஆச்சரியமானவைகள் என்பதை கர்த்தருடைய வேதம் தெளிவாக நமக்கு விவரிக்கிறது. வேதத்தை மாத்திரம்ல்ல, நடந்த நடக்கிற சரித்திரத்தையும் அந்த தீர்க்கதரிசனங்களோடு இணைத்து பார்க்கும் பொழுதுதான் தீர்க்கதரிசனத்தடைய பிரம்மாண்டம் என்ன என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. அப்ப இவர்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொருவருக்கு முன்னடையாளமாக இருக்கிறார்கள் என்பதை மனதில் வைத்து கொள்ளுங்கள். அடுத்த வாரம் இதனுடைய பிற்பகுதியிலே இன்னும் சில முக்கியமான காரியங்களை நான் உங்களுக்கு சுட்டி காட்ட போகிறேன். அதுவரை கர்த்தர் உங்களை ஆசீர்வதித்து காப்பாராக. ஆமென்.
>> [இசை]
>> [இசை]
>> ஓம்