📱

Get Our Mobile App

Take your business learning on the go!

Download on the App StoreGet it on Google Play

பரலோகத்தில் அனாதைகள் || Bro. Sam Jebadurai

Elim Glorious Revival Church53:26

Transcription

[இசை] [இசை] பரலோக ராஜ்ஜியத்தின் ரகசியங்கள் என்ற தலைப்பிலே ஆறு ஏழு வாரங்களாக தொடர்ந்து பேசி வருகிறேன். பரலோகத்தில் உள்ள தேவதூதர்களைப் பற்றி நாம், தேவதூதர்களைப் பார்க்கிலும் எவ்வளவு விசேஷித்தவர்கள், அவர்களுக்கு இல்லாத பாக்கியம் ஆண்டவர் நமக்கு என்ன வைத்திருக்கிறார். முதல் வகுப்பில் அதைக் குறித்து வாசித்தோம்.

இரண்டாவது வகுப்பிலே பல்வேறு வகை தேவதூதர்களைப் பற்றியும், அங்கே உள்ள ஆராதனைக்காக வைக்கப்பட்ட தேவதூதன், யுத்த பிரிவிலே இருக்கிற கேபிரியேல் தூதன், செய்திகளை சுமந்து கொண்டு போகிற கேபிரியேல் தூதன் இப்படி பல்வேறு விதமான தேவதூதர்களையும், கேராபின்கள், சேராபின்களையும், 24 மூப்பர்களையும், நான்கு ஜீவன்களையும் குறித்தும், பரலோகத்தில் உள்ள அநேக காட்சிகளைக் குறித்தும் நாம் தியானித்தோம்.

கடந்த வாரத்திலே பரலோகத்துக்கு சமீபமாய் வருவது எப்படி, மனம் திரும்புங்கள் பரலோக ராஜ்ஜியம் சமீபமாய் இருக்கிறது, பரலோக ராஜ்ஜியத்தை காண்கிற ஒரு இடம், மனம் திரும்பி பிள்ளைகளைப் போல ஆகும்போது காண்கிற ஒரு இடத்துக்கு வருகிறோம். ஜலத்தினாலும் ஆவியினாலும் பிறந்து முடிவு பரியந்தம் நிலைத்து நிற்கிறவர்கள் பரலோகத்துக்குள்ளே போகிற ஒரு காட்சியை பார்க்கிறோம். ஆண்டவருடைய வார்த்தையை கைக்கொண்டு போதித்தால் பரலோகத்திலே பெரியவனாய் இருப்பான், இல்லாவிட்டால் சிறியவனாய் இருப்பான். பழைய ஏற்பாட்டு பரிசுத்தவான்கள் பரலோகத்திலே கர்த்தருடைய சிநேகிதர்கள் என்று அழைக்கப்படுவார்கள், நாம் அவருடைய மணவாட்டி என்று அழைக்கப்படுவோம் என்பதை எல்லாம் தியானித்தோம்.

இன்றைக்கு விசேஷமாக பரலோகத்தில் இருக்கிற அனாதைகள், வீடு வாசல் எல்லாம் நாம பிளாட்பார்ம்ல படுத்துட்டு இருக்க ஒரு கூட்டத்தார். தமிழ் மொழியில் ஒரு மோசமான வார்த்தையில் புறம்போக்கு என்று சொல்வார்கள், ஒன்னும் இல்லாதவங்க. இதைப்பற்றி நீங்க என்ன நினைக்கிறீர்களோ தெரியல. ஒரு நாலு கூட்டத்தாரை குறித்து என்னுடைய உள்ளத்திலே கர்த்தர் உணர்த்தின சில சத்தியங்களை சொல்ல விரும்புகிறேன். நீங்கள் கவனமாய் கேட்டால் புரிந்து கொள்ளுங்கள். ஏன் அப்படி ஆண்டவர் வைத்தார் என்று அப்படியே இருந்தாலும், அவர்களுக்கு இன்னொரு வாய்ப்பையும் ஆண்டவர் கொடுக்கிறதையும் வேதத்திலிருந்து நாம் பார்க்கலாம்.

சாதாரணமாக வருகையில் காணப்பட வேண்டிய அவசியத்தை ஆண்டவர் சொல்லுகிறார். எப்போதும் ஆயத்தமா இருங்க. இனி சம்பவிக்கப் போகிற இவைகளுக்கெல்லாம் நீங்கள் தப்பி மனுஷகுமாரனுக்கு முன்பாக பாத்திரவான்களாய் காணப்படும்படி விழித்திருந்து ஜெபம் பண்ணுங்கள் என்று லூக்கா 21:36ல் சொன்னார். வருகையில் எப்படியும் காணப்பட வேண்டும் என்பதற்காக வேதத்தில் அவ்வளவு காரியம் சொன்னாலும் சரி, நீ கைவிடப்பட்டு போனால் என்ன செய்வது? வருகையில் காணப்படாமல் போனால் இனி என்ன செய்வது? அதையும் ஆண்டவர் எழுதி வைத்தார். கைவிடப்பட்டு போனாலும் கூட சாத்தானுடைய முத்திரை தரிக்காதபடி 666 தரித்து விடாதபடி இரத்த சாட்சியாய் மரிக்க ஒப்புக்கொடுக்கும் போது இரத்த சாட்சியாய் மரித்து எழுந்து கர்த்தரோடு போக முடியும். ஒரே ஒரு சான்ஸ் வேதத்திலே அதை எழுதி வைத்திருக்கிறார். அதுபோல பரலோகத்தில் ஒன்றுமில்லாமல் சொத்து இல்லாமல் சுதந்திரம் இல்லாமல் இருக்கிறவர்களுக்கு இன்னொரு வாய்ப்பை ஆண்டவரும் எழுதி வைத்திருக்கிறார்.

வேதத்தை திறந்து ஒரு வசனத்தை வாசிக்கப் போகிறோம். இன்றைக்கு நாலு விதக் கூட்டத்தாரை குறித்து உங்கள் மத்தியில் நான் பேசவிருக்கிறேன். முதலாவது இந்த வசனத்தை வாசியுங்கள். லூக்கா எழுதின சுவிசேஷம் 16 ஆம் அதிகாரம் ஒன்பதாம் வசனம். நாம் நிறுத்தி வாசிக்கப் போகிறோம். புதிய ஏற்பாட்டிலே 107 ஆம் பக்கத்தில் இருக்கிறது. லூக்கா 16 ஆம் அதிகாரம் ஒன்பதாம் வசனம்: "நான் உங்களுக்கு சொல்லுகிறேன், நீங்கள் வாழும்போது இந்த பூமியிலே நீங்கள் மரணமடைந்து அடையும்போது உங்களுடைய ஆத்துமா உங்களுடைய சரீரத்திலிருந்து வெளியே வரும்போது உங்களை நித்தியமான வீடுகளிலே பரலோக வாசஸ்தலங்களிலே ஒவ்வொருவருக்கும் ஒரு வாசஸ்தலத்தை ஆயத்தம் பண்ண போகிறேன் என்று ஆண்டவர் சொன்னாரே அந்த நித்தியமான வீடுகளிலே உங்களை ஏற்றுக் கொள்வார் உண்டாகும்படி. ஏன் உங்களுக்குரிய வீடு இல்லையா? ஏன் நீங்க மற்றவங்க வீட்ல போய் தங்கணுமா? உங்களை நித்தியமான வீடுகளிலே ஏற்றுக் கொள்வார் உண்டாகும்படி அநீதியான உலகப் பொருட்களினால் உங்களுக்கு சிநேகிதரை சம்பாதிக்கும்."

பரலோகத்தில் வீடு இல்லைன்னு உனக்கு தெரியும்போது உன் பணத்தை கொடுத்தாவது பொருளைக் கொடுத்தாவது சுவிசேஷத்தை சொல்லியாவது பூமியில் உங்களுக்கு சிநேகிதரை சம்பாதித்து அந்த சிநேகிதருடைய வீட்டில் நீங்க போய் ஒண்டியிடும்படி தங்கிக் கொள்ளும்படி சிநேகிதரை சம்பாதியுங்கள். நீங்கள் வாழும்போது நித்தியமான வீடுகளிலே உங்களை ஏற்றுக்கொள்வார் உண்டாகும்படி அநீதியான உலகப் பொருட்களினால் சிநேகிதர்களை சம்பாதியுங்கள். ரொம்ப ஆழமான வசனம், புரிந்து கொள்வதற்கு சற்று கடினமான வசனம். அதை சொல்லுவதற்கு முன்பாக ஆண்டவர் இரண்டு கூட்டத்தாரை நமக்கு முன்பாக நிறுத்துகிறார். இந்த சத்தியத்தை புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக முதலாவது ஒரு கெட்ட குமாரனை நமக்கு முன்பாக நிறுத்துகிறார். லூக்கா 15 ஆம் அதிகாரம். அதைத் தொடர்ந்து ஒரு அநியாயமான ஒரு உக்கிராணக்காரனை ஆண்டவர் நிறுத்துகிறார்.

நீங்க இதுவரை கேட்டிராத ஒரு சத்தியத்தை கெட்ட குமாரன் மூலமாய் நான் உங்களுக்கு சொல்ல விரும்புகிறேன் போகிறேன். எல்லாரும் கெட்ட குமாரனை என்ன சொல்லுவார்கள்? தகப்பன் அண்டை திரும்பி வருகிற மனம் திரும்புகிற ஒரு பாவி, தன்னண்டை வருகிற ஒருவரையும் தள்ளாத ஆண்டவராகிய தகப்பனிடத்தில் திரும்பி வருகிற ஒரு பாவி என்று எல்லாரும் எண்ணுவார்கள். அது உண்மை அல்ல. ஏற்கனவே அவன் தகப்பனிடத்திலிருந்து தகப்பன் வேண்டாம், அவனுடைய ஐஸ்வர்யம் தான் வேண்டும் என்று அந்த அன்பை புறக்கணித்துவிட்டு உலகத்தின் உல்லாசங்களை அனுபவிக்கப் போகிற ஒரு பின்மாற்றக்காரன். மனம் திரும்புகிற பாவி என்று அல்ல. ஏற்கனவே தகப்பனோடு இருந்தவன், தகப்பனுடைய அன்பை ருசித்தவன், கஷ்டப்பட்டு உழைத்து அவர் சம்பாதித்து வைத்திருக்கிறதை பார்த்தவன்.

தகப்பன் அண்டை வந்து கேட்கிறான், என்னுடைய ஆஸ்தியை பிரித்துக் கொடுத்துவிடும். உனக்கும் எனக்கும் இனி சம்பந்தம் இல்லை. நான் உம்மை நேசிக்கவில்லை, உம்முடைய பணத்தை தானே நான் நேசிக்கிறேன். பொதுவாக இஸ்ரவேல் தேசத்தில் ஒரு தகப்பன் மரிப்பதற்கு முன்பாக சொத்தை பிரிச்சு வைக்கணும்னு கேட்டு பிரிச்சிட்டு போறவன் தகப்பனை கொன்னுட்டு போவதற்கு சமாதானமானவன் சமானவன். இந்த வீட்டில் தாய் இல்லை, தகப்பன் எவ்வளவோ அன்பை மகன் மேல் வைத்திருக்கிறான். ஏன் மகன் வந்து ஆசையை பிரிக்கணும்னு நினைக்கிறான்? ஏதோ ஒரு தொழிலாக ஆரம்பிக்கணும் அல்ல அப்பா நான் ஒரு கடை வைக்க போறேன், ஒரு பிசினஸ் ஆரம்பிக்க போறேன், ஒரு முதலீடு செய்யப்போறேன். அதற்காக அல்ல. அவனுடைய நோக்கமே வேசி இடத்தில் போய் அதை அழிக்கணும், சிற்றின்பங்களை ருசிக்கணும். அவன் ஆசையை யாருக்கு அழித்துப் போட்டான் என்று வேதம் சொல்லுகிறது? வேசிகளிடத்திலே அழித்துப் போட்டான். தன்னுடைய சரீரத்தை தீட்டுப்படுத்தி அநேக ஸ்திரீகளோடு ஒன்னாய் இணைந்து அந்த வேசிகளுடைய சாபம் இவனுக்குள்ளே வர, அவளுக்குள்ளே இருந்த நோய்கள் எலிசா இவனுக்குள்ளே வளர வளர ஆண்டவர் சொல்லுகிறார், வேசியோடு இணைந்து இருக்கிறவன் அவளோடு ஒரே சரீரமாய் இருக்கிறான். அவன் சாதாரண பாவம் செய்யவில்லை. அவனுக்குள்ளே ஆவியானவர் தங்கியிருக்கிறார். அவரை துக்கப்படுத்தனும், அவரை வேதனைப்படுத்தனும். ஆவியானவருக்கு விரோதமான பாவம், சொந்த சரீரத்துக்கு விரோதமான பாவம்.

அவன் மீண்டும் திரும்பி வந்தது தகப்பனுடைய அன்பை பார்த்து அல்ல. தகப்பன் வீட்டில் சாப்பாடுகளை இவனுக்கு சாப்பாடு கூட இல்லை. அப்பா உங்களுக்கு துரோ பண்ணிட்டு அந்த குற்ற உணர்வு மனசாட்சி வாதிக்கிறதுனால திரும்பி வரல. வேதம் சொல்லுகிறது, என் தகப்பன் வீட்டில் எவ்வளவு பூர்த்தியான சாப்பாடு இருக்கிறது, எனக்கு பன்றிக்கு கிடைக்கிற தவிடு கூட கூட கிடைக்கவில்லையே எல்லாம் குறைபட்டபோது நேரா ஒரு குடியான இடத்தில் வந்தான். குடியானவன் என்ன வேலை கொடுத்தான்? தன்னுடைய வயலிலே போய் பஞ்சி மேற்கிற வேலையை செய்யணும். வயல் தானே விலைக்கு விக்க வேண்டியது, அநேகம் பேருக்கு உணவை கொடுக்கக்கூடியது. ஆனால் இந்த பன்றியை மேய்க்கிற பன்றி என்பது இச்சைகளுக்கு அடையாளம், பிசாசுகள் வந்து தங்குகிற ஒரு இடம் தான் பன்றி. லேகியோன் பிடித்த பிசாசை துரத்தும் போது உலகத்தில் ஆயிரக்கணக்கு மிருகங்கள் இருந்தாலும் இந்த லேகியன் படித்த அசுத்த ஆவிகள் பன்றிகளுக்குள்ள நாங்க போக வேண்டும். அதுதான் விபச்சார வேசித்தனத்துக்கு இச்சைகள் உருவாக்கப்படுகிற ஒரு இடம்.

ரெண்டு வயல்களைப் பற்றி ஒரே உவமையில் ஆண்டவர் சொல்லுகிறார். கெட்ட குமாரன் குடியானவருடைய வயலிலே பன்றி மேய்க்கிற வேலை செய்தான். அவன் திரும்பி வரும்போது மூத்த குமாரன் தகப்பனுடைய வயலிலிருந்து திரும்பி வந்தான். ரெண்டும் வயல்தான், ரெண்டும் வயல்தான். ஒன்று அருவருப்பான சினிமாவுக்கு போய் நிர்வாண படங்களை எடுக்க வைக்கக்கூடிய ஒரு பஞ்சித்தனமான புரோனோகிராபிக்காக தன்னுடைய சரீரத்தை விற்றுப் போட்டவனுக்கு அது அடையாளம். ஆண்டவர் சொன்னார், ரெண்டு பேர் ஒரு வயில் இருப்பார்கள், ஒருவன் எடுத்துக்கொள்ளப்படுவான், ஒருவன் கைவிடப்படுவான். தூத்துக்குடிக்கு போகும்போது ஒரு தாய் அழுது கொண்டு சொன்னார்கள், எங்களுக்கு ரெண்டு பொம்பள பிள்ளைகள். மூத்தவள் சினிமா பைத்தியமாய் காலேஜ்ல படிக்கும்போதே படிப்பை விட்டுட்டு குட்டி நடிகையா டான்ஸ் நடிகையாய் போயிட்டாள். தாய் சொன்னாள், அவளுடைய மேக்கப் எல்லாத்துலயும் பாம்பு இருக்கும். கையில ஒரு வளையம் போட்டான்னா ஒரு ரவுண்டு வந்து இப்படி ஒரு பாம்பு. அதைத்தான் அவா போட்டிருப்பா. நெத்தியில பொட்டு வச்சிருந்தாலும் அந்த பொட்டுல ஒரு நாகப்பாம்பை படம் எடுத்து எங்கிருந்து அவளுக்கு சாரி கிடைக்குமோ தெரியல. எல்லா சாரியிலும் பாம்பின் பாடம் இருக்கும். அடுத்த மகள் சபையிலே சேர்ந்தாள், மணிக்கணக்காய் ஜெபிப்பாள், தீர்க்கதரிசனம் உரைப்பாள். ஆனால் இந்த மூத்த மகளோ கண்ட வாலிபர்களோடு சுற்றுவாள், தன்னுடைய சரீரத்தை சித்தத்துக்கும் அபச்சாரத்துக்கும் விற்றுப் போட்டுவிட்டாள். என் வயித்துல தான் அந்த ரெண்டு பிள்ளைகளும் பிறந்தது. ஒண்ணுக்கொன்னு நேர் எதிர் துருவமாய் இருக்கிறது. பிரதர் அந்த இளைய மகள் அவ்வளவு பக்தியாய் இருக்கிறாள், ஆலயத்துக்கு வந்திருந்தாள். அவளுடைய முகத்திலே ஒரு தெய்வீக பிரசன்னம் இருந்தது. இப்பொழுது மரித்தாலும் அவள் பரலோக ராஜ்யத்துக்கு சென்று விடுவாள் என்கிற ஒரு நம்பிக்கை இருந்தது.

இந்த கெட்ட குமாரன் இப்பொழுது திரும்பி வருகிறான். அவனுடைய நோக்கமெல்லாம் தகப்பனிடத்திலே ஒப்புரவாகி அந்த வீட்டில் தனக்கு நிரந்தர சாப்பாடு கிடைக்கும். ஒரு கூலிக்காரனை போலவாவது ஒரு வேலை என் தகப்பன் எனக்கு தருவான். அவன் தகப்பனை பிரியப்படுத்தனும் பார்த்தானே தவிர அந்த வீட்டில் உள்ள தன்னுடைய அண்ணனை பிரியப்படுத்தனும் என்கிற எண்ணமே அவனுக்கு வரல. இப்போ நான் ஒரு கேள்வி கேட்கிறேன். அவன் திரும்பி வந்துட்டான். திருப்ப ஒரு வீட்ல ஒரு பாகப்பிரிவினை வைப்பாங்களா? வைக்க மாட்டான். ஏற்கனவே பாகப்பிரியவனை வச்சு அவனுக்குரியதா பாதியை பிரிச்சு அவனுக்கு கொடுத்தாச்சு. இப்ப மீதி இருக்கிறது மூத்த குமாரனுடைய ஆசிதான் மீதி இருக்கு. ரெண்டு பக்கமா பிரிச்சு கொடுத்தாச்சு. இவனுக்கு வேண்டிய சொத்து அவனுக்கு கொடுத்தாச்சு. இப்ப மீதி இருக்கிற சொத்து யாருடைய சொத்து? மூத்த மகனுடைய சொத்து. சரியா? மூத்த மகனுடைய சொத்து. தகப்பன் ஒரு அன்பினால, ஒரு இரக்கத்தினால அவனுக்கு சாப்பாடு போடுறான், மோதிரம் போடுறான், ஒரு விருந்தெல்லாம் ஏற்பாடு செய்தாலும் அதே வீட்ல இளைய குமாரன் ஒரு அனாதை. இளைய குமாரனுக்கு ஆசி கிடையாது. இளைய குமாரனுக்கு வீடு கிடையாது. இளைய குமாரனுக்கு ஒரு சுதந்திரம் கிடையாது.

கெட்ட குமாரனுடைய வாழ்க்கையை பார்த்துட்டு அநேகர் என்ன என்றாங்க? மூத்த குமாரன் முட்டாள் மடையன், வாழ்க்கை அனுபவிக்க தெரியாதவன். அப்பா அப்பா அப்பா வேலை வேலை வேலைன்னு செத்துட்டு இருந்தானே தவிர உலகத்தை ஒன்னும் அனுபவிக்கல. நான் வாழ்ந்த நாள் எல்லாம் சினிமா போவேன், அங்க போவேன், இங்க போவேன், ஆட்டம் பாட்டம் நான் எல்லாம் நான் நடத்துவேன். கடைசில சாகப் போகும்போது அப்பா அப்பான்னு ஓடி வந்துருவேன். ஏன் முதல்ல இருந்து பக்தியா இருக்கணும்? முட்டாள். தன்னண்ட வருகிற ஒருவரையும் ஆண்டவர் ஏற்றுக்கொள்ளாமல் இருக்கிறது இல்லை. உலகத்தில் எவ்வளவு அனுபவிக்க முடியுமோ குடிப்பேன், கூத்தாடுவேன், மனம் போல வாழுவேன், என்னென்ன பாவம் உண்டோ அவ்வளவு சந்தோஷத்தை அனுபவிப்பேன். சாகும்போது அப்போ பரத்துக்கு விரோதமா உமக்கு விரோதமா பாவம் செய்தேன், உம்மை கூலிக்காரன் சொல்லக்கூடாது, நான் லாய்க்கல, என்னை ஏற்றுக்கொள்ளப்பா. மூத்த பையனுக்கு மோதிரம் கிடைச்சிச்சா? புது டான்ஸ் பார்ட்டி வச்சாரா? அவங்க அப்பா அவன் பிரண்ட்ஸ் ஓட அனுபவிக்க ஒரு ஆட்டுக்குட்டியாவது கொடுத்தாரா? பெரிய சர்ச்ல நீங்க யாரை போல இருக்க விரும்புறீங்க? மூத்த மகனா போல இருக்கு. எல்லாரும் இளைய குமாரனை போல இருக்கணும்னு தான் ஆசைப்படுறேன். ஒருத்தனுக்காவது அப்பாவுக்கு அடிபணிஞ்சு அப்பாவுக்கு ஊழியம் செய்து யோசேப்பை போல பரிசுத்தமா முதல்ல இருந்து காத்துட்டு ஓடுறதுக்கு ஒருத்தனுக்கும் இஷ்டம் இல்லை. நம்ம சர்ச் எல்லாருமே நானே போகக்கூடாது, என் சர்ச்சுக்கு என்றாலும் பரவாயில்லை.

மூத்த குமாரனுக்கு உள்ளத்தில் ஒரே கேள்வி என்னடா அப்பா என்ன கஷ்டப்பட்டு இரவும் பகலும் வேலை செய்து நெத்தி வேர்வை நிலத்தில் சிந்த பாடுபட்டு தான் சுகநலத்தை மறந்து அம்மா இல்லாத சூழ்நிலையிலும் ஒரு தாயை போல நம்மை வளர்த்து வந்தாரு. இவன் இன்னைக்கு வந்தவனுக்கு ஓடிப்போறாராம், கட்டிப்பிடிக்கிறாராம், பாதராட்சை போடுன்றாராம், உயர்ந்த வஸ்திரத்தை உடுத்து என்றாராம், மோதிரமாகிய அதிகாரத்தை கொடுத்தாராம், விருந்த குழுத்தை கண்டு அடி டான்ஸ் பார்ட்டி வை. அப்போ முதல்ல இருந்தே அப்பாவுக்கு பிரியமா, பரமபிதாவுக்கு பிரியமா பக்தியா, பாவமே செய்யாம எப்ப பார்த்தாலும் ஜெபம், எப்ப பார்த்தாலும் உபவாசம் இவன் எல்லாம் பைத்தியக்காரன், எல்லாம் முட்டாள்கள், வாழ தெரியாதவங்க. அவனுக்கு தான் அப்பா அதை கொடுக்கிறார், இதை கொடுக்கிறார், அதை கொடுக்கிறார். அப்பாகிட்ட சண்டைக்கு போறான். நீர் அன்புள்ளவர் தான், ஆனால் நீர் நீதி இல்லாதவர். நீர் சர்வலோக நியாயாதிபதி, நியாயம் செய்கிறவர். பரிசுத்தவான்கள் எல்லாம் நீர் முட்டாள் ஆக்கிட்டீர். வேல்டி அடிச்சு போட்டு வந்தான், பெரிய மாலை உம்மா. நீதி எங்கயா? நீர் அன்புள்ளவர் என்கிறது ஒத்துக்கு, ஆனால் நீதி இல்லையே.

தகப்பன் சொல்றான் மூத்த மகனை பார்த்து, மகனே நீ எப்போதும் என்னோடு இருக்கிறாய், எனக்கு உண்டானது எல்லாம் உனக்குரியதாய் இருக்கிறது. தம்பிக்கு சொத்துலயோ ஆசிலயோ வீட்டிலேயோ ஒன்னும் கூட போறதில்லை. எல்லாம் உனக்குரியது. எனக்குரியது எல்லாம் எல்லாம் உனக்குரியது. ஆபிரகாமுக்கு எட்டு பிள்ளைகள். ஆகார் மூலமாக பிறந்தது இஸ்மவேல், சாராள் மூலமாக பிறந்தது ஈசாக்கு. கேத்துரால் என்ற ஒரு பெண்ணை அவளுக்கு ஆறு பிள்ளைகள். ஆனால் வேதம் சொல்லுகிறது, அவனுக்குரிய எல்லாவற்றையும் ஈசாக்குக்கு கொடுத்தான். இஸ்மவேலுக்கு கொடுத்தது என்ன? சில அப்பங்கள், ஒரு துருத்தி தண்ணி. கேத்தூராளுக்கு கொடுத்தது என்ன? சில சில பரிசுகளை கொடுத்து தான் உயிரோடு இருக்கும்போது தூர தேசத்துக்கு அனுப்பினான். தனக்குரிய [இசை] எல்லாவற்றையும் தன்னோடு இருந்த ஈசாக்குக்கு கொடுத்தான். அதுபோலத்தான் இந்த மூத்த குமாரன் தனக்குரிய எல்லாவற்றையும் அந்த மூத்த குமாரனுக்கு கொடுத்தான். இவன் அப்பாகிட்ட மன்னிப்பு கேட்டன தவிர தன்னுடைய அண்ணன்கிட்ட மன்னிப்பு கேட்டு, அண்ணே மன்னிச்சுக்க, அண்ணே அந்த அண்ணனை பிரியப்படுத்தல. அண்ணன் கிட்ட மன்னிப்பு கேட்கல. அண்ணன் வீட்ல தான் தங்கப்போறோம் வேற வழியே இல்லை என்று அவனுக்கு தெரியல.

ஆண்டவர் சொல்லுகிறார், நீ வாழும்போது நித்தியமான வீடுகளில் உங்களை ஏற்றுக் கொள்வார் உண்டாகும்படி அநீதியான உலகப் பொருட்களினால் சிநேகிதரை சம்பாதியும். இங்கிலாந்துல ஒரு பயங்கரமான கொள்ளைக்காரி கொள்ளைக்காரி இருந்தாளாம். கடைசில அவளை பிடிச்சு பப்ளிக்ல தூக்கு போட்டாங்க. அவள் தூக்குக்கு நடந்து போகும்போது ரெண்டு பக்கம் லட்ச லட்சமான மக்கள் நின்னு அவ தூங்குல தூங்குறதை ரசிச்சு பார்க்கணும்னு பயங்கர கூட்டம். போலீசார் அவளை தர தர தர தரன்னு இழுத்துட்டு போகும்போது ரெண்டு பக்கம் அவளை காரி துப்பி கல்லெறிஞ்சு கேடுகெட்டவளே, லண்டனுக்கு பிடிச்ச பீடையை சாவுக்கு சாவுன்னு திட்டிட்டே இருந்தாங்க. ஒரு அம்மா ஜெபம் பண்ணிட்டே இருந்தாங்க. இவ்வளவு வெறுப்பை அவ சம்பாதிச்சுட்டாள். ஒருத்தருடைய அன்பை கூட அவ பெற்றுக்கொள்ளல. நான் என்ன செய்யணும் ஆண்டவரேன்னு கேட்டா ஆண்டவர் சொன்னார், நீ ஓடிப்போ. அவருடைய பெயர் மேரி. அந்த பெண்ணை கட்டி அணைச்சு முத்தமிட்டு, "காட் லவ்ஸ் யூ" அப்படியே சொல்லு, அது போதும். அவள் தன் வீட்டு மாடியிலிருந்து இறங்கி தெருவுக்கு ஓடி வந்தாள். அவளை இழுத்து போலீசா தர தரன்னு கொண்டு போகும்போது அவளை கட்டி அணைத்து, "மேரி, ஜீசஸ் உன்னை வெறுக்காதவர், அவர் உன்னை நேசிக்கிறார் மகளே" அதைக் கேட்டதும் அந்தப் பெண் தாரை தாரையாய் கண்ணீர் வடித்தாள். சொந்த தாய் பேசுவது போல மனதுருக்கமாய் பேசின அந்த வார்த்தைகள் அவருடைய காதிலே ரிங்காரம் இட்டுக் கொண்டே இருந்தது. உன்னை நேசிக்கிறேன். அந்த வார்த்தைகள் அவளைத் தொட்டது.

ஆண்டவர் சொல்றார், இப்போ உன்கிட்ட நிறைய பணம் இருக்கு. சுவிசேஷத்தை கொடு. ஊழியத்தை கொடு. உனக்கு நிறைய நண்பர்களை சேர்த்துக்கோ. ஒருமுறை எனக்கு ஒரு வாசகர் கடிதம் எழுதி இருந்தார். பிரதர் இதுல 200 ரூபாய் அன்னைக்கு உங்களுக்கு அனுப்பி இருக்கேன். தயவுசெய்து சிவாஜி கணேசனுக்கு சுவிசேஷம் தேசத்தை அறிவிக்கிறதுக்கு இன்னொரு லேடி பேர் போட்டிருந்தாங்க மஞ்சுலா. இந்த 200 ரூபாயை பயன்படுத்தி அவங்களுக்கு எப்படியாவது சுவிசேஷம் சொல்லுங்க பிரதர். மஞ்சுலா உடைய அட்ரஸ் நான் தேடிப்போய் பிறகு என் பேரை கெடுத்து என்னடா இவரு மஞ்சுலா அட்ரஸ் அட்ரஸ்ன்னு தேடுறாரு. நல்ல வேலை மணிமேகலை பிரசுரத்துறதுல தமிழ்வாணன் அவருடைய பதிப்பகம் டி நகரில் இருக்கு. பிரபல்யமானவர்களுடைய விலாசம் தற்சியில அந்த பப்ளிகேஷன் போயிருந்தேன். புஸ்தகத்தை பார்த்தவுடனே அதுல சிவாஜி கணேசன் பேர் இருக்குதா இருக்கு. மஞ்சுளா பேர் இருக்குதா இருக்கு. சினிமா தொடர்புள்ள 1100 பேரு டைரக்டர், மேக்கப் மேன் எல்லாருடைய அட்ரஸ்ும் அதுல இருக்கு. உடனே அதை வாங்கிட்டு வந்தேன். சிவாஜி கணேசன், மஞ்சு விழாவுக்கு மட்டும் இல்ல சினிமாவில் உள்ள அவ்வளவு துறைக்கும் நான் ஒரு புஸ்தகம் அனுப்பணும். கர்த்தர் உன்னை ஆசீர்வதிப்பார். ஒரு நல்ல புஸ்தகம் எழுதினேன் அனுப்பினேன். ஒரு பதிலும் வரல. பரவாயில்லை. ஒரு மாசம் கழிச்சு அந்த 1100

பேருக்கும் ஒரு பர்சனல் கடிதம் எழுதினேன். இன்லாண்ட் லெட்டரில் 1100 பேருக்கும் ஒரு கடிதம். ஒரு மாதம் கழித்து 1100 பேருக்கும் நரகத்தைப் பற்றி. அதை வாசித்தால் எங்கே எங்கே எத்தனை பேர் வாசித்தார்களோ தெரியவில்லை. எங்கே எங்கேன்னு ஒரு புத்தகம். அதை படித்தால் பேதி ஆகும். அந்த மூன்று புத்தகத்தையும் அனுப்பினேன். அவர் அனுப்பினது வெறும் ₹200. அனுப்பி அனுப்புங்க என்றார். எனக்கு ₹20000 செலவு ஆனது. ஆனால் ஆண்டவர் சொல்கிறார், "உன்னுடைய ஆகாரத்தை தண்ணீர் மேல் போடு. அநேக நாட்களுக்குப் பிறகு அதனுடைய பலனை நீ காண்பாய்."

அப்புறம் வந்தது பார்க்கணும். எங்கள் வீட்டில் ஒரு நான்கு ஐந்து கார், ஃபாரின் கார், சினிமா நடிகைகள் வந்திருக்கிறார்கள். டைரக்டர் வந்திருக்கிறார். என்னவென்றால், அது வேலை செய்தது. அப்பொழுதுதான் முதல்முறை ஏவிஎம் ராஜனை பார்த்தேன். அவருடைய வைஃபை பார்த்தேன். சினிமா துறையில் உள்ள நிறைய பேர் அங்கே வந்திருந்தார்கள். நிம்மதி இல்லாத ஒரு வாழ்க்கையை, வேதனையான வாழ்க்கை சொல்லி சொல்லி அழுதாங்க. நாம் நினைக்கிறோம், அவர்கள் நடிகைகள், அவர்களுக்கு ஒரு குறையும் இல்லை. என்ன அழகு, என்ன மேக்கப், என்ன புது கார். அவர்களை மாதிரி நிம்மதி இல்லாதவர்கள், சூனியங்களில், செய்வினைகளில் பாடுபடுபவர்கள், இரவு நேரத்தில் தூங்க முடியாது. அவர்களை மாதிரி நாம் பார்க்கவே முடியாது.

இந்த உவமையை ஆண்டவர் சொல்கிறார். எப்படி கெட்ட குமாரன் தன்னுடைய சொந்த தகப்பனுடைய வீட்டிலேயே ஒரு அனாதையாய் நிற்க வேண்டியது வருகிறதே. சொந்த அண்ணன் கூட ஏற்றுக்கொள்ள மாட்டேன். விருந்து வைத்தால் விருந்தில் கலந்து கொள்ள மாட்டேன். வீட்டுக்கு வெளியே போய் நின்றுவிட்டான். மௌத்தாக அவனை ஏற்றுக்கொள்வார் ஒருவரும் இல்லை. அவனுடைய நிலைமை பரிதாபமான ஒரு நிலைமை. ஒரு ஆஸ்தி கிடையாது, ஒரு சுதந்திரம் கிடையாது, ஒரு வாயில் கிடையாது, ஒரு வீடு கிடையாது. அம்போ என்று நிற்கிறான்.

பரலோகத்திலும் எப்போ ஜனங்கள் அப்படி அம்போ என்று அனாதைகள் மாதிரி நிற்பார்கள் என்றால், இன்றைக்கு ஆண்டவரை ஏற்றுக்கொண்டு பரிசுத்த ஆவியை பெற்று, இதோ சரீரத்தில் விபச்சார வேசித்தனம் செய்து, பின்மாற்றத்துக்குள் போகும்போது, அவனுக்கு பரலோகத்தில் உள்ள எல்லா சுதந்திரத்தையும் அவன் இழந்து போகிறான். சரீரத்துக்கு விரோதமான ஒரு பயங்கரமான பாவம் வேசித்தம். ஒரு காலத்தில் இரட்சிக்கப்பட்ட அபிஷேகம் பெற்றார். அந்நிய பாஷையில் பேசினால் நல்லது. மற்ற எந்த பாவமும் சரீரத்துக்கு புறம்பாய் இருக்கும். ஆனால் அந்த பாவம் ஆவியானவர் வாசம் பண்ணுகிற பரிசுத்த ஸ்தலத்தையே அசிங்கப்படுத்துகிற ஒரு பாவம்.

ஒரு நேர கூளுக்காக தன்னுடைய சீஷ புத்திர பாதையை இழந்த ஏசாவைக் குறித்து வேதம் சொல்லுகிறது. பிற்பாடு அவன் மனம் கசந்து அழுதும் மனம் மாறுதலை காணாமல் போனான். பரலோக ராஜ்ஜியத்தை கடையில் அடகு வைத்துவிட்டு போய் வேசித்தனம் பண்ணினால் சிற்றின்பம் நன்றாக இருக்கலாம். ஆனால் பரலோகத்தில் உள்ளது போச்சு. உனக்கு பரலோக வாசஸ்தலம் இல்லை. ஒளியில் உள்ள பரிசுத்தவான்களுடைய சுதந்திரம் இல்லை. வெறுமையாய் அங்கே நிற்க வேண்டியிருக்கும். ஆகவேதான் ஆண்டவர் சொன்னார். இந்த வசனம் ரொம்ப முக்கியம். நீ பாவத்தில் விழுந்துவிட்டால், வேசித்தனம் பண்ணிவிட்டால், பின்வாங்கிப் போயிட்டால், ஆண்டவரை துக்கப்படுத்தி விட்டால், ஒரு தரம் பிரகாசிக்கப்பட்டு பரம ஈவை ருசித்து மறுதலித்து போயிட்டால், இன்னும் ஒரே ஒரு வழிதான் இருக்கிறது. பணத்தை எடுத்து நிறைய பைபிள் வாங்கு. காஸ்பல் வாங்கு. தெருவில் இருந்து பேச பண்ணு. டிராக்டர் கொடு. நாலு பேரிடம் போன் பண்ணி ஆண்டவரைப் பற்றி பேசு. அவர்கள் பரலோகத்துக்கு போனால், அவர்களுடைய வீட்டில் நீ போய் ஓண்டிக்கொள்ளலாம். மூத்த குமாரனிடம் போய் உன்னால் ஒண்ட முடியவில்லை. அவன் பூமியில் இருக்கும்போதே, "அண்ணே" என்று ஒரு மதிப்பு கொடுத்து, அண்ணன் சொல்லைக் கேட்டு, அண்ணனை நேசி இருந்தால் சரி. "தம்பி வாடா என் பக்கத்தில், கேரேஜ்யாவது உனக்கு கொடுக்கிறேன்" என்று அவன் கொடுப்பான். இப்பொழுது கொடுப்பானா? அவன் கொடுக்க மாட்டான். ஆகவேதான் ஆண்டவர் இந்த வார்த்தை சொல்கிறார். நீ பரலோகத்தில் அனாதையாய் இருக்காதே. பரலோக சுதந்திரத்தை இழந்தவனாய் இருக்காதே.

சரி, இரண்டாவதாக இன்னொரு உவமையை இந்த கெட்ட குமாரன் உவமையை சொல்லிவிட்டு கூடவே அதை தொடர்ச்சியாய் அதே 16 ஆம் அதிகாரத்தில் ஆண்டவர் பேசுகிறார். லூக்கா 16 ஆம் அதிகாரம் என்பது 15 ஆம் அதிகாரத்தினுடைய தொடர்ச்சி. லேசாய் வாசிக்கிறேன். "பின்னும் அவர் தம்முடைய சீஷர்களை நோக்கி, ஐஸ்வர்யவானாகிய ஒரு மனுஷனுக்கு ஒரு உக்கிராணக்காரன் இருந்தான். தேவனாகிய கர்த்தருக்கு ஒரு ஊழியக்காரன் இருந்தான். அவன் தன் எஜமானுடைய ஆஸ்திகளை அழித்துப் போடுகிறதாக எஜமானுக்கு அறிவிக்கப்பட்டது." எஜமானுக்கு போய் சேர வேண்டிய கனம், புகழ் எல்லாம் இவன் தனக்கு எடுத்துக்கொண்டான். கல்வாரியில் சம்பாதித்த இரட்சிப்பை சுயநலமாக அவனுக்கு பயன்படுகிற விதத்திலே அவன் எடுத்துக்கொண்டான். ஊழியத்துக்கு சரியாய் செய்யவில்லை. வெளிநாட்டிலிருந்து பணம் கிடைக்குமா பார்த்து பார்த்து அவன் பேருக்கும் அவன் பிள்ளை பேருக்கும் தலைமுறையாய் எழுதிக்கொண்டான். உண்மையாய் இருக்கவில்லை.

ஆண்டவர் நம்முடைய கையில் கொடுத்திருக்கிற சுவிசேஷம் சாதாரணமாய் கொடுக்கப்பட்டது அல்ல. சிலுவையிலே நமக்காக தொங்கி பாடு அனுபவித்து இரத்தம் சிந்தின ஆண்டவர் இந்த சுவிசேஷத்தை நம்முடைய கையிலே கொடுத்து பாதாளத்துக்கு போகிற ஜனங்களை கர்த்தர் பக்கம் நீ திருப்புவாய் என்று சொன்னால், அதற்காக அதை செலவழிக்காமல் தன்னுடைய பேர் புகழுக்காக, தன்னுடைய மகிமைக்காக, தன்னுடைய பேர் பிரசாபத்துக்காக செய்கிற அநேக ஊழியர்களைப் போல இவனும் செய்தான். அப்பொழுது எஜமான் அவனை வரவழைத்து, "உன்னை குறித்து இப்பொழுது கேள்விப்படுகிறது என்ன? உன் உக்கிராணக் கணக்கை ஒப்புவி. இனி உக்கிராணக்காரனாய் இருக்கக்கூடாது" என்றார். பண்ணிவிட்டான். இதுவரைக்கும் அவன் எஜமான் வீட்டில் தங்கி இருந்தான். இதுவரைக்கும் அவன் எஜமான் கொடுத்த குவார்ட்டர்ஸில், அப்பார்ட்மெண்ட்டில் தங்கினான். இப்ப வந்து எஜமான் சொல்கிறான், "நீ உண்மை அல்ல. நீ உத்தமா அல்ல. ஆனாலும் நீ காலி பண்ணு. என் வீட்டை விட்டு போ. உனக்கு வீடு கிடையாது. ஒன்றும் கிடையாது."

உடனே அவன் என்ன செய்தானாம்? "ஐயோ, எஜமான் நான் அனாதை ஆக்கிவிட்டாரே! வீடு கிடையாது. இனிமே நான் என்ன செய்வேன்?" அவனுக்கு ஒரு ஐடியா வந்தது. அவசரம் அவசரமாக, "எப்பா, நீ என் எஜமானிடம் எவ்வளவுப்பா நீ வாங்கினாய்? 100 கலம் கோதுமை. 100 அவருக்கு கொடுக்க வேண்டாம். அவருக்கு என்ன பணத்தில் மிதக்கிறார்? ஏன் 100 கொடுக்கிறார் உண்டா? நான் மடமடா, நான் நாளைக்கு தான் ரிசைன் பண்றேன். நாளைக்கு தான் என்னை வேலை இருந்து டிஸ்மிஸ் பண்றாங்க. நான் குறைத்து ஒரு பழைய டேட் போட்டு எழுதி தருகிறேன். பத்து களம் கோதுமை போதும்." நீ எவ்வளவு வாங்கணும்? நான் 100 கூட எண்ணி 100 எல்லாம் கொடுக்க வேண்டாம். நீ 20 இடையை வைத்துக்கொள்." ஒவ்வொருவரிடமும் இப்படி இப்படி கேட்டு கேட்டு, எஜமானுக்கு போக வேண்டியதை அவர்களுக்கு லாபமாக மாற்றி காட்டிவிட்டான். காட்டிவிட்டு என்ன செய்வான்? "இப்ப எஜமான் என்ன டிஸ்மிஸ் பண்ணாலும், 100 100 பேருக்கு நான் நன்மை செய்திருக்கிறேன். உதவி செய்திருக்கிறேன். குறைத்து எழுதி இருக்கிறேன். ஒவ்வொருத்தர் வீட்டிலேயா போய் மாசத்துக்கு ஒரு நாள் வீதம் போனாலும், 30 பேர் வீட்டில், 60 பேர் வீட்டில் போய் சாப்பிட்டால் என் வயிறு நிறைந்துவிடும் போதும்."

நான் பேச்சுலராக இருக்கும்போது புரசுவாக்கத்தில் சத்தூர் லாட்ஜ், இன்னொரு லாட்ஜ் எல்லாம் இருந்தது. நிறைய வாலிபர்கள் எல்லாருமே பேச்சுலர்ஸ். பக்கத்தில் ஒரு முனி முனியாண்டி ஹோட்டல் ஒன்று உண்டு. இப்ப நமக்கு செட்டிநாடு ஹோட்டல் இருக்கிற மாதிரி, நாங்கள் எல்லாரும் மொத்தமாக போவோம். அங்கே போய் நல்ல வயிறார சாப்பிடுவோம். நன்றாக இருக்கும். அங்கே ஒரு சர்வர் மெதுவாக எங்களிடம் பழக்கம் பிடித்துவிட்டான். நாங்கள் ஆர்டர் பண்ணாத எல்லாம் கொண்டு வந்து வைப்பான், கொடுப்பான். ஈரல் கொடுப்பான், அது மீன் கொடுப்பான், வஜ்ரம் கொடுப்பான், எல்லாம் கொடுப்பான். கணக்கு பார்த்தால் ₹400-க்கு சாப்பிட்டு இருப்போம். அந்த காலத்தில் அவன் ₹40 தான் எழுதுவான். "ஏன்பா, என்ன சார்? எங்க முதலாளிக்கு இல்லாத பணமா? பேருக்கு எத்தனையோ பங்களா வாங்கிவிட்டார்." மனசாட்சி வாதித்தாலும், எங்களுக்கு நிறைய பிரண்ட்ஸ் கூட்டிட்டு போவோம். அவனுக்கு டிப்ஸ் மாதிரி ஏதாவது கொடுத்து விடுவோம். பத்து பிரண்ட்ஸ் கூட்டிட்டு போய் நல்லா சாப்பிட்டு ₹1000 எழுதுறதுக்கு ₹200 ரூபாய் எழுதினால், எங்களுக்கு ₹800 லாபம்.

அப்ப இந்த இரட்சிப்பு எல்லாம் நமக்கு தெரியவில்லை. ஆனால் செய்யற தப்பு என்பது மனசாட்சியில் தெரியுமே தவிர, இந்த மாதிரி இரட்சிப்பு, அபிஷேகம் எல்லாம் அங்கே அப்போ ஒன்றும் கிடையாது. ஒரு நாள் வந்தான். எப்படித்தான் என் அட்ரஸ் கண்டுபிடித்தான் என்று தெரியவில்லை. அதே சத்தூர் லாட்ஜுக்கு சாயங்காலம் வந்துவிட்டான். தலையை சொறிஞ்சிட்டே இருந்தான். "என்னப்பா?" என்று கேட்டேன். "எங்க முதலாளி என்னை வேலையை விட்டு போக சொல்கிறார். அதான் உங்களை பார்க்கலாம் என்று வந்தேன்." மதுரையில் என் பெண் ஜாதி வேற ரொம்ப சிக்காக இருக்காது. நாளைக்கு நான் பஸ்ஸை பிடிக்கணும். ஆகவே என்னிடம் ₹500 கரந்துவிட்டான். லாட்ஜில் உள்ள அவ்வளவு பேரையும் ரவுண்டா பண்ணி ஒரு ₹5000, ₹10000 கலெக்ட் பண்ணிவிட்டான். எங்களுக்கு என்னவென்றால், இவன் நமக்கு ஒரு 3000, 4000 குறைத்து போட்டான். இப்ப ₹500 தான கொடுக்கிறோம். அப்ப அவன் ஒரு புத்தியாக செய்தான்.

"எஜமான் என்னை வேலை விட்டு தள்ளிவிட்டார். என் வீடு போச்சு" என்று தெரிந்தவுடன், யார் வீட்டிலாவது போய் ஒண்டிக்கொள்ளலாம். யாரையாவது போய் தலையை தலையை சொறிந்து கொஞ்சம் காசு கேட்டுக்கொள்ளலாம் என்கிற எண்ணம். ஆண்டவர் அதெல்லாம் சொல்லிட்டு, "உக்கிராணக்காரன் செய்தது தப்புதான். எஜமானுக்கு போக வேண்டிய கோதுமையை குறைத்து எழுதிக் கொடுத்து எஜமானுக்கு நஷ்டம் கொடுத்தது உண்மைதான். எண்ணெயை தப்பா எழுதி எல்லாம் குறைத்தது எல்லாம் தப்புதான். ஆனாலும் அந்த பொல்லாத உக்கிராணக்காரன் ஞானமாக செய்தானாம். செய்தது தப்பாவே இருந்தாலும், நம்மளை வேலை விட்டு போக சொல்லிட்டால் என்ன செய்வது என்கிறதை அறிந்து ஞானமாக செய்தான்" என்று மெச்சிக்கொண்டார் என்று அந்த வசனத்தில் பார்க்கிறோம். அதை அடுத்து தான் இவர் சொல்கிறார். எட்டாம் வசனத்தில் சொல்கிறார், "எஜமான் அந்த உக்கிராணக்காரனை மெச்சிக்கொண்டான். ஞானமாக செய்தான்." மெச்சிக்கொண்டானே ஒழிய, அவன் செய்த தப்பை மெச்சிக்கிடவில்லை.

அதை சொல்லிட்டு சொல்கிறார், "கெட்ட குமாரன் அண்ணனை ப்ளீஸ் பண்ணவில்லை. அண்ணன் வீட்டில் தங்க வேண்டும் என்பது உணரவில்லை. வேற ஒரு வீடும் அவனுக்கு இல்லை. இவன் உக்கிராணக்காரன் வேலையை விட்டு போக சொல்கிறான். அப்பார்ட்மெண்ட்டை காலி பண்ண சொல்கிறான். வீட்டை இருக்கக்கூடாது என்று சொல்கிறான். துரத்துகிறான். என்னை கொத்துவதற்கு பலன் இல்லை. பிச்சை எடுப்பதற்கும் எனக்கு கஷ்டமாக இருக்கிறது. எப்படியாவது ஒரு குறுக்கு வழியில் இந்த வீட்டில் ஏற்றுக்கொள்வார் உண்டாகும்படி செய்வேன்."

இப்ப இந்த உக்கிராணக்காரன் பரலோகத்துக்கு போனால், அவனுக்கு அங்கே ஆஸ்தி இருக்குமா? பரலோகத்துக்கு போனால் அங்கே பரலோகத்தில் சொத்து இருக்குமா? இருக்காது. பரலோகத்தில் அவன் என்னதான் இருப்பான்? அனாதையாய் இருப்பான். அதனால்தான் ஆண்டவர் சொல்கிறார், "அப்பா, நீ பூமியில் இருக்கும்போதே ஊழியக்காரனை உன் வீட்டில் கொடுத்து சாப்பாடு போடு. சாம்ஜோரை வீட்டில் கூட்டு. பிரியாணி போடு. வடை செய்து கொடு." அவர் பரலோகத்துக்கு போகும்போது நீ நைசாக அவர் வீட்டில் வந்து தங்கி..."

ஆண்டவர் சொல்கிறார், "உனக்கு யார் என்ன செய்தாலும் எனக்கே செய்தீர்கள். என் நாமத்தில் வருகிறவனுக்கு ஒரு கலசம் தண்ணீர் கொடுத்தால் கூட, சாம்ஜோதரைக்கு பிரியாணியோ இட்லியோ கொடுத்தால், ஆண்டவர் அதெல்லாம் பார்த்துவிட்டு சும்மா இருப்பாரா? அவர் அநீதி உள்ள தேவன் அல்ல." சரி, பரலோகத்தை இழந்து போயிட்டப்பா. ஆண்டவர் போக வேண்டிய மகிமையை உனக்கு என்று நீ எடுத்துக்கொண்டால், கன மகிமையை நீ தேடினால், பேர் புகழை உண்டாக்கிவிட்டால், ஒன்றும் செய். பரலோகத்தில் ஒன்றும் கிடையாது. காசை கொடுத்து ஏதாவது ஒரு ஆத்துமா ஆதாயம் செய்து, அவர்கள் அங்கே போனால், நீ தலையை சொறிஞ்சிட்டு அவர்களுடைய வீட்டில் போய் தங்கிக்கொள்ளலாம். இல்லையென்றால் பிளாட்பாரம்தான்.

இப்ப புரிந்ததா? இப்ப புரிந்ததா? இன்னும் புரியவில்லையா?

மூன்றாவதாக, பரலோகத்தில் உள்ள அனாதை யார்? அவன்தான் மிஸ்டர் லூசிபர். அவன் ஏற்கனவே அவனுக்கு பரலோக சிட்டிசன்ஷிப், அவன் பெர்மனென்ட் விசா வைத்திருக்கிறான். எப்பனாலும் பரலோகத்துக்கு வருவான் போவான். ஆனால் என்னைக்கு பெருமை அடைந்தானோ, என்னைக்கு ஆண்டவரை ஏத்து நின்னானோ, என்னைக்கு "உன்னதமானவருக்கு ஒப்பாவேன், வடபுறத்தில் உள்ள ஆராதனை பர்வதத்துக்கு ஏறுவேன், கடவுளுக்கு ஒப்பாவேன்" சொன்னவுடனே ஆண்டவர் கீழே தள்ளினார். இப்ப அவனுக்கு பரலோகத்தில் ஒன்றும் கிடையாது. முன்னால் அவனுக்கு உயர்ந்த இடம், அபிஷேகம் பண்ணப்பட்ட, காப்பாற்றுவதற்கு அபிஷேகம் பண்ணப்பட்ட லூசிபர். அக்கினிமயமான வயிறு, ஜொலிக்கிற கற்களின் நடுவிலே உலாவினவன். ஆண்டவர் எல்லா சிட்டிசன்ஷிப்பையும் கேன்சல் பண்ணி, சீல் அடித்து அவனை பாதாளத்துக்குள்ளே தள்ளிவிட்டார். ஒன்று இரண்டு தடவை மேலே வந்து விசிட்டர்ஸ் விசா எடுத்துக்கொண்டு மேலே வந்து யோபை குற்றம் சாட்டிவிட்டு ஓடிருவான். யோபு ஒன்றாம் அதிகாரத்தை வாசித்தால், தேவ புத்திரர்கள் எல்லாம் கூப்பிடும்போது சாத்தான் அங்கே வந்து சேர்ந்தானாம். அவன் யார்? அடையாத விருந்தாளி. திறந்த வீட்டுக்குள் நாய் புகுந்த மாதிரி பரலோகத்துக்குள்ளே அவன் புகுந்து. சகரியா மூன்றாம் அதிகாரம் ஒன்று, இரண்டு, மூன்று வாசித்தால், பிரதான ஆசாரியனை குற்றம் சாட்டுவதற்கு அங்கே போனானாம். அப்ப அப்ப பரலோகத்துக்கு போகிறான். ஆனால் பரலோகத்தில் அவனை ஏற்று யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அவனை தங்க வீட்டில் தங்க வைக்க மாட்டார்கள். "அடப்பாவி, செருப்பு எடு" என்றுதான் சொல்லி அவனை விரட்டுவார்கள். நிலையாக அங்கே தங்க முடியாது. கொஞ்ச நாள்தான் மேலே வந்துட்டு போயிட்டு இருக்கலாமே தவிர, ஆயிரம் வருஷ அரசாட்சிக்கு பிறகு அவன் நித்தியமாக நரகத்தில் தள்ளப்படுவானே தவிர, விசிட் பண்ணவே முடியாது.

அவனைக் குறித்து வெளிப்படுத்தல் 12:11ல் வேதம் சொல்லுகிறது, "இரவும் பகலும் நம்முடைய சகோதரர்கள் மேல் குற்றம் சாட்டும்படி குற்றம் சாட்டப்பட்டவன் தள்ளப்பட்டு போனான்." பாதாளத்தில் தள்ளப்பட்டு போனான். சோ, பரலோகத்தில் அவன் ஒரு அனாதையாக வந்து நிற்பான். கொஞ்ச காலம், என்றென்றைக்கும் அல்ல.

நாலாவதாக, ஒரு கூட்டத்தாரை பார்க்கிறோம். கிரீடத்தை இழந்தவர்கள். வெளிப்படுத்தல் மூன்றாம் அதிகாரம் 11 ஆம் வசனத்தில் ஆண்டவர் சொல்கிறார். வெளிப்படுத்தல் மூன்றாம் அதிகாரம் 11 ஆம் வசனம் இவ்விதமாய் சொல்கிறது, "இதோ, நான் சீக்கிரமாய் வருகிறேன். ஒருவனும் உன் கிரீடத்தை எடுத்துக் கொள்ளாதபடி உனக்குள்ளதைப் பற்றிக்கொண்டு..." உனக்கு என்று ஒரு கிரீடம் இருக்கிறது. உனக்கு என்று ஒரு அபிஷேகம் இருக்கிறது. உனக்கு என்று ஒரு தெரிந்து கொள்ளுதல், உன்னை அழைத்த அழைப்பு இருக்கிறது. சிலரை ராஜாக்களாக, சிலரை ஆசாரியர்களாக, சிலரை தீர்க்கதரிசிகளாக அழைத்திருக்கிறார். புதிய ஏற்பாட்டில் சிலரை அப்போஸ்தலராகவும், சிலரை தீர்க்கதரிசிகளாகவும், மேய்ப்பர்களாகவும், போதகர்களாகவும், சுவிசேஷகர்களாகவும் அபிஷேகம் பண்ணி இருக்கிறார். அந்த அழைப்புதான். உனக்கு ஒரு கிரீடம், உன் சிரசில் ஆண்டவர் ஊற்றி இருக்கிற அந்த அபிஷேகத்தை, உன் அழைப்பை உதறிவிட்டு போகும்போது, ஆண்டவர் எச்சரித்து சொல்கிறார், "நான் சீக்கிரம் வருகிறேன். உன்னுடைய அபிஷேகத்தை இழந்து போகாதே." ஏசாவைப் போல சேஷ்ட புத்திர பாட்டை இழந்து போகாதே. சவுல் ஆண்டவருக்கு கீழ்ப்படியாமை காட்டி அந்த அபிஷேகத்தை இழந்து தேவனால் விடப்பட்ட ஒரு பொல்லாத ஆவி பிடித்தது போல உனக்கு பிடித்துவிடக்கூடாது.

தாவீதினுடைய மூத்த குமாரன் அப்சலோம், தாவீதுக்கு விரோதமாய் எழுந்தபடியால், அவனுக்கு வரவேண்டிய கிரீடம் சாலமோனுக்கு போய்விட்டது. புலம்பல் 5:16ல் எரேமியா அழுது சொல்கிறார், "எங்களுடைய தலையிலிருந்த கிரீடம் விழுந்தது. ஐயோ, நாங்கள் பாவம் செய்தோம்." புலம்பல் 5:16 அப்படி சொல்கிறது. ஆண்டவர் வைத்த இடத்திலே நிலைத்திருக்கணும். அழைத்த அழைப்பிலே நிலைத்திருக்கணும். கர்த்தர் கொடுத்த அபிஷேகத்திலே நிலைத்திருக்கணும். ஆதாம் ஏவாளை ஏதேன் தோட்டத்திலே ஆண்டவர் வைத்தார். பாவம் செய்தபோது அந்த அழைப்பு போச்சு. நிர்வாணம் ஆகிவிட்டார்கள். அவர்களுக்கு வஸ்திரமாய் இருந்த மகிமை அவர்களை விட்டு எடுபட்டுப் போயிற்று. திருப்பி அவர்களால் ஏதேனுக்குள் நுழைய முடியவில்லை. சுடரொளி அட்டைத்து ஆண்டவர் காவல் வைத்துவிட்டார். அவர்கள் இழந்தது இழந்ததுதான். ஒரு அனாதைகளைப் போல வெளியே வந்தார்கள். ஆகவேதான், அழைப்பு என்பது எளிதானது அல்ல.

சிம்சோனை ஆண்டவர் அழைத்தார். ஒரு பலத்தின் அபிஷேகம் அவன் மேல் இருந்தது. அவனை தோற்கடிக்க ஒருவராலும் முடியவில்லை. ஆனால் அவன் வேசிகள் பின்னாலே போய், வேசிகளின் மடிவிலே படுத்து, தனக்கும் ஆண்டவருக்கும் இடையே உடன்படிக்கையாய் இருந்த அந்த தலைமயிர் கத்திரிக்கப்பட்டபோது, அந்த அழைப்பு அவனை விட்டு போச்சு. அதுவரை சூழ்ந்திருந்த கிருபை அவனை விட்டு எடுபட்டுப் போயிற்று. அந்த கிருபை எடுபடும் போதுதான் மற்றவர்களால் வந்து அவனை பிடிக்க முடிந்ததே தவிர, அந்த அழைப்பு தானாக போவதில்லை. அந்த பெலன் போகும்போது அவன் அனாதையைப் போல் ஆகிவிட்டான். அந்த அழைப்பு போகும்போது அவனால் மேற்கொண்டு கிரியை செய்ய முடியவில்லை. அந்த அழைப்பு போனதனால் இஸ்ரவேலை மீண்டும் அரசாள முடியவில்லை. நியாயாதிபதி என்கிற அந்த அழைப்பு அவனை விட்டு போயிட்டது. திருப்பி அவனுக்கு ராஜ்ஜியமோ பலனோ வரவில்லை. ஆனால் அவன் மனம் கசந்து அழுதபோது அழைப்பு வந்தது. ஆனால் கிரீடம் போயிற்று. அபிஷேகம் பண்ணப்பட்டவன் பின்வாங்கிப் போனால், இழந்த ஊழியத்தை திரும்ப பெற முடியாது. இழந்த பரலோகத்தை திரும்ப பெற முடியாது. இழந்த பரலோக சுதந்திரத்தை மீண்டும் பெற முடியாது. அவனை அறியாமலேயே அவனுக்குள்ளே அந்த தலைமயிர் வளர ஆரம்பித்தது. தலைமுடி வளர்வதை பெலிஸ்தியர் பார்க்கவில்லை. தேவனோடு செய்த உடன்படிக்கைக்கு மனம் கசந்து அழுது திரும்பும் போது, அவன் இழந்த பலன் வந்தாலும், அவனுக்கு மீண்டும் கர்த்தருக்காக பெரிய காரியம் அவனால் செய்ய முடியவில்லை. பெலிஸ்தியரை முறியடிக்க முடியவில்லை. பெலிஸ்தியரின் அடிமைத்தனத்தில் இருந்து இஸ்ரவேலரை பாதுகாக்க முடியவில்லை. அவனுடைய அழைப்பையே இழந்து போனான்.

அழைப்பை இழந்து போனார். பல வேளைகளில் அழுது பிரண்டு கிரண்டு ஆண்டவரிடம் வந்துவிட்டாலும், பரலோகத்துக்கு போகும்போது ஒரு அனாதையை போல இருக்க வேண்டி இருக்கும். அனாதையை போல இருக்கும். ஆனால் கடைசி மூச்சு இருக்கிற வரையிலும் ஆண்டவருடைய கிருபை உங்களுக்கு இருக்கும். பாதாளத்திலிருந்து அழுது அழுது கண்ணீரின் ஆவியால் நிரம்பி, தேவனுக்கு விரோதமாக பாவம் செய்து, நெஞ்சில் அடிச்சது போல பாவியாகிய என் மேல் கிருபையாய் இரக்கம் பாராட்டலாம். ஆனால் மறுபடியும் அந்த ஆதி மகிமை கிடைப்பதில்லை. மறுபடியும் அந்த அழைப்பு கிடைப்பதில்லை. பரலோகத்திலே அவர்கள் அனாதைகள் போல இருப்பார்கள்.

இதோடு நான் முடிக்கிறேன். கெட்ட குமாரன் மூலமாக ஒரு பெரிய கருத்து மறைந்திருக்கிறது. எல்லாரும் கெட்ட குமாரனை புகழ்ந்து புகழ்ந்து புழுந்து பேசுறது கேட்டிருக்கிறேன். மூத்த குமாரனைப் பற்றி ஒருவர் கூட ஒரு நல்ல வார்த்தை பேசமாட்டாங்க. ஆனால் மூத்த குமாரன் முதல்ல இருந்து கர்த்தருக்காக உழைத்தவன், பாடுபட்டவன், உலகத்தை அனுபவிக்காமல் வாழ்ந்தவன். ஆகவே வேதம் சொல்லுகிறது, "மகனே, எனக்குரியதெல்லாம் உனக்குரியதாக இருக்கும்." இந்த உலக ஓட்டத்தை முடித்து கர்த்தருடைய ராஜ்ஜியத்துக்கு போகும்போது, கர்த்தர் நம்மை வரவேற்று சந்தோஷமாய் தட்டிக்கொடுத்து, "நல்லது, உண்மை, உத்தம ஊழியக்காரனே, உன்னுடைய எஜமானுடைய சந்தோஷத்துக்குள் பிரவேசி" அந்த நாள்தான் பாக்கியம் உள்ளவர்கள்.

ஆகவே, பரிசுத்தத்தை பாதுகாத்துக் கொள்ளுங்கள். கர்த்தர் அழைத்த அழைப்பிலே நிலைத்திருங்கள். ஒரு நாளும் இயேசு பாடுபட்டு அடிபட்டு நொறுக்கப்பட்டு சம்பாதித்துக் கொடுத்த சுவிசேஷத்தை பணத்துக்கு விட்டு போட்டு விடாதிருங்கள். பேர் புகழுக்கு விற்றுப் போடாதிருங்கள். பெருமைக்கு இடம் கொடுத்து தலைகீழாக விழாதிருங்கள். தாழ்மையோடு நடந்து கொள்ளுங்கள். கர்த்தருக்கு முன்பாக தாழ்மையோடு, விசுவாசிகளுக்கு முன்பாக தாழ்மையோடு, தேவனுடைய பிள்ளைகளுக்கு முன்பாக தாழ்மையோடு நடந்து கொள்ளுங்கள். அப்போது உங்களுடைய ஓட்டத்தை வெற்றியோடு முடிப்பீர்கள். பரலோகத்தில் உள்ள ஒளியில் உள்ள தூதருடைய, ஒளியில் உள்ள பரிசுத்தவான்களுடைய சுதந்திரத்தை பெற்றுக் கொள்வீர்கள். சங்கீதம் 16:11 சொல்லுகிறது, "நேர்த்தியான இடத்தில் எனக்கு பங்கு கிடைத்தது. சிறப்பான சுதந்திரம் எனக்கு உண்டு."