Transcription
[இசை] [இசை] [இசை]
கடந்த வகுப்பிலே வெளிப்படுத்தின விசேஷம் 14 ஆம் அதிகாரத்தில் ஒன்று முதல் ஐந்து வசனங்களை நாம் வாசித்தோம் தியானித்தோம். சீயோன் மலையிலே ஆட்டுக்குட்டியானவரோடு நிற்கிற ஒரு லட்சம் 44000 பேரைக் குறித்து அந்த பகுதியிலே எழுதியிருக்கிறது. அவருடைய தகுதி என்ன? அவருடைய பாபம் என்ன? அவருடைய குணாதிசயம் என்ன? என்றெல்லாம் நாம் அங்கே வாசிக்கிறோம்.
இன்றைக்கு ஆறாம் வசனத்திலிருந்து நாம் தொடர்ந்து முடியும் வரை கர்த்தருக்கு சித்தமானால் தியானிக்கப் போகிறோம். இங்கே ஆறு தேவதூதர்களை நாம் பார்க்கிறோம். இந்த 14 ஆம் அதிகாரத்தில் ஆறாம், ஏழாம் வசனத்திலே முதல் தேவதூதனை, எட்டாம் வசனத்திலே இரண்டாவது தேவதூதனை, ஒன்பது முதல் 12 வசனங்களிலே மூன்றாவது தேவதூதனை, 15, 16 ஆம் வசனங்களிலே நான்காம் தேவதூதனை, 17 ஆம் வசனத்திலே ஐந்தாம் தேவதூதனை, 18 முதல் 20 ஆம் வசனம் வரையிலும் ஆறாவது தேவதூதனை குறித்து நாம் வாசிக்கிறோம்.
முதலாவதாக வெளிப்படுத்தல் 14 ஆம் அதிகாரம் ஆறாம் வசனம்: பின்பு வேறொரு தூதன் வானத்தின் மத்தியிலே பறக்க கண்டேன். 13 அதிகாரங்களில் வராத ஒரு புதிய தேவதூதனைக் குறித்து அப்போஸ்தலனாகிய யோவான் வேறொரு தூதனைக் கண்டேன் என்று சொல்லுகிறார். அவன் வானத்தின் மத்தியிலே பறக்கிறவனாய் இருந்தான். வானம் என்று சொல்லும்போது பல பல வானங்கள். மூன்றாம் வானம் வரைக்கும் பவுல் போனார். சிலர் மூன்று வானம் தான் இருக்கிறது என்று சொல்லுகிறார்கள். ஆனால் ஆண்டவர் வானாதி வானங்களுக்கு மேலாய் இருக்கிறவர். பிதாவுக்குரிய இடம் உண்டு. குமாரனுக்குரிய இடம் உண்டு. ஆவியானவருக்குரிய இடம் உண்டு. கேராபின்கள், சேராபின்களுக்குரிய இடம் உண்டு. பழைய ஏற்பாட்டு பரிசுத்தவான்களுக்குரிய இடம். இரத்த சாட்சிகளுக்குரிய இடம். சீயோன், எருசலேம். புதிய வானம், புதிய பூமி. ஏராளமான இடங்கள் இருக்கிறது. கிருபையின் காலம் வரையிலும் மத்திய ஆகாயத்திலே சத்திய வானத்தில் வானமண்டலத்தில் உள்ள பொல்லாத ஆவிகளின் சேனைகள் இருந்து பூமியை கண்ட்ரோல் பண்ணிக்கொண்டிருக்கிறது. இங்கே அந்திகிறிஸ்துவினுடைய ஆட்சியிலே வானமண்டலத்தில் உள்ள எல்லா ஆவிகளும் பூமிக்கு இறங்கி வந்து அந்திகிறிஸ்துவோடு அரசாட்சி செய்கிறது. அப்பொழுது வானத்தின் மத்தியிலே வேறொரு தூதன் பறக்கக் கண்டேன். அவன் பூமியிலே வாசம் பண்ணுகிற சகல ஜாதிகளுக்கும், கோத்திரத்தாருக்கும், பாஷைக்காரர் ஜனக்கூட்டத்தாருக்கும் எத்தனை கூட்டம் பாருங்க! பூமியில் வாசம் பண்ணுகிற சகல ஜாதிகள், கோத்திரங்கள், பாஷைக்காரர்கள், ஜனக்கூட்டத்தார். நாலு கூட்டத்துக்கும் அறிவிக்கக்கூடிய நித்திய சுவிசேஷத்தை உடையவனாய் இரு.
அந்த தேவதூதன் அறிவிக்கிற ஒரு சுவிசேஷம் நித்திய சுவிசேஷம் என்று அழைக்கப்படுகிறது. நித்திய சுவிசேஷம் என்றால் கடந்த காலத்துக்குரியது, நிகழ்காலத்துக்குரியது, வருங்காலத்துக்குரியது. நித்திய சுவிசேஷம் என்றால் நித்தியமான ஆசீர்வாதங்களை கொடுக்கக்கூடியது. நித்திய சுவிசேஷம். ஆண்டவர் ஒருபோதும் சுவிசேஷத்தை அறிவிப்பதற்கு தேவ தூதர்களை நம்பி இருக்கவே இல்லை. தேவதூதர்களை சார்ந்து இருக்கவே இல்லை. அருமையான தேவனுடைய பிள்ளைகளே, விசேஷம் என்பது நற்செய்தி என்று அர்த்தம். நற்செய்தி என்று அர்த்தம். இயேசுவினுடைய பிறப்பிலே தேவதூதர்கள் நற்செய்தி அறிவித்தது உண்மை. ஆனால் இரட்சிப்பின் நற்செய்தி அவர்கள் அறிவிக்கவில்லை. இதோ சகல ஜனங்களுக்கும் ஒரு நற்செய்தியை நான் அறிவிக்கிறேன். உங்களுக்காக தாவீதின் குமாரன் பிறந்திருக்கிறார். இயேசுவின் இரட்சகர் பிறந்திருக்கிறார் சொல்லிவிட்டு அவர்கள் போய்விட்டார்கள். அதிலிருந்து நற்செய்தியை இயேசு கிறிஸ்து இந்த பூமியில் அறிவித்தார். சுவிசேஷத்தை அறிவித்தார். இதோ கர்த்தருடைய ஆவியானவர் என்மேல் இருக்கிறார். சிறுமைப்பட்டவர்களுக்கு சுவிசேஷத்தை அறிவிக்க கர்த்தர் என்னை அபிஷேகம் பண்ணினார். இயேசு சுவிசேஷத்தை அறிவித்தார். இயேசுவுக்கு பிறகு உயிர்த்தெழுதலுக்கு பிறகு சீஷர்கள் சுவிசேஷத்தை அறிவித்தார்கள். அந்த சுவிசேஷம் இயேசுவின் சிலுவையோடு, அவருடைய அடக்கம் பண்ணுதலோடு, அவருடைய உயிர்த்தெழுதலோடு இணைந்திருக்கிறது. அந்த சுவிசேஷம் பாவ மன்னிப்பை கொண்டு வருகிறது. இரட்சிப்பின் சந்தோஷத்தை கொண்டு வருகிறது. பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தை கொண்டு வருகிறது.
ஆண்டவராகிய இயேசு பரலோகத்துக்கு எடுத்துக் கொள்ளப்படுவதற்கு முன்பாக சீஷர்களை அழைத்து மத்தேயு 28 ஆம் அதிகாரம் 18 லிருந்து 20 வரை சொன்னார். சகல சிருஷ்டிகளுக்கும் சுவிசேஷத்தை அறிவித்து, பிதா, குமாரன், பரிசுத்த ஆவியின் நாமத்தில் அவர்களுக்கு ஞானஸ்தானம் கொடுத்து, நான் உங்களுக்கு கட்டளை கட்டளையிட்ட எல்லாவற்றையும் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள் என்று சொன்னார். சீஷர்கள் எங்கும் திறந்து தெரிந்து சுவிசேஷத்தை பிரசங்கம் பண்ணினார்கள். அப்போஸ்தலர் 16:20 சொல்லுகிறது. கிறிஸ்து அவர்களோடு கூட நடந்து, அவர்களோடு கூட கிரியை நடப்பித்து, சீஷர்கள் பிரசங்கித்த அந்த வார்த்தையை அற்புதங்களாக அடையாளங்களினாலும் ஆண்டவர் தாமே உறுதிப்படுத்தினார் என்று வேதம் சொல்லுகிறது.
முதலிலே சுவிசேஷம் இஸ்ரவேலருக்கு மட்டும்தான் போனது. ஆனால் அப்போஸ்தலர் பத்தாம் அதிகாரத்திலிருந்து கொர்நேலி என்று சொல்லப்படுகிற ரோம பட்டாளத்தில் இருந்த நூற்றுக்கு அதிபர் வீட்டிலிருந்து சுவிசேஷம் முதல் முறை புறஜாதியாருக்கு சென்றது. அருமையான தேவனுடைய பிள்ளைகளே, இந்த புறஜாதியாருக்கு சொல்லுகிறதை பார்க்கும்போது முதலாவது ஒரு தேவதூதன் வந்தான். அவன் கொரிநேலைக்கு சுவிசேஷத்தை அறிவிக்கல்ல. அவன் சொன்னான் உன்னுடைய தான தர்மம், உன்னுடைய ஜெபம் பரலோகத்துக்கு ஏறெடுக்கப்பட்டது. ஆனால் இது போதாது. இன்னும் ஆழமான காரியத்தை நீ அறிந்து கொள்ளனும். சுவிசேஷத்தின் பூரணத்தை அறிந்து கொள்ளனும். ஆகவே யோப்பா பட்டணத்துக்கு ஆள் அனுப்பி சீமோன் பேதுரு, சீமோன் என்கிற தோல் பதிந்த அவன் வீட்டில் இருக்கிறான். அவனை அழைப்பி இந்த தேவதூதன் எங்கு சொல்லிட்டு நேரா பேதுருடைய தங்கியிருந்த யோப்பா பட்டணத்துக்கு போனான். கொர்நேலியோ பற்றி அவன் சொன்னான். நீ புறப்பட்டு அங்க போ. பயப்படாதே. சுவிசேஷம் புறஜாதியா இருக்க போகணும். தேவதூதனே சுவிசேஷத்தை அறிவித்திருக்கலாம். ஆனால் ஆண்டவர் தேவதூதன் மூலமாக அந்த சுவிசேஷத்தை அறிவிக்க பிரியப்படவில்லை. பேதுரு மூலமாக தான் சுவிசேஷம் அறிவிக்கப்படனும். அதே இதை பேதுரு எழுதுகிறார். பேதுரு ஒன்னு பேதுரு 1:12ல தேவதூதர்களும் கூட இந்த சுவிசேஷத்தின் மகிமையை உற்றுப் பார்க்க ஆவலாய் இருக்கிறார்கள். தேவதூதர்களை நம்பி ஆண்டவர் தம்முடைய சுவிசேஷத்தை கொடுக்கவில்லை. சாதாரண மனுஷர்கள், பேதமையான மனுஷர்கள், மீன் பிடிக்கிற மனுஷர்கள் அவர்களை நம்பி அந்த சுவிசேஷத்தை ஆண்டவர் கொடுத்தார். உங்களை என்னையும் நம்பி இந்த சுவிசேஷத்தை உங்கள் கைகளில் கொடுத்திருக்கிறார். இந்த சுவிசேஷம் நரகத்துக்கு போகிற ஒரு மனுஷனை திருப்பி பரலோக பாதையிலே கொண்டுவரக்கூடியது. இந்த சுவிசேஷம் பாவியை மனம் திரும்பும்படி செய்கிறது. இந்த சுவிசேஷம் சத்தியத்தை குறித்தும், நியாய நியாயம் தீர்ப்பை குறித்தும், நீதியை குறித்தும் கண்டித்து உணர்த்துகிறதாய் இருக்கிறது.
அப்போஸ்தலனாகிய பவுல் சொல்லுகிறார். இந்த சுவிசேஷத்தை நான் பிரசங்கியாதி இருந்தாலும் எனக்கு ஐயோ. அது என்மேல் விழுந்த கடமையாய் இருக்கிறது. எத்தனையோ முறை வாரினால் அடிக்கப்பட்டும், மிலாறுகளினால் அடிக்கப்பட்டும், பசி, நாசமோசம், நிர்வாணம், பசி, பஞ்சம், பட்டினியா இருந்தாலும் அவர் அந்த சுவிசேஷத்தை அறிவித்தார். சுவிசேஷம் தேவனுடைய பிள்ளைகளுக்கு தேவ பலனாய் இருக்கிறது. சிலுவையின் உபதேசம் ஆனாலும், கர்த்தருடைய சுவிசேஷம் ஆனாலும் கெட்டுப்போகிறவர்களுக்கு அது பைத்தியமாய் இருந்தாலும் தேவ ஜனங்களுக்கு அது தேவனுடைய பலனாய் இருக்கிறது. ஆகவே திமோத்தேக்கு அவர் எழுதும்போது சொன்னார். சமயம் வாய்த்தாலும் சரி, வாய்க்காவிட்டாலும் சரி, சுவிசேஷத்தை ஜாக்கிரதையாய் பிரசங்கம் பண்ணு.
ஏன் இங்கே தூதனைக் கொண்டு ஆண்டவர் சுவிசேஷத்தை அறிவிக்கிறார்? அதுவும் நித்திய சுவிசேஷத்தை அறிவிக்கிறார். இந்த காலம் பரிசுத்தவான்கள் எடுத்துக்கொள்ளப்பட்ட காலம். சுவிசேஷத்தை அறிவிக்க பூமியில் ஊழியக்காரர்கள் இல்லை. எல்லாரும் கர்த்தருடைய வருகைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டார்கள். மத்தேயு 24:14 சொல்லுகிறது. ராஜ்ஜியத்தின் இந்த சுவிசேஷம் சகல ஜனங்களுக்கும் சாட்சியாக அறிவிக்கப்படும். அப்பொழுது முடிவு வரும். இந்த முடிவு வந்துவிட்டது. தேவ ஜனங்கள் எடுத்துக்கொள்ளப்பட்டார்கள். சுவிசேஷர்கள் எடுத்துக்கொள்ளப்பட்டார்கள். பரிசுத்தவான்கள் எடுத்துக்கொள்ளப்பட்டார்கள். இப்போது கைவிடப்பட்ட உலகத்துக்கு சுவிசேஷத்தை அறிவிக்க தேவதூதனைத் தவிர வேறு வழி இல்லை. ஆகவே ஆண்டவர் தம்முடைய தேவதூதர்களிலே ஆயிரம், பதினாயிரம் தேவதூதர்களில் ஒருவனை அவர் அனுப்பினார்.
வேதம் மீண்டும் வாசிக்கிறேன். ஆறாம் வசனம்: பின்பு வேறொரு தூதன் வானத்தின் மத்தியிலே பறக்கக் கண்டேன். அவன் பூமியிலே வாசம் பண்ணுகிற சகல ஜனங்களுக்கும், கோத்திரத்தாருக்கும், பாஷைக்காரருக்கும், ஜனக்கூட்டத்தாருக்கும் அறிவிக்கத்தக்க நித்திய சுவிசேஷத்தை உடையவனாய் இருந்து. அந்த நித்திய சுவிசேஷம் என்ன சொல்லுகிறது? ஏழாம் வசனம்: மிகுந்த சத்தமிட்டு தேவனுக்கு பயந்து அவரை மகிமைப்படுத்துங்கள். அவர் நியாயத்தீர்ப்பு கொடுக்கும் வேளை வந்தது. வானத்தையும் பூமியையும் சமுத்திரத்தையும் நீரூற்றுகளையும் உண்டாக்கினவரையே தொழுது கொள்ளுங்கள். அந்திகிறிஸ்துவை தொழுது கொள்ளாதிருங்கள். விக்கிரகங்களைத் தொழுது கொள்ளாதிருங்கள். உம்முடைய ஜெபத்துக்கு பதிலளிக்க திராணியற்றவைகளை தொழுது கொள்ளாதிருங்கள். உங்களை உருவாக்கினவர் வானத்தையும் பூமியையும் உண்டாக்கின கர்த்தரையே தொழுது கொள்ளுங்கள். கர்த்தரையே தொழுது கொள்ளுங்கள். அருமையான தேவனுடைய பிள்ளைகளே, அதுதான் வேதத்தின் முதல் பகுதியிலிருந்து கடைசி வரை. ஆதியிலே தேவன் வானத்தையும் பூமியையும் உண்டாக்கினார். அவரையே தொழுது கொள்ளுங்கள். சூரியன், சந்திரன், நட்சத்திரங்களை உருவாக்கின அவரையே தொழுது கொள்ளுங்கள். உங்களை சிருஷ்டிப்பதற்கு முன்பாக உங்களுக்கு என்னென்ன தேவை என்பதை சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள், கனி வர்க்கங்கள், மலர்கள், நீந்துகிற மீன்கள், பறவைகள், எல்லா காட்டு மிருகங்களையும் உண்டாக்கின அவரையே தொழுது கொள்ளுங்கள். உங்களை தாயின் வயிற்றிலே உருவாக்கினவர். இந்த பூமியில் வாழ உங்களுக்கு ஒரு வாய்ப்பு தந்தவர். அவரையே தொழுது கொள்ளுங்கள். இதுதான் முதல் தூதனுடைய செய்தி.
எட்டாம் வசனத்துக்கு நாம் வருகிறோம். அங்கே இரண்டாவது தூதனை குறித்து சொல்லியிருக்கிறது. வேறொரு தூதன் பின் சென்று பாபிலோன் மகா நகரம் விழுந்தது, விழுந்தது. தன் வேசித்தனமாகிய உக்கிரமான மதுவை சகல ஜாதிகளுக்கும் குடிக்க கொடுத்தாளே என்றார். இந்த மகா பாபிலோனை குறித்து விளக்கமாக வெளிப்படுத்தல் 17 ஆம் அதிகாரத்திலும் 18 ஆம் அதிகாரத்திலும் நாம் வாசிக்கலாம். ஒரு அடிப்படை சத்தியத்தை சொல்ல விரும்புகிறேன். வேதம் முழுவதும் ரெண்டு பட்டணங்கள் மேல் கட்டப்பட்டு எழுப்பப்பட்டிருக்கிறது. ஒரு பட்டணம் எருசலேம். அடுத்த பட்டணம் பாபிலோன். எருசலேம் என்றால் சமாதானத்தின் நகரம் என்று அர்த்தம். பாபிலோன் என்றால் குழப்பம், தாறுமாறு என்று அர்த்தம். கர்த்தர் எருசலேமை நேசித்து தன்னுடைய வாசஸ்தலமாய் தெரிந்து கொண்டார். சாத்தான் பாபிலோனை குழப்பத்தின் நகரத்தை, தாறுமாறுகளின் நகரத்தை தனக்கென்று அவன் தெரிந்து கொண்டான். இரண்டு நகரங்களுக்கும் இடையே ஏறக்குறைய 400 கிலோமீட்டர்.
இந்த பாபிலோனை முதல் முதல்ல கட்டினவனுடைய பெயர் நிம்ரோத். ஆதியிலே அவன் ஒரு வேட்டைக்காரனாய் இருந்தான். பிறகு அவனுடைய எண்ணம் வானலா. தனக்கு ஒரு கோயிலைக் கட்ட வேண்டும். வானலாவ ஒரு கோபுரத்தைக் கட்டி தனக்கு பேர் உண்டாக்க வேண்டும். ஆகவே அவன்தான் முதல் முறையாக பாபிலோனுக்கு அஸ்திபாரமிட்டார். அப்பொழுது பாபிலோன் என்ற பெயர் இல்லை. பாபேல் என்ற பெயர். பாபேல் என்ற பெயரும் பாபிலோன் என்ற பெயரும் ஒன்றுதான். அவனுடைய மனைவி செமிராமிஸ் என்று அழைக்கப்படுகிறது. நிம்ரா தான் சூரிய கடவுள் என்று அவனை கடவுளாக்கினார். ஆகவே விக்கிரக வழிபாடு இந்த பாபிலோனிலிருந்து பாபேலில் இருந்து ஆரம்பமானது. எப்போதும் எருசலேமுக்கும் பாபிலோனுக்கும் உள்ளூர போகும். வானத்திலே எருசலேமுக்கும் பாபிலோனுக்கும் வானத்திலே போகும். பாபேல் குழப்பம். சமாதானம் மேற்கொள்ள முயற்சிக்கிறது. சமாதானத்தின் நகரமாகிய எருசலேம் குழப்பத்தை மேற்கொள்ள முயற்சிக்கிறது. பாவி நாட்களில் அவனுடைய சாம்ராஜ்யம் பாபிலோன் வரையிலும் இருந்தது. ஆனால் நேபுகாத் நேச்சர் ஆட்சியிலே அவன் இஸ்ரவேலுக்கு விரோதமாய் படையெடுத்து வந்து அங்கே இருந்த ரெண்டு கோத்திரங்களை சிறைப்பிடித்துக் கொண்டு போய்விட்டான். உள்ளூரப் போர். எருசலேமில் இருக்கிற தேவாலயத்தைப் போலவே நேபுகாத் நேச்சார் பாபிலோனில் ஒரு ஆலயத்தை கட்ட நினைத்தான். அதற்கும் பரிசுத்த ஸ்தலம் வைத்தான். வெளிப்பிரகாரத்தை வைத்தான். மகா பரிசுத்த ஸ்தலத்தை வைத்தான். ரெண்டும் பார்ப்பதற்கு ஒன்றுபோல இருக்கும்படி சாலமோன் எப்படி மகிமையான தேவாலயத்தை கட்டினானோ அதேபோல வரலாற்றில் பார்க்கும்போது நேபகாத் நேச்சரும் அதேபோல ஆலயத்தை கட்டினார். ஆனால் ஒரே ஒரு வித்தியாசம். எருசலேமில் இருந்த தேவாலயத்திலே பாவ மன்னிப்புக்காக ஆட்டுக்குட்டியின் இரத்தம் இருந்தது. பாபிலோனிலே கட்டப்பட்ட ஆலயத்திலே அங்கே இரத்தம் இருக்கவில்லை.
இன்றைக்கு உலகத்தில் ஆயிரக்கணக்கான மதங்கள், மார்க்கங்கள் இருக்கின்றன. ஆனால் கிறிஸ்தவ மார்க்கத்தில் மட்டும்தான் நமக்காக பலியான தேவகுமாரனாக ஆகிய தேவ ஆட்டுக்குட்டியானவரை பார்க்கிறோம். இந்த கிறிஸ்துவ மார்க்கத்தில் மட்டும்தான் நமக்காக அவர் சிந்திக்கொடுத்த விலையேறப்பெற்ற மாசற்ற இரத்தத்தை பார்க்கிறோம். இந்த மாசற்ற இரத்தம் உலகத்தில் உள்ள எந்த மதத்திலும், மார்க்கத்திலும் இறக்கவில்லை. நேபுகாத் நேச்சார் அப்படி பாபிலோனிலே ஆலயத்திலே கட்டி அதில் விக்கிரகங்களை கொண்டு கொண்டு கொண்டு வைத்துக் கொண்டிருந்தான். குழப்பத்தின் மேல் குழப்பம் கொண்டு வந்து கொண்டே இருந்தான். கடைசியில் அவனுடைய மூளையே குழப்பம் அடைந்தது. ஏழு வருஷம் அவன் பைத்தியக்காரனைப் போல இறந்தான். அருமையான தேவனுடைய பிள்ளைகளே, இந்த இருபதாம் நூற்றாண்டிலே நிம்ரோத் உண்டாக்கின அந்த பாபியலை உயிர்ப்பிக்க வேண்டும். நேபுகாத் நேச்சார் தன்னுடைய காலத்திலே பொற்காலமாய் கொண்டுவந்த அந்த பாபிலோன் ஆட்சியை மறுபடியும் கொண்டுவர வேண்டும் என்று சதாம் முயற்சித்தார். இப்போது அந்த பட்டணம் பாபேல் என்று அல்ல, பாபிலோன் என்று அல்ல, அதைத் தழுவி பாக்தாக் என்று அழைக்கப்படுகிறது. பாபேல் தான் பாபிலோன் ஆனது. இன்றைக்கு ஈராக்கின் தலைநகராக பாக்தாக் என்ற பட்டணம். பாக்தாத் என்றாலும் குழப்பம், வெறுமை, தாறுமாறு என்றுதான் அர்த்தம். அவன் எவ்வளவோ அதை கட்டி எழுப்ப முயற்சித்தான். தன்னை நேபுகாத் நேச்சாரின் அவதாரம், பாபிலோன் சாம்ராஜ்யத்தின் மறுமலர்ச்சியை கொண்டுவரப்போகிறேன். ஆனால் அவனோ அமெரிக்காவோடு யுத்தம் செய்து தோல்வி அடைந்து கடைசியிலே பரிதாபமாய் தூக்கிலே தொங்க வேண்டிய நிலைமை ஏற்பட்டது. அந்திகிறிஸ்துவினுடைய ஆட்சியிலே அவன் இந்த பாபிலோன் என்ற மதத்தை அவன் திரும்பக் கொண்டு வருவான். அதற்கு அவன் பயன்படுத்துகிற ஆள்தான் கள்ள தீர்க்கதரிசி. அந்த பாபிலோனில் வைக்கப்படுகிற விக்கிரகம் அந்திகிறிஸ்து உடைய விக்கிரகமாய் இருக்கும். அவருடைய சொரூபமாய் இருக்கும். அதை வணங்கும்படி அவன் கட்டாயப்படுத்தப்படுவான்.
இன்றைக்கும் தேவனுடைய பிள்ளைகளுக்கு விரோதமாக பாபிலோனின் ஆவிகள் கிரியை செய்கிறது. அநேக குடும்பங்களில் சமாதானத்தை கெடுத்து கொண்டு வருகிற அந்த ஆவி கிரியை செய்கிறது. குழப்பம் குடும்பத்தில். குழப்பம் குடும்பத்தில் தாறுமாறு. தேவ சமாதானம் இல்லை. உங்களுக்குள்ளே எருசலேம் இருக்கும் என்றால் உங்களுக்குள்ளே மகிமை நம்பிக்கையாக இயேசு வாசம் பண்ணுவார். அவர் சமாதான பிரபு என்று கொலோசியர் 1:27, ஏசாயா 9:6 வசனங்களில் நாம் வாசிக்கிறோம். பரிசுத்த ஆவியானவரும் நமக்குள்ளே சமாதானத்தை கொண்டு வருவார். அது எல்லா புத்திக்கும் மேலான தேவ சமாதானம். ஏசாயா 26:3லே சொல்லுகிறது. உம்மை உறுதியாய் பற்றிக்கொண்ட மனதை உடையவன் உம்மையே நம்பி இருக்கிறபடியால் அவனை பூரண சமாதானத்தோடு காத்துக் கொள்வீர்.
இந்த இரண்டாவது தேவதூதன் வந்து என்ன சொல்லுகிறான்? எட்டாம் வசனத்தை மறுபடியும் வாசிக்கிறேன்: வேறொரு தூதன் பின் சென்று பாபிலோன் மகா நகரம் விழுந்தது, விழுந்தது. தன் வேசித்தனமாகிய உக்கிரமான மதுவை சகல ஜாதிகளுக்கும் குடிக்க கொடுத்தாலே. விக்கிரக ஆராதனை ஒரு மதுவைப் போன்று. மதமும் ஒரு ஒரு மதுவைப் போன்று. ஒரிசாவிலே இந்த மதத்துக்கு மதவெறி பிடித்து எவ்வளவு கிறிஸ்தவர்களை நிர்மூலமாக்கி கொன்றார். காரணம் அது ஒரு அந்திகிறிஸ்துவினுடைய ஆவி. அது ஒரு கொலைவெரியின் ஆவி. பரிசுத்தவான்களுக்காக விரோதமாக எழும்புகிற ஆவி.
சரி, ஒன்பதாம் வசனத்திலே மூன்றாம் தேவதூதனை குறித்து நாம் வாசிக்கிறோம். ஒன்பதாம் வசனம்: அவர்களுக்குப் பின்னே மூன்றாம் தூதன் வந்து மிகுந்த சத்தமிட்டு, மிருகத்தையும் அதன் சொரூபத்தையும் வணங்கி, தன் நெற்றிலாவது தன் கையிலாவது அதன் முத்திரையை தரித்துக் கொள்கிறவன் எவனோ, அவன் தேவனுடைய கோபாக்கினையாகிய பாத்திரத்திலே கலப்பில்லாமல் வார்க்கப்பட்ட அவருடைய உக்கிரமாகிய மதுவை குடித்து, பரிசுத்த தூதர்களுக்கு முன்பாகவும், ஆட்டுக்குட்டியானவருக்கு முன்பாகவும் அக்கினியாலும் கந்தகத்தினாலும் வாதிக்கப்படுவார்கள்.
ஒரு பக்கத்திலே அந்திகிறிஸ்து. ஒரு பக்கத்திலே தேவதூதன். அந்திகிறிஸ்து சொல்லுகிறான். என்னுடைய முத்திரையை தரிக்கலன்னா, என் சொரூபத்தை வணங்காமல் போனால் ஒரு பொருளையும் நீங்க வாங்க முடியாது, விற்கவும் முடியாது. உங்க நெற்றியில் அந்த அடையாளத்தை வாங்கிக் கொள்ளுங்கள். உங்களுடைய கைகளை நீங்க வாங்கிக்கொள்ளுங்கள். நீங்க அந்த விக்கிரகத்தை வணங்கணும். இப்போ நம்ம டெலிவிஷன்ல நாம தான் டெலிவிஷன் பார்த்துட்டு இருக்கிறோம். டெலிவிஷன் நம்மை பார்க்கிறது இல்லை. டெலிவிஷன்ல அந்திகிறிஸ்து உடைய உருவம் வரும்போது ஜனங்கள் எல்லாரும் அவனை வணங்கணும். யார் வணங்கலையோ அவங்களை டெலிவிஷன் பார்த்து ரிப்போர்ட் பண்ணும். இன்றைக்கு இன்னும் அந்த கண்டுபிடிப்பு பரவாயில்லை. ஆனால் விரைவாய் வருகிறது. இன்னைக்கு இன்டர்நெட்ல டெலிபோன்ல பேசுறது போல பேசுறோம். தூரத்தில் இருக்கிற என் மகன் ஆஸ்திரேலியாவில் அவருடைய படம் அந்த இன்டர்நெட்ல வருது. டாடி எப்படி இருக்கிறீங்க? நான் செய்யற ஒவ்வொன்னையும் அவ கவனிக்கிறார். நல்லா இருக்கிறேன்மா. ஏன் டாடி உங்க முகம் வாடி போயிருக்கு? நான் டயர்டா இருக்கிறேன். வெளியெல்லாம் போயிட்டு வந்தேன். அவா அந்த டிவியில், அந்த இன்டர்நெட்ல என் முகத்தை பார்க்கிறாள். அதுபோல கடைசி நாட்களில் காலை 6:00 மணிக்கு டிவி எல்லாரும் கண்டிப்பா போடணும். அங்க அந்த விக்கிரம் வரும். அந்த சொரூபம் வரும். அந்திகிறிஸ்து வருவான். அதை எல்லாரும் வணங்கணும். இல்ல பயங்கரமான ஆபத்து. ஆனா அதே நேரத்தில் ஆண்டவர் சொல்றார். நீ அந்த விக்கிரகத்தை வணங்காத. அவன் சர்வாதிகாரி ஆச்சே. அவனுடைய ஆளுகைக்குள்ள எல்லாம் இருக்குது. பலுசர்ப்பம் ஆளுகிறது. அந்திகிறிஸ்துவாகிய மிருகம் ஆளுகிறது. கள்ள தீர்க்கதரிசி ஆளுகிறான். அவனுடைய பார்வையிலிருந்து தப்பவே முடியாது. இது என்ன ஆனாலும் பரவாயில்லை. அதை வணங்காத.
ஜனங்கள் ரெண்டு கொள்ளிகளுக்கு நடுவில் ஒரு எறும்பு இருக்கு வச்சுக்கோங்க. இந்த பக்கம் போனாலும் சூடும் சாகடிக்கும். இந்த பக்கம் போனாலும் அந்த நெருப்பு அந்த எறும்பை சாகடிக்கும். உரலுக்கு ஒரு பக்கம் இடி, மத்தளத்துக்கு ரெண்டு பக்கம் இடின்னு சொல்லுவாங்க. அந்திகிறிஸ்து சார முடியல. கிறிஸ்துவாலும் புறக்கணிக்கப்பட்டு இந்த ஏழு வருஷ உபத்திரவ காலத்தில் சிக்கிக் கொண்டவர்கள் என்ன செய்வது என்று அவர்களுக்கு தெரியாது. நீங்க யாரை பின்பற்ற போறீங்க? அந்திகிறிஸ்துவையா அல்லது தேவனையா? ஒரு பெரிய கேள்வி.
நாம் இந்த உலகத்தில் வாழுகிறது 70 வருஷம். பலத்தின் மிகுதியால் 80 வருஷம் என்று சங்கீதம் 90ல மோசே பக்தன் சொல்லுகிறார். 70 வருஷம்.
80 வருஷம் அவ்வளவுதான். அந்த அந்திகிறிஸ்து ஆட்சி நடக்கிறது. என்னென்னைக்கும் நடக்கப்போறது இல்ல. ஏழு வருஷம் மட்டும்தான். ஆனா அந்த ஏழு வருஷத்தில் அந்திகிறிஸ்து முத்திரையை தரிக்காமல் இருந்தால் நித்தியாக்கினைக்கு தப்புவிக்கப்படலாம். கோடி கோடி கோடி வருஷங்கள் நரகக் கடல்ல விழாதபடி பாதுகாத்துக் கொள்ளலாம். இன்றைக்கு அவர்கள் முடிவெடுக்க வேண்டும். கிறிஸ்து வேணுமா? அந்திகிறிஸ்து வேணுமா?
எலியா சொன்னார், "பாகால் தேவன் கர்த்தர் தெய்வமா? ரெண்டு நினைவுகளினால் நீங்க குந்தி குந்தி நடந்து கொண்டிருக்க முடியாது. அனலும் இல்லாமல் குளிரும் இல்லாமல் ஜீவித்துக் கொண்டிருக்க முடியாது." முதுகெலும்பு இல்லாத கிறிஸ்தவர்களைப் போல கர்த்தருக்காக வைராக்கியமாய் நிற்க முடியாமல் அவர்கள் தவிப்பார்கள்.
அருமையான தேவனுடைய பிள்ளைகளே, பலமுறை சுவகாசிக்கு, விருதுநகருக்கு ஊழியத்துக்கு, இருக்கு சாத்தூருக்கு ஊழியத்துக்கு போனா சிலர் ரொம்ப பெருமையா, "பிரதர், நாங்க சீக்ரெட் கிறிஸ்டியன்ஸ்." சீக்ரெட் கிறிஸ்டியன்ஸ்னா என்ன அர்த்தம்? "அந்த மிருகத்தின் முத்திரையை பொட்டு நெத்தில வச்சுக்குவோம். திருநீரையும் பூசிக்கும். இந்து மார்க்கத்தில் உள்ள சகல நன்மையும் நாங்கள் அனுபவிப்போம். கிறிஸ்தவ மார்க்கத்தில் உள்ள சகல நன்மையும் அனுபவிப்போம்." சீக்ரெட் கிறிஸ்டியன்ஸ்னா ஒரு வருஷம், இரு ரெண்டு வருஷம், 30 வருஷமா? சீக்ரெட் கிறிஸ்டியன்ஸ் ஊரை ஏமாத்திக்கிட்டே இருக்கிறோம். அவங்க எல்லாம் வவ்வால் ஜாதின்னு தான் சொல்லணும். வவ்வால் அப்படித்தான். பறவையை பார்த்தா நான் பறவைன்னு சொல்லுமாம். மிருகத்தை பார்த்தா நான் குட்டி போட்டு பால் கொடுக்கிறேன் உங்க சாதின்னு சொல்லுமாம்.
இன்கம் டாக்ஸ் டிபார்ட்மெண்ட்ல வேலை செய்யும்போது நிறைய ரகசிய சொல்லும்பாங்க. இந்து கோட்டாவுல தான் ஆபீஸ்குள்ள நுழைஞ்சிருக்கும் இருப்பாங்க. ப்ரொமோஷனுக்கு எல்லாம் இந்து பேர். ஆனா சர்ச்சுக்கு வந்தாங்கன்னா அப்படியே ஆவியில் நிறைவாங்க.
அருமையான தேவனுடைய பிள்ளைகளே, அந்திகிறிஸ்து சொன்னா, "உன்னை பின்பற்று. அவனுடைய அவனுடைய அவனுடைய நாமத்தை தரிசி." ஆண்டவர் தெய்வமானால் அவரை பின்பற்று. சாது சுந்தர்சிங் இருக்கும்போது ஒரு இரவு நேரத்தில் ஒரு பிராமணன் அவரை பார்க்க வந்தார். அவர் கேட்டார், "நான் சாயங்காலத்துல இந்த இடத்துல பேசினேன். பப்ளிக் மீட்டிங் திரளான ஜனங்கள் வந்தீங்களே. நீ ஏன் வரல?" அவர் சொன்னார், "நான் ஒரு சீக்ரெட் கிறிஸ்டியன்." சீக்ரெட் கிறிஸ்டியன்? இயேசுநாதர் உனக்காக சீக்ரெட்டா மரிக்கலப்பா. வெளியரங்கமா பப்ளிக்கா எல்லார் முன்னால நிர்வாண கோலமா முள் சூட்டப்பட்டு இரத்தம் சிந்தினார். அவரை நீ ஏற்றுக்கொள்ள நீ ஏன் பயப்படுற? பழைய ஆதி அப்போஸ்தலன் நாட்களில் எவ்வளவு பேர் இரத்த சாட்சிகளாக மரித்தார். உனக்கு இயேசுவுடைய நன்மை தரணும் ஆனால் அவரை அறிக்கை பண்ண மாட்டேன்.
அருமையான தேவனுடைய பிள்ளைகளே, மத்தேயு பத்தாம் அதிகாரத்தில் 32, 33 ஆம் வசனத்தில் ஆண்டவர் சொன்னார், "மனுஷருக்கு முன்பு என்னை அறிக்கையிட வெட்கப்படுகிறவன் எவனோ அவனைக் குறித்து மனுஷகுமாரன் தம்முடைய மகிமையோடு வரும்போது வெட்கப்படுவார்." வெட்கப்படுவார்.
ஆண்டவர் இந்த இடத்தில் ஒரு சவால் வைக்கிறார். நீ அந்திகிறிஸ்து உடைய விக்கிரகத்தை நீ கும்பிடுவாய் என்றால் நான் மறுபடியும் அந்த வசனத்தை வாசிக்கிறேன். "அவர்களுக்குப் பின்னே மூன்றாம் தூதன் வந்து மிகுந்த சத்தமிட்டு, மிருகத்தையும் அதன் சொரூபத்தையும் வணங்கி தன் நெற்றியிலாவது தன் கைகளிலாவது அதன் முத்திரையை தரித்துக் கொள்ளுகிறவன் எவனோ அவன் தேவனுடைய கோபாக்கினையாகிய பாத்திரம்." ஆண்டவர் கையில் ஒரு பாத்திரம் இருக்கிறது. அதுல அவர் கோபாக்கினையை நிரப்பி வைத்திருக்கிறாராம். கலப்பில்லாமல் வார்க்கப்பட்ட அவருடைய உக்கிரமாகிய மதுவை குடித்து அது தண்ணி ஊத்தி டைல்யூட் பண்ணல. பால்ல தண்ணிய ஊத்தி டைல்யூட் பண்ணிறாங்க. நான் பிளைட்ல போகும்போது குடிகாரங்க எல்லாம் உட்கார்ந்து இருப்பாங்க. குடி வகைகளை ஆர்டர் பண்ணி டைரக்டா அந்த மதுவை குடிக்க மாட்டாங்க. ஏன்னா ரொம்ப கான்சென்ட்ரேட்டரா இருக்கும். நுரையீரல் பொத்துப்போகும். குடல் அவிஞ்சு போய் ஓட்டாயிரும். அதை அவங்க டைல்யூட் பண்றதுக்கு சோடாவை ஊத்து. கொஞ்சம் கொஞ்சமா குடிச்சிட்டு இருப்பாங்க. ஆனா ஆண்டவர் அந்த விக்கிரகத்தை வழிபடுகிறவன் தேவனுடைய பாத்திரமாகிய கோபாக்கினை அல்ல தான் ஆசிட், அமிலம், விஷம், நல்ல பாம்பு விஷம், கொள்ளிவாய் பிசாசு உடைய விஷம், கொள்ளிவாய் சர்ப்பத்தின் விஷம் அவ்வளவு ஊத்தி குடின்னு சொல்லுவார். என்ன பயங்கரமான ஒரு தண்டனையா இருக்கும். எந்த விக்கிர ஆராதனை தேவன் அவ்வளவாய் வெறுக்கிறார்.
"அவன் தேவனுடைய கோபாக்கினையாகிய பாத்திரத்திலே கலப்பில்லாமல் வார்க்கப்பட்ட அவருடைய உக்கிரமாகிய மதுவைக் குடித்து, பரிசுத்த தூதர்களுக்கு முன்பாகவும் ஆட்டுக்குட்டியானவருக்கு முன்பாகவும் அக்கினியாலும் கந்தகத்தினாலும் வாதிக்கப்படுவான்." ஆண்டவர் வாதிக்க உபயோகப்படுத்துற ஒன்னு அக்கினியும் கந்தகமும். வெளிப்படுத்தல் 21:8-ல் "அக்கினியும் கந்தகமும் நிறைந்திருக்கிற இரண்டாம் மரணமாகிய அந்த நரகத்திலே தள்ளப்படுவார்." சோதோம் குமராய்வை ஆண்டவர் தண்டித்தபோது வானத்திலிருந்து அக்கினியும் கந்தகத்தையும் பொழிந்தருளினார். அந்த பட்டணங்கள் தீப்பற்றி எறிந்தது. அந்த புகை ஆகாய மண்டலம் முழுவதிலும் எழுப்பப்பட்டது. அந்தப் புகை ஆபிரகாம் அதிகாலையில் வந்து பார்க்கிறார். "இந்த பட்டணங்களின் புகை வானமண்டலம் எல்லாம் எழும்பினது." அதுபோல ஆண்டவருடைய வாதையிலே இந்த விக்கிரகத்தை வழிபடுகிறதுனால அவருடைய புகை என்றென்றைக்குமா.
இரண்டாம் உலக மகா யுத்தத்திலே 1945 ஆம் ஆண்டு ஜப்பான் இரண்டு பட்டணங்கள் நாகசாகி, ஹீரோஷிமா பட்டணங்கள் யுத்த காலமாய் இருந்தது. ஜப்பான் இப்பொழுதுதான் அமெரிக்காவுக்கு போய் பேர் ஹார்பர் என்ற இடத்திலே குண்டுகளை வீசிவிட்டு வந்தார்கள். அமெரிக்க ஜனாதிபதி அணுகுண்டுகளை போடுங்க சென் பாய்ஸ் என்று சொன்னார். விமானங்கள் அந்த பட்டணத்தை நோக்கி பறந்து வந்தன. அடிவாரத்திலே அந்த விமானங்கள் வந்தவுடனே எச்சரிப்பு ஒலி அந்த சங்கில் முழங்கி ஒரு பகைவனுடைய விமானம் வருகிறது. ஆனால் ஒரு சில செகண்ட்ல அது நேரா வந்தது. அணுகுண்டுகள் பொழிந்தது. ஆயிரம் ஆயிரம் சூரியன் உருக்கி ஊற்றினது போல இருந்தது. அந்த இடத்திலே எழும்பின புகை 40,000 அடி உயரத்துக்கு ஆகாய மண்டலத்தில் எழுந்து நின்றதாம். மனிதன் கண்டு பிடித்த ஒரு அணுகுண்டு. இன்றைக்கு அதைப் பார்க்கிலும் கொடி அணுகுண்டுகளையும், ஹைட்ரஜன் வாயு குண்டுகளையும், நியூக்ளியர் குண்டுகளையும், விஷவாயு குண்டுகளையும் மனுஷன் தயாரித்துவிட்டான். இவை ஒன்றும் தேவனுடைய கோபாக்கினையினால் வருகிற புகைக்கு ஈடு ஆகவே ஆகாது. அதைக் குறித்து வேதம் சதா காலங்களிலும் வாதிக்கப்படுவார்கள். சதாகாலமும் வாதிக்கப்படுவார்.
எகிப்தை ஆண்டவர் பத்து வாதைகளால் வாதித்தார். ஆனால் அது சதாகாலமும் உள்ள வாதை அல்ல. ஒவ்வொரு முறையும் பார்வோன், "ஐயா மன்னிச்சுக்கோங்க, உங்களை போக விட்டுறேன். இந்த வாதை நீங்கும்படி ஜெபம் பண்ணுங்க." ஜெபம் பண்ணுவாங்க. வாதை நீங்கிரும். நிறைய வாதைகள் இந்த பூமியில. ஐயோ, நான் ஒரு கிராம உழைத்து போயிட்டு வந்தேன். ட்ரெயின விட்டுட்டேன். ஒரு படுமட்டமான ஒரு லாட்ஜ்ல தங்க வேண்டிய லைட். அங்க மின்சாரம் இல்ல. லைட் இல்ல. மூட்டை பூச்சி படபடையா ராணுவம் நட நடந்து டான் கடிக்கிறதுக்கு அப்படி வருது. இன்னும் பார்த்தா வயல் வழி பயங்கரமான கொசு. இந்த கையில குத்தி இந்த கையில வந்துறேன் போல இருக்கு. இரவுல தூக்கமே இல்லை. ஃபேன் இல்ல. காத்து இல்ல. மின்சாரம் இல்ல. அப்பதான் யோசிச்சேன். இந்த மூட்டை எவ்வளவு பெரிய வாதை. கொசு எவ்வளவு பெரிய வாதை. சில பெண்களுக்கு பேனை சொரிஞ்சு சொரிஞ்சு சொரிஞ்சு ஒரு பெரிய வாதை. ஒரு கேன்சர்ல ஒரு அம்மா கேஜி ஹாஸ்பிட்டல்ல பார்க்க போங்க. "இந்த வலி தாங்க முடியல. கேன்சர் சாகுற நேரம் தம்பி, வலி தாங்க முடியல. எனக்கு ஏதாவது ஊசி போட்டு இந்த வலியை மறக்க செய்வாங்களா?" அந்த வாதை. தூக்குக்காக காத்துக் கொண்டிருந்த ஒரு கைதியை ஜெயில்ல மீட் பண்ணேன். "ஐயா, தூக்கு தண்டனை பெரிய தண்டனை இல்லை. தூக்குக்காக காத்திருக்கோமே. ஐயோ, இந்த தூக்கு கயிறு கழுத்துல எருகும். என் கண்ணு வெளியே பிதுங்கி வரும். நாய் நாக்கை போல என் நாக்கு தொங்கும். ஒரு நிமிஷம் கண்ணை மூடினாலும் அந்த தூக்கு கயிறு பேய் சிரிப்பா அட்டகாசமாய் சிரித்து உன்னை பாதாளத்துக்கு கொண்டு போக போறேன்னு சொல்றது போல இருக்கும். அந்த நினைவே ஒரு வாதை." நினைவே ஒரு வாதை. அயனாபுரத்தில் டிவி ஆஸ்பத்திரில ஊழியம் செய்யப்போனேன். அவர் எருமி எருமி இருமி சொல்றார். "இந்த இருமல்னால இரவெல்லாம் தூங்க முடியல. நெஞ்சம் வலிக்கு தாங்க முடியாத வாதை." இந்த வாதைகள் ஒன்றுமே நரகத்தில் உள்ள வாதைகளுக்கு ஈடு இணையானது கிடையவே கிடையாது.
இந்த காலத்தில் ஆண்டவருக்காக பாடு அனுபவிக்கிறது கஷ்டமா இருந்தாலும் ரோமர் 8:18 சொல்லுகிறது, "இக்காலத்து பாடுகள் இனி நம்மிலே வெளிப்படும் மகிமைக்கு ஒப்பானவைகள் அல்ல என்று அறிந்திருக்கிறேன்." ரெண்டு கொரிந்தியர் 4:17 சொல்லுகிறது, "கொஞ்ச காலம் இந்த பாடு உபத்திரவம் நமக்கு நித்திய கன மகிமை உண்டாக்கும்." ஆண்டவருக்காக பாடுபடுவது அது ஒரு நித்திய மேன்மை மகிமையை கொண்டுவரும். அவருடைய வாதை 11 ஆம் வசனத்தில் வாசிக்கிறேன், "அவருடைய வாதை புகை சதாகாலங்களிலும் எழும்பும். மிருகத்தையும் அதன் சொரூபத்தையும் வணங்குகிறவர்களுக்கு அதனுடைய நாமத்தின் முத்திரையை தரித்துக் கொள்கிற எவனுக்கும் இரவும் பகலும் இளைப்பாறுதல் இராது." தேவனுடைய கற்பனைகளையும் இயேசுவின் மேல் உள்ள விசுவாசத்தையும் காத்துக் கொள்கிறவர்களுமாகிய பரிசுத்தவான்களுடைய பொறுமை இதிலே விளங்கும். பாடுகள் நேரத்திலே ஆண்டவர் ஒன்றை எதிர்பார்க்கிறார். பொறுமை. பொறுமை. யாக்கோபு தன் நிருபத்திலே யோபுவின் பொறுமையை குறித்து எழுதுகிறார். எவ்வளவோ இழப்புகள் ஆனாலும் அதைப் பொறுமையோடு சகித்தார். "என் கர்த்தர் கொடுத்தார், என் கர்த்தர் எடுத்தார். அவருடைய பரிசுத்த நாமத்திற்கு ஸ்தோத்திரம்." அவர் ஒருபோதும் தன்னுடைய வாயினாலே பாவம் செய்யவில்லை. பொறுமை ஆவியின் கனிகளில் ஒரு கனி. நீடிய பொறுமை கலாத்தியர் 5:22, 23 ஆம் வசனங்களில் நாம் வாசிக்கிறோம்.
அடுத்த வசனம் 13 ஆம் வசனம், "பின்பு பரலோகத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாகக் கேட்டேன், அது கர்த்தருக்குள் மரிக்கிறவர்கள் இது முதற்கொண்டு பாக்கியவான்கள் என்று." வேதத்தில் நிறைய பாக்கியவான். சங்கீதம் 1:1-ல் வாசிக்கிறோம், "கர்த்தருடைய வேதத்தில் பிரியமாய் இருந்து இரவும் பகலும் அவருடைய வேதத்தில் தியானமாய் இருக்கிற மனுஷன் பாக்கியம்." ஆகமம் 33:29-ல் மோசே பக்தன் சொல்லுகிறார், "இஸ்ரவேலே, நீ பாக்கியவான். கர்த்தரால் இரட்சிக்கப்பட்ட ஜனமே, உனக்கு ஒப்பானவன் யார்? உன்னுடைய சத்துருக்கள் இச்சகம் பேசி அடங்குவார்கள். நீ அவருடைய மேடுகளை மிதிப்பாய்." ஆபிரகாமுக்குள்ள அந்த பாக்கியங்கள் அனைத்தும் இஸ்ரவேலருக்கு கிடைத்தது. ஆனால் இயேசுவுக்குள்ள அவ்வளவு பாக்கியங்களும் நமக்கு கிடைக்கும். ஆண்டவர் பிரசங்கத்தை முதல்ல ஆரம்பிக்கும் போது மத்தேயு 5:3-ல், "ஆவியில் எளிமை உள்ளவர்கள் பாக்கியவான்கள். துயரப்படுகிறவர்கள் பாக்கியவான்கள்." பாக்கியவான்களுடைய லிஸ்ட் அப்படியே சொல்லிக்கொண்டே வந்தார். சமாதானம் பண்ணுகிறவர்கள் பாக்கியம் உள்ளவர்கள். சாந்த குணம் உள்ளவர்கள் பாக்கியவான்கள். பாக்கியமான அனுபவம். பாக்கியமான வாழ்க்கை. பாக்கியம் என்று சொன்னால் பேரு பெற்றவர்கள். ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். மற்றவர்களால் ஆ என்று ஆச்சரியப்பட்டு பார்க்கக்கூடியவர்கள். அந்த பாக்கியம். பல பாக்கியங்கள் இருந்தாலும் எல்லா பாக்கியத்திலும் சிறந்த பாக்கியம் கடைசி வரை உண்மையுள்ளவனாய் இருந்து கிறிஸ்துவுக்குள் மரிக்கிறவர். மரண இருளின் பள்ளத்தாக்கில் நடந்து மரணத்தை ஜெயமாய் விளங்குகிறவர். கடைசி வரை தங்களுடைய பரிசுத்தத்தை விசுவாசத்தை பாதுகாத்துக் கொண்டவர். கிறிஸ்துவுக்குள்ளே மரிக்கிற வரையிலும் உலகப்பிரகாரமான பாக்கியங்கள் இருந்தாலும் அந்த பாக்கியம் ஒரு நித்தியமான மகிமைக்கு நம்மை வழிநடத்திச் செல்லும். இது முதல் பாக்கியவான். இது முதல் பாக்கியவான்.
"அவர்கள் தங்கள் பிரயாசங்களை விட்டு இளைப்பார்வார்கள்." இனி அவங்க பிரயாசப்பட வேண்டியதில்லை. பாடுபட வேண்டியதில்லை. ஆத்துமா ஆதாயம் செய்ய வேண்டியதில்லை. பிரசங்கிக்க வேண்டியதில்லை. உபவாசம் இருக்க வேண்டியதில்லை. ஜெபிக்க வேண்டியதில்லை. ஏன்னா அவங்க போகிற பரலோக ராஜ்ஜியத்தில் இது ஒன்றும் தேவையில்லை. அவருடைய பிரயாசங்கள் அவங்களை விட்டு ஓய்ந்து இளைப்பாறுவார்கள். சமாதானமான ஒரு இளைப்பாறுதல். ஆண்டவருடைய மார்பில் இளைப்பாறுதல். லாசரு ஆபிரகாம் மடியிலே இளைப்பாறினார். ஆனால் நமக்கு அதைவிட ஒரு மேன்மையான இளைப்பாறுதல் உண்டு. அது கர்த்தருடைய மார்பிலே சாய்ந்து இளைப்பாறுதல். பரிசுத்தவான்களுக்கு இளைப்பாறுகிற காலம் இனி வருகிறதாய் இருக்கிறது. எபிரேயர் 4:9, 10-ல் இளைப்பாறுதலை குறித்து அந்த நாலாம் அதிகாரத்தில் எழுதும்போது, "இங்க நமக்கு இளைப்பாறுதல் இல்லை. கடினமாய் உழைக்கிறோம். ஆத்துமாக்களை ஆதாயம் செய்கிறோம். குடும்பத்துக்காக உழைக்க வேண்டியது இருக்கிறது. ஆனால் பரலோகத்தில் முழுக்க முழுக்க இளைப்பார்." பரலோகத்துக்கு போன உடனே ஒரு பெரிய சந்தோஷம். ஏசாயா 35:10-ல், "கர்த்தரால் மீட்கப்பட்டவர்களோடு திரும்பி ஆனந்த களிப்புடன் பாடி சீயோனுக்கு வருவார்கள். நித்திய மகிழ்ச்சி அவருடைய தலைமேல் இருக்கும். சந்தோஷமும் மகிழ்ச்சியும் அடைவார்கள். சஞ்சலமும் தவிர்ப்பும் ஓடியே போய்விடும்." கிறிஸ்துவுக்குள்ளே மரிப்பது எத்தனை பாக்கியம்.
கூடவே ஒரு முக்கியமான காரியத்தை சொல்லுகிறார். "பின்பு பரலோகத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாகக் கேட்டேன், அது கர்த்தருக்குள் மரிக்கிறவர்கள் இது முதற்கொண்டு பாக்கியவான்கள் என்று." "அவர்கள் தங்கள் பிரயாசங்களை விட்டு ஒழிந்து இளைப்பாறுவார்கள். அவர்களுடைய கிரியைகள் அவர்களுடனே கூடப்போகும்." பூமியை விட்டு நம்ம பரலோகத்துக்கு போகும்போது ஒரு பைசாவையும் நம்ம எடுத்துட்டு கொண்டு போக முடியாது. நம்ம கட்டின வீட்டையோ, நம்ம காரையோ, பங்களாவையோ, உலக ஆஸ்திகளையோ ஒரு குண்டூசியை கூட எடுத்துட்டு போக முடியாது. ஆனால் நம்முடைய கிரியைகள் நம்மோடு வரணும். ஆண்டவரை நேசித்த கிரியைகள். ஆண்டவருக்காக கொடுத்த கிரியைகள். பரலோகத்தில் பொக்கிஷமாய் விளங்கும். சம்பாதித்த ஆத்துமாக்கள் கர்த்தருடைய ராஜ்யத்தில் காணப்படுவோம். அது நமக்கு கிரீடமாய் விளங்கும். மரியாளை பார்த்து ஆண்டவர் சொன்னார், "தன்னை விட்டு எடுபடாத நல்ல பங்கு." மற்றதெல்லாம் எடுபட்டுப் போகும். கண் காண்கிறதெல்லாம் அநித்தியமானவை. காணாதவைகள் அல்லவோ நித்தியமானவை. நீ ஆண்டவரை நேசித்தது. ஆண்டவருடைய சுபாவத்துக்காக அவரைப் போல மாற வேண்டுமே. நீ உபவாசம் பண்ணு. நீ ஜெபம் பண்ணு. உன்னுடைய கிரியைகள் அவர்களோடு போகும். வேதத்தின் முடிவிலே ஆண்டவர் சொன்னார், "இதோ, நான் சீக்கிரமாய் வருகிறேன். அவனவன் கிரியைகளின் படி நான் அவனுக்கு அளிக்கும் பலன் என்னோடே கூட வரும்." நம்முடைய கிரியைகளுக்கெல்லாம் பலன் ஆண்டவர் தருவார். ஆண்டவருக்காக உழைப்பது எத்தனை பாக்கியமானது.
"பின்பு நான் பார்த்தபோது, இதோ வெண்மையான மேகத்தையும், அந்த மேகத்தின் மேல் மனுஷகுமாரனுக்கு ஒப்பானவராய், தமது சிரசின் மேல் பொற்கிரீடத்தையும், தமது கையில் கருக்குள்ள பரிவாளையும் உடையவர் ஒருவர் உட்கார்ந்து இருக்கிறதைக் கண்டேன்." வெண்மையான மேகம் அதுதான் நம்முடைய ஆண்டவருடைய வாகனம். இன்னைக்கு பிரைம் மினிஸ்டர் மன்மோகன் சிங் எங்க போனாலும் ஒரு ராணுவ ஹெலிகாப்டர் விலையுயர்ந்தது. அதுலதான் அவர் பிரயாணம் பண்ணுவார். எலியா பிரயாணம் பண்ணும்போது அக்கினி ரதமும் குதிரையும் கொண்டுவந்து ஆண்டவர் பரலோகத்துக்கு கொண்டு போனார். அது அவருடைய வாகனம். லாசரு மரித்தபோது தேவதூதர்கள் வந்து உன்னை எடுத்துக்கொண்டு போனார்கள். தேவதூதர்கள் அவருடைய வாகனம். பிலிப்பு காந்தையா நாட்டு மந்திரிக்கு ஞானஸ்தானம் கொடுத்தபோது ஆவியானவரே வாக வாகனமாய் இருந்து ஆசோத் என்ற தேசத்தில் அவனை காணப்படும்படி செய்தார். ஆனால் நம்முடைய ஆண்டவருடைய வாகனம் மேகம். அவர் எழுந்தருளி இருக்கிறதை இஸ்ரவேலருக்கு மேக ஸ்தம்பம் மூலமாய் வெளிப்படுத்தினார். அவர் பரலோகத்துக்கு எடுத்துக் கொள்ளப்படும்போது மேகத்தின் மேல் எடுத்துக்கொள்ளப்பட்டார். எல்லா சீஷர்களும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த மேகம் அவரை அப்படியே பிதாவினுடைய வலது பார்சத்திலே கொண்டு போய் வைக்கிற வரையிலும் அவரை உயர்த்திக் கொண்டே போனது. ஆண்டவர் வரும்போது மேகத்தின் மேல் தான் வருவார். வெளிப்படுத்தல் 1:7 சொல்லுகிறது, "இதோ, மேகங்களுடனே வருகிறார். அவரைக் குத்தினவர்களும் அவரைக் காண்பார்கள்." அவரைக் குத்தினவர்களும் அவரைக் காண்பார்கள்.
அருமையான தேவனுடைய பிள்ளைகளே, இங்கே மனுஷகுமாரன் என்று எழுதியிருக்கிறது. ஆண்டவர் தேவகுமாரனாய் இருக்கிறார். அதே நேரம் மனுஷகுமாரனாகவும் இருக்கிறார். மனுஷகுமாரனைப் போல தலை சாய்க்க இடமில்லாமல் இருந்தால். மனுஷகுமாரனைப் போல தாகம் உடையவராய் சமாரியா ஸ்திரீ இடத்திலே தாகத்தை தாய் என்று கேட்டாள். மனுஷகுமாரனைப் போல பசியோடு அத்திமரத்தில் ஏதாவது பழம் கிடைக்குமா. மனுஷகுமாரனாகவே இருந்தார். பிலிப்பியர் இரண்டாம் அதிகாரத்தில் வாசிக்கிறோம். ஐந்து முதல் வாசிக்கும் போது, "அவர் தேவனுக்கு சமமாய் இருந்தும், தேவனுக்கு சமமாய் இருப்பதை கொள்ளையாடின பொருளாக எண்ணாமல், தம்மைத்தாமே தாழ்த்தி, அடிமையின் ரூபம் எடுத்து, மரண பரியந்தம் தன்னை தாழ்த்தினார்." மீண்டும் வாசிக்கிறேன். "பின்பு நான் பார்த்தபோது, இதோ வெண்மையான மேகத்தையும், அந்த மேகத்தின் மேல் மனுஷகுமாரனுக்கு ஒப்பானவராய், தனது சிரசின் மேல் பொற்கிரீடத்தை." மனுஷன் அவருக்கு முழு கிரீடத்தை தரித்தார். ஆனால் வெளிப்படுத்தல் 19:12-ல் அவருடைய சிரசின் மேல் அநேக கிரீடங்கள் இறந்தன. இங்கே அவர் பொற்கிரீடம் தரித்திருக்கிறது அவர் ராஜாதி ராஜா, கர்த்தாதி கர்த்தா என்பதை வெளிப்படுத்துகிறது. "தமது கையிலே கருக்குள்ள அறிவாளையும் உடைய ஒருவர் உட்கார்ந்து இருக்கிறதைக் கண்டார்." அவருடைய கையிலே கருக்குள்ள அறிவாள். வேதம் முழுவதிலும் அறிவாள் என்கிற வார்த்தை 11 தடவை வருது. ஆனால் இந்த அதிகாரத்தில் மட்டும் 14 ஆம் வசனத்தில் ஒரு அருவா, 15 ஆம் வசனத்தில் ஒரு அருவா, 16 ஆம் வசனத்தில் ஒரு அறிவாள், 17-ல் ஒரு ஒரு அறிவாள், 18-ல் ஒரு அறிவாள், 19-ல் ஒவ்வொரு வசனத்திலும் ஒவ்வொரு அறிவாள் இருக்கிறதை பார்க்கலாம். அறிவாள் என்பது அறுவடையை காண்பிக்கிறது. அறுவடையை காண்பிக்கிறது. அறுவடை செய்கிற ஒரு காலத்துக்குள் ஆண்டவர் வந்தார்.
அருமையான தேவனுடைய பிள்ளைகளே, இஸ்ரவேல் தேசத்திலே முதற்கனி என்று ஒரு அறுவடை இருக்கும். முதற்கனி சேர்க்கிற சேகரிப்பின் பண்டிகை. அறுவடை பண்டிகை. தங்க மரத்தில் உள்ள மாம்பழத்தில் முதல் பழத்தை கர்த்தருடைய ஆலயத்துக்கு கொண்டு போய் படைப்பார். முதல் அரிக்கட்டையை கொண்டு போய் தேவ சமூகத்தில் படைப்பார். இது முதல் கனி. முதற்பலன். முதற்பலனானவர் இயேசு. சிலுவையிலிருந்து உயிரோடு எழுந்து முதற்பலனாக பிதாவினுடைய கையிலே தன்னைத்தானே ஒப்புக்கொடுத்தார். அடுத்ததாக கர்த்தருடைய வருகையிலே ஒரு பெரிய அறுவடை. இதை இது பொதுவான அறுவடை. கிறிஸ்துவுக்குள் மரித்தவர்களும் அறுவடை செய்து பரலோகத்துக்கு எடுத்துக் கொள்ளப்படுவார்கள். உயிரோடு இருக்கிற நாமும் பரலோகத்துக்கு எடுத்துக்கொள்ளப்படுவோம். இது சிறந்த அறுவடை. ஜனங்களுக்குள்ளே தம்மை நம்மை தமக்கென்று மீட்டுக்கொண்டவர் தம்மை நம்மை சேர்க்கும்படி வருகிறார். இது இரண்டாவது அறுவடை. மூன்றாவது இஸ்ரவேல் தேசத்தில் ஆண்டவர் சொன்னார், "நீ அறுவடை செய்யும்போது ஒட்ட வழிச்சு அறுவடை செய்திடாதப்பா. மரத்துல கனிகளை பறிக்கும் போது எல்லாத்தையும் குலுக்கு குலுக்கு உலுக்கு உலுக்குன்னு உலுக்கி அவ்வளவுத்தையும் கொண்டு போகாத. உன் பக்கத்துல சில பரதேசி இருப்பார். சில அனாதைகள் இருப்பார். அறுவடை செய்யும்போது சில கதிர்களை சிந்த விடு. பழங்களை பறிக்கும் போது சில பழங்களை விட்டுரு. மற்றவங்களுக்கு கிடைக்கட்டும்." இது எதைக் குறிக்கிறது என்றால், கர்த்தருடைய வருகையில் பரிசுத்தவான்கள் எடுத்துக்கொள்ளப்பட்ட பின்பு அந்திகிறிஸ்துவினுடைய ஆட்சியிலே கைவிடப்பட்ட ஒவ்வொரு சிலர் ஆண்டவர் ஆண்டவருக்காக வைராக்கியமாய் நின்று மிருகத்தின் முத்திரையை தரிக்காமல் இரத்த சாட்சியாய் மரித்து ஒன்னொன்னா ஒன்னு அப்பப்ப அப்பப்ப மரிக்க மரிக்க மரிக்க மேல போயிட்டே இருப்பாங்க. ஒவ்வொருவரா. நிறைய திரள் கூட்டம் அறுவடை இல்லை. அங்க ஒன்னு, இங்க ஒன்னு. ஜாதிகள்ல ஒன்னு, ஜனங்கள்ல ஒன்னு. அவங்க பரலோகத்துக்கு வருவாங்க. இந்த அறுவடை செய்கிறது மனுஷகுமாரன்.
16:15, "அப்பொழுது வேறொரு தூதன் தேவாலயத்திலிருந்து புறப்பட்டு, மேகத்தின் மேல் உட்கார்ந்திருக்கிறவரை நோக்கி, 'பூமியின் பயிர் முதிர்ந்தது, அறுக்கிறதற்கு காலம் வந்தது. ஆகையால் உம்முடைய அறிவாளை நீட்டி அறுத்துவிடும்' என்று மிகுந்த சத்தமிட்டு சொன்னார்." பிதாவானவர் அந்த நேரம் வருகிற வரையிலும் இயேசு பொறுமையாய் அந்த வெண்மையான மேகத்தில் கையில் அருவாளை வைத்துக்கொண்டு காத்துக்கொண்டே இருந்தார். கிறிஸ்து வருகிறதை அந்த அறுவடை செய்யப்படுகிறது பரலோகத்தில் இருக்கிற பிதாவைத் தவிர ஒருவருக்கும் தெரியாது. ஆனால் வருகை வரும்போது தேவதூதன் இயேசுவைப் பார்த்து சொல்லுகிறார், "உம்முடைய அறிவாளை நீட்டி அறுத்துவிடும்" என்று. அப்பொழுது மேகத்தின் மேல் உட்கார்ந்திருந்தவர், மனுஷகுமாரன், "தமது அறிவாளை பூமியின் மேல் நீட்டினார். பூமியின் விளைவு அறுக்கொண்டது. பூமியின் பயிர்கள் கோதுமை அறுப்புண்டு." ஆண்டவராகிய இயேசுவினுடைய இரண்டாவது வருகையில் நடக்கிற அறுவடையை ஆண்டவர் சொல்லுகிறார்.
"பின்பு ஒரு வேறொரு தூதனும் கருக்குள்ள அறிவாளை பிடித்துக்கொண்டு பரலோகத்திலிருந்து தேவாலயத்திலிருந்து புறப்பட்டு வந்தான்." இயேசு அறுவடை செய்துவிட்டார். வருகை வந்துவிட்டது. முதல் மூன்றரை வருஷத்தில் அநேகர் அம்பேர் இரத்த சாட்சிகளாய் மரித்து அவங்க விடப்பட்ட கயிறு அந்த சிந்தப்பட்ட தானியம் போல அவர்களும் களஞ்சியத்தில் சேர்க்கப்பட்டார்கள். இப்போது அடுத்த தேவதூதன் வருகிறார். ஆகவே இரண்டு அறுவடை குறித்து இங்கே சொல்லியிருக்கிறது. ஒரு அறுவடை பரிசுத்தவான்களின் அறுவடை. அதை இயேசு தாமே செய்கிறார். அடுத்தது பாவிகளின் உடைய அறுவடை. அதை தேவதூதன் செய்கிறார். அந்த தேவதூதன் மிகாபவேல் தேவதூதன் என்று அநேக வேத பண்டிதர்கள் சொல்லுகிறார்கள். அதற்கு ஆதாரமாக தானியேல் 12:1-ல் கடைசி காலத்தில் தேவ ஜனங்களுக்காக மிகாபவேல் என்ற பிரதான தூதன் வருவான். அறுவடை செய்ய வருவான். இவன் என்ன செய்கிறான்? பரலோக சேர்ப்பதற்காக அறுவடை செய்யவில்லை. இவன் பதிரை அவியாத அவியிலே சுட்டெரிக்கும்படி பிசாசின் முத்திரையை தரித்தவர்களை நியாயத்தீர்ப்பு கொடுத்து அறுவடை செய்து பாதாளத்திலே தள்ளும்படி அவன் வருவான்.
18 ஆம் வசனம், "அக்கினியின் மேல் அதிகாரம் உள்ள வேறொரு தூதன் பலிபீடத்தில் இருந்து புறப்பட்டு வந்தான்." பலிபீடம் என்பது ஆண்டவராகிய இயேசுவினுடைய சிலுவை. ஏசாயா, "ஐயோ, நான் அதமானேன்" என்று அதலபோது பலிபீடத்திலிருந்து ஒரு கேராபின் ஒரு அக்கினி குரடை கொண்டுவந்தான். சுத்திகரிக்கிற ஒரு குரடை கொண்டுவந்தான். "அக்கினியின் மேல் அதிகாரம் உள்ள வேறொரு தூதனும் பலிபீடத்திலிருந்து புறப்பட்டு வந்து, கருக்குள்ள அறிவாளை பிடித்திருந்து பிடித்திருக்கிறவனை நோக்கி, 'பூமியில் திராட்சை பழங்கள் பழுத்திருக்கிறது. முதல் அறுவடை பயிரின் அறுவடை, கோதுமையின் அறுவடை. ஆனால் இங்கே ஒரு அறுவடை செய்ய சொல்லியிருக்கிறது. ஆண்டவருடைய உக்கிரமான கோபத்துக்கு ஆளான, ஆண்டவருக்கு கசப்பான கனிகளை கொடுத்த, ஆண்டவருடைய நாமத்தை தரிக்காமல் முத்திரையை தரித்த அந்த திராட்சை பழங்கள் எல்லாம் பிடி பிடுங்கி அக்கினியின் மேல் அதிகாரம் உள்ள வேறொரு தூதன் பலிபீடத்தில் இருந்து புறப்பட்டு வந்து கருக்குள்ள அறிவாளையை பிடித்திருந்தவனை நோக்கி, 'பூமியின் திராட்சை பழங்கள் பழுத்திருக்கின்றன. கருக்குள்ள உமது அறிவாளை நீட்டி அதன் குலைகளை அறுத்துவிடும்' என்று மிகுந்த சத்தத்தோடே சொன்னான்." அப்பொழுது அந்த தூதன், "தன் அறிவாளை பூமியின் மேலே நீட்டி, பூமியின் திராட்சை பழங்களை அறுத்து, தேவனுடைய கோபாக்கினை என்னும் பெரிய ஆலையின் மேல் போட்டார்." தேவனுடைய கோபாக்கினை. கிருபையின் நாட்களை வீணாக்கினவர்களுக்கு தேவனுடைய கோபாக்கினை கசப்பான பழங்களை எனக்கு தந்தது. ஏசாயா 5:1-ல் வாசிக்கும் போது, "என் நேசருக்கு செழிப்பான தோட்டத்திலே ஒரு திராட்சை தோட்டம் உண்டு. அந்த செழிப்பான தோட்டத்திலே அவர் நற்கல் தண்ணீர் தரும் திராட்சை கொடியை நாட்டினார். அதை கொத்தி அதை எறு போட்டார். அதில் உள்ள கல் கற்களை எல்லாம் எடுத்தார். அதை வேலி அடைத்தார். மத்தியில் ஒரு ஆலயம் உண்டாக்கி, நல்ல திராட்சை பழங்களைத் தரும் என்று காத்திருந்தார்." ஆண்டவர் புலம்பி சொன்னார், "என்னுடைய திராட்சைத் தோட்டத்துக்கு நான் செய்யாத எந்த வேலையை இனிமேல் செய்வது? நல்ல திராட்சை பழங்களைத் தரும் என்று நான் எதிர்பார்த்திருந்தேன். கசப்பான கனிகளை எனக்கு தந்தது." ஆகவே 20 ஆம் வசனம் சொல்லுகிறது, "நகரத்துக்கு புறம்பே உள்ள அந்த ஆலயத்தில்" என்று சொல்வது எருசலேமை குறிக்கிறது. "நகரத்துக்கு புறம்பே" என்று சொன்னால் இஸ்ரவேலருக்கும் புறஜாதியாருக்கும். அது யாராய் இருந்தாலும் சரி. கசப்பான கனிகளை கொடுத்தவர்கள் ஆலையிலே அது மிதிக்கப்பட்டது. ஆண்டவருடைய கோபாக்கினையில் ஒரு பகுதி ஆண்டவரால் மிதிக்கப்படுகிறது. இஸ்ரவேல் தேசத்திலே திராட்சை பழங்கள் வரும்போது ஒரு பெரிய தொட்டியில் அதை போடுவார்கள். மேல ஏறி நின்னு அதை மிதிப்பாங்க. மிதிக்க மிதிக்க மிதிக்க மிதிக்க அதில் உள்ள திராட்சை ரசம் வழிந்தோடும். அந்த திராட்சை ரசத்தை பிறகு வடிகட்டி சுத்தம் பண்ணி உபயோகப்படுத்துவார். அங்க இங்க இருக்கிற திராட்சை பழம் நல்ல கனி அல்ல. விஷமுள்ள கனி. அதை ஆண்டவர் தம்முடைய கோபாக்கினை என்கிற ஆலயத்தில் மிதிக்கிறாராம். என்ன நடந்தது? "அந்த ஆலயத்திலிருந்து 1600 ஸ்தாதி தூரத்துக்கு." 1600, 600 ஸ்தாதி என்று எழுதப்பட்டிருக்கு. ஒரு ஸ்தாதி என்றால் 200 மீட்டர். ஒரு ஸ்தாதி என்றால் 600 அடி. இங்கே எத்தனை ஸ்தாதியாம்? 1600 ஸ்தாதி தூரத்துக்கு. அப்படி என்றால் 182 மைல் என்று அர்த்தம். கிலோமீட்டர்ல சொல்லப்போனால் 300 கிலோமீட்டர் தூரத்துக்கு ஜனங்கள் அந்த கோபாக்கினல் மிதிக்கப்பட்டு அவருடைய இரத்தம் அப்படியே ஓடினது. 182 மைல் போஸ்ரா என்கிற இடத்திலிருந்து அர்மகதோன் வரையிலும் 182 மைல். அந்த கோபாக்கினை நாட்களில் ஒரு பெரிய இரத்த ஆறு இஸ்ரவேல்ல ஓடும். யோர்தான்ல எங்கெங்க தண்ணி ஓடுனதோ அந்த இடமெல்லாம் இரத்த ஆறு ஓடும். எத்தனை பயங்கரம். அந்த இரத்த ஆறு எவ்வளவு உயரத்துக்கு ஓடுமாம்? குதிரைகளின் கடிவாளம் மட்டும் பெருகி வந்தது. சாதாரண ஒரு குதிரை நிக்குது. தரைக்கும் அதனுடைய கடிவாளத்துக்கு நீங்க அளந்து பார்த்தா குறைஞ்சது ஒரு அஞ்சு அடியாவது இருக்கும். இந்த ஆறு கடைசி அர்மகதோன் யுத்தம் வரும்போது ஆண்டவருடைய கோபாக்கினியை செலுத்தும் போது ஒரு பெரிய இரத்த ஆறு அங்க ஓடும். இஸ்ரவேல் தேசத்தின் ஒரு பகுதியிலிருந்து அடுத்த பகுதி வரணும்னா ஏழு மணி நேரம் டிராவல் பண்ணனும். ஏறக்குறைய 182 மைல். அதனுடைய நீளம். வடக்கிருந்து கீழே குறுக்க பார்த்தா ரெண்டு மணி நேரத்தில் வந்தரலாம். ரெண்டு மணி நேரத்தில் வந்தரலாம். 120 மைல் தான் நீளம். அகலம். தெள்ளபிள்ல இருந்து ஜெருசலேம் வர்றதுக்கு ரெண்டு மணி நேரத்தில் வந்தரலாம். ஒரு மணி நேரத்திலே வந்தரலாம். ஆனால் அந்த நீளம். இஸ்ரவேல் தேசம் முழுவதும் இரத்த காடாய் மாறி. ஏன் இப்படி இரத்தக்காடாய் மாறிப்போகிறது? ஏன்னா ஆண்டவர் இரத்தம் சிந்தும்போது, "இந்த இரத்தப்பழி எங்க மேலேயும் எங்க பிள்ளைகள் மேலேயும் வரட்டும். எங்களுக்கு பரபாசா வேணும். இயேசுவை சிலுவையில் அறையுங்க" என்று ஒப்புக்கொடுத்தார். என்ன பேசணும்னு தெரியல.
அருமையான தேவனுடைய பிள்ளைகளே, நேரம் முடிந்தது. நான் முடிக்கிறேன். நம்முடைய தேவனை சந்திக்க ஆயத்தப்படணும். கர்த்தருடைய வருகையில் முதற்பலன்களாய் நாம் அவருக்கு முன்பாக எடுத்துக்கொள்ளப்படணும். இயேசு முதற்பலனாய் உயிரோடு எழுந்து பிதாவினுடைய வலது பாரிசத்தில் அமர்ந்தார். ஜெயம் கொள்ளுகிற முதற்பலனாய் எழுந்து அவருடனே கூட சிங்காசனத்தில் வீற்றிருப்பார். அந்திகிறிஸ்துவினுடைய ஆட்சியிலே முதல் மூன்றரை ஆண்டுகள் சிந்தப்பட்ட கோதுமை மணி போல ஒரு சிலர் வைராக்கியமாய் நின்று கர்த்தருடைய ராஜ்ஜியத்துக்கு வருவார்கள். அதற்குப் பிறகு பிசாசின் முத்திரையை தரிப்பதைத் தவிர வேறு வழி இல்லாமல் சதா காலங்களிலும் அவர்கள் பாதிக்கப்படுவார்கள். அவருடைய இரத்தம் கடிவாளம் வரைக்கும் வரும் என்று வேதம் எச்சரிக்கிறேன். நம்மை நாமே ஆயத்தப்படுத்திக் கொள்ள இது எத்தனை அருமையான காலம். இந்த கிருபையின் காலத்திலே ஆண்டவர் நல்லோர் மேலும் தீயோர் மேலும் தம்முடைய சூரியனை உதிக்கப்பண்ணி மழையை பொழிந்தருளுகிறார். பரிசுத்த ஆவியின் பின்மாறியை பொழிந்தருளுகிறார். இந்த காலங்கள் ஆயத்தப்படுத்தப்படுவதற்கு நம்மை நாமே பரிசுத்தமாக்கிக் கொள்வதற்கு எத்தனை அருமையான வேளை. இரவிலே படுக்கப் போகும்போது கூட, "இன்றைக்கு ஒருவேளை உம்முடைய வருகையில் என்றால் நான் காணப்படட்டும்."
பிரியமானவர்களே, உங்கள் வாழ்க்கையில் சோதனையா? தோல்வியா? வியாதியா? மனபாரமா? எங்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் பிரச்சனைகளுக்காக சகோதரர் சாம் ஜெபத்துறை அவர்கள் ஊக்கமாக ஜெபித்து ஆலோசனை வழங்குவார்கள். எங்கள் அலுவலக ஊழியர்கள் தொடர் சங்கி ஜெபம் மூலம் உங்கள் தேவைகளுக்காக கர்த்தரின் பாதத்தில் கண்ணீருடன் ஜெபிப்பார்கள். மட்டுமல்ல உங்கள் ஜெப தேவைகளுக்கு ஜெபித்து மன்றாட எங்கள் ஜெப விரைவில் காத்துக்கொண்டிருக்கின்றனர். இன்று எங்களுக்கு எழுதுங்கள். கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நிச்சயமாக அற்புதம் செய்வார்.
பிரியமானவர்களே, 16 ஆண்டுகளாய் வருமான வரி இலாக்காவில் பணியாற்றிக் கொண்டிருந்த சகோதரர் சாம் ஜெபத்துறை அவர்கள் தேவனுடைய உன்னதமான அழைப்பிற்கு கீழ்படிந்து தனது வேலையை ராஜினாமா செய்து கர்த்தருடைய முழுநேர ஊழியத்திற்காக 1985 ஆம் ஆண்டு தன்னை ஒப்புக்கொடுத்தார். கர்த்தரின் விசேஷித்த கிருபையால் வல்லமையான எழுத்துக்களின் மூலம் 700க்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதி வெளியிட்டுள்ளார்கள். கர்த்தர் தந்த பாரத்தின் வெளிப்பாடான "அன்றுள்ள அப்பம்" என்ற தின தியான நூல் இன்று இந்தியாவில் மட்டுமின்றி உலகமெங்கும் பல்லாயிரக்கணக்கான குடும்ப ஜெபங்களில் ஒரு முக்கிய அங்கம் வகிக்கிறது. சகோதரர் துறை அவர்கள் எழுதிய நூல்கள், செய்தி ஒலி மற்றும் ஒளிநாடாக்கள் அடங்கிய அட்டவணையை இலவசமாக பெற்றுக்கொள்ள இன்றே எங்களுக்கு எழுதுங்கள். உங்கள் வாழ்வில் மேலும் மாறுதல்கள் ஏற்பட இயேசு கிறிஸ்துவை இன்னும் அதிகமாய் தெரிந்து கொள்ள அவருடைய ஆசீர்வாதங்களை பெற்றுக்கொள்ள ஒவ்வொரு வாரமும் புதன்கிழமைகளில் எங்கள் அலுவலகத்தில் மாலை 6:00 மணிக்கு நடைபெறும் கூட்டங்களில் பங்கு பெறுங்கள். கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் அற்புதங்களையும் ஆசீர்வாதங்களையும் பெற்றுக்கொள்ள அன்போடு உங்களை அழைக்கிறோம்.
[இசை]
[இசை]