📱

Get Our Mobile App

Take your business learning on the go!

Download on the App StoreGet it on Google Play

Revelation Bible Study Part- 7

Antantulla Appam54:40

Transcription

[இசை] [இசை] ஆ [இசை] வெளிப்படுத்தல் இரண்டாம் அதிகாரம் 18 ஆம் வசனத்திலிருந்து நான் வாசிக்க விரும்புகிறேன். இது நான்காவது சபையாக விளங்குகிறது. தியத்தீரா சபை. மற்ற எல்லா சபைகளுக்கு கொடுக்கப்பட்ட வார்த்தைகளை பார்க்கிலும் இதுக்கு மிக அதிகமான இடத்தை கர்த்தர் ஒதுக்கி இருக்கிறார்.

தியத்தீரா சபையின் தூதனுக்கு நீ எழுத வேண்டியது என்னவென்றால், ஆண்டவர் ஒவ்வொரு சபைக்கும் எழுதும்போது மன துருக்கத்தோடு எழுதுகிறார். அளவற்ற அன்போடு எழுதுகிறார். அந்த சபை கரைத்தரையற்ற மாசற்ற மணவாட்டியாய் தனக்கு முன்பாக நிற்க வேண்டுமே என்ற பாரத்தோடு எழுதுகிறார். ஒவ்வொரு சபைக்காக எவ்வளவோ இரத்தம் சிந்தி இருக்கிறார், பாடுகளை அனுபவித்திருக்கிறார். ஆகவே அப்போஸ்தலர் 20:28லே தம்முடைய சுய இரத்தத்தினாலே சம்பாதித்த சபை. அப்போஸ்தலர் 2:47ல் இரட்சிக்கப்படுகிறவர்களை சபையில் கூட்டி சேர்த்தார். சபையை ஒரு மணவாட்டியாய் நிறுத்தும் பொருட்டு பரிசுத்த ஆவியானவரை சபைக்காகவே பொழிந்தருளினார். சபை பூரணத்தை அடைவதற்காக அபிஷேகத்தை கொடுத்தார். ஆவியின் வல்லமையை கொடுத்தார். ஆவியின் கனிகளை கொடுத்தார். தன்னுடைய சுபாவத்துக்கு ஏற்ற தன்னுடைய சாயலின்படி மணவாட்டியாய் உருவாக்க வேண்டும் என்ற ஒரு பாரத்தோடு ஆண்டவர் எழுதுகிறார்.

ஒவ்வொரு சபைக்கும் ஆண்டவர் எழுதும் போது தான் யார் என்பதை எழுதுகிறார். சபையிலே பாராட்ட வேண்டியவைகளை அவர் பாராட்டுகிறார். என்னென்ன குறை குற்றங்களை அவர்கள் நினைக்க வேண்டுமோ அதை சுட்டிக் காண்பிக்கிறார். கடைசியிலே ஜெயம் கொண்டவர்களாய் விளங்கும்போது உங்களுக்கு என்ன பரிசு அதை ஆண்டவர் தெரியப்படுத்துகிறார். ஆகவே அவருடைய இரத்தம் சிந்தி மீட்ட சபை அந்த பாரத்தோடு ஒவ்வொரு சபைக்கு எழுதுகிற செய்தியை நாம் கவனிக்க வேண்டும்.

ஆண்டவர் இருக்கிறவரும் இருந்தவரும் வருகிறவருமான கர்த்தர். ஆதி அப்போஸ்தல சபைகளில் இருந்த சபை இருக்கிறது. இன்றைக்கு இருக்கிற சபை இருக்கிறது. வரப்போகிற சபை இருக்கிறது. ஏதோ ஒரு காலத்தில் இதை எழுதப்பட்டாலும், இருந்த சபைக்கும் எழுதப்படும். இப்பொழுது இருக்கிற சபைகளுக்கும் எழுதப்படுகிறது. வரப்போகிற சபைகளுக்கும் எழுதப்படுகிறது. சபை என்று சொல்லும்போது உங்கள் ஒவ்வொருவரையும் அது குறிக்கிறது. ஒவ்வொருவரையும் அதை குறிக்கிறது. ஏதோ ஒரு போர்டு போட்ட சபை, ஏதோ நாலு சுவருக்குள்ள ஆராதிக்கிற சபை, ஏதோ கோபுரம் ஒரு பெரிய மணி அப்படிப்பட்ட சபை இல்லை. நாமே தனிப்பட்ட முறையில் சபையாய் இருக்கிறோம். நாமே தனிப்பட்ட முறையில் அவருடைய ஆலயங்களாய் இருக்கிறோம்.

ஆகவே சபை என்று சொல்லும்போது உங்களுடைய போர்டுகள்ல என்ன போர்டு போட்டிருக்காங்க என்கிறது இல்லை. அது ஏலியன் சபையா இருக்கலாம், அசம்பளி சபையா இருக்கலாம், சிஎஸ்ஐ சபையா இருக்கலாம், அங்கிளிக்கன் சபையா இருக்கலாம். எல்லாரும் சபையாய் மாறுவதில்லை. சபையில் உள்ள அவ்வளவு அங்கத்தினரும் சபையாய் மாறுவதில்லை. நெல்லை எடுத்தா அதுல இருக்கும் அந்த நெல்லுல பதரும் இருக்கும். அதே நேரத்தில் அது உள்ள மணியும் இருக்கும். சபை என்பது ஆண்டவருடைய பார்வையில் யார் யார் பெயர்கள் பரலோகத்தில் எழுதப்பட்டிருக்கிறதோ அவர்கள் தான் சபையாகிறார்கள். ஆண்டவருடைய பார்வையில் ஏழு சபைகளோ 7000 சபைகளோ அல்ல. ஒரே சபை பரலோகத்திலே பெயர் எழுதப்பட்டிருக்கிற சர்வ சங்கமாகிய சபை என்று எபிரேயர் 12 ஆம் அதிகாரம் 22 ஆம் முதல் 24 ஆம் வசனம் வரையிலும் நீங்கள் பார்க்கிறோம்.

எந்த சபையிலும் ஒவ்வொரு சபையிலும் உண்மையான தேவனுடைய பிள்ளைகள் இருக்காங்க. கத்தோலிக்க சபையானாலும் சரி, சிஎஸ்ஐ சபை ஆனாலும் சரி. ஒன்ன பர்சன்டேஜ் மாறலாம். சில சபையில் 5% தான் உண்மையானவங்க இருக்கலாம். ஏன்னா உங்களுக்கு சரியான போதனை கொடுக்க ஆட்கள் இல்லை. சில சபைகள்ல ஆவியின் வரங்கள் செயல்படல. சில சபையில் 3% தான் உண்மையான கிறிஸ்தவங்க இருக்கும். சில சபையில் 10 இருக்கலாம். சில சபையில் 20 இருக்கலாம்.

ஆண்டவர் என்னை சுவிசேஷனாய் அழைத்தபோது ஒரு காரியத்தை சொன்னார். இந்த சபை பிரிவு சபை டினாமினேஷனுக்கு அப்பால உயரத்தில் நீ என்னோடு கூட நின்று எல்லாம் எல்லா சபைக்கும் நீ பிரயோஜனம் உள்ளவனாய் இருக்கணும். எல்லா சபைக்கும் நீ ஆசீர்வாதமாக இருக்கணும். இந்த சபைக்குத்தான் நீ சுவிசேஷன் என்று அல்ல. சபைகளுக்கு மேலாக தேவனோடு இருந்து எல்லா சபைகளையும் மதித்து எல்லா தேவனுடைய பிள்ளைகளோடும் ஐக்கியம் கொள்ளும்போது தான் உண்மையான சபைக்காக நம்ம உழைக்கிறோம். ஒரு டினாமினேஷனுக்காக உழைப்பது என்பது அல்ல. ஒரு டினாமினேஷனுக்காக ஆண்டவர் ஜீவனை கொடுக்கல. சிலர் தட்டலாம் நாங்க தான் மணவாட்டி சபை. நாங்க தான் சீயோனுக்கு போவாங்க. அது அவங்களுடைய அறியாமையால் அப்படி செய்றாங்க. அவங்களுடைய சபை தோன்றி ஒரு 30 40 வருஷம் இருக்கலாம். ஆனா சபை 2000 சிலுவையில் ஜீவனை கொடுத்த நாளிலிருந்து அந்த சபை உருவாகி. ஆகவே ஒவ்வொரு சபைகளிலும் உண்மையான உத்தமமான தேவனுடைய பிள்ளைகள் இருக்கிறாங்க. ஆவியில நாம் அவர்களோடு ஐக்கியம் கொள்ளுகிறோம். திருவிருந்து ஆராதனை எடுக்கும்போது உலகத்தில் உள்ள அவ்வளவு பரிசுத்தவான்களோடு இணைக்கப்படுகிறோம். பரலோகத்தோடு இணைக்கப்படுகிறோம். ஆகவே நம்முடைய தரிசனம் குறுகினதாக இந்த சபை தான் அந்த சபை தான் என்று இல்லை. நாம் கர்த்தரோடு நிற்கிறோம். உலகத்தில் அவ்வளவு தேவனுடைய பிள்ளைகளோடு நான் ஐக்கியம் கொள்ளனும்.

சரி, நான் இப்போது அதை வாசிக்கிறேன். தியேத்திரா சபையின் தூதனுக்கு நீ எழுத வேண்டியது என்னவெனில், அக்கினி ஜுவாலை போன்ற கண்கள், பிரகாசமான வெண்கலம் போன்ற பாதங்களை உடைய தேவகுமாரன் சொல்லுகிறதாவது.

முதல்ல ஆண்டவர் தன்னை அறிமுகப்படுத்துகிறார். என்னுடைய கண்கள் அக்கினி ஜுவாலையைப் போல உள்ள கண்கள். அவருடைய பார்வைக்கு மறைவானது ஒன்றுமில்லை. எல்லாவற்றையும் ஊடுருவி பார்க்கக்கூடிய கண்கள். அக்கினிமயமான கண்கள் என்று சொல்லும்போது தேவ பயம் அதிலே ஏற்படுகிறது. சுட்டெரிக்கிற வல்லமை உடையவர். அக்கினி ஜுவாலையை போன்ற கண்களை உடையவர் என்றால் அவருடைய கண்களிலிருந்து ஒரு அக்கினி அபிஷேகம் பெறப்படுகிறது. அவருடைய கண்கள் அக்கினி ஜுவாலையான கண்கள் என்றால் நியாயத்தீர்ப்பின் கொடுக்கக்கூடிய கண்கள். அதே நேரம் அவர் மனதுருக்கம் உடைய கண்கள் உடையவர். உன்னதப்பாட்டு 5:12 தண்ணீர் நிறைந்த நதியோரம் தங்குகிற புறாக்களின் கண்கள். கண்ணீர் குளமாகிற கண்கள். எருசலேமை பார்த்து அதற்காக கண்ணீர் விட்டு அழுதார் என்று லூக்கா 19:41ல் வாசிக்கிறோம். சத்துருவின் கல்லறை அண்டை வந்து நின்றார். அவருடைய கண்கள் கண்ணீர் சொரிந்தது என்று யோவான் 11:35ல் வாசிக்கிறோம். எபிரேயர் 5:7ல் இயேசு மாம்சத்தில் இருந்த நாட்களில் தன்னை மரணத்திலிருந்து விடுவிக்க வல்லவரை நோக்கி பலத்த சத்தத்தோடும் கண்ணீரோடும் ஜெபம் பண்ணினார். ஆனால் அதே கண்கள் அவரை வேதனைப்படுத்தும் போது கோபாக்கினியின் கண்களாக நியாயத்தீர்ப்பின் கண்களாக அக்கினி ஜுவாலையான கண்களாய் மாறிவிடும். அவருடைய வீட்டிலே பிதாவின் வீட்டை கள்ளர் குகையாக்கின போது சவுக்கை கையில் எடுத்துக்கொண்டார். அவருடைய கண்கள் கோபத்தை கொப்பளித்தது. எப்போதும் அவர் பாசமுள்ள கண்களால் போவதில்லை. வெளிப்படுத்தின விசேஷத்தில் மூன்று இடங்களில் அவருடைய கண்கள் அக்கினி ஜுவாலை என்று எழுதியிருக்கிறது. வெளிப்படுத்தல் முதலாம் அதிகாரம் 14 ஆம் வசனம், இரண்டாம் அதிகாரம் 18 ஆம் வசனம், 19 ஆம் அதிகாரம் 12 ஆம் வசனம். இந்த மூன்று இடங்களிலும் அவருடைய கண்கள் அக்கினி ஜுவாலையைப் போல இருக்கிறது. அதே நேரத்தில் தம்முடைய ஊழியக்காரரை அவர் அக்கினி ஜுவாலையாய் மாற்றுகிறார் என்று எபிரேயர் 1:7 சங்கீதம் 104:4ல் சொல்லப்பட்டிருக்கிறது. அக்கினி ஜுவாலை ஆண்டவர் ஊற்றுகிற பல அபிஷேகங்கள்ல முக்கியமான அபிஷேகம் அக்கினி அபிஷேகம். சாத்தானுடைய கிரியைகளை சுட்டெரிக்க அக்கினி அபிஷேகத்தை ஊற்றுகிறார். பில்லி சூனிய கட்டுகளை சுட்டெரிக்க விக்கிரக ஆராதனையின் வல்லமையை சுட்டெரிக்க அசுத்தமான இச்சைகளை உங்களுடைய வாழ்க்கையிலிருந்து சுட்டெரிக்க பாவ சுபாவங்கள் சாபங்களைப் போல சர்ப்பத்தைப் போல பின்தொடர்ந்து வரும்போது சுட்டெரிக்க அவர் அக்கினி அபிஷேகத்தால தேவனுடைய பிள்ளைகளை நிரப்புகிறார். ஆகவே முதலாவது தியத்தீரா சபைக்கு அக்கினி ஜுவாலையை போன்ற கண்களை உடையவர்.

இரண்டாவதாக பிரகாசமான வெண்கலம் போன்ற பாதமுள்ள தேவகுமாரன். அவருடைய பாதங்களை பார்க்கும்போது அது பிரகாசமான வெண்கலம். ஒவ்வொரு உலோகத்துக்கும் ஒவ்வொரு தன்மை உண்டு. எப்போதுமே பொன் என்பது தெய்வீகத்தை குறிக்கிறது. பொன் என்பது தேவனுடைய பரிசுத்த குறிக்கிறது. வெள்ளி என்பது மீட்கும் பொருளைக் குறிக்கிறது. எப்போதும் வெள்ளி பணத்தால மீட்பார்கள். வெள்ளி என்பது மீட்பின் கிரயம் என்று அர்த்தம். வெண்கலம் என்பது நியாயத்தீர்ப்பு என்பது அர்த்தம். இரும்பு என்பது உறுதி என்பது அர்த்தம். இங்கே ஆண்டவர் சிலுவையின் வழியாக சென்றபடியால் சிலுவையின் வழியாக தேவனுடைய நம்மேல வரவேண்டிய நியாயத்தீர்ப்பை அவர் ஏற்றுக்கொண்டபடியால் அதனால அவருடைய பாதங்கள் ஆணிகளால் கடாவப்பட்டபடியால் இந்த வேத வசனம் சொல்லுகிறது உலைக்களத்திலே காய்ந்து காய்ந்து காய்ந்து பிரகாசமான வெண்கலம் போல அவருடைய பாதம் இருந்தது. பழைய ஏற்பாட்டிலே ஆசிரிப்புக் கூடாரத்தை பலிபீடத்தை செய்யும்போது சித்தி மரத்தால் அதை செய்திருந்தாலும் அதை சுற்றிலும் வெண்கலத் தகட்டால் மூடப்பட்டிருந்தது. வெண்கலம் என்பது நியாயத்தீர்ப்பு தகன பலியை அந்த வெண்கலம் தாங்கிக் கொள்ளும். அந்த சூடு தாங்கிக் கொள்ளும். ஆண்டவருடைய பாதங்கள் சிலுவையாகிய உலைக்களம் பாடுகளாகிய உலைக்களம் நியாயத்தீர்ப்பாகிய உலைக்களத்தின் வழியாக வந்தபடியால் அந்த பாதம் பிரகாசமான வெண்கலம் போல இருந்தது. இந்த பாதத்தண்டை மரியாள் வந்து உட்கார்ந்தாள். எனக்காக நியாயத்தீர்ப்பை ஏற்றுக்கொண்ட பாதங்கள். என்னை தேடி வந்த பாதங்கள். சுவிசேஷனுடைய பாதங்கள். மலையின் மேல் எவ்வளவு அழகாய் இருக்கிறது அப்படிப்பட்ட பாதங்கள் உம்முடைய பாதங்கள். கல்லில் இடராத பாதங்கள். கல்லில் இடாதபடிக்கு உம்மை தேவதூதர்கள் தம்முடைய கரங்கள் சுமந்து கொண்டு போவார்கள். கிறிஸ்தவ மார்க்கத்துக்கு ஆதாரமான பாதங்கள். ஆகவே இந்த இடத்திலே சகலவற்றையும் கீழ்படுத்துகிற அந்த பாதங்கள். ஆணிகளால் கடாவப்பட்ட பாதங்கள். பிசாசின் தலையை அவருடைய பாதங்கள் தான் நசுக்கி நம்மை சாத்தான் மேல் நம்முடைய பாதங்களை உறுதிப்படுத்துகிற பாதங்கள். அவர் மிதித்தபடியால் நாம் சாத்தானை மிதிக்கிறோம். சர்ப்பங்களையும் தேடுகளையும் மிதிக்கிற வல்லமை நம்முடைய பாதங்களுக்கு கொடுக்கிறார். சிங்கத்தின் மேலும் விரியன் பாம்பில் மேலும் நடக்கிற வல்லமை ஆண்டவர் நம்முடைய பாதங்களுக்கு கொடுக்கிறார். தெபரால் சொன்னாள் என் ஆத்துமாவே நீ பலவான்களை மிதித்தாய். எபிரேயர் 11 ஆம் அதிகாரம் மூன்றாம் வசனத்திலே வாசிக்கிறோம். அது போல இந்த சபைக்கு பொறுமை இருந்தது. ஆவியின் கனிகளில் ஒரு கனி நீடிய பொறுமை. ஆண்டவருடைய சுபாவம் நீடிய பொறுமை. மனம் திரும்பும்படி அவர் நீடிய பொறுமை உள்ளவராய் இருக்கிறார். தாமதிக்கிறார் என்று சிலர் எண்ணுகிறபடி அவர் தம்முடைய வாக்குத்தத்தத்தை குறித்து தாமதம் பண்ணாமல் எல்லாரும் மனம் திரும்ப வேண்டும் என்று நீடிய பொறுமை உள்ளவராய் இருக்கிறார். பாடுகளை சகிப்பதிலே இந்த தியத்தீரா சபை நீடிய பொறுமையாய் இருந்தது. எல்லாவற்றையும் ஆண்டவர் பாராட்டுகிறார். தன்னைப் பற்றி அறிமுகப்படுத்தினார். பாராட்ட வேண்டியதை பாராட்டினார். ஆறு காரியங்களை பாராட்டினார். அதற்குப் பிறகு தியேத்தியரா சபையினுடைய குறைகளை சுட்டிக் காண்பிக்கிறார்.

20 ஆம் வசனம் இவ்விதமாக சொல்லுகிறது. ஆகிலும் உன் பேரில் எனக்கு குறை உண்டு என்னவெனில், தன்னை தீர்க்கதரிசி என்று சொல்லுகிற ஏசபேல் என்னும் ஸ்திரீயானவள் என்னுடைய ஊழியக்காரர் வேசித்தனம் பண்ணவும் விக்கிரகங்களுக்கு படைத்தவைகளை புசிக்கவும் அவர்களுக்கு போதித்து அவர்களை வஞ்சிக்கும்படி நீ அவளுக்கு இடம் கொடுக்கிறாய்.

ஆண்டவருடைய சபைக்குள்ள ஒரு ஆவி பூந்தது. ஏசபேலின் ஆவி. இஸ்ரவேல் தேசத்தில் உங்களுக்கு எல்லாருக்கும் தெரியும். ஆகாப் ராஜாவினுடைய மனைவி ஏசபேல் என்றாலே த கண்ட்ரோலிங் ஸ்பிரிட். கர்த்தருடைய ஆவியானவர் சபையை கண்ட்ரோல் பண்ணி நடத்தும்போது இவா ஒரு பக்கம் இருந்து கண்ட்ரோல் பண்றது. ஆகாப் ராஜாவை கண்ட்ரோல் பண்ணது. அவருடைய மனைவி நாபால்ட்ட போய் உன் திராட்சைத் தோட்டத்தை கொடு ஆகாப் ராஜா கேட்டார். அவன் கொடுக்க மாட்டேன்ட்டான். ஏசபேல் ஏன் இதுக்கு போய் கவலைப்படுறீங்க. உடனே ஆட்களை அனுப்பினான். அவன் ராஜாவுக்கு விரோதமா பேசினான். ஆண்டவருக்கு விரோதமா அவன் தூஷணம் சொன்னான். நாலு சாட்சிகளை ஏற்படுத்தி கல்லெறிஞ்சு கொன்னு அவன் நிலகத்தை நிலகத்தை அபகரிச்சு ஆகாப் ராஜாவுக்கு கொடுத்துட்டான். ஆகாப் ராஜா தான் அரசாளுகிறான். பின்னால அவனும் அரசாளுகிறது. அவனும் அரசாளுகிறது. அவனுடைய மனைவி கண்ட்ரோலிங் ஸ்பிரிட்.

சில சபைகளுக்கு போகும்போது பார்க்கலாம். சில ஆண்களா இருக்கலாம் பெண்களா இருக்கலாம். நிறைய தசம பாகம் கொடுக்கிற மாதிரி கொடுக்கிறது. சபையில பொறுப்பான பதவி வைக்கிற போல வைக்கிறது. பாஸ்டரு உடைய உச்சி முடியை பிடிச்சு தான் சொன்னபடி தான் பாஸ்டர் கேட்கணும். இல்லைன்னா நான் சபையை விட்டு போயிருவேன். இல்ல நான் தசம பாகம் கொடுக்கிறதை விட்டு நிறுத்திடுவேன். இல்ல நான் ஒரு கூட்டம் பிரிஞ்சு தனியா வேற ஒரு சபை ஆரம்பிக்க போறேன். இதுதான் இந்த ஏசபேல் ஸ்பிரிட். இந்த ஏசபேல் ஒரு வேசியாய் இருந்தாள். அவளை கொன்னது எகு என்கிறவன் தான். கண்ணுக்கு மையை போட்டு சீவி சிங்காரிச்சது கொண்டு எகுவ தான் வசப்படுத்தனும் தன்னுடைய அழகான மயக்கணும் என்று நினைத்தாள். ஆனால் அந்த எகு மேல பார்த்து பிரதானிகள் என் பட்சத்தில் நிற்கிறது யாரு. அவளை கீழே தள்ளுங்க. அவள் கீழே விழுந்தாள். அவருடைய இரத்தம் சுவர்ல பட்டது. நாய்கள் அவருடைய மாம்சத்தை தின்னும். எப்பவோ எலியா சொன்ன தீர்க்கதரிசனம் அப்போது நிறைவேறினது.

சபைகளுக்குள்ள சில வேசித்தன ஆவிகள் நுழையும். திராட்சைத் தோட்டத்தை இருக்கிற சில குள்ள நறிகள் பூவும் பிஞ்சியுமாய் இருக்கிற இளம் விசுவாசிகளை வழிவிலகிப் போக பண்ணும்படி சில உபதேசங்கள் நுழையும். ஆண்டவர் இந்த இடத்துல அதை ஒரு ஏசபேல் என்ற பெண்ணுக்கு உருவகித்து அவருடைய போதனை குறித்து நீங்க ஜாக்கிரதையா இருங்க. அந்த போதனை பரிசுத்தத்துக்கு விரோதமான போதனை. உலகத்தோடு ஒட்ட ஒழுக செய்யப்போகிற ஒரு போதனை. இதை தந்திரமாக வருகிறது. சில வேளைகளில் தந்திரமான உபதேசம் வரும். தேவனுடைய பிள்ளைகளுக்கு பாடுகளே கிடைக்காது கிடையாது. எல்லாம் ப்ராஸ்பரிட்டி ப்ராஸ்பரிட்டி ப்ராஸ்பரிட்டி. ஒரு கார் வச்சிருக்கியா ரெண்டு கார். ஒரு பங்களா வச்சிருக்கியா ரெண்டு பங்களா. உனக்கு தருவார் எல்லாம் சில வாக்குத்தத்தங்களை எடுத்து வச்சு அதையே திரும்பத் திரும்ப திரும்ப நீ கிளைம் பண்ணி உனக்கு எல்லாம் கிடைக்கும். எல்லாம் கிடைக்கும். ஆனா உன் ஆத்துமாவில் இழைப்பு இருக்காது. இப்படிப்பட்டவங்க பார்த்தா சிலுவையை பத்தி பேசமாட்டாங்க. உபவாசத்தைப் பற்றி பேசமாட்டாங்க. எல்லாம் ஆண்டவர் செய்து முடிச்சுட்டார். நீ ஆசீர்வதிக்கப்படனும். அவன் பாவத்தில் வாழ்ந்துட்டு இருப்பான். அதை அதை சுட்டிக்காட்ட மாட்டார்.

அமெரிக்காவில் இப்படித்தான் ஒரு பிரசங்கியார் எப்போதும் செழுமை உபதேசம். நீ நல்லா இருக்கணும். நீ ராஜாதி ராஜா பிள்ளை. உனக்கு எந்த குறையும் இருக்கக்கூடாது. நீ பாவம் செய்தா ஆண்டவர் ஆட்டோமேட்டிக்கா மன்னிச்சிருவார். நீங்க இனிமே செய்யப்போற பாவத்துக்காக கூட சிலுவையில முன்னுமே இரத்தம் சேர்ந்துட்டார். அதனால என் பாவத்தை பற்றி யோசிக்கிறேன். நீ செய்ய செய்ய ஆண்டவர் அதை கழுவிட்டே இருப்பார். ஒரு நிறைய பணம் வந்தது அவருடைய சபையில திரள் கூட்டம். மற்ற சபைக்காவது ஒரு ஒரு ஆள் இரட்சிக்கப்பட்டு வரேன்னா பெரிய கஷ்டம். ஆனா இந்த சபையில கூட்டமா கூட்டம். காரா காரு இவருக்கும் இந்த பெரிய பங்களா வீடு எல்லாம் வந்தது. ஆனா ஆத்துமாவுல நிம்மதி. ஆதியில் தேவனோடு இருந்த உறவு இல்லை.

இந்த ஏசபேல் உபதேசங்கள் செழுமையை கொண்டு வந்தது. ஆண்டவருடைய வல்லமையை கொண்டுவரது காரு பங்களா கிடைச்சது. ஆனால் ஆண்டவருடைய பிரசன்னம் இருக்கல. ஒருநாள் ஆண்டவர் பலத்த சத்தத்தோடு இடி முழக்கம் போன்ற சத்தத்தோடு பேசினார். கோ பேக் டு த கிராஸ். கல்வாரி சிலுவைக்கு திரும்ப. சுகபோகமான பிரசங்கத்தை விட்டுட்டு செழுமையின் பிரசங்கத்தை விட்டுட்டு ஆதி அன்புக்கு திரும்பு. தேவனோடு உள்ள ஐக்கியத்துக்கு திரும்பு. அநேக ஏசபேல் உபதேசங்கள் கடைசி நாட்களில் அமெரிக்காவில் இருந்து பிளேன் பிளேனா இந்தியாவில் வந்து கள்ள உபதேசங்கள் இறங்கிட்டே இருக்கு. அருமையான தேவனுடைய பிள்ளைகளே யோவான் அவ்வளவு ஆண்டவருடைய நாமத்தின் மேல வைத்த அவ்வளவு பாடுபட்டார். அவ்வளவு உபத்திரவங்களை சகித்தார். அவர்கிட்ட போய் செழுமை உபதேசத்தை பேசினார். போய் போ உன் மூட்டையை உன் சரக்கை கட்டிப்போ. எனக்கு செழுமை வேணும்னா அது ஆவிக்குரிய செழுமையா இருக்கட்டும். ஆவிக்குரிய ஆசீர்வாதமா இருக்கட்டும். உலக ஆசீர்வாதங்களை பார்க்கிலும் மேலான ஆசீர்வாதங்கள் கர்த்தரிடத்தில் உண்டு. ஆபிரகாமின் ஆசீர்வாதத்தை மட்டும் பேசிக்கிட்டே இருக்கக்கூடாது. கிறிஸ்துவினுடைய பாடுகளினால அவருடைய சிலுவையினால வருகிற ஆவிக்குரிய ஆசீர்வாதங்கள் உன்னதத்துக்குரிய ஆசீர்வாதங்கள் அதுதான் மகா மேன்மையானது. உலகத்தில் 50 கார் இருந்தாலும் இந்த உலகத்தை விட்டு போகும்போது எல்லாத்தையும் போட்டுட்டு ஒரு குண்டூசியை கூட எடுத்துக்கிடாமல் தான் நம்ம போகப்போறோம். அல்லேலூயா அல்லேலூயா.

அருமையான தேவனுடைய பிள்ளைகளே பணத்தை பார்க்கிலும் அபிஷேகத்தின் வல்லமை எவ்வளவு மேன்மையானது. ஆண்டவருடைய கிருபை வரங்கள் எவ்வளவு மேன்மையானது. ஆகவே இந்த உபதேசங்களை குறித்து எச்சரிக்கமாய் இருக்கும்படி ஆண்டவர் இங்கே சொல்லுகிறார். ஏசபேலி என்னும் ஸ்திரீயானவள் என்னுடைய ஊழியக்காரர் வேசித்தனம் பண்ணவும் விக்கிரகங்களுக்கு படைத்தவைகளை புசிக்கவும் அவர்களுக்கு போதித்து அவர்கள் வஞ்சிக்கும்படி நீ அவர்களுக்கு இடம் கொடுக்கிறாய். அவள் மனம் திரும்பும் படியாய் அவளுக்கு தவனை கொடுத்தேன். ஆண்டவருடைய பெரிய இரக்கம் பாருங்க. ஒவ்வொருவருக்கும் மனம் திரும்பும்படி தவனை கொடுக்கிறேன். கோடாரி எனது மரங்களின் வேர் அருகில் உட்கார்ந்துகிட்டே இருக்கிறது. மனம் திரும்புறதுக்கு ஒரு தவனை வேர் பக்கத்தில் வந்தாச்சு. அது கோடாரி என்கிற நியாயத்தீர்ப்பு. நல்ல கனி கொடுக்கலனா அது வெட்டுண்டு அக்கினியில் போடப்படும். ஒரு அத்திமரத்தில் மூணு வருஷமா பழத்தை எதிர்பார்த்து கனி எதிர்பார்த்து ஆண்டவர் வந்தார். இல்ல. ஆண்டவர் சொன்னார் இன்னும் ஒரு வருஷம் மனம் திரும்ப இன்னொரு வருஷம் நான் கொத்தி எறி போட்டு பார்க்கிறேன். நல்ல கனி கொடுக்குமா பார்ப்போம். அதுபோல ஏசபேலாய் இருந்தாலும் சரி. ஆண்டவருக்கு பிரியமில்லாத துரு உபதேசத்தை கொண்டு வந்தாலும் சரி. மனம் திரும்பும்படி நான் தவனை கொடுத்தேன் என்று அதில் சொல்லுகிறார். அவள் மனம்.

திரும்பும்படி அவளுக்கு தவனை கொடுத்தேன். தன் வேசித்தன மார்க்கத்தை விட்டு மனம் திரும்ப அவளுக்கு விருப்பமில்லை. ஆகவே, இதோ அவளை கட்டில் கிடையாக்கி, அவளுடனே விபச்சாரம் செய்தவர்கள் தங்களுடைய கிரியைகளை விட்டு மனம் திரும்பாவிட்டால், அவர்களையும் மிகுந்த உபத்திரவத்தில் தள்ளி, அவளுடைய பிள்ளைகளையும் கொல்லவே கொல்லுவேன். அப்பொழுது நானே உள்ளந்திரியங்களையும் இருதயங்களையும் ஆராய்கிறவர் என்று எல்லா சபைகளும் அறிந்து கொள்ளும். ஆண்டவர் எவ்வளவு எவ்வளவு கடுமையாய் எச்சரிக்கிறார் பாருங்கள். எப்படியாவது பாதாளத்தின் வல்லமையிலிருந்து விடுதலையாக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு தான் கண்ணீரோடு எச்சரிக்கிறார். ஏற்கனவே அவள் செய்தது பாவம், அவள் செய்த துரோகம், அவள் செய்தது விபச்சாரம். எந்த சரீரத்துக்குள்ளே ஆவியானவர் தங்கியிருக்கிறாரோ, அந்த சரீரத்துக்கு விரோதமாக அவர் உள்ளே தங்கியிருக்கும் போதே அருவருப்பான கிரியை. ஆனாலும் அவளுக்கு ஒரு தவனை. அந்த தவனை அவள் பயன்படுத்தாமல் போனாள். அவளை கட்டில் கிடையாக்குவேன் என்று சொல்லுகிறார். கட்டில் கிடையாக்குவான்னா படுக்கையிலே போட்டு அப்படி என்று அல்ல. அவளுடைய வியாதி, அவளுக்கு நீடூள தரித்திரம். சில வார்த்தை நம்ம பழக்கத்துல சொல்றோம். ஏய் ஆண்டவரே படாத பல்லை தட்டிருவேன். பல்லை தட்டிருவேன்னா கல்லை எடுத்து கரெக்டா ஒவ்வொரு பல்லா டான் டான் டான் டான் டான் டான் தட்டி எடுக்கிறோமா? இல்ல, அது ஒரு வழக்கச் சொல். அது சில காரியத்தை ஆண்டவர் சில வழக்கச் சொல் மூலமாய் நமக்கு வெளிப்படுத்துகிறார்.

அவளை நான் கட்டில் கடையாக்குவேன். படுத்த படுக்கையில் வைக்க வேண்டியது வரும். இப்போதே கிருபையின் காரத்தில் அவர் மனம் திரும்பி இருக்கட்டும். இப்ப கட்டில் கடையிலும் கூட அவள் மனம் திருமலைன்னா, பாதாளத்துக்குள்ள புழுக்களே உன்னுடைய போர்வை, பூச்சிகளே உன்னுடைய படுக்கைன்னு ஏசாயாவில் வாசிக்கிறோமே. அக்கினியும் கந்தகம் எரிகிற கடல்ல அப்படி ஒரு படுக்கை ஆண்டவர் வைத்திருக்கிறாராம். புழுக்களே உன்னுடைய போர்வை, பூச்சிகளே உன்னுடைய படுக்கை. அவளை கட்டில் கடையாக்குவேன்.

அதுக்கு அடுத்து சொல்லுகிறார், ஜெயம் கொண்டு முடிவு பரியந்தம் என் கிரியைகளை கைக்கொள்ளுகிறவன் எவனோ, அவனுக்கு நான் என் பிதாவிடத்தில் அதிகாரம் பெற்றது போல ஜாதிகளின் மேல் அதிகாரம் கொடுப்பேன். கடைசியா ஆண்டவர் ஜெயம் கொள்ளும்போது உனக்கு என்னென்ன தருவேன் என்பதையும் அவர்களை சொல்லுகிறார். என்ன தருவாராம்? அதிகாரம் தருவேன். முடிவு பரியந்தம் என் கிரியைகளை கைக்கொள்ளுகிறவர்களுக்கு நான் என் பிதாவிடத்திலே அதிகாரம் பெற்றது போல மரித்து உயிரோடு எழுந்த பிறகு ஆண்டவர் சொன்னார், வானத்திலும் பூமியிலும் சகல அதிகாரம் எனக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது. மத்தேயு 28:18. வானத்திலும் பூமியிலும் சகல அதிகாரமும் பிதாவினால் எனக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது. அது என்ன அதிகாரம்? பாவங்களை மன்னிக்கிற அதிகாரம், நோய்களை குணமாக்குகிற அதிகாரம், பிசாசுகளை துரத்துகிற அதிகாரம், மரித்தோரை உயிரோடு எழுப்புகிற அதிகாரம், இயற்கையின் மேல் அதிகாரம், நியாயத்தீர்ப்பை கொடுக்கிற அதிகாரம். நான் பிதாவிடத்தில் அந்த அதிகாரத்தை நான் பெற்றேன். நீ ஜெயம் கொண்டவனாய் விளங்கும்போது நான் பிதாவிடத்தில் பெற்றுக்கொண்ட அவ்வளவு அதிகாரத்தை நான் உனக்கு கொடுப்பேன். பாதாளத்தின் வாசல்கள் ஒரு நாளும் சபையை மேற்கொள்ளாதபடி அந்த அதிகாரத்தை நீங்கள் பயன்படுத்தும் அதிகாரம் உள்ளவர்களாய் வாழணும். தேவ பிள்ளைகளுக்கு எப்போதும் ஒரு விசுவாசியின் அதிகாரம் என்ன? ஆண்டவர் என்னென்ன திறவுகோள்களை நம்முடைய கரங்களில் கொடுத்திருக்கிறார்? என்னென்ன அதிகாரங்களை கொடுத்திருக்கிறார்? என்னென்ன ஆளுகைகளை ஆண்டவர் கொடுத்திருக்கிறார்? ஆண்டவர் அதை சொல்லுகிறார்.

மாத்திரமல்ல, அவன் இருப்புக் கோலால் அவனை அவர்களை ஆளுவான். அவன் என்று சொல்லப்படுவது இயேசுவை குறிக்கிறது. இந்த தீர்க்கதரிசனம் இரண்டாம் சங்கீதத்தில் ஆண்டவருடைய மேசியாவுக்கான வாக்குத்தத்தமாய் கொடுக்கப்பட்டிருக்கிறது. நான் மீண்டும் இந்த வசனத்தை வாசித்துவிட்டு சங்கீதம் இரண்டிலே இயேசுவைக் குறித்த வாக்குத்தத்தத்தை நான் வாசிக்க விரும்புகிறேன். 26 ஆம் வசனம், ஜெயம் கொண்டு முடிவு பரியந்தம் என் கிரியைகளை கைக்கொள்ளுகிறவன் எவனோ, அவனுக்கு நான் என் பிதாவிடத்திலே அதிகாரம் பெற்றது போல ஜாதிகள் மேல் அதிகாரம் கொடுப்பேன். ஜாதிகள் மேல என்ன அதிகாரம் கொடுப்பேன்? சங்கீதம் எட்டு ரெண்டு எட்டு சொல்லுகிறது, என்னைக் கேளும் அப்பொழுது ஜாதிகளை உமக்கு சுதந்திரமாகவும் பூமியின் எல்லைகளை உமக்கு சொந்தமாகவும் கொடுப்பேன். இப்போ வெளிப்படுத்தல் இரண்டாம் அதிகாரம் 27 ஆம் வசனத்தை வாசிப்போம், அவன் இருப்புக்கோல் அவர்களை ஆளுகை செய்வான். அவர்கள் மண்பாண்டங்களைப் போல நொறுக்கப்படுவார்கள். இதை இரண்டாம் சங்கீதத்தில் வாசிக்கிறோம். ஒன்பதாம் வசனம் இவ்விதமாய் சொல்லுகிறது, இருப்புக்கோல் அவர்களை நொறுக்கி குயக்கலத்தைப் போல அவர்களை உடைத்துப் போடுவீர் என்று சொன்னார்.

அருமையான தேவனுடைய பிள்ளைகளே, இந்த இரண்டாம் சங்கீதம் மேசியாவைப் பற்றிய சங்கீதம். கடைசி இரண்டாம் சங்கீதத்தின் கடைசி வசனம் சொல்லுகிறது, குமாரன் கோபம் கொள்ளாமலும் நீங்கள் வழியில் அழியாமலும் இருக்கும்படி அவரை முத்தம் செய்யுங்கள். கொஞ்ச காலத்தில் அவருடைய கோபம் பற்றி எறியும். அவரை அண்டிக் கொள்ளுகிறவர்கள் பாக்கியவான். அருமையான தேவனுடைய பிள்ளைகளே, ஜெயம் கொள்ளுகிறவன் எவனோ, ஜெயம் கொள்ளுகிறவன் எவனோ.

சரி, சுருக்கமாய் நான் சொல்லுகிறேன். தேவனுடைய பிள்ளைகளுடைய அதிகாரம் என்ன? எழுதிக்கொள்ளுங்கள். முதல் அதிகாரம், அவருடைய பிள்ளைகள் ஆகும் அதிகாரம். யோவான் 1:12 சொல்லுகிறது, அவருடைய நாமத்தின் மேல் விசுவாசம் உள்ளவர்களாய் அவர்களை ஏற்றுக் கொண்டவர்கள் எத்தனை பேர்களோ அத்தனை பேர்களும் அவர்களுடைய பிள்ளைகள் ஆகும்படி அதிகாரம் கொடுத்தார். யோவான் 1:12. ரோமர் 8:15 சொல்லுகிறது, கர்த்தர் நமக்கு மீண்டும் அடிமைத்தனத்தின் ஆழ்வியை கொடாமல் அப்பா பிதாவே என்று அழைக்கிற புத்திர சுவிகார ஆவியை தந்திருக்கிறார். இரண்டாவது அதிகாரம், பிசாசுகளை துரத்துகிற அதிகாரம். லூக்கா 10:19, சங்கீதம் 91:13, மார்க் 16:17, மத்தேயு 10:1-2. மூன்றாவது, சுகமளிக்கிற குணமாக்குகிற அதிகாரம். லூக்கா 9:12, மார்க் 16:18, மத்தேயு 8:17, ஏசாயா 53:5, 1 பேதுரு 2:24. நான்கு, கட்டவிழ்கிற அதிகாரம். ஐந்து, கட்டுகிற அதிகாரம். கட்டவிழ்கிற அதிகாரம் மத்தேயு 16:19. பிசாசு கட்டினவைகளை நாம் அவிழ்கிறோம். அதே நேரம் அவனுடைய கிரியைகளை நாம் கட்டுகிறோம். அசுத்த ஆவிகளை கட்டுங்கள். குருட்டாத்தின் ஆவிகளை கட்டுங்கள். குடிகார ஆவியை கட்டுங்கள். அதே நேரம் 18 வருஷம் சாத்தானால் கட்டியிருந்த இந்த கூனியைப் போன்ற விடுதலை இல்லாமல் தவிக்கிறவர்களை கட்டவிழ்கிற அதிகாரத்தையும் ஆண்டவர் கொடுக்கிறார். ஆறாவதாக, இயற்கையின் மேல் அதிகாரம். ஆண்டவர் சொல்லுகிறார், என்னுடைய கையின் கிரியைகளை குறித்து எனக்கு கட்டளையிடுங்கள். சாதாரண யோசுவா ஒரு சூரியனைப் பார்த்து, சூரியனே கிபியோன் மேல அப்படியே தரித்து நில்லு. சந்திரனே நீ ஆயிலோன் மேல தரித்து நில்லு. அப்படியே நின்றது இயற்கையின் மேல் அதிகாரம். ஆகவேதான் இயேசு கடலின் மேல் நடந்து வந்தார். பேதுருவை பார்த்து நடக்கும்படி சொன்னார். தனக்கு இயற்கையின் மேல் அதிகாரம் இருந்ததுனால கொந்தளிப்பை அமரப்பண்ணினார். புயலை பார்த்து இறையாததை அமைதலாயிரு என்று சொன்னார். கப்சிப் என்று எல்லாம் அடங்கினது. இயற்கையின் மேல் அதிகாரம். ஏழாவது, அக்கினியின் மேல் அதிகாரம். சாத்ராக், மேஷாக், அபநேகோவை அக்கினி அவித்துப் போடவில்லை. அவனுடைய தலைமயிர் கருகவில்லை. அவருடைய வஸ்திரத்தின் மேல் அக்கினியின் மனம் வீசவில்லை. தானியேல் 3:19. ஏசாயா 43ல அக்கினியில் நடக்கும்போது வேகாதிருப்பாய். அக்கினி ஜுவாலை உன் பேரில் பற்றாது. அந்த அக்கினியின் மேல் அதிகாரம். எட்டாவதாக, மரணத்தின் மேல் அதிகாரம். மரணத்தின் மேல் அதிகாரம். இவர்களுக்கு மரணத்தின் மேல் அதிகாரம் இல்லை என்று வெளிப்படுத்தல் 20:6 வசனத்தை பார்க்கிறோம். பரிகரிக்கக்கூடிய கடைசி சத்துரு மரணம். ஒன்னு கொரிந்தியர் 15:26. மரணத்துக்கு நம்மேல் அதிகாரம் இல்லை. மரணத்தின் முதுகெலும்பை தட்டுகிறோம். மரணமே உன் கூறு எங்கே? பாதாளத்தை சவால் விடுகிறோம். பாதாளமே உன் ஜெயம் எங்கே? ஒன்று கொரிந்தியர் 15:55 ஆம் வசனம். மரணத்தின் மேல் அதிகாரம். மரணத்தின் மேல் அதிகாரம்.

ஆண்டவர் இன்னொரு காரியத்தையும் கூறுகிறார். ஜெயம் கொள்ளுகிறவன் [இசை] எவனோ, அவன் எனக்கு விடிவெள்ளி நட்சத்திரத்தையும் கொடுப்பேன். அந்த விடிவெள்ளி நட்சத்திரம் இயேசு கிறிஸ்து. அவர் தன்னையே கொடுப்பாராம். நான் தாவீதின் வேரும் பிரகாசமான விடிவெள்ளி நட்சத்திரமாய் இருக்கிறேன் என்று அவர் வெளிப்படுத்தல் 22:16ல சொன்னார். என்னையே நான் கொடுக்கப் போகிறேன். எண்ணாகமம் 24:17ல யாக்கோபிலிருந்து ஒரு நட்சத்திரம் தோன்றும். இஸ்ரவேலில் இருந்து ஒரு நட்சத்திரம் எழும்பும் என்று பீலையாம் தீர்க்கதரிசனம் சொன்னார். இயேசுவே அந்த அந்த வெடிவெள்ளி நட்சத்திரம். ஆமென். அல்லேலூயா. அல்லேலூயா.

அடுத்த சபைக்கு நாம் போகப்போகிறோம். முடிச்சிடலாம்னு நினைக்கிறேன். வெளிப்படுத்தல் மூன்றாம் அதிகாரம் ஒன்று முதல் ஆறு வசனங்களை வாசித்தால் அங்கே ஐந்தாவதாக ஒரு சபை எழுதப்பட்டிருக்கிறது. இந்த சபைக்கு ஆறு வசனங்கள் ஆண்டவர் ஒதுக்கி இருக்கிறார். எல்லாம் கிட்டத்தட்ட தெரிந்த காரியங்கள் தான் என்றாலும், அதை வேகமாக வாசித்து கடந்து செல்ல விரும்புகிறேன். சர்தை சபையின் தூதனுக்கு நீ எழுத வேண்டியது என்னவெனில், தேவனுடைய ஏழு ஆவிகளையும் ஏழு நட்சத்திரங்களையும் உடையவர் சொல்லுகிறதாவது, உன் கிரியைகளை அறிந்திருக்கிறேன். நீ உயிருள்ளவன் என்று பெயர் கொண்டிருந்த செத்தவனாய் இருக்கிறாய். நீ விழித்துக்கொண்டு சாகுறதற்கு ஏதுவானவைகளை ஸ்திரப்படுத்து. உன் கிரியைகளை உன் தேவனுக்கு முன் நிறைவுள்ளவைகளாய் நான் காணவில்லை. ஆகையால், நீ கேட்டு பெற்றுக்கொண்ட வகையை நினைவு கூர்ந்து, அதைக் கைக்கொண்டு மனம் திரும்பு. நீ வெளிராவிட்டால் திருடனைப் போல உன்மேல் வருவேன். நான் உன்மேல் வரும் வேளையை அறியாதிருப்பாய். ஆனாலும் தங்கள் வஸ்திரங்களை அசுப்படுத்தாத சிலர் சர்தையிலும் எனக்கு உண்டு. அவர்கள் பாத்திரவான்கள் ஆனபடியால் வெண் வஸ்திரம் தரித்து என்னோடு கூட நடப்பார்கள். ஜெயம் கொள்ளுகிறவன் எவனோ, அவனுக்கு வெண் வஸ்திரம் தரிப்பிக்கப்படும். ஜீவ புஸ்தகத்திலிருந்து அவனுடைய நாமத்தை கிறுக்கிப் போடாமல் என் பிதா முன்பாகவும் அவருடைய தூதர்களுக்கு முன்பாகவும் அவன் நாமத்தை அறிக்கையிடுவேன். ஆவியானவர் சபைகளுக்கு சொல்லுகிறதை காது உள்ளவன் கேட்கக் கடவன் என்று எழுது.

இங்கேயும் கூட அந்த ஏழு ஏழு என்று சொல்லுகிறார். ஏழு ஆவியை உடையவர், ஏழு நட்சத்திரங்கள். உங்களுக்கு ஒரு ஹோம்வொர்க் கொடுக்கலாம்னு பார்க்கிறேன். அடுத்த வாரம் வரும்போது வெளிப்படுத்தின விசேஷத்துல ஏழு என்கிறது என்ன? எத்தனை இடத்துல வருகிறது? இதான் எக்ஸாம். எக்ஸாம்க்கு இன்னும் தனி கேள்வி கொடுக்கல. இன்னைக்கு வச்சிருக்கிறது உங்க பேரை எழுதி, உங்க செல்போனை எழுதி, எங்கெங்கெல்லாம் வருது? எத்தனை தடவை ஏழு நட்சத்திரங்கள் வருது? எத்தனை இடத்துல ஏழு ஆவிங்கிறது வருது? ஏழு சபைகள் என்கிறது எத்தனை இடத்தில் வருது? எங்கெங்கெல்லாம் வருது? ஒன்னாம் அதிகாரத்திலிருந்து 22 ஆம் அதிகாரம் வரையிலும் ஏழு ஏழு வர்றதெல்லாம் நீங்க எழுதிக்கொண்டு வாருங்க.

சரி, இங்கே கர்த்தர் சர்தை சபைக்கு வழக்கமாய் சொல்லுகிறபடியே அவர் சொல்லிவிட்டு, நேரடியாய் தன்னுடைய செய்தியை அங்கே கொண்டு வருகிறார். ஒன்னாம் வசனத்தின் பின்பகுதி சொல்லுகிறது, நீ உயிருள்ளவன் என்று பெயர் கொண்டும் செத்தவனாய் இருக்கிறாய். ஆண்டவர் சரீரத்தைப் பார்க்கிறார், ஆத்துமாவையும் பார்க்கிறார். சரீரம் உயிருள்ளது என்று பெயர் கொண்டிருக்கிறது ஆனால் உள்ள இருக்கிற ஆத்துமா செத்துப் போயிருக்கிறது. சரீரம் தினமும் மூணு வேளை, நாலு வேளை, அஞ்சு வேளை சாப்பிடுது ஆனால் ஆத்துமா ஒன்னும் சாப்பிடாமல் செத்த நிலைமையில் இருக்கிறது. ஆண்டவர் ஆதாமை பார்த்து, இந்த பழத்தை புசிக்கிற நாள்ல நீ சாகவே சாவாய் என்று சொன்னார். அவனுடைய சரீரம் சாகல. அவன் பழத்தை பறிச்சு புசிச்ச பிறகும் 930 வருஷம் உயிரோடு வாழ்ந்தான். ஆனால் அவன் எந்த நேரம் அந்த கீழ்படியாமல் புசிச்சான், அப்போ அவருடைய ஆத்துமா உள்ளே செத்துப் போயிட்டு. மோட்டார் பைக்ல வேகமா ஓடிட்டு இருக்கும். ஸ்பீடா போயிட்டு இருக்கும்போதே இந்த கீ எடுத்தா வந்த ஸ்பீட்ல கொஞ்ச தூரம் ஓடும். கார்ல உள்ள கீயை ஆஃப் பண்ணா கூட வந்த ஸ்பீட்ல பிரேக்க போட்டாதான் நிக்கும். இல்லைன்னா போற ஸ்பீட்ல கொஞ்ச நேரம் ஓடும். இந்த சர்தை சபை ஆவிக்குரிய பிரகாரமாய் செத்து கிடந்தது ஆனால் அது சபை என்று பெயர் பெற்றிருந்தது. சில சபைகள் அப்படித்தான் பார்க்கிறோம். ஒரு சபையில் பிரசங்கம் பண்ண போனேன். செத்த சபை. காரணம் அந்த போதகர் மேல ஒரு அசுத்த ஆவி இருந்தது. அந்த அசுத்த ஆவி அந்த சபையில் உள்ள எல்லா விசுவாசிகளுக்கும் அந்த அசுத்த ஆவிகளுடைய ஆக்கிரமிப்பு இருந்தது. ஒரு தேவனுடைய பிரசன்னத்தை உணரவே முடியல. இந்த போதகரை விசுவாசிகளுக்கு முன்னால அந்த பேய் துரத்துறதுக்கு விசுவாசிகளுக்கு துரத்த முடிஞ்சது. போதகரை எப்படி துரத்துறது எனக்கு தெரியல. தனியாய் அவரை கூட்டிட்டு போய் அவருடைய மனைவியை வைத்து, அவர் மேல ஒரு செத்த ஆவி இருக்கிறது. அந்த ஆவி ஒரு பிரசங்கியாருடைய ஆவி. அந்த பிரசங்கியாருடைய ஆவி வரும்போது வெள்ளைக்காரனை போல அழகா பிரசங்கம் பண்ணுவார். ஜனங்கள் எல்லாம் ஆண் கேட்டுட்டு இருப்பாங்க. எத்தனை சபைகள் அப்படி இருக்கிறது? தேவ பிரசன்னத்தை உணர முடியாத எவ்வளவு சபைகள்?

ஆண்டவர் அதை கடிந்து கொள்ளுகிறார். தூங்குகிற நீ விழித்திரு. எபிரேயர் ஐந்து 14 சொல்லுகிறார், நீ மரித்தோரை விட்டு நீ எழுந்திரு. நீ மரித்தோரை விட்டு எழுந்திரு. அப்பொழுது உன்னை பிரகாசிப்பார் என்று சொல்லியிருக்கிறார். அருமையான தேவனுடைய பிள்ளைகளே, ஆவிக்குரிய மரணம் எவ்வளவு பரிதாபமான ஒரு மரணம். விழித்திருந்திரு. வெளித்திருந்து சாவுக்கு ஏதுவானவைகளை ஸ்திரப்படுத்து. ஆவிக்குரிய மரணத்திலிருந்து விழித்துக் கொள்ளனும். அப்போஸ்தலனாகிய பவுல் ரோமருக்கு எழுதும்போது மிகுந்த பாரத்தோடு எழுந்து எழுதுகிறார். எல்லாம் நித்திரை பண்றீங்க. சபையில கன நித்திரை. ஆவி பிடித்துட்டு நீங்க நித்திரை பண்றீங்களா? செத்துப் போயிட்டீங்களான்னு தெரியல. உலர்ந்த எலும்புகள் கிடக்கிறது போல இருக்கிறது. ரோமர் 13 ஆம் அதிகாரம் 16 ஆம் வசனம் இவ்விதமாய் சொல்லுகிறது, நித்திரை விட்டு எழுந்திருக்கத்தக்க வேலை இது என்று காலத்தை அறிந்தவர்களாய் இப்படி நடக்க வேண்டும். நாம் விசுவாசிகள் ஆனபோது இரட்சிப்பு நமக்கு சமீபமாய் இருந்தது போல இருந்ததை விட இப்பொழுது அது அதிக சமீபமாய் இருக்கிறது. அருமையான தேவனுடைய பிள்ளைகளே, இந்த சபையில பாராட்டுறதுக்கு ஒன்று இல்லை. ஒரு விசேஷமான எந்த காரியமும் எல்லா சபைக்கும் ஆண்டவர் பாராட்டு கொடுப்பார். இதுல பாருங்க, ஒரு பாராட்டு கிடைக்கல. ஒரு நல்ல குணம் இல்லை. இந்த எல்லா சபைகளிலும் ஒரு சின்ன சபையா தான் அந்த சர்தை சபை இருந்ததாம். ஆண்டவர் அதுல இறங்கி உலாவுன உடனே முதல் வார்த்தை சொல்றார், நீ செத்தவனாய் இருக்கிறாய். நீ செத்த இருக்கிறாய். ஒரு நல்ல குணாதிசயத்தை காண முடியவில்லை.

இரண்டாம் வசனம் இவ்விதமாய் சொல்லுகிறது, நீ விழித்துக்கொண்டு, விழித்துக்கொண்டு, மரித்தோரை விட்டு விழித்துக்கொண்டு மண்ணிலே நீ நித்திரை செய்கிறவனுக்கு ஒப்பாய் இருக்கிறாய். நீ விழித்துக்கொண்டு சாகுறதற்கு ஏதுவானவைகளை ஸ்திரப்படுத்து. உன்னுடைய கிரியைகள் தேவனுக்கு முன்பாக நிறைவுள்ளவராய் காணவில்லை. அதுக்கு முன்னால நாலு சபைகளிலும் அவருடைய கிரியைகளை குறித்து ஆண்டவர் பாராட்டினார். ஆனால் இந்த சபைக்கு சொல்லுகிறார், உன்னுடைய கிரியை குறித்து ஒன்னும் பாராட்ட முடியல.

மூன்றாம் வசனம், ஆகையால் நீ கேட்டு பெற்றுக்கொண்ட வகையை நினைவு கூர்ந்து, அதை கைக்கொண்டு மனம் திரும்பு. மனம் திரும்பு. நீ விழுத்து விட்டால் திருடனைப் போல உன்மேல் வருவேன். திருடனைப் போல வருவேன் என்றால் என்ன அர்த்தம்? கள்ளி மாதிரி வேஷம் போட்டு வருவேன் அர்த்தமா? எங்க ஊர்ல திருடன் வரும்போது கருப்பு பெயிண்ட் மாதிரி அடிச்சிட்டு, கறியை பூசிட்டு, மேல விளக்கெண்ணெய் ஊத்திட்டு வருவான். யாரும் பிடிச்சாச்சுன்னா வழிக்கு ஓடணும். இயேசுநாதர் அப்படி திருடனை போல வருகிறார் என்று ஒரு கல்லை மாதிரி அவருக்கு ஒரு ஒரு ஒரு ஒரு வேஷம் கொடுத்துறாதீங்க. திருடனை போல வருகிறார் என்றால் நினையாத நாழிகையில் வருவார் என்பது அர்த்தம். நீ எதிர்பார்க்காத நேரத்தில் வருவார். வருகையின் அடையாளத்தை சொல்லும்போது திருடன் வருகிற விதமாய் வருவேன். மத்தேயு 24 ஆம் அதிகாரத்தில் சொல்லுகிறார். ஆகவே, நீ ஆகவே நீ விழித்துக்கொள். ஆவிக்குரிய தூக்கத்திலிருந்து விழித்துக்கொள். பிசாசின் தந்திரங்களை அறியும்படி நீ சோதனையில் நீ விழுந்து விடாதபடி விழித்துக்கொள். உன்னை சுற்றிலும் இருக்கிற கள்ள போதகங்களுக்கு நீ விழித்துக்கொள். கிறிஸ்துவினுடைய வருகைக்கு நீ ஆயத்தமாகும்படி நீ விழித்துக்கொள்.

நீ விழித்திராவிட்டால் திருடனைப் போல உன்மேல் வருவேன். உன்மேல் வரும் வேலையை அறியாதிருப்பாய். நான்காவதாக, அவர் சொல்லுகிறார், ஆனாலும் தங்கள் வஸ்திரங்களை அசுப்படுத்தாத சிலர் சர்தையிலும் எனக்கு உண்டு. அவர்கள் பாத்திரவான்களாய் படியால் வெண் வஸ்திரம் தரித்து என்னோடு கூட நடப்பார்கள். ஜெயம் கொள்ளுகிறவன் எவனோ, அவனுக்கு வெண் வஸ்திரம் தற்பிக்கப்படும். வேதத்தில் ஏழு விதமான முக்கியமான வஸ்திரங்கள் இருக்கிறது. எழுதிக் கொள்ளுங்கள். அதோடு இன்றைக்கு இன்றைய வேத பாடத்தை நான் முடித்துக் கொள்ளுகிறேன். பலவித வஸ்திரங்களை வேதம் நமக்கு சொல்லுகிறது. பரலோகத்தின் நிறமே வெண்மையானது. பரிசுத்தவான்களுடைய நிறமே வெண்மையானது. பரிசுத்தவான்களுடைய வஸ்திரங்களும் வெண்மையானவை. வெளிப்படுத்தின விசேஷத்திலே வெண்மையான வஸ்திரம், வெண்மையான வஸ்திரம். உங்களுக்கு அடுத்த ஹோம்வொர்க் கொடுத்துறேன். வெளிப்படுத்தின விசேஷம் முழுவதிலும் எத்தனை வஸ்திரங்களைப் பற்றி எழுதியிருக்கிறது? கரெக்டா நீங்க பாயிண்ட் வைத்து எழுதி எழுதிக்கொண்டு வாருங்க. உங்களுக்கு ரெண்டே ரெண்டு கொஸ்டின் தான். ரொம்ப சிம்பிள் கொஸ்டின். இந்த ரெண்டு கொஸ்டின் நீங்க செய்யணும். ஒன்னு ஏழு, அடுத்தது வஸ்திரம்.

சரி, வேதத்தில் உள்ள முக்கியமான வஸ்திரம். முதலாவது ஆண்டவர் நமக்கு தருகிற ஒரு வஸ்திரம் உண்டு. ஏசாயா 61:10ல, அவர் எனக்கு இரட்சிப்பின் வஸ்திரங்களை உடுத்தினார். அதே 61:10ல, இரட்சிப்பின் வஸ்திரங்களை எனக்கு உடுத்தி, நீதியின் சால்வை அவர் எனக்குத் தரித்தார். மூன்றாவது, துதியின் உடையை குறித்து வேதத்தில் வாசிக்கிறோம். ஒடுங்கின ஆவிக்கு பதிலாக துதியின் உடையை கொடுக்க ஏசாயா 61:3ல வாசிக்கிறோம். நாலாவது, பரிசுத்த ஆவியின் வஸ்திரத்தைக் குறித்து, எழும்பு, எழும்பு சீயோனே, உன்னுடைய வல்லமையை தரித்துக் கொள். பரிசுத்த ஆவியையே வஸ்திரமாய் தரித்துக் கொள்வது அது வல்லமையின் வஸ்திரம். அதைக் குறித்து ஏசாயா 52:1 ஆம் வசனத்தில் வாசிக்கிறோம். ஐந்தாவதாக, மெல்லிய வஸ்திரம், சுத்தமும் பிரகாசமுமான மெல்லிய வஸ்திரம் என்று வெளிப்படுத்தல் 19:8ல வாசிக்கிறோம். மணவாளனுக்காக மணவாட்டியை ஆயத்தப்படுத்துகிற விதத்திலே ஆண்டவர் அந்த மெல்லிய வஸ்திரத்தை நமக்கு தந்தருளுகிறார். தேவதூதனுடைய உடை கூட சுத்தமும் பிரகாசமுமான வெள்ளிய வஸ்திரம் என்று வெளிப்படுத்தல் 15:6ல வாசிக்கிறோம். ஆறாவதாக, பொற்சருகை. சங்கீதம் 45:13 சொல்லுகிறது, ராஜகுமாரத்தி உள்ளாக பூரண மகிமை உள்ளவள். அவருடைய உடை பொற்சருகையாய் இருக்கிறது. ஏழாவதாக, சித்திரத் தையலாடையை குறித்து நாம் வாசிக்கிறோம். சங்கீதம் 45:14 எழுதப்பட்டிருக்கிறது, சித்திரத் தையலாடை தரித்தவளாய் ராஜாவிடத்தில் அழைத்துக் கொண்டு வரப்படுவாள். இந்த இடத்திலே வெண் வஸ்திரத்தை குறித்து ஆண்டவர் அதிகமாய் பேசுகிறார். உன் வஸ்திரங்கள் எப்போதும் வெள்ளையாயும் உன் தலைக்கு எண்ணெய் குறையாததாயும் இருப்பதாக. பிரசங்கி 9:8ல வாசிக்கிறோம். கடைசி காலத்தில் அநேகர் சுத்தமும் வெண்மையும் ஆக்கப்பட்டு புடமிடப்பட்டவர்களாய் விளங்குவார்கள். தானியேல் 12:10. நீ உடுத்திக் கொள்வதற்கு வெண் வஸ்திரங்களை என்னிடத்தில் வாங்கிக்கொள் என்று வெளிப்படுத்தல் 3:8ல வாசிக்கிறோம்.

இதோடு சர்தை சபையை குறித்து நான் முடித்துக் கொள்கிறேன். சர்தை சபையில் ரொம்ப விளக்கி சொல்லக்கூடிய அநேக காரியங்கள் இல்லை. இனி இன்னும் ரெண்டு சபைகள் இருக்கிறது. கர்த்தர் சித்தமானால் அடுத்த கிளாஸ்ல அந்த ரெண்டையும் முடிச்சிடலாம்னு நினைக்கிறேன். அதுக்கு பிறகு மிக முக்கியமான பகுதிகளுக்குள்ள மகா பரிசுத்த ஸ்தலம் போல பரலோக பார்லிமென்ட்டுக்குள்ள எப்படி நம்ம தலையை தலையிலிருந்து கால் வரையிலும் பிரைன் எவ்வளவு முக்கியமானதோ, வெளிப்படுத்தின ஒரு பிரைன் போல மூளை போல இருக்கிற நாலாம் அதிகாரத்துக்குள்ள நாம பயபக்தியோடு நுழையப் போகிறோம். ஆகவே கர்த்தர் உங்களை ஆயத்தப்படுத்துவாராக.

எழுந்து நிற்போமா? இந்த 11 மாதங்களும் கர்த்தர் நம்மோடு இருந்தார். விரைவில் நாம் 12 ஆம் மாதத்துக்குள் நுழையப் போகிறோம். ஒரு வருஷம் கடந்து போகப்போகிறது. ஒரு பக்தன் சொன்னார், மனுஷன் செலவழிக்கிற ஒவ்வொரு வினாடி நேரமும் அவனுடைய கல்லறையை நோக்கி ஓடிக்கொண்டிருக்கிறது. நான் அதை நம்புவதில்லை. நாம் கல்லறையை நோக்கி ஓடவில்லை. கர்த்தருடைய வருகையை நோக்கி ஓடிக்கொண்டிருக்கிறோம். மகிமையின் மேல் மகிமை அடைகிற நாளை நோக்கி ஓடிக்கொண்டிருக்கிறோம். நம் அருமை இரட்சகரை கண்குளி காண்கிற நாட்களை நோக்கி, எக்கால சத்தம் ஓ ஊதப்படுகிற நாட்களை நோக்கி ஓடிக்கொண்டிருக்கிறோம். பிதாவின் மகிமை பொருந்தினவராய் இயேசு கிறிஸ்து வரப்போகிற நாட்களை நோக்கி ஓடிக்கொண்டிருக்கிறோம். ஆரவாரத்தோடும் பிரதான தூதனுடைய சத்தத்தோடும் எக்கால சத்தத்தோடும் அவர் வானத்திலிருந்து புறப்பட்டு வருகிற நாளை நோக்கி ஓடிக்கொண்டிருக்கிறோம். காலங்கள் வேகமாய் ஓடிக்கொண்டிருக்கிறது. கர்த்தருடைய வருகை மிகவும் சமீபமாகிவிட்டது. கர்த்தர் சபைகளுக்கு எச்சரிப்பை கொடுக்கிறார், ஆலோசனை கொடுக்கிறார், வாக்குத்தத்தங்களை கொடுக்கிறார். பரிசுத்தமுள்ளவன் இன்னும் பரிசுத்தமாகட்டும். சீக்கிரமாய் வருகிறேன் என்று சொல்லுகிறார். சீக்கிரமாய் வருகிறேன். வருகிறவர் கொஞ்ச காலத்திலே வருவார். அவர் தாமதம் பண்ணார் தாமதிக்கிறார் என்று சிலர் எண்ணுகிறபடி அவர் வருகை குறித்து தாமதமாய் இராமல் எல்லாரும் மனம் திரும்ப வேண்டுமென்று நீடிய பொறுமை உள்ளவராய் இருக்கிறார். நம்மேல் அவர் நீடிய பொறுமை உள்ளவராய் இருக்கிறார். ஆமென். அல்லேலூயா. க்ளோரி. மகிமை. மகிமை.

பிரியமானவர்களே, உங்கள் வாழ்க்கையில் சோதனையா? தோல்வியா? வியாதியா? மனபாரமா? எங்களிடம் பகிர்ந்து கொள்ளுங்களேன். உங்கள் பிரச்சனைகளுக்காக சகோதரர் சாம் ஜெபது அவர்கள் ஊக்கமாக ஜெபித்து ஆலோசனை வழங்குவார்கள். எங்கள் அலுவலக ஊழியர்கள் தொடர் சங்கி ஜெபம் மூலம் உங்கள் தேவைகளுக்காக கர்த்தரின் பாதத்தில் கண்ணீருடன் ஜெபிப்பார்கள். மட்டுமல்ல, உங்கள் அவசர ஜெப தேவைகளுக்கு ஜெபித்து மன்றாட எங்கள் ஜெப வீரர்கள் காத்துக்கொண்டிருக்கின்றனர். இன்று எங்களுக்கு எழுதுங்கள். கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நிச்சயமாக அற்புதம் செய்வார்.

பிரியமான அவர்களே, 16 ஆண்டுகளாய் வருமான வரி இலாக்காவில் பணியாற்றிக் கொண்டிருந்த சகோதரர் சாம் ஜெபத்துறை அவர்கள் தேவனுடைய உன்னதமான அழைப்பிற்கு கீழ்படிந்து தனது வேலையை ராஜினாமா செய்து கர்த்தருடைய முழுநேர ஊழியத்திற்காக 1985 ஆம் ஆண்டு தன்னை ஒப்புக்கொடுத்தார். கர்த்தரின் விசேஷித்த கிருபையால் வல்லமையான எழுத்துக்களின் மூலம் 700க்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதி வெளியிட்டுள்ளார். கர்த்தர் தந்த பாரத்தின் வெளிப்பாடான அன்றுள்ள அப்பம் என்ற தின தியான நூல் இன்று இந்தியாவில் மட்டுமின்றி உலகமெங்கும் பல்லாயிரக்கணக்கான குடும்ப ஜெபங்களில் ஒரு முக்கிய அங்கம் வகிக்கிறது. சகோதரர் சாம் ஜெபத்துறை அவர்கள் எழுதிய நூல்கள், செய்தி ஒலி மற்றும் ஒளிநாடாக்கள் அடங்கிய அட்டவணையை இலவசமாக பெற்றுக்கொள்ள இன்றே எங்களுக்கு எழுதுங்கள். உங்கள் வாழ்வில் மேலும் மாறுதல்கள் ஏற்பட இயேசு கிறிஸ்து இன்னும் அதிகமாய் தெரிந்து கொள்ள அவருடைய ஆசீர்வாதங்களை பெற்றுக்கொள்ள ஒவ்வொரு வாரமும் புதன்கிழமைகளில் எங்கள் அலுவலகத்தில் மாலை 6:00 மணிக்கு நடைபெறும் கூட்டங்களில் பங்கு பெறுங்கள். கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் அற்புதங்களையும் ஆசீர்வாதங்களையும் பெற்றுக்கொள்ள அன்போடு உங்களை அழைக்கிறோம். [இசை]