📱

Get Our Mobile App

Take your business learning on the go!

Download on the App StoreGet it on Google Play

Revelation Bible Study Part- 4

Antantulla Appam1:00:10

Transcription

[இசை] [இசை] [இசை]

வெளிப்படுத்தல் இரண்டாம் அதிகாரத்துக்குள் நாம் செல்லப் போகிறோம். முதலாம் அதிகாரத்தில் அப்போஸ்தலர் யோவான் ஒரு முன்னுரையைப் போல நம்மோடு கூட பேசினார். உயிர்த்தெழுந்த இயேசு எப்படி மகிமையின் ராஜாவாய் காட்சி அளித்தார்? அதுவரை மனுஷகுமாரனாய் தன்னை காண்பித்தவர் பத்மத்தீவிலே தன்னை எப்படி தேவகுமாரன் வெளிப்படுத்தினார் என்பதை எல்லாம் முதலாம் அதிகாரத்திலே பார்த்தோம்.

இரண்டாம் அதிகாரத்துக்கு வரும்போது ஆண்டவர் நேராய் சபைகளை குறித்து அவர் பேச ஆரம்பிக்கிறார். இரண்டாம் அதிகாரத்தில் நான்கு சபைகளைக் குறித்தும், மூன்றாம் அதிகாரத்தில் மூன்று சபைகளைக் குறித்தும் ஆக மொத்தம் ஏழு சபைகளை நமக்கு முன்பாக அவர் நிறுத்துகிறார். அது இரண்டாம், மூன்றாம் அதிகாரம் முடித்த பிறகு பரலோகத்தை காண்பிக்கிறார். சிங்காசனத்தை காண்பிக்கிறார். சிங்காசனம் எப்படி இருக்கிறது? வீற்றிருக்கிறவர் எப்படி இருக்கிறார்? சிங்காசனத்தின் மேலே எப்படி ஒரு வானவில் இருக்கிறது? அதற்கு முன்பாக எப்படி ஒரு கண்ணாடிக் கடல் இருக்கிறது? சகலவற்றையும் நாலாம், ஐந்தாம் அதிகாரத்திலே அவர் சொல்லுகிறார்.

ஆறாம் அதிகாரத்துக்கு வரும்போது ஏழு முத்திரை உடைக்கிறது பார்க்கிறோம். ஆறாம், ஏழாம் அதிகாரத்தில், எட்டாம் அதிகாரத்தில் ஏழு எக்காள துணிக்கப்படுகிறதை பார்க்கிறோம். பிறகு ஏழு கோபாக்கினை கலசங்கள் ஊற்றப்படுகிறது. ஆகவே ஆண்டவர் அந்திகிறிஸ்து உடைய காட்சி சொல்வதற்கு முன்பாக, பரலோகத்தின் பல பகுதிகளை வெளிப்பாடுகளை கொடுப்பதற்கு முன்பாக, பாதாளத்தின் பல பகுதிகளை சொல்வதற்கு முன்பாக, அந்திகிறிஸ்துவையும் சாத்தானுடைய நித்தியத்தையும் குறித்து பேசுகிறதற்கு முன்பாக சபைகளைக் குறித்து ஆண்டவர் பேசுகிறார்.

இரண்டாம் அதிகாரத்தை முதல்ல ஒன்றிலிருந்து ஏழு வசனங்களை நான் வாசிக்க விரும்புகிறேன். "எபேசு சபையின் தூதனுக்கு நீ எழுத வேண்டியது என்னவெனில்: ஏழு நட்சத்திரங்களை தம்முடைய வலது கரத்தில் ஏந்திக்கொண்டு, ஏழு குத்து விளக்குகளின் மத்தியில் உலாவிக் கொண்டிருக்கிறவர் சொல்லுகிறதாவது: உன் கிரியைகளையும், உன் பிரயாசத்தையும், உன் பொறுமையையும், நீ பொல்லாதவர்களை சகிக்க கூடாமல் இருக்கிறதையும், அப்போஸ்தலர் அல்லாதவர்கள் தங்களை அப்போஸ்தலர் என்று சொல்லுகிறதையும் நீ சோதித்து, அவர்களை பொய்யர் என்று கண்டறிந்ததையும், நீ சகித்துக் கொண்டிருக்கிறதையும், பொறுமையாய் இருக்கிறதையும், என் நாமத்தின் நிமித்தம் இழைப்படையாமல் பிரயாசப்படுகிறதையும் அறிந்திருக்கிறேன். ஆனாலும், நீ ஆதியில் கொண்டிருந்த அன்பை விட்டாய் என்று உன் பேரில் எனக்கு குறை உண்டு. ஆகையால், நீ என்ன நிலையிலிருந்து விழுந்தாய் என்பதை நினைத்து மனம் திரும்பி, ஆதியில் செய்த கிரியைகளை செய்வாயாக; இல்லாவிட்டால் நான் சீக்கிரமாய் உன்னிடத்தில் வந்து, நீ மனம் திரும்பாத பட்சத்தில் உன் விளக்குத் தண்டை அதனிடத்திலிருந்து நீக்கி விடுவேன். நான் வெறுக்கிற நிக்கோலாய் மதசரையின் கிரியைகளை நீனும் வெறுக்கிறாய்; இது உன்னிடத்தில் உண்டு. ஆவியானவர் சபைகளுக்கு சொல்லுகிறதை காதுள்ளவன் கேட்கக் கடவன். ஜெயம் கொள்ளுகிறவன் எவனோ அவனுக்கு தேவனுடைய பரதேசியின் மத்தியில் இருக்கிற ஜீவ விருட்சத்தின் கனியை புசிக்க கொடுப்பேன் என்று எழுதுகிறார்."

ஏழு சபைகள் அதிலே குறைகள் இருந்தது, நிறைவுகள் இருந்தன. ஆண்டவர் அந்த சபைகளுக்கு சில வாக்குத்தத்தங்களை கொடுத்தார். சில குறைபாடுகளை நீக்க வேண்டும் என்று எச்சரிப்பை கொடுத்தார். மனம் திரும்பும் போது என்ன காரியத்தை செய்வேன் என்று ஆண்டவர் சொன்னார். மனம் திரும்பாத பட்சத்தில் என்ன விதமான நியாயத்தீர்ப்பை சந்திக்க வேண்டியது இருக்கும் என்று சொன்னார். முடிவிலே ஜெயம் கொள்ளுகிறவன் எவனோ, ஜெயம் கொள்ளுகிறவன் எவனோ என்று ஒவ்வொரு சபைக்கும் எழுதினார். ஏழு சபைகளிலும் முடிவிலே ஜெயம் கொள்ளுகிறவன் எவனோ என்று பார்க்கலாம்.

ஜெயம் கொள்ளுகிறவன் எவனோ என்ற வார்த்தை வேதத்திலே எட்டு முறை வருகிறது. கடைசியாக வெளிப்படுத்தல் 21:7லே சொல்லும்போது, "ஜெயம் கொள்ளுகிறவன் எல்லாவற்றையும் சுதந்தரித்துக் கொள்ளுவான்; நான் அவனுக்கு பிதாவாய் இருப்பேன், அவன் எனக்கு குமாரனாய் இருப்பான்" என்று சொல்லுகிறார். நம்முடைய ஆண்டவர் ஜெயம் உலகத்தையும், மாம்சத்தையும் ஜெயம் கொண்டார். பிசாசையும், மரணத்தையும் ஜெயம் கொண்டார். பாதாளத்தின் வல்லமைகளை ஜெயம் கொண்டார். நம்மை ஜெயம் கொண்டவர்களாய் நிறுத்துகிறது தான் ஆண்டவருடைய வேலை. ஒவ்வொரு சபையையும் ஒரு ஜெயம் கொண்ட பரிசுத்தவான்களாய் ஆண்டவர் மாற்ற வேண்டும் என்ற ஒரு எதிர்பார்ப்போடு இருக்கிறார். அதற்காகத்தான் இந்த ஆலோசனைகள் அவர் சொல்லுகிறார். வாக்குத்தத்தங்களை கொடுக்கிறார். கண்டிக்க வேண்டிய இடத்திலே கண்டிக்கிற தட்டிக்கொடுத்து, பாராட்ட வேண்டிய இடத்திலே அவர் பாராட்டுகிறார்.

அவர் சொல்லுகிறார், "நான் ஜெயம் கொண்டு என்னுடைய பிதாவின் சிங்காசனத்தில் வீற்றிருக்கிறது போல, ஜெயம் கொள்ளுகிறவனும் என்னுடனே என்னுடைய சிங்காசனத்தில் வீற்றிருக்கும்படி அருள் செய்வேன்." பரலோகத்தில் ஒரு பெரிய சிங்காசனம் பிதாவாகிய தேவன் அதில் இருக்கிறார். இயேசு சொல்லுகிறார், "நான் ஜெயம் கொண்டு என்னுடைய பிதாவினுடைய வலது பாரிசத்தில் நான் வீற்றிருக்கிறேன்." அதே சிங்காசனத்திலே உங்களுக்கென்று ஒரு ரிசர்வ் பண்ணி வைத்திருக்கிறேன். ஜெயம் கொள்ளுகிறவன் எவனோ, என்னுடனே என்னுடைய சிங்காசனத்திலே வீற்றிருக்கும்படி அருள் செய்வேன். உலகத்தில் அதைவிட ஒரு பெரிய வாக்குத்தத்தம் வேறு ஒன்றும் இருக்க முடியாது.

அவர் நம்மை கிறிஸ்துவுக்குள்ளே எழுப்பி, உன்னதங்களில் அவரோடு கூட உலாவும்படி செய்தார். உன்னதங்களில் அவரோடு வீற்றிருக்கும்படி ஆண்டவர் செய்தார். உலகத் தோற்றத்துக்கு முன்பாகவே ஆண்டவர் பரலோகத்தை ஆயத்தம் பண்ணிவிட்டார். அந்த பரலோகத்தை சுதந்தரிப்பதற்கு சபையிலே ஒரு கூட்டத்தை ஆயத்தம் பண்ண வேண்டியதுதான் ஒரு முக்கியமான கடமை. ஒரு மணவாட்டியை ஆயத்தம் பண்ண முடியாமல் அவர் மணவாளனாய் வீற்றிருக்க முடியாது. புது வீடு எல்லாம் பார்த்தாச்சு, வீட்டுக்கு வேண்டிய பொருள் எல்லாம் வாங்கியாச்சு, ஆனா பொண்ணுதான் கிடைக்கல அப்படின்னு ஒரு மாப்பிள்ளை வருத்தப்பட்டுட்டு இருந்தார்ன்னா, அவர் நம்ம என்ன சொல்லுவோம்?

ஆண்டவர் நமக்கு நித்திய வீடுகளை இப்போ ஆரம்பிக்கலையாம். உலகத் தோற்றத்துக்கு முன்னாலேயே அவர் நமக்கு எல்லாவற்றையும் அரேந்து பண்ணிவிட்டார். இந்த ஏழு சபைகளில் இருந்து ஜெயம் கொண்ட பரிசுத்தவான்களை உருவாக்கணும். சபை என்பது ஒரு ஸ்திரீ, ஒரு பிள்ளையை பெற்றெடுத்து சிங்காசனத்தை கொடுக்கணும். அதைத்தான் வெளிப்படுதல் 12 ஆம் அதிகாரத்தில் நாம் வாசிக்கிறோம். சபை என்றால் ஏதோ ஆட்டம் பாட்டம், கொஞ்சம் ஆராதனை, ஒரு பிரசங்கம், நாலு கதைகள் அது அல்ல. சபை என்றால் அதை கரைதரையற்ற மணவாட்டியாய் தேவ சமூகத்திலே நிறுத்தணும். அதுதான் முக்கியம்.

ஒரு சபையினுடைய நோக்கம் என்ன? கொலோசியர் 1:28 சொல்லுகிறது, "எந்த மனுஷனையும் கிறிஸ்து இயேசு தேறினவனாய் நிலைநிறுத்தும்படி அவரையே நாங்கள் உபதேசிக்கிறோம், பிரசங்கம் பண்ணுகிறோம்." சபையினுடைய நோக்கம் உண்மையாய் சபைக்கு வருகிற தேவனுடைய பிள்ளைகளை அந்த பரலோக ராஜ்ஜியத்துக்கு பங்குள்ளவர்களாக மாற்றணும். அந்த பரம அழைப்புக்கு தகுதி உள்ளவர்களாக மாற்றணும். சிங்காசனத்தில் வீற்றிருக்க செய்யணும். ஜெயம் கொண்டவர்களாய் விளங்க செய்யணும்.

அப்போஸ்தலர் 20:28ல, "இயேசு தம்முடைய சுய இரத்தத்தினாலே சம்பாதித்த சபை" என்று அவர் சொல்லுகிறார். ஆதாம் ஒரு மணவாட்டி. இயேசுவுக்கு ஒரு மணவாட்டி. ஆதாம் மணவாட்டியை ஆதாமுக்கு மணவாட்டியை கொண்டுவர வேண்டும் என்றால் ஆதாம் நித்திரை அடைய வேண்டியது அவசியமாக இருந்தது. நித்திரை செய்யும்போது உன்னுடைய விலா எலும்பிலிருந்து ஒரு எலும்பை எடுத்து மணவாட்டியாய் உருவாக்கினார். இரண்டாம் ஆதமாகிய இயேசு கிறிஸ்து சிலுவையிலே நித்திரை அடைய வேண்டியதுதா இருந்தது. அவருடைய விலா குத்தி கிழிக்கப்பட்டது. அங்கிருந்து இரத்தமும் தண்ணீரும் புறப்பட்டது. அந்த சுய இரத்தத்தினாலே மணவாட்டியை ஆண்டவர் உருவாக்கினார். அந்த மணவாட்டியை தான் ஜெயம் கொண்டு கொண்ட ஒரு மகளாக தேவனுடைய சன்னிதானத்தில் நிறுத்தும்படி ஐந்து வகை ஊழியக்காரர்களை சபையிலே ஆண்டவர் ஏற்படுத்தினார். அப்போஸ்தலர்களை, தீர்க்கதரிசிகளை, சுவிசேஷர்களை, மேய்ப்பர்களை, போதகர்களை சபையில் ஏற்படுத்த காரணம் என்ன? இந்த சபையிலிருந்து ஒரு ஜெயம் கொண்ட பரிசுத்தவான்களை பரலோகத்தில் கொண்டு நிறுத்த வேண்டும் என்பதுதான் ஆண்டவருடைய நோக்கம்.

சபை என்று சொல்லுவது இன்றைக்கு பல சபைகளை குறித்து நாம் சொல்லுகிறோம். ஆதி அப்போஸ்தல நாட்களில் ஏழு சபைகள் இருந்தன. முதல் சபை எபேசு. வெளிப்படுத்தல் இரண்டாம் அதிகாரம் ஒன்று முதல் ஏழு வசனங்களில் எபேசு சபை குறித்து ஆண்டவர் சொல்லுகிறார். இரண்டாவது சபை சிமிர்னா. வெளிப்படுத்தல் இரண்டாம் அதிகாரம் எட்டாம் வசனம் முதல் 11 ஆம் வசனம் வரையிலும் நாலு வசனங்கள் சிமிர்னா சபையைப் பற்றி சொல்லுகிறார். மூன்றாவது சபை பெர்குமு என்று அழைக்கப்படுகிறது. வெளிப்படுத்தல் இரண்டாம் அதிகாரம் 12 ஆம் வசனத்திலிருந்து 17 ஆம் வசனம் வரையிலும் மொத்தம் ஆறு வசனங்கள் பெர்குமு சபையை குறித்து அவர் எழுதுகிறார். நான்காவது சபை தியத்தீரா என்று அழைக்கப்படுகிற சபை. வெளிப்படுத்தல் இரண்டாம் அதிகாரம் 18 முதல் 29 வசனங்கள் மொத்தம் 12 வசனங்கள் அந்த தியத்தேரா சபையை குறித்து அவர் எழுதுகிறார். ஐந்தாவது சபையினுடைய பெயர் சர்தை. வெளிப்படுத்தல் மூன்றாம் அதிகாரம் ஒன்றாம் வசனம் முதல் ஆறாம் வசனம் வரை மொத்தம் ஆறு வசனங்கள் இந்த சர்தை சபையைப் பற்றி சொல்லுகிறார். ஆறாவது சபை பிலடெல்பியா என்கிற சபை. வெளிப்படுத்தல் மூன்றாம் அதிகாரம் ஏழாம் வசனத்திலிருந்து 13 ஆம் வசனம் வரையிலும் ஏழு வசனங்கள் அந்த பிலாடெல்பியா சபையை குறித்து பேசுகிறார். ஏழாவது சபை லவோதிக்கா சபை. அந்த லவோதிக்கா சபையை குறித்து வெளிப்படுதல் 13 ஆம் அதிகாரம் 14 ஆம் வசனத்திலிருந்து 22 ஆம் வசனம் வரையிலும் ஒன்பது வசனங்களிலே சொல்லுகிறார்.

அந்த காலத்தில் இருந்த அந்த ஏழு சபைகளையும் ஒரு பட்டணங்கள். அது எந்த இருப்பிடமோ அதை வைத்து அவர்கள் அழைத்தார்கள். இன்றைக்கு பல சபைகளை நாம் பார்க்கிறோம். சிஎஸ்ஐ சபை என்று சொல்லுகிறோம், லுத்தரன் சபை என்று சொல்லுகிறோம், ஆங்கிலேக்கன் சபை என்று சொல்லுகிறோம், பெந்தகோஸ்தே சபை என்று சொல்லுகிறோம். பலவிதமான சபைகளுக்கு பல பெயர்கள் வைத்திருக்கிறோம். இருக்கிறார்கள். பல விதமான உபதேசங்கள் இருக்கிறது. ஆனால் இந்த சபையிலிருந்து ஒரு மணவாட்டியை உருவாக்கணும். அந்த ஒரு மணவாட்டி என் பிரியமையோ, என் என் புறாவோ, என் உத்தமியோ ஒருத்தியே. உன்னத பாட்டு ஆறாம் அதிகாரத்தில் வாசிக்கலாமா? ஒருத்தி தான் அந்த மணவாட்டியாய் மாறுகிறாள். ஒரு அந்த ஒரு கூட்ட ஜனங்கள் ஒரே எண்ணம் உள்ளவள். ஆண்டவரை நேசிக்கிற ஒரு மணவாட்டியாய் மாறுகிறாள்.

சபை என்பது என்ன? எபிரேயர் 12 ஆம் அதிகாரம் 23 ஆம் வசனத்தில் சொல்லப்பட்டிருக்கிறது, "பரலோகத்தில் பேர் எழுதப்பட்ட சர்வ சங்கமாகிய சபை" விளக்கம் அதுதான். இன்னைக்கு பலரும் பல சபைகள் பெயர் வைத்துக் கொள்ளலாம். இந்த சபைக்கு வந்தாத்தான் பரலோகத்துக்கு நீ போவா. சிலர் சொல்லலாம், எங்க சபை தான் மணவாட்டி சபையாய் மாறப்போகிறது என்று. இன்னொரு கூட்டத்தார் சொல்லலாம். ஆனால் உண்மையான தேவனுடைய சபை என்பது என்ன? எப்போது ஒரு மனிதன் இரட்சிக்கப்படுகிறானோ அவன் பரலோகத்திலே பெயர் எழுதப்படுகிறான். இரட்சிக்கப்பட்ட நாளிலிருந்து அவன் பூரண வளர்ச்சி அடையும் போதுதான் ஜெயம் கொண்டவனாய் ஆண்டவருடைய சமூகத்தில் நிறுத்த முடியும்.

பலபேர் பல பேர்களை வைத்திருக்கிறதை பற்றி ஆண்டவருக்கு பிரச்சனை இல்லை. ஆண்டவருடைய நோக்கம் என்ன? நீ இயேசுவைப் போல பூரணப்படனும். அவருடைய நிறைவான வளர்ச்சிக்கு நீ வரணும். கரை திறையற்றவனாய் கர்த்தருடைய சன்னிதானத்திலே நீ நிற்க வேண்டும். அதைத்தான் ஆண்டவர் விரும்புகிறார். பல பேர்களை குறித்து நாம் கவலைப்பட வேண்டியதில்லை. தேவனுடைய பிள்ளைகளே, இன்றைக்கு கர்த்தருடைய வருகை சமீபமாய் இருக்கிற வேளையிலே ஒரு கூட்டம் உத்தமமான ஜனத்தை ஆயத்தப்படுத்த வேண்டும் என்பதற்காக பரிசுத்த ஆவியானவரை ஆண்டவர் பொழிந்தருளுகிறார்.

பரிசுத்த ஆவியானவர் என்பவர் பழைய ஏற்பாட்டிலே எலியேசருக்கு அடையாளமானவர். ஈசாக்குக்கு ஒரு பெண் தேடும்படி ஆபிரகாம் பிதாவுக்கு அடையாளமான ஆபிரகாம் எலியேசர்ட்ட சொல்லுகிறார், "பரிசுத்த ஆவியானவருக்கு அடையாளமான எலியேசர்ட்ட என்னுடைய மகனுக்கு ஒரு பெண்ணை கொன்றனும், அவளை தேடிப்போ." அதுபோல தான் பரலோகத்திலிருந்து பிதாவாகிய தேவன் பரிசுத்த ஆவியானவரை பூமிக்கு அனுப்பி, "என்னுடைய ஒரே பேரான குமாரன் பல பாடுகள் பட்டு மரித்து உயிரோடு எழுந்து சிங்காசனத்தில் வீற்றிருக்கிறார். பரிசுத்த ஆவியானவரே, நீ போய் இயேசுவுக்கு ஒரு மணவாட்டியை ஆயத்தப்படுத்திக் கொண்டு வா." அதற்காகத்தான் ஆவியானவர் பூமியிலே பொழியப்பட்டு இருக்கிறார். நம்மை ஒரு மணவாட்டியாய் மாற்றுவது அதற்காகத்தான் நமக்குள்ளே தங்கியிருக்கிறார்.

கிறிஸ்துவினுடைய வருகையிலே நாம் தேவனுடைய பிள்ளைகளை அழைத்துக் கொண்டு மணவாளனாகிய கிறிஸ்துவுக்கு எதிர்கொண்டு போகும்போது அந்த பரிசுத்த ஆவியானவர் தான் நம்மை அழைத்துக் கொண்டு போவார். எந்த நிமிஷம் கர்த்தருடைய வருகை இருக்கிறதோ அப்பொழுது சபையின் காலம் பூமியிலே முடிந்து போகும். விழுந்து போனவர்கள் தான் சபைக்குள்ளே உட்கார்ந்து இருப்பார்கள். அது அந்திகிறிஸ்துவினுடைய ஆட்சிக்குள்ளே போய்விடும். அதற்குப் பிறகு ஜனங்கள் இரட்சிக்கப்படுவது மகா அரிது. பரிசுத்த ஆவியானவர் எடுத்துக்கொள்ளப்படுகிற நேரம் வந்துவிட்டது. அப்படிப்பட்ட ஒரு முக்கியமான காலகட்டத்திலே நாம் நின்று கொண்டிருக்கிறோம்.

சரி, ஆண்டவர் முதல்ல எபேசு என்கிற சபையை நமக்கு காண்பிக்கிறார். எபேசு என்ற வார்த்தைக்கு விரும்பப்படத்தக்கது என்று அர்த்தம். விரும்பப்படத்தக்கது. இந்த எபேசுவை குறித்து அநேக புத்தகங்கள் எழுதி இருக்கிறது. ஒன்று கொரிந்தியர் மூணாம் அதிகாரத்தில் நம்ம இந்த எபேசு சபையை குறித்து வாசிக்கிறோம். எபேசியர் நாலாம் அதிகாரம், திமு ஒன்னு, திமோத்தேயு ரெண்டு, திமோத்தேயு, வெளிப்படுத்தின விசேஷங்கள் எல்லாம் அதிகமாய் பேசப்படுகிற ஒரு சபை எபேசு என்கிற சபை. சில சபைகளைப் பற்றி ஒண்ணுமே மற்ற சபைகளில் எழுதப்படவே இல்லை. சிமிர்னா சபையைப் பற்றி எந்தவிதமான குறிப்புகளும் எந்த நிருபத்திலும் எழுதப்படவில்லை. ஆனால் இயேசுவை குறித்து அதிகமாய் எழுதப்பட்டிருக்கிறது.

அப்போஸ்தலனாகிய பவுல் வந்து அங்கே முதல்ல ஊழியம் செய்தார். அவருடைய ஊழியம் எப்படிப்பட்டதாய் இருந்தது? அப்போஸ்தலர் 18 ஆம் அதிகாரம் 19 லிருந்து 21 வரை வாசிக்கிறோம். அவர் ஊழியம் செய்து போன பிறகு அப்பல்லோ என்று சொல்லப்பட்ட ஒரு வேத அறிஞர், சமர்த்தான ஒரு பிரசங்கி அவர் வந்து பிரசங்கித்தார். அதை 18 ஆம் அதிகாரம் அப்போஸ்தலர் 18 ஆம் அதிகாரம் 24 ஆம் வசனத்தில் வாசிக்கிறோம். மீண்டும் அப்போஸ்தலனாகிய பவுல் 19 ஆம் அதிகாரம் ஆறாம் அதிகாரத்தில் அங்கே வந்தார். பரிசுத்த ஆவியை குறித்து சொன்னார். அவர் கைகளை வைத்தபோது பரிசுத்த ஆவி அபிஷேகத்தை பெற்றுக் கொண்டார்கள். அதைக் குறித்து நாம் வாசிக்கிறோம். அதே எபேசு சபையிலே திமோத்தே வந்து ஊழியம் செய்ததை ஒன்று திமோத்தே ஒன்றாம் அதிகாரம் ஆறாம் வசனத்தில் வாசிக்கிறோம். அதே சபையிலே எபேசுலே ஆக்கிலா பிரிசிலா வந்ததை ரெண்டு திமோத்தேயு அதிகாரம் 19 ஆம் வசனத்திலே வாசிக்கிறோம்.

எபேசு ஒரு முக்கியமான இடம். ரோமாபுரி மன்னர்கள் கிறிஸ்தவர்களை சித்திரவதை செய்யும்போது மரண தண்டனைக்கு தீர்ப்பளிக்கும் போது அவருடைய கைகள் கால்கள் விலங்கிடப்பட்டு ரோமாபுரிக்கு எபேசு வழியாகத்தான் அவர்களை அழைத்துக் கொண்டு போவார்களாம். சிலரை உயிரோடு எரிக்கும்படி, சிலர் தலையில் தார் ஊற்றி தீளுத்தும்படி, சிலரை சிங்கங்களுக்கு இறையாகும்படி எபேசு வழியாகத்தான் அவர்களை அழைத்துக் கொண்டு போவது வழக்கமாய் இருந்தது என்று வாசிக்கிறோம்.

அருமையான தேவனுடைய பிள்ளைகளே, எபேசு ரொம்ப முக்கியமானது. அப்போஸ்தலனாகிய பவுல் தன்னுடைய அந்திய காலத்தை எபேசுல தான் செலவழித்தார். அவர் பத்மு தீவுக்கு நாடு கடத்தப்படுவதற்கு நீரோ என்ற ரோமாபுரி பேரரசன் காரணம். அப்படி நாடு கடத்தும் போடும்போது எபேசுல இருந்து தான் அவர் நாடு கடத்தப்பட்டார். அந்த எபேசுல இருக்கிற நேரம் அவர் மூன்று நிருபங்களை எழுதினார். ஒன்னு யோவான், இரண்டு யோவான், மூன்று யோவான். கிபி 70 முதல் 90 வரையிலும் இந்த நிருபங்களை அவர் எபேசுல இருந்து தான் எழுதினார். அதுபோல பத்மு சிறையிருப்பிலே ஆண்டவர் பரலோகத்தை கொடுத்த தரிசனங்களை எல்லாம் குறிப்பெடுத்து வைத்திருந்தவர் எபேசுக்கு திரும்ப வந்து விடுதலையாக்கப்பட்டபோது அந்த எபேசு இருந்து தான் அவர் அந்த வெளிப்படுத்தின விசேஷத்தை எழுதி இருந்திருக்க வேண்டும்.

அருமையான தேவனுடைய பிள்ளைகளே, கிறிஸ்துவினுடைய சுவிசேஷம் வருவதற்கு முன்பு அநேக மாயவித்தைக்காரர்கள், மந்திரவாதிகள் அவர்கள் நிறைய மந்திர புத்தகங்களை எல்லாம் வெளியிட்டு வந்த ஒரு இடம்தான். ஒரு பிசாசின் கோட்டையாய் இருந்த இடம்தான் எபேசியாய் இருந்தது என்று அப்போஸ்தலர் 19 ஆம் அதிகாரம் 19 ஆம் வசனத்தில் பார்க்கிறோம். சுவிசேஷம் அறிவிக்கப்பட்டபோது அவர்கள் எல்லாம் அதைக் கொண்டுவந்து தீக்கொளுத்தினார்கள்.

சரி, ஒன்றாம் வசனத்தை நான் வாசிக்கிறேன். "எபேசு சபையின் தூதனுக்கு நீ எழுத வேண்டியது என்னவெனில்: ஏழு நட்சத்திரங்களை தமது வலது கரத்தில் ஏந்திக்கொண்டு..." ஆண்டவரைக் குறித்து காண்பிக்கிறார்கள். அவருடைய கையை காண்பிக்கிறார்கள். அவருடைய கரம் பெரிய கரம், பிரகாசமான கரம், ஓங்கிய உயர்த்தினாலும் உயர்ந்த கரத்தினாலும் இஸ்ரவேலரை மீட்டெடுத்து வந்த கரம், ஆணிப்பாய்ந்த கரம், இரத்தம் ஒழுகுகிற கரம், தழும்புகள் உள்ள கரம். ஆனால் அந்த கரத்திலே ஏழு நட்சத்திரங்களை கைகளில் ஏந்திக்கொண்டு உலாவுகிறார். ஒவ்வொரு நட்சத்திரமும் சூரியனை பார்க்கிலும் கோடி கோடி கோடி மடங்கு பெரியது. உலகத்தை பார்க்கிலும் கோடான கோடி பெரியவை, மகா பிரகாசமானவை, அக்கினிமயமானவை. அதை கையிலே வைத்துக்கொண்டு அவர் உலாவுகிறார் என்றால் அவர் எவ்வளவு பெரியவராய் இருப்பார்? எவ்வளவு கம்பீரமானவராய் இருப்பார்?

இந்த நட்சத்திரங்கள் சபைக்கு அடையாளமாய் இருக்கிறது. ஏழு சபைகளும் ஆண்டவர் எங்கே வைத்திருக்கிறாராம்? தம்முடைய காயப்பட்ட கரத்திலே வைத்திருக்கிறார். தனிப்பட்ட முறையிலே ஒவ்வொரு விசுவாசியையும் ஆண்டவர் தம்முடைய காயப்பட்ட கரத்திலே வரைந்திருக்கிறார். "உன்னை என் உள்ளம் கைகளில் வரைந்திருக்கிறேன், உன் மதில்கள் எப்போதும் எனக்கு முன்பாக இருக்கிறது." ஒரு தனிப்பட்ட விசுவாசி ஆனாலும் சரி, சபையானாலும் சரி, தன்னுடைய உள்ளம் கைகளிலே ஆண்டவர் வரைந்திருக்கிறார்.

இந்த இடத்திலே ரெண்டு ஏழு, ஏழு என்று ஆண்டவர் சொல்லுகிறார். ஏழு நட்சத்திரங்களை ஏந்தி, ஏழு குத்து விளக்குகளின் மத்தியிலே உலாவுகிறவர். வேதத்தில் ஏழு என்று எண் மிக மிக முக்கியமானது. ஏழு என்று சொன்னாலே என்ன அர்த்தம்னா பூரணம் என்று எல்லாருக்கும் தெரியும். ஒன்று என்ற எண் ஒன்றான மெய் தேவனாகிய கர்த்தரை குறிக்கிறது. இரண்டு என்ற எண் ஐக்கியத்தை குறிக்கிறது, ஒருமனப்பாட்டை குறிக்கிறது. மூன்று என்ற எண் திருத்துவத்தை குறிக்கிறது. நான்கு என்ற எண் சுவிசேஷத்தை குறிக்கிறது. ஐந்து என்ற எண் தேவனுடைய கிருபையை குறிக்கிறது. ஆறு என்ற எண் மனுஷிகத்தை குறிக்கிறது. ஏழு என்ற

எண் பூரணத்தை குறிக்கிறது. எட்டு என்ற எண் மறுபிறப்பை குறிக்கிறது. ஒன்பது என்ற எண் ஆவியின் வரங்களை குறிக்கிறது, கனிகளை குறிக்கிறது. ஏழு குத்துவிளக்குகளின் மத்தியிலே, ஏழு சபைகளின் மத்தியிலே ஆண்டவர் அன்போடு கூட பாசத்தோடு உயிர்ப்பிக்கிற வல்லமையோடு அற்புதம் செய்யும்போது, அப்படியாக ஆண்டவர் நம்முடைய மத்தியிலே உலாவி வருகிறவர். சபை ஆராதனை நேரங்களில் உலாவி வருகிறவர். ரெண்டு பேர் மூன்று பேர் அவருடைய நாமத்திலே கூடி வரும்போது அவருடைய மத்தியிலே அவர் உலாவி வருகிறவர் என்று மத்தேயு 18:20லே வாசிக்கிறோம். இந்த வசனத்தை மீண்டும் [இசை] வாசிக்கிறேன்.

எபேசு சபை தூதனுக்கு நீ எழுத வேண்டியது என்னவென்றால், "ஏழு நட்சத்திரங்களை தன்னுடைய வலது கரத்தில் ஏந்திக்கொண்டு, ஏழு குத்து விளக்குகளின் மத்தியிலே உலாவுகிறவர் சொல்லுகிறதாவது." குத்து விளக்கு அது பொன்னால் செய்யப்பட்டது. வெளிப்படுத்தின விசேஷம் முழுவதிலும் அநேக குறிகள், ரகசியங்கள். எப்படி இயேசு உவமையில் சொன்னாரோ, அதேபோல நிறைய ரகசிய வார்த்தைகள் இருக்கிறது. பொன் என்ற வார்த்தை வெளிப்படுத்தின விசேஷத்துக்கு வரும்போது, அது ரெண்டு அர்த்தம் கொடுக்கிறது. ஒன்று பொன் என்றால் பரிசுத்தத்தை காண்பிக்கிறது, அடுத்தது பொன் என்றால் விசுவாசத்தை காண்பிக்கிறது. பழைய ஏற்பாட்டில் உள்ள அநேக காரியங்கள் புதிய ஏற்பாட்டில் அடையாளமாய் இருந்தன. பழைய ஏற்பாட்டில் நிழலாய் இருந்தது புதிய ஏற்பாட்டில் நிஜமாய் இருந்தது. பழைய ஏற்பாட்டில் பொன் குத்து விளக்குகளை நாம் பார்க்கிறோம். ஆசிரிப்புக் கூடாரத்திலே, பரிசுத்த ஸ்தலத்திலே வெளிச்சம் கொடுப்பதற்காக குத்து விளக்கை ஆண்டவர் வைக்கிறார் என்று சொன்னார்.

ஆசிரிப்புக் கூடாரம் மூன்று பகுதிகளால் ஆனது. முதல் பகுதி வெளிப்பிரகாரம்; எல்லா இஸ்ரவேலனும் அங்கே வர முடியும்; அங்கே வெளிச்சம் கொடுக்க சூரியனுடைய வெளிச்சம் தான் நிறைந்தது. இரண்டாவது பரிசுத்த ஸ்தலம்; பரிசுத்த ஸ்தலத்தில் வெளிச்சம் கொடுப்பதற்கு பொன்னால் செய்யப்பட்ட குத்து விளக்குகளை உண்டு பண்ண வேண்டும் என்று ஆண்டவர் மோசேயோடு சொன்னார். பழைய ஏற்பாட்டில் அந்த குத்து விளக்கு ஏழு அகல்களை உடையது; நடுவில் ஒன்று, வலதுபுறம் ஆறு அகல்கள், அடுத்த பக்கத்தில் ஆறு அகல்கள்; மொத்தம் ஏழு அகல்கள், பூரணமாய் வெளிச்சம் கொடுக்கக்கூடியது. அந்த வெளிச்சம் என்பது வேதத்தின் மறைபொருட்களை வெளிப்படுத்துகிற இடம், வேதத்தை தியானிக்கிற மனுஷனுக்கு வேதத்தில் உள்ள ஆழங்களை ஆண்டவர் சொல்லிக் கொடுக்கிற இடம். அருமையான தேவனுடைய பிள்ளைகளே, பரிசுத்தத்தோடும் விசுவாசத்தோடும் தேவ சன்னிதிக்கு வரவேண்டும் என்பதைத்தான் அந்த பொன் நமக்கு விளக்கிக் கொண்டிருக்கிறது.

வேதத்தில் யாக்கோபு தன்னுடைய நிருபத்திலே, சாரி ஒன்னு, பேதுரு ஒன்றாம் அதிகாரம் ஏழாம் வசனம் இவ்விதமாய் சொல்லுகிறது: "அழிந்து போகிற பொன்னானது அக்கினியால் சோதிக்கப்படும்; அழிந்து போகிற பொன்னானது அக்கினியால் சோதிக்கப்படும்; ஆனால் அதைப் பார்க்கிலும் விலையேறப்பெற்ற உங்கள் விசுவாசமானது." உங்களுடைய விசுவாசம் விசுவாசம் பொன்னை பார்க்கிலும் விலையேறப்பெற்றது. தேவாலயத்தை பரிசுத்தமாக்குகிற பொன் என்று வேதத்தில் வாசிக்கிறோம். ஆண்டவர் தன்னுடைய பணிமூட்டுகளை எல்லாம் பொன்னினாலே செய்ய வேண்டும் என்று சொன்னார்; பரிசுத்தத்தையும் விசுவாசத்தையும் அது காண்பித்துக் கொண்டே இருக்கிறது. எபிரேயர் 11 ஆம் அதிகாரம் முழுவதும் ஆண்டவர் விசுவாசத்தைப் பற்றி, விசுவாசத்தைப் பற்றி அந்த பொன் குத்து விளக்குகள் மத்தியிலே உலாவுகிறவர் எழுதி வைத்தார். எபிரேயர் 11:6லே அவர் சொன்னார்: "விசுவாசம் இல்லாமல் தேவனுக்கு பிரியமாய் இருப்பது கூடாத காரியம்; தேவனை விசுவாசிக்கிறவன் அவர் உண்டு என்பதையும், அவர் ஜெபத்துக்கு பதிலளிக்கிறவர் என்பதையும் விசுவாசிக்க வேண்டும்." ஆண்டவர் தாமே நம்முடைய விசுவாசத்தை ஆரம்பிக்கிறவர். எபிரேயர் 12 ஆம் அதிகாரம் முதலாம் வசனம் சொல்லுகிறது: "மேகம் போன்ற திரளான சாட்சிகள் நம்மை சூழ்ந்து கொண்டிருக்க, பாரமான யாவற்றையும் நம்மை நெருக்குகிற பாவத்தையும் தள்ளிவிட்டு, விசுவாசத்தை ஆரம்பிக்கிறவர் விசுவாசத்தை முடிய செய்கிறவருமாகிய கிறிஸ்து இயேசுவை நோக்கி, தேவன் நமக்கு அழைத்திருக்கிற அந்த ஓட்டத்திலே பொறுமையோடு கூட ஓடக்கடவோம்." விசுவாசம் தான் அந்த பொன் குத்து விளக்குகளுக்கு ஒரு அடையாளமாய் இருக்கிறது.

சரி, அதற்குப் பிறகு அந்த எபேசு சபைக்கு ஆண்டவர் பல பாராட்டுகளை எட்டு காரியங்கள் குறித்து அவர் பாராட்டுகிறார். முதலாவது, "உன் கிரியைகளை அறிந்திருக்கிறார்." இரண்டாவது வசனத்தை பாருங்கள். மீண்டும் ஒன்னாம் வசனத்தில் வாசிக்கிறேன்: "எபேசு சபையின் தூதனுக்கு நீ எழுத வேண்டியது என்னவெனில், ஏழு நட்சத்திரங்களை தன்னுடைய கையிலே கரத்தில் ஏந்திக்கொண்டு, ஏழு குத்து விளக்குகளின் மத்தியில் உலாவிக் கொண்டிருக்கிறவர் சொல்லுகிறதாவது." முதல்ல ஆண்டவர் பாராட்ட ஆரம்பிக்கிறார். நல்ல குணத்தை ஆண்டவர் சொல்லி தட்டிக் கொடுக்கிறார். எப்போதுமே நீங்க ஒரு மனுஷனிடத்தில் குறையை சொல்றதுக்கு முன்னால, அவனைப் பற்றி கொஞ்சம் புகழுங்க; அவன்ல இருக்கிற நல்ல காரியத்தை சொல்லுங்க. உங்களுடைய பிள்ளைகள் நல்லா மார்க் எடுத்துட்டு வரும்போது பிள்ளைகளை பாராட்டுங்க. ஆண்டவர் பாராட்டுகிறார். ஆண்டவர் ஒவ்வொன்றையும் கவனித்து இருக்கிறார்; வெறும் குற்றம் கண்டுபிடிக்கிறது மட்டும் இல்லை. அவர் எப்போதுமே நம்மை தட்டிக் கொடுத்து உற்சாகப்படுத்துகிறவர். கமான், யூ கேன் டூ இட்; நீ அதை செய்ய முடியும்; நீ அதை செய்ய முடியும். மற்றவங்க செய்தாங்க; மற்றவங்க ஓட்டத்தை வெற்றியோடு ஓடி முடித்தாங்க; உன்னால முடியும். உற்சாகப்படுத்துகிறார். இங்கே எட்டு காரியங்களை சொல்லி ஆண்டவர் பாராட்டுகிறதை பார்க்கிறோம்.

முதலாவது சொல்லுகிறார்: "உன் கிரியைகளையும் உன் கிரியைகளை அறிந்திருக்கிறேன்." இரண்டாவது: "உன்னுடைய பிரயாசத்தை அறிந்திருக்கிறேன்." மூன்றாவது: "உன்னுடைய பொறுமையை அறிந்திருக்கிறேன்." நாலாவது: "நீ பொல்லாதவர்களை சகிக்க கூடாமல் இருக்கிறதை அறிந்திருக்கிறேன்." ஐந்தாவது: "அப்போஸ்தலர் அல்லாதவர்கள் தங்களை அப்போஸ்தலர் என்று சொல்லுகிற, நீ சோதித்து அவர்களை பொய்யர் என்று கண்டறிந்ததை அறிந்திருக்கிறேன்." ஆறாவது: "நீ சகித்துக் கொண்டிருக்கிறதை." ஏழாவது: "நீ பொறுமையாய் இருக்கிறதை." எட்டாவது: "என் நாமத்தின் நிமித்தம் இளைப்படையாமல் பிரயாசப்பட்டதையும் நான் அறிந்திருக்கிறேன்." எட்டு பாராட்டுகளை ஆண்டவர் அங்கே கொடுக்கிறார்; எட்டு பாராட்டுகள். ஆனால் இங்கே விசேஷமாய் ஒரு பாராட்டுதலை ஒரு ஐந்து நிமிடம் நான் உங்களோடு சொல்ல விரும்புகிறேன். எபேசு சபை, அப்போஸ்தலர்கள் அல்லாதவர்களை அப்போஸ்தலர்கள் என்று தங்களை சொல்லிக் கொண்டிருக்கிறதை கண்டறிந்தது; அதான் ஆண்டவர் பாராட்டுகிறார். போலி அப்போஸ்தலர், கள்ள அப்போஸ்தலர், கள்ள தீர்க்கதரிசி, கள்ள வேலையாள்; இவெல்லாம் நடித்துக் கொண்டிருக்கிறவர். இவர்கள் எல்லாம் நீ கண்டறிந்தாய், கண்டறிந்தாய். இந்த கடைசி காலத்துல அநேக பொய்யின் கட்டவிழ்க்கப்பட்டிருக்கின்றது; அநேக போலி ஊழியக்காரர்கள், போலி தீர்க்கதரிசிகள் எழும்பி இருக்கிறார்கள். எபேசு சபை என்ன ஆண்டவரிடத்தில் ஒரு வரத்தை கேட்டார்கள்? முக்கியமாக என்ன வரம் தெரியுமா? கள்ள அப்போஸ்தலர்களை கண்டுபிடிக்கிற வரம், கள்ள தீர்க்கதரிசிகளை கண்டுபிடிக்கிற வரம், ஆட்டுத்தோலை போர்த்துக் கொண்டு வருகிற ஓநாய்களை கண்டுபிடிக்கிற வரம். நல்ல நோட்டு எது, நல்ல ஆயிரம் நோட்டு எது, கள்ள ஆயிரம் நோட்டு எது என்று கண்டுபிடிக்கிற வரம். அந்த வரத்துக்கு "ஆவிகளை பகுத்துணருகிற வரம்" என்று பெயர். இந்த ஆவிகளை பகுத்து உணருகிற வரத்தால் தான் ஒரு கள்ள தீர்க்கதரிசியை கண்டுபிடித்து கையோடு பிடித்துக் கொள்ளலாம்.

அப்போஸ்தலனாகிய யோவான் எழுதினார், ஒன்று யோவான் நாலு ஒன்னுல: "என் பிள்ளைகளே, இந்த கடைசி காலத்திலே அநேக அந்திகிறிஸ்து உடைய ஆவிகள் வந்து கொண்டிருப்பதால், எல்லா ஆவிகளையும் நீங்கள் நம்பாமல், இவைகள் கர்த்தரிடத்திலிருந்து வந்ததா என்று நீங்கள் சோதித்துப் பாருங்கள்." எல்லா அப்போஸ்தலன் சொல்றவரை, எல்லா ஊழியக்காரனையும், பைபிளை தூக்கிட்டு வர்றவங்க எல்லாம் நீ நம்பிராத, நீ நம்பிராத. நீ புறாவை போல கபடு இல்லாமல் இருக்கலாம், ஆனால் சர்ப்பத்தை போல நீ வினா உள்ளவனா இருக்கணும். இயேசுவும் கூட எச்சரித்தார்: "கடைசி காலத்தில் கள்ள தீர்க்கதரிசிகள் பெருகிப் போவார்கள்." மத்தேயு 24 ஆம் அதிகாரத்தில், அநேக பெருக்கங்கள் மத்தியில கள்ள தீர்க்கதரிசிகளும் பெருகி விடுவார்கள். ஆதியிலே மத்தேயு ஏழாம் அதிகாரத்தில் அவர் எழுதும்போது, அதை கண்டுபிடிக்கிற வழி ஆண்டவர் சொன்னார்: "அவங்க ஆட்டுத்தோலை போர்த்துக் கொண்டு வருவார்கள்; வெளிப்பார்வைக்கு சாதுவான ஒரு ஆட்டைப் போல காண்பிப்பார்கள்; ஆனால் உள்ளத்திலும் அவர்கள் பட்சிக்கிற ஓநாய்களைப் போல இருப்பார்கள்." எப்படி கண்டுபிடிப்பது? இயேசு சொன்னார்: "அவருடைய கனிகளாலே நீங்கள் அறிவீர்கள்; முட்செடியில் போய் அத்திப்பழங்களை பறிக்க முடியாது; முள்ளு தான் குத்தும். நான் அத்திமரம், அத்திமரம் என்று தன்னை அதை அட்வெர்டைஸ்மென்ட் பண்ணினாலும், அதுக்குள்ளே முள்ளுதான் உட்கார்ந்து கொண்டிருக்கும்; ஆகவே அதை பிடித்து கண்டுபிடிங்க."

சிலர் ஆடுகளை கசாப் கிடையாது தொங்க போட்டு இருப்பாங்க; அது உண்மையான ஆடு தானா? ஆனா வால்ல ஒரு பகுதியால ஒட்ட வச்சிருக்கும்; அதை இழுத்து பார்க்கலாம். இது ஆடா அல்லது நாயா? நாய் அடிச்சு ஆட்டு மாதிரி போட்டானா? அதை இழுத்து பார்க்கலாம்; அதை இழுத்தா வரல; அப்ப இது ஆடுதான்; இல்லனா நாய் அடிச்சு போட்டு ஆட்டு வாலை கொண்டு அதை அழகா சொருகி வச்சிருவான்; அப்ப நீங்க ஏமாந்து போவீங்க. ஆகவேதான் ஆண்டவர் சொல்லுகிறார்: "நீங்கள் கனிகளால் ஜனங்களை அறிய முடியும்." ஆவியின் கனியாகிய கலாத்தியர் அஞ்சாம் அதிகாரம் 21-24 சொல்றார்ல; அந்த ஆவியின் கனிகள் அவர்கள் காணப்படுகிறதா? எப்படி நீங்க அறிந்து கொள்ளனும்? இரண்டாவது, அவருடைய ஊழியத்தில் ஒரு அப்போஸ்தலன் ஆகட்டும், தீர்க்கதரிசி ஆகட்டும், தேவனை மகிமைப்படுத்துகிறானா? அல்லது சுய மகிமை அவன் தேடுகிறானா? சாத்தான் எப்போதும் சுய மகிமையை தேடுவான். பரிசுத்த ஆவியானவரை குறித்து இயேசு சொல்லும்போது, "அவர் என்னிடத்தில் உள்ளதை எடுத்து உங்களுக்கு சொல்லுகிறதுனால தேவன் பிதாவானவர் மகிமைப்படுவார்." பரிசுத்த ஆவியானவர் எப்போதும் இயேசுவை மகிமைப்படுத்திக் கொண்டிருப்பார்; இயேசு பிதாவை மகிமைப்படுத்திக் கொண்டிருப்பார். ஆனால் இந்த கள்ள தீர்க்கதரிசிகள் தங்கள் விளம்பரம் அடிச்சுக்கொண்டு வாங்க: "நாங்க 25 பேரை உயிரோடு எழுப்பிட்டேன்; அங்க வானத்தை நான் வில்லா வளைச்சிட்டேன்; மணலை கயிறா தெரிச்சிட்டேன்; இந்து மகா சமுத்திரத்தை இங்கிருந்து நான் தாண்டிட்டேன்; நான் அப்படி செய்தேன், இப்படி செய்தேன்." தங்களுடைய சுய மகிமையை அவங்க தேடிக்கொண்டே இருப்பார்கள். ஏரோது ராஜ வஸ்திரம் தரித்து அவன் ப்ரீச் பண்ணினான்; தேவனுக்கு மகிமையை செலுத்தாதபடி இருந்ததுனால கர்த்தர் அவனை அடித்தார்; அவன் செத்துப்போனான். அந்த யோவான் சானனை பாருங்க; எப்போதும் ஆண்டவரை மகிமைப்படுத்தினார்: "நான் சிறுகவும் அவர் பெருகவும் வேண்டும்" என்று சொன்னார். உண்மையான ஒரு தேவ மனிதன் தன்னை கிறிஸ்துவுக்குள் மறைத்துக் கொண்டு, கர்த்தரையே மகிமைப்படுத்திக் கொண்டிருப்பான். அதை அப்போஸ்தலர் அல்லாதவர்கள் அப்போஸ்தலர்கள் என்று சொல்வதை கண்டுபிடிப்பதற்கு அது ஒரு வழி.

மூன்றாவது, ஒரு ஒரு அப்போஸ்தலன் ஆகட்டும், தீர்க்கதரிசி ஆகட்டும், அவன் பிரசங்கிக்கிற வார்த்தை ஆகட்டும் அல்லது கொடுக்கிற விளக்கம் ஆகட்டும், வேத வசனத்துக்கு ஒப்பாய் இருக்கிறதா? வேத வசனத்துக்கு ஒப்பாய் இல்லாமல் அவன் என்னதான் வெளிப்பாடு கொடுத்தாலும், அதை நம்ம ஏற்றுக்கொள்ள வேண்டியதில்லை. வேத வசனம் தான் நமக்கு வழிகாட்டி. யோவான் 6:63 சொல்லுகிறது: "வானமும் பூமியும் ஒழிந்து போனாலும், என்னுடைய வார்த்தை ஒழியாது." ரெண்டு திமோத்தே மூணு 16 சொல்லுகிறார்: "தேவனுடைய வார்த்தை எல்லாம் ஆவியானவரால் அருளப்பட்டிருக்கிறது; அது படிப்பினைகளுக்கு, கடிந்து கொள்கிறதற்கு." அந்த வேத வசனம் நமக்கு முக்கியமானது. எபிரேயர் நாலு 12 சொல்லுகிறது: "எந்த பட்டயத்திலும் கருக்கான பட்டயமாய் இருக்கிறது." அந்த வேத வசனத்தின்படி இருக்கிறதா?

நாலாவது, ஒரு கள்ள தீர்க்கதரிசி ஆகட்டும் அப்போஸ்தலன் ஆகட்டும் சொன்ன காரியம் நிறைவேறினதா? உபாகமம் 18 ஆம் அதிகாரம் 20 ஆம் 22 ஆம் வசனத்தில்: "ஒரு தீர்க்கதரிசி இப்படி இப்படி இப்படி எல்லாம் நடக்கும் நடக்கும்னு சொல்லி, அது நிறைவேறலன்னா அவனை நீங்கள் நம்ப வேண்டாம்; அவன் என்னுடைய நாமத்தில் சொன்ன வார்த்தைகள் கள்ள தீர்க்கதரிசன வார்த்தைகள்." இந்த கடைசி காலத்தில் நிறைய பேர் எழும்பி இருக்கிறாங்க. ஆம்பள பிள்ளை பிறக்குமா, பொம்பள பிள்ளை பிறக்குமா, அதைத்தான் தீர்க்கதரிசனம் சொல்லுவாங்க; எத்தனாம் தேதி பிறக்கும், அத்தாம் தேதி பிறக்காது; பொண்ணா பிறக்கும்னு சொல்லுவாங்க, பையனா பிறக்கும்; ஆண்டவர் மாத்திட்டாரு; வயித்துக்குள்ள வச்சு நான் ஜெபம் பண்ணிட்டேன்; கள்ள தீர்க்கதரிசி சொல்லுவாங்க. இப்படி கடைசி காலத்துல ஜனங்கள் கள்ள தீர்க்கதரிசிகளை நோக்கி ஓடிக்கொண்டிருக்கிறதுனால, புதிய புதிய வெளிப்பாடு, இந்த வெளிப்பாடுகள் எல்லாம் நிறைவேறலைன்னா, அந்த ஆளை பிடித்துக் கொள்ளுங்கள். எனக்கு ஆயிரம் உதாரணம் சொல்ல முடியும், ஆனா நான் டீச் பண்றதுனால என் பாடத்தை முடிக்க முடியாமல் போயிருக்கு. ஆகவே ஐந்தாவதாக, ஐந்தாவதாக, ஒரு மனுஷன் பிரசங்கிக்கிற வார்த்தைகள், அவன் சொல்லுகிற தீர்க்கதரிசனங்கள், உங்களுக்குள்ளே ஒரு பெரிய விடுதலை கொண்டு வருகிறதா? உங்களுக்குள்ளே ஒரு பெரிய மகிழ்ச்சியை கொண்டு வருகிறதா? கர்த்தருக்குள்ளே களிகூற பண்ணுகிறதா? அல்லது உங்கள் உங்களை அடிமையாக்கி விடுகிறதா? உங்களை பயமுறுத்துகிறதா? அல்லது அந்த தீர்க்கதரிசனம் கேட்டதிலிருந்து உள்ளம் கலங்கிக் கொண்டே இருக்கிறதா? ஆண்டவர் எப்போதுமே நம்மை விடுவிக்கிறவர். ஆண்டவர் சொல்லுகிறார், யோவான் எழுதின சுவிசேஷம் 8:36ல: "குமாரன் உங்களை விடுதலையாக்குகிறார்." எப்போதுமே கர்த்தருடைய ஆவியானவர் விடுதலை உண்டாக்குகிறவர். ஒன்று கொரிந்தியர் மூன்று 16 வாசிக்கிறோம்: "எங்கே ஆவியானவர் உண்டு, அங்கே விடுதலை உண்டு." யோவான் 8:32 வாசிக்கிறோம்: "சத்தியத்தை அறிவீர்கள், சத்தியம் உங்களை விடுதலையாக்கும்." ஆகவே அருமையான தேவனுடைய பிள்ளைகளே, ஆறாவதாக, ஒரு கள்ள அப்போஸ்தலன் எப்படி கண்டுபிடிக்கிறது? வேதம் சொல்லுகிறது, அவன் அவன் அவன் கிறிஸ்துவை அறிக்கை பண்ணுகிறவன்? ஜீவனுள்ள தேவன் என்பதை அறிக்கை பண்ணுகிறானா? அல்லது கிறிஸ்து ஒரு நல்ல மனிதன், ஒரு நல்ல தீர்க்கதரிசி அவ்வளவுதான்? அவருடைய தெய்வீகத்தை ஒப்புக்கொள்ளவில்லை. அந்த தெய்வீகத்தை நீங்க யெகோவா சாட்சிகள், ஜெகோவா விட்னஸ், இயேசுவை பற்றி சொல்ல வரோம்னு வீட்ட வந்து தட்டுவாங்க; வாங்க நம்ம ரெண்டு பேரும் ஜெபம் பண்ணா? ஜெபம் பண்ண மாட்டாங்க. இயேசுதான் உண்மையான தேவகுமாரன் தான், அவர்தான் மேசியாவா? அவங்க ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். இன்றைக்கு அநேக குரூப்புகள் இருக்கிறது; இயேசுவினுடைய தெய்வீகத்தை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அப்படிப்பட்டவங்க கள்ள தீர்க்கதரிசிகள், கள்ள அப்போஸ்தலர் என்று நாம் கண்டுபிடித்து விடலாம்.

சரி, எபேசு சபையை பார்த்து ஆண்டவர் ஒரு குறையை சொன்னார். நான்காம் வசனம் இவ்விதமாய் சொல்லுகிறது: "ஆனாலும், நீ ஆதியில் கொண்டிருந்த அன்பை விட்டாய் என்று உன் பேரில் எனக்கு குறைவு உண்டு." எப்படி இந்த அன்புல குறைபட்டாங்க? எந்த ஊழியக்காரன் வந்தாலும், இவன் கள்ள ஊழியக்காரன் தான், நல்ல ஊழியக்காரனா? இதே ஆராய்ச்சி கையில லென்ஸ் வச்சு பார்த்துக்கிட்டே இருப்பாங்க; இது உண்மையான காக்கா தானா அல்லது புறா புறாவா காக்காவா? இப்படி வந்திருக்க? இது அப்படியே இதுலயே ஆராய்ச்சி ஆராய்ச்சி பண்றது நல்லதுதான்; கள்ளத்தீர்க்கை கண்டுபிடிக்கிறது நல்லதுதான். ஆனா அதுலயே உன் மைண்ட் செலவழிச்சுட்டு இருக்கக்கூடாது; உன்னுடைய உன்னுடைய மெயின் நோக்கம் ஆண்டவரில் அன்பு கூறுகிறது தான் முக்கியமானது. இந்த உலக வாழ்க்கையில, எல்லா கட்டளைகளிலும் பிரதான கட்டளை: "உன் தேவனாகிய கர்த்தரை முழு இருதயத்தோடும் முழு ஆத்துமாவோடும் முழு பலத்தோடும் நீ அன்பு கூறுவாயாக;" அதான் பிரதான கட்டளை. இரண்டாவது கட்டளை: "நீ உன்னை நேசிக்கிறது போல பிறனையும் நேசிப்பாயாக." இந்த கட்டளைகளுக்கு விரோதமாக பிரமாணம் ஒன்றுமே இல்லை. நம்முடைய ஆண்டவர் அன்புக்குரியவர்; அவர் அன்புக்காக ஏங்குகிறவர். நாம் அவரை நேசிப்பதற்கு முன்பாகவே அவர் நம்மை நேசித்து விட்டார். எரேமியா 31 மூணுல சொல்லுகிறார்: "அனாதி சிநேகத்தால் நான் உன்னை சிநேகித்தேன்; உருக்கமான இரக்கங்களினால் நான் உன்னை சேர்த்துக் கொள்ளுவேன்." எவ்வளவு அன்புள்ள தேவன்! அந்த அன்பினால்தான் பரலோகத்தை விட்டு பூமிக்கு இறங்கி வந்தார்; அந்த அன்பினால்தான் அடிமையின் ரூபம் எடுத்தார்; அந்த அன்பினால் தான் பாரமான சிலுவையை தூக்கிக்கொண்டு நடந்தார்; அந்த அன்பினால் தான் கைகள் கால்கள் ஆணிகள் கடாவப்பட ஒப்புக்கொடுத்தார்; அந்த அன்பினால் தான் தன்னையே பாவ நிவாரண பலியாக, ஒரு பாவமும் அறியாதவர், குற்றத்தை அறியாதவர், வஞ்சனை காணப்படாதவர், தன்னையே ஒப்புக்கொடுத்தார் என்றால். அவ்வளவு நம்மேல அன்பு வைத்து, அன்பு வைத்து, அன்பு வைத்து அவர் நமக்காக யாவையும் செய்து முடித்தார்.

வேதம் சொல்லுகிறது, யோவான் 13 ஆம் அதிகாரம் முதலாம் வசனத்திலே: "தம்முடையவர்களிடத்தில் அன்பு வைத்தபடியே முடிவு பரியந்தமும் அன்பு வைத்தார்." அந்த அன்பினால் தான் சீஷருடைய கால்களைப் பிடித்து அதை கழுவினார். அவருடைய அன்பு, அப்போஸ்தலனாகிய பவுல் எழுதுகிறார், எபேசியர் மூன்றாம் அதிகாரம் 14 ஆம் வசனத்தில்: "அவருடைய அன்பின் அகலும் ஆழம் நீளும் அறிவு கெட்டாத அன்பை அறிந்து கொள்ளும்படியாக" என்று அவர்கள் எழுதுகிறார். ஆண்டவருடைய கல்வாரி அன்பை, சாதாரணமான மனுஷனால் அந்த அன்பின் அகலம் ஆழம் நீளத்தை நம்மால் அறிந்து கொள்ளவே முடியாது. நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக ரோமர் ஐந்து ஐந்துல சொல்லுகிறார்: "பரிசுத்த ஆவியினாலே தேவனுடைய அன்பு நம்முடைய இருதயத்தில் ஊற்றுக ஊற்றப்பட்டிருக்கிறதாம்." அதை கொண்டுதான் ஆண்டவருடைய அன்பின் அகலம் ஆழம் நீளம்; அவ்வளவு ஆழமான அன்பு, அவ்வளவு தெய்வீகமான அன்பு. அன்பு அன்பை கேட்கிறது. அன்புள்ள ஆண்டவர் நம்மேல அன்பு செலுத்திவிட்டு, அந்த அந்த அன்பு அளவிடப்பட முடியாத அன்பை கொடுத்துட்டு, நம்ம அன்பை கேட்கிறார். நம்ம கையில கோடி ரூபாய் கொடுத்துட்டு, "எனக்கு ஒரு பத்து ரூபாய் தா" என்று கேட்கிறது போல இருக்கிறது. அவர் நமக்கு கொடுத்தது கோடியான ரூபாய்; நம்மிடத்தில் எதிர்பார்க்க ஒரு பத்து ரூபாய்; எனக்கு கொடு. அந்த பத்து ரூபாய் கொடுக்க மாட்டாங்க. காலையில ஆண்டவர் எழும்பி வருகிறார்: "என் பிள்ளை ஜெபம் பண்ண மாட்டானா? அன்புக்காக இயங்க மாட்டானா?" பாருங்க. அவ்வளவு பெரிய ஆண்டவர், அவ்வளவு துதிகள் மத்தியில் வாசம் பண்ணுகிறவர், ஒரு மீன்பிடிக்காரன் பேதுரு கிட்ட வந்து, "என்கிட்ட அன்பா இருக்கியாப்பா? என்கிட்ட அன்பா இருக்கிறியா?" எவ்வளவு அன்புக்காக அவர் ஏங்குகிறவர். எபேசு சபை தன்னுடைய அன்பை குறைவுபட்டபோது, அதை தாங்கிக் கொள்ள முடியல. காரணம் நம்ம எல்லாருக்கும் தெரியும், அவர் அன்புள்ள தேவன்; காட் இஸ் லவ்; எல்லா இடத்திலும் எழுதி போட்டுருவோம். ஆனால் நமக்கு தெரியாத ஒரு காரியம், நம்முடைய அன்புக்காக ஏங்கி ஏங்கி நம்முடைய அருகில் வருகிறவர்; நாம் அவரை துதிக்க மாட்டோமா? ஏங்கி ஏங்கி அருகில் வருகிறவர். எபேசு சபையை பார்த்து சொல்லுகிறார்: "ஆதியில நீ ரொம்ப அன்பா இருந்தா?" எப்படி புதுமன தம்பதிகள்? ஓ அந்த ஹனிமூன் போகும்போதெல்லாம், "ஹனி ஹனின்னு" அவ கூப்பிட்டு, ஒருத்தருக்கு ஒருத்தர் கொஞ்சி மார்புல சாய்ந்து. ரெண்டு மாசம் ஆச்சுன்னா, ரெண்டு பேருக்கும் நாயும் பூனைக்கும் மாதிரி சண்டை. அந்த சண்டை ஆண்டவர் விரும்புறது இல்லை. ஆண்டவர் கூட எப்போதுமே அன்பா இருக்கணும்னு ஆண்டவர் விரும்புகிறார். உங்களுடைய வாழ்நாள் எல்லாம் அவருடைய அன்புக்கு தகுதி உள்ள ஒரு வாழ்க்கை வாழ வேண்டும் என்று ஆண்டவர் எருகிறார். ஆகவே இந்த அன்பிலே குறைபட்டபோது, அதை அவரால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை. ஆகவே அதுக்கு அடுத்த பகுதி சொல்லுகிறது, நாலாம் வசனம். ஆண்டும் மீண்டும் வாசிக்கிறேன்: "ஆனாலும், நீ ஆதியிலே கொண்டிருந்த அன்பை விட்டாய் என்று உன் பேரில் எனக்கு குறைவு உண்டு; ஆகையால் நீ இன்ன நிலைமையிலிருந்து விழுந்தாய் என்பதை நினைத்து மனம் திரும்பி, ஆதியில் செய்த கிரியைகளை செய்வாயாக." அன்பிலே குறைபட்டதை ஆண்டவர் விழுந்து போன ஒரு நிலைமை சொல்லுகிறார். ஒரு பின்மாற்றி நிலைமைக்குள்ளே நீ போய்விட்டாய். நீ என்ன பாவம் செய்தாய்? அந்த அன்பிலிருந்து உன்னை கொலை செய்யாமல் இருக்கலாம், நீ விபச்சாரம் பண்ணாமல் இருக்கலாம்; ஆனால் ஆண்டவர் சொல்லுகிறார், "நீ அன்பு செலுத்த மறந்துட்டாலே குறைபட்டாலே, நீ விழுந்து போனாய்" என்று தான் அர்த்தம். ஆகவே ஆண்டவர் சொல்லுகிறார்: "நீ என்ன நிலைமையிலிருந்து விழுந்தாய், அதை நீ பார்; என்ன நிலையிலிருந்து விழுந்தாய்?" சிலர் விழுந்து விழுந்து கிடப்பாங்க, தரையிலே கிடப்பாங்க. வாரந்தோறும் கோயில் போய், "நாங்கள் செய்யத் தகுந்தவைகளை செய்யாமல், செய்யவே தேகாதவைகளையே செய்தோம்; ஆனாலும் எங்களுக்கு சுகமே இல்லை" காலாகாலமா இதையே சொல்லிட்டு இருந்தா இரட்சிப்பு கிடைக்காது. உண்மையிலே ஒரு மனுஷன் விழுந்து போனான் என்றால், என்ன நிலைமையில் நான் விழுந்தேன்? நான் விழுந்ததுக்கு என்ன காரணம்? என்ன காரணம்? அதை கண்டுபிடிச்சு, "ஆதியிலே செய்த கிரியைகளை நீ செய்வாயாக." வேதம் சொல்லுகிறது: "நீதிமான் ஏழு முறை விழுந்தாலும், அவன் எழுந்திருப்பான்." ஆண்டவர் உன்னை தூக்கிவிட ஆவலாய் இருக்கிறார். மரம் விழுந்தால் தான் விழுந்த இடத்தில் கிடக்கும்; ஆனால் ஒரு தேவனுடைய பிள்ளை விழுந்தால் விழுந்த இடத்தில் கிடக்கக்கூடாது. ஒவ்வொருவருக்கும் ஆண்டவர் மன்னிப்பு கொடுக்க ஆவலாய் இருக்கிறார்; ஆனால் அதற்காக நாம் நம்மை மிகவும் தாழ்த்த வேண்டியது அவசியம். ஒரு மரத்துல 10 அடி ஏறி விழுகிறதுக்கு 50 அடி ஏறி விழுகிறதுக்கும் வித்தியாசம் இருக்கு. 10 அடி ஏறி விழுந்தா சின்ன சிராய்ப்பு படும்; லேசா டாக்டர் கிட்ட போய் ஒரு இன்ஜெக்ஷன் போட்டு கேட்கும். ஓகே. ஆனா நீ உயர உயர உயரம், 50 அடி உயரம் போய் விழுந்தா, ஏழு எலும்பு முறிஞ்சு போகும்; பிறகு ஆஸ்பத்திரில படுத்து கிடக்கணும்; கையை கட்டி மேல தூக்குவாங்க, காலை கட்டி போடுவாங்க, பேண்டேஜ் போடுவாங்க; திரும்பி படுக்கக்கூடாது என்பாங்க; முகாவச இரவு பகல் தூங்க முடியாது. என்ன நிலைமையிலிருந்து நீ விழுந்தா? எல்லா சில சில நேரத்துல சும்மா "ஆண்டவரை மன்னிச்சுக்கிடும்" அப்படின்னு சொன்னா, ஆண்டவர் மன்னிக்கிறது இல்ல; மன்னிக்கிறது இல்ல. ஆண்டவர் மன்னிக்கிறது இல்லை; நீ உண்மையாய் "இனிமே நான் செய்ய மாட்டேன்" உண்மையாய் மனம் திரும்பலன்னா, உண்மையாய் உன்னுடைய பாடுகளுக்காக வேதனைகளுக்காக கண்ணீர் விட்டு அழாவிட்டால், ஆண்டவருடைய இரக்கம் கிடைப்பதில்லை.

என்னுடைய தாயார் ஒரு தேவ மனிதனை குறித்து என்னோடு கூட சொன்னார்கள். போன திருப்பத்தூர் முகாம்ல நான் அதை பகிர்ந்து கொண்டேன்; வராதவங்க இருந்தால் கேட்டுக்கொள்ளுங்கள். ஏறக்குறைய 50 வருஷத்துக்கு முன்னால தமிழ்நாட்டுல "தமிழ் டேவிட்" என்ற ஒரு தேவனுடைய ஊழியக்காரர் இருந்தார். அவர் மூலமாய் ஆண்டவர் பலத்த அற்புதம் செய்தார்; தமிழ்நாட்டில் முதல் முறை பயங்கர எழுப்புதலை ஏற்படுத்தினர். அந்த தேவதாசன் தான். அந்த நாட்களில் எல்லாம் கேரளாவிலிருந்து மலையாள பிரசங்கி கொச்சிக்குஞ்சு போன்ற தேவனுடைய தாசர்கள் வந்து பிரசங்கம் பண்ணாங்க; பிறகு பொன்னம்மா சந்நியாசினி போன்ற தேவ ஊழியக்காரிகள் வந்தார்கள். ஆனால் அவர்களுக்கெல்லாம் முன்னால் அப்பாற்பட்டவர் இந்த "தமிழ் டேவிட்" என்கிற ஒரு தேவ மனிதர். பலத்த கிரியேட்டிவ் மிராக்கிள்ஸ் நடக்கும்; கண்ணே இல்லாதவங்க குழி விழுந்தவங்களுக்கு புது கண்கள் தோன்றும்; நரம்புகள் எல்லாம் புது நரம்புகள் உண்டாகும்; அவ்வளவு ஆச்சரியமான. தமிழும் ஆங்கிலத்திலும் சரமரியாய் பிரசங்கிப்பார். அமெரிக்கா சென்று பேசினபோது வெள்ளைக்காரர்களை அசந்து விட்டார்; இந்தியாவிலிருந்து இப்படி ஒரு தேவ மனிதனா? எவ்வளவு பெரிய அபிஷேகமா? எவ்வளவு பெரிய வல்லமையா? அவரை விழ தள்ள வேண்டும் என்று நினைத்தார்கள். ஆகவே அவர் சொன்னார்கள்: "உனக்கு சாப்பாடு சமைச்சு போடுறதுக்கு ஒரு அழகான இளம்பெண்ணை நாங்கள் ஒழுங்கும்படி இருக்கும்; நீ என்ன சாப்பாடு வேணாலும் சொல்லு, அவங்களுக்கு செய்து கொடுப்பாள்; அவரோடு தங்க வைக்க வேண்டும் என்று ஒரு அறையை அவளுக்கு கொடுத்தார்கள்; அவள் வருவாள்; நீங்க கஷ்டப்பட்டு பிரசங்கம் பண்ணி இருக்கீங்க; கையை காலை பிடிச்சு விடுறேன்பா." ஆனா அவள்ட்ட சொல்லிட்டாங்க: "அவரை எப்படியாவது விழ வைக்கணும்." சிம்சோனை விழ வைப்பதற்காக தெலீலாவிடம் பேரம் பேசினது போல, அவரிடத்தில் பேரம் பேசினார்கள். முடிவிலே அவர் விழுந்துவிட்டார். பெரிய கன்வென்ஷன் கூட்டம்; அன்னைக்கு பேசணும்; பிந்தி வந்தார்; சொன்னார்: "என்னால பேச முடியாது." ஏன் என்று கேட்டார்; கடைசியில் அவர் சொன்னார். அப்போது அந்த பெண்ணை நீ திருமணம் செய்து கொள்ள வேண்டும். அவர் சொன்னார்: "இந்தியாவில் எனக்கு மனைவி பிள்ளைகள் இருக்காங்க; நான் ஏற்கனவே" - அது எங்களுக்கு தெரியாது. "நீ அவளோடு உறவு கொண்டாய்; அவளை திருமணம் செய்." அவளை கட்டி வைத்தார். இந்தியாவுக்கு திரும்புவதற்கு பிளைட்டுக்கு எல்லாம் கொடுத்தாங்க. அவர் சொன்னார்: "இந்தியா போக விரும்பல; இலங்கைக்கு எனக்கு டிக்கெட் எடுத்துக்கொடு." இலங்கைக்கு மனைவியை கூட்டிக்கொண்டு அந்த வெள்ளைக்காரியை கூட்டிக்கொண்டு வந்தார். ஒரு சின்ன ஓலைக்குடிசை; தரையில் விழுந்து இரவு பகலாய் அழ ஆரம்பித்தார். காலை சாப்பாடு மத்தியம் ஒன்னும் அவர் சாப்பிடல. "ஆண்டவரே, உமக்கு துரோகம் செய்து, உம்முடைய அன்பை எண்ணாமல் போனேன்; எனக்காக உயிரை கொடுத்து பெரிய இரட்சிப்பை சம்பாதித்தீர்; அதை நான் எண்ணாமல் போனேன்; என்னை மன்னி ஆண்டவரே." தலையிலே சாம்பலை அள்ளிப் போட்டுக்கொண்டு, சாக்கை உடுத்துக்கொண்டு, புரண்டு புரண்டு புரண்டு புரண்டு புரண்டு அழுதார்; இரவும் பகலும் அழுதார்; நாட்கணக்கில் அழுதா? 20 நாள்? 21 நாள்? அந்த ஆங்கிலேய பெண்மணி சொன்னாள்: "ஐயா, இவ்வளவு நீங்க ஆண்டவரை நேசி? நான் தெரியல; நான் விளையாட்டு போல உங்களுடைய சொல்லை கேட்டு நான் தப்பா நடந்துட்டேன்; எங்க தேசத்துக்கு நான் திரும்பி போறேன்; உம்முடைய வாழ்க்கையிலே இனி குறிக்கிட மாட்டேன்; என்னை மன்னியுங்க; என்னை மன்னிங்க." காலை பிடித்து கெஞ்சினாள். அவரை விமானத்தில் அனுப்பி வைத்தார். அதுக்கு பிறகு அவர் உபவாசத்தை விடல. அந்த சின்ன குடிசைக்குள்ள 40 நாட்கள் அழுதார்; 40 நாட்கள் அழுதார். 40 வது நாள் ஆண்டவருடைய அன்பு இறங்கி வந்தது; மன்னிப்பு இறங்கி வந்தது; ஆண்டவர் ஒரு தாய் தேற்றுவது போல அவரை தேற்றினார். இழந்து போன அவ்வளவு வல்லமையும் திரும்ப கொடுத்தார்; மறுபடியும் அவருடைய ஆவிக்குரிய வரம் அவர்களை கிரியை செய்து, ஆறு மாதங்கள் ஆண்டவருக்காக எழுந்து பிரகாசித்து, அப்படியே மகிமைக்குள் பிரவேசித்து விட்டார்.

எபேசு சபைக்கு ஆண்டவர் எழுதுகிறார்: "நீ என்ன நிலையிலிருந்து நீ விழுந்தாய் என்பதை நீ கண்டு, ஆதியில் செய்த கிரியைகளை நீ செய்வாயாக." அருமையான தேவனுடைய பிள்ளைகளே, ஒன்னு கொரிந்தியர் 11 ஆம் அதிகாரத்தில் ஆண்டவர் சொல்லுகிறார்: "நம்மை நாமே நிதானித்து அறிந்தால், நாம் நியாயம் தீர்க்கப்படும்; நம்மை நாமே நிதானித்து அறிந்தால், நாம் நியாயம் தீர்க்கப்படும்." இன்றைக்கு அநேக ஊழியக்காரர்கள் விழுகிறதை பார்க்கிறோம்; நட்சத்திரங்களைப் போல பிரகாசித்த தேவனுடைய பிள்ளைகள் விழுகிறதை பார்க்கிறோம். கடைசி காலத்திலே தனக்கு கொஞ்ச காலம் மாத்திரமே உண்டு என்று அறிந்து, பிசாசானவன் யாரை வாஞ்சிக்கலாமோ, யாரை விழுங்கலாமோ வகை தேடி தெரிகிறார். அநேக ஊழியக்காரர்கள் விழுகிறதற்கு காரணம் என்னவென்றால், அவருடைய குடும்ப அஸ்திபாரம் உறுதியாய் இல்லை; கணவனும் மனைவிக்கும் இடையே உள்ள ஐக்கியம் சரியாய் இல்லை; அந்த ரெண்டு பேருக்குள்ள ஐக்கியம் வெறு வெரிசல் விடும்போது, சாத்தான் உள்ளே புகுந்து விடுகிறதற்கு அது ஏதுவாய் மாறிவிடுகிறது. மிகுந்த வேதனையோடு அதை சொல்லுகிறார்; இவ்வளவு நட்சத்திரங்களைப் போல பிரகாசித்த ஊழியர்கள் விழுகிறதை பார்க்கும்போதே மிகுந்த வேதனையாய் இருக்கிறது. பேதுருவுக்கு வீழ்ச்சி வந்தது; ஆண்டவரை சபித்துவிட்டார்; சத்தியம் பண்ணினார்; "அவரை அறியேன்" என்று. ஆனால் இயேசு திரும்பி பேதுருவை பார்த்தபோது, வேதம் சொல்லுகிறது: "பேதுரு மனம் கசந்து அழுதார்; மனம் கசந்து அழுதார்." ஆகவே ஆண்டவர் அதை மன்னித்தார்; மறுபடியும் அப்போஸ்தலர் நிலைமைக்கு கொண்டுவந்தார்; பேதுருவை பயன்படுத்தி அற்புதங்கள் செய்தார்; 3000, 5000 என்று ஜனங்கள் இரட்சிக்கப்பட்டார். ஆண்டவர் கூடவே ஒரு எச்சரிப்பையும் கொடுக்கிறார்; வேதத்தில் சொல்லுகிறார்: "ஆகையால் நீ இன்ன நிலையிலிருந்து விழுந்தாய் என்பதை நினைத்து மனம் திரும்பி, ஆதியில் செய்த கிரியைகளை செய்வாயாக; இல்லாவிட்டால் நான் சீக்கிரமாய் உன்னிடத்தில் வந்து, நீ மனம் திரும்பாத பட்சத்தில், உன் விளக்குத் தண்டை அதன் நின்று விலக்கி விடுவேன்." விளக்கு தண்டு தண்டு எல்லாருக்கும் பிரகாசமாய் ஆயிருக்கும்படி வீட்டில் ஏற்றப்படுகிறது; விளக்குத் தண்டு மலை மேல் இருக்கிற ஒரு பட்டணத்தைப் போல இருக்கிறது; கலங்கரை விளக்கத்தைப் போல இருக்கிறது. அந்த விளக்குத் தண்டை அப்புறப்படுத்திவிட்டால் இருள் சூழ்ந்துவிடும்; வெளிச்சத்தை பார்க்க முடியாது; ஜனங்கள் உன் அண்டையை வெளிச்சத்தை நாடி வர முடியாது. "விளக்கு தண்டை அகற்றி விடுவேன்."

ஆறாம் வசனம் இவ்விதமாய் சொல்லுகிறது; இன்னொன்று ஆண்டவர் அதை சொல்லுகிறார்: "நான் வெறுக்கிற நிக்கலோய் மதஸ்தரின் கிரியையை நீனும் வெறுக்கிறாய்." நிக்கலோய் என்ற மதஸ்தர், அப்போஸ்தலர் ஆறாம் அதிகாரம் ஐந்தாம் வசனத்திலே அப்படிப்பட்ட ஒரு மனிதனை இங்கே பார்க்கிறோம். அவன் உலகத்தோடு காம்ப்ரமைஸ்; விக்கிரகங்களுக்கு படைக்கக்கூடாது படைச்சு சாப்பிடக்கூடாது, விபச்சாரம் பண்ணக்கூடாதுன்னு சொன்னா, உலகத்தோடு ஒட்டுப்போப்பா, எல்லாம் செய்ற மாதிரி செய், பரவாயில்லை. எப்படி பிலையாம் இஸ்ரவேல் ஜனங்களுக்கு தீய ஆலோசனை கொடுத்தானோ, அதேபோல ஆண்டவர் அந்த நிக்கலோய்; ஆண்டவர் அதை வெறுக்கிறார். அப்படிப்பட்ட உலகத்தோடு ஒப்புரவாகிற உபதேசத்தை உன்னை விட்டு அகற்றிப் போட்டு. சிலர்: "ஆண்டவருக்காக நீ பாடுபட வேண்டியதில்லை; நீ உபத்திரவங்களை சகிக்க வேண்டியதில்லை; சொகுசான வாழ்க்கை உனக்கு உண்டு; ஒரு பங்களா இல்லையா உனக்கு? பத்து பங்களா ஆண்டவர் தருவார்; உன்னை ஆசீர்வதிக்கவே ஆசீர்வதிப்பார்; ஆனால் உன்னுடைய குறையை சுட்டிக் காண்பிக்க மாட்டாங்க; உன்னை கண்டித்து உணர்த்த மாட்டாங்க; எப்போதும் பொருளாதாரம்." அது எதென்றால்? உலகத்தோடு ஒரு ஒப்புரவாகிவிடுகிறது; பிசாசோடு ஒப்புரவாகிவிடுகிறது. "உனக்கு மகிமையை தருவேன்; வணங்கிக்கோ; வணங்குறேன்; உன்னை உன் மகிமை கொடு; பணத்தை கொடு; பொருளை கொடு; வீட்டை கொடு" - ஒரு காம்ப்ரமைஸ். அதை ஆண்டவர் வெறுக்கிறார் என்று வேதம் சொல்லுகிறது.

கடைசியாக ஏழாவதாக சொல்லுகிறார்: "ஆவியானவர் சபைக்கு சொல்லுகிறதை காதுள்ளவன் கேட்கக் கடவன்; ஜெயம் கொள்ளுகிறவன் எவனோ அவனுக்கு தேவனுடைய பரதேசியின் மத்தியில் இருக்கிற ஜீவ விருட்சத்தின் கனியை புசிக்க கொடுப்பேன்." வேதத்தில் ஏழு முறை ஏழு சபைகளுக்கு சொல்லும்போது, "சபைகளுக்கு சொல்லுகிறதை ஆவியானவர் சொல்லுகிறதை காதுள்ளவன் கேட்கக் கடவன்." உன்னுடைய காது திறந்த காதாய் இருக்கணும்; ஆண்டவருடைய வார்த்தையை கவனமாய் செவி சாய்க்கிற காதாய் இருக்கணும். சில சபைகளை எவ்வளவுதான் சொன்னாலும், மைண்ட்ல புரியாது; அதை வேதத்தில் வாசிக்கிறோம் அல்லவா? "எவ்வளவு வினோதமாய் ஊதினாலும், சில செவுட்டு விரியன்கள் போல இருப்பார்கள்" என்று தீர்க்கதரிசி சொல்லுகிறார் அல்லவா? அந்த நிலைமை வேண்டாம். "காதுள்ளவன் கேட்கக் கடவன்." இயேசு கிறிஸ்து அதே வார்த்தையை சொன்னார். ஒவ்வொருவருமே சொல்லும்போதும், "காதுள்ளவன் கேட்கக் கடவன்." இங்கே "ஆவியானவர் சபைக்கு சொல்லுகிறதை காதுள்ளவன் கேட்கக் கடவன்." முடிக்கும் போது ஆண்டவர் ஒரு பரிசை சொல்லி முடிக்கணும்: "நீ ஜெயம் கொண்டவனாய் விளங்குவாயானால், பரதேசியின் மத்தியிலே ஜீவ விருட்சத்தின் கனியை புசிக்கக் கொடுப்பேன்."

வேதத்தில் மூன்று முறை "பரதேசி" என்கிற வார்த்தை வருகிறது. பரதேசி என்றால் "தோட்டம்" என்று அர்த்தம்; பாரசீக மொழியிலிருந்து வந்த ஒரு வார்த்தை. அரண்மனைக்கு முன்னால் ஒரு தோட்டத்தை வைத்திருப்பார்கள்; அது பரதேசி. ஆண்டவரைப் பார்த்து ஒரு கள்ளன் கேட்டான், லூக்கா 23 ஆம் அதிகாரம் 43 ஆம் வசனத்திலே: "உம்முடைய ராஜ்ஜியத்தில் வரும்போது, அடியேனை நினைத்துக் கொள்ளும்." ஆண்டவர் சொன்னார்: "இல்லப்பா, நீ பரதேசியில் இருப்பாய்; ஆவிகள் இளைப்பாறுகிற ஸ்தானத்தில் நீ இருப்பாய்; நான் இன்னைக்கு அதை போய் ஸ்தாபிக்க போகிறேன்; இன்றைக்கு என்னோடு கூட நீ இருப்பாய்; நித்திய நித்திய காலமாய் அல்ல; பரதேசி உனக்கு கொடுக்கிறேன்." அதுபோல அப்போஸ்தலனாகிய பவுல் ஒருமுறை மூன்றாம் வனம் வரைக்கும் எடுத்துக்கொள்ளப்பட்டு, இரண்டு கொரிந்தியர் 12 ஆம் அதிகாரம் மூன்றாம் வசனத்தில், "பரதேசிக்கு அவனை எடுத்து கொள்ளப்பட்டான்; அது மூன்றாம் வானத்தில் இருக்கிறது" என்று வேதம் சொல்லுகிறது. கடைசியாக வெளிப்படுத்தல் ரெண்டு ஏழுல இந்த எபேசு சபைக்கு எழுதும்போது: "ஜெயம் கொள்ளுகிறவன் எவனோ, ஏதேன் தோட்டத்தில் அந்த ஜீவ விருட்சத்தின் மரம் இருந்தது; அந்த ஜீவ விருட்சத்தின் கனியை புசித்து அவர்கள் ஜீவனிலே பரிபூரணப்பட வேண்டும் என்று வைத்தேன்; அந்த ஜீவ விருட்சம் உங்களுக்கு தருகிறேன்." இயேசுதான் அந்த ஜீவ விருட்சம். "ஞானவேலுக்கு ஜீவன் உண்டாயிருக்கும்; அது பரிபூரண பட வந்தேன்" என்று யோவான் பத்து பத்துலே சொன்னார்.

நேரம் முடிந்தது; நாம் எழுந்து நிற்க போகிறோம். ஆண்டவர் சொன்ன அந்த எச்சரிப்பின் வார்த்தை நம்முடைய காதுகளில் விழட்டும்: "நீ இன்ன நிலைமையிலிருந்து விழுந்தாய் என்பதை நினைத்து மனம் திரும்பி, ஆதி செய்த கிரியைகளை செய்வாயாக." நீ என்ன நிலையிலிருந்து விழுந்தாய் என்பதை நீ ஆராய்ந்து அறிந்து, மறுபடியும் ஆதி அன்புக்கு திரும்பிவிடு; மறுபடியும் அந்த ஊழியத்திலே திரும்பிவிடு. அனலும் இல்லாமல் குளிரும் இல்லாமல் இருக்கிற நிலைமை மாறி, ஆண்டவரையே பிரியப்படுத்த தீர்மானம் பண்ணிவிடு. கடைசி காலம், இனி நாட்கள் செல்லாது. ஓ, உலகமெங்கும் ஒரு பெரிய எழுப்புதல் ஏற்பட்டு, நிறைய புதிது புதிதாய் ஆண்டவர் ஜனங்களை இரட்சிக்கிறார்; அபிஷேகத்தை ஊற்றுகிறார்; ஆவியின் வரங்கள் தருகிறார்; புதிய புதிய ஊழியக்காரர்களை எழுப்புகிறார்; புதிய புதிய ஜெப வீரர்களை எழுப்புகிறார். ஆனால் நீ தேவனுடைய பிரசன்னத்தை உணர முடியாமல், ஆதி அன்பை விட்டு வழுகிப் போயிருந்தால்? இந்த இரவு நேரம், உன்னுடைய வாழ்க்கை ஆண்டவருக்கு ஒப்புக்கொடுக்க எத்தனை அருமையான ஒரு நேரம். ஓ, மறுபடியும் கர்த்தர் அன்னை திரும்பி வந்துவிடு. ஆண்டவர் இன்றைக்கு வாக்களிக்கிறார்: "என் பிள்ளையே, நான் அந்த ஜீவ விருட்சத்தின் கனியை உனக்கு புசிக்க கொடுப்பேன்; ஆமென்; நீ ஜெயம் கொண்டவனாய் நீ விளங்குவாய்; உன்னுடைய ஓட்டம் வெற்றியோடு ஓடி முடியும்; நீ அந்த பரம கானானை நீ சுதந்தரித்துக் கொள்ளுவாய். அல்லேலூயா!" உன்னை நீயே ஆராய்ந்து பார்த்து, சீர்படுத்த வேண்டியவைகளை சீர்படுத்து; ஆதியில் செய்த கிரியைகளை மறுபடியும் செய்வாயாக. விழுந்து கிடக்கிற இடத்திலே நீ விழுந்து கிடக்கக்கூடாது; நீ எழுந்திரு. "நான் எழுந்து என் தகப்பன் வீட்டுக்கு போவேன்" என்று குமாரன் எழும்பி வரவில்லையா? ஆண்டவருக்காக நீ எழும்ப வேண்டிய நேரம் அல்லவா? ஆண்டவருக்காக பிரகாசிக்க வேண்டிய நேரம் அல்லவா? கர்த்தர் ஒரு பின்மாரியின் அபிஷேகத்தை தேசத்தில் ஊற்றிக் கொண்டிருக்கிறார் அல்லவா? உனக்காக ஆவியின் வரங்களை, வல்லமையை வைத்திருக்கிறார் அல்லவா? எழும்பி பிரகாசி; எழும்பி பிரகாசி.

தேவனே, ஒவ்வொரு மேலும் ஒரு புதிய அபிஷேகத்தை ஊற்றும்படி ஜெபிக்கிறேன். யார் யார் ஆண்டவருக்காக எழும்ப நினைக்கிறார்களோ, அவர்களுக்காக நீர் அதிக வைராக்கியத்தோடு எழுந்து நின்று கொண்டிருக்கிறதற்காக நன்றி அப்பா. உம்முடைய அக்கினி அபிஷேகம் எங்களை புடமிட வேண்டும் என்று ஜெபிக்கிறேன்; உம்முடைய அக்கினியாலே எங்களை சுத்திகரிக்க வேண்டும் என்று ஜெபிக்கிறேன். ஏசாயாவின் வாயை தொட்டு, "ஓ, இந்த அக்கினி தழல் உன்மேல் தொட்டதினாலே, உன்னுடைய பாவம் நீங்கி நீ சுத்திகரிக்கப்பட்டிருக்கிறாய்; ஜாதிகளுக்கு நீ தீர்க்கதரிசியாய் எழுப்புவேன்." ஆண்டவரே, அந்த அக்கினி தழல், அந்த பலிபீடத்திலிருந்து எடுக்கப்பட்ட பரிசுத்த ஆவியாகிய அக்கினி தழல், ஒவ்வொரு நாவையும் தொடும்படி ஜெபிக்கிறேன்; ஒவ்வொருவருடைய ஆளுக ஆவிக்குரிய வாழ்க்கையை இயேசுவின் நாமத்திலே உயிர்ப்பிக்கும்படி ஜெபிக்கிறேன். ஆண்டவரே, உம்முடைய பிள்ளைகளுக்கு ஒருவிசை மனம் இறங்குவீராக [இசை]