📱

Get Our Mobile App

Take your business learning on the go!

Download on the App StoreGet it on Google Play

விசுவாசிக்கிறவனுக்கு எல்லாம் கூடும் | Bro. D.G.S. Dhinakaran | Sermon | #jesuscalls

D.G.S. Dhinakaran Official57:32

Transcription

அல்லேலூயா. ஒவ்வொரு மனிதனுடைய, ஒவ்வொரு பெண்ணுடைய, ஒவ்வொரு சொட்டுக் கண்ணீரையும் துடைப்பதற்காகவே தேவன் இறங்கி வந்தார். வேதம் சொல்லுகிறது, இந்த உலகில் வாழ்ந்த பொழுது எங்கெல்லாம் மக்கள் கண்ணீர் சிந்தினார்களோ, அங்கெல்லாம் மனம் உருகினான். இவன் கண்ணீர் வடித்தான். அடுத்தபடியாக, அந்தப் பிசாசை கடிந்து கொண்டான். "பொல்லாத பிசாசு, இனி அவனுக்குள் நீ போகாதே என்று உனக்கு கட்டளையிடுகிறேன்" என்றார். அவ்வளவுதான்.

மத்தேயு 8:16 சொல்லுகிறது, தம்முடைய வார்த்தையில் உள்ள அதிகாரத்தினால் அவர் பிசாசுகளை துரத்தினார். அவைகள் பறந்தன, ஓடி மறைந்தன. அன்பு, அன்பு. ஒடுக்குகிறவனுடைய கையிலிருந்து மக்களை விடுவிக்க அவர் இறங்கி வந்தார். இன்று நமக்கு என்ன செய்திருக்கிறார்? என் அன்பிற்குரியவர்களே, வேதம் சொல்லுகிறது, ஒன்று கொரிந்தியர் 12:10 வசனத்தை பாருங்கள். தேவன் தமது ஜனங்களுக்கு, உங்களையும் என்னைப் போன்ற ஏழை மக்களுக்கு, தம்முடைய ஆவியின் வரங்கள் கொடுக்கிறார். அதில் ஒரு வரம் ஆவிகளை பகுத்தறியும் வரம். ஆவிகளை பகுத்தறியும் வரம். பலவித ஆவிகள் பூமியில் உண்டு. ஒன்று பரிசுத்த ஆவியானவர் (யோவான் 14:16-17). அடுத்தது அசுத்த ஆவிகள் (மார்க் 1:39). இயேசு தேவாலயங்கள் தோறும் வேத வசனத்தை பிரசங்கித்து, ஆவிகளை, அசுத்த ஆவிகளை துரத்திக் கொண்டிருந்தார். மூன்றாவது அந்திகிறிஸ்து ஆவி. இதைக் குறித்து நீங்கள் ஒன்று யோவான் நான்காம் அதிகாரத்தில் விவரமாக வாசிக்கலாம். மாம்சத்தில் வெளிப்பட்ட தேவகுமாரனை விசுவாசிக்காத, அறிக்கையிடாத ஆவிதான் அந்திகிறிஸ்துவின் ஆவி. இப்படி பல ஆவிகள். ஆனால் தேவனுடைய ஆவியானவர் உங்களுக்குள் வரும்பொழுது, இந்த வரம், குறிப்பிட்ட வரம் கிரியை செய்யும் பொழுது, ஒரு மனிதனுக்குள் இருக்கும் ஆவிகள், குடும்பத்தை பிடிக்கும் ஆவிகள் யார் என்பதை அறிந்து கொள்ள முடியும். அவைகள் உங்களைக் கண்டு நடுங்கும். நீங்கள் அவைகளைக் கண்டு நடுங்குவதில்லை. அவைகள் உங்களைக் கண்டு நடுங்கும். "ஐயோ, இந்த பெண்ணா, இவளுக்குள் இந்த வரம் இருக்கிறது, என்னை கண்டுபிடித்து விடுவாள்" என்று சொல்லி ஓடி மறையும். நீங்கள் கூச்சல் இடாமலே அவைகள் ஓடி மறையும். மார்க் 16:17ல் தேவகுமாரன் சொன்னான், "என் நாமத்தினாலே நீங்கள் பிசாசுகளை துரத்துவீர்கள்." இனி அவன் உங்களை துரத்துவது அல்ல, அவன் உங்களை ஒடுக்குவது அல்ல. நீங்கள் அவனை ஒடுக்குவீர்கள். "என் பெயரைச் சொல்லுங்கள், ஓட்டம் ஓடி மறைவான்" என்று சொன்னால் எத்தனை ஆச்சரியம்!

என் அன்பிற்குரியவர்களே, இயேசு யார்? இயேசு யார்? மாம்சத்தில் வெளிப்பட்ட அன்பு நிறைந்த ஒப்பற்ற ஒரே தேவன். அவர் இறங்கி வந்தார். தன்னை வெளிப்படுத்த. இயேசுவை காணும்பொழுது காணக்கூடாத இறைவனை காண்கிறோம். ஓய், இப்படித்தான் அவர் இருப்பாரா என்று அறிந்து கொள்கிறோம். யோவான் 14:9 அப்படி சொல்லுகிறது. யோவான் 12:45 அப்படி சொல்லுகிறது. யோவான் 10:30 அப்படி சொல்லுகிறது. அவரை காணும்பொழுது காணக்கூடாத இறைவனை காண்கிறோம். அவருடைய குணத்தை நாம் காண்கிறோம். உள்ளம் பரவசம் அடைகிறது. என் அன்பிற்குரியவர்களே, ஒடுக்கின இந்த பிசாசை துரத்தினவர், இந்த பிசாசை துரத்தும் அதிகாரத்தை இன்று உங்களுக்கும் எனக்கும் கொடுக்க மகிழ்ச்சியோடு இருக்கிறார். நாமும் கூட, "என்னையும் நிரப்பும் ஆண்டவரே, என்னையும் உம்முடைய பரிசுத்த ஆவி, ஆவியானவரால் நிரப்பும் ஆண்டவரே, எனக்குள் அவர் வரட்டும், நானும் இந்த பிசாசை எதிர்த்து நிற்க திராணி உள்ளவளாக, திராணி உள்ளவனாக மாறட்டும்" என்று கெஞ்சுவோம். கர்த்தர் இன்றைக்கு அப்படி செய்வார்.

வேதம் சொல்லுகிறது, ஏசாயா 28:2 என்ற வேத பகுதியில் பரிசுத்த ஆவியானவர் பற்றிய ஒரு சிறந்த விளக்கத்தை வாசிக்க கேட்போமா? ஏசாயா 28:2, "இதோ, திராணியும் வல்லமையும் உடைய ஒருவன் ஆண்டவரிடத்தில் இருக்கிறான். அவன் கல்மலை போலவும், சங்கார பூசை போலவும், புரண்டு வருகிற பெருவெள்ளம் போலவும் வந்து கையினாலே அதை தரையிலே தள்ளிவிடுவான்." அவன் எப்படிப்பட்டவனாய் இருக்கிறான்? திராணியும் வல்லமையும் உடையவன். பல சமயங்களில் ஒரு புறாவை போல ஆவியானவர் இறங்கி வந்ததினால், ஆண்டவர் மீது, "ஓஹோ, அவர் புறாவை போல் தான் இருப்பார்" என்று தவறான எண்ணம் கொள்கிறோம். ஏசாயா 59:19 சொல்லுகிறது, பொல்லாத பிசாசு வெள்ளம் போல வரும்பொழுது, அவனுக்கு விரோதமாய் பரிசுத்த ஆவியானவர் கொடியேற்றுவார். அல்லேலூயா! இன்று நம்மை அப்படி மாற்றுவார். இன்றைக்கு வரங்களை நமக்கு கொடுப்பார். இன்றைக்கு நம்மை பிசாசுக்கு ஒரு சவாலாக மாற்றுவார். அவன் நம்மை ஒடுக்கின நாட்கள் போதுமானது. இனி நாம் அவனை ஒடுக்கத்தக்கதாக பரிசுத்த ஆவியானவர் நமது மூலமாக அவனை ஒடுக்குவார். தம்முடைய வரங்களை நமக்கு கொடுத்து...

ஒரு நாள் இயேசுவுடைய அலுவலகத்தில் உட்கார்ந்து கொண்டிருந்தேன். மிக அவசரமாக நான் எங்கோ போக வேண்டியது இருந்தது. அந்த நேரம் பார்த்து அங்கிருந்த சகோதரர்கள் சொன்னார்கள், "பிரதர், பஞ்சாப் மாநிலம், பாரிதாபாத் என்ற இடத்திலிருந்து ஒரு தாய் வந்திருக்கிறார். ஒரு இளம் பெண்ணை கூட்டி வந்திருக்கிறார். எப்படியாவது உங்களை பார்க்க வேண்டும் என்று சொல்கிறார்." ஐயோ, எனக்கு நேரமே இல்லை என்று சொன்னார். "இல்லை, இல்லை, மிகப் பரிதாபமாய் இருக்கிறது. எப்படியாவது நீங்கள் பார்த்தால் நல்லது" என்று சொன்னார்கள். சரி, வரச் சொல்லுங்கள் என்று சொன்னேன். அந்த தாய் வந்தார்கள். "எங்கே உங்கள் மகள்?" என்று கேட்டேன். "ஐயா, வெளியில் நிற்கிறாள். ரூம்குள்ள வரமாட்டேன் என்று சொல்கிறாள். அவளுக்கு யாரோ மந்திரம் செய்துவிட்டாள் போல் இருக்கிறது. எந்த நேரம் தலையிலே பாம்பு ஓடுகிறது, தேள் ஓடுகிறது, பூரான் ஓடுகிறது என்று புலம்புகிறார். என்ன செய்வது என்று தெரியவில்லை. எங்கள் ஊரில் உள்ள அத்தனை வைத்தியர்களும் அன்போடு என்னென்ன செய்ய முடியுமோ அத்தனையும் செய்து பார்த்துவிட்டார்கள். அவர்களுக்கே ஒன்றும் விளங்கவில்லை. நீ கடவுளிடம் போய் முறையிடு" என்று சொல்லிவிட்டார்கள். தற்செயலாக ஒரு பத்திரிகையை பார்த்தேன். நான் இத்தனை மைல்கள் உடனே ஒன்றும் யோசிக்காமல் அப்படியே ட்ரெயின்ல ஏறி வந்துவிட்டேன் ஐயா. ஒரு துணி கூட எனக்கு இல்லை. எப்படியாவது என் பிள்ளை சுகமாக வேண்டும்" என்று.

அந்தப் பெண் வெளியே நின்று கொண்டிருந்தாள். உள்ளே வா என்று எவ்வளவோ கூப்பிட்டாள். ஆனால் அவள் சொன்னாள், "உள்ளே போக முடியவில்லை. உள்ளே ஒரு இறைவனுடைய பிரசன்னம் இருக்கிறது. பெரிய வெளிச்சம் வீசுகிறது. என்னால் போக முடியவில்லையே" என்று இரண்டு கண்களையும் இருக மூடிக்கொண்டாள். கடைசியாக சகோதரர் அவளை கட்டாயம் வரப்படுத்தி உள்ளே தள்ளிவிட்டார். உள்ளே நுழைந்தாள். தேவனுடைய வல்லமை அவள் மீது இறங்கியது. முகம் குப்புற பொத்தென்று விழுந்தாள். நான் அருகில் சென்றேன். அன்பு வார்த்தைகளை பேசி அவளை எழுப்பி உட்கார வைத்தேன். "தாகமாய் இருக்கிறது" என்றாள். ஹார்லிக்ஸ் கொடுத்தேன். என் அன்பிற்குரியவர்களே, அதன் பிறகு நான் ஜெபம் செய்ய வேண்டிய அவசியமே இல்லை. போயிட்டு அந்த வினாடியிலேயே அருமை இரட்சகர் அவளை சுகமாக்கினார். நூற்றுக்கு நூறு சதவீதம் சுகமாக்கினார். அந்த பிசாசுகள் அலறி ஓடினர். ஓடினது ஓடினது தான். இன்றைக்கும் அவள் சுகமாய் இருக்கிறார். அல்லேலூயா! அல்லேலூயா! அல்லேலூயா! நம் ஆண்டவர் உயிரோடு இருக்கிறார். நமக்கு வரங்களை கொடுக்க என்று காத்திருக்கிறார். ஒடுக்குகிறவனை ஒடுக்க அவர் ஆயத்தமாய் இருக்கிறார். இன்றோடு உங்களுடைய பிரச்சனைகள் ஒடியும். பிசாசு பிரச்சனைகள் ஒழியும். அந்தகார சக்திகளின் பிரச்சனை ஒழியும். வெள்ளி சூனியங்கள் ஒழியும். மந்திர தந்திரங்கள் ஒழியும். இன்னும் சில வினாடிகளில் அவர் வருவார். உங்களை பெயர் சொல்லி அழைப்பார். உங்கள் கண்ணீரை துடைப்பார். இந்த பிசாசுகளை, இந்த ஒடுக்குகிற ஆவிகளை அதற்றுவார். ஒரே ஒரு வார்த்தை தான் ஆண்டவருக்கு. நூறு வார்த்தை. ஒரே ஒரு வார்த்தை. காரணம் என்ன? அவர் உயிரோடு இருக்கிறார். உங்கள் இருதயம் கலங்காது இருப்பதாக. இன்றுதான் உங்களுடைய மந்திர தந்திர பிரச்சனைகளுக்கு கடைசி இரவு. அல்லேலூயா! நாளைக்கு நீங்கள் போய் கூப்பிட்டால் அவன் வரமாட்டான். "ஐயோ, உனக்கும் எனக்கும் சம்பந்தமில்லை. உனக்குள் இயேசுநாதர் ஜீவிக்கிறார். மாம்சத்தில் வெளிப்பட்ட தேவாதி தேவன் உனக்குள் வந்திருக்கிறார். நான் வரவே மாட்டேன். உனக்கும் எனக்கும் சம்பந்தமில்லை" என்று சொல்வார்.

ஆரம்பத்திலிருந்து கடைசி லைனில் உட்கார்ந்து இருக்கிற உங்களுக்கும் இந்த வார்த்தைகளை அவர் சொல்லுகிறார். அன்பு தம்பி சகாதேவன், அதிகமான பிசாசினால் பாதிக்கப்பட்ட உனக்கு இந்த வார்த்தைகளை அவர் சொல்கிறார். "உன் இருதயம் கலங்காது இருப்பதாக." மரியம்மை, இயேசு கிறிஸ்து இன்று இரவு உன்னை விடுதலை செய்வார். உன் உள்ளம் கலங்காதிருப்பதாக. எங்கும் அவருடைய பிரசன்னம் இன்று இரவு இருக்கிறது.

அடுத்து பாருங்கள், வேறொரு மனிதன் சொல்கிறான், "ஐயோ, நான் நோயினால் ஒடுங்கிப் போகிறேன். நான் ஒடுங்கிப் போகிறேன். தயவுசெய்து 38:14 வாசிக்க கேட்போமானேன். 'என் கண்கள் உயர பார்க்கிறதினால் பூத்துப்போயின. கர்த்தாவே, ஒடுங்கிப் போகிறேன். என் காரியத்தை மேல் போட்டுக்கொள்ளும்' என்றேன்." ஐயோ, நான் ஒடுங்கிப் போகிறேன். என் காரியத்தை மேல் போட்டுக்கொள்ளும். மேலே பார்த்து பார்த்து அழுகிறதுனால் என் கண்கள் பூத்துப் போயின. புலம்பல் 2:11ல் பக்தன் சொல்லுகிறான், "ஐயோ, நான் அழுகிறதுனால் என் கண்கள் பூத்துப் போயின." என் அன்பு சகோதர சகோதரிகளே, ஆம், இந்த உலகத்திலே பொல்லாத பிசாசு நோய்களை கொடுத்து நம்மை ஒடுக்குகிறான். யோபு மூன்று:18ல் கொடிய நோய்வாய்ப்பட்ட யோபு சொல்லுகிறார், "ஐயோ, ஒடுக்குகிறவனை நான் இனி பார்க்க மாட்டேன். ஒடுக்குறவன் இல்லாத நரகத்திற்கு போகிறேன்." இன்னும் எரேமியா 21:12 அதிலும் பாருங்கள், அதே காரியத்தை நீங்கள் பார்க்கலாம். ஏசாயா 16:4, ஏசாயா 51:13. இந்த நான்கு வசனங்களும் கூட, "ஒடுக்குகிறவன், ஒடுக்குகிறவன், ஒடுக்குகிறவன்" என்றே சொல்லுகிறார். ஆம், நோயினால் அவன் நம்மை ஒடுக்குகிறான். யோபு இரண்டு:5-6 வசனங்களை பாருங்கள். அங்கே பிசாசு தேவனுக்கு இப்படி சொல்லுகிறான் கேட்போமா? "ஆகிலும், நீர் உம்முடைய கையை நீட்டி அவன் எலும்பையும் அவன் மாம்சத்தையும் தொடுவீரானால், அப்பொழுது அவன் உமது முகத்துக்கு எதிரே உம்மை தூசித்தானோ பாரும் என்றான். அப்பொழுது கர்த்தர் சாத்தானை நோக்கி, 'ஆகிலும், அவன் மாத்திரம் தப்பவிடு' என்றார். அப்பொழுது சாத்தான் கர்த்தருடைய சன்னிதியை விட்டு புறப்பட்டு, யோபின் உள்ளங்கால் தொடங்கி அவன் முற்றந்தலை மட்டும் கொடிய பற்களால் அவனை பாதித்தான்." ஐயோ, அவன் தடுமாறிப் போனான். அவன் சொன்னான், யோபு ஆறு:9, யோபு ஏழு:15, "ஐயோ, தேவன் தம்முடைய கரத்தை நீட்டி என்னை துண்டு துண்டாய் வெட்டி போட்டால் எவ்வளவு நலமாய் இருக்கும். இந்த நோய் என்னால் தாங்க முடியவில்லை. அல்லது யாராவது ஒரு கையிலே எடுத்துக்கொண்டு வந்து என் கழுத்திலே சுருக்குப் போட்டு என்னை கொன்று போட்டால் எவ்வளவு நலமாய் இருக்கும்." புலம்பி அழுதார். நோய் கொடியது. ஒடுக்குகிற பொல்லாத பிசாசு நோயை போட்டு நம்மை வாட்டி வதைக்கிறது. எனவேதான் தேவாதி தேவன் இறங்கி வந்தார். ஐயோ, என் பிள்ளைகள் எப்படி அழுகிறார்கள் என்று வேதத்தை வாசித்துப் பாருங்கள். மத்தேயு 14:14, பாருங்கள். 20:34 பாருங்கள். அவர் திரளான ஜனங்களைக் கண்டபொழுது மனது உருகி, அவர்கள் சுகமடைய வேண்டும் என்று விரும்பினவர்களை சுகமாக்கினார். லூக்கா 4:40 சொல்லுகிறது, சூரியன் அஸ்தமித்த பொழுது பற்பல நோயினால் வாடினவர்களை அவரிடம் கொண்டுவந்தார்கள். அவர் ஒவ்வொருவர் மீதும் கரங்களை வைத்து அவர்களை குணமாக்கினார். ஒவ்வொருவர் மீதும். வேதம் சொல்லுகிறது, எபிரேயர் 13:8ல், "இயேசு கிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராய் இருக்கிறார்" என்று. இதோ சூரியன் அஸ்தமித்து விட்டது. மாலை மயங்கும் நேரத்தில் நாம் வந்திருக்கிறோம். அவரும் வந்திருக்கிறார். அவர் ஒவ்வொருவர் மீதும் கைகளை வைத்து, ஒவ்வொருவர் மீதும் கைகளை வைத்து, ஒவ்வொருவர் மீதும் கைகளை வைத்து அவர்களை குணமாக்குகிறார். என் அன்பு சகோதர சகோதரிகளே, இயேசுவின் இரக்கம், மனதுருக்கம் தான் நம்மை குணமாக்குகிறது. பிரசங்கியார் யாராய் இருந்தாலும் அதுதான் வேத வசனம். ஒன்றே ஒன்றுதான். அதைத்தான் எல்லாரும் பிரசங்கிக்கிறார். ஆனால் குணமாக்குவது அருமை இரட்சகர் இயேசு. மனது உருகி அவர் நம்மை குணமாக்குகிறார்.

சில மாதங்களுக்கு முன்பு ஒரிசா மாநிலத்தில் உள்ள ரூர்கேலா என்ற நகருக்கு கூட்டங்கள் நடத்த சென்றிருந்தோம். அங்கிருந்த கத்தோலிக்க பேராயர் தான் அரும்பாடுபட்டு அந்த கூட்டங்களை நடத்தினார். எவ்வளவோ தடைகள், பிரச்சனைகள் எனினும் லட்சக்கணக்கு மக்களை கூட்டிக்கொண்டு வந்து இயேசு சேர்த்தார். எங்கும் இடம் போதவில்லை என்ற சூழ்நிலையில் ரோடில் எல்லாம் மக்கள் உட்காரத்தக்கதாக வந்து குமிந்தார்கள். அன்று எனக்கும் என் குடும்பத்தினுக்கும் ஒரு விசேஷித்த வரவேற்பை கொடுக்க வேண்டும் என்று மலையிலிருந்து இறங்கி வந்த கணக்கற்ற மக்கள் விரும்பினார்கள். அரை மணி நேரம் ஆயிற்று அவருடைய அந்த நீண்ட ஊர்வலம் போவதற்கு. அப்பொழுது நான் பேராயரிடம் கேட்டேன், "ஐயா, ஒவ்வொரு தடவையும் பெரிய தலைவர்கள் வரும்பொழுது இப்படி நடக்குமா?" என்று கேட்டேன். அவர் சொன்னார், "பிரதர், இந்த நாட்டின் பிரதம மந்திரி வந்தால் கூட இந்த வரவேற்பு கொடுக்க மாட்டார். மிகுந்த அன்பினால், பாசத்தினால், 'எங்க எங்க ஐயா வராரு, எங்க ஐயா சென்னையிலிருந்து வருகிறார்' என்று மக்கள் ஆவலோடு வந்து இந்த நடனமாடி இப்படி உங்களை பரவசப்படுத்துகிறார்" என்று அவர் வேண்டு சொன்னார். அப்பொழுது கூடவே ஒரு காரியத்தை நான் அறிந்து கொண்டேன். 1875 ஆண்டு பிரிட்டிஷார் நமது நாட்டை அரசாண்டு கொண்டு வந்த சமயத்தில், இந்த மக்கள் எவ்வளவோ இன்னல்களுக்கு உட்பட்டிருந்தார்களாம். அப்பொழுது அவர்கள் மத்தியிலே பெர்சா முண்டா, பெர்சா முண்டா என்ற ஒரு இளைஞன், 16 வயது நிரம்பிய இளைஞன், உள்ளத்தில் தன் ஜனங்களைப் பற்றிய பெரிய பாரம் உண்டாயிற்றாம். அவர்களுக்காக போய் அரசாங்கத்தினிடம் பேசுவானாம். அவர்களுக்காக போய் கெஞ்சுவானாம். பல காரியங்களை செய்வானாம். ஒரு இணையற்ற அன்பு, மனதுருக்கம் அவன் உள்ளத்தை நிறைத்திருந்ததாம். தன் ஜனங்களுக்காக... ஒரு தடவை கிராமம் கிராமமாக அந்த மலையிலே வாழ்ந்து வந்த அந்த மக்கள் மத்தியிலே கொடிய அம்மை நோய் வந்தவருடைய தாக்கியது. நூற்றுக்கணக்கில், நூற்றுக்கணக்கில் ஒரே நேரத்தில் அம்மை நோயினால் மக்கள் பாதிக்கப்பட்டு மனம் கசந்து அழுதார்களாம். இவனுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. இவன் உள்ளத்தில் இருந்தது ஒன்றே ஒன்று: அன்பு. ஆகவே எந்த கிராமத்தில் அம்மை இருக்கு என்று கேள்விப்பட்டான், அங்கு ஒரே ஓட்டமாய் ஓடினான். என்ன ஆச்சரியம் பாருங்கள்! சரித்திரம் சொல்லுகிறது, அவன் அந்த கிராமத்துக்குள் நுழைந்தவுடன் அத்தனை அம்மை நோய்களும் மறைந்துவிட்டன. அடுத்த கிராமத்திற்கு போவான், அங்கிருந்தும் மறைந்தது. கிராமம் கிராமமாய், கிராமம் கிராமமாய் செல்ல செல்ல செல்ல அம்மை நோய் அவனை கொண்டதாக பறந்தது. மக்கள் வியந்தார்கள். ஒன்று, ஒரே ஒன்று: மனதுருக்கம். மனதுருக்கம். அதே மனதுருக்கத்தில் தான் அருமை இரட்சகரும் அன்று உலாவினார்.

ஒடுக்கப்படுகிறவர்களைக் கண்டு மனம் கசந்து அவரும் அழுதார். வேதம் சொல்லுகிறது, மார்க் ஒன்று:40 லிருந்து 42 வரை உள்ள வசனங்கள். குஷ்டரோகி ஒருவன் ஓடி வந்தார். "ஆண்டவரே, உமக்கு சித்தமானால் என்னை சுத்தமாக்குமாறு ஆகும்" என்று ஒரு வினாடி கூட அவர் யோசிக்கவில்லை. அவர் சொன்னார், "எனக்கு சித்தம் உண்டு. நீ சுத்தமாகு" என்றார். தன் கைகளை நீட்டி அவனை தொட்டார். உடனே குஷ்டரோகம் அவனை விட்டு நீங்கியது. பெர்சா முண்டா, அந்த மக்கள் அவன் பகவான் என்று தான் சொன்னார். பகவான். பெர்சா 25 வயது வரை தான் அவர் வாழ்ந்தார். இறந்து போனார். அப்பொழுது இருந்த அரசாங்கம் அவரை கொன்று போட்டது. அவருடைய கீர்த்தியைக் கண்டு பொறாமையினால். அதேபோல நம்முடைய அருமை இரட்சகர் முப்பதாவது வயதில் பரிதாபமாய் மாண்டு போனார். பரிதாபமாக மாண்டு போனார். சிலுவையில் பரிதாபமாய் நமக்காக ஜீவனை கொடுத்தார். நம்முடைய நோய்களை சுமந்தார். மத்தேயு 8:17 சொல்கிறது, "அவர் தாமே நம்முடைய பலவீனங்களை ஏற்றுக்கொண்டு நம்முடைய நோய்களை சுமந்தார்." பரலோகத்தில் நம்முடைய நோய்களைக் கண்டு அழுத அவர் பூமியில் இறங்கி வந்து நேரில் அழுதார். மனது கசந்து அழுதார். மனதுருகி அழுதார். "எனக்கு சித்தம் உண்டு" என்று சொன்னார். என் அன்பு சகோதர சகோதரிகளே, அவர்தான் இன்றைக்கு நம்மை குணமாக்குகிறவர். அவருடைய மனதுருக்கம் தான் உங்களை குணமாக்கப் போகிறது. ஒருவராவது, ஒருவராவது தைரியத்தை இழந்து விடாதிருங்கள். ஒருவராவது இழந்து விடாதிருங்கள். இந்த நோய் சரியாகும், அது சரியாகாது. இது சரியாகும், அது சரியாகாது என்று தயவுசெய்து எண்ணிக்கொள்ளாதீர்கள். மனதுருக்கம், மனதுருக்கம்.

என்னுடைய 20வது வயதில் இயேசுவுக்கு என் உள்ளத்தை கொடுத்தேன். தற்கொலை செய்து கொள்ள நின்று கொண்டிருந்த பொழுது, ரயில் முன்னால் தாவ வேண்டும் என்று இருந்த எனக்கு அருமை இரட்சகரைப் பற்றி என் சித்தப்பா சொன்னபொழுது உள்ளத்தை கொடுத்தேன். அவரை பார்க்க எனக்கு ஒரு விருப்பம் தோன்றியது. ஏழு வருஷம் விடாமல் ஜெபித்தேன். 27வது வயதில் இயேசு தோன்றினார். என் பெற்றோரோடு மற்றவர்களோடு இரவு ஜெபம் செய்யும் பொழுதுதான் தோன்றினார். எல்லார் எதிரையும் தோன்றினார். அந்த இடம் முழுவதும் அவருடைய பிரசன்னத்தினால் நிறைந்தது. மூன்று மணி நேரம் அவரை முகமுகமாய் தரிசித்தேன். அவருடைய முகம் அன்பு நிறைந்த ஒரு முகம். அதிலிருந்து பாசத்தை விவரிக்கவே முடியாது. அவரைப் பார்த்து நான் சிரித்தேன், சிரித்தேன், சிரித்துக் கொண்டே இருந்தேன். இறுதியில் மூன்று மணி நேரம் ஆயிற்று. என்னோடு கூட ஜெபித்துக் கொண்டிருந்தவர்கள் ஜெபித்தார்கள், "ஆண்டவரே, எத்தனையோ மணி நேரம் ஆயிற்று. நாளை காலையில் அவன் வேலைக்கு வேற போக வேண்டும். தயவுசெய்து உம்முடைய பிரசன்னத்தை நீக்கிக் கொள்ளும்" என்று ஜெபித்தார். அவர் என் அருகே வந்தார். ஒரு காரியத்தை சொன்னார். "என் அன்பு மகனே, இந்த உலகம் என் அன்பைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறது. ஆனால் என் அன்பையும் மனதுருக்கத்தையும் அது பார்க்கவில்லை. எனவே எனக்குள் இருக்கும் இந்த உலகில் நான் இருக்கும் பொழுது, எனக்குள் இருந்த அந்த அன்பை, அந்த மனதுருக்கத்தை உன் உள்ளத்திலே ஊற்றுகிறேன். எப்பொழுதெல்லாம் மனதுருகி நீ மற்றவர்களுக்காய் ஜெபிக்கிறாயோ, அப்பொழுதெல்லாம் நீ விரும்புவதை எல்லாம் செய்வேன்." அன்பு. அதுதான் இன்று என்னை தைரியப்படுத்துகிறது. அதுதான் உன்னுடைய காலில் விழுந்து தலை நாட்கள் உபவாசம் பண்ணி, "ஆண்டவரே, என்னோடு வாரும். உம்முடைய அன்பு பிள்ளைகளை நோக்கி பாரும். அவர்களுக்காக நான் சாகவில்லை. நீர்தான் உயிரை கொடுத்தீர். ஒவ்வொரு நோயும் குணமாகும். ஒவ்வொரு பாவக்கட்டையும் அறுத்தெறியும். ஒவ்வொரு கண்ணீரையும் துடைத்திடும்" என்று கெஞ்சும்படி அந்த மனது உருக்கம் தான் என்னை தூண்டுகிறது.

ஒரு நாள் சென்னையில் உள்ள ஒரு ஆலயத்திற்கு போனேன். முடிந்த பிறகு சிலர் ஜெபத்திற்காக காத்திருந்தார்கள். எங்கு போனாலும் என்னை பிடித்துக் கொள்வார்கள். ரயிலோ, ட்ரெயினோ, எங்கு போனாலும் சரி, பிளைனோ, எங்கு போனாலும் சரி. என் நண்பர் பிரபாகர் டேவிட் என்று ஒருவர் உண்டு. அவர் மற்றொரு நண்பரை அழைத்து வந்தார். அவர் சொன்னார், "அண்ணே, இவர் பெரிய அதிகாரி. பெரிய அதிகாரி. திடீர்னு ரெண்டு கண்ணும் தெரியாமல் போயிருச்சு." அவரை நான் உற்றுப் பார்த்தேன். "ஐயோ, இவர் நன்றாய் தெரியுமே." என் உள்ளம் உடைந்தது. நான் சொன்னேன், "தம்பி, இவருக்காக தனிமையாக ஜெபிக்கிறேன்." அவருக்காக கண்ணீரோடு ஜெபம் செய்து, "இயேசு சுவாமி, கண்ணில்லாமல் இவர் என்ன செய்யப்போகிறார்? என்ன செய்யப்போகிறார்?" ஆண்டவர் மனம் இறங்கும். இயேசு கிறிஸ்துவின் மனதுருக்கும் அன்பு என் உள்ளத்தில் பாய்ந்தது. ஜெபம் பண்ணி முடித்தவுடன் பாருங்கள், ஒரு விசுவாசம் எனக்குள் வந்தது. அது எல்லா நேரமும் இருக்காது. விசுவாசம் என்பது கிறிஸ்து கொடுக்கும் ஒரு ஈவு. அந்த நேரம் வரும். அவ்வளவுதான். It can never be stored. நேற்று அற்புதம் செய்தார், இன்றைக்கு செய்வார் அப்படி அல்ல. அந்த நேரத்தில் அவர் கொடுக்க வேண்டும். நான் சொன்னேன், "பிரதர், நான் ஜெபம் பண்ணி இருக்கிறேன். தயவுசெய்து இந்த நியூஸ் பேப்பரை வாசித்து பாருங்க." வாசித்தார். "ஐயோ, அந்த பெருசு பெருசா எழுதலாம்னு தெரியுது பிரதர்" என்று சொன்னார். "இன்னும் கொஞ்சம் வாசிங்க." அடுத்ததை வாசித்தார். "இன்னும் வாசிங்க." அடுத்தது வாசித்தார். "இன்னும் கொஞ்சம் வாசிங்க." சின்ன எழுத்தையும் வாசித்தார். ஒரே சந்தோஷம். ஒரே செகண்ட். அன்பு, அன்பு. அதே அன்புதான் இப்பொழுது உங்களை சூழ்ந்திருக்கிறது. அல்லேலூயா! எத்தனை பேர் அதை நம்புகிறீர்கள்? அருமை இரட்சகருக்கு ஒரு அல்லேலூயா சொல்லுங்கள் பார்க்கிறேன். ஒவ்வொருவரையும் குணமாக்குவார். ஒவ்வொருவர் மீதும் தன் கைகளை வைத்து ஒவ்வொருவரையும் குணமாக்குவார். நாம் சேர்ந்து இந்த பழைய பல்லவியை பாடுவோமா?

"சகல [இசை] வியாதியையும் குணமாய் வல்லவராம். சகல வியாதியையும் குணமாக்க வல்லவராம். யாராயிருந்தால் வேதங்கள் இன்றி கிருபையாய் அன்பை அளித்திடவே. யாராயிருந்தாலும் வேதங்கள் இன்றிய கிருபையாய் அன்பை [இசை] அழைத்திடவே. இயேசு அழைக்கிறார். இயேசு அழைக்கிறார். இயேசு அழைக்கிறார். இயேசு அழைக்கிறார். [இசை] ஆவலாய் உன்னை தம் கரங்கள் நீட்டியே. இயேசு [இசை] அழைக்கிறார். இயேசு [இசை] அழைக்கிறார். இயேசு அழைக்கிறார்."

ஒவ்வொருவர் மீதும் தன் கைகளை வைத்தார். அன்பினால், மனதுருக்கத்தினால். நீங்கள் விதிவிலக்கா? இல்லை. அல்லேலூயா! ஒவ்வொருவரும் இருதயத்தில் சொல்லிக் கொள்ளுங்கள், "நான் விதிவிலக்கு அல்ல. நான் விதிவிலக்கு அல்ல. இயேசு என்னை கைவிடமாட்டார். அவர் கடவுள். சர்வ வல்ல தேவன். என்னை உண்டாக்கினவர். என் உடல் எப்படி இருக்குன்னு அவருக்கு தெரியும். இருதயம் அவருக்கு தெரியும். என் நுரையீரல் அவருக்கு தெரியும். என் கண் எப்படி இருக்கு என்று அவருக்கு தெரியும். அவருக்கு மறைவானது ஒன்றுமில்லை. என்னை அவர் இன்று இரவு தொடுவார். இன்று இரவு என்னை குணமாக்குவார்." தைரியமாய் நாம் கேட்போம். "இயேசு சுவாமி, என் மீது உம்முடைய கைகளை வைக்காமல் போகவே கூடாது." செய்வார். பிரியமானவர்களே, செய்வார். உங்கள் இருதயம் கலங்காதி இருப்பதாக. அருமை இரட்சகர் நிச்சயமாக உங்களை. அவர்தான் உங்களை குணமாக்குகிறவர். ஏதோ பெரிய அற்புதம் என்று நாம் நினைத்து விட வேண்டும். இதற்கு ஒரு பெரிய ஸ்பெஷல் விசுவாசம் எனக்கு வேண்டும் என்று தயவுசெய்து எண்ணாதீர்கள். இல்லை, இல்லை. எங்க அப்பா இந்த நேரத்தில் வருவார். அவர் என்னைப்போல பாடுபட்டவர். சிலுவையிலே, "என் தேவனே, என் தேவனே, ஏன் என்னை கைவிட்டீர்? ஏன் இத்தனை பலவீனங்கள் நோய்களின் மேல் வரவேண்டும்?" என்று புலம்பினவர் அவர்தான். எங்க அப்பா. அவர்தான் என் தகப்பன். எபேசியர் நான்கு:6 சொல்லுகிற, "நம் அனைவருக்கும் ஒரே தேவன், ஒரே பிதா." இன்று தமக்கு மைதானத்தில் வந்திருக்கிற ஒவ்வொருவருக்கும் அவர் தகப்பன். ஒருவரையும் அவர் கைவிடவே மாட்டார். அல்லேலூயா! ஒருவரையும் கைவிடமாட்டார். ஒருவரையும் தொடாமல் அனுப்பவே மாட்டார். நிச்சயமாக அவர் இதை செய்வது உறுதி.

மூன்றாவது பாருங்கள், சங்கீதம் 107:17 வாசிக்க கேட்போம். சங்கீதம் 107:17, "நிர்மூடர் தங்கள் பாத மார்க்கத்தாலும், தங்கள் அக்கிரமங்களாலும் நோய் கொண்டு ஒடுங்கிப் போகிறார்கள்." நோய் கொண்டு ஒடுங்கிப் போகிறார்கள். தங்கள் பாதக மார்க்கத்தால், தங்கள் அக்கிரமத்தால். என் அன்பு சகோதர சகோதரிகளே, அருமை இரட்சகர் இப்படி ஒடுங்கிப் போகிற மக்களையும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார். அக்கிரமம், பாவம் ஒரு மனிதனுடைய வாழ்க்கையில் வரும்பொழுது அவன் ஒடுங்கிப் போகிறான். தடுமாறிப் போகிறான். வேதம் சொல்லுகிறது, புலம்பல் 3:39 இல், "தண்டனை அவன் மேல் வருகிறது." இன்னும் 21:12 பாருங்கள், அங்கேயும் ஒரு தவிப்பு அவனை வாட்டி வதைக்கிறது. சங்கீதம் 107:17 சொல்லுகிறது, நோய் வருகிறது. பலவிதமான தொல்லைகள், பலவிதமான பாடுகள். இதனால் நாம் ஒடுங்கிப் போகிறோம். "ஐயோ, நான் என்ன செய்வேன்? இப்படி நான் அக்கிரமத்தையும் பாவத்தையும் செய்து மாட்டிக்கொண்டேனே" என்ற ஒரு தவிப்பு. வெளியில் நம்மை எல்லாரும் நல்லவர்கள் என்று சொல்லலாம். நம்முடைய உள்ளமோ நம்மை குற்றம் சாட்டுகிறது. தினகரன் நல்லவன் அல்ல. ஒன்று யோவான் 3:20 சொல்லுகிறது, "நம்முடைய உள்ளமே நம்மை குற்றம் சாட்டுகிறது." ஐயோ, என் பாவம் எனக்கு தீர வேண்டும். அடிக்கடி நான் சொல்லுகிற ஒரு கதை. உண்மை சரி. இது அமெரிக்க ஐக்கிய நாட்டில் பத்து ஆண்டுகளாக மரண தண்டனை விதிக்கப்பட்ட ஒருவன் சிறைச்சாலையில் இருந்தான். அவனுக்காக மாறி மாறி அநேக வக்கீல்கள் போராடினார். எப்படியோ அவன் உயிரை காப்பாற்றி விட வேண்டும் என்று பத்து வருடங்கள் ஆகிவிட்டன. ஒரு நாள் அவன் ஜட்ஜுக்கு ஒரு கடிதம் எழுதினான். "நீதிபதி அவர்களே, தயவுசெய்து என்னை தூக்கில் போட்டு விடுங்கள். பத்து வருஷம் நான் காத்திருந்தது போதும்." வக்கீல்மார்கள் ஓடினார்கள். "என்ன பைத்தியக்காரன் போல கடினம் எழுதி இருக்கிறாய்? உன் உயிரை காப்பாற்ற நாங்கள் எவ்வளவு பாடுபடுகிறோம்." அப்பொழுது அவன் சொன்னான், "ஐயா, நான் செய்த குற்றம் உண்மை. தன்னையும் தனியாய் உட்கார்ந்திருந்த ஒரு நகைக்கடைக்குள் இருந்த அதிபரிடம் உள்ளே நுழைந்தேன். என் துப்பாக்கி எடுத்து அவரை நேரில் சுட்டேன். இரத்தம் பீரிட்டு பாய்ந்தது. மயங்கி வந்தார். எல்லா நகைகளையும் நான் சூரையாடினது உண்மை. அதை தூக்கிக்கொண்டு வெளியே வரும்பொழுது நான் ஒரு குரலை கேட்டேன். 'ப்ளீஸ், சம்படி லிப்ட் அப். ப்ளீஸ் ஹெல்ப் மீ.' யார் என்று எட்டிப் பார்த்தேன். அந்த நகைக்கடை அதிபர் சுட்ட பிறகு அவர் நடக்க முயன்றார். தன்னுடைய இரத்தத்திலேயே வழிக்கு விழுந்து தன்னுடைய இரத்தத்திலேயே கிடந்தார். கண்களை மூடி பரிதாபமாய் போச்சு. 'ப்ளீஸ், சம்படி ஹெல்ப் மீ. யாராவது உதவி செய்யுங்கள். யாராவது உதவி செய்யுங்கள். யாராவது உதவி செய்யுங்கள்.' என் இருதயத்தை கல்லாக்கிக் கொண்டேன். ஓடி வந்துவிட்டேன். ஆனால் ஐயா, பத்து வருடங்கள் இரவும் பகலும் அந்த குரல் என்னை வாட்டுகிறது. அந்த குரல் என்னை வாட்டுகிறது. 'சம்படி ஹெல்ப் மீ. யாராவது உதவி செய்யுங்கள்.' எனக்கு தூங்க முடியவில்லை. சாப்பாடு சாப்பிட முடியவில்லை. மனநிம்மதி இல்லை."

நிர்மூடர் தங்கள் அக்கிரமங்களினால், தங்கள் பாவங்களினால் நோய்க்கொண்டு ஒடுங்கிப் போகிறார். தண்டனையினால் ஒடுங்கிப் போகிறார். அக்கிரமத்தினால் ஒடுங்கிப் போகிறார். நிம்மதியின்றி ஒடுங்கிப் போகிறார். என் அன்பிற்குரியவர்களே, ஆகவே இயேசு தேவாதி தேவன், இயேசு என்ற பெயரில் இறங்கி வந்தார். ரெண்டு கொரிந்தியர் 5:21 சொல்லுகிறது, "நமக்காக அவர் பாவமானார்." ஒன்று பேதுரு 2:24 சொல்லுகிறது, "நம்முடைய அக்கிரமங்களை எல்லாம் தம்மேல் போட்டுக்கொண்டார்." சிலுவையில் சுமந்தார். "என் மேல் என் பிள்ளைகள் பாவங்கள் வரட்டும். நான் பாவமாக மாறட்டும். அவர்கள் நீதிமான்களாய் மாறட்டும். அவர்கள் விடுதலை பெறட்டும். பரிசுத்தம் பெறட்டும். அவர்கள் இன்பமாய் வாழட்டும்." என் அன்பு சகோதர சகோதரிகளே, ஒடுக்குகிறவன் நம்மை நேரடியாக பிசாசு என்ற ரூபத்தில், மந்திர தந்திரங்கள் மூலம், அசுத்த ஆவிகள் மூலம் வந்து ஒடுக்குகிறான். நோயின் வடிவில் வந்து ஒடுக்குகிறான். இன்னும் அக்கிரமங்களினால், கெட்ட பழக்க வழக்கங்களினால் நாம் வாடி தவிக்கும்படி நம்மை ஒடுக்கிறான். ஆனால் அருமை இரட்சகரோ, தேவாதி தேவனோ, இயேசு என்ற பெயரில் இறங்கினார். நம் ஒவ்வொருவருக்காக. நாம் யாராய் இருந்தாலும் சரி, படித்தவர்களோ, படிக்காதவர்களோ, ஐஸ்வர்யம் உள்ளவர்களோ, ஏழைகளோ, அல்லது கடன் பட்டவர்களோ, அல்லது சாதி சமய எந்த வேறுபாடும் இன்றி நம் அனைவருக்காகவும் நம்மை படைத்த அந்த இறைவன், இயேசு என்ற பெயரில் இறங்கினால், இயேசு என்ற பெயருக்கு இரட்சகர் என்று பொருளாகும். நம்மை இரட்சிக்கும் ஒருவராவது சோர்ந்து போகக்கூடாது. ஒருவராவது சோர்ந்து போகக்கூடாது. ஐயா, ஒடுக்கிறவர் எங்களை வாட்டி வதைக்கிறார். அல்லது பாவங்கள் எங்களை வாட்டி வதைக்கிறது. நோய்கள் எங்களை வாட்டி வதைக்கின்றன. எங்களுக்கு விடுதலையே இல்லை. ஒரு ஆறுதலும் இல்லை. குடும்பமாக நாங்கள் தற்கொலை செய்து மடிவதை விட வேறு வழியே இல்லை என்று புலம்புகிற பலரும் இருக்கலாம். அப்படிப்பட்ட இரண்டு குடும்பங்களுக்காக இப்பொழுது நான் ஜெபிக்க விரும்புகிறேன். அல்லது உங்கள் கண்ணெதிரே அப்படிப்பட்ட இரண்டு குடும்பங்களுக்காக தேவனை நோக்கி ஜெபிக்க விரும்புகிறேன். யாராவது இரண்டு குடும்பத்தினர் தயவுசெய்து மேடைக்கு வருவீர்களா? இப்பொழுது நான் உங்களுக்காக ஆண்டவரிடம் கேட்கட்டும். உங்களுக்காக பரிதவித்து ஆண்டவரிடம் மன்றாடும். பரிசுத்த ஆவியானவர் மூலம் இங்கே ஆண்டவர் உலாவிக் கொண்டிருக்கிறார். அல்லேலூயா! இயேசு கிறிஸ்துவின் பிரசன்னம் நம்மை நிரப்பிக் கொண்டிருக்கிறது. அல்லேலூயா! அல்லேலூயா! அன்று மோசேயோடு முகமுகமாய் பேசின தேவன், ஆபிரகாமோடு பேசின தேவன், ஏனோக்கோடு சஞ்சரித்த தேவன், நோவாவோடு சஞ்சரித்த தேவன், அதே தேவன் தான். அவர்தான் நமது மத்தியிலிருந்து உலாவிக் கொண்டிருக்கிறார். நம்மை ஆசீர்வதிக்க, நம் கண்ணீரை துடைக்க. ஒரு காரியத்தை மறந்து விடாதிருங்கள். ஒன்பது சொல்லுகிறது, "அவர் ஒவ்வொருவருக்காகவும் மரணத்தை ருசி பார்த்தார்." ஒவ்வொருவருக்காகவும். ஒவ்வொருவருக்காக. ஒவ்வொருவருக்காகவும் மரணத்தை ருசி பார்த்தார். என் அன்பிற்குரியவர்களே, இன்றைக்கும் அவர் நம் அனைவருக்காகவும், நம் எல்லாருக்காகவும் ஜீவனை கொடுத்தவர். நாம் யாவரும் ஆசீர்வதிக்கப்பட வேண்டும் என்றே அவர் விரும்புகிறார். அதுவே அவருடைய விருப்பம். சற்று அவரை நோக்கி பார்ப்போம். சற்று எல்லாரும் நோக்கி. ஒருவராவது இந்த ஆசீர்வாதம் பெறாமல் போக முடியாது. நீங்கள் விரும்பினாலும் போக முடியாது. அல்லேலூயா! நீங்கள் விரும்பினாலும் போக முடியாது. அதை கொடுத்து அனுப்பவே அவர் வந்திருக்கிறார். அல்லேலூயா! நன்றி, இயேசு சுவாமி. ஒவ்வொருவரையும் சுகமாக்குவதற்காய் நன்றி. ஒவ்வொருவரையும் இயேசு விடுதலை செய்து கொண்டிருக்கிறார். ஒவ்வொருவர் மீதும் கைகளை வைக்கிறார். ஒவ்வொருவர் மீதும், ஒவ்வொருவர் மீதும், ஒவ்வொருவர் மீதும். எந்த நோயாக இருந்தாலும் பரவாயில்லை. இயேசு உங்களை குணமாக்கிக் கொண்டிருக்கிறார். இயேசு உங்களை விடுதலை செய்து கொண்டிருக்கிறார். இயேசு முற்றிலுமாய் உங்களை விடுதலை செய்து கொண்டிருக்கிறார். அல்லேலூயா! கைகளை அசைத்து பாருங்கள். கால்களை அசைத்து பாருங்கள். நிற்க முடியாத நோய்கள், வலிகள். இந்த இடத்தை சோதித்து பாருங்கள். கர்த்தர் உங்களை ஆசீர்வதித்துக் கொண்டிருக்கிறார். உம்முடைய வாய்களை திறப்போம். இருதயத்தை திறப்போம். நம்முடைய நோய்களை குணமாக்கினவர். அக்கிரமங்களை பாவங்களை மன்னித்து பரிசுத்த ஆவியினால் நிரப்பினவர். அசுத்த ஆவிகளை துரத்தினவர். நம் மத்தியில் நின்று கொண்டிருக்கிறார். அல்லேலூயா! அன்பு மகள் ஜாஸ்மின், இயேசு உன்னை தொடுவதை நான் பார்க்கிறேன். அவருடைய கரம் உன்னை தொடுகிறது. அல்லேலூயா! அங்கங்கே, அங்கங்கே, அங்கங்கே இயேசு உலாவிக் கொண்டிருக்கிறார். இயேசு கிறிஸ்துவுக்கு ஒரு வல்லமை உண்டு. ஒரே நேரத்தில் ஒரு கோடிக்கணக்கான மக்கள் முன்பிலும் தோன்ற முடியும். உங்கள் மீது அன்புள்ளவராய் தோன்றிக் கொண்டிருக்கிறார். வாயை திறந்து கேளுங்கள். என்ன வேண்டுமோ அவரிடம் கேளுங்கள். இப்பொழுது அவர் கொடுத்துக்கொண்டே இருக்கிறார். அல்லேலூயா! அல்லேலூயா! உள்ளத்தின் ஆழத்திலிருந்து நாம் நம்பிக்கையோடு, விசுவாசத்தோடு அவருக்கு நன்றி செலுத்துவோம். பிரகாசமான காலம் உங்களுக்கு காத்திருக்கிறது. குடும்பமாய் உங்களை ஆசீர்வதித்திருக்கிறார். ஒவ்வொரு குடும்பத்தையும், ஒவ்வொரு குடும்பத்தையும், ஒவ்வொரு குடும்பத்தையும், ஒவ்வொரு குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவரையும் ஆசீர்வதித்திருக்கிறார். நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்களாகவே இருக்க போகிறீர்கள். அல்லேலூயா! நன்றி, நன்றி, நன்றி. எல்லாரும் நன்றி செலுத்துவோம். எல்லாரும் நன்றி செலுத்துவோம். எல்லாரும் உள்ளத்தில் ஆழ்ந்து நன்றி செலுத்துவோம். எல்லாரும் நன்றி செலுத்துவோம். அல்லேலூயா! ஓம்.