📱

Get Our Mobile App

Take your business learning on the go!

Download on the App StoreGet it on Google Play

Revelation Bible Study - Part 21

Antantulla Appam1:01:47

Transcription

[இசை] [இசை] [இசை]

கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக. இப்போது வேத பாடத்துக்குள்ளே செல்லப் போகிறோம். 20 நாட்கள் இது 21வது வேத வகுப்புக்கு கர்த்தர் கொண்டுவந்தார். வேத வசனத்தின் மேல் தாகமுள்ள உங்களை கர்த்தர் ஆசீர்வதிப்பாராக.

வெளிப்படுத்தல் முதலாம் அதிகாரத்திலே அப்போஸ்தலனாகிய யோவான் சொன்னார்: "இந்த புஸ்தகத்தை வாசிக்கிறவனும் கேட்கிறவர்களும் இதை இதில் எழுதியிருக்கிறவைகளை கைக்கொள்ளுகிறவர்களும் பாக்கியவான்கள்." வாசித்தாலும் ஆசீர்வாதம், கேட்டாலும் ஆசீர்வாதம். எல்லாவற்றுக்கும் மேலாக அதை கைக்கொண்டால் இன்னும் அதிகமான ஆசீர்வாதம்.

இன்றைக்கு நாம் பத்தாம் அதிகாரத்துக்கு செல்லப் போகிறோம். பத்தாம் அதிகாரத்தை தொடர்ந்து பதினோராம் அதிகாரம் இணைந்து வருகிறது. பத்தாம் அதிகாரத்தின் தொடர்ச்சி தான் 11வது அதிகாரம். பத்தாவது அதிகாரத்தில் 11 வசனங்கள் இருக்கின்றன. அதற்கு முன்பாய் நடந்த சிலவற்றை ஒரு சில சுருக்கமாய் சொல்லி முடிக்கிறேன்.

பொதுவாக இந்த அதிகாரங்கள் அதிகமாக அந்திகிறிஸ்துவினுடைய ஆட்சியை குறித்து சொல்லிக் கொண்டே இருக்கின்றன. அந்திகிறிஸ்துவினுடைய ஆட்சியின் போது மூன்று காரியங்கள் பூரணமாய் நடக்கும். ஒன்று, ஏழு ஏழு முத்திரைகள் பூரணமாய் உடைக்கப்படும். ஏழு தூதர்கள் எக்காலம் ஊதுவார்கள். ஏழு கோபாக்கினை கலசங்கள் பூமியிலே ஊற்றப்படும். யோவான் ஏழு முத்திரை உடைக்கப்படும் போது என்னென்ன நடக்கும் ஒவ்வொரு முத்திரையாய் அவர் சொல்லிக்கொண்டே வருவதை பார்க்கிறோம். ஆறு முத்திரை உடைத்த பிறகு ஒரு இடைவெளி விழுகிறாள். ஒரு அதிகாரம் கடந்து சொல்லுகிறது யூதர்களுக்கு 144000 பேரை முத்திரையிடுகிற ஒரு காட்சியை காண்பித்துவிட்டு ஏழாவது முத்திரை உடைக்கப்படுகிறதை அவர் நமக்கு சொல்லுகிறார்.

அதேபோல இதுவரையிலும் ஒன்பதாம் அதிகாரம் வரையிலும் ஏழு ஆறு தேவதூதர்கள் எக்காலம் ஊதினார்கள். அதற்குப் பிறகு ஒரு இடைவெளி. பத்தாம் அதிகாரத்தில் ஏழாம் தூதன் எக்காலம் ஊத ஏழாம் தூதன் எக்காளம் ஊதுவதை வெளிப்படுத்தல் 11 ஆம் அதிகாரம் 15 ஆம் வசனத்திலே வாசிக்கிறோம். ஆறுக்குப் பிறகு ஒரு இடைவெளி பிறகு ஏழு வருகிறது.

ஆறு முத்திரைகள் உடைத்த உடனே ஒரு இடைவெளி. ஆறு நாள் ஆண்டவர் உலகத்தை உண்டாக்கிவிட்டு ஒரு இடைவெளி அவர் ஓய்ந்து ஓய்ந்திருந்தார். மனிதனோடு ஓய்ந்திருந்தார். தன்னுடைய சிருஷ்டிப்பின் வேலையிலிருந்து ஓய்ந்திருந்தார். அதுபோலத்தான் இந்த இடத்திலும் ஆறு தேவதூதர்கள் எக்காலம் ஊதினார்கள். பல வாதைகள். ஏழாம் தூதன் எக்காலம் ஊதும்போது இந்த உலகத்தின் ராஜ்ஜியங்கள் எல்லாம் கிறிஸ்துவினுடைய ராஜ்ஜியங்களாய் மாறினது. அதற்குப் பிறகு இந்த பூமி ஒரு 7000 ஆண்டுகளுக்குள்ள அடுத்த ஆயிரம் ஆண்டுகளுக்குள்ளே கடந்து செல்லுகிறது.

ஆறாம் நாள் உருவாக்கப்பட்ட மனிதனுக்காக பூமியிலே 6000 ஆண்டுகளை வைத்தார். ஆதாமிலிருந்து சிலுவை வரை 4000 ஆண்டுகள். சிலுவையிலிருந்து நம்முடைய காலம் வரை 2000 ஆண்டுகள். 6000 ஆண்டுகள். அந்திகிறிஸ்து சிறிய இடைவெளிக்கு பிறகு ஏழு வருஷ அந்திகிறிஸ்துவினுடைய ஆட்சிக்கு பிறகு அடுத்த ஆயிரம் வருஷ அரசாட்சி கிறிஸ்துவோடு நாம் அரசாளப்போகிற அரசாட்சி. ஆறுக்குப் பிறகு எப்போதுமே ஒரு இடைவெளி.

ஆறாம் நாளிலே உருவாக்கப்பட்ட மனிதனுக்காக வேதத்திலே ஆண்டவர் 66 புத்தகங்களை வைத்தார். 66 புத்தகங்களை வைத்தார். ஆவியானவர் எழுதின புத்தகம். அடுத்த ஆறாம் நாள் தாண்டின பிறகு ஆண்டவருக்கு ஆயிரம் வருஷம் ஒரு நாளை போல இருக்கிறது. தாண்டின பிறகு நாம் கிறிஸ்துவை முகமுகமாய் நாம் சந்திப்போம். இந்த உலகத்தின் சாம்ராஜ்யங்கள் கிறிஸ்துவுக்கும் அவருடைய பரிசுத்தவான்களுக்கும் உரியதாய் மாறிவிடும் என்று தானியேல் 7:27 வாசிக்கிறோம். கிறிஸ்துவோடு முகமுகமாய் அவரைப் பார்க்கிற மேன்மை அவரோடு அரசாளுகிற மேன்மை அதை கிருபையாய் நமக்கு தந்தருளுவார்.

சரி, பத்தாம் அதிகாரத்தை நான் நாம் கடந்து செல்லப் போகிறோம். பத்தாம் அதிகாரத்தில் விசேஷமாக ஐந்து காரியங்களை காண்கிறோம். ஒன்று, ஒரு பலமிக்க தேவதூதன். இரண்டாவது, ஏழு இடிமுழக்கங்கள். மூன்றாவது, தேவ ரகசியங்கள். நான்காவது, ஆணையிடுதல். ஐந்தாவது, அப்போஸ்தலனாகிய யோவான் கையிலே கொடுக்கப்பட்ட ஒரு சிறிய புத்தகம். இந்த ஐந்தை குறித்தும் நாம் தியானிக்கப் போகிறோம்.

இப்பொழுது வேதத்தை திறந்து கொள்ளுங்கள். ஒன்று முதல் மூன்று வசனங்களை நான் வாசிக்கிறேன். கவனியுங்கள்.

"பின்பு பின்பு என்றால் ஆறு எக்காலம் ஊதின பின்பு பலமுள்ள வேறொரு தூதன் வானத்திலிருந்து இறங்கி வரக் கண்டேன். மேகம் அவனை சூழ்ந்தது இருந்தது. அவனுடைய சிரசின் மேல் வானவில் இருந்தது. அவனுடைய முகம் சூரியனைப் போலவும் அவனுடைய கால்கள் அக்கினி ஸ்தம்பங்களைப் போலவும் இருந்தது. திறக்கப்பட்ட ஒரு புஸ்தகம் அவன் கையில் இருந்தது. தனது வலது பாதத்தை சமுத்திரத்தின் மேலும் தனது இடது பாதத்தை பூமியின் மேலும் வைத்து சிங்கம் கர்சிக்கிறது போல மகா சத்தம் ஆர்ப்பரித்தான். அவன் ஆர்ப்பரித்தபோது ஏழு இடிகளும் சத்தமாய் முழங்கின."

ஒரு பலமிக்க தேவதூதன் இறங்கி வந்தான். அவனைக் குறித்து ஏழு ரகசியங்கள் எழுதியிருக்கிறது. அவன் யார் என்று எழுதவில்லை. அவன் மிகவேல் தேவதூதனா தெரியவில்லை. கேபிரியேல் தேவதூதனா ரபேல் தேவதூதனா யூரியல் தேவதூதனா பெயர் குறிப்பிடவில்லை. ஆனால் அவன் ஒரு பலமுள்ள தேவதூதன். அவன் யார் என்று கண்டுபிடிப்பதற்கு வேதத்திலே ஏழு குழு குழு. அப்படி என்றால் கண்டுபிடிக்க உதவி செய்யக்கூடிய ஒரு ஏழு காரியங்கள் வேதத்தில் இருக்கிறது.

உண்மையிலேயே அவன் தேவதூதனா? தேவதூதனாய் இருந்தால் அவன் யாராய் இருக்கக்கூடும்? ஆனால் இதில் உள்ள வர்ணனையை பார்க்கும்போது இயேசு கிறிஸ்துவைப் போலவே தோன்றுகிறது. ஒருவேளை அந்த பலமிக்க தேவதூதன் இயேசுவாய் இருக்கக்கூடுமா இல்லையா? அதுதான் முதல் ஆராய்ச்சி.

இப்போது அவனைக் குறித்து நாம் வாசிக்கும் போது வேறொரு பலமுள்ள தேவதூதன் தூதன் என்று எழுதியிருக்கிறது. ஒரு பராக்கிரமசாலியான தேவதூதன் இருக்கிற எல்லா தேவதூதர்களிலும் பலமிக்க உள்ள தேவதூதன் மிகாபவேல் தேவதூதன் என்பதைப் பார்க்கிறோம். வானத்தில் யுத்தம் உண்டாகும்போது அந்த மிகாபவேல் தேவதூதனுடைய தலைமையில் தான் வலுசர்ப்பத்தோடும் எல்லா தேவதூதர்களோடும் அவர்கள் யுத்தம் பண்ணினார்கள். மோசேயினுடைய சரீரத்தைக் குறித்து பிசாசு தர்க்கம் பண்ணும்போது யூதா நிருபத்திலே வாசிக்கிறோம் மிகவேல் தூதன் தான் சாத்தானை தடுத்து நிறுத்தினான். தானியேல் 12 ஆம் அதிகாரத்திலும் கடைசி நாட்களில் தேவ ஜனங்களுக்காக ஒரு தேவதூதன் எழும்புவான் அவன் மிகாவேல் தேவதூதன் என்று சொல்லப்பட்டிருக்கிறது.

இந்த இடத்திலே வருகிற தேவதூதன் மிகாவேல் தேவதூதன் தானா என்ற ஒரு சந்தேகம் எழும்பக்கூடும். வேதத்திலே வெளிப்படுத்தின விசேஷத்தில் மட்டும் ஏறக்குறைய 66 இடங்களிலே தேவதூதர்கள் வருகிறதையும் போகிறதையும் பார்க்கிறோம். பழைய ஏற்பாட்டிலே அநேக இடங்களிலே கிறிஸ்து ஒரு தேவதூதனைப் போல தோன்றி இருக்கிறார். பல இடங்களிலே கிறிஸ்து ஒரு தேவதூதனை போலவே தோன்றியிருக்கிறார்.

ஆதியாகமம் 18 ஆம் அதிகாரத்திற்கு நீங்கள் வந்தால் ஆபிரகாம் ஒரு கூடார வாசலை உட்கார்ந்து இருந்தார். மூன்று புருஷர்கள் அவருக்கு முன்பாக தோன்றினார்கள். ஆபிரகாம் அவர்களைப் பார்த்து நீங்க யாருன்னு கேட்கவே இல்லை. மூன்று புருஷர்கள் தோன்றினார்கள். ஆபிரகாம் அவர்களுக்கு எதிர்கொண்டு போனான். முன்னால சாஷ்டாங்கமாய் தரை மட்டும் விழுந்து அந்த மூணு புருஷர்களை வழங்கினார்கள். ஆபிரகாம் சொன்னார்: "கொஞ்சம் வெயிட் பண்ணுங்க உங்களுக்கு நல்ல சாப்பாடு அடியேனுடைய இடத்துக்கு தேடி வந்தீர்களே கொஞ்சம் இளைப்பாருங்க." அவர்கள் இளைப்பாரும்போது அந்த மூன்று பேர்ல ஒருவர் அதை சுட்டிக் காண்பிக்கும் போது கர்த்தர் என்று வாசிக்கும். ஆபிரகாமை நோக்கி: "உன்னுடைய மனைவி சாராள் எங்கே?" மனைவி இன்ட்ரோடியூஸ் பண்ணல. மனைவிக்கு பெயர் சாராள் என்று அந்த புருஷர்கள் பெயரை சொல்லிக் கேட்கிறார்கள். "உன்னுடைய மனைவி எங்கே?" அதற்குப் பிறகு பார்த்தால் சோதோமை அழிப்பதை குறித்து ஆண்டவர் ஆபிரகாமோடு பேசுகிறார். மூணு புருஷர்ல ரெண்டு புருஷர் அதற்குப் பிறகு சோதோமுக்கு வந்தார்கள். ஆனால் ஆபிரகாம் பின் கர்த்தருக்கு முன்பாக நின்று கொண்டிருந்தார் என்று எழுதியிருக்கிறது. இந்த ரெண்டு புருஷர்களும் சோதோமுக்கு வரும்போது 19 ஆம் அதிகாரம் முதலாம் வசனத்திலே: "பின்பு அந்த இரண்டு தூதர்கள் லோத்தும் இடத்தில் வந்தார்கள்." புருஷர்கள் பிறகு கர்த்தர் பிறகு தேவதூதர்கள். அதே மூணு பேரை மூணு விதத்தில் ஆண்டவர் எழுதுகிறார். மூணு விதத்தில் ஆண்டவரை எழுதுகிறார். புருஷர்கள், தூதர்கள், கர்த்தர்.

யாக்கோபோடு ஒரு புருஷன் இரவெல்லாம் போராடுகிறார். புருஷன் என்று சொல்லியிருக்கிறது. ஆனால் முடிவை பார்த்தால் கர்த்தர் என்று வரும். "இனி உன்னுடைய பெயர் யாக்கோபி என்று ராமல் உன்னுடைய பெயர் இஸ்ரவேல் என்று அழைக்கப்படும். ஏனென்றால் நீ மனுஷனோடும் தேவனோடும் போராடியும் மேற்கொண்டாயே." புருஷனைப் போல வந்தவர் கர்த்தர். தேவனோடு போராடி வந்தவர்.

அக்கினிச் சூழையிலே சாத்ராக், மேஷாக், அப்துநேகோ மூன்று பேரை போடும்போது வேதத்தில் சொல்லுகிறது: "நாலாவது ஒருவர் அந்த அக்கினிச் சூழையில் இறங்கி உலாவினார். அவருடைய தோற்றம் மனுஷகுமாரனுடைய சாயலுக்கு ஒப்பாய் இருந்தது." மனுஷகுமாரன் தேவகுமாரனுக்கு சாயலாய் இறங்கி உலாவினார். அக்கினி சேதப்படுத்தாதபடி பாதுகாத்துக் கொண்டார். அந்த இடத்திலும் வந்தது இயேசு கிறிஸ்து என்று சொல்லுகிறார். பழைய ஏற்பாட்டில் பலமுறை இயேசு தேவதூதனை போலவே தோன்றியிருக்கிறார். ஆகவே இது தேவதூதனா அல்லது உண்மையான கர்த்தரா என்று ஆராய்ந்து பார்ப்பது அதற்கு ஒரு உரைக்கள் தங்கமா இல்லையான்னு உரசி பார்ப்பதற்கு வெளிப்படுத்தல் ஒன்னாம் அதிகாரத்தில் இயேசு எப்படி காட்சி அளித்தார் இந்த பலமிக்க தேவதூதன் அப்படி காட்சி அளித்தவருக்கு ஒப்பாய் இருக்கிறாரா? வெளிப்படுத்தல் நாலாம் அதிகாரத்தில் தேவதூதர் தேவகுமாரன் இயேசு எப்படி காட்சி அளிக்கிறார் அதுபோல இந்த தேவதூதன் காட்சி அளிக்கிறானா என்று பார்க்கும்போது ஒரு பெரிய சத்தியத்தை உணர்ந்து கொள்வீர்கள். இங்கே பலமிக்க தேவதூதனாய் காட்சி அளிக்கிறவர் இயேசு கிறிஸ்துவே அல்லாமல் வேறு ஒருவரும் இல்லை என்பதை நீங்கள் உணர்ந்து கொள்வீர்கள்.

இப்போது நம்மை சற்று ஆழத்துக்குள்ளே செல்லப் போகிறோம். "பின்பு பலமுள்ள வேறொரு தூதன் வானத்திலிருந்து இறங்கி வந்தான்." நம்முடைய ஆண்டவர் பலமிக்கவர். எல்லா பலத்திலும் பெரிய பலன் உன்னதத்திலிருந்து வருகிற பலன். எல்லா பலனிலும் எல்லா வல்லமையிலும் பெரிய வல்லமை பரிசுத்த ஆவியானவரிடத்திலிருந்து கிடைக்கிற வல்லமை. சீஷர்களைப் பார்த்து சொன்னார்: "உன்னதத்திலிருந்து வருகிற பலனால் தரிப்பிக்கப்படுகிற வரையிலும்" என்று லூக்கா 24:49 சொன்னார். அப்போஸ்தலர் 1:8 வாசிக்கும் போது: "பரிசுத்த ஆவி உங்களிடத்தில் வரும்போது நீங்கள் பெலன் அடைவீர்கள்" என்று சொன்னார்.

சிலர் மேல பிசாசு பிடிச்சா மனுஷ பலத்துக்கு அப்பாற்பட்ட பெரிய காரியங்களை அந்த பிசாசு செய்கிறதை பார்க்கலாம். ஒரு அம்மா பிசாசு பிடிச்சிட்டு தண்ணி குடிக்கும் போது என்ன செய்வாங்க? எவ்வளவு பெரிய கிளாஸ் இருந்தாலும் எவ்வளவு பெரிய எவர் சில்வரா இருந்தாலும் ஒரு அமுக்க அமுக்கி அப்படியே தகரத்தை மாதிரி சப்பிப்பட்டு துறை போட்டுருவாங்க. ஒவ்வொரு தடவை தண்ணி குடிக்கும் போது செம்பா இருக்கட்டும் ஒரு அழுத்து அழுத்துவாங்க அப்படியே சப்பி சின்னதா மாறி சாதாரணமா அந்த அம்மாவால் அப்படி செய்ய முடியாது. பிசாசு இறங்கும்போது பெலப்படுத்துகிறது. அவன் முழிக்கும் போது சாதாரணமான அவர்களோட பத்து மடங்கு 15 மடங்கு அசுத்த ஆவிகள் பலன் உள்ளதாய் காட்டுகிறது. அப்படி என்றால் கர்த்தருடைய பலன் எவ்வளவு அதிகமாய் இருக்கும்?

விழுந்து போன லூசிபர் அவ்வளவு பலசாலியாய் காட்சி அளித்தார். கர்த்தர் எவ்வளவு பலசாலியாய் இருப்பார்? "பலமிக்க ஒரு தேவதூதன் வானத்திலிருந்து இறங்கி வரக் கண்டேன்." இங்கே வேறு ஒரு தூதன் என்று எழுதியிருக்கிறது. இதுவரையிலும் நம்ம நிறைய தேவதூதர்களை பார்த்துட்டோம். விசேஷமாய் வெளிப்படுத்தல் ஐந்தாம் அதிகாரத்தில் ஒரு பலமுள்ள தேவதூதனை பார்த்தோம். அந்த தேவதூதன் யோவான் இடத்தில் சொல்லுகிறார்: "அந்த ஏழு முத்திரைகளால் முத்தரிக்கப்பட்ட புஸ்தகம் அதை உடைக்க யாரும் இல்லைன்னு அழாத." ஒரு பலமிக்க தேவதூதன் சொன்னான். ஆனால் இங்கு எழுதப்பட்டிருக்கிறது இவன் வேறொரு தேவதூதன். பழைய தேவதூதன் அல்ல. வேறொரு தூதன். வேறொரு தூதன் என்று மட்டுமே ஆண்டவர் குறிப்பிட்டு நிறுத்திவிட்டார். அவனுடைய பெயர் என்ன? அவனை பற்றிய ரகசியம் என்ன? அது நமக்கு தெரியவில்லை.

அருமையான தேவனுடைய தேவ பிள்ளைகளே, தேவதூதர்களை ஆண்டவர் உருவாக்கும் போது மனுஷனைப் போல உருவாக்கவில்லை. தம்முடைய மகிமையிலிருந்து தேவதூதனை உருவாக்கினார். தன்னுடைய அழியாமையிலிருந்து தேவதூதர்களை உருவாக்கினார். அநித்தியமானவர்களாய் அல்ல நித்தியமானவர்களாய் தேவதூதர்களை உண்டாக்கினார். ஆனால் மூன்றில் ஒரு பகுதி விழுந்தபோது ஆண்டவர் நினைத்தார்: "இவனை மகிமையிலிருந்து ஜோதி பிரகாசத்திலிருந்து அழியாமையிலிருந்து என்றென்றும் வாழக்கூடியவர்களாய் உருவாக்கினதினால் தானே இவர்களுக்கு பெருமை வந்தது." ஆகவே அதன் பிறகு சிருஷ்டிக்கப்பட்ட மனிதனை உருவாக்கும் போது தன்னுடைய ஜோதி பிரகாசத்தில் இருந்து உருவாக்காமல் மகிமையிலிருந்து உருவாக்காமல் மண்ணிலிருந்து உருவாக்கினார். அவனுக்கு பெருமை வந்திடக்கூடாது. ஏதேன் தோட்டத்தில் உள்ள மண்ணை எடுத்திருந்தால் நான் சாதாரணமான மண் அல்ல அவன் சொல்லுவான். ஆகவே ஏதேன் தோட்டத்துக்கு வெளியே உள்ள மண்ணுல அவனை உருவாக்கி ஏதேனுக்கு கொண்டு வந்தார். முதல் நாளிலே அவனை சிருஷ்டித்து விடவில்லை. "நான்தான் மத்த எல்லாம் உண்டாக்குறதுக்கு ஆண்டவருக்கு ஹெல்ப்பா இருந்தேன்னு" அப்பட்டமா போய் சொல்லுவான். ஆறாம் நாள்ல தான் உருவாக்கினேன். ஆண்டவருக்கு தெரியும் அவனுக்குள்ள பெருமை வரும். இந்த பெருமை எப்படியாவது தடுக்கணும்னு ஆண்டவர் விருப்பப்படுகிறார்.

ஒரு பிளாட்பார்ம்ல ரெண்டு பிச்சைக்காரங்க ராத்திரியில் வந்து படுத்தாங்களாம். ஒரு பிச்சைக்காரன் சொன்னானாம்: "ஏய் என்னை தொடாத தள்ளிப்போடு. நான் என்ன ஜாதி தெரியுமா?" எடுக்கிறது பிச்சை, படுத்து இருக்கிறது பிளாட்பார்ம். ரெண்டு பேருக்கும் சொத்தும் இல்ல வீடு இல்ல வாசலும் இல்ல. ஆனா அவனுக்குள்ள அந்த ஜாதி பெருமை போகவில்லை. ஜாதி பெருமை போகல. ஆண்டவருக்கு பிடிக்காத ஒரு காரியம் பெருமை தான். பெருமை தான். அது உலகப்பிரகாரமான பெருமையா இருக்கட்டும். ஆவிக்குரிய பெருமையா இருக்கட்டும். கொலைகாரருக்கு ஆண்டவர் எதிர்த்து நிற்பதில்லை. விபச்சாரக்காரனை எதிர்த்து நிற்பதில்லை. பெரிய கூடிய கள்ளனுக்கு ஏத்து நிற்பதில்லை. பெருமை உள்ளவனுக்கு கர்த்தர். ஏன்னா அது லூசிபர் இருந்து வரணும். அது தேவ பிள்ளைகளுக்கு வந்திடக்கூடாது.

சிலருக்கு உலகப்பிரகாரமான பெருமை இருக்காது. ஆவிக்குரிய பெருமை இருக்கும். "நான் பெரிய ஆவிக்குரிய சபையில் மெம்பு. நான் பரிசுத்த ஆவி அபிஷேகம் பெற்ற மெம்பு. எங்களுடைய சபை தான் பூரணத்துக்கு கொண்டு போகும். நாங்க தான் சீயோனுக்கு போவோம்." இதெல்லாம் லூசிபர் இருந்து வர்ற பெருமை. "அவருடைய கிருபையால் இரட்சிக்கப்பட்டேன். அவர் கிருபையால் அபிஷேகம் பண்ணேன். என்னை நடத்தது கிருபை. எனக்கு நாலு பிள்ளைகளை கொடுத்தது ஆண்டவருடைய கிருபை. என் பிள்ளைகள் எல்லாம் படிக்க வச்சது ஆண்டவருடைய கிருபை. நான் இன்னைக்கு இருக்கிறது நிலைமை அவருடைய கிருபையினால இருக்கிறேன்." அப்படின்னு சொன்னா உங்களுடைய ஓட்டத்தை வெற்றியோடு ஓடி முடிச்சிடலாம். "நான் யார் தெரியுமா உனக்கு? நான் படிச்சு காட்டுறேன்" அப்படின்னு சொன்னா போச்சுன்னு அர்த்தம். நீ விழுந்தா நீ விழுந்தான்னு அர்த்தம்.

அருமையான தேவனுடைய பிள்ளைகளே, ஆனால் மனுஷனை உண்டாக்கும் போது ஆண்டவர் சொல்லுகிறார் சங்கீதம் எட்டாம் அதிகாரம் ஐந்தாம் வசனத்தில்: "மனுஷனை தேவ தூதரிலும் சற்று சிறியவன் ஆக்கினீர்." தேவ தூதரிலும் சற்று சிறியவன் ஆக்கினீர். தேவ தூதர்களை குறித்து 103 ஆம் சங்கீதம் 20 ஆம் வசனத்தில் வாசிக்கும் போது: "கர்த்தருடைய வார்த்தையை கேட்டு அதன்படி செய்கிற பலத்த சவுரியவான்களாகிய தேவதூதர்களே." அவருடைய தேவதூதர்கள்ல ஒரு ஆள் அனுப்பினபோது எசேக்கியா ராஜாவுக்கு விரோதமாய் படையெடுத்து வந்திருந்த சனகரிப்பியின் ராணுவத்துக்குள்ளே புகுந்து ஒரே நொடியில 185000 பேரை சங்கரிச்சிட்டு போயிட்டான். ஒரு தேவதூதன் எத்தனை பேரை சங்கரிச்சான்? ஆண்டவர் எண்ணி சொல்றார் 185000 பேர். ஒரு ஒரு சூரியனுடைய ஒளி பூமிக்கு வர்ற வேகம் 184000 மைல் ஒரு செகண்டுக்கு. ஒரு செகண்டுக்குள்ள சூரியனுடைய ஒளி சர்ன்னு 184000 மைல் வேகத்தை பார்த்து அடுத்த செகண்ட்ல அடுத்த 184000 மைல். ஆனால் தேவதூதன் ஒரு நிமிஷத்துல கொன்றது எத்தனை பேரா? அந்த சூரிய வழி வருகிற வேகத்தை பார்க்கல. இன்னும் ஆயிரம் பேரை அவன் கொன்னானாம். 185000 பேர் என்று வேதம் சொல்லுகிறது. அவ்வளவு பலமிக்க தேவதூதர். அவ்வளவு தேவதூதர்களை உருவாக்கிட்டு ஆண்டவர் என்ன செய்தார்? "நீங்க பலமிக்க தேவதூதர்கள் தான். வல்லமையான தேவதூதர்கள் தான். மகிமையினாலும் கனத்தினாலும் முடிசூட்டப்பட்ட எல்லாம் ஓகே. ஆனால் பூமியில நான் சிருஷ்டித்து நான் அன்போடு அவங்களை தேடி வந்து அவங்களுக்காக இரத்தம் சிந்தி நான் மீட்டு இருக்கேன். அவங்களுக்கு நீங்க எல்லாம் சர்வன்ட்டா உங்களை நான் படைச்சிருக்கேன்" என்றார்.

எவ்வளவு பெரிய மேன்மை! எபிரேயர் 1:14 அப்படி சொல்லுகிறது: "இரட்சிப்பை சுதந்தரித்துக் கொள்ளப் போகிறவர்களுக்கு அவர்கள் எல்லாம் அனுப்பப்படுகிற பணிவிடை ஆவிகளாமே." பணிவிடை, பணிவிடை, பணிவிடை. பணிவிடை செய்றது கை கால் பிடிச்சு விடுறது சமைச்சு கொடுக்கிறது நேரத்து நேரம் என்னென்ன எல்லாம் செய்யணுமோ எல்லா உதவியும் செய்யக்கூடிய பணிவிடை ஆவிகள். மனுஷனை தான் ஆண்டவர் தம்முடைய மணவாட்டியா தெரிந்து கொண்டாரே தவிர தேவதூதர்களை தெரிந்து கொள்ளல. தேவதூதர்களை தெரிந்து கொள்ளல. அவங்க எல்லாம் ரோபோட் மாதிரி ஆண்டவர் போனா போகணும் அவ்வளவுதான். அவர் சுய சித்தமே கிடையாது. மனுஷனுக்கு தான் சுய சித்தம் செய்யலாமா செய்யக்கூடாதா. ஆண்டவர் தரிசி நினைவு வைப்போம்னு சொன்னா நமக்கு சுய சித்தம் தரிசித்து போய் அடிபட்டு கடைசில வருவேன். ஆனால் தேவதூதர்கள் அப்படி சொல்ல முடியாது. போனா போகணும் அவ்வளவுதான். மறுபேச்சே கிடையாது.

நமக்கு சுய சித்தத்தை கொடுத்தது போல தேவதூதர்களுக்கு கொடுக்கலைங்க. மனுஷனும் விழுந்து போனான். தேவதூதனும் விழுந்து போனான். வேதம் சொல்லுகிறது விழுந்த தேவதூதர்களுக்கு கை கொடுக்காம விழுந்து போன மனுஷருக்கு ஆண்டவர் கை கொடுத்தாராம். தேவதூதன் விழுந்து போனபோது உன்னை தூக்கி எடுக்கிறதுக்கு நான் வரேன்ப்பா நானும் உன்னை நீ விழுந்து எந்த இடத்திலும் தூக்கி ஆண்டவர் சொல்லல. ஆண்டவர் விழுந்த தேவதூதர்களை நோக்கி வரல. விழுந்து போன மனுஷனுக்கு ஒரு மீட்பு உண்டாக்கும்படி தான் ஆண்டவர் இந்த பூமிக்கு வந்தார். நம்மை எவ்வளவு மேன்மையாய் ஆண்டவர் எண்ணியிருக்கிறார் பாருங்க. எவ்வளவு மேன்மையாய் எண்ணியிருக்கிறார்.

"இங்கே பலமிக்க தேவதூதன் வானத்திலிருந்து இறங்கி வரக் கண்டேன்" என்று சொல்லுகிறார். வானத்திலிருந்து இறங்கி வருகிறார். அந்திகிறிஸ்து அவன் சமுத்திரத்திலிருந்து அவன் ஏறி வரக் கண்டேன் என்று வெளிப்படுத்தல் 13 ஆம்.

அதிகாரம் முதலாம் வசனத்தில் அந்திகிறிஸ்து சமுத்திரத்திலிருந்து ஏறி வருகிறதைக் கண்டு அதற்குப் பின்னால பார்க்கிறோம் பாதாளத்திலிருந்து ஏறி வருகிற ஒரு மிருகத்தைக் கண்டு சாத்தானுடைய வல்லமை கடலிலிருந்து ஏறி வருகிறது பாதாளத்திலிருந்து இறங்கி வருகிறது. ஆனால் இந்த தேவன் வானத்திலிருந்து அதாவது பரலோகத்திலிருந்து அதாவது தேவனுடைய சமூகத்திலிருந்து வேதம் சொல்லுகிறது வானத்திலிருந்து இறங்கி வந்தவரும் பரலோகத்துக்கு ஏறிச் செல்லுகிறவருமாகிய தேவகுமாரனைத் தவிர பழைய ஏற்பாட்டு காலத்திலே பரலோகத்துக்கு ஏறினவன் ஒருவனும் இருந்தது. பழைய ஏற்பாட்டில் ஒருத்தனும் பரலோகத்துக்குள்ள ஏறிப்போனதில்லை பரதேசியோடு நின்று போனான் அதுக்கு அவ்வளவுதான் போக முடிந்தது.

ஆனால் பரலோகத்திலிருந்து இறங்கி வந்தவரும் பரலோகத்துக்கு ஏறினவரும் பரலோகத்துக்கு ஏணியாய் மாறினவரும் நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாய் இருக்கிறேன் என்று யோவான் 14 ஆறுலே சொன்னதும் நானே வாசல் என் வழியாய் உட்பிரவேசித்தால் உள்ளும் புறம்பும் சென்று மேய்ச்சலைக் கண்டடைவான் யோவான் பத்தாம் அதிகாரம் ஒன்பதாம் வசனத்திலே நாம் வாசிக்கிறோம். இந்த பலமிக்க தேவதூதன் பரலோகத்திலிருந்து ஏறி வந்தான் அவனைக் குறித்து என்ன சொல்லியிருக்கிறது மேகம் அவனை சூழ்ந்திருந்தது. மீண்டும் வாசிக்கிறேன் பின்பு பலமுள்ள தேவதூதன் வானத்திலிருந்து இறங்கி வரக் கண்டேன் மேகம் அவனை சூழ்ந்திருந்தது.

நமக்கு தலைக்கு மேலாக மேகக் கூட்டங்கள் நிறைய செல்லுகிறது. சிறு பிள்ளையா இருக்கும்போது சாயங்காலங்கள்ல எங்களுடைய கிராமத்தில் உட்கார்ந்து அந்த மேகங்களை பார்ப்பேன். சில மேகம் அப்படியே மேந்து போகும்போது ஏதோ ஆட்டுக்குட்டிகள் இருக்கிறது போல இருக்கும். சில தோற்றம் பார்த்தா இயேசு ஆட்டுக்குட்டிகளோடு உட்கார்ந்து இருக்கிறது போல தோன்றும். மேகம் போல இத்தனை திரளான சாட்சிகள் நம்மை சூழ்ந்து கொண்டிருக்க என்று எபிரேயர் 12:1 வாசிக்கிறோம். மேகம் போன்ற திரளான சாட்சிகள்.

ஆனால் அதே நேரத்திலே இஸ்ரவேல் ஜனங்களை வழிநடத்துவதற்கென்று மேக ஸ்தம்பம் இறங்கி வந்தது. ஆண்டவர் எப்போதுமே அந்த மேகத்திலிருந்து இஸ்ரவேல் ஜனங்களோடு பேசினார். அந்த மேகத்திலிருந்து மோசேயோடு பேசினார். எப்போதெல்லாம் தேவனுடைய மகிமை இறங்கி வந்ததோ அங்கே மேகங்கள் இறங்கி வந்தது. புதிய ஏற்பாட்டிலே மேகம் என்று சொல்லுவது தேவனுடைய பிரசன்னத்தை குறிக்கிறது. தேவனுடைய பிரசன்னத்தை குறிக்கிறது. ஆசிரிப்புக் கூடாரத்தை பிரதிஷ்டை பண்ணும்போது யாத்திராமம் 40 ஆம் அதிகாரம் 34, 35 மேகம் அப்படியே ஆசிரிப்பு கூடாரத்தை மூடினது அவருடைய மகிமை நிரப்பினது. சாலமோன் தேவாலயத்தை பிரதிஷ்டை பண்ணும்போது கூட பாடுகிற குழுவினர் எல்லாம் பாடி ஆண்டவரை ஆவியோடு உண்மையோடு ஆராதிக்கிறார்கள். 120 ஆசாரியர்கள் பாடுகிறார்கள். 120 பேர் பூரிகளை முழக்குகிறார்கள். கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது என்று துதிக்கும் போது மேகங்கள் வந்து இறங்கினது. கர்த்தருடைய மகிமை தேவாலயத்தை நிரப்பினர். மேகம் வருகிறது மேக ஸ்தம்பம் வருகிறது கூடவே கர்த்தருடைய மகிமையும் இறங்கி வருகிறது.

சில வருஷத்துக்கு முன்னால தேவனுடைய மகிமையை குறித்து ஒரு செமினார் எடுக்கிறதுக்காக அம்பத்தூர்ல ஒரு ஸ்கூல் நாங்க எடுத்து ஐந்து ஊழியக்காரர் தந்தை பெர்க்மஸ் வந்திருந்தார். குவைத்து தேசத்தில் சகோதரி லதா ரமேஷ் பாண்ட் நிறைய ஊழியக்காரங்க வந்திருந்தாங்க. ஐந்து நாளும் தங்கியிருந்து தேவனுடைய மகிமைப் பற்றி பேசி முதல் நாள் நாங்க எல்லாம் ஜெபம் பண்ணிட்டு இருக்கும்போது ஆண்டவர் திடீரென்று தீர்க்கதரிசனத்தில் பேசினார் கடைசி நாளில் நான் என் மகிமையோடு வருவேன். ரொம்ப சந்தோஷமா இருந்தது இந்த வேலைக்காக ஆவலோடு காத்திருந்தோம். இந்த பைனல் செஷன் 9:00 மணிக்கு ஆரம்பிச்சு ஒரு மணிக்கு முடியும். 9 மணிக்கு நாங்க எல்லாம் ஆண்டவரை பிரைஸ் பண்ண ஆரம்பித்தோம். ஒன்பது ஆச்சு பத்து ஆச்சு 11 ஆச்சு துதித்துக் கொண்டே இருந்தோம். ஐந்து நாள் அதே இடத்தில் தங்கி இருந்ததுனால தேவ பிரசன்னம் அவ்வளவு அருமையா இருந்தது. 11 மணி இருக்கும் திடீரென பின் வாசல் ஒரு மேகம் வருகிறது போல இருந்தது ஒரு மகிமை அப்படியே இறங்கி வந்தது. கடைசி ரோல் இருந்தாங்க அவ்வளவு பேரும் அப்படியே ஸ்லைன் ஆகி விழுந்துட்டாங்க. அந்த பிரசன்னம் அடுத்த லோக்கு வந்தது அங்கே யாராலும் நிற்க முடியல. ஒவ்வொன்னா ஒவ்வொன்னா ஒவ்வொன்னா கடைசில மேடைக்கு வந்தது எனக்கு ஒன்னும் செய்ய முடியல ஆண்டவருடைய மார்பில் அப்படியே சாய்ந்தது போல இருந்தது ஒரு பஞ்சி ஒரு மென்மையான கரம் என்னை உயர்த்தது போல இருந்தது ஒரே மனமகிழ்ச்சி அப்படியே விழுந்துவிட்டேன். ஐந்து நிமிடம் அந்த பிரசன்னம் அப்படியே இருந்தது. அதுக்கு பேர்தான் ஒவ்வொருவராய் மெதுவாய் எழுந்தார்கள். அதுக்கு பிறகுதான் ஒவ்வொரு ஆள் சாட்சி சொன்னாங்க. ஒரு சாரும் சொன்னார் இந்த மேகம் போல தேவ மகிமை வந்ததும் கீழ் விழுந்துட்டேன். நான் இந்திய ராணுவத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கும் போது எனக்கு குஷ்டரோகம் வந்ததுனால என்னை டிஸ்மிஸ் பண்ணிட்டாங்க. கிளவுஸ் கொடுத்தான் இந்த மீட்டிங் வந்தேன் கிளவுஸ் கழட்டி பார்த்தா புது கை ஒரு குழந்தைக்கு இருக்கிறது போல ஒரு புதிய கை உட்கார்ந்து அவ்வளவு பேர் மத்தியிலும் அவ்வளவு பேருக்கும் ஆண்டவர் அற்புதம் செய்ததை அன்றைக்கு பார்க்க முடியல. மகிமை வரும்போது ஏதோ ஒரு மகிமையான காரியத்தை ஆண்டவர் செய்கிறார். அந்த ஸ்லைன் ஆகும்போதெல்லாம் ஒரு மென்மையான கரம் அப்படியே உன்னதத்துக்கு கொண்டு போகிறது போல ஒரு பெரிய மகிழ்ச்சி நம்மை நிரப்பத்துக்கும் நிரப்புகிறது போல இருக்கிறது.

வேதத்தில் பல நேரங்களில் தேவனுடைய மகிமை மேகங்கள் இறங்கி வந்தது. அதைத்தான் நாம் அப்போஸ்தலர் 1:1 வாசிக்கிறோம் இயேசு எடுத்துக்கொள்ளப்படும்போது ஒரு மேகம் அவரை எடுத்துக்கொண்டது. மேகம் தான் அவரை எடுத்துக்கொண்டது. எலியா தீர்க்கதரிசி பரலோகத்துக்கு போகும்போது அக்கினி ரதங்கள் குதிரைகள் இறங்கி வந்தது அவரை எடுத்துக்கொண்டது. இங்கே இந்த தேவதூதனை ஒரு மேகம் சூழ்ந்திருந்தது ஏன் அந்த மேகம் சூழ்ந்திருந்தது அந்த தேவதூதன் முகத்தை ஆண்டவர் தெளிவாய் காண்பிக்க விரும்பவில்லை. அந்த தேவனுடைய முகத்தை மேகங்கள் சூழ்ந்திருந்தது. பழைய ஏற்பாட்டிலே ஏசாயாவுக்கு தேவதூதர்கள் தரிசனமான போது அவருக்கு முன்பாக சேராபின்கள் நின்றார்களாம். இந்த சேராபின்கள் முகத்துக்கு நேராக ஏசாயா திரும்பினார் முதல்ல பார்க்கிறார் அவ்வாறு சட்டைகள் இருக்கிறது என்றார் எத்தனை சட்டைகள் இருக்கு ஒன்னு ரெண்டு மூணு நாலு அஞ்சு ஆறு ஆறு சட்டைகளை வைத்து எப்படி பறக்குறாங்க ஆராய்ச்சி பண்ணிக்கொண்டிருந்தார். இனிமே இப்போ ஏசாயா அந்த சேராபியுடைய முகத்தை பார்க்கணும் இது ஆணா பொண்ணா இந்த சேராபியனுக்கு என்ன ஏஜ் இருக்கும் முடி என்ன கலர் கண்ணு கருப்பான கண்ணா ப்ளூ கலர் கண்ணா வாய் எப்படி இருக்கிறது ஆராய்ச்சி பண்ண ஆரம்பிக்கிறதுக்கு முன்னால சேராபீன்கள் என்ன பண்ணிட்டாங்களாம் ரெண்டு செட்டைகளால் முகத்தை மூடிட்டாங்க. ஏன் மூடினாங்க எங்க முகத்தை பார்த்து நீ ஆராய்ச்சி பண்ணிட்டு இருக்காத நீ பார்க்க வேண்டிய ஒரு முகம் உண்டு கர்த்தருடைய முகத்தை நீ பார் அவர்தான் உனக்கு இரக்கம் செய்கிறவர் கிருபை பாராட்டுகிறவர் கர்த்தருடைய நீ பார்க்கிறதை விட்டுட்டு உன்னுடைய சிந்தையும் உன் கண்களையும் நாங்க டிஸ்ட்ராக்ட் பண்ணி எங்களை பார்த்து நீ டைம்ம வேஸ்ட் பண்ணாதப்பா முகத்தை மூடிக்கொண்டார். ஏசாயாவே ஒரு நாள் ஆண்டவர் உன்னை மேன்மையாய் உயர்த்துவார் ஜனங்கள் உன்னை பார்க்கும்படி கவனத்தை அவர்கள் பக்கமா இருப்பார் உனக்காக ஊழியத்தில் ஒரு தனி சாம்ராஜ்யம் உண்டாக்காது உன் பேர் புகழை வெளிப்படுத்தணும் என்னை பார் என் அழகை பார் என் ஊழியத்தை பார் என்கிட்ட உள்ள ஆவியின் வரங்களை பார் அதை காட்டாத உன்னுடைய முகத்தை மூடிக்கொள் நான் சிறுகவும் அவர் பெருகவும் வேண்டும் அல்லேலூயா ஆண்டவரை விட்டு எந்த காரியத்திலும் நீ உன் பக்கமாய் ஜனங்களை திருப்பாத அதைத்தான் இந்த தேவதூதன் உன்னை சூழ ஒரு மேகம் உன்னை சூழ ஒரு மகிமை அருமையான தேவனுடைய பிள்ளைகளே மேகம் எப்போதும் கர்த்தரோடும் கர்த்தருடைய பிரசன்னத்தோடும் கர்த்தருக்கு வாகமன்னமாய் இருக்கிறது. மேகங்கள் மேல் அவர் மேகத்தின் செட்டைகள் மேல் அவர் பறந்து சென்றார் 104 ஆம் சங்கீதத்தில் வாசிக்கிறோம் மகிமையும் மகத்துவத்தையுமே அவர் வஸ்திரமாய் தரித்திருந்தார் மேகம் அவனை சூழ்ந்திருந்தது.

அடுத்ததாக வேதம் சொல்லுகிறது அந்த தேவனுடைய அரசின் மேல் வானவில் இறந்தது. மீண்டும் வாசிக்கிறேன் ஒன்னாம் ஒன்னாம் வசனம் பின்பு பலமுள்ள வேறொரு தூதன் வானத்திலிருந்து இறங்கி வரக் கண்டேன் மேகம் அவனை சூழ்ந்திருந்தது அவனுடைய சிரசின் மேல் வானவில் இருந்தது. வானவில் என்பது தேவன் மனிதனோடு உடன்படிக்கையின் சின்னம். நான் ஜலத்தினால் உலகத்தை இனி அழிப்பதில்லை என்று நோவாவுக்கு ஆண்டவர் வாக்கு பண்ணினார். அந்த வாக்கிலே அவர் உண்மையுள்ளவர் ஆதியாகமம் ஒன்பதாம் அதிகாரம் 12 ஆம் வசனம் 16 ஆம் வசனம் வரைக்கும் என்னுடைய வில்லை நான் வானத்திலே வைப்பேன் மழை தோன்றும் போது அந்த வில் தோன்றும் போதெல்லாம் உன்னோடு செய்த உடன்படிக்கையை நான் நினைவு கூறுவேன். அப்படித்தான் வெளிப்படுத்தல் நான்காம் அதிகாரத்திலே தேவனுடைய சிங்காசனத்தை சூழவும் வானவில் இருந்து நம்ம பார்க்கிற வானவில் பாதி தான் சூரியனுக்கு எப்போதுமே ஆப்போசிட் சைடுல தான் வானவில் தோன்றுமே தவிர சூரியன் அங்க உதிச்சுன்னா அங்க வானவில் நீங்க பார்க்க முடியாது. சூரியனுக்கு எதிர் திசையிலே அந்த ஈர பசையினாலே தண்ணீருடைய பசையினாலே ரிப்ளெக்ட் ஆகி வானவில் தெரிகிறது. ஆனால் முழு வானவில்லும் தேவனுடைய சிங்காசனத்தின் சூழ இருந்தது என்று வெளிப்படுத்தினால் நாலாம் அதிகாரத்தில் நம்ம வாசிக்கிறோம். அந்த வானவில் கர்த்தர் வாக்குத்தத்தத்தில் உண்மையுள்ளவர். இதுவரையிலும் எத்தனையோ சுனாமிகள் வந்தது எத்தனையோ கடல் கொந்தளிப்பு வந்தது ஆனால் அவைகளால் அழிக்கப்படவில்லை இனி வரப்போகிற அழிவு அக்கினியால் வரப்போகிற அழிவுதான். பேதுரு அப்போஸ்தலன் பல வருஷத்துக்கு காணப்படுகிற இந்த உலகமானது அக்கினிக்கு இறையாக வைக்கப்பட்டிருக்கிறது. வானங்கள் மடமட என்று அகன்று போகும் பஞ்சபாத பூதங்கள் வெந்து உருகிப் போகும் போகும் கர்த்தருடைய நாள் என்று அவர் அந்த அந்த நியாயத்தீர்ப்பை குறித்து அவர் எழுதுகிறார். ஆண்டவர் உடன்படிக்கையில் உண்மையுள்ளவராய் இருந்து இதுவரைக்கும் உலகத்தை ஜலப்பிரளயத்தினால் அழிக்காதபடி பாதுகாத்து வருகிறாள்.

அடுத்ததாக அவனுடைய முகம் சூரியனைப் போல இருந்தது. ஒன்று ஆண்டவர் சொல்லுவார்கள் ஆறாவது ஆண்டவர் சொல்லுகிறார் ஒரு சூரியன் நம்முடைய ஆண்டவருடைய பெயர்களில் ஒன்று நீதியின் சூரியன் என்று மல்கியா நாலாம் அதிகாரம் இரண்டாம் வசனத்தில் வாசிக்கிறோம். மறுரூப மலையிலே ஆண்டவர் காட்சி அளித்தபோது மத்தேயு 17 ஆம் அதிகாரம் இரண்டாம் வசனத்தில் அவருடைய முகம் பிரகாசிக்கிற சூரியனைப் போல இருந்தது. அவருடைய வஸ்திரம் எந்த வண்ணானாலும் வெளுக்க முடியாத வெண்மையாய் இருந்தது. தமஸ்கு வீதியிலே ஆண்டவர் சவுல் போய்க்கொண்டிருந்தபோது வானத்திலிருந்து ஒரு பெரிய வெளிச்சம் சூரியனுக்கு ஒப்பான வெளிச்சம் தரையில் விழுந்தார். அவர் மீதியும் சூரியன் அதுதான் சவுலை பவுலாக அப்போஸ்தலனாகிய பவுலாக மாற்றினது அந்த மகிமையின் வெளிச்சம். அதே நேரத்தில் ஆண்டவர் சொல்லுகிறார் [இசை] நீதிமான்கள் பிதாவின் ராஜ்ஜியத்திலே சூரியனைப் போல் போல பிரகாசிப்பார். அதை நாம் எங்கே வாசிக்கிறோம் மத்தேயு 13 ஆம் அதிகாரம் 43 ஆம் வசனத்திலே வாசிக்கிறோம். இந்த தேவதூதனுடைய முகம் சூரியனைப் போல இருந்தது எல்லாம் வாசிச்சுட்டு வர வர வர இயேசு கிறிஸ்துவோட கம்பேர் பண்ணிட்டே வாங்க. வெளிப்படுத்தல் ஒன்னாம் அதிகாரத்தில் பத்முத்தீவுல இயேசு அவர் யோவான் தரிசிக்கும் போது இந்த 14 ஆம் வசனத்திலிருந்து வாசிக்கும் போது அவருடைய முகம் சூரியனைப் போல பிரகாசமாய் இருந்தது. ஆகவேதான் யோவான் அவருடைய அவருடைய பாதத்திலே செத்தவனைப் போல விழுந்தார். பத்மத்தீவிலா தேவனை தரிசித்த போது அங்கேயும் அவருடைய முகம் சூரியனைப் போல இருந்தது. இந்த பலமிக்க உள்ள தேவதூதன் கிறிஸ்து தான் என்பதற்கு வரிசையாய் நாம் பார்த்துக் கொண்டே வர முடியும்.

அடுத்ததாக அவனுடைய கால்களைக் குறித்து சொல்லியிருக்கிறது. அவனுடைய முகம் சூரியனைப் போலவும் அவனுடைய கால்கள் அக்கினி ஸ்தம்பங்களைப் போலவும் இருந்தது. பழைய ஏற்பாட்டில் இஸ்ரவேல் ஜனங்களை கர்த்தர் வழிநடத்தும் போது இரவிலே அக்கினி ஸ்தம்பங்கள் போல அந்த ஸ்தம்பங்கள் வந்து இறங்கி இருந்தது. இரவிலே குளிர் வனாந்தரத்தில் குளிர் நவம்பர் டிசம்பர் எல்லாம் தாங்க முடியாத குளிர் அக்கினி ஸ்தம்பங்களைப் போல இருந்தது. ஆண்டவருடைய கால்களைப் பார்க்கிறார் அக்கினிச் சூழையில் நடந்த அவருடைய பாதங்கள் அக்கினி மயம் போன்ற கால் வெளிப்படுத்தல் ஒன்னாம் அதிகாரத்தில் நம்ம வாசிக்கிறோம். அவருடைய கால்கள் உலைக்களத்திலே காய்ந்த வெண்கலம் போல இருந்தது. இந்த ஒன்னாம் அதிகாரத்தை தலையிலிருந்து வர்ணிக்கிறார். அவருடைய முகம் பிரகாசிக்கிற சூரியனை போல தலப்ப மயிர் வெண்மையாக பஞ்சை போல இருந்தது. அவருடைய கண்கள் அக்கினி ஜுவாலையை போல இருந்தது. அவருடைய வாயிலிருந்து இருபுறமும் கருக்குள்ள பட்டயம் போல இருந்தது. வர்ணித்து வரும்போது கால்களை சொல்லுகிறார் இந்த கால்கள் உலைக்களத்திலே காய்ந்த வெண்கலம் போல இருந்தது. ஆகவே இந்த ஏழு காரியங்களை வாசிக்கும் போது இந்த தேவதூதன் இயேசு கிறிஸ்து தான் என்பதை அறிகிறோம்.

எட்டாவது இன்னொரு காரியத்தை சொல்லி இருக்கிறோம் இருக்கிறது. மறுபடியும் அந்த வசனத்தை வாசிக்க விரும்புகிறேன். பின்பு பலமுள்ள வேறொரு தூதன் வானத்திலிருந்து இறங்கி வரக் கண்டேன் மேகம் அவனை சூழ்ந்திருந்தது அவனுடைய சிரசின் மேல் வானவில் இருந்தது. அவனுடைய முகம் சூரியனைப் போலவும் அவனுடைய கால்கள் அக்கினி ஸ்தம்பங்களைப் போலவும் இருந்தது. இரண்டாம் வசனத்தின் பின்பகுதியில் வருகிறேன் நான் வாசிக்கிறேன் திறக்கப்பட்ட ஒரு புஸ்தகம் அவன் கையில் இருந்தது தன் கால் தனது வலது பாதத்தை சமுத்திரத்தின் மேலும் தன் இடது பாதத்தை பூமியின் மேலும் வைத்தார். இதிலிருந்து அந்த தேவதூதன் எவ்வளவு பெரியவனாய் இருந்தா ஒரு காலை அவ்வளவு பெரிய சமுத்திரத்தில் வச்சு நிற்கக்கூடியவன் அடுத்த காலை பூமியின் மேல் வைத்து நிற்கக்கூடியவன். உலகத்துல மூணுல ஒரு பகுதி தண்ணீரால சமுத்திரத்தால நிரம்பி இருக்கிறது. மூணுல ஒரு பகுதிதான் பூமியா இருக்கிறது. இந்த தேவதூதன் அவ்வளவு பெரியவனா இருந்ததுனால பூமியில் வாழ்கிற மக்களும் தன்னுடையவர்கள் சமுத்திரத்தில் இருக்கிற கப்பல்கள் அதுல ஜீவிக்கிறவர்கள் தன்னுடையவர்கள் மச்சங்கள் மீன்கள் திமிங்கலங்கள் அவருடையது. நாம் வானத்திலும் பூமியிலும் சகல அதிகாரம் உடையவர் என்பதை காண்பிப்பதற்காகத்தான் அந்த தூதன் தன்னுடைய வலது காலை சமுத்திரத்தின் மேல் வைத்தான் இடது காலத்தை இடது காலை பூமியின் மேல் வைத்து நின்றார். நான் சகல ஆளுகை உடையவன் வானத்திலும் பூமியிலும் சகல அதிகாரம் எனக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது. சமுத்திரம் நான் சிருஷ்டித்தது பூமி எனக்கு நான் சிருஷ்டித்தது இரண்டும் என்னுடைய பாதப்பங்களுக்கு கீழாய் இருக்கிறது. பாதப்பங்கள் என்று இந்த இடத்திலே சொல்லுவது அவனுடைய அதிகாரத்தை காண்பிக்கிறது. அவனுடைய உரிமையை காண்பிக்கிறது. அவனால் சிருஷ்டிக்கப்பட்டது என்பதை காண்பிக்கிறது. பாதங்கள் பாதங்கள் என்பது கால் மிதிக்கும் இடத்தை எல்லாம் சுதந்திரமாய் பெற்றுக்கொள்ளக்கூடிய ஒரு பெரிய கர்த்தருடைய சுதந்திரம் இது என்னுடையது என்கிற சுதந்திரம். ஆகவேதான் அவன் தன்னுடைய பாதங்களை வைத்தானாம்.

திறக்கப்பட்ட ஒரு புஸ்தகம் அவன் கையில் இருந்தது. அவன் கையில் ஒரு ஒரு திறக்கப்பட்ட புஸ்தகம் இருக்கிறது. அந்த புஸ்தகத்தைக் குறித்து தான் இந்த அதிகாரத்தின் கடைசி பகுதியிலே நாம் வாசிக்கிறோம். ஒன்பதாம் வசனத்துக்கு நான் உங்களை அழைத்துச் செல்ல விரும்புகிறேன். நான் தூதனிடத்திலே போய் அந்த சிறு புத்தகத்தை எனக்கு தாரும் என்றேன். ஆண்டவர் ஐந்தாம் அதிகாரத்திலே ஒரு பெரிய புஸ்தகத்தை பார்க்கிறார் பிதாவினுடைய கையில் இருக்கிறது ஏழு முத்திரைகளால் முத்தரிக்கப்பட்ட புஸ்தகம். அதிலே உபத்திரவ காலம் ஏழு ஏழு வருஷங்கள் நடக்கப்போகிற சம்பவங்கள் அதில் எழுதியிருக்கிறது. எப்படி கிறிஸ்துவை மீட்கப்போகிறார் மீட்பின் கிரைய புஸ்தகமாய் அது இருந்தது. ஆனால் இந்த புஸ்தகத்தை குறித்து வேதத்தில் வாசிக்கும் போது ஒரு சிறிய புத்தகமாய் இருந்தது. இது என்ன புத்தகம் என்ன புத்தகத்தை யோவான் இடத்தில் ஆண்டவர் கொடுத்தார். சிலர் சொல்றார் இந்த வெளிப்படுத்தின விசேஷம் தான் அந்த புத்தகம். வெளிப்படுத்தின விசேஷம் தான் அந்த புத்தகம். சிலர் சொல்றாங்க இல்ல இல்ல வேத புத்தகம் அது இல்ல புதிய ஏற்பாடு அது இல்ல. அது யோவான் எழுதின சுவிசேஷம். ஆனால் அந்த புத்தகத்தை வாங்கி யோவான் புசித்தபோது வாய்க்கு மதுரமாய் இருந்ததாம் வயிற்றுக்கு கசப்பாய் இருந்ததாம். வாய்க்கு மதுரமாய் இருந்தது யோவான் எழுதின சுவிசேஷத்தை வாசிங்க போது வாய்க்கு மதுரமாக இருக்கிறது. ஆண்டவர் செய்த அற்புதங்கள் ஆண்டவர் செய்த சொன்ன உவமைகள் ஆண்டவருடைய வார்த்தைகள். வெளிப்படுத்தின விசேஷத்துக்கு வரும்போது தேவனுடைய நியாயத்தீர்ப்புகள் எச்சரிக்கைகள் பூமியில் ஊற்றப்படுகிற கோப கலசங்கள் கர்த்தருடைய கோபம் பாதாளத்தின் ஆழவரகளை செல்கிறதை வாசிக்கும் போது பயமாய் இருக்கிறது வேதனையாய் இருக்கிறது. அப்போஸ்தலனாகிய பவுலுக்கு இந்த வெளிப்பாடு கொடுக்கும்போது ஒரு பெரிய சந்தோஷம் எத்தனை பேருக்கு கிடைக்காத வெளிப்பாட்டை மத்த 11 சீஷர்களுக்கு கொடுக்காத அந்த வெளிப்பாட்டை ஆண்டவர் எனக்கு கொடுத்தாரே அவருடைய வாய்க்கு மதுரமாய் இருக்கிறது. ஆனால் அந்திகிறிஸ்துவின் ஆட்சியில் படுகிற பாடுகளை ஜனங்கள் நிக்கிறதை பார்க்கும்போது அவருக்கு கசப்பா இருக்கு கசப்பா இருக்கு. சுவிசேஷத்தை பேசும்போது ஜனங்கள் இரட்சிக்கப்படுகிறார்கள் அற்புதம் நடக்கிறது நமக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு. ஆனால் அந்த சுவிசேஷத்தை நிமித்தம் அடிக்கப்படும்போது சிறையில் தள்ளப்படும்போது இரத்த சாட்சிகளாய் மரிக்கும்போது வயிற்று கசப்பா இருக்கு. ஆவியின் வரங்களை ஒரு பக்கம் ஆண்டவர் செயல்படுத்துகிறார். இதே நேரம் பாடுகளின் பாதையில் நடத்தி போகிறார். பிஜிஎஸ் தினகரன் அவர்கள் மனதுருக்கத்தோடு பேசும்போது இவ்வளவோ அற்புதங்கள் நடக்கிறது அன்பின் சீஷன் அதே நேரத்தில் அவருடைய தனிப்பட்ட வாழ்க்கை பார்க்கும்போது அவர் அவர் ஒரு இடது கால் ஊனமானவர் ஷூ வச்சு அட்ஜஸ்ட் பண்ணி நடப்பார். ரெண்டு கிட்னியும் சேல் ஆயிட்டு போயிட்டு நுரையீரல் பாதிக்கப்பட்டது அவருடைய சரீரத்திலும் அவருடைய வாழ்க்கையிலும் அவர் நொந்து மனம் கசந்து அழுகிறவராய் இருந்தார். ஊழியத்தில் ஒரு பெரிய மகிழ்ச்சி அதே நேரம் அநேகருடைய பாரத்தை சுமக்கும் போது தாங்க முடியாத வேலை. ஒரு தேவ மனிதனுடைய வாழ்க்கையிலும் ஒரு விசுவாசியினுடைய வாழ்க்கையிலும் இந்த ரெண்டு ரெண்டு காரியமும் இருக்கும். தேவனோடு நம்ம பேசுகிறது சஞ்சரிக்கிறது அவரோடு உலாவுறது அவ்வளவு மகிழ்ச்சி. இந்த புஸ்தகத்தை கொடுத்ததின் நோக்கம் என்னவென்றால் அவருடைய வாய்க்கு தித்திப்பாய் இருக்கும்படி கொடுக்கவில்லை வயித்துக்கு கசப்பாய் இருக்கும்படி கொடுக்கல. கொடுத்த நோக்கம் இந்த புஸ்தகம் உள்ள போனதோ நீ தீர்க்கதரிசனம் உரைக்க ஆரம்பிப்பாய். இந்த புஸ்தகத்தை நீ வாசித்து தியானம் பண்ணும்போது உன் மேல ஒரு ஒரு தீர்க்கதரிசன அபிஷேகம் இறங்கி வரும். வாசிக்கிறேன் நான் தூதனிடத்தில் போய் அந்த சிறு புத்தகத்தை எனக்கு தாரும் என்றேன். அதற்கு அவன் நீ இதை வாங்கி புசி இது உன் வயிற்றுக்கு கசப்பாய் இருக்கும் ஆனாலும் ஆகிலும் உன்னுடைய வாய்க்கு இது தேனைப் போல மதுரமாய் இருக்கும் என்றார். நான் அந்த சிறு புத்தகத்தை தேவ தூதனுடைய கையிலிருந்து வாங்கி அதை புசித்தேன் என் வாய்க்கு அது தேனை போல இருந்தது நான் அதை புசித்த உடனே என் வயிறு கசப்பாயிற்று. அப்பொழுது அவன் என்னை நோக்கி நீ மறுபடியும் அநேக ஜனங்களையும் ஜாதிகளையும் பாஷைக்காரரையும் ராஜாக்களையும் குறித்து தீர்க்கதரிசனம் சொல்ல வேண்டும். இந்த புத்தகம் எதுக்கு கொடுக்கப்பட்டது நீ தீர்க்கதரிசனம் தீர்க்கதரிசனம் என்ற வார்த்தைக்கு ஒரு அர்த்தம் உண்டு. உள்ளத்தின் ஆழத்திலிருந்து ஒரு நீரூற்று போல பொங்கி வருகிற வார்த்தை தீர்க்கதரிசனமானது மனுஷனால் ஏற்படுத்தப்பட்டது அல்ல. தேவனும் ஆட்டுக்குட்டியானவரும் இருக்கிற சிங்காசனத்திலிருந்து ஜீவ தண்ணீர் போல நமக்குள்ளே இறங்கி வந்து நம்முடைய உள்ளத்திலிருந்து ஜீவ தண்ணீர் உள்ள நதிகள் புறப்பட்டு போவது போல கர்த்தருடைய வார்த்தைகள் நமக்குள்ளிருந்து புறப்பட்டு வருவதுதான் தீர்க்கதரிசனம். ஒருவனும் தன்னுடைய சொந்த ஞானத்தினால் தீர்க்கதரிசனம் உரைப்பதில்லை. தேவனுடைய பரிசுத்த மனிதர்கள் பரிசுத்த ஆவியினால் ஏவப்பட்டு தீர்க்கதரிசனம் உரைத்தார்கள். ஒரு மனுஷன் தேவனுடைய தீர்க்கதரிசியாய் மாறணும்னா அவன் புசிக்க வேண்டிய ஒரு புஸ்தகம் உண்டு அதுதான் வேத புத்தகம். அதான் வேத புத்தகம். எரேமியா சொல்லுகிறார் உம்முடைய வார்த்தைகள் எனக்கு கிடைத்தவுடன் நான் அதை ஆவலோடு உட்கொண்டேன். எரேமியா தீர்க்கதரிசியை பாருங்கள் எரேமியா 15 ஆம் அதிகாரம் 16 ஆம் வசனத்திலே சொல்லுகிறார் உம்முடைய வார்த்தைகள் கிடைத்த உடனே அவைகளை உட்கொண்டேன் உம்முடைய வார்த்தைகள் எனக்கு சந்தோஷமும் என் இருதயத்துக்கு மகிழ்ச்சியுமாய் இருந்தது சேனைகளின் தேவனாகிய கர்த்தாவே உம்முடைய நாமம் எனக்கு தரிக்கப்பட்டிருக்கிறது என்று எரேமியா 15 16ல சொல்லுகிறார். அதேபோல எசேக்கியல் தீர்க்கதரிசி சொல்லுகிறார் அவரைப் பார்த்து கர்த்தர் சொன்னார் மனுபுத்திரனே அந்த கலகை வீட்டார் போற இராமல் நான் உனக்கு சொல்லுகிற வார்த்தைகளைக் கேள் உன் வாயைத் திறந்து நான் உனக்கு கொடுக்கிறதை புசி என்றார். எசேக்கியல் இரண்டாம் அதிகாரம் எட்டாம் வசனம் இந்த சுருளை உன் வாய் என் வயிற்றிலே உட்கொண்டு அதனால் உன் குடல்களை நிரப்புவாயாக என்றார். அப்பொழுது நான் அதை புசித்தேன் அது என் வாய்க்கு மதுரத்தைப் போல இருந்தது. உண்மையிலேயே தேவனுடைய வசனம் தேனிலும் தெளிதேனிலும் சங்கீதம் 19ல தாவீது சொல்லுகிறார் உம்முடைய வசனம் தேனிலும் தெளிதேனிலும் மதுரமாய் இருந்தது. அதை வாசித்து தியானிக்கிறது தான் நம்ம உட்கொள்வது என்று அர்த்தம். ஒன்னாம் சங்கீதத்தில் வாசிக்கிறோமே கர்த்தருடைய வேதத்தில் இரவும் பகலும் தியானமாய் இருந்து அவருடைய வசனத்தை தியானிக்கிற மனுஷன் பாக்கியவான். கர்த்தருடைய வேதத்துல வெறும் வாசிச்சிட்டு போனா அது வயித்துக்குள்ள போகாது அது அசைப்போ அப்படி துப்புற மாதிரி ஆயிரும். அதை நமக்கு சொந்தமாக்கிக் கொள்ளும்போது தியானிக்கும் போது ஒரு மாட்டை எடுத்தா வேக வேகமா புல்லை மேயும் பிறகு ஒரு இடத்தில் படுத்துட்டு புல் மேஞ்சதெல்லாம் மறுபடியும் எடுத்து நல்லா அசை போட்டு அதை சுவைத்து திருப்பி அதை விழுங்கும் கக்கி விழுங்குற நாயை போல அல்ல அது தனக்குள்ளே இருக்கிற அந்த வார்த்தை எடுத்து அமைதியான நேரத்தில் நம்ம தியானிக்கும் போது அது நமக்கு ரொம்ப ஆசீர்வாதமாய் இருக்கிறது. ஆகவே அப்போஸ்தலனாகிய யோவான் அதை வாசித்தார் தியானித்தார் வாங்கி புசிக்க முடிந்தது அதன் மூலம் அநேக ஜாதிகளுக்கு அவர் தீர்க்கதரிசனம் சொல்ல முடிந்தது.

சரி ஏழாம் வசனம் இவ்விதமாய் சொல்லுகிறது. நாலாம் வசனம் மீண்டும் ஒன்னிலிருந்து வாசிக்கிறேன் கவனியுங்கள். பின்பு பலமுள்ள வேறொரு தூதன் வானத்திலிருந்து இறங்கி வரக் கண்டேன் மேகம் அவனை சூழ்ந்திருந்து அவனுடைய சிரசின் மேல் வானவில் இருந்தது. அவருடைய முகம் சூரியனைப் போல போலவும் அவனுடைய கால்கள் அக்கினி ஸ்தம்பங்களைப் போலவும் இருந்தது. திறக்கப்பட்ட ஒரு சிறு புஸ்தகம் அவன் கையில் இருந்தது. அவன் தன் வலது பாதத்தை சமுத்திரத்தின் மேலும் தன் இடது பாதத்தை பூமியின் மேலும் வைத்து சிங்கம் கர்சிப்பது போல கர்சித்தான். இங்கே அந்த தேவதூதனை பார்க்கிறோம் அவனுடைய சத்தம் சிங்கத்தின் கர்சிப்பை போல இருந்தது. வேதத்திலே பல இடங்களிலே நம்முடைய ஆண்டவரை யூதா கோத்திரத்தின் ராஜ சிங்கம் என்று அழைக்கப்படுகிறார். சிங்கத்தைப் போல அவருடைய சத்தம் இருக்கிறது. பிதாவாகிய தேவனுடைய சத்தம் கர்சிக்கிற சிங்கம் அதுபோல இருக்கிறது. இடி முழக்கத்தைப் போல இருக்கிறது. பெருவெள்ளத்து இறைச்சலைப் போல இருக்கிறது. ஆனால் இயேசுவின் சத்தம் ஒரு சிநேகிதனை போல முகமுகமாய் பேசுகிறது போல இருக்கிறது. அதே நேரம் பரிசுத்த ஆவியானவர் பேசும்போது மெல்லிய குரலிலே நம்முடைய ஆவியோடு பேசுவதை பார்க்கிறோம். இங்கே சிங்கம் கர்சிக்கிறது ஆமோஸ் மூணாம் அதிகாரம் எட்டாம் வசனம் சொல்லுகிறது சிங்கம் கர்சிக்கிறது யார் பயப்படாதிருப்பான் கர்த்தராகிய ஆண்டவர் பேசுகிறார் யார் தீர்க்கதரிசனம் சொல்லாதிருப்பான். அருமையான தேவனுடைய பிள்ளைகளே அவர் யூத கோத்திரத்தை ராஜா சிங்கம் ஆகவே சிங்கம் கற்சிக்கிறது போல அவன் கற்சித்தானாம் அவன் என்ன சொன்னான் ஆறாம் வசனம் இவ்விதமாய் சொல்லுகிறது இனி காலம் செல்லாது ஆனாலும் தேவனுடைய ஊழியக்காரராகிய தீர்க்கதரிசிகளுக்கு சுவிசேஷமாய் அறிவித்தபடி ஏழாம் தேவதூதனுடைய சத்தத்திலே அந்த எக்காலம் ஊதப்படும்போது தேவனுடைய ரகசியம் நிறைவேறும். அந்த ஏழாம் தூதன் எங்கே எக்காலம் ஊதுகிறான் 11 ஆம் அதிகாரம் 15 ஆம் வசனத்தில் அதை வாசிக்கிறோம். அடுத்த அதிகாரத்துக்கு போகும்போது வாசிக்கிறேன் ஏழாம் தூதன் எக்காலம் ஓதினான் அப்பொழுது உலகத்தின் ராஜ்ஜியங்கள் நம்முடைய கர்த்தருக்கும் அவருடைய கிறிஸ்துவுக்கும் உரிய ராஜ்ஜியங்கள் ஆயின அவர் சதாகாலங்களிலும் ராஜ்ஜியபாரம் செய்வார் என்னும் கம்பீர சத்தங்கள் வானத்திலே உண்டானது. அவர் சொல்லுகிறான் ஆறாம் வசனம் மீண்டும் வாசிக்கிறேன் இனி காலம் செல்லாது ஆனாலும் தேவன் தம்முடைய ஊழியக்காரராகிய தீர்க்கதரிசிகளுக்கு சுவிசேஷமாய் அறிவிக்கப்பட்டபடி ஏழாம் தூதனுடைய சத்தியத்தின் நாட்களிலே அவன் எக்காலம் ஊதும்போது தேவ ரகசியம் நிறைவேறும். தேவனுடைய ரகசியம் நிறைவேறும். வேதம் முழுவதிலும் தேவ ரகசியங்கள் ஏராளமாய் கிடக்கின்றன. அப்போஸ்தலர் பவுல் தேவ ரகசியங்களை அறிய வேண்டும் என்று தன்னுடைய இருதயத்தை திருப்பி அரபு தேசத்துக்கு போய் மூன்று வருடங்கள் கர்த்தருடைய பாதத்தில் இருந்தபோது அந்த தேவ ரகசியங்களில் அநேகம் 28 தேவ ரகசியங்கள் அவருக்கு அறிவிக்கப்பட்டது. அந்த தேவ ரகசியங்களை அவர் அறிந்து எழுதுகிறார். தேவனுடைய ரகசியங்கள் என்ன பல ரகசியங்கள் மத்தேயு 13 11ல பரலோக ராஜ்ஜியத்தின் ரகசியங்களை உவமைகளோடு ஆண்டவர் பேசினார். ஒன்னு திமோத்தேயு மூணு 16 தேவ பக்தியின் ரகசியமானது தேவன் மாம்சத்தில் வெளிப்பட்டார். தேவனுடைய சித்தத்தின் பற்றிய ரகசியத்தை எபேசியர் ஒன்னாம் அதிகாரம் பத்தாம் வசனத்தில் நம்ம வாசிக்கிறோம். வேத வசனத்தின் ரகசியத்தை கொலோசியர் ஒன்னு 25ல வாசிக்கிறோம். கிறிஸ்துவுக்கும் பிதாவுக்கும் இடையே உள்ள தேவனுடைய ரகசியத்தை கொலோசியர் ரெண்டு ரெண்டிலே வாசிக்கிறோம். கிறிஸ்துவுக்கும் சபைக்கும் உடைய ரகசியத்தை அப்போஸ்தலனாகிய பவுல் எபேசியர் ஐந்தாம் அதிகாரத்தில் எழுதும்போது இந்த ரகசியம் பெரியது நான் கிறிஸ்துவைப் பற்றியும் அவருடைய சபையைப் பற்றியும் அவருடைய மணவாட்டியைப் பற்றியும் எழுதுகிறேன் என்று எபேசியர் ஐந்தாம் அதிகாரம் 32 ஆம் வசனத்தில் வாசிக்கிறார். கிறிஸ்து நமக்குள்ளே வாசம் பண்ணுகிறதே ஒரு பெரிய ரகசியம் எவ்வளவு பெரிய ரகசியம். விசுவாசத்தின் ரகசியத்தை குறித்து ஒன்று திமத்தேயு மூணு ஒன்பதுல வாசிக்கிறோம். சுவிசேஷத்தின் ரகசியத்தை குறித்து எபேசியர் ஆறு 20ல வாசிக்கிறோம். யூதரின் மனது கடிதமாவது ரகசியத்தை குறித்து ரோமர் 11:25ல வாசிக்கிறோம். யூதரோடு புறஜாதிகளும் ஒரே சரீரமாகிற ரகசியத்தை குறித்து எபேசியர் மூணு மூணுல வாசிக்கிறோம். நிறைய ரகசியங்கள் நிறைய ரகசியங்கள் வெளிப்படுத்தின விசேஷத்தில் அவ்வளவு தேவ ரகசியங்களை ஆண்டவர் நமக்கு வெளிப்படுத்துகிறார்.

ஏழாம் வசனம் வானத்தையும் அதில் உள்ளவைகளையும் பூமியையும் அதில் உள்ளவைகளையும் சமுத்திரத்தையும் அதில் உள்ளவைகளையும் உயிரோடு இருக்கிறவன் மேல் ஆணையிட்டு சொன்னான் இது நிறைவேறும் சந்தேகமே இல்லை ஆணையிட்டு சொன்னேன். கர்த்தர் ஆணையிடும்போது தன்னிலே பெரியவருக்கு ஒருவரும் இல்லாதபடியினால் தன்மேலேயே அவர் ஆணையிட்டு சொல்லுகிறதை பார்க்கிறோம். வேதத்தில் 81 இடங்களில் கர்த்தர் உறுதியாய் மெய்யாகவே மெய்யாகவே ஆணையிட்டு சொல்லுகிற வார்த்தைகள் 81 இடங்களில் வாசிக்கிறோம். மனிதர் மனிதருக்கு மனிதரோடு ஆணையிடுகிற 31 சந்தர்ப்பங்கள் வேதத்தில் எழுதியிருக்கிறது. ஆணையிடும்படி தம்மிலும் பெரியவர் ஒருவர் இல்லாதபடியினால் கர்த்தர் தம்முடைய பெயரிலேயே ஆணையிட்டார் என்று எபிரேயர் ஆறாம் அதிகாரத்தில் 13 லிருந்து 16 வசனத்தை வாசிக்கிறோம். ஆண்டவர் சொல்லுகிறார் நான் என் கரத்தை உயர்த்தி என்றென்றைக்கும் ஜீவித்திருக்கிறவர் என்றேன் அல்லேலூயா அல்லேலூயா.

அதற்கு பிறகு எட்டாம் வசனத்திலிருந்து நான் வானத்திலிருந்து பிறக்க கேட்ட சத்தம் மறுபடியும் என்னோடு பேசி சமுத்திரத்தின் மேலும் பூமியின் மேலும் நிற்கிற தூதனுடைய கையில் இருக்கும் திறக்கப்பட்ட சிறு புத்தகத்தை நீ போய் வாங்கிக்கொள் என்று சொல்ல நான் தூதனிடம் போய் அந்த சிறு புத்தகத்தை எனக்கு தாரும் என்றேன். அதற்கு அவன் நீ இதை வாங்கி புசி உன் வயிற்றுக்கு கசப்பாய் இருக்கும் ஆகிலும் உன் வாய்க்கு இது மதுரமாய் தேனை போல மதுரமாய் இருக்கும் என்றான். நான் அந்த சிறு புத்தகத்தை தூதனுடைய கையிலிருந்து வாங்கி அதை புசித்தேன் என் வாய்க்கு அது தேனை போல மதுரமாய் இருந்தது நான் அதை புசித்த உடனே என் வயிறு கசப்பாயிற்று. அப்பொழுது அவன் என்னை நோக்கி நீ மறுபடியும் அநேக ஜனங்களையும் ஜாதிகளையும் பாஷைக்காரரையும் ராஜாக்களையும் குறித்து தீர்க்கதரிசனம் சொல்ல வேண்டும் என்றார். ஆண்டவருடைய கண்கள் ஒரு தீர்க்கதரிசி எதிர்பார்க்கிறது பூமியில் வாழும்போது ஒரு தீர்க்கதரிசியாய் நீங்கள் எழும்ப வேண்டும் என்று ஆண்டவர் விரும்புகிறார். உன்னதமான தேவனுடைய தீர்க்கதரிசியாய் வழங்கும் அருமையான தேவனுடைய பிள்ளைகளே தீர்க்கதரிசி யார் அவன் கர்த்தருடைய வாயானவன் அவனே தீர்க்கதரிசி. தீர்க்கதரிசி யார் பின் வருகிறதை முன்னறிவிப்பவன் தான் தீர்க்கதரிசி. தீர்க்கதரிசி யார் ஜனங்களுக்கும் தேவனுக்கும் நடுவிலே நின்று பாலமாய் நின்று ஜனங்களை உணர்த்துகிறவன் தான் தீர்க்கதரிசி. ஆண்டவர் என்ன சொன்னாலும் நூற்றுக்கு நூறு அதை கூட்டாமல் குறைக்காமல் பண்ணாமல் கர்த்தர் உரைக்கிறார் தெளிவாய் சொல்லுகிறவன் தான் தீர்க்கதரிசி. அவன் ராஜாக்களை குறித்து கவலைப்படுவதில்லை மேன்மைக்களை குறித்து கவலைப்படுவதில்லை. ஆண்டவர் சொல்லுகிறார் இந்த புத்தகத்தை வாசிக்கும் போது அந்த தீர்க்கதரிசன அபிஷேகம் உன்மேல இறங்கி வரும் நீ ஒரு தீர்க்கதரிசியாய் மாறு. இந்த உலகம் ஒரு தீர்க்கதரிசியை நாடி தேடுகிறது. சாத்தான் போலியான குறி சொல்லுகிற ஆவியை கொண்டு வருகிறார். சாய்பாபா மேல சொல்லுகிற ஆவி ஜனங்கள் அவனை நோக்கி ஓடுகிறார்கள். மேல் மருத்துவத்தோடு ஜனங்கள் நோக்கி ஓடுகிறார்கள். குறி சொல்லுகிற ஆவி ஆனால் ஆண்டவர் குறி சொல்லுகிற ஆவி அல்ல தேவனுடைய ஆவியால் நிரம்பி கர்த்தருடைய வாயாய் விளங்கும்படி உங்கள் ஒவ்வொருவரையும் அவர் தீர்க்கதரிசியாய் மாற்ற வேண்டும் என்று விரும்புகிறார். உங்களுடைய உள்ளத்தை கர்த்தரோடு கர்த்தருடைய உள்ளத்தோடு இணைத்து உம்முடைய வாயை கர்த்தருடைய வாயோடு இணைத்து கர்த்தாவே சொல்லும் நான் உம்முடைய ஒரு தீர்க்கதரிசியாய் வழங்கட்டும். ஒவ்வொரு மனிதனை பார்க்கும்போது அவனுடைய ரகசியம் என்ன சொல்லும் உமக்கு நான் அவனை ஆதாயப்படுத்தட்டும். ஒரு சபையை பார்க்கும்போது இந்த சபையிலே குறைவுகள் என்ன நிறைவுகள் என்ன சொல்லும் சபைக்கு நான் உரைக்கிறேன் என்னை ஒரு தீர்க்கதரிசியாய் மாற்றும். கர்த்தருடைய கண்கள் இன்றைக்கு உங்களை நோக்கி பார்க்கிறது நீங்கள் தீர்க்கதரிசியாய் எழும்ப வேண்டும் என்று ஆண்டவர் விரும்புகிறார். அந்த வேத வசனத்தை எவ்வளவுக்கு எவ்வளவு வாசித்து புசிக்கிறீர்களோ அவ்வளவுக்கு அவ்வளவு நீங்கள் வல்லமையான தீர்க்கதரிசியாளாய் விளங்குவீர்கள் ஆமென் அல்லேலூயா.

இந்த காலம் கடைசி காலம் இந்த காலம் பின்மாறி ஊற்றப்படுகிற காலம் இந்த காலம் புதிய தீர்க்கதரிசிகள் எழும்புகிற ஒரு காலம் கர்த்தர் இன்றைக்கு உங்களுக்கு அந்த தீர்க்கதரிசன அபிஷேகத்தாலே உங்களை நிரப்பும்படி நான் உங்களுக்காய் ஜெபிக்க விரும்புகிறேன். நாம் எல்லாரும் எழுந்து நிற்போம் கர்த்தரை நோக்கி பார்க்கப் போகிறோம் [இசை]